Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விசுகுவும் அபிலாசைகளும்.............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு நான் வருவதற்கு ஒரு நோக்கமுண்டு என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகின்றேன்..

கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு மேலாக என்னுள் எரியும் நெருப்பு அது.

அது தானாக வந்ததன்று.

சிங்களம் அடித்து படிப்பித்தது அதை.

1983 இல்

மிகவும் வசதியாக

சிங்கள இசுலாமிய நண்பர்களுடன் பழகியபடி

பம்பலப்பிட்டிய இந்துவில் படித்துக்கொண்டிருந்த என்னை..

உன் இடம் இதுவல்ல என சிங்களமும் இசுலாமிய நண்பர்களும்

கோடிக்கணக்கான சொத்துக்களை எடுத்துவிட்டு உடுத்த உடுப்புடன் அனுப்பி  வைத்தனர்....

அந்த கொடூர அனுபவமும் தொடர்ந்து நடந்த அழிவுகளும் என்னை ஒருவழித்தீர்வுக்கு மட்டுமே இட்டுச்சென்றன.

அது தமிழரின் தாகம் தமிழீழம் என்பதாகும்.....

இதை இன்றும் எங்கும் சொல்ல நான் தயங்குவதில்லை.

அதற்காக உழைப்பதற்கோ

அதற்காக உழைப்பவர்களுடன் கைகோர்க்கவோ

என்றும் பின்னின்றதில்லை....

எனது உழைப்பில் ஒரு பகுதியை  அதற்காக ஒதுக்க மறந்ததில்லை....

முள்ளிவாய்க்காலுக்கு பின்

பலர் இதிலிருந்து விலகி

ஒதுங்கி விட்டாலும்

நான் அதிலிருந்து  இம்மியளவும் விலகவில்லை

ஆனால் அண்மைய  காலங்களில்

இதற்கு சில எதிர்ப்புக்கள் வருகின்றன.

நான் இவ்வாறு இருப்பது சிலருக்கு இடைஞ்சலாக

எரிச்சல் தருவதாக இருப்பதை அறியமுடிகிறது..

அதற்காக ஒரு விடயத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன்...

எனது குடும்பத்தை சார்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு

(எனது அண்ணர் மற்றும் அக்காமாரின் பேரப்பிள்ளைகள்)

பிறந்தநாள் விழாக்கள் செய்யும் போது அவர்களுக்கு எனது தாகத்தை வெளிப்படுத்தும்

வேரூன்ற வைக்கும் நோக்கத்துடன்  ஒரு அணிகலனை (பென்ரன்) செய்து போடுவது வழமை.

இதுவரை ஒரு 15 பேருக்கு செய்து போட்டிருப்பேன்.

அது முள்ளிவாய்க்காலுக்கு முன் பச்சையாக இருக்கும்

முள்ளிவாய்க்காலுக்குப்பின் சிவப்பாக இருக்கும்........

எனது நண்பரின் நகைக்கடையில் தான் தொடர்ந்து  அதைச்செய்து வருகின்றேன்.

இறுதியாக அந்த அணிகலனை நான் செய்தபோது 

அந்த முதலாளிக்கும்

தொழிலாளிக்கும் நடந்த சம்பாசனையை எழுதி முடிக்கின்றேன்.....

இந்த அணிகலனை நான் எடுக்கப்போயிருந்தபோது

அதை என்னிடம் தந்த  தொழிலாளி என்னிடம் கேட்டார்

இன்னும் தமிழீழத்தை நம்புகின்றீர்களா அண்ணா என்று....

நான் பதில் சொல்லும் முன் அந்தக்கடை முதலாளியே  பதில் சொன்னார்.

இந்தக்கேள்வி  இவர் இதை என்னிடம் செய்யும்படி ஓடர் கொடுக்கும் போதெல்லாம் எனக்கும் வரும்.

ஆனால் இவர் ஒன்றை விதைக்கவிரும்புகின்றார்

அதனாலேயே பெறுமதியானதைக்கொடுக்கின்றார்

அதுவும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கின்றார்

இவருடைய ஆசை என்ன என்று கேட்டால் அத்தனை பிள்ளைகளும் சொல்வார்கள் தமிழீழம் என்று.

முள்ளிவாய்க்காலுக்குப்பின் இவரது இந்த நடவடிக்கை தான் என்னுள் சில கேள்விகளை  விதைத்தது

அதுவே இவரது நோக்கமாக இருக்கும் என்றார்...

இது தான் அந்த அணிகலன்...

எங்காவது இதனுடன் நீங்கள் யாரையாவது கண்டால்

அது என் குடும்பம் என்பதை அறிந்து கொள்ளலாம்....

முன்பக்கம்

img207.jpg

பின் பக்கம்.....

img206.jpg

(யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும்   போலிருந்தது.)

  • Replies 77
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

------

இது தான் அந்த அணிகலன்...

எங்காவது இதனுடன் நீங்கள் யாரையாவது கண்டால்

அது என் குடும்பம் என்பதை அறிந்து கொள்ளலாம்....

முன்பக்கம்

img207.jpg

பின் பக்கம்.....

img206.jpg

(யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும்   போலிருந்தது.)

எல்லாம்... நன்றாக இருந்தது,

அந்தக் கடைசி வரியை, நீக்கி விடுங்கள். விசுகு.

இதுபற்றி முன்னர் கூறியிருந்தீர்கள். இப்பொழுது தான் படமாக பார்க்கிறேன்.

தமிழீழத்தையும் தமிழீழ மக்களையும் பற்றிய உங்கள் சிந்தனை எமக்கு தெரியும். என் வாழ்வில் உங்களை சந்தித்ததை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.

(யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும் போலிருந்தது.)

இந்த வரிகள் எதற்கு விச்சு அண்ணா. :(

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும்   போலிருந்தது

எவ்வளவு உறுதியாக உங்கள் கொள்கையை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்கிறீர்களோ அதே உறுதியுடன்  எத்தனை  தடங்கள் வந்தாலும் யாழுடன் இணைந்து இருக்க வேண்டும். பலருக்கும் பல விதமான அணுகு முறைகள் இருக்கலாம் யார் சரி என்பது நிறுவப்படும் வரை கேள்விக்குறியானதே. எல்லோருக்கும் தமது வாழ்க்கை அனுபவத்தை கொண்டே  கொள்கைகளை வகுக்கிறார்கள் அல்லது வேறொருவரின் கொள்கையோடு ஒத்துப்போகிறார்கள். வரலாற்றில் சிலரின் கொள்கையை எள்ளி நகையாடியவர்கள் பின்னாளில் அதே கொள்கையை சரி என்றோரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
 
தமிழீழம் என்பது முள்ளிவாய்க்காலோடு நிறைவு பெற்றிருக்கலாம்.அக்கொள்கை தொடர்வது என்பதை அங்குள்ள மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.எதிரியின் அடக்கு முறை அவர்களுக்கு வேறு தெரிவை கொடுக்குமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

(யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும்   போலிருந்தது.)

இப்படி நீங்கள் ஜோக்கிற்கும் சொல்லக்கூடாது விசுகு அண்ணா . :(

  • கருத்துக்கள உறவுகள்

இதை மஞ்சளும் சிகப்புமாகக் கொடுக்கும் காலம் கனியவேண்டும் விசுகு..!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு நீங்கள் அறிவும் ஆற்றலும் உள்ள ஒரு யாழ் இணைய உறுப்பினர். அந்தக் கடைசி வரிகள் என்னைப் கலங்கவைக்கிறது காரணம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருந்த போது பலரது வீட்டுச் சுவரை அலங்கரிப்பது.. அவரவர் குடும்ப போட்டோக்களும்.. நடிகர்.. நடிகைகளும்.. இயற்கை காட்சிகளும் தான். ஆனால் எங்கள் வீட்டில்.. பெரிய ஒரு தமிழீழம் அமைத்திருந்தேன். அதில் தமிழீழம் சார்ந்த படங்கள்.. செய்திகளை தேடி தேடி வெட்டி ஒட்டி விடுவேன். 

அந்த வீடு இன்றில்லை. வீட்டை தரைமட்டமாக்கினாலும்.. அன்று சேகரித்த அந்த படங்களும் செய்திகளும் தந்த அறிவை யாரும் தரைமட்டம் ஆக்க முடியாமலே உள்ளது.

அதேபோல் தான் தமிழீழம் என்ற இலட்சியமும். தாயக மக்கள் மட்டுமல்ல.. தாயகத்தை விட்டு இடம்பெயர்ந்த 90% மக்களின் மனங்களில் அது பல நினைவுகளோடு இன்னும் வாழ்ந்து கொண்டே உள்ளது. அது ஓர் நாள்.. விடியும் வேளை வரும். காலங்கள் ஒரே மாதிரியே இருக்கப் போவதில்லை. அந்த நம்பிக்கையோடு எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்பட்டால்.. சிலவற்றை விரைந்து நடத்திக் காட்டலாம். 

தினமும் வாழ்வில் எத்தனையோ தோல்விகள்.. வெற்றிகள். அவற்றிற்காக தோல்வியை கண்டு எவனும் வீழ்ந்ததில்லை. வெற்றியை கண்டு பூரித்துக்கொண்டே வாழ்ந்ததில்லை. அடுத்த நிலைக்கு எப்படியோ போகனுன்னே முயற்சிக்கிறான். அதுபோலவே இதுவும்.

உங்கள் முயற்சியை தொடருங்கள் விசுகு அண்ணா. அது மற்றவர்களின் முயற்சியோடு ஒரு நாள் கூட்டுச் சேரும் போது.. இலக்கு அடையப்பட்டதாக இருக்கலாம்.

முயற்சி மட்டுமே திருவினையாக்கும்..!!!  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்
விசுகண்ணா, வெள்ளிக் கிழமை போத்திளைத் திறந்தால், குசும்பு தான். (கடைசி வரி). (நான் அப்படி அடிப்பதில்லை எண்டுவார் பாருங்க).
 
ராஜ ராஜ சோழன் எனும் தமிழ் சக்கரவர்த்தியின் 'தமிழர்களின் மகோன்னத' காலத்தில் வாழ்ந்த தமிழனும் இந்த உலகில் இருந்திருக்கிறான்.
 
தமது சொத்தை கொள்ளை அடித்தவர்கள், சிறை சென்ற போது, மாரடித்து உயிர் விட்ட தமிழனும் இருந்த அதே உலகில், மானம் காக்க, களம் கண்டு வீழ்ந்த மறத் தமிழனும் நாம் வாழும் இந்த காலத்தில் இருந்திருக்கிறான்.
 
ஆக, நாம் வாழும் இந்த காலம் தமிழனின் 'சிறப்பான காலம் இல்லை, என்பதை ஏற்று, காலம் ஒரு நாள் மாறும் என காத்திருப்போம்.
 
சூரியன் மறையாத சாம்ராஜம் என மார்தட்டியவர்கள் மண்ணிலேயே, சுதந்திர குரல் எழுந்து அதிர வைத்த நிலை பார்த்தோம்.
 
ஓடமும் ஒருநாள் வண்டி ஏறும். பொறுப்போம்.
 
எனது விருப்பம் எல்லாம், மகிந்தர் மீண்டு வென்று வர வேண்டும். 
 
அந்த நிலைமையில் தான், உலகம் வேறு வழி இன்றி உறுதியான நடவடிக்கை எடுக்கும். இப்போது ரணில் வந்தால், சமாதானம் வரும் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. 
 
பார்ப்போம்  :icon_idea:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்... எங்கயிருந்து இந்தக் குணம் உங்களுக்கு வந்தது? :mellow:

வெறும் கட்டாந்தரையிலும்....மண் நிரப்பி, மிளகாய்க் கண்டு வளர்த்த.. அந்த 'ஓர்மம் ' எங்கே தொலைந்து போனது?

கொதிக்கும் வெய்யிலிலும், பனங்காய் மீது ஏறிநின்று, காலின் சூடு தணித்த அந்த 'திண்மை' யை எங்கே தவற விட்டு விட்டீர்கள்

கிணற்றின் உப்புத் தண்ணீரிலும்... காசித்தும்பை வளர்த்து.. வீட்டை அழகு படுத்திய அந்த ஆத்ம  'திருப்தியை' எங்கே தொலைத்து விட்டீர்கள்?

பூமி உருண்டை என்ற உண்மையைச் சொன்னதற்காக, கொப்பெனிகஸ் கலிலியோ, துரோகியாக்கப் பட்ட கதை, நீங்கள் அறியாததா?

இரவும் பகலும் இரண்டு வேலை செய்து உழைத்த உங்களது...மனோபலம் ஆட்டம் காணுகின்றதா?

காலம் உங்களைத் தின்று விட அனுமதிக்காதீர்கள்! 

காலத்தைக் கூடத் தின்று ஜீரணிக்கக்கூடிய வலிமையை...எமது மண் எங்களுக்குள் விதைத்துள்ளது!

அதனால் தானே உலகின் மூலை முடுக்கெங்கும் எம்மால் கடை பரப்ப முடிந்தது?!

தூற்றல்கள், துரோகங்கள்,அனைத்தையும் தாண்டி நகர்வதே 'வாழ்க்கை'!

இடுக்கண் வருங்கால் நகுக..... என்றான் வள்ளுவன்!

அவன் சொன்னால் அதில் அர்த்தமிருக்கும்! :icon_idea:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விசுகர். உங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்களத்தில் ஒவ்வருவரும் எழுதும்போது எதோ உறவுக்காரர்கள் எழுதுவதுபோல உள் உணர்வு சொல்லும் அதில் மூத்த உறவுகளில் விசுக்கும் ஒருவராகும் உங்கள் உணர்வை ஒத்த உணர்வுதான் எனதும்.
 
நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுகின்றேன். 

விசுகு அண்ணா, உங்களது உணர்வை ஒத்த நிலையில் தான் அனேகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். நான் உட்பட.

உங்களை ஒருதடவை தான் சந்தித்த போதிலும் உங்களை அப்போதே என்னால புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த கடைசி வரியை நீக்கி விடலாமே அண்ணா. என்றும் சேர்ந்து பயணிப்போம்.

விசுகண்ணை என்ன இது?

நீங்கள் இப்படி பதியலாமா?

இன்னும் நூறாண்டுகள் கூட ஆகட்டும் நாம் கொண்ட கொள்கையும் லட்சியத்தையும் விடாமல் இருந்தால் போதும். நீங்கள் உங்கள் சிந்தனையை இளையோருக்கு எடுத்து செல்கிறீர் அதுதான் இன்றைய தேவை. உங்களை எவ்வளவு பேர் பிள்ளைகளிடம் கொண்டு செல்கிறார்கள். தொடர்ந்தும் உறுதியோடு இருங்கள்.

அப்பறம் என்ர குரு வாரக்குள்ள அதை தூக்கிடுங்கோ.. இல்ல அதுக்கப்புரம் நடக்கிற உள்நாட்டு போருக்கு குருகுலம் பொறுப்பாகாது :)

அப்பறம் என்ர குரு வாரக்குள்ள அதை தூக்கிடுங்கோ.. இல்ல அதுக்கப்புரம் நடக்கிற உள்நாட்டு போருக்கு குருகுலம் பொறுப்பாகாது :)

உங்கட குரு ஏற்கனவே இந்த திரிக்கு வந்து லைக் போட்டிட்டு போயிருக்கிறார். கவனிக்கவில்லையோ? :)

விசுகரிண்ட அறுவை தாங்க ஏலாமக் கிடக்குது எண்டு தண்ணியப் போட்டுட்டு நான் கத்தினதை அந்தாள் கேட்டுட்டுதோ தெரிவில்லை.
 
கடசில ஒரு வரி போட்டு விட்டுது.  :wub:
 
பரவாயில்லை விசுகர்.... கொஞ்ச நாளைக்கு ஓய்வில இருந்து மீண்டும் வருக. :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்
(யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும் போலிருந்தது.)
விசுகு என்னப்பா? என்ன நடந்தது? தொடர்ந்து யாழ்களத்திற்கு வாருங்கள்.....புங்கையின் கருத்துதான் எனது கருத்தும்.....
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட குரு ஏற்கனவே இந்த திரிக்கு வந்து லைக் போட்டிட்டு போயிருக்கிறார். கவனிக்கவில்லையோ? :)

குரு என்ன நினைக்கிறார் என்றால் சில விடயங்களை வெளிப்படையாகப் பெச முடியாது. :D அதனால் எலிகள் துள்ளிக் குதிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு மௌனவிரதம் இருக்க வேண்டும்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலுக்கு பின்

பலர் இதிலிருந்து விலகி

ஒதுங்கி விட்டாலும்

நான் அதிலிருந்து  இம்மியளவும் விலகவில்லை

ஆனால் அண்மைய  காலங்களில்

இதற்கு சில எதிர்ப்புக்கள் வருகின்றன.

நான் இவ்வாறு இருப்பது சிலருக்கு இடைஞ்சலாக

எரிச்சல் தருவதாக இருப்பதை அறியமுடிகிறது..

img207.jpg

பின் பக்கம்.....

img206.jpg

(யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும்   போலிருந்தது.)

தனது லட்சியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்

தடைகளையும் எதிரிகளையும் தாண்டியே செல்ல வேண்டும்

குரு என்ன நினைக்கிறார் என்றால் சில விடயங்களை வெளிப்படையாகப் பெச முடியாது. :D

அப்ப எதற்காக விசுகு அண்ணா அப்படி சொன்னார் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?

நானும் தமிழ்சூரியன் அண்ணாவும் விசுகு அண்ணாவை சந்தித்த போதும் இதே போல் கூறியிருந்தார். ஏதும் மனக்கவலையில் உள்ளாராக்கும் சில நாட்களில் சரியாகி விடும் என்று நினைத்து எதுவும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால் மீண்டும் கூறுவதால் ஏதும் காரணம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு நான் வருவதற்கு ஒரு நோக்கமுண்டு என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகின்றேன்..

கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு மேலாக என்னுள் எரியும் நெருப்பு அது.

அது தானாக வந்ததன்று.

சிங்களம் அடித்து படிப்பித்தது அதை.

1983 இல்

மிகவும் வசதியாக

சிங்கள இசுலாமிய நண்பர்களுடன் பழகியபடி

பம்பலப்பிட்டிய இந்துவில் படித்துக்கொண்டிருந்த என்னை..

உன் இடம் இதுவல்ல என சிங்களமும் இசுலாமிய நண்பர்களும்

கோடிக்கணக்கான சொத்துக்களை எடுத்துவிட்டு உடுத்த உடுப்புடன் அனுப்பி  வைத்தனர்....

அந்த கொடூர அனுபவமும் தொடர்ந்து நடந்த அழிவுகளும் என்னை ஒருவழித்தீர்வுக்கு மட்டுமே இட்டுச்சென்றன.

அது தமிழரின் தாகம் தமிழீழம் என்பதாகும்.....

இதை இன்றும் எங்கும் சொல்ல நான் தயங்குவதில்லை.

அதற்காக உழைப்பதற்கோ

அதற்காக உழைப்பவர்களுடன் கைகோர்க்கவோ

என்றும் பின்னின்றதில்லை....

எனது உழைப்பில் ஒரு பகுதியை  அதற்காக ஒதுக்க மறந்ததில்லை....

முள்ளிவாய்க்காலுக்கு பின்

பலர் இதிலிருந்து விலகி

ஒதுங்கி விட்டாலும்

நான் அதிலிருந்து  இம்மியளவும் விலகவில்லை

ஆனால் அண்மைய  காலங்களில்

இதற்கு சில எதிர்ப்புக்கள் வருகின்றன.

நான் இவ்வாறு இருப்பது சிலருக்கு இடைஞ்சலாக

எரிச்சல் தருவதாக இருப்பதை அறியமுடிகிறது..

அதற்காக ஒரு விடயத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன்...

எனது குடும்பத்தை சார்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு

(எனது அண்ணர் மற்றும் அக்காமாரின் பேரப்பிள்ளைகள்)

பிறந்தநாள் விழாக்கள் செய்யும் போது அவர்களுக்கு எனது தாகத்தை வெளிப்படுத்தும்

வேரூன்ற வைக்கும் நோக்கத்துடன்  ஒரு அணிகலனை (பென்ரன்) செய்து போடுவது வழமை.

இதுவரை ஒரு 15 பேருக்கு செய்து போட்டிருப்பேன்.

அது முள்ளிவாய்க்காலுக்கு முன் பச்சையாக இருக்கும்

முள்ளிவாய்க்காலுக்குப்பின் சிவப்பாக இருக்கும்........

எனது நண்பரின் நகைக்கடையில் தான் தொடர்ந்து  அதைச்செய்து வருகின்றேன்.

இறுதியாக அந்த அணிகலனை நான் செய்தபோது 

அந்த முதலாளிக்கும்

தொழிலாளிக்கும் நடந்த சம்பாசனையை எழுதி முடிக்கின்றேன்.....

இந்த அணிகலனை நான் எடுக்கப்போயிருந்தபோது

அதை என்னிடம் தந்த  தொழிலாளி என்னிடம் கேட்டார்

இன்னும் தமிழீழத்தை நம்புகின்றீர்களா அண்ணா என்று....

நான் பதில் சொல்லும் முன் அந்தக்கடை முதலாளியே  பதில் சொன்னார்.

இந்தக்கேள்வி  இவர் இதை என்னிடம் செய்யும்படி ஓடர் கொடுக்கும் போதெல்லாம் எனக்கும் வரும்.

ஆனால் இவர் ஒன்றை விதைக்கவிரும்புகின்றார்

அதனாலேயே பெறுமதியானதைக்கொடுக்கின்றார்

அதுவும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கின்றார்

இவருடைய ஆசை என்ன என்று கேட்டால் அத்தனை பிள்ளைகளும் சொல்வார்கள் தமிழீழம் என்று.

முள்ளிவாய்க்காலுக்குப்பின் இவரது இந்த நடவடிக்கை தான் என்னுள் சில கேள்விகளை  விதைத்தது

அதுவே இவரது நோக்கமாக இருக்கும் என்றார்...

இது தான் அந்த அணிகலன்...

எங்காவது இதனுடன் நீங்கள் யாரையாவது கண்டால்

அது என் குடும்பம் என்பதை அறிந்து கொள்ளலாம்....

முன்பக்கம்

img207.jpg

பின் பக்கம்.....

img206.jpg

(யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும்   போலிருந்தது.)

இந்த வரிகள் எனக்கும் எதோ கவலை தருவதாகவே உள்ளது..........................

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எதற்காக விசுகு அண்ணா அப்படி சொன்னார் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?

நானும் தமிழ்சூரியன் அண்ணாவும் விசுகு அண்ணாவை சந்தித்த போதும் இதே போல் கூறியிருந்தார். ஏதும் மனக்கவலையில் உள்ளாராக்கும் சில நாட்களில் சரியாகி விடும் என்று நினைத்து எதுவும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால் மீண்டும் கூறுவதால் ஏதும் காரணம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

நாம் மதிப்பவர்களை எள்ளி நகையாடினால் முதலில் கோபம் வரும். பொறுத்துப் போனால் ஒரு கட்டத்தில் சோர்வு வரும். ஆனாலும் விசுகு அண்ணா இன்னும் சிறிது காலம் பொறுமை காப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்... நன்றாக இருந்தது,

அந்தக் கடைசி வரியை, நீக்கி விடுங்கள். விசுகு.

சிறி

நன்றி  அன்புக்கு...

யாழில் எனக்கு கிடைத்த பெரும் நட்பு நீங்கள்..

நாம் இருவரும் பலவிடயங்களில் ஒருமித்து நிற்பது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்

ஆனால் விடை ரொம்ப சுலபம்

நமது இலக்கு

அதில் இருவரும் தெளிவானவர்கள்....

தலைவர்

மாவீரர்கள் சார்ந்தும்

போராளிகள்  

புலிகள் சார்ந்தும் வைக்கப்பட்ட தூற்றுதல்களை

யாரென்று பாராது எதிர்த்தோம்....

அத்துடன் 

பிரான்சில் யாழுக்கு எதிராக குழு அமைப்பதை நாம்  எதிர்கொண்டோம்

பெரும் இடைஞ்சல்களையும் நெருக்குவாரங்களையும் நாம் எதிர்கொண்ட  போதும்

இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக

உபத்திரவம் கொடுக்காத  எமது நோக்கத்தை நாம் நிறைவேற்றினோம்

அந்த திருப்தி  என்றும் எனக்குண்டு...

இதனால் நாம் இருவரும் முதுகில் குத்தும் சில எதிரிகளை  இங்கு தேடிக்கொண்டோம்...

தொடர்ந்து எழுதுவோம்..

பேச வேண்டிய  நேரம் வந்துவிட்டதாக உணர்கின்றேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் ஒருவிதத்தில் பிரதேசவாதத்தை நினைவூட்டும் இணையம் என்பது சிலரது கருத்தாககூட இருக்கலாம். காரணம் யாழ்கள உறவுகள் எதோ ஒரு விதத்தில் யாழ்குடாநாட்டுக்குச் சம்பந்தப்பட்டவர்களாகவே  உள்ளனர்.

மேலும் சாதீய ரீதியான முரண்கள் இங்கு லேசாகத்  இடைக்கிடை தலைதூக்குவதை தவிர்க்க முடியாது.

யாழ்களத்தில் ஓரிரு உறவுகள் தங்கள் பிண்ணணியை வெளிக்காட்டும்போதும், விடுதலைப் புலகளது தமிழீழத்துக்கான போராட்டத்தின்மீது எக்குத்தப்பான விமர்சனங்களை வைக்கும்போதும், யாழ்குடாநாட்டின் படித்த மேல்சாதித் திமிர் பிடித்த எண்ணங்களின் வாசனை சிலவேளை புலப்படும், யாழ் நகரில் மிகவும் பிரபல்யமான பாடசாலை  ஒருகாலத்தில் யாழின் மேல்சாதி வர்க்கத்தினரது அடையாளமாகவே காணப்பட்டது வரலாறு, எனினும் அதுவே தமிழீழத்தின் மிகச்சிறந்த விடுதலைப்போஆளிகளைய்ம் எமக்குத் தந்தது என்பது வேறுவிடையம்.

ரஜனி திரணகமவின் கொலையை இப்போதும் ஊதி ஊதிப்பெருப்பிபோர் இந்த மேல்தட்டு சாதீயத்தின் உச்சங்களே. இவர்களே அவர் உயிருடன் இருக்கும்போதும் அவவை உசுப்பேத்தியவையள். இப்போது நல்லூர் திருவிழா காலத்தில் வெளிவீதி மாலைநேரம் முருகன் வெளிவீதி சுத்துப்போது பார்க்கலாம் இவர்கள் ஒரு குழுவாக ஊர்வலம் வருவார்கள், இவர்கள் போல உள்ளவர்களே ஆபத்தானவர்கள்.

ஆக விசுகர் கனக்கபபேர் கனக்க விடையங்கள்ச் சொல்லுவினம் நான்கூட யாழ்களத்தில் சில விடையங்களை எழுதிவிட்டு பின்பு எழுதாமல் இருந்திருக்கலாமோ என நினைப்பதுண்டு இந்தக் கருத்தாடல் உட்பட.

தமிழீழப்போராட்டம் வெல்லமுடியாத போராட்டமில்லை என்பதை நாம்தான் எமது சந்ததிகளுக்குச் சொல்லவேண்டுமே தவிர அனாமத்துகளது கருத்துக்களுக்கெல்லாம் பதில்கூறவேண்டிய தேவையில்லை.

எமக்கும் எதிரிக்கும் இனிவரும்காலங்களில் மிகவும் கொடுமையான, கடுமையான தண்டனை கொடுப்பதற்கு ஒருகண்மேனும் அஞ்சாத பிரபாகரன் ஒருத்தர் தேவைப்படுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகு அண்ணா எனக்கு என்னவோ இந்தத் திரியை நீங்கள் ஆரம்பித்த தன் நோக்கம் உங்கள் தற் பெருமையை சொல்லுவதற்கு என்றே நினைக்கிறேன்...உங்களுக்கு உண்மையான உணர்வு இருந்தால் சிங்கள,முஸ்லிம்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட நீங்கள் எப்படியாவது அங்கே இருந்து கொண்டு எந்த ஒரு இயக்கத்திலாவது சேர்ந்து அரசிற்கு எதிராக போராடி இருப்பீர்கள்.ஆனால் விட்டால் போதும்,தப்பினால் காணும் என்று நாட்டை விட்டுட்டு ஓடி வந்து விட்டீர்கள்.நீங்கள்,உங்கள் சகோதரங்கள் அவர்கள் பிள்ளைகள் எல்லோரும் இங்கு இருந்து கொண்டு ஏதோ உங்களை விட்டால் தமிழ் உணர்வு மற்றவருக்கு இல்லை என்ட மாதிரி எழுதுறீங்கள் பாருங்கோ.அங்கே தான் நிற்கிறீங்கள்.பென்டன் செய்து கொடுப்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழீழ கனவு வந்து விடாது.அவர்களை வன்னிக்கு அனுப்பி ஆக்க பூர்வமாக அந்த மக்களுக்காக,நாட்டுக்காக இவர்கள் எதாவது செய்திருந்தால் மனப்பூர்வமாக பாராட்டி இருப்பேன்.

மற்றப்படி எனக்கு பிரான்சில் நடக்கும் உள்,குத்துகள் ஒன்றும் தெரியாது.அதற்காக நீங்கள் யாழை விட்டுப் போறீங்கள் என்டால் உங்களை விட கோழை ஒருத்தரும் இல்லை.கருத்துக்களை,கருத்துக்களால் எதிர் கொள்ள முடியாமல் யாழை விட்டு நீங்கள் ஓடிப் போவதால் உங்கள் மீது தான் பிழை என்றாகி விடும்.உங்கள் அரசியற் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.ஆனாலும் யாழ் இருக்கும் வரை யாழோடு நீங்கள் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

Edited by ரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.