Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் இந்தியப் பயணம் பற்றி சுவாரசியமாக ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நானும் ஒரு வாரமாக முயல்கிறேன். எங்கே

இந்தியாவில் கடையில் சாப்பிடுவதில்லை என்னும் கொள்கையை பிரபாகரன் என்பவர் உடைத்தார். இவர் தமிழரின் தோற்றுவாய் சுமேரியமா குமரிக்கண்டமா என்னும் நூலை எழுதியவர். நான் லண்டனில் இருந்து வந்துள்ளேன் என்றதும் மிக உயர்ந்த உணவகம் ஒன்றுக்கு என்னை அழைத்தார். எனக்கும் யோசினைதான். இருந்தாலும் நல்ல உணவகம் என்று என் மாமியும் சிபார்சு செய்ய அங்கு போய் அவர் ஓடர் பண்ணியதெல்லாம் ஒன்றும் விடாமல் காலியாக்கிவிட்டு பயந்து பயந்துதான் வீட்டுக்கு வந்தது.

மாமி வீட்டில் தங்கியிருந்த எனக்கு ஒருவாரமாக மரக்கறி உணவே தஞ்சமாக இருந்ததால் ஒரு மனத் திருப்தியோடு வீடு வந்தால் வயிறு குளம்புகிறதோ என்று நெஞ்சிடி ஒருநாள் முழுதும். நல்ல காலத்துக்கு ஒண்டும் நடக்கேல்ல.

இரண்டுநாள் கழிய பொங்கலுக்கு அடுத்த நாள், நானும் மாமியும் உடுப்புகள் எடுக்கப் போனது. திடீரென்று எனக்கு வயிறு எல்லாம் காலியாகி ஏழுநாள் சாப்பிடாததுபோல் பசி. மாமி எது நல்ல ஹோட்டல்? உடனடியா சாப்பாடு வேணும் எண்டதுக்கு பக்கத்திலதானடி சரவணபவன். நானும் மரக்கறி எண்டதால அங்கேயே போவம் என்று அழைத்துப் போய் கீழே பார்த்துவிட்டு சனம் கியூவில நிக்குது. வா மேலே ஏசி என்று அங்கு போனால் அங்கும் வரிசை. வேறு எங்காவது போவமோ என்று நான் கேட்க,எல்லா இடமும் சனமாத்தான் இருக்கும். இங்கேயே நிப்பம் என்று பெயரைக் குடுத்துவிட்டு நிண்டால் அரை மணித்தியாலமாப் போச்சு மேசை கிடைக்கிற பாட்டைக் காணேல்லை.

எமக்குப் பிறகு வந்த இருவரை அவன் கூப்பிட நாம் தான் முதலில வந்தோம் என்று அவனுடன் சண்டை போட்டு ஒருவாறு மேசையைக் காட்ட, மேசையில இருந்த உடனேயே, உடனே உண்பதற்கு எதுவும் தர முடியுமா என்று கேட்க, கிச்சடி தான் இருக்கு என்றான் அவன். பச்சடி மாதிரி இதுவும் ஒரு சம்பல் அயிட்டம் போல. நக்கலுக்குச் சொல்லுறானாக்கும் என்று அவனைக் கோவத்தோட  பார்க்க, மாமி விளங்கிக்கொண்டு அது ரவைக்கு மரக்கறி எல்லாம் போட்டிருப்பார்கள். நால்லா இருக்கும் என்றார்.

சரி கொண்டுவா என்றுவிட்டு போத்தல் நீர் வாங்கி இரண்டு கப் நிரப்பிய பிறகுதான் கொஞ்சம் நிதானம் வந்திது. 

கிச்சடி வந்த உடனேயே மாமியையும் கவனிக்கேல்ல கடகட எண்டு ஒரு அஞ்சு நிமிசத்தில சாப்பிட்டாச்சு. என்னடி உனக்கு இவ்வளவு பசியே என்று சிரித்த மாமியை அலட்சியம் செய்துவிட்டு ஸ்பெசல் மசாலாத் தோசை ஒன்றும் ஓடர் செய்துவிட்டுக் காத்திருந்தேன்.

மாமி பத்துக்கறியுடன்  சோறு சாப்பிட, அட நானும் சோறை எடுத்திருக்கலாமோ என்று மனம் அங்கலாய்க்க, மானம் கெடுக்காதை என்ற மனதை பார்த்து பேசாமல் மசாலாத் தோசையை சாப்பிட்டு முடிச்சு ஒரு கொப்பியும் வாங்கிக் குடிச்சிட்டு வெளிய வந்து கொஞ்சம் உற்சாகமாய் போத்தீசுக்குள் நுழைந்தாச்சு.

ஒரு அரை மணிநேரம் போய் இருக்கும். இண்டைக்கே எல்லாம் முடிக்க வேணும். திரும்பத்திரும்பக் கடைக்கு வரக்கூடாது  என்ற என் சங்கல்ப்பத்தை உடைப்பதுபோல் வயிறு எதோ செய்யத் தொடங்க கைகால் எல்லாம் சோர்ந்து மயக்கம் வருமப்போல் இருக்க, மாமி வாங்கோ வீட்டை போவம் எந்தன் நான். எடி...  தெரிவு செய்த உடுப்புக்கு காசைக் குடுத்து எடுத்துக்கொண்டு போவம் என்றவர், என் நிலையைப் பார்த்து சரி வா என்று வெளியே வந்தார். ஓட்டோவில் அரை மணிநேரம் பயணம் செய்து வீட்டை அடைந்ததும் ஒன்றும் கதைக்காமல் கட்டிலில் சரிந்துவிட்டேன். படுக்க முடியாமல் புரண்டுபுரண்டு படுக்க, அவங்கள் நெய்க்குப் பதிலா டால்டா பாவிக்கிறாங்கள் என்று கேள்வி என்று மாமி கூறிவிட்டு இஞ்சித் தேத்தண்ணி தரட்டோ என்றார்.

சரி என்று அவன் தந்த தேநீரைப் பருகினால் அவர் இஞ்சி போட மறந்து இஞ்சி காட்டியிருந்தார். சரி எதோ சூடாக் குடிச்சது சுகம் வரும் எண்டு நம்பிக்கொண்டு திரும்பிப் படுக்க ஒரு பெரிய ஏவறை. இப்பதாண்டி எனக்கு நின்மதி என்ற மாமியைக் கேள்விக்குறியுடன் பார்க்க, ஏவறை  வந்த படியால் ஒண்டும் எக்குத்தப்பாகாது எண்டு சொல்பவரை எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டு இருக்க மட்டுமே என்னால் முடிந்தது.

எப்பிடியோ தூங்கிவிட்டேன். திடீரென வயிற்றைப் புரட்டிக்கொண்டு வர ரொயிலற்ருக்குள் ஓடினால் உடை எல்லாம் நனைந்து ... நேரம் பார்த்தால் இரவு பன்னிரண்டு மணி. சாமத்தில குளிச்சு வந்து படுத்தால் விடியவிடிய வயிற்றோட்டம். நான் இங்கேயிருந்து மருந்துகள் எல்லாத்தையும் ஒண்டும் விடாமல் போட்டும் எல்லாம் நிக்க நாலு நாள் ஆச்சு. அந்த நாலு நாள் படுக்கையுடனேயே இந்தியா வந்த சந்தோசம் எல்லாம் மறந்துபோக, இனிமேல் உப்பிடித் தூரப் பயணம் கணவனோ பிள்ளைகளோ இன்றி வருவதில்லை என்று முடிவாச்சு.

அதன் பின் ஒரு மூன்று நாள் சுகமாகி போகவேண்டிய இடங்கள் போய் சந்திக்கவேண்டியவர்களைச் சந்தித்து ....ஷர்மிளா செய்யத் தன்னுடன் உணவருந்த வரும்படி அழைக்க, ஆசை விடவில்லை. ஒரு உயர் ரக கோட்டல் என்று பொய் சாப்பிட்டதால் மீண்டும் தொடங்கிவிட்டுது வயிறு. தடிமன், காச்சல், இருமல், சத்தி, வயிற்றோட்டம், தலைவலி என்று உள்ள வருத்தம் எல்லாம் சேர்ந்து ஒண்டா வந்திட்டுது. 

இனியும் இங்கு நிண்டால் பிரச்சனை எண்டு 200 பவுன்ஸ் செலுத்தி டிக்கற்றை மாற்றிப் போட்டு படுத்த படுக்கையா வந்து சேர்ந்தது.

இங்குவந்து அண்டிபயடிக் எடுத்து ..... ஒருமாதிரி வருத்தங்கள் மாறினாலும் உடலும் மனமும் சோர்ந்த படியே.

திருப்பவும் எனக்கு உற்சாகம் வர ஏதும் நாட்டு வைத்தியம் இருக்கா ???? தெரிஞ்சாச் சொல்லுங்கோ :D

உங்களுக்குமா !!! நானும் சரவணபவன் சாப்பாடு சாப்பிட்டு சத்தி, வயித்தோட்டம் எல்லாம் வந்திட்டுது. t9717.gif
 
பெரிய உணவகங்கள் நன்றாகவே இருந்தது.
 
அது சரி எப்படி புத்தக வெளியீடு? :D 
  • கருத்துக்கள உறவுகள்

சுமே பயண அலுப்பு வருத்தங்கள் மற்றும் அங்கு நின்ற நாட்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய மன உளைச்சல்கள் மாற சிறிது நாட்கள் எடுக்கும். உங்களைச் சுற்றியுள்ள வேலைகள் திட்டங்களை தள்ளிப்போடாதீர்கள் முடிந்தவரை அதிகபடியான வேலைகளை உடலுக்கும் மனதிற்கும் வழங்குங்கள் சீக்கிரமாக வெளிவந்துவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

-----

மாமி பத்துக்கறியுடன்  சோறு சாப்பிட, அட நானும் சோறை எடுத்திருக்கலாமோ என்று மனம் அங்கலாய்க்க, மானம் கெடுக்காதை என்ற மனதை பார்த்து பேசாமல் மசாலாத் தோசையை சாப்பிட்டு முடிச்சு ஒரு கொப்பியும் வாங்கிக் குடிச்சிட்டு வெளிய வந்து கொஞ்சம் உற்சாகமாய் போத்தீசுக்குள் நுழைந்தாச்சு.

ஒரு அரை மணிநேரம் போய் இருக்கும். இண்டைக்கே எல்லாம் முடிக்க வேணும். திரும்பத்திரும்பக் கடைக்கு வரக்கூடாது  என்ற என் சங்கல்ப்பத்தை உடைப்பதுபோல் வயிறு எதோ செய்யத் தொடங்க கைகால் எல்லாம் சோர்ந்து மயக்கம் வருமப்போல் இருக்க, மாமி வாங்கோ வீட்டை போவம் எந்தன் நான். எடி...  தெரிவு செய்த உடுப்புக்கு காசைக் குடுத்து எடுத்துக்கொண்டு போவம் என்றவர், என் நிலையைப் பார்த்து சரி வா என்று வெளியே வந்தார். ஓட்டோவில் அரை மணிநேரம் பயணம் செய்து வீட்டை அடைந்ததும் ஒன்றும் கதைக்காமல் கட்டிலில் சரிந்துவிட்டேன். படுக்க முடியாமல் புரண்டுபுரண்டு படுக்க, அவங்கள் நெய்க்குப் பதிலா டால்டா பாவிக்கிறாங்கள் என்று கேள்வி என்று மாமி கூறிவிட்டு இஞ்சித் தேத்தண்ணி தரட்டோ என்றார்.

சரி என்று அவன் தந்த தேநீரைப் பருகினால் அவர் இஞ்சி போட மறந்து இஞ்சி காட்டியிருந்தார். சரி எதோ சூடாக் குடிச்சது சுகம் வரும் எண்டு நம்பிக்கொண்டு திரும்பிப் படுக்க ஒரு பெரிய ஏவறை. இப்பதாண்டி எனக்கு நின்மதி என்ற மாமியைக் கேள்விக்குறியுடன் பார்க்க, ஏவறை  வந்த படியால் ஒண்டும் எக்குத்தப்பாகாது எண்டு சொல்பவரை எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டு இருக்க மட்டுமே என்னால் முடிந்தது.

----

திருப்பவும் எனக்கு உற்சாகம் வர ஏதும் நாட்டு வைத்தியம் இருக்கா ???? தெரிஞ்சாச் சொல்லுங்கோ :D

தமிழ் நாட்டுக்கு போனாலே.... மாமியார், மருமகள் சண்டை, ஆட்டாமற்றிக்காக வருவது சகஜம் தானே....

இதுக்கு வைத்தியம், லண்டனில்.... நிறைய ஒரிஜினல் இஞ்சி வாங்கி, தேத்தண்ணியில் போட்டு குடிக்க, சுகமாயிடும் சுமோ. :D

நல்ல பதிவு, வாசித்து சிரித்தேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ...
உங்களுக்கு, வாந்தி வரும் நேரத்தில்.....
புளி மாங்காய், சாம்பல்.... போன்றவைகள் சாப்பிடும் ஆசை வருகின்றதா?
அப்படி என்றால், இதுக்கு.... "மசக்கை" என்று சொல்வார்கள்.
மூன்று மாதம் வரை, இப்படி இருக்கும்.
அதற்குப் பின், நீங்கள்..... மம்மி ஆகி விடுவீர்கள்.LiebeFreunde%20(6).gif

முதன் முதல் திருச்சி போய் ஹோட்டலில் தங்கி இருந்தோம். 
 
இரண்டாம் நாளில் இருந்து ஒரு வாரம் வரை பேதி குடிச்ச மாதிரி.
 
பிரச்சனை... தோசை, இட்லி, சாதம் போன்றவற்றில் இல்லை. ஆனால் சட்னி இருக்கிறதே.... அங்கு தான் பிரச்சனை. நீர் விட்டு அரைப்பார்கள். அந்த நீரில் கிருமிகள் இருக்கும். 
 
ஆனால் இந்தியாவில் இருந்து வயிற்றோட்டம் பழகிவிட்டீர்கள் என்றால் உலகத்தில் எங்கு போனாலும் வயிற்றோட்டம் வராது.
 
  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் இந்தியா போனதில்லை, இனிமேல் போனால் உணவு விடயத்தில் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்...!

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் இந்தியா போனதில்லை, இனிமேல் போனால் உணவு விடயத்தில் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்...!

வந்ததில்லையா? வாழ்க்கையில் 'முக்கால்வாசி'யை வீணாக்கிவிட்டீர்களே! :(:)

எங்கும் போகலாம்.. போக முதல் அந்த நாட்டிற்குரிய தடுப்பூசி போட்டுக் கொண்டு போகலாமே?!  :o

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் போகலாம்.. போக முதல் அந்த நாட்டிற்குரிய தடுப்பூசி போட்டுக் கொண்டு போகலாமே?!  :o

தடுப்பூசி எல்லாம்...

பக்ரீரியா, வைரஸ்களுக்கு... அடங்க மாட்டாது.

எவ்வளவு, சுத்தமான போத்தல் தண்ணீரை வாங்கிக் குடித்தாலும்....

வயிற்றாலை அடி, நிச்சயம்.

உணவு விடயங்களில், கலப்படம் நீக்கமற....  கலந்து விட்டது என்றே எண்ணுகின்றேன்.

திருப்பவும் எனக்கு உற்சாகம் வர ஏதும் நாட்டு வைத்தியம் இருக்கா ???? தெரிஞ்சாச் சொல்லுங்கோ :D

http://www.yarl.com/forum3/index.php?/topic/133361-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

:lol: :lol: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போனது என்று காட்டுவதற்காக இவ்வளவு பில்டப் தேவையா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போனது என்று காட்டுவதற்காக இவ்வளவு பில்டப் தேவையா :lol:

சாத்திரியாரும், இந்தியா போய்...,

சென்னை புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட படங்களை நான் இணையத்தில் பார்த்தேன்.

அவருக்கு... பலமுறை, இந்தியா சென்று, வந்தது பெரிசாக, தெரிய மாட்டாது.

ஆனால்... சுமோவுக்கு... இது தானே..... முதல் முறை என்பதால்,

எம்முடன், அவர் தனது இந்திய பயணத்ததைப் பற்றிய பகிர்வுகளை, பகிர்வதில்... எந்தத் தப்பும் இல்லை, ரதி.

உங்களுக்கு,  இந்தியா..... ஆசையா?

நான் இந்தியா போய் இருக்கிறேன். தெருவில் இருக்கும் கடைகளில் கூட சாப்பிட்டு இருக்கிறன்.ஆனால் ஒரு நாளும் ஒன்றும் செய்யேல்ல[ என்ட‌ உடம்பு கல்லோ :lol:]....இந்தியாவில் இருக்க விருப்பமில்லை ஆனால் ஹொலிடே போக விருப்பம்

சும்மா  கிடைக்குது  என்பதற்காக  எல்லாவற்றையும்  சாப்பிடுவது  பின்னர்  நோயை  நொடி  என்று கூக்குரல்  எழுப்பவேண்டியது  என்ன இது  சின்னபிள்ளை தனமா இல்லை ..

அளவா  உண்ணுங்கள் மகிழ்வா  இருங்கள்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தியா போய் இருக்கிறேன். தெருவில் இருக்கும் கடைகளில் கூட சாப்பிட்டு இருக்கிறன்.ஆனால் ஒரு நாளும் ஒன்றும் செய்யேல்ல[ என்ட‌ உடம்பு கல்லோ :lol:]....இந்தியாவில் இருக்க விருப்பமில்லை ஆனால் ஹொலிடே போக விருப்பம்

ஓமோம்.... நீங்கள்,  வீட்டு கூரையிலிருந்து குதிச்சு, சாகசம் காட்டிய ஆக்கள் என்பதும், தெரியும். :D 

ஆனால்.... வைரஸ், கிருமிக்கு முன்னால்.... இந்த சாகசங்கள்,  கேள்விக் குறி?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
 
கிச்சடி வந்த உடனேயே மாமியையும் கவனிக்கேல்ல கடகட எண்டு ஒரு அஞ்சு நிமிசத்தில சாப்பிட்டாச்சு. என்னடி உனக்கு இவ்வளவு பசியே என்று சிரித்த மாமியை அலட்சியம் செய்துவிட்டு ஸ்பெசல் மசாலாத் தோசை ஒன்றும் ஓடர் செய்துவிட்டுக் காத்திருந்தேன்.

உடம்பு குறைக்க வேணும்ன்னு எங்கேயோ கதைச்ச மாதிரி கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வயித்துப் பிரச்சினை முகத்தில் தெரியுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்தியா சென்றது தந்தியில் யாழுக்கு ஏற்கனவே வந்துவிட்டது.
ஆனால் ஊர் திரும்பிய நிலைமை இப்படி என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் காலையில் 6.00 மணிக்கு முன்னதாக வேர்க்க விருவிறுக்க நடை போடுங்கள் 
எல்லாம் சரியாகிவிடும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயித்துப் பிரச்சினை முகத்தில் தெரியுது.. :D

மண்சட்டிக்கு வயித்தாலை அடிச்சாலும் காரியத்திலை கண். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குமா !!! நானும் சரவணபவன் சாப்பாடு சாப்பிட்டு சத்தி, வயித்தோட்டம் எல்லாம் வந்திட்டுது. t9717.gif
 
பெரிய உணவகங்கள் நன்றாகவே இருந்தது.
 
அது சரி எப்படி புத்தக வெளியீடு? :D 

சரவணபவன் இப்ப கைமாறிவிட்டதென்றுரும் அதனால் முன்புபோல் தரமும் இல்லை என்று கேள்வி. புத்தக வெளியீடு நன்றாக நடந்தது.

சுமே பயண அலுப்பு வருத்தங்கள் மற்றும் அங்கு நின்ற நாட்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய மன உளைச்சல்கள் மாற சிறிது நாட்கள் எடுக்கும். உங்களைச் சுற்றியுள்ள வேலைகள் திட்டங்களை தள்ளிப்போடாதீர்கள் முடிந்தவரை அதிகபடியான வேலைகளை உடலுக்கும் மனதிற்கும் வழங்குங்கள் சீக்கிரமாக வெளிவந்துவிடலாம்.

நான் ஒருநாளும் அன்டிபயோடிக் எடுத்ததில்லை. இம்முறை ஏழு நாட்களுக்குத் தந்தார் வைத்தியர். முழுவதும் எடுத்து முடித்துவிட்டேன். அதனால்த்தான் களைப்பு  என்கிறாள் மகள்.

தமிழ் நாட்டுக்கு போனாலே.... மாமியார், மருமகள் சண்டை, ஆட்டாமற்றிக்காக வருவது சகஜம் தானே....

இதுக்கு வைத்தியம், லண்டனில்.... நிறைய ஒரிஜினல் இஞ்சி வாங்கி, தேத்தண்ணியில் போட்டு குடிக்க, சுகமாயிடும் சுமோ. :D

நல்ல பதிவு, வாசித்து சிரித்தேன். :)

வந்தஉடனே இஞ்சி அவித்துக் குடித்ததுதான். ஆனால் முன்னர் போல் உடனே நோய் குணமாகவில்லை.

சுமோ...

உங்களுக்கு, வாந்தி வரும் நேரத்தில்.....

புளி மாங்காய், சாம்பல்.... போன்றவைகள் சாப்பிடும் ஆசை வருகின்றதா?

அப்படி என்றால், இதுக்கு.... "மசக்கை" என்று சொல்வார்கள்.

மூன்று மாதம் வரை, இப்படி இருக்கும்.

அதற்குப் பின், நீங்கள்..... மம்மி ஆகி விடுவீர்கள்.LiebeFreunde%20(6).gif

சிலவேளை அப்பிடியும் இருக்குமோ ??? எதுக்கும் ஒருக்கா டாக்குத்தரைப் பார்ப்பம் :lol: ஆனால் மூண்டு பிள்ளைகளுக்குமே எனக்கு மசக்கை இல்லையே ........ :icon_mrgreen:

முதன் முதல் திருச்சி போய் ஹோட்டலில் தங்கி இருந்தோம். 
 
இரண்டாம் நாளில் இருந்து ஒரு வாரம் வரை பேதி குடிச்ச மாதிரி.
 
பிரச்சனை... தோசை, இட்லி, சாதம் போன்றவற்றில் இல்லை. ஆனால் சட்னி இருக்கிறதே.... அங்கு தான் பிரச்சனை. நீர் விட்டு அரைப்பார்கள். அந்த நீரில் கிருமிகள் இருக்கும். 
 
ஆனால் இந்தியாவில் இருந்து வயிற்றோட்டம் பழகிவிட்டீர்கள் என்றால் உலகத்தில் எங்கு போனாலும் வயிற்றோட்டம் வராது.

நான் இது நான்காவது தடவை  ஈசன். முன்பு நான்கு வயது மகளுடன் போகும்போதே எதுவும் ஏற்படவில்லை. பொங்கல் சீசன் எல்லாச் சனமும் ரோட்டில்தான்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உங்களின் நிலைமை எப்படி இருக்கு...! உங்களின் வருத்தத்தில் முன்னேற்றம் தெரியுதா அல்லது உடல் நிலையில் முன்னேற்றம் தெரியுதா...!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் போகலாம்.. போக முதல் அந்த நாட்டிற்குரிய தடுப்பூசி போட்டுக் கொண்டு போகலாமே?!  :o

நாம் ஒருபோதும் தடுப்பூசி போட்டுக்கொண்டதில்லை. இம்முறை விதி விளையாடிவிட்டது. :D

இப்ப உங்களின் நிலைமை எப்படி இருக்கு...! உங்களின் வருத்தத்தில் முன்னேற்றம் தெரியுதா அல்லது உடல் நிலையில் முன்னேற்றம் தெரியுதா...!!

நேற்றுடன் மருந்து முடிந்துவிட்டது. இப்ப சாடையான இருமலைத் தவிர ஒன்றும் இல்லை. ஆனால் கடும் பசி எடுக்கிறது. கடைசி ஐந்து தடவையாவது உண்ணவேண்டி உள்ளது சுவி அண்ணா.

என்னை மேலுக்கு அனுப்பப் பிளான் பண்ணுறியள் எண்டு தெரியுது நவீனன் :lol: :lol:

உடம்பு குறைக்க வேணும்ன்னு எங்கேயோ கதைச்ச மாதிரி கிடக்கு.

அது அப்ப. இந்தியா போய் உடம்பு குறைக்க யாராவது ஆசைப்படுவார்களா ஈழப்பிரியன்.

ஆனாலும் என் நோயினால் நான் இரண்டு கிலோ குறைந்துள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது வெறுமனவே கிருமி பிரச்சனை இல்லை போல. தமிழ் மக்களின் சாபமும் சேர்ந்துள்ளது போலவே தெரிகிறது. எப்பவும்.. சோடிப்புகளுக்கு.. புனைதல்களுக்கு.. காட்டிக்கொடுப்புகளுக்கு.. அக்கிரமங்களுக்கு துணை போனாலும்.. பிரச்சனைகள்.. கிருமி வடிவில் தாக்கலாம் சுமே அக்கா. எதிர்காலத்தில் இவற்றை தவிர்த்தாலே பாதி கிருமி தொற்றல் நிற்கும். :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.