Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் காதல் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுங்கோ மிச்சத்தையும்

  • Replies 111
  • Views 15.4k
  • Created
  • Last Reply

சூப்பரோ சூப்பர் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நடந்த சாத்துப்படிகளை பாக்கும் போது குடும்பம் நடத்திய பயனை பெற்று இருப்பீர்கள் என்று நிகை்கிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா என்ன  நீங்களுமா..???

 

ஏற்கனவே சித்தியாக்கள் சுத்தித் தந்தது ஞாபகம் தானே :lol:  அதை நினைவில் வைச்சு கெதியா அடுத்த பாகத்தை எழுதுங்கோ.

 

நல்லது கெதியிலெ கேளும் ஆற போடாதேயும் இல்லையெண்டால் யாரும் கொத்தி கொண்டு போய்விடுவாங்கள்  என்று பகிடி வேற விட்டார்.

 

சொந்த அனுபவத்தில நொந்த அரவிந்தன் உங்களுக்கு ஆலோசகரா சொன்ன அட்வைஸ் பயன் தந்ததா எண்டதையும் சொல்ல வேணும் சொல்லியாச்சு.

பிறகு என்ன ஊரிலே ஒரே கெத்தாக தான் திரிகிறது.

ஒரு டாங் டாங் சேட் (அதையே தோய்க்காமல் திரும்ப திரும்ப போடுறது வேற கதை), அல்லது உள்ளுக்குள்ளே போட்டிருக்கிற வெள்ளை  பனியன் தெரிகிற மாதிரி ஒரு லைட் நீல கலர்ல  மார்டின் சேட்டு, சோலாபூரி செருப்பு, லேடீஸ் சையிக்கிள் (அது தங்கசியிண்ட), பின் கரியர்ல ஒரு பையில் மட்டை. வட்ட பச்சை தொப்பி. ஊரையே சுத்தி வட்டமடிக்கிறது தான் என்ற வேலை. பெடியள் எல்லாம் மச்சான் அவன் புலனாய்வு துறையடா... என்று என்ர காது பட சொல்லும்போது பெருமையாக இருக்கும்.

 

எல்லாம் நல்லாத்தான் போனது.

 

எல்லாம் அந்த முக்கியமான ஆள் என்னை சந்திக்கும் வரை.

 

 

தொடரும்

 

அந்த டாங் டாங் சேட் எவ்வளவு பாவம் செய்த பிறப்பாயிருந்திருக்கும் பகலவா ? :lol:

அந்த முக்கியமான ஆள்தான் உங்கடை காதலுக்கு கடைசிமணியடிச்சிருப்பார் சரிதானே ? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசிக்கு முதல் எழுதினது சிரிக்காமல் படிக்க முடியலைப்பா.. :D :D

பார்த்தால் யாரும் லூசுனு என்னை நினைச்சிட போறாங்க.. :lol:

 

இயமனுக்கே இடியப்பம் குடுத்த ஆளா இருப்பிங்கள் போல ........ :lol::icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
கடைசிக்கு முதல் எழுதினது சிரிக்காமல் படிக்க முடியலைப்பா.. :D :D

பார்த்தால் யாரும் லூசுனு என்னை நினைச்சிட போறாங்க.. :lol:

 

இயமனுக்கே இடியப்பம் குடுத்த ஆளா இருப்பிங்கள் போல ........ :lol::icon_mrgreen::icon_idea:

 

பெயரைப் பாத்தாலே தெரியேல்லா பகலவன் ஒரு சூரியன் சுழியன் எண்டது. :lol:

  • தொடங்கியவர்
எப்படி இவ்வளவு காலமும் மன சுக்குள்ளே பூட்டி வைக்க முடிந்தது இவ்வள வு மனபாரத்தியும்.

வா ங்கின அ டியும் நகைசுவையும்  அந்த மாதிரி போகிறது....

 

அதை ஏன் அக்கா கேட்கிறீங்கள். மனப்பாரம் தாங்க முடியாமல் தான் எழுது தள்ளுகிறேன் அக்கா. இதிலே ஒரு நிம்மதி.

 

உங்களுக்கேன் தேவையில்லாத வேலையள் நல்ல பகிடியா கதை எழுதிறியள் .

 

அதெல்லாம் ஒரு வயசுக்கோளாறு. நன்றி உங்கள் பகிர்வுக்கு.

 

எழுங்கோ மிச்சத்தையும்

 

நிச்சயமாக, எழுதாமல் விட மாட்டோம்.

 

சூப்பரோ சூப்பர் .

 

நன்றி அர்ஜுன் அண்ணா. உங்களை போன்றவர்களிடம் பாராட்டு பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை.

 

உங்களுக்கு நடந்த சாத்துப்படிகளை பாக்கும் போது குடும்பம் நடத்திய பயனை பெற்று இருப்பீர்கள் என்று நிகை்கிறேன். :D

 

என்ன குறைச்சு சொல்லிபோட்டியள்..ஒரு குடும்பம் என்ன ஒம்பது குடும்பம் நடாத்தின  பலனுக்கு அடி வாங்கி இருக்கிறோம்.  :lol:

  • தொடங்கியவர்

ஏற்கனவே சித்தியாக்கள் சுத்தித் தந்தது ஞாபகம் தானே :lol:  அதை நினைவில் வைச்சு கெதியா அடுத்த பாகத்தை எழுதுங்கோ.

 

 

சொந்த அனுபவத்தில நொந்த அரவிந்தன் உங்களுக்கு ஆலோசகரா சொன்ன அட்வைஸ் பயன் தந்ததா எண்டதையும் சொல்ல வேணும் சொல்லியாச்சு.

 

அந்த டாங் டாங் சேட் எவ்வளவு பாவம் செய்த பிறப்பாயிருந்திருக்கும் பகலவா ? :lol:

அந்த முக்கியமான ஆள்தான் உங்கடை காதலுக்கு கடைசிமணியடிச்சிருப்பார் சரிதானே ? :blink:

 

 

திரும்பவும் அதை ஏன் ஞாபகபடுத்திறீங்கள் அக்கா. இப்பவும் படுக்கேக்க தடவி பார்க்கிறனான் தழும்பு இருக்கோ என்று ..அவ்வளவு அடி. :lol: 

 

அரவிந்தன் தன்ர சொந்த அனுபவத்திலை தான் அப்போ எனக்கு சொன்னவர் என்று பிறகு தான் எனக்கு தெரியும் அக்கா.

 

பிறகு என்ன அக்கா ..நீங்களே மிச்ச கதையை எழுதிவிடுங்கோவன். தம்பிக்காக இதை கூட செய்ய மாட்டீங்களா ..?? :lol:  :lol: 

 

கடைசிக்கு முதல் எழுதினது சிரிக்காமல் படிக்க முடியலைப்பா.. :D :D

பார்த்தால் யாரும் லூசுனு என்னை நினைச்சிட போறாங்க.. :lol:

 

இயமனுக்கே இடியப்பம் குடுத்த ஆளா இருப்பிங்கள் போல ........ :lol::icon_mrgreen::icon_idea:

 

அவ்வளவு கேவலமாகவா நான் அடி வாங்கி இருக்கிறேன். உண்மையா ஜீவா.. காதலிக்கும் போது வாங்கிற அடி உதை எல்லாம் அப்போ எங்களுக்கு தெரிகிறது இல்லை. கல்யாணத்துக்கு பிறகு தான் வலிக்கும்.. :lol: 

 

பெயரைப் பாத்தாலே தெரியேல்லா பகலவன் ஒரு சூரியன் சுழியன் எண்டது. :lol:

 

அக்கா பகலவனுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுப்பீங்கள் என்று எனக்கு தெரியாது. எங்கட குடும்ப இரகசியங்களை வெளியிலே விட மாட்டேன் என்று சத்தியம் பண்ணி கொடுங்கள் அக்கா.. :lol:  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் கெதியா கெதியா பொறுமை போகுது :D

  • தொடங்கியவர்

நாங்கள் அந்த பனை வெட்டைக்கு நடுவே கிரிகெட் விளையாடி கொண்டிருந்தோம்.

 

திவ்யா கூட்டம் ரியுசனுக்கு போயிட்டு வந்து நிண்டு நாங்கள் விளையாடுறதை பார்த்து கொண்டு நிண்டுதுகள். பேட் பண்ணி கொண்டிருந்த என்ர ப்ரெண்ட்டிடம் கெஞ்சி கால்ல விழாத குறையா பேட் ஐ வாங்கி, முழங்காலிலே நிண்டு ஒரு சுழட்டு சுழட்டினேன் பந்து வந்து வயித்திலே பந்துபட்டது. வலி சொல்லி வேலையில்லை. எண்டாலும் காட்டி கொள்ளாமல் அடுத்த பந்தை எதிர் கொள்ள தயாரானேன். அடிக்கடி திவ்யாவை பார்த்து கொண்டேன். இப்போதையை ஸ்டைல்லே சொல்லுறது என்றால் அவளை பார்த்த போது எனக்கு ரெட்புல் குடிச்ச மாதிரி ஒரு பீலிங்.

 

அடுத்த பந்தை கொஞ்சம் முன்னுக்கு வந்து பேட் ஐ ஒரு கிடாவு கிடாவினேன். பந்து பறந்து போய் மொரிஸ் அண்ணையாக்களின் பேஸ்ஸுக்குள்  விழுந்தது. இரண்டு கையையும் உயர்த்த வேண்டிய அம்பயர் ஒரு கையை மட்டும் உயர்த்தி அவுட் குடுத்தான்.

 

எங்கட கிரிகெட் ஒரு வித்தியாசமான கிரிகெட். நீங்கள் ரன் அவுட் கேள்விபட்டிருப்பீங்கள்,கட்ச், ஸ்டாம்ப்ஸ் இதெல்லாம் கேள்விபட்டிருப்பீங்கள். ஹிட் விக்கெட் கூட கேள்விபட்டிருப்பீங்கள். சிக்ஸ் அடிச்சால் அவுட் என்று கேள்விபட்டிருக்கிறீங்களா.

 

உண்மையாதான் எங்கட கிரிகெட்ல சிக்ஸ் அடிச்சால் அவுட். ஏன் என்றால் சிக்ஸ் அடிச்சால் அது மொரிஸ் அண்ணை  ஆக்களிண்ட பேஸ்ஸுக்கு உள்ளே போய்விழும். அவங்கள் பந்தை தரமாட்டான்கள். எங்களையும் போய் எடுக்க விடமாடாங்கள். அண்ணை வாற பேஸ், சொர்ணம் அம்மான் வாற பேஸ் என்று சனம் கதைகிறது. நாங்கள் ஒரு நாளும் கண்டதில்லை. ஆனால் அந்த பேஸ்ஸுக்குள்ளே பந்து போனால் எங்களுக்கு கிடைக்காது என்பது மட்டும் உண்மை. அது மட்டுமில்ல அடிச்சவன் அவுட்.

 

இப்படி ஷோ கட்ட வெளிகிட்டு நான் மொக்கீனப்பட்டது இது தான் முதல் தடவை எண்டு நினைச்சு போடாதேங்கோ.

 

இப்படி தான் வருசப்பிறப்புக்கு முதல்நாள் இரவு, சீறு வானம் வாங்கி, தங்கச்சி, திவ்யா வெண்ணிலா ஆக்களுக்கு முன்னால கையிலே வைச்சு விடுறேன் என்று படம் காட்டினேன்.  வலக்கை சுட்டு விரல்லே வைச்சு, உள்ளங்கைக்குள்ளே ஈக்கை வைச்சு, நெருப்பு கொள்ளியாலே பத்த வைச்சேன். அது சீறி கொண்டு வெளிக்கிட்டது.

ஆனால் கடைசி நேரத்திலே கை விரல் ஆடி, மேலே போக வேண்டியது கிடையாக போட்டுது.

 

கொஞ்ச நேரத்திலே ஒரு வெடிப்பு சத்தம், நாங்கள் அடுத்ததை கொளுத்த தயாராகி விட்டோம். ஒரு மூன்று நிமிஷம் இருக்கும், எங்கட அம்மாவுக்கும் பக்கத்து வீட்டு ஊமை மனுசிக்கும் கடும் சண்டை. நாங்கள் ஓடி போய் பார்த்தோம். மனுசி குழல் புட்டு அவிக்கிற குழாயும் கையுமா நிக்குது.

 

பெப்பே பெப்பே ..பெப்பே பெப்பே என்று ஊமை பாசையில் டும்... பும்.. என்று இடைக்கிடை சத்தமும் போட்டு கொண்டு நிக்குது. எனக்கு விளங்க முதலே அம்மாவுக்கு விளங்கிட்டுது. எங்கட வானை நோக்கிய சீறுவானம் வெடிச்சது அந்த ஊமை மனுசியின் புட்டு பானைக்கு கீழே என்று, என்ர கையிலே இருந்த கொள்ளிகட்டையை வேண்டி எனக்கே செம அடி. பெட்டைகள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்குதுகள். நானும் அடி வாங்கி வாங்கி சிரிச்சேன். அம்மாவுக்கு செம குழப்பம்.

 

நீ ஏன்டா சிரிக்கிறாய்.?

 

நிரோசனை நினைச்சு சிரிக்கிறேன். (என்ர கொழும்பில இருக்கிற மச்சானுக்கு பெயர் நிரோசன்).

 

இப்ப ஏன்டா அவனை நினைச்சனி.

 

இல்லை அவனுக்கு சிங்களத்திலே வெடிக்கு என்ன என்று சொல்ல தெரியாமல் (சிங்களத்திலையும் வெடி வெடி தான் ), கடைக்காரனிடம் போய் கையாலே எல்லாம் கொளுத்தி காட்டி ச்ச்சச்ச்ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... டும் தியனவத ? என்று கேட்க கடைக்காரன் காதை  பொத்தி கொண்டு படுத்ததை நெனைச்சன் சிரிப்பு வந்திட்டுது என்று சொன்னேன். அம்மாவுக்கும் சிரிப்பு வந்திட்டுது. என்னை விட்டுட்டா.

 

இப்படி நான் ஷோ காட்ட வெளிகிட்டு மொக்கீனபட்டத்தை சொல்லி கொண்டே போகலாம்.

 

நான் அம்பயரோட போய் சண்டைக்கு நிண்டேன் அவுட் தரக்கூடாது என்று. அப்போ தான் அந்த அண்ணே வந்தார். தம்பி உம்மை சந்திக்க ஒராள் வந்திருக்கிறார் என்று.

வந்தவரிடம் எந்த ஆயுதங்களும் இல்லை. ஆனால் பார்த்தாலே தெரிஞ்சுது புலி என்று.

 

யார் என்று கேட்டேன்..??

 

வந்து பாரும் தெரியும் என்றார்.

 

கிரவுண்டுக்கு தள்ளி ஒரு வெள்ளை மோட்டார்சைக்கிளில் அங்காலே பார்த்தபடி ஒரு அண்ணை நின்றார். பெடியங்கள் எல்லாரும் ஓடி வந்தாங்கள் எனக்கு பின்னாலே. என்னை கூட்டி கொண்டு போன அண்ணா பெடியங்களை நிக்க சொல்லிட்டு என்னை மட்டும் கூட்டி கொண்டுபோனார்.  திவ்யாவும் பார்த்து கொண்டு இருந்தாள்.

 

கிட்டே போனதும், அந்த அண்ணை  கையை குலுக்கி சொன்னார், நான் தான் நியூட்டன் என்றார்.

 

அவர் முகத்தில் இருந்த ஆளுமையும் புன்னகையும் அவரில் மதிப்பை எனக்கு தந்தது.

 

அரவிந்தன் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்.

 

ஓ ..அந்த விடயமா..இப்போ தான் எனக்கு உண்மையிலேயே பயம் பிடித்தது.

 

அவர் சாதரணமாகவே, தம்பி நாங்கள் கொஞ்ச நாளா உங்களை அவதானிச்சு கொண்டு தான் இருந்தனாங்கள். ( கடவுளே திவ்யாவுக்கு பின்னால அலையுறதையும் பாத்திருபாங்களோ ..??) உங்கட நடவடிக்கைகள் எங்களுக்கு திருப்தி அளிக்கின்றன. நீங்கள் எப்போ பயிற்சியை தொடங்க போறீங்கள் என்று கேட்டார்.

 

பித்தம் கூடி சத்தி வாறது மாதிரி இருந்தது.

 

என்ன ... என்ன அண்ணே கேட்டீங்கள் ..

 

எப்போ பயிற்சியை தொடங்கலாம். உங்களுக்கான எல்லா ஏற்பாடும் ரெடி என்றார்.

 

நான் மனசிலே சஞ்சலபட்டத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும். தம்பி உம்மட அலுவல் எல்லாத்தையும் முடிச்சு கொண்டு வாற கிழமை ரெடியாக இரும் என்றார்.

 

அதோட அந்தாள் விடவில்லை. எங்கள் விடுதலைக்கான தேவைபற்றி சொன்னார். அதில் என்னுடைய பங்களிப்பு எப்படி இருக்கும் என்று சொன்னார். வீரச்சாவடைந்த எங்கட பெரியப்பாவின் மகன்மார் பற்றி சொன்னார். தன்னோட ப்ரண்ட் மாதிரி பேசலாம் என்று சொன்னார். எனக்கும் கொஞ்சம் பயம் விட்டு போச்சு. கொஞ்ச நேரம் படிப்பு, காதல் பற்றி எல்லாம் கேட்டார்.

 

போகேக்க நான் அவரிடம், அண்ணே உங்களிடம் ஒண்டு கேட்கலாமா.???

 

கேள்றாப்பா கேள் எண்டார். அவர் முகத்திலே ஒரு பிரகாசம்.

 

அண்ணே ஆப்பிள் கீழே விழுந்ததை கண்டு பிடிச்சது நீங்களா என்று கேட்டேன்.

 

அவர் கன்னத்தை தட்டிவிட்டு, சிரிச்சு கொண்டே மோட்டார்சைக்கிளில் ஏறி போயிட்டார்.

 

(இவர் தான் பின்னாளில் நவம்பெர் அல்பா என்று அழைக்கப்பட்ட புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதியாக விளங்கி, கொழும்பில் வைத்து துரோகத்தனத்தால் காணாமல் போன நியுட்டன் அண்ணா)

 

 

எனக்கு இப்போ நிறைய அழுத்தம். ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தேன், இயக்கத்துக்கு போறது பயிற்சி எடுக்கிறது. இப்போ அது திவ்யாவுக்காக அல்ல. நியுட்டன் அண்ணாவை பார்த்து பேசிய பின் எனக்கு ஒரு தெளிவு இருந்தது.

 

 ஆனால் எப்படியாவது நாளைக்கு திவ்வியாவிடம் கடிதத்தை கொடுத்து முடிவை தெரிஞ்சு கொண்டு, அவளுக்கு நான் இயக்கத்துக்கு போறது பற்றியும் சொல்ல வேண்டும் என்று இரவு நிறைய நாளைக்கு பிறகு நிம்மதியாக உறங்கினேன்.

 

அடுத்தநாள் பின்னேரம், அடுத்த பட்டிங் (Batting ) இற்காக மதிலில் காலை ஆட்டி கொண்டிருந்தேன். திவ்வியா கூட்டத்தின் வருகையை எதிர்பார்த்து. ஒழுங்கான சேட்டு போடவில்லை. புழுதி அடிச்ச ஜீன்ஸ். fair அண்ட் Lovely போடவே இல்லை. ஆனால் மனசிலே தெளிவு இருந்தது. என்ன ஆனாலும் சரி. நான் இண்டைக்கு கேட்கிறது தான்.

 

அவள் சந்தியால திரும்பி அங்கட ஒழுங்கைக்கு வரும்போதே கண்டுவிட்டேன்.

 

மதில்லே இருந்து பாய்ஞ்சு வேகமாக போய் வாளின் சைக்கிளுக்கு குறுக்கே காலை அகட்டி கொண்டு நிண்டேன் வீதியை மறிச்ச படி.

அவள் பல்லை கடிச்சு கொண்டு பிரேக்கை கஷ்டபட்டு பிடிச்சும் சைக்கிள் முன் சில்லு எண்ட கால் இரண்டுக்குள்ளேயும் வந்த பின்னர் தான் நிண்டது.

 

சைக்கிள் இன்னும் கொஞ்சம் வேகமாக வந்திருந்தாலோ அல்லது பிரேக் கட்டை இன்னும் கொஞ்சம் தேஞ்சிருந்தாலோ, நான் அவளுக்கு கடிதம் கொடுக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது. உண்மையாதான் அரும்பொட்டு என்று சொல்லுவாங்கள் அதை அண்டைக்கு தான் உணர்ந்தனான்.

 

காண்டிலை பிடிச்சு, திவ்யா இதை நான் உனக்கு குடுக்கிறத்துகாக எப்பவோ எழுதினான், எத்தனையோ முறை ட்ரை பண்ணினான் எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இந்தா இதை விட்டால் எனக்கு வேற சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தெரியாது. வாசிச்சிட்டு இப்பவே பதிலை சொல்லிட்டு போ என்று பொக்கேட்டுக்குள் இருந்து கடிதத்தை எடுத்து கொடுத்தேன்.

 

அங்காலே ஆக்கள் ...என்று அவள் வெட்கபட்டாலும், என்னிடம் இருந்து கடிதத்தை வாங்கினதே எனக்கு அரைவாசி ஓம் என்று சொன்ன மாதிரி இருந்தது. தைரியத்தை வரவழைச்சு கொண்டு நிமிர்ந்து அவள் கண்களை பார்த்தேன். நெஞ்சுக்குள்ளே பத்தாயிரம் பட்டாம் பூச்சி பறக்கிற மாதிரி ஒரு பீலிங்க்ஸ். தண்ணி விடாய்க்கிற  மாதிரி இருந்தது. எத்தனை முறை அவளை பார்த்திருந்தாலும் அண்டைக்கு பார்க்கும்போது தேவதை மாதிரி இருந்தாள். என்னையும் அவளையும் தவிர அங்கெ வேற யாரும் நிக்கிரமாதிரியே எனக்கு தோணவில்லை. அவளின் வாய் மட்டும் என் கடிதத்தை பார்த்து முணுமுணுப்பதை ரசித்து கொண்டிருந்தேன்.

 

பத்து செக்கன் கூட வாசிச்சு இருக்க மாட்டாள். அப்படியே கசக்கி என்ர மூஞ்சியிலே எறிஞ்சிட்டு, பக்கத்திலே ஓடின வாய்க்காலுக்குள்ளே காறி துப்பி விட்டு, திரும்பி கூட பார்க்காமல் போய்விட்டாள்.

 

ஒரு கணம் இடி விழுந்த மாதிரி இருந்தது. பிள்ளையார் கோயில்ல போட்ட குண்டு என்ர தலைக்கு மேலே விழுந்த மாதிரி இருந்தது. எல்லாரும் என்னையே பார்க்க அவமானமாக வேற இருந்தது.  கசக்கி எறிஞ்ச என்ர கடித்ததை வேற யாரும் பார்க்க கூடாது என்று, வீதியிலே இருந்து பொறுக்கி கிழிச்சு எறிய போனேன்.

 

எனக்கும் அந்த டவுட் இருந்தது. இவள் ஏன் இந்த கடிதத்தை கிழிச்சு எறியாமல் போனவள்.

எறிய முதல் கடைசியாக ஒரு முறை படிச்சு பார்க்க ஆசைபட்டேன்.

 

படிச்சதும் தான் தெரிந்தது. அந்த கடித்ததை அவளுக்கு மட்டுமில்லே எந்த பிகருக்கு கொடுத்து இருந்தாலும் 10 செக்கன் என்ன 2 செக்கன்லையே கிழிச்சு எறிஞ்சிட்டு போயிருபாளுகள்.

 

மைசூர் பருப்பு - 1/2 kg 

பெருஞ்சீரகம் - 200 g 

முட்டை - 10

தீட்டாத பச்சை அரிசி - 2 kg 

புளி - 2 kg 

சீனி - 5 kg 

புழுங்கல் அரிசி - 10 kg 

ஏலக்காய் - 100 g 

பெரிய சவுக்காரம் - 2 bar 

 

அம்மா சங்க கடைக்கு நிவாரணம் எடுக்க போகேக்க, பக்கத்திலே இருக்கிற அம்பாள் கடையிலே வாங்கி வர சொல்லி எழுதி தந்த துண்டு அது.

 

நீங்களே சொல்லுங்கள் இதை காதல் கடிதம் என்று உங்களுக்கு நாலு பேர் பார்க்கத்தக்கதாக தந்தால் மூஞ்சியிலே எறியாமல்  என்ன செய்வீங்கள்.

 

அதெல்லாம் சரி. என்ர முதல் காதல் கடிதம் எங்கே ..???

 

 

முற்றும்.

 

 

எனக்கு தெரியும் என்ர இந்த கதையின் முடிவுக்கு எல்லாருமே கறுப்பன் ரேஞ்சிலே ஆளுக்கொரு பச்சை மட்டையோட என்னை தேடுவீங்கள். நான் தான் கிடைக்க மாட்டேனே  :lol:

 

(மாற்று திறனாளிகளின் பேச்சு வழக்கை நக்கல் அடிப்பது போல எழுதி இருந்தமைக்கு மன்னிக்கவும். அது அந்த சந்தர்ப்பத்தை எடுத்து காட்ட மட்டுமே பயன்படுத்தினேன்.)

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு ஒரு  பச்சை மட்டை காணாது.ஒரு தென்னந்தோப்பே அழஞ்சாலும் விடமாட்டோம் மகனே. :lol:   



ம்ம்ம்

 

என்ன ம்ம். :unsure: இங்கை முடிஞ்சுதாம்.வாங்கோ அடுத்த வேலிக்கை போய் விடுப்பு பாப்பம்.  :D

படிச்சதும் தான் தெரிந்தது. அந்த கடித்ததை அவளுக்கு மட்டுமில்லே எந்த பிகருக்கு கொடுத்து இருந்தாலும் 10 செக்கன் என்ன 2 செக்கன்லையே கிழிச்சு எறிஞ்சிட்டு போயிருபாளுகள்.

 

மைசூர் பருப்பு - 1/2 kg 

பெருஞ்சீரகம் - 200 g 

முட்டை - 10

தீட்டாத பச்சை அரிசி - 2 kg 

புளி - 2 kg 

சீனி - 5 kg 

புழுங்கல் அரிசி - 10 kg 

ஏலக்காய் - 100 g 

பெரிய சவுக்காரம் - 2 bar 

 

அம்மா சங்க கடைக்கு நிவாரணம் எடுக்க போகேக்க, பக்கத்திலே இருக்கிற அம்பாள் கடையிலே வாங்கி வர சொல்லி எழுதி தந்த துண்டு அது.

 

நன்றாகக் கதையைக் கொண்டு சென்ற பகலவனுக்கு ஒரு அடிசறுக்கல் . இந்தக்கதையின் முடிவு ஓர் சினிமாத்தனமாகவே என்மனதில் படுகின்றது . அதாவது கடிதங்கள் மாறுவது .  அதை விடுத்து அவளின் கோபத்திற்கான காரணத்தை வேறுவிதமாக நீங்கள் சொல்லியிருந்தால் இந்தக்கதையின் வீச்சு இன்னும் ஆழமாக வாசகர்கள் மனதில் பதிந்திருக்கும் . ஆனாலும் உங்களுக்கு என்று ஒரு கதைசொல்லும் பாணியைக் கையில் எடுத்ததை என்னால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை . இந்தக்கதை எல்லோருக்கும் பிடிக்குமா என்பது எனக்குத் தெரியாது . ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கிற  கோஸ்ரியளை  புலனாய்வுக்கை  எடுக்கிறதெண்டால்  சூட் தான்  இப்பிடியான  வேலையள்  செய்யிறவன் . அனேகமா நியூட்டன் கலைச்சு விட்டிருப்பானே  :lol: முதல் காதல் கடிதம் எங்கை  அதை  மாறி அம்பாள் கடைக்காரனின்ரை மனிசியிட்டை குடுக்கேல்லைதானே :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் கதை யின் முடிவை எதோ சடைஞ்சு விட்ட  மாரி க் கிடக்கு (உள்ளதை சொல்லாமல்) :D

பகலவன் எதோ எழுதி முடிக்க வேணும் எண்டு எழுதிய மாதிரிக் கிடக்கு. கதையை எல்லாம் எழுதி முடிச்சுப் போட்டு போஸ்ட் பண்ணலாம் தானே.

 

ம்....... நியூட்டனின் முடிவும் தெரியாமல் போய்விட்டது. நியூட்டனின் மனைவி அளவெட்டியைச் சேர்ந்தவா, பின் மானிப்பாயில் இருந்தவா ஒரு சங்கீத ஆசிரியை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் மற்ற உறவுகள் மேற்காட்டியது போல பல எதிர்பார்ப்புக்களுடன் தொடந்த கதை முடிவில் ஒரு சீரியஸ் இல்லாமல் முடித்தது கொஞ்சம் நெருடலே.. :(

  • கருத்துக்கள உறவுகள்

*இரசித்தேன்* :D

  • கருத்துக்கள உறவுகள்
அதெல்லாம் சரி. என்ர முதல் காதல் கடிதம் எங்கே ..???
மைசூர் பருப்பு - 1/2 kg பெருஞ்சீரகம் - 200 g முட்டை - 10 தீட்டாத பச்சை அரிசி - 2 kg புளி - 2 kg சீனி - 5 kg புழுங்கல் அரிசி - 10 kg ஏலக்காய் - 100 g பெரிய சவுக்காரம் - 2 bar இதுதான் உங்களின்ட முதல் காதல் கடிதம் :D

மறக்க முடியாத நினைவுகளை நகைச்சுவையோடு பகிர்ந்தமை மிக நன்றாக அழகாக இருந்தது. கடைசியில் என்ன முடிவு என்பது தான் அறிய ஆவல். ஆனால் அதையும்  நகைச்சுவையுடன் முடித்துவிடீர்கள். ஆவலோடு வாசித்துகொண்டிருந்த அனைவருக்கும் மிக ஏமாற்றமாக இருந்திருக்கும். நான்  கடைசிப்பகுதியை வாசித்து அடக்கமுடியாமல் சிரித்ததைப் பார்த்து என் வீட்டார் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தது தான் மிச்சம்.

 
முதல் காதல்....நல்லதொரு மலரும் நினைவுகள்.... வாழ்த்துக்கள்....பகலவன்...
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாருக்கே! :D

 

உங்கட மச்சான் நிரோசன் மாதிரி எனக்கும் ஒருத்தர் இருந்தார்.

சிங்களக் கடையில அஞ்சு பேருக்குச் சிகரட் வாங்க வேணும்,

சிங்களத்தில மூண்டுக்கு மேல, எண்ணத் தெரியாது!

 

கடைக்காரனிட்ட ' சிகரெட் , துணக் தெண்ட' எண்டு கேட்க,கடைக்காரன் மூண்டைக் கொடுத்தான்!

பிறகு, சிகரெட் தெக்கக் தெண்ட. எண்டு கேட்கக் கடைக்காரன், மேசையில் கிடந்த சிகரெட்டில ஒண்டைத்  திருப்பி எடுக்க, இரண்டு சிகரெட்டையும் கையால் பொத்தியபடி.

மீண்டும் சிகரெட்  துணக் ! :D  :D

 

  • கருத்துக்கள உறவுகள்
திரும்பவும் அதை ஏன் ஞாபகபடுத்திறீங்கள் அக்கா. இப்பவும் படுக்கேக்க தடவி பார்க்கிறனான் தழும்பு இருக்கோ என்று ..அவ்வளவு அடி. :lol:

 

அரவிந்தன் தன்ர சொந்த அனுபவத்திலை தான் அப்போ எனக்கு சொன்னவர் என்று பிறகு தான் எனக்கு தெரியும் அக்கா.

 

தழும்புகளல்லத் தம்பி அவை இரும்புபோன்ற நினைவுகள். :lol: அப்பவே அரவிந்தனின் ஆலோசனையை கேட்டிருந்தால்  அரசி , பருப்பு கடதாசி எழுதிய கடதாசியை குடுத்து திவ்யாவிட்டை பேச்சு வாங்கியிருக்கமாட்டீங்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
பிறகு என்ன அக்கா ..நீங்களே மிச்ச கதையை எழுதிவிடுங்கோவன். தம்பிக்காக இதை கூட செய்ய மாட்டீங்களா ..?? :lol:  :lol:

 

மிச்சக்கதையை நான் எழுதிறது பிரச்சனையில்லை ஆனால் வீட்டிலையிருந்து வெள்ளைக்கடதாசியிலை கையெழுத்தும் சேத்து பின்னிணைப்பாக கிடைக்கும் என்னமாதிரி தம்பி ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா பகலவனுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுப்பீங்கள் என்று எனக்கு தெரியாது. எங்கட குடும்ப இரகசியங்களை வெளியிலே விட மாட்டேன் என்று சத்தியம் பண்ணி கொடுங்கள் அக்கா.. :lol:  :lol:

 

தம்பி அதமட்டும் நான் ஆருக்கும் சொல்லமாட்டேன். அடிச்சுக் கேட்டாலும் அல்லது அடிக்காமல் வெருட்டிக்கேட்டாலும் சொல்லமாட்டேன். :icon_idea:

ஆனால் கதையை மட்டும் சப்பெண்டு முடிச்சதுக்காக ஆயிரம் பச்சைமட்டை அகப்பைக்காம்புப் பாசலோடை அனுப்பவுள்ளேன். மச்சினி தாற அடியிலை சப்பெண்ட முடிவை மாத்தி உண்மையை எழுதுவீங்களெண்டது நம்பிக்கை. :mellow::blink::unsure:

 

மேலதிகமாக பச்சைமிளகாய் , செத்தல் மிளகாய் ஏதாவது சேர்த்து அனுப்ப வேணுமெண்டாலும் சொல்லுங்கோ தம்பிக்காக இதைக்கூட செய்யாட்டி.....

பி.கு:- பச்சைமிளகாய் மிளகாய்த்தூள் உங்களுக்கு வீட்டில் சமையலுக்கல்ல தண்டனையை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு தருவதற்காக.

Edited by shanthy

அண்ணே ஆப்பிள் கீழே விழுந்ததை கண்டு பிடிச்சது நீங்களா என்று கேட்டேன்.

 

அவர் கன்னத்தை தட்டிவிட்டு, சிரிச்சு கொண்டே மோட்டார்சைக்கிளில் ஏறி போயிட்டார்.

 

(இவர் தான் பின்னாளில் நவம்பெர் அல்பா என்று அழைக்கப்பட்ட புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதியாக விளங்கி, கொழும்பில் வைத்து துரோகத்தனத்தால் காணாமல் போன நியுட்டன் அண்ணா)

உங்களது கதை நகைச்சுவையாக இருகிறது நகைச்சுவை கலந்து எழுதப்பட்டுள்ளதால் ரசிக்க கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் நிங்கள் பகுடியாக  சொல்லுகின்ற சில விடையங்கள் குழப்பமாகவும் இருக்கின்றது... நியூட்டன் அண்ணனை இயக்கத்தில் அவர் இணைந்த  காலத்தில் இருந்து நவம்பர் அல்பா (NA)  என்று யாரும் சொல்லவதில்லை... அவரை அனைவரும் நவம்பர் விஸ்கி  (NW ) என்று தான் அன்பாக அழைப்பார்கள்.

அவர் பழகுவதற்கு இனிமையான ஒரு தளபதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.