Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் அறிவிப்பு ஜனவரி 5ம் திகதி நள்ளிரவு வெளியாகும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
TNA-300-news.jpg

ஜனாதிபதி தேர்தல் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தேர்தல் நடப்பதற்கு, 48 மணித்தியாலங்கள் முன்னதாகவே அறிவிக்கப்படும் என்று சிங்கள ஊடகம் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் நிறைவடையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

தேர்தல் பிரச்சாரக் காலத்தில் தமது நிலைப்பாட்டை அறிவித்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. முன்கூட்டியே அறிவித்தால் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட பிரச்சாரங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு என்ற காரணத்தினால் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் அண்மிக்கும் காலத்தில் அவர் நாடு திரும்ப உள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி விரைவில் கட்சி தீர்மானம் எடுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சிங்கள ஊடகத்திற்கு அறிவித்துள்ளார். 2013ம் ஆண்டு நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் 353,595 வாக்குகளையும், 2012ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 200,044 வாக்குகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://seithy.com/breifNews.php?newsID=123030&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ?9ஆம் திகதி அறிவித்தால் நல்லம்.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ?9ஆம் திகதி அறிவித்தால் நல்லம்.... :D

நீங்கள் சொல்வதும் சரிதான் என்று யோசிச்சு செய்தாலும் செய்வார்கள் ..... :D  

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு

தன்னைத்தானே மலினப்படுத்தக்கூடாது :(  :(  :(

தமிழர்களின் ஒரேயொரு நம்பிக்கை இது மட்டும் தான்........

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு எல்லாருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இருக்கிறதாம். தமிழ் மக்களுக்குக் கூட. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால்யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்களாம்.சம்பந்தர் இந்தியாவுக்கு போனது யாருக்கு ஆதரவு குடுக்க வேணும் என்று கேட்பதற்காக என்றும் ஒரு கதை.மக்கள் இதுவரை தீர்மானம் எடுக்காமல் 6ஆம் திகதி பத்திரிகையப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்.(அன்றைய பத்திரிகையை மாற்றி அடித்த கதை எல்லாம் நிறைய இருக்கு.தமிழ்மக்கள் சார்ந்து சிங்கள அரசுத்தலைவருக்கான தேர்தலில் முடிவெடுக்க முடியாத கூட்டமைப்பும் அதன் தலைமையும் தமிழர்களுக்கு எப்படி உரிமைகளைப்பெற்றுத்தரும்.தமிழ்மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்கள்.தேர்தல் அன்று அதை அமைதியாக வெளிப்படுத்துவார்கள்.

Edited by புலவர்

சம்பந்தர் 60 வருடங்களாக தமிழருக்கு தலைமை தாங்கி தமிழினத்தை நட்டாத்தில் விட்டவரோ ,யாழ் மாவட்டத்தில் இருந்து முன்று பியசேனாக்களை மகிந்தவுக்கு கொடுத்தவர்களுக்கு சம்பந்தரை விமர்சிக்க தகுதி இருக்கா :)  :icon_idea:

சம்பந்தர் 60 வருடங்களாக தமிழருக்கு தலைமை தாங்கி தமிழினத்தை நட்டாத்தில் விட்டவரோ ,யாழ் மாவட்டத்தில் இருந்து முன்று பியசேனாக்களை மகிந்தவுக்கு கொடுத்தவர்களுக்கு சம்பந்தரை விமர்சிக்க தகுதி இருக்கா :):icon_idea:

கரைக்டா சொன்னிங்க.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் 60 வருடங்களாக தமிழருக்கு தலைமை தாங்கி தமிழினத்தை நட்டாத்தில் விட்டவரோ ,யாழ் மாவட்டத்தில் இருந்து முன்று பியசேனாக்களை மகிந்தவுக்கு கொடுத்தவர்களுக்கு சம்பந்தரை விமர்சிக்க தகுதி இருக்கா :)  :icon_idea:

சம்பந்தர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுளாகிவிட்டார். ஆனால் யார் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று அவருக்கும், அவரது கைத்தடிகளுக்கும் இன்னமும் தெரியவில்லை. அதுதான் ஓரளவு நிலைமை தெளிவாகும்வரை காத்திருந்து 5ம் தேதி அறிவிக்கப்போகின்றார்களாக்கும். இது எல்லாம் எப்படி அலரி மாளிகைக்குள் போகலாம் என்பதற்கான காத்திருப்பே தவிர தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான இராஜதந்திர காய்நகர்த்தல் அல்ல. ஏனேன்றால் மகிந்தவும், மைத்திரியும் இவர்களை ஆட்டத்தில் சேர்க்கவேயில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இந்தியாவிட்ட கேட்டுத்தான் எங்களுக்கு முடிவு சொல்லுவாரென்றால் இநதியத்தலைவர்களா எமது பிரதிநிதிகள்..சரி கூட்டமைப்பு எந்த முடிவையும் தெரிவிக்காமல் இருந்து மகிந்த வென்றுவிட்டால் 2005 இல் புலிகள்விட்ட பிழையை கூட்டமைப்பு விட்டு விடடது எனறு;தானே சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூத்தமைப்பின் அறிவிப்பு ஜனநரி 5ம் திகதி வெளியாகும்.

 

 

adu.jpg

மெ..மே...மெக்....மேஏஏ......

 

sheep-500.jpg

 

ஐய்யா சொல்லீட்டார்...மே..மே...மே.....மே...மே........8ம்திகதி மேஏஏஏஏஏ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோசியரிடம் கூட்டமைப்பும் ஆலோசனை கேட்டிருப்பார்கள் அதன்படி ஜனவரி 5ம் திகதியை தெரிவு செய்திருப்பார்கள் ....  :D  

சம்பந்தர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுளாகிவிட்டார்.

சம்பந்தர் இல்ல பிரபாகரனைக்கூட விமர்சிக்க முடியும் ,ஆனால் அதற்கு உங்களுக்கு தகுதியில்லை .சம்பந்தருக்கு வகுப்பெடுக்கிறதை விட குடாநாட்டு மக்களுக்கு அரசியல் விழிபூட்டுங்கள் பயனுள்ளதாகவிருக்கும்.

ஆனால் யார் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று அவருக்கும், அவரது கைத்தடிகளுக்கும் இன்னமும் தெரியவில்லை

***

அதுதான் ஓரளவு நிலைமை தெளிவாகும்வரை காத்திருந்து 5ம் தேதி அறிவிக்கப்போகின்றார்களாக்கும். இது எல்லாம் எப்படி அலரி மாளிகைக்குள் போகலாம் என்பதற்கான காத்திருப்பே தவிர

சம்பந்தர் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் ஜே ஆர் கேட்டபோதே அலரிமாளிகைக்குள் பதவியோடு போயிருக்க முடியும்

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான இராஜதந்திர காய்நகர்த்தல் அல்ல. ஏனேன்றால் மகிந்தவும், மைத்திரியும் இவர்களை ஆட்டத்தில் சேர்க்கவேயில்லையே!

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு மணித்தியாலம் முந்தி 11 மணிபோல அறிவிற்க முடியாதா?
நான் 11இற்கு எல்லாம் தூங்க போய்விடுவேன். ஒரு மணித்தியாலம் முந்தி அறிவித்தால்  கேட்டுகொண்டே  தூங்கலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இல்ல பிரபாகரனைக்கூட விமர்சிக்க முடியும் ,ஆனால் அதற்கு உங்களுக்கு தகுதியில்லை .சம்பந்தருக்கு வகுப்பெடுக்கிறதை விட குடாநாட்டு மக்களுக்கு அரசியல் விழிபூட்டுங்கள் பயனுள்ளதாகவிருக்கும்

சம்பந்தர் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் ஜே ஆர் கேட்டபோதே அலரிமாளிகைக்குள் பதவியோடு போயிருக்க முடியும்

தமிழனாக இருப்பதால் தமிழர்களுக்காக அரசியல் செய்ய வெளிக்கிட்ட எல்லோரையும் விமர்சிக்க எவருக்கும் தகுதி உள்ளது. அதை இல்லை என்று மறுப்பது ஜனநாயக மறுப்பு என்பது அரசியலிலும் மக்கள் சேவையிலும் ஆர்வம் இருப்பதாகச் சொல்லும் உங்களுக்குப் புரியாமல் இருப்பது இன்னும் அரசியல் கற்றுக்குட்டித்தனத்தைத்தான் காட்டுகின்றது.

மேலும் உங்கள் கருத்தில் பிரதேசவாதம் துருத்திக்கொண்டிருக்கின்றது. குடாநாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, தமிழர் தாயகத்தில் வசிக்கும் அனைவருக்கும் விழிப்பூட்டல் செய்வது அவசியம். இல்லாவிட்டால் அரசியலை பொழுதுபோக்காகச் செய்துகொண்டிருப்பவர்கள் அவர்கள் மேல் தொடர்ந்தும் சவாரி செய்துகொண்டிருப்பார்கள்.

சம்பந்தர் திருகோணமலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி செய்த சாதனைகள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர் கதிரைச் சின்னத்தில் தொங்கிகொண்டு கதிரையைக் கட்டிப்பிடித்திருப்பதால்தான் தெரிவாகின்றார். கதிரையை விட்டுவிட்டு உதய சூரியனில் நின்றால் கட்டுப்பணமும் எடுக்கமாட்டார்!

உட்கட்சி ஜனநாயகம் துளியளவும் இல்லாமல் கதவுக்குப் பின்னால் இரகசியமாகக் கதைத்தும் (பேரம் பேசல் கூடக் கிடையாது), பலம் வாய்ந்த வெளிச் சக்திகளான இந்தியாவும், மேற்கு நாடுகளும் சொல்லுவதைக் கேட்டும் அரசியல் செய்பவர்கள் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை ஒருபோதும் முன்னெடுக்கப்போவதில்லை. முடிந்தால் ஏதாவது பதவிகளைப் பெற்று தங்களின் சுகவாழ்வைப் பார்த்துக்கொள்வார்கள். அந்தக் காலத்தில் ஜே.ஆரிடம் பதவியைப் பெற்றுக்கொள்ளாமல் விட்டதற்கு கொள்கைப் பிடிப்புக் காரணமாக இருந்திருக்காது. துரோகியாக்கப்பட்டு காணாமல்போவதை விட பேசாமல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு இருக்கலாம் என்ற மனப்பான்மையே காரணம் என்பது ஓரளவு விசயம் தெரிந்தவர்களுக்கும் தெரிந்த உண்மை!

சரி. இப்போது என்ன செய்கின்றார்கள்?

மைத்திரிக்கு ஆதரவு கொடுக்கப்போகின்றார்கள். ஆனால் ஒரு "பிடி" கூடக் கிடைக்காது. தமிழ் மக்களை மந்தைகளாகவே நினைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கையாலாகாதவர்களிடம் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைப்பது எல்லாம் வெறும் ஏமாற்றம்தான் என்பதைத்தான் வரலாறு காட்டுகின்றது. அந்த ஏமாற்றும் அரசியலைத் தொடர தமிழர்களின் "தலீவர்" சம்பந்தனின் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிட்டுவதாக!

TNA agrees to hijack Tamils for ‘unconditional’ support to Maithiri

[TamilNet, Monday, 22 December 2014, 18:50 GMT]

At a so-called high-level meeting held Monday in Colombo between the main delegation of the Sri Lankan opposition and the constituent parties of the Tamil National Alliance (TNA), the national list parliamentarian M.A. Sumanthiran has promised TNA's unconditional support to Maithiripala Sirisena, informed TNA sources told TamilNet. “The opposition was not prepared to provide any assurance to Tamils. Suresh Premachandran of the EPRLF raised certain questions that on what promises the opposition is expecting the support of the Tamils. There was none from the opposition. The discussion on the topic was knocked down by TNA's national list parliamentarian in front of Chandrika Kumaratunga and Ranil Wickramasinghe,” the source further told TamilNet.

Any promise extended by the opposition would be counter-productive as it would disperse the votes from the South, Mr Sumanthiran, who dominated the agenda of the meeting, was telling the delegates.

“I have met the grassroots in the North and East. 98% wants to support Maithiripala. Only 2% is opposed to it,” Mr Sumanthiran has claimed.

Three ‘election campaign managers’ were also identified from Jaffna, Vanni and Batticaloa on behalf of the TNA.

Lawyer Navanathan from Jaffna, ITAK member Senathiraja from Vanni and Gowrysankar from Batticaloa have been ‘appointed’ as election campaign managers for the common opposition candidate Maithiripala Sirisena on behalf of the TNA.

TELO's Selvam Adaikalanathan, ITAK's Mavai Senthirajah and M.A. Sumanthiran and PLOTE's Dharmalingam Siddharthan were present at the meeting

TNA's Parliamentary Group Leader R. Sampanthan would be going public with the official position after he returns from India on 26th of December, the sources further said.

Commenting, a leading ITAK stalwart in Jaffna told TamilNet Monday that the Tamil people now have a duty to give a lesson not only to the powers that stage the drama, but also to the TNA, which is bankrupt of a political-agenda for Tamils, by abstaining from the voting or invalidating their votes on the presidential polls.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37552

 

ஒரு மணித்தியாலம் முந்தி 11 மணிபோல அறிவிற்க முடியாதா?
நான் 11இற்கு எல்லாம் தூங்க போய்விடுவேன். ஒரு மணித்தியாலம் முந்தி அறிவித்தால்  கேட்டுகொண்டே  தூங்கலாம்.

 

 

சம்பந்தரின்ர பேச்சு உங்களுக்கு தாலாட்டு மாதிரி கிடக்கு?  :D  :D

இந்த தேர்தலில் மகிந்தவோ அல்லது மைத்திரியோ தோல்வி அடைவதை விட தமிழ் தேசியக் கூத்தமைப்பு தன் சொந்த தமிழ் மக்கள் முன் பெரும் அரசியல் தோல்வியை தழுவிவிட்டது.  தன் மக்கள் முன் தம் முடிவை அறிவிக்க கூட முதுகெலும்பில்லாத,  பொறுப்பற்ற, தலைமத்துவ பண்பு அற்ற, தான்தோன்றித் தனமான சம்பந்தர் போன்றோர் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரைக்கும் கூத்தமைப்பு இனி செத்தபாம்புக்குச் சமன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள், யார் தயவையும் எதிர் பார்க்காமல் தங்களின் முடிவை எப்போதோ அறிவித்திருப்பார்கள். இப்போது கூட்டமைப்பு மீது சந்தேகம் வலுக்கிறது. இவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளா அல்லது அயல் நாட்டின் பிரதி நிதிகளா?

தண்ணீரில் இருக்கிற மீனுக்கு சளி பிடிச்சுடும் என்று தரையில் இருக்கிற கொக்கு (அயல் நாடு ) தவிக்குதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை எல்லாற்றை கருத்தையும் பார்த்தால் எங்கடை சனம் ஆட்டுமந்தைக்கூட்டம் என்ற மாதிரி எல்லோ இருக்குது.கூட்டமைப்பு நிக்கும் தோ்தலில் கூட்டமைக்கு வாக்கு.மற்ற தோ்தலில் தாங்களே தீர்மானிப்பார்கள்.

இதுதான் உண்மை, போக கடைசி வரை இளுத்தடிச்சு இரண்டுதரப்போடும் பேரமும் பேசிபார்க்க சந்தர்ப்பமும் இருக்கு.

கூட்டமைப்பின் காட்டலுக்கு காத்திருக்கும் குடிமகன்  :o  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் 60 வருடங்களாக தமிழருக்கு தலைமை தாங்கி தமிழினத்தை நட்டாத்தில் விட்டவரோ ,யாழ் மாவட்டத்தில் இருந்து முன்று பியசேனாக்களை மகிந்தவுக்கு கொடுத்தவர்களுக்கு சம்பந்தரை விமர்சிக்க தகுதி இருக்கா :)  :icon_idea:

 

 

அம்பாறையில் இருந்து அரசு கட்சிக்கு சென்ற பியசேனவை சம்பந்தர் தான் மகிந்தவுடன் போய் சேரும் படி சொன்னவராம். :icon_mrgreen:

 

தமிழ் வாக்காளர்கள் சம்பந்தரை விட கெட்டிக்காரர்கள் என வரும் தேர்த்தலில் காட்டுவார்கள். மனத்துணிவு இல்லாதவர்கள் எல்லாம் தமிழர்களுக்கு தலைவராக இருந்து என்ன பலன்?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பை பொறுத்தவரை, யார் என்ன சொன்னாலும் கவலைப்பட தேவையில்லை. காரணம், யார் என்ன சொன்னாலும் மக்கள் வோட்டு போடப் போவது, வீடு சின்னத்துக்குதான் வேறு சாய்ஸ் கிடையாது. இடையே வரும் ஜனாதிபதி தேர்தல் அவர்களது பிரையோரிட்டி லிஸ்ட்டில் இல்லை. யாருக்காவது வாக்களிக்க வேண்டும் என்று சொல்லவேண்டும் என்பதற்காக ஏதாச்சும் சொல்வார்கள், கடைசி நேரத்தில்.

 

மகிந்த வந்தாலென்ன, மைத்திரி வந்தாலென்ன, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்புக்கு சிக்கல் இல்லை. இரு தரப்புமே கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் செய்ய உகந்த  ஜனாதிபதிகள்தான். 

 

அடுத்த 10 வருடத்துக்காவது இந்த நிலை தொடரும். அதற்குள் புதிதாக யாராவது அரசியலுக்குள் வர வேண்டும். அந்த நபர் இலங்கையிலும் வசிக்க வேண்டும். ஒருவேளை கூட்டமைப்புக்குள்ளேயே இளைய தலைமுறையினர் வரலாம். 

 

சிங்கள அரசியல்வாதிகள் இன்னும் சில வருடங்களுக்கு ‘புலி வருது’ அரசியல் செய்ய முடியும். அதன்பிறகு யாரும் அதை நம்ப மாட்டார்கள். இப்போதே யாரும் பெரிதாக நம்புவதாக தெரியவில்லை. அந்த சாப்டர் முடிந்தபின் சிங்கள அரசியல்வாதிகளும் ரியல் அரசியல் செய்ய வேண்டிவரும். அதுவரை கூட்டமைப்பே ராஜா.

Edited by sabesan36

கூட்டமைப்பை பொறுத்தவரை, யார் என்ன சொன்னாலும் கவலைப்பட தேவையில்லை. காரணம், யார் என்ன சொன்னாலும் மக்கள் வோட்டு போடப் போவது, வீடு சின்னத்துக்குதான் வேறு சாய்ஸ் கிடையாது. இடையே வரும் ஜனாதிபதி தேர்தல் அவர்களது பிரையோரிட்டி லிஸ்ட்டில் இல்லை. யாருக்காவது வாக்களிக்க வேண்டும் என்று சொல்லவேண்டும் என்பதற்காக ஏதாச்சும் சொல்வார்கள், கடைசி நேரத்தில்.

 

மகிந்த வந்தாலென்ன, மைத்திரி வந்தாலென்ன, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்புக்கு சிக்கல் இல்லை. இரு தரப்புமே கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் செய்ய உகந்த  ஜனாதிபதிகள்தான். 

 

அடுத்த 10 வருடத்துக்காவது இந்த நிலை தொடரும். அதற்குள் புதிதாக யாராவது அரசியலுக்குள் வர வேண்டும். அந்த நபர் இலங்கையிலும் வசிக்க வேண்டும். ஒருவேளை கூட்டமைப்புக்குள்ளேயே இளைய தலைமுறையினர் வரலாம். 

 

சிங்கள அரசியல்வாதிகள் இன்னும் சில வருடங்களுக்கு ‘புலி வருது’ அரசியல் செய்ய முடியும். அதன்பிறகு யாரும் அதை நம்ப மாட்டார்கள். இப்போதே யாரும் பெரிதாக நம்புவதாக தெரியவில்லை. அந்த சாப்டர் முடிந்தபின் சிங்கள அரசியல்வாதிகளும் ரியல் அரசியல் செய்ய வேண்டிவரும். அதுவரை கூட்டமைப்பே ராஜா.

உது அவர்களுக்கு தெரிந்தபடியால் தான் உந்த விளையாட்டு எல்லாம் காட்டுகின்றார்கள் .தமிழர்களின் பிரதிநிதியாக யார் வந்தாலும் அவர்கள் முதுகில் சவாரி விட தொடங்கிவிடுவார்கள் .காதை பிடித்து திருப்ப கேட்டுக்கேள்வி அந்த பக்கம் திரும்பிவிடுவான் முக்கால்வாசி தமிழன் .

சுயமாக சிந்திப்பது என்பது தமிழர்கள் அகராதியில் இல்லை .

தமிழர்கள் தமது சுயவிரும்பத்தின்படி எவருக்கும் வாக்களிக்கலாம். சம்பந்தரின் அறிவிப்பு இப்படித்தானிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.