Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று த.ம.பேரவையில் இணையவுள்ளேன். கருணா வீரகேசரிக்கு செவ்வி

Featured Replies

தமிழ் மக்கள் பேரவையில் விரைவில் இணைவேன்!
 
தமிழ் மக்கள் பேரவையில்  விரைவில் இணைவேன்!
ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் குர­லாக தமிழ் மக்கள் பேரவை திகழும் என்­கின்ற நம்­பிக்கை தனக்­குள்­ள­தாகக் குறிப்­பிட்ட முன்னாள் பிர­தி­ய­மைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா), விரைவில் அப்­பே­ர­வையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும் கூறினார்.
 
புதி­தாகத் தோற்­று­விக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கேட்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
 
யுத்­தத்தின் பின்னர் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை முறை­யாக கையாள்­வ­தற்கு சகல தமிழ் மக்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அமைப்­பொன்­றுக்­கான தேவை இருந்து வந்­தது. அந்தத் தேவைப்­பாடு இப்­போது தமிழ் மக்கள் பேர­வை­யாக வெளிக்­கொ­ண­ரப்­பட்­டுள்­ளது.
 
யுத்­தத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளுக்கு உரிய தலை­மைத்­து­வத்தை வழங்கத் தவ­றி­விட்­டது. அக்­கட்சி தற்­போது உறு­தி­யற்ற நிலையில் தனது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கி­றது. அக்­கட்­சிக்குள் ஒரு­மித்த கருத்தை காண­மு­டி­யா­துள்­ளது. மேலும் போர்க்­குற்ற விசா­ரணை தொடர்பில் உள்­நாட்டில் ஒரு கருத்­தையும் வெளி­நா­டு­களில்
மற்­று­மொரு கருத்­தையும் வெளிக்­காட்­டி­யது. அத்­துடன் அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சி­யாக இருந்து அர­சாங்­கத்தின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப செயற்­ப­டு­வ­தனால் எதிர்­கா­லத்தில் தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகளை வென்­றெ­டுக்க முடி­யாத நிலையை ஏற்­ப­டுத்தும்.
 
எனவே, இந்தப் பின்­ன­ணி­யில்தான் தமிழ் மக்கள் பேரவை தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே குறித்த அமைப்பு வடக்கு, கிழக்கு மாத்­தி­ர­மல்­லாமல் தமிழ் மக்கள் வாழும் சகல பிர­தே­சங்­க­ளையும் உள்­ள­டக்கி ஒட்­டு­மொத்த தமிழ்
மக்­க­ளுக்­கான அமைப்­பாகத் திகழும் என்­கின்ற நம்­பிக்கை உள்­ளது. மேலும் தமிழ் மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்யும் வகையில் குறித்த அமைப்பின் நோக்கம் அமைந்­துள்­ளது.
 
ஆகவே தமிழ் மக்கள் பேர­வையின் நோக்­கங்கள் சிறந்­த­தாக இருப்­ப­தனால் விரைவில் வட­மா­காண முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ரு­மான சீ.வி.விக்­னேஸ்­வ­ரனை சந்­தித்துப் பேச்­சு­வார்­ததை நடத்தி அப்­பே­ர­வையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்­து­கொள்­ள­வுள்ளேன்.
 
மேலும் தமிழ் மக்கள் பேர­வையில் இணைந்­து­கொள்­வது பற்றி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்­தா­வு­டனும் பேச்­சு­வார்­த்தை நடத்­தி­யுள்ளேன். அவரும் சாத­க­மான பதிலை வழங்­கி­யுள்ளார்.
 
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த சிலர் விமர்­சிப்­பது போல் இப்­பே­ர­வை­யினால் தமிழ் மக்­க­ளுக்கு பாதகத் தன்மை எதுவும் இல்லை. மாறாக மக்­களின் அபிலா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான உபா­ய­மா­கவே இதனை நோக்க வேண்­டி­யுள்­ளது. குறித்த அமைப்பில் அங்கம் வகிப்­ப­வர்­களில் ஏரா­ள­மானோர் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்கள் என்றும் சிலர் விமர்­சிக்­கின்­றனர்.
 
எனினும் தேர்­தல்­களில் தோல்­வி­ய­டைந்­த­வர்கள் இனி­வரும் தேர்­தல்­களில் வெற்­றி­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. அது மாத்­தி­ர­மல்­லாமல் தேர்­தலில் வெற்­றி­பெற்­றுள்ள பலரும் விரைவில் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துகொள்ளவுள்ளனர்.
 
இதேவேளை, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எம்.பி.க்கள் சிலர் பல முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் அழுத்தத்தின் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவங்களையும் மறந்துவிடக்கூடாது என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

 அரசியல் லாபம் கருதி இருப்போரும், இணைவோரும் ஏமாற்றமடைவர். முதல்வர் ஏற்கனவே தங்களுடைய நிலைப்பாட்டை விளக்கமாக கூறி விட்டார். எல்லோருடைய கருத்துக்களும் வரவேற்கப்படும். ஆனால் எங்களுக்கு ஒரு கொள்கை உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொள்ளப்போகிறது. 

பாலூற்றிக் கும்பிடுவோர் வரிசையில் வரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் வரலாம்.. ஆனால் கொள்கை ஒன்றிருக்கு..! வரவேண்டாம் என்றால் தானே சனநாயக விரோதம்.. பிரதேச வாதம்... இன்னும் என்னென்னவோ எல்லாம் முளைக்கும். அதிலும்..

வந்து சாமி கும்பிட்டு போக வேண்டியாக்கள் போய்க்கிட்டே இருக்க வேண்டியான். சாமி ஆட விரும்பிறவை ஆடலாம். அதற்காக திருவிழா செய்வதை தடுக்க முடியாது. tw_blush:

விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று த.ம.பேரவையில் இணையவுள்ளேன். கருணா வீரகேசரிக்கு செவ்வி.

Published on December 29, 2015-5:14 pm   ·   No Comments

தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று தான் தமிழ் மக்கள் பேரவையில் இணைய உள்ளதாக கருணா என்று அழைக்கப்படும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனுடன் தான் இதுபற்றி கதைத்துள்ளதாகவும் அப்பேரவையில் விரைவில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ள உள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உரிய தலைமைத்துவத்தை வழங்கத் தவறிவிட்டது. அக்கட்சி தற்போது உறுதியற்ற நிலையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

விரைவில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் விக்னேஸ்வரனை நேரில் சந்தித்து பேசி உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ள உள்ளேன் என்றும் கருணா தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துகொள்வது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அவரும் சாதகமான பதிலை வழங்கியுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார்.

Readers Comments (0)

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின் விடம்......:unsure:

ஒளடதமாகுமா?  ஆறடி தோண்டுமா?? பார்க்கலாம். :shocked:  

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் ஒரு கேள்விக்கு யதார்தமாய் எல்லோரும் வரலாம் கருணாவும் வரலாம் கூறியதைக்கேட்டு விட்டு சைக்கிள் கேப்பில கிடாய் வெட்டலாம் என்று கனவு காணவேண்டாம்.தமிழ்மக்கள் பேரவை உரியவர்களை உரிய இடத்தில் வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் மாவை...... 2009 மே வரை இன அழிப்பில் பங்கெடுத்த.. புளொட்டை உள்ள கொண்டு வரலாம்.. சங்கரியை உள்ள கொண்டு வரலாம்.. என்றால்.. முரளிதரனை.. ஏன் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் தன் கருத்துச் சொல்ல அழைக்கக் கூடாது. எவரும் வரலாம் போகலாம்.. கருத்துத் தான் கேட்கப்படும்.தீர்மானங்களை அதற்குரிய சபைகளே எடுக்கும் தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைக்கு அமைய. அதில் முரளிதரன் டக்கி சித்தார்த்தன்.. தலையிட வழி இருக்காது. நாளை வரதராஜப்பெருமாளும் வரலாம்..! ஆனால் தமிழ் மக்கள் பேரவையைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்யும் கனவோடு எவர் வந்தாலும் அவர்கள் அதில் தோல்வி அடைவார்கள்.. முரளிதரன் இதனை நினைவில் வைத்துக் கொள்வது சாலச் சிறப்பு..! :rolleyes:tw_blush:

கட்டப்பொம்மன் சபையில் எட்டப்பனும் இருந்து தான் இருக்கிறான். அதனால் கட்டப்பொம்பன்.. கொள்கை இழக்கவில்லை. அதேபோல் பண்டாரவன்னியன் சபையில் காக்கவன்னியனும் இருந்து தான் இருக்கிறான்.. அதற்காக பண்டாரவன்னியன் கொள்கை இழக்கவில்லை..! tw_blush:

கனபேருக்கு கலக்கி அடிக்குது .விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்று ஏதோ எழுதுகின்றார்கள் .

பண்டைகால அரசியல்  வரலாறும் தெரியாது போரட்ட வரலாறும் தெரியாது ஏதோ கையில் வந்தது எல்லாம் கொட்டி தீர்கின்றார்கள் .

எட்டப்பனும் காக்கைவன்னியனும் காட்டிக்கொடுத்ததால் துரோகிகள் ஆகி பின்னர் திரும்ப அரசசபைக்கு அழைத்துவரப்படவில்லை 

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்களை தான் தியாகி யார் துரோகி யார் என்று லிஸ்ட் தயாரிக்க விட்டிருக்கினம் போல .tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

கோபப்படும் போது உண்மை சிந்திவிடும்

தேவைப்படும்

இருக்கட்டும்..

பேரவை அமைக்கபட்டது மோசமான செயலில்லை அனால் அது அமைக்கப்பட்ட விதமும் அதன் உறுப்பினர்களின் குழப்பமான அறிக்கைகளும் மேலும் குழப்பத்தை தான் கூட்டுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sooravali said:

பேரவை அமைக்கபட்டது மோசமான செயலில்லை அனால் அது அமைக்கப்பட்ட விதமும் அதன் உறுப்பினர்களின் குழப்பமான அறிக்கைகளும் மேலும் குழப்பத்தை தான் கூட்டுகின்றது. 

உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன். அதேவேளை அமைக்கப்பட்ட சந்தர்ப்பம் குழப்பி குட்டையில் மீன் பிடிக்கிறவேலை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sooravali said:

பேரவை அமைக்கபட்டது மோசமான செயலில்லை அனால் அது அமைக்கப்பட்ட விதமும் அதன் உறுப்பினர்களின் குழப்பமான அறிக்கைகளும் மேலும் குழப்பத்தை தான் கூட்டுகின்றது. 

பேரவையின்  வரவை எவருமே பெரிதாக எடுக்கவில்லை

இங்கும் அது  போன்றே கருத்துக்களும் பார்வையும் இருந்தது

சம்பந்தரின் உடனடிச்சந்திப்பும்

சுமேந்திரனின் அறிக்கையும் 

மாவையரின் மறுப்புமே

பேரவையை உலகுக்கு உணர்த்தின

உயர்த்தின..

எதுக்கு இவர்கள் இந்தளவுக்கு குமுறுகிறார்கள் என்று தான் தெரியவில்லை...

4 hours ago, விசுகு said:

4 hours ago, விசுகு said:

கூட்டமைப்பு ஒன்றும் முற்றுமுழுதாக சரியாக செயற்படவில்லை ஆனால் இந்த வருடம் தீர்வு என்று ஒரு சிறுமாற்றம் தெரியும் வேளையில் பேரவை என்றை உருவாக்கி குழப்பியடிப்பது சரியான சந்தேகத்தை தருகின்றது .

பேரவை தீர்வை குழப்பினால் குமுறாமல் என்ன செய்வது ?

புலிகள் அனைத்து தீர்வையும் குழப்பியதை அப்ப ஏன் சொல்லவில்லை என்பவர்கள் தான் இன்று இதையும் கேட்கின்றார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, arjun said:

சிங்களம் எப்பொழுதுமே இரண்டு தரப்பை வைத்துக்கொள்ளும்

நான் அவர்களுக்கும் பதில் சொல்லணும் என்று சொல்லும்

அதையே பேரவையின் வரவும் செய்தாலென்ன??

அப்படி ஏன் கூட்டமைப்பு இதனை சாதகமாக பார்க்கக்கூடாது???

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் பொறுங்கோ எல்லாரும்.அதுக்குப்பின் இங்கை கருத்து எழுதி மோத வேண்டி வராது ஒருத்தருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

இன்னும் கொஞ்சம் பொறுங்கோ எல்லாரும்.அதுக்குப்பின் இங்கை கருத்து எழுதி மோத வேண்டி வராது ஒருத்தருக்கும்.

ஐயா

உங்கள் ஆதங்கமே எனக்கும்..

ஆனால் கருத்தோடு மட்டும் நான் நிற்பதில்லை

என்னால் முடிந்தளவுக்கு மேலாக செய்கின்றேன். முயல்கின்றேன்

எனது கனவும் 31/12/2016.

முடிந்ததும் இங்கே பதிவேன்.

இரண்டு அல்ல நாலு கட்சியும் இருக்கலாம் ஆனால் அதே அக் கட்சியில் கட்சிக்கு தெரியாமல் வேறு நாலுபேருடன் சேர்ந்து மாற்று அமைப்பு என்று ஒன்றை தொடங்குவது வேடிக்கைதான் .

அதைவிட வேடிக்கை மாற்று இயக்கங்களை தடை செய்து புலிகள் ஏகபிரதிநிதிகள் ஆக அதை ஆதரித்தவர்களும் ,கருணா பிரிந்து போக துரோகி என்றவர்களும் இன்று விக்கியர் செய்வதை நியாயப்படுதுவதுதான் வேடிக்கை .

விக்கியர் சம்பந்தரால் அழைத்து வரப்படாமல் கூட்டமைப்பில் தேர்தலில் நின்று இருக்காவிட்டால் இந்த கேள்விகள் எதுவும் எழாது .  

  • கருத்துக்கள உறவுகள்

பேரவையின் நோக்கமோ, பாதையோ இன்னும் தெளிவாக இல்லாத நிலையில் ..

இந்த செய்தியும்  உண்மையானால்; தமிழர்களின் தலைவிதியை நினைத்து நோகவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

கனபேருக்கு கலக்கி அடிக்குது .விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்று ஏதோ எழுதுகின்றார்கள் .

பண்டைகால அரசியல்  வரலாறும் தெரியாது போரட்ட வரலாறும் தெரியாது ஏதோ கையில் வந்தது எல்லாம் கொட்டி தீர்கின்றார்கள் .

எட்டப்பனும் காக்கைவன்னியனும் காட்டிக்கொடுத்ததால் துரோகிகள் ஆகி பின்னர் திரும்ப அரசசபைக்கு அழைத்துவரப்படவில்லை 

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்களை தான் தியாகி யார் துரோகி யார் என்று லிஸ்ட் தயாரிக்க விட்டிருக்கினம் போல .tw_angry:

கட்டிக்கொடுத்தபின் அங்கு அரச சபையே இல்லாமல் போய் விட்டதே. ஆங்கிலேயர்கள் அல்லவா பின்னர் ஆண்டார்கள்

1 hour ago, arjun said:

இரண்டு அல்ல நாலு கட்சியும் இருக்கலாம் ஆனால் அதே அக் கட்சியில் கட்சிக்கு தெரியாமல் வேறு நாலுபேருடன் சேர்ந்து மாற்று அமைப்பு என்று ஒன்றை தொடங்குவது வேடிக்கைதான் .

மைத்திரி எப்படிக்காணும் வந்தவர்.

அதைவிட வேடிக்கை மாற்று இயக்கங்களை தடை செய்து புலிகள் ஏகபிரதிநிதிகள் ஆக அதை ஆதரித்தவர்களும் ,கருணா பிரிந்து போக துரோகி என்றவர்களும் இன்று விக்கியர் செய்வதை நியாயப்படுதுவதுதான் வேடிக்கை .

விக்கி ஐயா இங்கு யாரையும் அழிக்கவோ தடை செய்யவோ  இல்லையே. எல்லோருடைய கருத்துகளும் உள்வாங்கப்படும் என்றுதானே சொல்லுகிறார். ..

விக்கியர் சம்பந்தரால் அழைத்து வரப்படாமல் கூட்டமைப்பில் தேர்தலில் நின்று இருக்காவிட்டால் இந்த கேள்விகள் எதுவும் எழாது .  

சம்பந்தருக்கு ஒன்று புரிய வேண்டும். விக்கி ஐயா சும் மாதிரி தலையாட்டி பொம்மையில்லை.:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
On 30 December 2015 at 1:19 PM, nedukkalapoovan said:

சம் சும் மாவை ... 2009 மே வரை இன அழிப்பில் பங்கெடுத்த.. புளொட்டை உள்ள கொண்டு வரலாம்.. சங்கரியை உள்ள கொண்டு வரலாம்.. என்றால்.. முரளிதரனை.. ஏன் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் தன் கருத்துச் சொல்ல அழைக்கக் கூடாது. எவரும் வரலாம் போகலாம்.. கருத்துத் தான் கேட்கப்படும்.தீர்மானங்களை அதற்குரிய சபைகளே எடுக்கும் தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைக்கு அமைய. அதில் முரளிதரன் டக்கி சித்தார்த்தன்.. தலையிட வழி இருக்காது. நாளை வரதராஜப்பெருமாளும் வரலாம்..! ஆனால் தமிழ் மக்கள் பேரவையைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்யும் கனவோடு எவர் வந்தாலும் அவர்கள் அதில் தோல்வி அடைவார்கள்.. முரளிதரன் இதனை நினைவில் வைத்துக் கொள்வது சாலச் சிறப்பு..! :rolleyes:tw_blush:

கட்டப்பொம்மன் சபையில் எட்டப்பனும் இருந்து தான் இருக்கிறான். அதனால் கட்டப்பொம்பன்.. கொள்கை இழக்கவில்லை. அதேபோல் பண்டாரவன்னியன் சபையில் காக்கவன்னியனும் இருந்து தான் இருக்கிறான்.. அதற்காக பண்டாரவன்னியன் கொள்கை இழக்கவில்லை..! tw_blush:

மேலே போல்ட் செய்யட்டவற்றையும் நிறமூட்டப்பட்டவற்றையும் வாசித்து விளங்கி உள்வாங்க ****************

இதே சம் சும் மாவை கும்பல் புலிகளை ஒரு தடவை புகழ்ந்தால் போதும்.. இந்தக் கூட்டம் மறுதலையாய் சம் சும் மாவை கும்பலை நிந்திக்கும். அந்தளவு தான் அதுகளுக்கு தெரிந்த அரசியல்..! tw_blush:

வடக்கில் புளொட்டும் சித்தார்த்தன் கும்பலும் செய்த அநியாயங்களுக்கும் கிழக்கில் முரளிதரனும் கும்பலும் செய்த அநியாயங்களுக்கும் இடையில் கொஞ்சமும் வேறுபாடில்லை. வடக்கில் புளொட் கும்பலுக்கு அரசியல் உபயம் அளிக்க சம் சும் மாவை கும்பலால் முடியுது. ஆனால்.. தமிழ் மக்களுக்காக உழைக்கிறேன் என்று கொண்டு இன்றும் துரோக அரசியலை முன்னெடுக்கும் முரளிதரனுக்கு டக்கிளசுக்கு வரதராஜப் பெருமாளுக்கு... சங்கரிக்கு.. தமிழ் மக்கள் மீதான அவர்களின் உண்மையான அக்கறையின் உண்மை முகத்தைக் காட்ட கருத்துச் சொல்ல தமிழ் மக்கள் பேரவையில் அனுமதிப்பது ஒன்றும் அவர்களுக்கு அரசியல் உபயம் அளிக்கும் செயல் அல்ல. இதனை உணர்ந்து கொள்ள முடியாது விதண்டாவாதம் செய்யும் பள்ளிக்கூடத்தை பாதியில் விட்டதுகளோடு அரசியல் கதைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை. அது அது தன் விருப்புக்கு அலட்டிட்டுப் போவதை தவிர வேறு ஒரு நன்மையும் இதனால் விளையாது.

யார் குத்தி முறிஞ்சாலும்.. தமிழ் மக்கள் பேரவை.. மக்களின் குரலை பிரதிபலித்து.. மக்கள் விருப்பத்தை தெரியப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ் மக்கள் பேரவை தவறாக மக்களை வழிநடத்த முயலின் அதுவும் சம் சும் மாவை கும்பல் மக்களிடம் வாங்கிக்கட்டுவது போல் வாங்கிக்கட்டும். மக்கள் இவர்கள் எல்லோருக்கும் எதிராக திரும்பும் நிலை ஏற்படலாம். அதனால் தமிழ் மக்கள் பேரவை வெளிப்படையாக நடந்து கொண்டு தமிழ் மக்களின் பொது பெருவிருப்பை வெளிப்படுத்தி நிற்கும் என்று நம்புவோம் இப்போதைக்கு. முரளிதரன் மட்டுமல்ல.. மக்கள் முன் யாரும் தோன்றி கருத்துச் சொல்லலாம். ஆனால் மக்கள் எதை ஏற்கனும் என்ற முடிவை தமிழ் மக்கள் பேரவைக்கு தெளிவாகச் சொல்வார்கள்..! தமிழ் மக்கள் பேரவை அதன் கொள்கைக்கு அமைய மக்களின் பொது பெருவிருப்பை வெளிப்படுத்தி நிற்க வேண்டும். அதுதான் எதிர்பார்ப்பு.

மாறாக தமிழ் மக்கள் பேரவை.. தேசிய தலைவர் வழிகாட்டிய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த உருவாக்கப்பட்ட... தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிகரான அரசியல் கட்டமைப்பு அல்ல. அந்தத் தெளிவு மக்களிடம் உள்ளது. அந்தத் தெளிவு.. சம் சும் மாவை குடுகுடுப்பை கும்பலுக்கு குடுகுடுப்பை குலுக்குவர்களுக்கு கிடையாது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Sasi_varnam said:

பேரவையின் நோக்கமோ, பாதையோ இன்னும் தெளிவாக இல்லாத நிலையில் ..

இந்த செய்தியும்  உண்மையானால்; தமிழர்களின் தலைவிதியை நினைத்து நோகவேண்டியது தான்.

சசி

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர்

கூட்டமைப்பும்

புலம் பெயர் தமிழரும் செய்திருக்கவேண்டிய முக்கிய பணி இது.

ஒரு கட்சி என்றில்லாமல்

ஒரு கொள்கைக்காக ஒனறாகுதல்..

உண்மையில் விக்கி ஐயா அதைச்செய்து முடித்தாராயின் தமிழரது பலம் உணரப்படும்

வேண்டாம் தற்போதைய நிலை.

கூட்டமைப்பால் இனி ஒற்றுமையைக்கொண்டுவர முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

Untitled-4(322).jpg

களவிதிகளை மீறும் சில கருத்துக்கள் அகற்றப்பட்டுள்ளன. ஆரோக்கியமில்லாத கருத்துக்களைத் தவிர்த்து கருத்தாடலைத் தொடருங்கள்.

WigneswaraPremanantha-birthday_zpsuxmevv

On 12/30/2015 at 8:19 AM, nedukkalapoovan said:

சம் சும் மாவை...... 2009 மே வரை இன அழிப்பில் பங்கெடுத்த.. புளொட்டை உள்ள கொண்டு வரலாம்.. சங்கரியை உள்ள கொண்டு வரலாம்.. என்றால்.. முரளிதரனை.. ஏன் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் தன் கருத்துச் சொல்ல அழைக்கக் கூடாது. எவரும் வரலாம் போகலாம்.. கருத்துத் தான் கேட்கப்படும்.தீர்மானங்களை அதற்குரிய சபைகளே எடுக்கும் தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைக்கு அமைய. அதில் முரளிதரன் டக்கி சித்தார்த்தன்.. தலையிட வழி இருக்காது. நாளை வரதராஜப்பெருமாளும் வரலாம்..! ஆனால் தமிழ் மக்கள் பேரவையைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்யும் கனவோடு எவர் வந்தாலும் அவர்கள் அதில் தோல்வி அடைவார்கள்.. முரளிதரன் இதனை நினைவில் வைத்துக் கொள்வது சாலச் சிறப்பு..! :rolleyes:tw_blush:

கட்டப்பொம்மன் சபையில் எட்டப்பனும் இருந்து தான் இருக்கிறான். அதனால் கட்டப்பொம்பன்.. கொள்கை இழக்கவில்லை. அதேபோல் பண்டாரவன்னியன் சபையில் காக்கவன்னியனும் இருந்து தான் இருக்கிறான்.. அதற்காக பண்டாரவன்னியன் கொள்கை இழக்கவில்லை..! tw_blush:

முதலமைச்சர் விக்கினேஸ்வரனை ,விக்கி என்றழைத்தால் தப்பென்றால் எதிர்க்கட்சித்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஐ சம் என்று அழைக்கலாமோ ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.