Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழ் மக்கள் ஏன் வன்முறையை பின்பற்றினார்கள் என்பது கேள்விக்குறியே' -சம்பந்தன் -

Featured Replies

151002162751_sampanthan_tna_lanka_512x28

இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது

இலங்கையில் 'அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச அகிம்சை தின நிகழ்வில் சம்பந்தன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை உலக நாடுகள் சர்வதேச அகிம்சை தினமாகக் கொண்டாடி வருகின்றன.
வன்முறை முடிவுக்கு வந்து, அகிம்சையின் அடிப்படையில் தமிழ் மக்கள் செயற்படத் தொடங்கியிருப்பதன் காரணமாகவே சர்வதேசத்தின் ஆதரவு அதிகளவில் இப்போது கிட்டியிருக்கின்றது என்று சம்பந்தன் இங்கு தெரிவித்துள்ளார்.

உலகில் செல்வாக்கு மிக்க, அண்டை நாடான இந்தியாவின் உதவி ஒத்தாசைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் உரையாற்றியபோது வலியுறுத்தியிருக்கின்றார்.
வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ள பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்த சம்பந்தன், வியாழனன்று அங்கு இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151002_tamils_sampanthan

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

சம்பந்தன் ஐயாவுக்கு வந்துள்ள சந்தேகம் ஆழமான சிந்தனைக்குட்படுத்தப்பட வேண்டியது. 
(http://www.bbc.com/…/sri_l…/2015/10/151002_tamils_sampanthan
.
ஜெனீவா அறிக்கை வந்ததன் பின்னர் கூட்டமைப்பு விடுத்த பத்திரிகைக் குறிப்பில் 'எமது (தமிழ் மக்களின்) பெயரால் இழைக்கப்பட்ட குற்றங்கள்/ பிழைகள் தொடர்பில் நாம் சுய விசாரணை செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டுருந்தமையோடு சேர்த்து இந்த மேற்படி சந்தேகம் வாசிக்கப்பட வேண்டும். இதை செய்ய சம்பந்தன் ஐயா முன் வந்தமையை பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றின் பத்தி எழுத்தாளர் சம்பந்தன் ஐயாவின் அறவொழுக்க துணிச்சலை (moral courage) சுட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார் என்பதை இங்கு சொல்லி வைக்கலாம். 
.
இந்த சுய விசாரணை நிச்சயம் தேவையானது என்று நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன். ஆயுதப் போராட்டத்தை மலினப்படுத்தாமல் இந்த சுய விசாரணை முன்னெடுக்கப்படலாம் என்றும் கருதுகிறேன். சம்பந்தன் ஐயா ஆயுதப் போராட்டம் ஒன்றே தேவையானதாக இருந்ததா என்றளவிற்கு சுய விசாரணை செய்ய வேண்டும் என்கிறார். நல்லது. அதுவும் தேவை தான் என்றால் என்னிடம் அதற்கான ஆரம்பக் கேள்விகள் சில உள்ளன. இவற்றை வைத்தே இந்த சுய விசாரணையை தொடங்கலாம் என நான் கருதுகிறேன். இதோ அந்தக் கேள்விகள்: 
.
வட்டுக் கோட்டை தீர்மானத்தை ஏன் நிறைவேற்றினீர்கள்? 1975 இல் செல்வநாயகம் அவர்கள் 1972 அரசியலமைப்பை நிராகரித்து இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 04 பிப்ரவரி 1976 அன்று செல்வநாயகம் அவர்கள் தலைமையில் கூட்டணி எம். பிக்கள் 'இந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக இரு தேசங்கள் உள்ளன. அதில் தமிழ் தேசத்திற்கு தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என 1975 இடைத் தேர்தலில் தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளமையை இந்தப் பாராளுமன்றம் அங்கீகரிக்கின்றது' என்ற தனி நபர் பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்தது ஏன்? அதன் உள்ளடக்கத்தில் நம்பிக்கை அற்றவராக இருந்திருந்தால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்ற ஆணை கேட்டு ஏன் 1977 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டீர்கள்? வட்டுக்கோட்டைக்கு ஆணை கேட்டு விட்டு மாவட்ட அபிவிருத்தி சபை முன்மொழிவுகளை ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்? ஏன் இளைஞர்களை ஆயுதம் தூக்கச் சொல்லி உங்கள் கட்சி உணர்ச்சி பிரச்சாரம் செய்தது? 
.
இந்தக் கேள்விகள் இந்த சுய விசாரணைக்கான சிறப்பான ஆரம்பப் புள்ளியாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். சுய விசாரணையை ஆரம்பித்து வைத்து தனது கட்சியின் பெயரால் செய்யப்பட்ட 'பிழைகளை' ஒப்புக் கொள்வாரா சம்பந்தன் ஐயா?

FB  Guruparan Kumaravadivel

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 'அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

கூட்டமைப்பின் ஜில்மால்களும், சிங்கள அரசுகளின் அராஜகங்களுமே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது. அமிர் போன்றவர்கள் ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்த தமிழ் மக்களை மரைமுகமாக ஊக்குவித்தார்கள். சம்பந்தருக்கும் இது தெரியும். இப்போ விரல் சூப்பியாக இருந்து இக்கருத்தை ஏன் சம்பந்தர் தெரிவித்தார் என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான தலைவர்களைத் தானே மக்கள் தமிழர்களின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று தெரிவு செய்தார்கள்.  இவர்கள் விரைவில் மாவீரர்களையும், போராட்டத்தில் மாண்டுபோன மக்களின் தியாகங்களைளும் கொச்சைப்படுத்தி இந்தியாவின் விசுவாசத்தினைக் காட்டப்போகின்றார்கள். 
அகிம்சை போராட்டத்தினால் எதனையும் அடையமுடியாது என்று கூறி இளைஞர்களை ஆயும் தூக்க தூண்டிவிட்டு, தற்போது அனைத்தையும் இழந்து நிற்கும் தமிழர்களுக்கு சர்வதேசத்துடன் போராடி உரிமையை பெற்றுக்கொடுக்க துப்பின்றி, தமது இருப்பிற்காக அரசியல் செய்யும் இத்தலைமை, ஏன் இந்தியாவிடம் தியாகி திலீபன் அகிம்சைப்போரில் இறந்தான் என்று கூறட்டும் பார்ப்போம் இந்த தலைவர்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டத்திற்கு போனவர்கள் நாங்கள் என்றும் விடுதலைப் புலிகளுடன் ஒன்றாக பயணித்தவர்கள் என்றும் பீற்றிக் கொள்பவர்கள் கூட மெளனம். 

  • கருத்துக்கள உறவுகள்

  "ஊமையர் சபையில் உளறுவாயன் மகா பிரசங்கி." 
சிங்களவன் ஏன் உங்களுக்கு கதிரை தந்தவன் என்று இப்பதான் விளங்குது. வாக்குக்கு நாங்கள்,  வக்காலத்து சிங்களவருக்கு. முதலமைச்சரையும் தள்ளி விழுத்திப் போட்டு தடையே இல்லாமல் நடத்துங்கோ நாடகத்தை. சிங்களவன் தன்ர மக்களுக்காக எவ்வளவு செய்யிறான். வெக்கமில்லை உங்களுக்கு? மடிய முன்னம் அடிமையாக எங்களை தாரை வார்க்கத்தான் உங்களை தலைவராக தெரிஞ்சனாங்கள்.

எதுக்கும் விலை போகாமல் இறுதிவரை கொள்கைக்காக போராடியவரே தலைவர். 

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கேள்வியை இவர் தமிழ் மக்களிடம் கேட்பதை விடுத்து.. அவர் குந்தி இருக்க மேடை அமைத்துக் கொடுத்துள்ள ஹிந்தியாவையே கேட்பதுதான் சாலப் பொருந்தும். அவ்வளவுக்கு இவருக்கு ஞாபகசக்தி பிரச்சனை என்றால். :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ ஆயிரம் இளைஞர்களை தூண்டி விட்டு, இப்போ நல்ல பிள்ளைகளுக்கு நடிக்கிறீர்கள்.  எதிரிகள் நேராக தாக்கினார்கள், நீங்களோ யாராரோ  வேட்டியிக்கை ஒழிஞ்சு இருந்து குத்துகிறீர்கள்.

எங்கே ஆயுத போராட்ட பயிற்ச்சி நடந்தது என்பதை தேசியதலைவர் கூறுகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாயின்:
மிகவும் கவலைக்கும் , கண்டனத்துக்குமுரிய விசர்தனமான மேடைப் பேச்சு!! :(
ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி கதைக்கும் கதையாக இது படவில்லை.
 சிங்களவன் இதைத் தான் வேறு மாதிரி கடந்த 40 வருடங்களாக சொல்லிக் கொண்டு இருக்கிறான். 
"தமிழனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை சும்மா இந்த பிரபாகரன் தான் தேவையில்லாமல் துவக்கு தூக்கி தமிழனையும் சிங்களவனையும் முஸ்லீம்களையும் ஏன் இந்த நல்லாட்சி நடக்கும் நாட்டையே குட்டிச்சுவராய் மாற்றியது ..." 
ஒரு முதிர்ந்த தமிழ் தலைவர் இத்தனை சீக்கிரம் அந்தர் பல்டி அடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
பார்ப்போம் தாயகத்து மக்கள் இதை எப்படி பார்கிறார்கள் என்று.
 

images?q=tbn:ANd9GcSFkYdNkX8uUudtXdC_9ja

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcSFkYdNkX8uUudtXdC_9ja

பூனை கண்ணை மூடினால்உலகமே இருண்டிட்டுது என்று நினைக்குமாம். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் ஏன் வன்முறையை பின்பற்றினார்கள்

சும்மா கள்ளன் பொலிஸ் விளையாட்டு விளையாடத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமாரே ....இதுக்குப்பெயர் தான் ராச தந்திரம் 
இது எல்லோருக்கும் புரியாது ....கொள்ளளவு கூடின சிலபேருக்கும் ...புலத்து மக்களுக்கும் தான் புரியும் 
வாக்கு போட்டதும் அவர்கள் ...வருவதை சுமக்கப்போவதும் அவர்கள் 
பெரிய தூரமில்லை ஒரு சில மீட்டர்  இடைவெளி தான் ....ஒன்று வரலாற்று தவறு 
இல்லை அரசியல் தீர்க்கதரிசனம் (எமது மக்கள் தீர்க்கதரிசிகளாக பெயர் எடுப்பதற்கு  இப்போது சிறு வாய்ப்பு கூட தென்படவில்லை ....)

  • கருத்துக்கள உறவுகள்

//தமிழ் மக்கள் ஏன் வன்முறையை பின்பற்றினார்கள் என்பது கேள்விக்குறியே' -சம்பந்தன்//

அந்தக்காலங்களில் சன் டிவி இல்லை என்பதை மறந்துவிட்டார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு பொழுது போக்குகாகத்தான் வன்முறையில் இறங்கினார்கள்.தமிழ் இளைஞர்களுக்கு ஆயிதமும் கொடுத்து பயிற்சியும் கொடுத்தது இந்தியாதான் அவர்களை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டி விட்டது நீங்கள் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சிதான்.

ஏப்பா இந்தாளுக்கு மூளையும் மங்கி எல்லாமும் போய்விட்டது ....எப்ப வந்து என்ன கேள்வி கேட்குது ....என்னது ராஜதந்திரம் ... சொல்றதுக்கு நல்ல வார்த்தை இல்லை ....

  • கருத்துக்கள உறவுகள்

கருனாநிதியின் கயமைகளைக் காட்டிக் காட்டித் திட்டினார்கள். அந்தாள் வளர்ந்து நூறுவயதைத் தாண்டப்போகுது.

சம்பந்தர் தானும் கயமைகளைச் செய்தால் திட்டுவார்கள், திட்டினால் நூறுவயதைத் தாண்டி வாழலாம் என்றொரு நப்பாசைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு கிடைக்க இருக்கும் நேரத்தில் ஐயாவை ஒருத்தரும் குழப்பாதேங்கோ. கட்டாயம் அடுத்த வருடம் எல்லாம் முடிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்பா இந்தாளுக்கு மூளையும் மங்கி எல்லாமும் போய்விட்டது ....எப்ப வந்து என்ன கேள்வி கேட்குது ....என்னது ராஜதந்திரம் ... சொல்றதுக்கு நல்ல வார்த்தை இல்லை ....

 நல்லவையாய் இருந்தால்த் தானே நல்ல வார்த்தை வரும். "பானையில இருந்தால்த் தானே அகப்பையில வரும்."

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தம் TV இல் இந்த கேள்விக் குறிக்கு தானே விடை கொடுத்துள்ளார்.  17ம் திகதி செப்டம்பர் மாதம் இந்த பேட்டியைக் கொடுத்துவிட்டு, 2ம் திகதி ஒக்டோபர் மாதம் கேள்விக் குறியை போட்டிருக்கிறார். 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

 எல்லாம் சுபம்.

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தம் TV இல் இந்த கேள்விக் குறிக்கு தானே விடை கொடுத்துள்ளார்.  17ம் திகதி செப்டம்பர் மாதம் இந்த பேட்டியைக் கொடுத்துவிட்டு, 2ம் திகதி ஒக்டோபர் மாதம் கேள்விக் குறியை போட்டிருக்கிறார். 

மீரா அது போனமாசம் .........

  • கருத்துக்கள உறவுகள்

மீரா அது போனமாசம் .........

அப்ப வார  மாசம் ஐயா  என்ன சொல்லுவார் என்று இப்பவே நாங்கள்  யோசிக்க வேண்டும்.

சில வேளை வடமாகாண சபையைக் கலைப்பதற்கான அறிக்கையும் வரலாம்.

151002162751_sampanthan_tna_lanka_512x28

 

... இந்த படத்தை பார்க்க ஏதோ ஞாபகம் ....... கதிரையில் இருத்தி விட்டு, தலையில் பூவையும் சுற்றி, நெற்றியில் ஒரு ரூபா நாணயத்தையும் வைத்து ... வேண்டாம் ... பயமுறுத்துகின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.