Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா உடல் நலக்குறைவால் மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா. பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.

 

manorama

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-manorama-passes-away-237428.html

 

 

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சியின் ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்... அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்...!!

  • கருத்துக்கள உறவுகள்

 அஞ்சலிகள்... அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சிக்கு  கண்ணீர் அஞ்சலிகள்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1361557

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சிக்கு அஞ்சலிகள்!

அவரது ஆத்மா ஆண்டவன் பாதங்களில் அமைதி பெறட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

மனோரமா

Manorama

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது தான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: மே 26, 1943

பிறப்பிடம்: மன்னார்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகை   

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட அவர், 1943  ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

வறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.

நாடகத் துறையில் ஒரு பயணம்

ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.

திரைப்படத்துறையில் அவரது பயணம்

அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.

கலையுலக வெற்றிப் பயணம்

தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’,  ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.

1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று வரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.

தனிப்பட்ட வாழ்க்கை

சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

விருதுகளும், மரியாதைகளும்

  • தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.
  • 1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.
  • 2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.
  • 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.
  • மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.
  • கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.
  • ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’.
  • சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.

சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள். திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

http://www.itstamil.com/manorama.html

  • கருத்துக்கள உறவுகள்

12112377_1505080963117559_32071984399501

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.  அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

 

 

5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்கை வரலாறு!

 

மிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு "ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் சினிமாவில் இவர் நடிக்காத கேரக்டேரே கிடையாது.

mano.jpg

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937, மே 26 ஆம் தேதி  காசி குலோகுடையார் - ராமாமிதம் தம்பதிக்கு  மகளாக மனோரமா பிறந்தார். இயற்பெயர் கோவிந்தம்மாள் . குடும்பத்தில் வறுமை சூழல்.இதனால் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு வந்து சேர்ந்தது மனோரமா குடும்பம். யார் மகன்? என்ற நாடகத்தில் மனோரமா நடிக்கும் போது அவரது வயது வெறும் 12 .

நாடக இயக்குநர் திருவேங்கடம்தான்   இவருக்கு "மனோரமா' என பெயர் சூட்டினார்.  முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் நடிக்க மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து 1958ல் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். கவிஞர் கண்ணதாசன்தான் இவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார். முதல் படமே காமெடி ரோலில் கலக்கினார். அந்த காலக்கட்டத்தில் நகைச்சுவை நடிகர் நாகேசுடன் மனோரமா தோன்றினார் தியேட்டரை சிரிப்பலையில் மூழ்கி கிடக்கும்.

தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார். ஆயிரத்திற்கு மேற்பட்ட நாடகங்களில் மனோரமா நடித்துள்ளார்.

ram.jpg

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எத்தனை பக்கம் வசனமென்றாலும் காட்சிக்கு ஏற்றவாறு பேசி அசத்தி விடும் தனித்திறமை மனோராமாவுக்கு உண்டு.

தில்லானா மோகனம்பாள் படத்தில்  சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டர் அந்த காலத்திலேயே மிக பிரபலமாக இருந்தது.

"கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமாநாதனை  மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார். கடைசியாக மனோரமா நடித்த படம் பொன்னர் சங்கர் ஆகும்.100 க்கு மேற்பட்ட பின்னணி பாடல்களையும் மனோரமா பாடியுள்ளார்.
 
1989ம் ஆண்டு "புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, "சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார்.

இவரது நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. ஆயிரம் படத்திற்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் நடிகை மனோரமா இடம் பெற்றுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53563

 

 

 

மனோரமாவுக்கு 'ஆச்சி' என்று பெயர் வந்தது எப்படி?

 

கைச்சுவை அரசி மனோரமா 'ஆச்சி' என்று திரையுலகில் அன்போடு அழைக்கப்படுபவர். அவருக்கு ஆச்சி என்ற பெயர் எப்படி வந்தது என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் இது...

achi.jpg

'' நான் செட்டிநாட்டில் வளர்ந்தவள். 1962ஆம் ஆண்டு க.கி.சுப்பிரமணியத்தின் ' காப்பு கட்டி சத்திரம் ' என்ற நாடகத்தில் நடித்தேன். இந்த நாடகம் ரேடியோவில் 66 வாரங்கள் ஒளிபரப்பாகியது. அதில் நானும் நாகேசும் சேர்ந்து நடித்தோம்.

அந்த நாடகத்தில் 'பன்னர் பாக்கியம்' என்ற கேரக்டரில் இளநீர் விற்கும் பெண்ணாக நடித்தேன். செட்டிநாட்டு பாஷை பேசி அந்த நாடகத்தில் நான் நடித்ததை பார்த்த ஒரு மேக்அப் மேன் 'ஆச்சி ' என்று அழைத்தார். பின்னர் அனைவரும் ஆச்சி என்று அழைக்க அந்த பெயரே நிலைத்து விட்டது''

இவ்வாறு மனோராமா கூறியுள்ளார்.

 

 


http://www.vikatan.com/news/article.php?aid=53574

 

'பெண் சிவாஜி'... மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள்!

 

கைச்சுவை அரசியை தமிழகம் இழந்து விட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் மனோரமா உறுப்பினர் போலத்தான். கிட்டத்தட்ட தங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழந்து விட்டது போன்ற உணர்வில் தமிழகம் தத்தளிக்கிறது. நகைச்சுவை அரசி மனேராமா பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்.

manora.jpg

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா தனது இளமை பற்றி கூறியுள்ளார்.

 தமிழ் சினிமாவில் அதிகளவில் "அம்மா' கேரக்டர்களில் மனோரமா நடித்துள்ளார்.

டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எழுத்தாளர் சோ', மனோராமாவை 'பெண் சிவாஜி' என்று குறிப்பிட்டு பேசினார்.

தில்லானா மோகனம்பாள், அனுபவி ராஜா அனுபவி,சம்சாரம் அது மின்சாரம், சின்னக்கவுண்டர், நடிகன், சின்னதம்பி, கிழக்கு வாசல் போன்ற படங்களில் நடிகர் மனோரமா முத்திரை பதித்திருப்பார்.

1985ஆம் ஆண்டு மனோரமா ஆயிரம் படங்களில் நடித்து விட்டார். மொத்ததில் 1500 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு மனோரமா- நடிகர் எஸ்.எம். ராமநாதன் திருமணம் திருச்செந்தூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. 1966ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார் மனோரமா.  ஒரே மகன் பூபதி.

பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பள்ளத்தூர் பாப்பா என்றும் அழைப்பார்கள். செட்டிநாட்டுப் பள்ளத்தூரில் வளர்ந்ததால் 'ஆச்சி' என்று அன்பு அடைமொழி சேர்ந்துகொண்டது.

'பாட்டி சொல்லை தட்டாதே' என்ற படத்தில் 'தில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே 'என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது.

உணவுக் கட்டுப்பாடு ஆச்சிக்கு அதிகம். செவ்வாய், வெள்ளி அசைவம் கிடையாது. புதன், ஞாயிறு கண்டிப்பாக அசைவம் உண்டு!

நெருங்கிய தோழிகளான எம்.என்.ராஜம், ஸ்ரீப்ரியா. இருவரும் ஆச்சியின் உடல் நலத்தில் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வார்கள். அடிக்கடி ஆச்சியைச் சந்திப்பவர்கள் கமல், ரஜினி!

வீட்டில் செல்லமாகக் கூப்பிடுவது 'பாப்பா'. ரசிகர்களுக்கு 'ஆச்சி'. உடன் நடிக்கும் நடிகர்களுக்கு 'அம்மா'!

முருகனின் அடிமை. அறுபடை வீடுகளும் அவ்வளவு இஷ்டம்.

மனோரமாவின் அம்மா இறந்த 16-வது நாள் சடங்குகளை 'சகோதரன்' என்ற முறையில், உடனிருந்து செய்தவர் சிவாஜி கணேசன். இந்த நெகிழ்வில் சிவாஜியை வாய் நிறைய, 'அண்ணே' என்றுதான் அழைப்பார் ஆச்சி!

காரில் செல்லும்போது, 'மெள்ளப் போ, மெள்ளப் போ' என ஓட்டுநரைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருப்பார். ஆனாலும், எந்த நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்துக்குச் செல்ல வேண் டும் என்பதில் குறியாக இருப்பார்!

ஆச்சி நடித்ததில் எல்லோருக்கும் பிடித்த படம் 'தில்லானா மோகனாம்பாள்'. ஆச்சிக்கே பிடித்தது 'சின்னக் கவுண்டர்', 'நடிகன்'. "ஒரு துளி விரசம் இல்லாமல் 'நடிகன்' படத்தில் நடிச்சது எனக்குப் பெருமையான விஷயம்" என்பார்!

பேச்சில் புலி. அவ்வளவு விவரமாக எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். வார இதழ்கள் ஒன்றுவிடாமல் படித்துவிடுவார். படித்தது மூன்றாம் வகுப்பு வரைதான். ஆனால், ஆச்சிக்குத் தெரியாதது எதுவும் இல்லை!

மனச் சோர்வு இருந்தால்கூட பட்டுப் புடவை, திருநீறு மணக்கும் நெற்றி, அகலப் பொட்டுடன் மங்களகரமாகத்தான் வெளியே கிளம்புவார்.

அரசியல் சார்பு இல்லை என்பதால் கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் அன்பு பாராட்டுவார்!

'ஆச்சி இன்டர்நேஷனல்', 'அல்லி ராஜ்யம்', 'காட்டுப்பட்டிச் சத்திரம்' என சின்னத்திரை தொடர்களிலும் வெற்றிவலம் வந்தவர்!

இவரது நடிப்புத் திறமை, நாடகக் கலைக்கான பங்களிப்பைப் பாராட்டி அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன், ஈ.வி.கே.சம்பத், கண்ணதாசன் போன்றோர் பேசியதை இன்னமும் மனதில் சேமித்துவைத்துள்ளார் ஆச்சி!

'வணக்கம், ஆச்சிதாங்க பேசுறேன். பேசலாமா' என முன் அனுமதி வாங்கிப் பேசுகிற நயத்தக்க நாகரிகம் ஆச்சி ஸ்பெஷல். சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிடுவார்!

மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை கட்டுவிரியன்' பாம்பு கடித்து விட்டது. சிகிச்சைக்கு பின் மனோரமா உயிர் பிழைத்தார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53566

 

 

 

மனோரமாவுடன் நடித்த அனுபவங்கள் இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது: ஜெயலலிதா புகழாரம்!

 

சென்னை: பழம்பெரும் திரைப்பட நடிகை மனோரமாவுடன் நடித்த அனுபவங்கள் இன்றும் எனது  நினைவில் பசுமையாக உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார்.
 

Manorama-%20jaya.jpg

நடிகை மனோரமா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பழம்பெரும் திரைப்பட நடிகை மனோரமா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  நேற்று நள்ளிரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் "ஆச்சி" என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள் இந்தியத் திரைப்படத் துறையில் மாபெரும் சாதனைப் படைத்தவர். மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத்  தொடங்கி, சினிமாவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய தலைமுறை கதாநாயகர்கள்  மற்றும்  இன்றைய தலைமுறை கதாநாயகர்களுடன் 1300  திரைப்படங்களுக்கு மேல் நடித்து  சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்  திரையுலகை ஆட்சி செய்தவர் மனோரமா அவர்கள்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை  மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா அவர்கள் 1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயக்கிய "மாலையிட்ட மங்கை"  திரைப்படத்தில் நடித்த முக்கிய வேடத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் கதாநாயகியாக 1963 ஆம் ஆண்டு வெளிவந்த "கொஞ்சும் குமரி" என்ற படத்தில் நடித்துள்ளார். பொம்மலாட்டம், சூரியகாந்தி, பட்டிக்காடா பட்டணமா, கலாட்டா கல்யாணம்,  அன்பேவா, தில்லானா மேகானாம்பாள், சின்னத்தம்பி, உன்னால் முடியும் தம்பி, சம்சாரம் அது மின்சாரம், நடிகன் போன்ற  எண்ணற்ற திரைப்படங்களில்  இவரது நடிப்பு  மிகவும் சிறப்பாக இருந்தது.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் மனோரமா அவர்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் என்னுடன் பல படங்களில் நடித்துள்ளார் மனோரமா அவர்கள். அவர் என்னுடன் நடித்து வெளிவந்த கந்தன் கருணை, கலாட்டா  கல்யாணம் போன்ற படங்களில் அவருடன் நடித்த அனுபவங்கள் இன்றும் எனது  நினைவில் பசுமையாக உள்ளது.  என்னுடன் அவர் நடித்து அன்று வெளிவந்த பொம்மலாட்டம் திரைப்படத்தில் அவரது சொந்தக் குரலில் பாடிய "வா வாத்தியாரே வூட்டான்ட" என்ற பாடலும், சூரிய காந்தி படத்தில் அவர் பாடிய "தெரியாதோ நோக்கு" என்ற பாடலும் அன்று பட்டித் தொட்டிகள் அனைத்திலும் பிரபலமானது ஆகும். இத்துடன் 300க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இவர் திரைப்படத்துறையில் ஆயிரம்  திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ்  உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கலைத்துறையில் இவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது, தேசிய  விருது  மற்றும் தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். மனோரமா அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. மனோரமா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53575

Edited by நவீனன்

கண்ணீர் அஞ்சலிகள்... அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்...!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து பலகோடித் தமிழர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஆச்சி மனோரமாவின் இழப்பினால் துயரமாக உள்ள அவரது குடும்பத்தாருக்கும் திரையுலகத்தினருக்கும் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தில்லானா மோகானாம்பாள் படத்தில் அவரது ஜில் ஜில் ரமாமணி வேடம் மறக்கமுடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜில் ஜில் (மனோ)ரமாமணி

ஆழ்வாப்பிள்ளை

 

<p>ஜில் ஜில் (மனோ)ரமாமணி</p>
 

 

பெண் நடிகர்களை விட ஆண் நடிகர்களே அதிக காலங்கள் திரையில் தோன்றிக் கொண்டிருப்பார்கள். அந்த எண்ணத்தை மாற்றிக் காட்டிய ஒரே நடிகை மனோரமா என்பேன்.

சினிமாவில் நாயகர்களாக மட்டுமல்லாமல் நகைச்சுவையிலும் ஆண்களே முன்னணியில் நிற்பார்கள். இப்படி அன்று முன்னணியில் நின்ற நகைச்சுவை நடிகர்களான கே.ஏ.தங்கவேலு, நாகேஷ், ஏ.கருணாநிதி, சோ, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி என்று அத்தனை நடிகர்களோடும் ஈடுகொடுத்து நடித்ததோடு அவர்களையும் மீறி நீண்ட காலங்கள் நடித்துக் கொண்டிருந்த நடிகை மனோரமாதான்.

எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு இமயங்கள் திரையுலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில் இருவர் படங்களிலும் அதிகமாக வந்து போனவர் மனோரமாதான். சாண்டோ சின்னப்பா தேவர், ஏ.பி.நாகராஜன் இருவரும் தயாரித்த படங்களில் இவர் நிச்சயமாக இடம் பெற்றிருப்பார்.

ஏ.பி.நாகராஜன் இயக்கிய படங்களில் இவரது நடிப்பு அசத்தலாக இருக்கும். சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி செந்தமிழில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க மறுபுறத்தில் மனோரமாவோ, நாகேசுடன் திக்குவாயுடன் பேசுவதற்கே திண்டாடிக் கொண்டிருப்பது ரசிக்க வைத்தது. நவராத்திரி படத்தில் 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை நாங்கள் மாறவில்லை..' என்ற பாடலுக்கு நடிகை சாவித்திரியுடன் பைத்தியக்கார விடுதியில் போடும் கூத்து திரையரங்கையே ஆட வைத்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில்ஜில் ரமாமணியாக வந்து சிக்கல் சண்முகத்துடன் அடித்துப் பேசும் காட்சியில் இவரது நடிப்பு மறக்க முடியாதது.

ஏ.பி.நாகராஜனை அடுத்து பி.வாசுவின் படத்திலும் இவருக்கு பாத்திரங்கள் நன்றாக அமைந்திருந்தன. மூல நட்சத்திரத்தில் பிறந்ததால் ஐம்பத்தைந்து வயதிலும் மணமாகமல் இருந்து பின்னர் சத்தியராஜை காதலிக்கும் பாத்திரத்தில் நடிகன் படத்தில் தனது திறமையைக் காட்டி இருப்பார். பி.வாசுவின் சின்னத்தம்பி படத்தில் பிரபுவுக்கு தாயாக வந்து சிறப்பாக நடித்திருப்பார்.

<p>ஜில் ஜில் (மனோ)ரமாமணி</p>

அனுபவி ராஜா அனுபவி படத்தில் தூத்துக்குடி தமிழ் பேசி நடிக்க வைத்து, அன்றைய வானொலிகளில் அதிக இடம்பெற்ற 'முத்துக்குளிக்க வாறீகளா' பாடலுக்கு ஆடவைத்த கே.பாலச்சந்தர்தான் மனோரமாவின் குணசித்திர நடிப்பை திரையில் காட்டியவர். கே.பாலசந்தரின் உன்னால் முடியும் தம்பி படத்தில் மனோரமா ஏற்ற பாத்திரம்தான் பின்னாளில் இவர் தாயாக, அண்ணியாக, மாமியாக திரையில் வலம் வரக் காரணமாயிற்று.

தாயாக இவர் பாசம் பொங்க நடித்தாலும் அதிலும் ஒருவித நகைச்சுவை நூலைப் பிடித்துக் கொண்டே இவர் நடித்திருப்பார். உதயகுமாரின் சின்னக் கவுண்டர் திரைப் படம் அதற்கொரு சாட்சி. வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பற்களோடு கவுண்டமணி செந்திலுடன் இவர் போடும் லூட்டி படத்தின் வெற்றியை பெரிதும் நிர்ணயித்தது எனலாம்.

பொதுவாக சினிமாவில் முன்ணணியில் இருக்கும் நடிகர்களுடன் மோதுவதற்கு எவருமே விரும்பமாட்டார்கள். ஆனால் மனோரமா நடிகர் ரஜனியுடன் மோதினார். தேர்தல் மேடைகளில் ரஜனியை ஏக வசனத்தில் பேசி ஜெயலலிதாவுக்காகப் பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா தோற்றுப் போனதும் மனோரமாவின் நிலையை ஊடகங்கள் பரிதாபகமாகவே பார்த்தன. ஆனால் எல்லோரது எண்ணத்தையும் மீறி என்னால் முடியும் தம்பி என்று மீண்டும் நடிப்பில் தன் ஆற்றலைக் காட்டினார். விஜய்காந்திற்கு எதிராக வடிவேலு ஏக வசனத்தில் பிரச்சாரம் செய்யப் போய் காணாமல் போனதை இங்கே நினைத்துப் பார்த்தால் மனோரமாவின் ஆற்றல் புரியும்.

பாடல் ஆடல் நடிப்பு என்று தனது திறமையைக் காட்டிய மனோரமாவின் முதல் திரைப்படம் மஸ்தான் இயக்கிய ஒரு சிங்களத் திரைப்படம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதைவிட ஆச்சரியம் சி.என். அண்ணாத்துரை, மு.கருணாநிதி, எம்ஜிஆர், என்.டிஆர், ஜெ.ஜெயலலிதா என்று ஐந்து மாநில முதல்வர்களுடன் நடித்திருக்கிறார் என்பது.

சிவாஜி கணேசனின் பாசமலர் திரைப்படத்தில் சிறிய பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் மனோரமா பின்னாளில் ஞானப்பறவை திரைப்படத்தில் சிவாஜியுடன் ஜோடியாக நடிக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார்.

1300க்கு மேற்பட்ட திரைப்படங்கள், 5000க்கு அதிகமான நாடக மேடைகள் என மனோரமாவின் கின்னர்ஸ் சாதனை இருக்கிறது. இந்த சாதனையை முறியடிக்கவோ, மனோரமாவின் இடத்தை நிரப்பவோ இனி எவரும் வரப் போவதில்லை என்பதே உண்மை.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=92062be2-9ec2-4bc3-9163-61c3a3670ef1

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் பாட்டிக்கு கண்ணீரஞ்சலி. இந்தப் பாடல் இப்போதும்.. வழிகாட்டும் பலருக்கு. tw_cold_sweat:

  • கருத்துக்கள உறவுகள்

 பாட்டிக்கு கண்ணீரஞ்சலி. 

தமிழின் தன்னிகரற்ற இரு ஆளுமைகள்.... வாழும் காலத்தில் கண்டு கொள்ளப்படவில்லை... :(

கண்ணிர் அஞ்சலி நடிகையர் திலகம் ஆச்சி மனோரமாவிற்கு.... 

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.