Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு திடீர் இலங்கை பயணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திடீர் இலங்கை பயணம்.

முக்கிய வேலை ஒன்றுக்காக இலங்கை சென்று வந்தேன்.

யாழில் இரு நாட்கள். ஆட்டோ காரர்கள் 'மீட்டர்' இல்லாமல் ஓட்டுகிறார்கள். வெளிநாடு என்று ஒரு பார்வையில் புரிந்து கொண்டு, பிறகு பார்த்து தாங்கோ என்பார்கள். முதலே பேசா விட்டால் அம்புட்டு தான்.

போகும் போதே, வீட்டில் கறுத்தக் கொழும்பு மாங்காய்  பிடுங்கினனாங்கள், போகும் போது தந்து விடுகிறேன் என்று நீண்ட நாள் வியாபாரத்துக்கு அடித்தளம் போடுவார்கள். (மாங்காய் வரும் என்று ஆவென்று இருந்தால், நீங்கள் கெட்டிக் காரர் தான், போங்கள்)

ஆனால் ஒருவரை மீண்டும் கூப்பிட முடியாத அளவிற்க்கு அவர்களது கட்டணம் இருக்கும். சாதாரணமாக கொழும்பில் 100 ரூபா வாங்கினால், யாழில் 350 ஆக இருக்கும். 

கொழும்பில் மீட்டர் ஆட்டோ பிடித்தால், கட்டணத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். எனினும் வெள்ளவத்தையில் இருந்து, புறக்கோட்டை செல்ல ஆட்டோ 1000 என்றார்கள். பின்னே வந்த பஸ்ஸில் ஏறினால் 12 ரூபா.

சலூனில் ஷேவ் எடுக்கப் போனால், முதலே எவ்வளவு என்று கேட்டால், லோக்கல் ரேட் 100 ரூபா. முடிஞ்ச பிறகு கேட்டால் 300 முதல் 500 வரை. (ஷேவ் எடுத்துப் பாருங்கள், நெடுக ஸெல்ப் ஷேவ் எண்டு, வறாண்டிக் கொண்டு இருபவர்களுக்கு, நல்ல ஒரு அனுபவம். ஆனால், டிசு பேப்பர் பாவிக்க வேண்டும், ஜெல் கையினால் பூச வேண்டும், முகம் துடைக்க, அவர்களது துவாய் பாவிக்கப் படாது என்று சொல்லி வையுங்கள். அப்படியே ஒரு டிப்ஸ் கொடுத்து விடுங்கள். அடுத்த நாள் இன்னும் அமர்க்களமாய் எடுத்து விடுவார்.).

ஹோட்டல் மிகவும் அதிகமாக அறவிடுகிறார்கள். நேரே போனால் அதிகமாக சொல்வார்கள் (களைப்புடன் வருபவர்கள் அங்க, இங்க போய் மினக்கட மாட்டர்கள் என்பது அவர்களுக்கு தெரிந்த வியாபார தந்திரம்). 

நான் booking.com மூலம், ஒரு ஹோடேலில் இருந்து மறு ஹோட்டலுக்கு போகும் முன்னர் புக் பண்ணிக் கொண்டே போதால், மலிவான டீல்கள் கிடைத்தன. ஆகவே அங்கே இருக்கும் போதே, இவ்வகையில் புக் பண்ணுங்கள். ஆட்டோ, வாடகை கார்களுக்கு, கொண்டு வரும் வாடிக்கை யாளருக்கு, கொமிசனோ, ரெஸ்டாரன்ட் ஆயின், ஒரு சாப்பாடு பார்சலோ கிடைப்பதால், உங்களுக்கு பொருத்தம் இல்லாத இடங்களை காட்டி, கட்டி அடித்து விடுவார்கள்.

நான் booking.com மூலம் எடுத்த அதே $29 ரூம், நேரே சென்ற ஜேர்மன் தமிழருக்கு $70.

ரயில் பயணம் சிறப்பு. அதிகூடிய விலை 1300 ரூபா. அதிகுறைந்த விலை 370 ரூபா. 

பஸ்கள் 1300 ரூபா, ஆனால், அந்த பணத்தினைக் கொடுக்கக் கூடிய வகையில் ஓரிரு நிறுவன பஸ்களே தரமானவையாக உள்ளன. அதாவது எல்லோரும் 1300 ரூபா அறவிடுவதால், பல தரமில்லாத பஸ்களும் ஓடுகின்றன. கொமிசன் அதிகமாக கிடைப்பதால், தரம் இல்லாத பஸ்களை, தரமானதாக சொல்லி விற்பார்கள். அண்மைய மழையில் பஸ்கள் ஒழுகி, மக்கள் பணத்தினைக் திருப்பக் கேட்டதால், சில பஸ்கள் ஓடாமல் இருந்தன. மேலும் இவ்வைகையான பஸ்களில் A/C புல்லாக போட்டு விடுவார்கள். மக்கள் குளிரில் நடுங்கி வெடவெடத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு கவலை இல்லை.

மிக முக்கியமாக, கொழும்பு - யாழ், யாழ் - கொழும்பு பஸ் பதிவுகளில் கவனமாக இருங்கள்.  மிகச் சிறந்த பஸ்களை மட்டுமே கேட்டு பதிவு செய்யுங்கள். வெங்கடேஸ்வரா, குணசேகர பஸ்கள் நல்ல தரம் என்று சொன்னார்கள். ஒவ்வொரு இருக்கைகளுக்கும் தனித்தனியாக A/C கொன்றோல் பண்ண முடியும். நான் குணசேகர பஸ் லில் வரும் பொது பயணித்தேன்.

எனினும் புறக் கோட்டையில் இருந்து CTB பஸ்கள் மலிவு விலைகளில் செல்கின்றன (ரூபா 370?). பஸ் இலக்கம் 87.

தரமில்லா 1300 ரூபா பஸ்களிலும் பார்க்க, இந்த அரச பஸ்கள் நன்றாக உள்ளன. நீண்ட தூரமாயின், விசேட இருக்கைகள் (சாய்ந்து படுக்கக் கூடியாவாறு) உள்ளன.

நல்ல உணவு விடுதிகள் உண்டு. கொள்பிட்டியில் க்ரீன்கபே நன்றாக இருந்தது. ராஜ போஜன் உணவகம் ரூபா 1950 புபே. மிகவும் அதிக கட்டணம். curry leves வெள்ளவத்தையில் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். நான் போக முடியவில்லை. 

யாழ் சந்தையில் பலாப்பழம் ஒரு துண்டு வாங்கி, அந்த பாட்டியம்மா விடமே பேசி, கொஞ்சம் காசு கொடுத்து சுளை ஆய்ந்து வாங்கியதால், ஹோட்டல் கொண்டு போய் சுவைக்கக் கூடியதாக இருந்தது. மாம்பலமும் அவ்வாறே. இன்னும் முழு பலாப் பழ சீசன் வரவில்லை.

யாழ் ரயில் நிலையத்தில் உத்தியோகத்தர்களாக, சிங்கள இளஞர்கள் டிக்கெட் வியாபாரம் செய்கிறார்கள். சிங்களத்தில் கேட்டால், தமிழில் பதில் அளிக்கிறார்கள். ஆச்சரியத்துடன் அவர்களது சூப்பெர்வைசெர் ஆயிருந்த தமிழ் அதிகாரியுடன் கதைத்த போது, இப்போதெல்லாம், அரச வேலைகள் பெறுவதாயின், தமிழர்கள் சிங்களமும், சிங்களவர்கள் தமிழும் சித்தி அடைய வேண்டுமாம். 

யாழ் நீதி மன்று பார்க்க போனேன். வாசில் இருந்த போலிஸ் கார் கூப்பிட்டு, சேட்டினை இன் பண்ணி போங்கோ என்கிறார் தமிழில்.

திரும்பி வரும் போது, கேஸ் முடிந்ததா என்றார். இல்லை, பல ஆண்டுகள் பின்னால் பார்க்க வந்தேன் என்றேன். ஆரவத்துடன் உரையாடினார். நாடு முழுவதுமே யுத்தத்தினால் பாதிக்கப் பட்டது. இன்று முழு நாடுமே நிமதியாக உள்ளது. விரைவில் தீர்வு வர வேண்டும் என்றார். தண்ணீர் போத்தல் ஒன்றையும் தந்தார்.

யாழில் சில இளையோரின் இன்றைய தளம்பல் நிலை, விரைவில் மாறும் என்றார் ஒரு லோயர். அவர்கள் இடையே நோக்கம் இன்றி தடுமாறு கின்றனர். நோக்கம் தெளிவாகும் போது தடுமாட்டம் நீங்கும் என்றார். பல புலம் பெயர்ந்தோர் முதலீடு செய்வதால் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. அதே வேலை யாழில் இருந்த திறமையான, ஏலேக்ட்ரிசியன், பிளமேர், மேஸ்திரி மார் கொழும்புக்கு அதிக சம்பளத்துக்கு கடத்தப் பட, அங்குள்ள அப்பிரசெண்டிங்குகள் இங்கே வருகிறார்கள்.  அதனால் வேலைகளில் தரமில்லை.

டியூஷன் சென்டர், அதன் விளம்பரங்கள் மட்டும் எந்த வித வித்தியாசமும் இல்லை.

ஆளில்லா டீக்கடையில், யாருக்கு டீ ஆத்துகிறார்கள் என்ற வகையில், ஆக்களே வராத கோயில்கள் எல்லாம், கோபுரம், குளம், மதில் என்று பிரகாசிகின்றன. வெளிநாட்டார் உபயம். 

அருமையான ரோட்டுக்கள் அமைந்துள்ளன. ஆர்மிக்காரர், தாமும் தம் பாடும். அவர்களுடன் சொறியாவிடில், அவர்கள் ஏனப்பா சொறியப் போகினம் என்றார் ஒரு உறவுப் பெரிசு.

நம்ம ஜீவன் சிவாவை சந்திக்க திட்டம் போட்டு, செவ்வாய் காலை ரயில், வெள்ளம் காரணமாக ரத்தாகியதால், ஒரு நாள் இழந்து, சந்திக்க முடியவில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

2011 இல் தெஹிவளையில் பஸ்சில் ஏறி புறக்கோட்டைக்கு இரண்டு என்று கூறி 20 ரூபாவை கொடுக்க நடத்துனர் மூஞ்சையில் அடித்த மாதிரி 20 ரூபா தாளை தந்துவிட்டு 36 ரூபா தா என்றான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அருமையான ரோட்டுக்கள் அமைந்துள்ளன. ஆர்மிக்காரர், தாமும் தம் பாடும். அவர்களுடன் சொறியாவிடில், அவர்கள் ஏனப்பா சொறியப் போகினம் என்றார் ஒரு உறவுப் பெரிசு.

1986இல் இருந்து ஒவ்வொரு இராணுவ ஆக்கிரமிப்புக்களின் போதும் எமது சில பெரிசுங்க... நான் யாருக்கும் அடிமையில்லை என்றாப் போல.. இப்படிப் பேசி வருவதை காண்கிறோம்.tw_blush:

சிலவேளை அவர்கள் தங்களின் மனைவிமாரை விட ஆமிக்காரன் திறம் என்று கூட நினைக்கலாம். ஆனால்.. உலகில்... ஒரு அந்நிய இராணுவ இருப்பென்பது.. எந்த ஒரு சிவில் சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. ஆனால் எம்மவர்கள் ஏற்பார்கள்.. அந்தளவுக்கு அவர்களின் இயலாமை அவர்களை பேச... சகிக்க வைத்து விடும். 

இதில் தான் எதிரிகள் எம்மை இலகுவாக அடிமைப்படுத்தப் பழகிக் கொண்டார்கள். tw_warning:

நீங்கள் கனகாலம் கொழும்புக்கே போனத்தில்லைப் போல.... இப்ப போய் வந்ததால் எல்லாம் புதினமாகத் தெரிகிறதோ என்னவோ..?! :rolleyes:

பயணப் பகிர்விற்கு நன்றி.. தீடீர் அல்ல.. திடீர்... என்று வரணும். தலைப்பில். tw_blush:

குணசேகர பஸிற்கு டிக்கட் விலை 1,300 அடிக்கடி போய்வந்தால் 1,000 . கதைத்து பழக்கப்படுத்த வேண்டும் அவர்களை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த மாதிரி ரோட்டு......
தமிழர் சிங்களம் கதைக்கினம்.
சிங்களவர் தமிழ் கதைக்கினம்.
ஆமிக்காரன் தானும் தன்ர பாடும்.
முழு நாடுமே நிம்மதியாய் இருக்கு.
டியூசன் சென்ரரெல்லாம் இருந்த மாதிரியே இருக்கு.
கோயில் குளம் மதில் எல்லாம் அந்தமாதிரி இருக்கு.
பெடியளின்ரை தளம்பல் நிலை கிட்டடியிலை மாறும் எண்டினம்.
வெளிநாட்டிலை இருக்கிறவன்ரை முதலீட்டாலை வேலையளுக்கும் பஞ்சமில்லை.

 தெரியாமல் கேக்கிறன் இதை விட இனியென்ன தீர்வு வேணும்?

நீண்ட காலத்தின் பின்னர் தாயகம் திரும்பியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அதுதான் எல்லாம் புதுமையா அதிசயமா இருக்கு. 


முதல் வெடியோட ப்ளேன் ஏறி தாயகம் இன்னும் அதே நிலமையில் தான் இருக்கின்றது என்ற எண்ணத்தில் இருப்பவர்களை  (குறிப்பாக மேலே கருத்தெழுதியிருக்கும் இருவர்) நாட்டுக்கு அனுப்பி எடுத்தால் அவர்களும் கனவுலகில் இருந்து வெளிவர வாய்ப்புள்ளது. 

 

1 hour ago, குமாரசாமி said:

அந்த மாதிரி ரோட்டு......
தமிழர் சிங்களம் கதைக்கினம்.
சிங்களவர் தமிழ் கதைக்கினம்.
ஆமிக்காரன் தானும் தன்ர பாடும்.
முழு நாடுமே நிம்மதியாய் இருக்கு.
டியூசன் சென்ரரெல்லாம் இருந்த மாதிரியே இருக்கு.
கோயில் குளம் மதில் எல்லாம் அந்தமாதிரி இருக்கு.
பெடியளின்ரை தளம்பல் நிலை கிட்டடியிலை மாறும் எண்டினம்.
வெளிநாட்டிலை இருக்கிறவன்ரை முதலீட்டாலை வேலையளுக்கும் பஞ்சமில்லை.

 தெரியாமல் கேக்கிறன் இதை விட இனியென்ன தீர்வு வேணும்?

அரசியல் தீர்வுக்கும் நாடு சுமூக நிலைக்கு திரும்புவதற்கும் இருக்கும் வித்தியாசம் கூட விளங்கவில்லை. 

ஆமிக்காரன் அடையாள அட்டை கேட்டு அடித்தான் .

எயார்பொட்டில் முப்பதினாயிரம் கொடுத்துத்தான் வெளியில் வந்தேன் 

இப்படி எழுதினால் பத்து பச்சை புள்ளிகள் இன்னும் அதிகம் கிடைத்திருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா பாருங்கோ பிரச்சினை முடிந்து 7 வருடமாகியும் ஊர் பார்க்காதவன் எழுதுவதை நம்புவதோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்களும் புள்ளைக்குட்டியளும் இஞ்சினை செற்றிலாக்கீபொட்டு புளிச்சல் ஏவறைக்கதை கோஸ்டிக்கு ஊரில எப்பவும் ஏதும் பிரச்சினை இருக்கவேணும்.அப்பான் இங்கினை கதச்சு பொழுதுபோக்கலாம். புலம்பெயர்ந்த எங்கட பொன்டுகள் காட்வேன்டி ரெலிபோன் அடிச்சு பக்கத்துவீட்டு பொட்ட ஓடிட்டாளோ கூட்டிக்கொன்டு இல்லா இன்னும் இருக்கிறாளோ என்டு புதினம் பறையிறமாரித்தான் இவையின்ர புரிசன் மாருக்கு ஊரில பிரச்சினையாம் என்டுறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

ஆமிக்காரன் அடையாள அட்டை கேட்டு அடித்தான் .

எயார்பொட்டில் முப்பதினாயிரம் கொடுத்துத்தான் வெளியில் வந்தேன் 

இப்படி எழுதினால் பத்து பச்சை புள்ளிகள் இன்னும் அதிகம் கிடைத்திருக்கும் .

ஒட்டுக்குழு... வெள்ளை வானிலை  கடத்திக் கொண்டு போய், கப்பம் கேக்குது எண்டதை... எழுத  மறந்து போனியள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நினைக்க எரிச்சலாகக் கிடக்கு, காரணம் எனது இந்த மார்கழிப் பயணம் தடைப் படும் போல இருக்கு. ஒரு முறை போய்  வந்தவர்களுக்கு ஊர் இபோதும் 1990களில்  இல்லை என்பது வெளித்துவிடும். போகாதவர்கள் ஒருமுறை போய் வருவது நல்லது என்பது எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் நல்லாய்யிருக்கு என்ற சொல்லுறவையள் ஒருத்தரும் அங்கே போய் செட்டில் பண்ணுகிறமாதிரி தெரியல்ல ...... தனக்கு அங்க இருக்கத்தான் ஆசை ஆனால் பிள்ளைகளுக்கும் மனுசிக்கும் நுளம்புக‌டிச்சு தடிச்சு போய்யிட்டுது  என்று சொல்லுறவையள் அதிகம்tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

ஊர் நல்லாய்யிருக்கு என்ற சொல்லுறவையள் ஒருத்தரும் அங்கே போய் செட்டில் பண்ணுகிறமாதிரி தெரியல்ல ...... தனக்கு அங்க இருக்கத்தான் ஆசை ஆனால் பிள்ளைகளுக்கும் மனுசிக்கும் நுளம்புக‌டிச்சு தடிச்சு போய்யிட்டுது  என்று சொல்லுறவையள் அதிகம்tw_tounge_wink:

எம்மவர் குணமே அதுதானே. ஊருக்கு ஓசில உபதேசம் செய்வதில் எம்மவரை விட்டால்.. உலகில் யாரும் அவர்களுக்கு ஈடினை ஆக முடியாது. அதிலும் அற்ப சந்தோசங்களுக்காக.. எதிரியைப் புகழ்வதில் நம்மவருக்கு ஈடு இணை இந்த உலகில் யாரும் இல்லை. 

அதுதான் சொல்லி வைச்சார்கள்.. ஊருக்கு தான் உபதேசம்... எனக்கில்லையடின்னு. tw_blush:

இதில் லண்டனில் ஆர்ப்பாட்டமாம்.. அலைசம் கொடுன்னு. அதில புலிக்கொடி பிடிக்கல்லையாம்.. என்று சில ஒட்டுண்ணி ஊடகங்களுக்கு ரெம்பக் கவலையாம். 

ஆனால்.. மக்களின் நினைவு நாளில் புலிக்கொடி பிடிக்கக் கூடாதாம்.. முடியல்லை இவங்க அளப்பரை. tw_tounge_wink:

9 hours ago, குமாரசாமி said:

அந்த மாதிரி ரோட்டு......
தமிழர் சிங்களம் கதைக்கினம்.
சிங்களவர் தமிழ் கதைக்கினம்.
ஆமிக்காரன் தானும் தன்ர பாடும்.
முழு நாடுமே நிம்மதியாய் இருக்கு.
டியூசன் சென்ரரெல்லாம் இருந்த மாதிரியே இருக்கு.
கோயில் குளம் மதில் எல்லாம் அந்தமாதிரி இருக்கு.
பெடியளின்ரை தளம்பல் நிலை கிட்டடியிலை மாறும் எண்டினம்.
வெளிநாட்டிலை இருக்கிறவன்ரை முதலீட்டாலை வேலையளுக்கும் பஞ்சமில்லை.

 தெரியாமல் கேக்கிறன் இதை விட இனியென்ன தீர்வு வேணும்?

உண்மை. பொழிப்புரையை.. இப்படி எழுதிட்டு போயிருக்காலாம். முனியர் இதுக்கு இவ்வளவு பந்திகளை வீணாக்கி...?! 

இப்ப கூகிள் ஆண்டவரே...  கூட்டிக்கிட்டுப் போறார். ஆமி எங்க நிற்குது.. ஆமி ரக் எங்க நிற்குது.. ஆமி ஜீப் எங்க நிற்குது.. எல்லாம்  விலாவாரியாக் காட்டிறார். 

இருந்தும் போய் வந்தம் பேர்வழிகள் செலவழிச்ச காசுக்கு நாலு பேரைக் குழப்பி விட்டால் தானே அவைக்கு மனத் திருப்தி. tw_tounge_xd:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு பயணம் போய் வந்தமா, அதில கண்ட விடயங்களைப் பகிர்ந்தமா, நாலு பேர் அதால சில விசயங்களை விளங்கி நாலு காசு மிச்சப் படுத்துவினமா எண்டு பார்த்தல்.... 

ஐயோ, ஐயோ .... உதுகுலயும் அரசியல் மேளத்தோட வந்து அடியோ, அடி எண்டு உடுக்கடிச்சால்..... ? 

அட விடுங்கப்பா... இந்த திரி நம்மள மாதிரி விசயம் விளங்காம காசைக் கரியாக்குற  அசடுகளுக்கு....

அனேகமாக, அரசியல் காரனங்களுக்காக, அங்க போக முடியாமல் இருப்பவர்கள் தான் அதிகமாக அரசியல் கதைப்பது போல படுகிறது....

ஒருவரையும் தனிப்பட்ட ரீதியில் சொல்ல வில்லை. Just take it easy guys.

  • கருத்துக்கள உறவுகள்

முனிண்ணே.. இது உங்களுக்கு என்றில்லை பொதுவா.. இப்ப போய் வாறதுங்க இதே புலம்பல் தான்.

நாங்க எல்லாம் போர் காலத்திலேயே வெள்ளவத்தையில் கடற் காற்றுக் குடிச்சு.. தெகிவளையில்.. கண்காட்சி கண்டு.. கெத்தாரமவில்.. மச் பார்த்து.. பொரளையில் மேம்பாலம் பார்த்து.. வன்னியில் குளிர்களி சாப்பிட்டு.. யாழ்ப்பாணத்தில் கிட்டு பூங்காவில் சறுக்கி விளையாட்டிட்டுத் தாண்ணே வந்திருக்கம். அதுக்காக.. ஊரில எல்லாம் சுகமா இருக்குன்னு கதை அளக்கிறதில்ல. ஆளாளுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்குமில்ல.  

அதிலும் இனத்துக்கு என்று 1948 இல் இருந்து என்ன.. அதுக்கு முதல்ல இருந்தே... ஒரு பிரச்சனை இருக்கில்ல. அதுகளை மூடிமறைக்க இப்படியான அற்ப சொற்ப சுய சுகிப்புக்களை பயன்படுத்திறவைக்குத்தான் பதில்களே தவிர உங்களுக்கு என்று எடுத்துக்கப்படாது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, தெனாலி said:

அரசியல் தீர்வுக்கும் நாடு சுமூக நிலைக்கு திரும்புவதற்கும் இருக்கும் வித்தியாசம் கூட விளங்கவில்லை. 

அரை நூற்றாண்டுக்கு மேலாய்........ஊர் உலகத்துக்கு தெரிஞ்ச ஒரு நியாயமான பிரச்சனையை தீர்க்க சிங்களவன் பஞ்சிப்படுறான். இதுக்கை தமிழனுக்கு தமிழன் வகுப்பெடுத்து சிங்களவன்ரை பின்பக்கம் துடைக்கிறதிலையே குறியாய் இருங்கோ.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியாரே ஊர் பற்றி இங்கே உறைப்பாக கொஞ்சம் இனிப்பாகவும்  சொன்னதற்கு நன்றி.? 

இதான்பா இப்ப இருக்கிற நமது ஊர் ??

  • கருத்துக்கள உறவுகள்

முனி இந்த பதிவை நீங்கள் பதிந்த அடுத்த நிமிடமே எனது கண்ணில் பட்டது.வருடம் இரண்டு முறை ஊருக்கு போற எனக்கு எந்த பதிலும் எழுத தொியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் தொிந்தது.இந்த திரி பத்தி எரியும் என்று.எப்படியோ உங்கள் பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் போக வேண்டும் என்று விருப்பம் இருக்குது பார்ப்பம்

On 23/05/2016 at 3:55 PM, Nathamuni said:

கொழும்பில் மீட்டர் ஆட்டோ பிடித்தால், கட்டணத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். எனினும் வெள்ளவத்தையில் இருந்து, புறக்கோட்டை செல்ல ஆட்டோ 1000 என்றார்கள். பின்னே வந்த பஸ்ஸில் ஏறினால் 12 ரூபா.

 

புகையிரதத்தில் போனால் 10 ரூபா 

On 23/05/2016 at 3:55 PM, Nathamuni said:

மிக முக்கியமாக, கொழும்பு - யாழ், யாழ் - கொழும்பு பஸ் பதிவுகளில் கவனமாக இருங்கள்.  மிகச் சிறந்த பஸ்களை மட்டுமே கேட்டு பதிவு செய்யுங்கள். வெங்கடேஸ்வரா, குணசேகர பஸ்கள் நல்ல தரம் என்று சொன்னார்கள். ஒவ்வொரு இருக்கைகளுக்கும் தனித்தனியாக A/C கொன்றோல் பண்ண முடியும். நான் குணசேகர பஸ் லில் வரும் பொது பயணித்தேன்.

எனது கணிப்பில் NCG , PPT தரமான பஸ்கள். ஆனால் யாழில் இருந்து கொழும்புக்கு போகையில் விடிய 3:45 இற்கு வெள்ளவத்தையில் இறக்கி விடுவார்கள் - அண்ணருக்கு தேவையில்லாத உபத்திரவம் விடியற் காலையில். 

எனது தெரிவு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம்தான், முழுவதுமாக குளிரூட்டியது + உணவுசாலை உண்டு. இருந்த இடத்தில இருந்து பயணிக்க வேண்டியதில்லை, காலாற நடக்கலாம், விலை 1500 ரூபாய். இது கோட்டைக்கு பின்னர் அனுராதபுரம், வவனியா, கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்பாணம், கோண்டாவில், சுன்னாகம், காங்கேசன்துறையில் மட்டும் நிற்கும்.  வெள்ளவத்தையில் இருந்து காலை 5:20க்கு எடுத்தால் யாழில் 11:55க்கு நிற்கலாம். பொதுவாகவே இது பிந்தி வருவதில்லை . புலம் பெயர்ந்தவர்களின் பொதிகளை வைக்க கூடிய இடம் உண்டு. மேலதிகமான பொதிகள் இருப்பின் இன்னொரு சீற்றை புக் செய்யலாமே. சீற்களும் வசதியானவைதான், 4 பேர் இருப்பின் முகம் பார்க்கும்வண்ணம் திருப்பிவிட்டு உட்காரலாம். யாழில் இருந்து 1:45 இற்கு புறப்படும். டிக்கெட் எடுப்பது கஷ்டம் முன்பதிவு உங்களுக்கு தெரிந்தவர் மூலம் முன்னரே செய்து கொள்ளுங்கள். 

 

On 23/05/2016 at 3:55 PM, Nathamuni said:

நல்ல உணவு விடுதிகள் உண்டு. கொள்பிட்டியில் க்ரீன்கபே நன்றாக இருந்தது. ராஜ போஜன் உணவகம் ரூபா 1950 புபே. மிகவும் அதிக கட்டணம்.

ரொம்ப அதிகம் கொடுத்து விட்டீர்கள் Kingsberry Hotel (பழைய intercontinental hotel) buffet Rs: 2000

 Cinnamon grand hotel Rs 2200 

On 23/05/2016 at 3:55 PM, Nathamuni said:

யாழ் ரயில் நிலையத்தில் உத்தியோகத்தர்களாக, சிங்கள இளஞர்கள் டிக்கெட் வியாபாரம் செய்கிறார்கள். சிங்களத்தில் கேட்டால், தமிழில் பதில் அளிக்கிறார்கள். ஆச்சரியத்துடன் அவர்களது சூப்பெர்வைசெர் ஆயிருந்த தமிழ் அதிகாரியுடன் கதைத்த போது, இப்போதெல்லாம், அரச வேலைகள் பெறுவதாயின், தமிழர்கள் சிங்களமும், சிங்களவர்கள் தமிழும் சித்தி அடைய வேண்டுமாம். 

இதை நம்ப முடியவில்லை. நானே சிங்களம் தெரியாமல் பலதடவை புடுங்குப்பட்டுள்ளேன். எனக்கு தெரிய ஒரு தமிழர் உள்ளார் - சந்தர்ப்பவசமாக நீங்கள் அவரை சந்த்தித்துள்ளீர்கள். 

மற்றது இங்கு  எங்கேயோ வாசித்தது - சாரத்துடனும் பாட்டா செருப்புடன் திரிந்தால் விசா தேவை இல்லை என்பது - யார் எழுதினது என்பது நினைவில் இல்லை. 

ஒரு வருட ரெசிடென்ட் பெர்மிட்டுக்கு 10,000 ரூபாய்கள்தான். சட்டரீதியான ஆவணங்களை கொடுத்துவிட்டால் (அதாவது இலங்கையில் பிறந்ததிற்கான சான்றிதழ் + படம் + ஒரு கைநாட்டு) ஒரு கிழமையில் கிடைக்கும். செல்வாக்கு இருந்தால் 1 மணி நேரத்திலும் கிடைக்கும். இரு வருடம் தொடர்ந்து ரெசிடென்ட் பெர்மிட் கிடைத்தால் பெர்மனட் ரெசிடென்ட் பெர்மிட்டுக்கு அப்பிளை பண்ணலாம். 

உலகமெல்லாம் சுத்தி எப்படி விசா எடுக்கலாம் என்ற தமிழனுக்கு நாம் பிறந்த நாட்டில் எப்படி விசா எடுக்கிறது என்று எழுதவேண்டி இருக்கிறது.

நாதம்ஸ் அடுத்தமுறை சந்திக்கலாம் - ஆனால் அரசியல் பேசக்கூடாது.

இந்த விபரங்கள் உங்களைப்போல் இங்கு வரும் நண்பர்களுக்காக எழுதினேன். உங்களை விமர்சிக்கவல்ல.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசியாக நான் போனவருசம் போனபோது 18ஆயிரம் முடிஞ்சுது கயஸ் புடிச்சு போனான்.கொஞ்ச பெறுமதியான சாமான் கள் கொன்டுபோனதால் கயஸ்.திரும்பிவரும்போது பஸ்தான்.1500ரூவா. அநியாயகாசு.ஜீவன்சிவா சொல்லேக்க இப்பான் தெரியுது இன்ரசிற்றியில் இதே காசுக்கு இவ்ளா வசதியாபோகலாம் என்டு.இணையத்தில் புக்பண்ணலாம ஜீவன்சிவா? இந்தமுறை வரும்போது நீங்கள் சம்மதித்தால் உங்களை சந்திக்க வாறன்.முனிவர் ஓகேன்னா முனிவரையும் சந்திக்கபோகலாம்.

11 hours ago, குமாரசாமி said:

அரை நூற்றாண்டுக்கு மேலாய்........ஊர் உலகத்துக்கு தெரிஞ்ச ஒரு நியாயமான பிரச்சனையை தீர்க்க சிங்களவன் பஞ்சிப்படுறான். இதுக்கை தமிழனுக்கு தமிழன் வகுப்பெடுத்து சிங்களவன்ரை பின்பக்கம் துடைக்கிறதிலையே குறியாய் இருங்கோ.:cool:

அதுக்கு இப்ப என்ன செய்வது? தீர்வு கிடைக்க மட்டும் அங்கிருக்கிற மக்கள் கஷ்டபட வேணுமா? 

5 hours ago, Thirdeye said:

கடைசியாக நான் போனவருசம் போனபோது 18ஆயிரம் முடிஞ்சுது கயஸ் புடிச்சு போனான்.கொஞ்ச பெறுமதியான சாமான் கள் கொன்டுபோனதால் கயஸ்.திரும்பிவரும்போது பஸ்தான்.1500ரூவா. அநியாயகாசு.ஜீவன்சிவா சொல்லேக்க இப்பான் தெரியுது இன்ரசிற்றியில் இதே காசுக்கு இவ்ளா வசதியாபோகலாம் என்டு.இணையத்தில் புக்பண்ணலாம ஜீவன்சிவா? இந்தமுறை வரும்போது நீங்கள் சம்மதித்தால் உங்களை சந்திக்க வாறன்.முனிவர் ஓகேன்னா முனிவரையும் சந்திக்கபோகலாம்.

இன்டர்நெட் மூலமாக புக் செய்யும் வசதி இல்லை என்று நினைக்கின்றேன், மொபைல் மூலம் செய்யலாம்  - அது வெளிநாட்டிலிருந்து முடியாது. 

என்னை தாராளமாக சந்திக்கலாம். ஆனால் ஒரு கண்டிசன் - அரசியல் பேசக் கூடாது.

நண்பர்களாக யார் வேணுமெண்டாலும் சந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஜீவன் சிவா said:

என்னை தாராளமாக சந்திக்கலாம். ஆனால் ஒரு கண்டிசன் - அரசியல் பேசக் கூடாது.

நண்பர்களாக யார் வேணுமெண்டாலும் சந்திக்கலாம்.

ஜீவன் நம்பிவிட்டீர்களா? 

2 hours ago, MEERA said:

ஜீவன் நம்பிவிட்டீர்களா? 

எதை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.