Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்கெடுப்பு: பாலியல் வன்கொடுமைக்கு ஆண்மை நீக்கம் சரியா/தவறா.

வாக்கெடுப்பு: பாலியல் வன்கொடுமைக்கு ஆண்மை நீக்கம் சரியா/தவறா. 28 members have voted

  1. 1. பாலியல் வன்கொடுமைக்கு ஆண்மை நீக்கம் சரியா/தவறா.

    • ஆண்மை நீக்கம் செய்வது... சரி.
    • ஆண்மை நீக்கம் செய்வது... தவறு.
      0
    • ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.
    • மரணதண்டனை கொடுக்க வேண்டும்.
    • நடுச் சந்தியில் விட்டு, கல்லால் அடிக்க வேண்டும்.
    • அபராதப் பணம் செலுத்திய பின்பு, ஆளை வெளியே விட வேண்டும்.
      0
    • முதல் முறை செய்த குற்றம் என்றால்... மன்னித்து விடலாம்.
      0
    • இதனை விட, வேறு என்ன செய்யலாம், உங்கள் கருத்தைக் கூறவும்.

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்கொடுமை செய்வோர்க்கு, ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா... மத்திய அரசுக்கு கூறிய ஆலோசனை சரியா, தவறா என்று யாழ்கள உறவுகளின் கருத்தை அறிய ஆவலாக உள்ளதால்... இந்த வாக்கெடுப்பில்,கலந்து கொண்டு, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உறவுகளே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சரி என்று தான் வாக்களித்துள்ளேன் சிறி அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சரி என்று தான் வாக்களித்துள்ளேன் சிறி அண்ணா.

 

நானும் சரி என்று தான்... வாக்களித்துள்ளேன் ஜீவா.

ஆனால்... வயதுக் கோளாறு காரணமாக 20 வயதுப் பெடியன், பாலியல் வன்முறை செய்யும் போது... அவனுக்கும், ஆண்மை நீக்கம் செய்துவிட்டால்... அவனுக்கு வம்சம் இல்லாமல்... போகுமே, என்றும் யோசனையாக உள்ளது.

அப்படியான சந்தர்ப்பம் ஏற்படாமல் தவிர்க்க, அவருக்கு ஆண்மை நீக்க முதல், கொஞ்ச விந்தை... விந்து வங்கியில் சேகரித்து வைத்து, அவர் கலியாணம் கட்டும் போது... அரசு கொடுக்க முன் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சரி என்று தான்... வாக்களித்துள்ளேன் ஜீவா.

ஆனால்... வயதுக் கோளாறு காரணமாக 20 வயதுப் பெடியன், பாலியல் வன்முறை செய்யும் போது... அவனுக்கும், ஆண்மை நீக்கம் செய்துவிட்டால்... அவனுக்கு வம்சம் இல்லாமல்... போகுமே, என்றும் யோசனையாக உள்ளது.

அப்படியான சந்தர்ப்பம் ஏற்படாமல் தவிர்க்க, அவருக்கு ஆண்மை நீக்க முதல், கொஞ்ச விந்தை... விந்து வங்கியில் சேகரித்து வைத்து, அவர் கலியாணம் கட்டும் போது... அரசு கொடுக்க முன் வரவேண்டும்.

 

அதுக்கு எல்லாம் எத்தனையோ வழிகள் இருக்கும் போது வல்லுறவு தான் பண்ண வேண்டுமா???? :unsure:

 

பேசாமல் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்முறை என்பது ஒரு தனிப்பட்டவர் செய்யும் குற்றம்  என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

 

இது ஒட்டுமொத்தமாக ஒரு சமுதாயத்தில் அந்தச்சமுதாயம் சேர்ந்து செய்யும் குற்றம்.

 

சமுதாயத்தில் முழுமையான மாற்றங்கள் நடைபெறவேண்டும்

 

முக்கியமாக பாலியல் வன்முறை  சம்பந்தமான விழிப்புணர்வுகள் சிறு வயதிலிருந்தே ஊட்டப்படவேண்டும்.

 

எந்தத் தண்டனை கொடுத்தாலும் இவர்கள் திருந்துவார்களா? என்பது கேள்விக்குறியே.

தண்டனை என வரும்போது ஆயுள்தண்டனை அதாவது இறக்கும்வரை.எந்த விதிவிலக்குகளும் இல்லாமல்

நிறைவேற்றப்படவேண்டும்

நான் மூன்று தெரிவுகளுக்கு வாக்களித்துள்ளேன்.

 

1. ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்.

2. மரண தண்டனை கொடுக்க வேண்டும் (முதலாவது செய்து சில காலத்தின் பின்)

3. கல்லால் அடித்து கொல்ல வேண்டும் (மரண தண்டனையை பொது மக்கள் முன்னிலையில் செய்ய வேண்டும்)

பாலியல் வன்முறை என்பது ஒரு தனிப்பட்டவர் செய்யும் குற்றம்  என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

 

இது ஒட்டுமொத்தமாக ஒரு சமுதாயத்தில் அந்தச்சமுதாயம் சேர்ந்து செய்யும் குற்றம்.

 

சமுதாயத்தில் முழுமையான மாற்றங்கள் நடைபெறவேண்டும்

 

முக்கியமாக பாலியல் வன்முறை  சம்பந்தமான விழிப்புணர்வுகள் சிறு வயதிலிருந்தே ஊட்டப்படவேண்டும்.

 

எந்தத் தண்டனை கொடுத்தாலும் இவர்கள் திருந்துவார்களா? என்பது கேள்விக்குறியே.

தண்டனை என வரும்போது ஆயுள்தண்டனை அதாவது இறக்கும்வரை.எந்த விதிவிலக்குகளும் இல்லாமல்

நிறைவேற்றப்படவேண்டும்

 

எந்த குற்றத்தினையும் சூழ்நிலை சார்ந்து, குற்றம் செய்தவரின் வாழ்க்கை நிலை சார்ந்து, வளர்ப்பு முறை சார்ந்து நியாயப்படுத்த முடியும். சூழ்நிலை சார்ந்த நியாயம் என்பது குற்றத்தின் அளவையும் தண்டனையின் பரிமாணத்தினையும் குறைத்து விடக் கூடாது. ஒரு பாலியல் வல்லுறவுக் குற்றவாளி இருக்கும் அதே சமூகத்தில் தான் இந்தக் குற்றங்களை செய்ய விரும்பாமலும் / செய்ய பயந்தும் இலட்சக்கணக்கில் மிச்சப் பேர் இருக்கின்றனர். கடும் சட்டங்களால் குற்றங்களைக் முற்றாக நிவர்த்தி செய்ய முடியாது; ஆனால் கண்டிப்பாக குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் குற்றத்திற்கு அடிப்படை காரணம் என்ன என்பதை தெளிவுடன் ஆராய்ந்து. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
எல்லோரும் எல்லோரிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும்.
பிறரால்  நேசிக்க படாத வர்கள்தான்  பின்னாளில் இப்படியான குற்றத்தில் ஈடுபடுகிறார்கள். 
குடும்ப ஓழுக்க முறைகள் பற்றிய அறிவை சமூகத்தில் ஊட்டவேண்டும்.
நாகரீக உலககிட்கும் நடத்தை கெட்ட உலகிற்கும் உள்ள வித்தியாசங்களை பற்றிய அறிவை பெண்களுக்கு புகட்டவேண்டும்.
 
பாலியல் சேட்டைகளால் அதிகம் துன்புறுவது பணக்கார பெண்கள்தான். உயர்ந்த இடத்தில் தான் அரசியல் சினிமா முதலாளி வர்க்கம் உள்ள இடங்களில் அவர்களுடைய அதிகாரம் பலமாக இருப்பதால். பல பெண்கள் நாளும் இதை சாதரணமாக சந்திக்க நேரிடுகிறது.
 
  Rape case against Rahul Gandhi quashed
"The allegation is without substance and without an iota of evidence," a bench of justices BS Chauhan and Swatanter Kumar said on the allegation levelled against Gandhi of rape of a girl inUttar Pradesh and illegally detaining her along with her parents.
 
  India Remains in Mourning for Rape Victim
Out of respect for the unidentified victim, India's military has canceled its New Year's celebrations, as did Sonia Gandhi, head of the ruling Congress party.
 
ஆயிரம் ஆயிரம் பெண்களை ஈழத்திலும் வங்களா தேசத்திலும் சிதைத்த இராணுவம் புதுவருட கொண்டாடத்தை கொண்டாடவில்லையாம். 
 
பாட்டும்  நானே பாவமும் நானே என்று. இவர்கள்தான் பல பெண்களை சித்திரவதை செய்கிறார்கள். பின்பு நாடகமும் ஆடுகிறார்கள். இந்த நாதாரி கூட்டத்தை வீதிக்கு கொண்டு வந்து விசாரிக்க ஒரு சட்டம் முதலில் வேண்டும். 
 
எப்போதாவது ஒருக்கா முப்புசாமி குப்பத்துக்குள் முக்கிவிட்டால் போதும் உடனே கண்களையும் துடைத்துக்கொண்டு நாடகம் போடவே இந்த கூட்டம் வருகிறது. சுகசாசினி போராட்டம் நத்தியதுபோல்.
 
சவுதியரபியாவில்தான் மோசமான சட்டம் அமுலில் இருக்கிறது. நிதமும் பெண்கள் எங்கே சிதைகிறார்கள் என்று உங்களை ஒருவர் கேட்டால் ..........? உங்கள் மூளை தானாகவே சவூதி அரபியாவை நினைக்காதா?  
கடுமையான சட்டம் எப்படி இதை தடுக்கும்?
எல்லாம் முடிந்த பெண் அவர்களை தூக்கில் போட்டு என்ன பயன்?
டில்லியில் இறந்த பெண் உயிர் எழுந்து வரவா போகிறாள்? அவளை சாவதற்கு முன் தடுக்க வேண்டும். அவளது மரணத்தை தடுக்க வேண்டும்.
 
சமூக விழிப்புணர்வு ஒன்றே இதை தடுக்கும். ஒரு நாட்டில் மக்கள் யாவரும் ஒரே தராசில் நெறுக்க  பட வேண்டும். 
பார்ப்பான் ஏறினால்  பாரமாகவும்........
பாமரன் ஏறினால்  பாரமின்றியும் ............. நீதியின் தராசு இருக்கும் போது. சட்டங்களை போட்டு பாமரனை  கொலை செய்யவே இது இதவும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பாலியல் ரீதியில் பாதிப்படைந்திருக்கின்றார்கள் என அறிந்து வைத்திருக்கின்றார்கள் .

 

எத்தனைபெற்றோர்களஅப்படி அறிந்திருந்தும் அதற்கான சிகிச்சைகளுக்கு 

மருத்துவர்களை அணுகியிருக்கின்றார்கள்.

 

ஒரு சிறிய குற்றம் செய்தாலே அடுத்தவர்களுக்குத் தெரியாமல்

சகலதையும் தம் பிள்ளை என்பதனால் பலரும் மூடிமறைக்கவே முயல்வார்கள்.

 

தண்டனை என்பது எல்லாம் முடிந்த பின்னர் கிடைப்பது.

 

குற்றங்களைச் செய்யத் தூண்டும்  காரணங்களைக்  கண்டறிவது என்பது முதலாவதுபடியில்

 

நடைபெறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரைக் குற்றம் செய்யாமல் தடுக்க பல்வேறு இருக்குது ஆனால் குற்றம் செய்தால் கட்டாயம் அதற்குரிய தண்டனை கொடுத்தேயாக வேண்டும் அப்படிக் கொடுக்கா விட்டால் அவர் செய்தது குற்றம் என எப்படி அவருக்கு தெரியும்?...அவரை செய்த பிழையை அவர் உணர வேண்டும்...நான் இங்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் எனவும்,ஆயுள் தடை கொடுக்க வேண்டும் எனவும் வாக்களித்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நடுச்சந்தி விசையத்துக்குதான் வாக்கு போட்டிருக்கிறேன்.ஒப்பீட்டளவில் சரியான குறைவு என்றாலும் பெண்களாலும் சிறுவர்கள் பாலியல் ரீதியில் பாதிக்கப்படுவதுன்டு. அப்ப அவர்களுக்கு எதை கட்ட பண்னுவது.

பாலியல் வன்கொடுமை செய்வோர்க்கு, ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா... மத்திய அரசுக்கு கூறிய ஆலோசனை சரியா, தவறா என்று யாழ்கள உறவுகளின் கருத்தை அறிய ஆவலாக உள்ளதால்... இந்த வாக்கெடுப்பில்,கலந்து கொண்டு, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உறவுகளே.....

 

 

பாலியல் வல்லுறவிலிருந்து காத்துக்கொள்ளவும், முடியாதவிடத்தும் ஒருசில டிப்ஸ்!
 
 நீங்கள் ஒரு காமுகனிடம் தனியாக மாட்டிவிட்டால் அவனுடன் ஒத்துழைப்பது போல நடியுங்கள். நான் உன்னுடன் ஒத்துழைக்கிறேன் ஆனால் செல் போனில் படமெடுக்காதே என்று கெஞ்சுங்கள்.அப்புறம் அவன் உங்களை ஓரளவு நம்பிவிடுவான்.எதை பற்றியும் கவலைப்படாதீர்கள்.அவன் ஆயத்தமாகும் போது  அதிரடியாக அவனின் விதைகளை  நசித்து கரையப்பண்ணினால் அவன் வண்டியிழுக்கும் மாடாகிவிடுவான்.(ஆண்மையை இழந்து விடுவான்)இதன் பின்  இவனிடமிருந்து பல பெண்களுக்கு பாதுகாப்பு.இல்லை யாரையும் கற்பழித்தபின் காமுகன் அகப்பட்டு கொண்டால் முன்பு கூறியது போல செய்யலாம்.அல்லது பாதிக்கப்பட்டவர் மூலமாக ஆணுறுப்பை அறுத்து எறிந்துவிடலாம்.இம்முறையை இந்தியாவில் ஆரம்பித்தால் உ+ம்:அரைவாசி அரசியல் வாதிகள் மற்றும் தொழில் வழங்குனர்கள் தெருப்பொறுக்கிகள் போன்றோருக்கு ஆணுறுப்பு இருக்காது.
 

ஆண்மை நீக்கம் செய்வது மிகச் சரி.

இது நிச்சயமாகச் செய்யப்பட வேண்டியதொண்டு.

குலையோடு பறிப்பதா, அல்லது குத்து  மதிப்பாய்ப்  பறிப்பதா என்பதை  விவாதத்திற்கு உற்படுத்தலாம்.

 

இவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக, மனித உரிமையை காரணம் காட்டி மற்றவர்களின் வாழ்வை பறிக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இறுதித் தேர்வை தெரிவு செய்துள்ளேன்.

 

பாலியல் குற்றங்களுக்கு குறிப்பிட்ட ஆண் மட்டும் காரணம் அல்ல.

 

* சமூக அமைப்பு.

 

* வாழத் தூண்டப்படும் அல்லது நிர்ப்பந்திக்கப்படும் சூழல்.

 

* தனிமனித உள.. உடல் நலன்.

 

* கல்வி.. சமூக அறிவு.

 

* பொருண்மியம்.

 

* போதைப் பொருள்களின் கிடைத்தற் தகவும்.. பாவனையும்.

 

* பெண்களின் நடத்தைகள்.

 

* பெண்கள் பற்றிய தவறான மற்றும் மிகைப்படுத்திய கற்பிதங்கள்.

 

* தாந்தோன்றித்தனமான பெண்ணியம்.

 

* குடும்பச் சிதைவுகள்.

 

* கலாசாரம்.

 

*சினிமா மற்றும் ஊடகங்கள்.

 

*அரசியல் சக்திகள்.

 

* சட்டத்தினை சரியாக அமுல்படுத்தாத அரசுகளும் அரச கட்டமைப்புக்களும்.

 

* சரியான சட்டப் பிரமானங்கள் இன்மை.

 

* மனித உரிமை மீறல்களில் மெத்தனப் போக்கோடு இயங்கும் உலக ஸ்தாபனங்களும் அரசுகளும்.

 

* பாலியலை ஆயுதமாகப் பாவிக்கும் அரச பயங்கரவாதங்களும் அதன் படைகளும். அவை தண்டனை இன்றி தப்பித்துப் பிழைக்க விடப்படுதலும்.

 

இப்படிப் பல காரணிகள் குறைபாடுகளாக உள்ள போது அவற்றை பாதுகாத்தபடி.. ஒரு சிலரை கடுமையாகத் தண்டிப்பதால் மட்டும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட முடியாது. எனவே ஒரு நீண்ட ஆய்வுகள் மூலம்... இப்பிரச்சனைக்குரிய காரணிகளை அகற்ற அல்லது அவற்றின் தாக்கத்தை சமூகத்தில் குறைக்க முற்படுவதன் மூலம்.. வளமான ஒழுக்கமுள்ள நல்ல ஆண் - பெண் சமூகத்தை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

 

இந்தப் பூமிப் பந்தில் எல்லோருக்கும் எதிலும் வளமான வாழ்விற்கு.. இயன்றவரை.. சம வாய்ப்பளிக்கும் போது.. இந்தப் பிரச்சனைகளும் பெருமளவுக்குத் தீரும்..! குறிப்பாக பெண்கள் மத்தியில் உள்ள பேராசைகள்.. அதீத கற்பனைகள்.. ஆடம்பரங்கள்.. ஒழுக்கமின்மைகள்..ஆபாசங்கள்.. ஒழிக்கப்படும் போதும் இவை குறையும்..! :icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

http://en.wikipedia.org/wiki/Laws_regarding_rape

 

இறுதி தேர்வு. பல நாடுகளில்  சிறையில் பல வருடங்களுக்கு இட்டுள்ளார்கள்.இவை ஒவ்வொரு நாடும்  சமூகம் சார்ந்து ஆராய்ந்தே சட்டங்கள் இயற்றி உள்ளார்கள்.சிறையில் அடைப்பது முதலாம் முறை பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்களுக்கே. இவர்களுக்கு நிச்சயமாக கல்வியும் ஊட்டப்பட வேண்டும். இவர்கள் அதன் பின்னும் மீண்டும் சட்டத்தை மீறுமிடத்து ஆயுள் தண்டனையோ அல்லது ஆண்மையை எடுத்தல் போன்றவற்றையோ செய்யலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நடுச் சந்தியில் விட்டு, கல்லால் அடிக்க வேண்டும். (3 votes [13.64%] - View)

மூண்டு பேர் கல்லு எறியுறதுக்கு வோட் பண்ணியிருக்கினம்....நான் நினைக்கிறன் இவை சவூதிப்பக்கம் கனகாலம் நிண்டு மாரடிச்சிருக்கினம் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மை நீக்கம் செய்யோணுமென்று தான் தோன்றுது.

ஆனால் கடைசியில் உலகத்தில் ஆணுக்கே பஸ்சம் வந்திடாதாப்பா?

சகஜமாக பழுகவிடுங்கள் ஆண்&பெண்களை இந்த கற்பழிக்கனும் என்ற எண்ணமே வராது. சமுதாய மாற்றம் தேவை. இன்னும் கற்காலத்தில்தான் இந்தியா நிற்கின்றது. இந்த பிரச்சனை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கின்றது. தாய் & தந்தை நல்ல முறையில் தங்கள் பிள்ளைகளை வளர்த்தால் நல்ல சமுதாய உருவாகும்

Poll: வாக்கெடுப்பு: பாலியல் வன்கொடுமைக்கு ஆண்மை நீக்கம் சரியா/தவறா. (21 member(s) have cast votes) பாலியல் வன்கொடுமைக்கு ஆண்மை நீக்கம் சரியா/தவறா.

  1. bullet_star_rated.png இதனை விட, வேறு என்ன செய்யலாம், உங்கள் கருத்தைக் கூறவும்.

குற்றத்திற்கு தண்டனை என்ன கொடுக்க வேண்டும் என்பதை அந்த அந்த நாட்டு சட்டவிதிமுறைகள், சமூக ஒழுங்கமைப்புக்களின் அடிப்படையில் மேற்கொள்ளபடலாம்.

 

குற்றம் செய்யபடுவதற்கான மூல காரணம் (Root Cause) நீக்க படாதவரை தண்டனைகள் மூலம் பெரிதாக மாற்றத்தை கொண்டுவர முடியாது.

 

டெல்லியில் நடந்த சம்பவத்தில் மரணம் அடைந்த பெண் மீது பேருந்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கபட்டது. மதுபோதையில் உள்ளவர்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு தடை போட்டால் இப்படியான ஒரு சம்பவம் மீண்டும் பேருந்தில் நடைபெறுவது தடுக்கபடலாம்.

 

மது அருந்துதல் ஒருவரை சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தூண்டுகிறது என்றால் மது அருந்துவது சம்மந்தமான விழிப்புணர்வு சமுதாயத்தில் ஏற்படுத்தபட வேண்டும்.

 

அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் கொலை குற்றத்திற்கு மரண தண்டனை கொடுக்கபடுகிறது. என்றாலும் அண்மையில் கூட 26 சிறுவர்கள் ஒரு பாடசாலையில் கொலை செய்யபடுவதை அந்த சட்டத்தினால் தடுக்க முடியவில்லை.

 

உள வள கல்வி மூலம் இப்படியான கொலை, பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடைபெறுவதை குறைக்கலாம்.

 

குற்றம் இழைக்கும் ஆணின் பாலியல் உறுப்பை நீக்குவதன் மூலமோ, மரண தண்டனை மூலமோ பெரிய மாற்றங்கள் வர போவதில்லை.

பாலியல் கல்வி அது சார்ந்த அறிவு அனைவருக்கும் அவசியம். அதை ஒரு மறைபொருளாக பிரச்சனைக்குரியதாக எப்போதும் இந்தியச் சமூகம் வைத்திருக்கின்றது. மிக வெளிப்படையான கலந்துரையாடல். பாலியல் தொழிலை தாராளமயமாக்கல் போன்றன பாலியல் விவகாரத்தில் வக்கிரத்தை தோற்றுவிப்பதை தடுக்கும். வயிற்றுப் பசிக்கு சாப்பாடு இல்லை எனில் திருடச் செய்வார்கள் அல்லது திருடும்போது கொலையும் செய்ய நேரிடுகின்றது. வயிற்றுப் பசிக்காக பாலியல் தொழிலையும் செய்கின்றார்கள். காமப் பசி வயிற்றுப்பசிக்கு ஒப்பிட முடியாவிட்டாலும் சமயத்தில் அதுவும் பசிதான். அவைகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் தீனி அவசியம். பசியை கிண்டிவிடுவதில் எத்தனை ஆயிரம் நுதனங்களை பெண்கள் செய்கின்றார்கள் அது சினிமாவாட்டும் உடை அலங்காரம் செய்கைகள் ஆகட்டும். இவற்றோடு கூடவே இந்தியாவில் மேற்தட்டு பெண்கள் பசியை கிண்டிவிடுவதோடு அல்லாமல் கீழ்தட்டு ஆண்களை கேவலமகாவும் அலட்சியப்படுத்துவதுண்டு. பாலியல் வன்முறை என்பதற்கான கரு பல தளங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது. அங்கே தான் தீர்வுகளை நாட வேண்டும் தவிர எடுத்தேன் கவுத்தேன் என்று கத்திரிக்கோலை தூக்கக் கூடாத

 

 

Edited by சண்டமாருதன்

புதுசா சட்டம் கொண்டு வந்து என்ன செய்ய போறாங்க?? ஏற்கனவே உள்ள சட்டத்தாலே என்ன சாதிச்சு இருக்காங்க?? இந்த சட்டத்தை வச்சு காவலர்களும், அரசியல்வாதிகளும் யாரவது அப்பாவிய / அரசியல் பழிவாங்கலை செய்வதற்கு இன்னும் கொஞ்சம் உதவியா இருக்கும் அவ்வளவே.

ஞாநி எழுதிய கட்டுரையின் கருத்துக்களின் சாராம்சத்தை ஒருமுறை உங்களின் பார்வைக்காக 

1. பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர்  மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய  எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை எந்த சட்டம் அனுமதிக்கிறது?

 

2. டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருக்க எந்த சட்டம் அனுமதிக்கிறது?

 

3. மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற அரசு  நிர்வாகத்தை என்ன செய்வது ?

 

4. பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள்.  பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை,  சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்ட இந்த சமூகத்தை மனநிலையை என்ன செய்யலாம்?

 

ஏதோ இந்த சமூகம் ஒழுக்கம் நிறைந்தது போலவும் அதில் மிகச் சிலரே குற்றவாளி போலவும் அல்லவா இருக்கிறது மீடியாக்களின் வாதங்கள். மதுபானங்களை விற்கும் அரசு, கல்விக் கூடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசு, அதை சகித்து கொண்டிருக்கும் சமூகம்.  குப்பை கொட்டுவது, ரேசன் கடையில் பொருள் வாங்குவது, சாலை விதிமுறைகளை மீறுவது, ஓட்டுப் போடுவது இப்படி எல்லாவற்றிலும் ஒழுங்கின்மை... . சட்டங்களால் இவற்றை களைய முடியாது.  சமூக மாற்றமே தேவை !!

 

 

அனைவருக்கும் கல்வியறிவு கிடைக்க கூடியதாய் அந்த நாட்டு அரசாங்கங்கள் வசதி செய்து கொடுக்க வேண்டும் ,, அன்பாலும் ,அறிவாலும் ,பொறுப்புணர்வுடனும் ,மனித சமூகம் உருவாக்கப்படவேனும் ....சாதி ,சமய ,உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற பேதம் இன்றி ஓர் சமூக அமைப்பு உருவாக்கப்படவேண்டும் .............அப்போது இந்த மனித பலவீனங்கள் அறவே .ஒழிந்துவிடும் .அல்லது குறைந்துவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே தீர்வு மரணதண்டனை. 

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் எழும்பிக் குதிக்காதமாதிரி  அடிபோடவேனும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.