Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது - சேரன் ஆதங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது 'கன்னா பின்னா'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சேரன் பேசுகையில், 'சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

கபாலி' போன்ற படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகின்றதே தவிர மற்ற பட தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும். ஆன்லைனாக இருக்கட்டும்..ஆனால் அது முறையாக இருக்கவேண்டும். திருட்டுத்தனமாக இருக்க கூடாது.. பலரின் உழைப்பையும் தயாரிப்பாளரின் பணத்தையும் சுரண்டும் தீமைக்கு நாம் துணைபோக கூடாது.

தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. 

எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது என்றார் சேரன்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/cheran-speeach-at-kanna-pinna-audio-launch-261142.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

***  இலங்கைத் தமிழன் மொத்தமே 32 இலட்சம். தமிழகத்தமிழன் 7 கோடி.

இலங்கைத் தமிழனா தமிழகம் முழுதும், திருட்டு வீடியோ சப்ளை பண்றான்? பிறகு எதுக்கு புலம் பெயர் இலங்கைத் தமிழன் பணம் என்று பறக்கிறார்கள்?

சினிமா வியாபாரத்தை அதனால் வரும் பணத்தை, அழிந்த மனித உயிர்கள் மீது காட்டிய அனுதாபத்திலும் பார்க்க பெரிதாக மதிக்கிறான். 

இவன் எல்லாம் கவலைப்பட்டு உணர்வுடன் போராடியதால் தான் நாம தப்பி பிழைத்து இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத்குமார் வரிசையில் இவரும் வந்திட்டார்.இவர் மேல் இருந்த கொஞ்சமரியாதையும் விட்டுப்போச்சுது.
தங்கள் திரைப்பட தோல்விகளுக்கு ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையே சாடுகின்றார்.
வியாபாரத்திற்காகத்தான் ஈழத்தமிழர் பிரச்சனையை தூக்கிப்பிடித்தார் என்பது நன்றாகவே தெரிகின்றது. tw_angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Some feedback in thatstamil.com

  • Saya: ஈழ தமிழரை கொச்சைப்படுத்திய சேரன் என்ற கூத்தாடி மன்னிப்பு கேட்கவேண்டும். ஈழத்து அரசியலை தமது அரசியல் நோக்கத்துக்காகவே பயன்படுத்தும் தமிழ்நாட்டு அரசியல் கூத்தாடிகள் ஒருபக்கம். அதே ஈழ தமிழர்களால் ஏற்பட்ட சர்வதேச அளவிலான தமிழ் திரைப்பட வர்த்தகத்தால் இலாபமடையும் இந்த திரைக்கூத்தாடிகளுகளுக்கு என்ன தகுதி இருக்கு ஈழ தமிழர்களை கொச்சைப்படுத்த? இந்த கூத்தாடி ஈழ தமிழர்களின் மேல் குற்றம் சுமத்த என்ன ஆதாரம் வைத்திருகலகிறான் என்பதை உடனடியாக வெளியிட வேண்டும். எங்கோ யாரோ ஒருவன்னின் செயலுகலுக்கு ஒட்டு மொத்த ஈழ தமிழர்களையும் கொச்சைப்படுத்தி இருக்கிறான் இந்த கூத்தாடி. இந்திய தமிழர்கள் அவ்வளவு நல்லவர்களா? அவர்களுக்கும் திருட்டு வீசீடிக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையா என்பதையும் இந்ந கூத்தாடி சொல்ல வேண்டும்
  • காதலின் புனிதம் பற்றி படமெடுத்துவிட்டு மகளின் காதலை ஜாதி பார்த்து, நாசமாக்கிய சேரன் போன்ற கேவலமான சினிமா காரர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் .
  • Subramaniam Poopal  

    சேரன் உங்களை புத்திஜீவி என்று இதுவரை காலமும் நினைத்து விட்டேன் மன்னித்து கொள்ளவும்.

  • Puthiyavan Raj  

    சேரனின் இந்த பொறுப்பற்ற பேச்சு, ஏற்கனவே காயம்பட்டிருக்கும் நம் சகோதரர்களான இலங்கை தமிழரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற கொடூரம்... சேரன் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இலங்கை தமிழருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் அவர்கள் மனதை இப்படி காயப்படுத்தாமலாவது இருங்கள்..

  • nathan  

    சேரனின் கருது படு முடிடாள்தனமானது. அவர் இலங்கைத்தமிழர் patti சொல்லிய கருத்து ஒரு சில இலங்கையர் பொறுத்தவரையில் உண்மையாக இருக்கலாம், அதட்க்காக மொத இனத்தையும்மே கேவலமாக நினைக்கும் குறுகிய புத்தி ஏற்கத்தகுந்தது அல்ல. இத்தகைய கருத்தை தெரிவித்த சேரன் உடனடியாக இலங்கைத்தமிழரிடம் மன்னிப்பு கோரவேண்டும். தவறும் பட்ச்சத்தில் அவர் படங்களை இலங்கைத்தமிழர் யாபேரும் மொத்தமாக எதிர்ப்பார்கள்.

  • ganesh  

    நீங்க ஒன்னும் போராட வேண்டாம்....மூடிக்கிட்டு இரு ..கீழ்த்தரமான பேச்சு...அவர்களை வச்சு பொழப்பு ஓடுது உங்களுக்கு.வெளி நாட்டுல படம் ஓடுறது அவங்களால தான்
    அவங்கள நம்பி தானே வெளி நாட்டுல படத்தை ரிலீஸ் செய்யுறீங்க ....உன் நாக்கை இழுத்து வச்சு ஆருக்கணும் ...

 

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேரனது கருத்து மிகவும் ஆழமானது.

தமிழகத்தில் திருட்டு வீடியோ பற்றி போராட மாட்டார். அதால பெரீசா வருமானம் பாதிககாது.

ஆனால், இலங்கைத்தமிழனே, உனக்காக போராடினோம், ஆதலால், வெளிநாட்டில திருட்டு வீடியோ பார்த்து, அருவருக்க வைக்காமல்,  தியேட்டரில போய் பாருங்கப்பா, சோனங்கிகளா, அப்பத்தான் நமக்கு நல்ல துட்டு வரும்.

கொய்யால.... tw_angry:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சேரனது பேச்சுக்கு கண்டனங்கள்

தன் வியாபாரத்தினையும் ஈழ விடுதலையையும்

அது தந்த வேதனையையும் இணைத்து பேசுவது

கேவலமான சிந்தனை

 

நிற்க,

வெளிநாடுகளில் இயங்கும் நூத்துக்கும் தொன்னூற்றி ஒன்பது

தமிழ் சினிமா Torrents தளங்கள் ஈழத்தமிழர்களால்

இயக்கப்படுபவையே.

 

இன்று தமிழ் படங்களை வெளியான உடனே வெளியிடும்

Tamil rocker தளமும் ஈழத்தமிழர்கள் இணைந்து செய்பவையே

......

திருட்டி விசிடி முதலில் வெளிவருவது தமிழகத்து தியேட்டர்களின் உதவியுடன்

அங்கிருந்து தான் இவை வெளியாகி பின்னர்

இலங்கை தமிழர்களினால் நடாத்தப்படும் தளங்களில் வெளிவருகின்றன

மலேசியாவில் இருந்தும் இவை வெளியாகின்றன.

.......

இப்ப வரும் தமிழ் சினிமா படங்களில் அநேகமானவை

 திருட்டு விசிடியில் கூட பார்க்க சகிக்கவில்லை.

இதற்குள் காசு கொடுத்து பார்க்க சொல்வது

Too bad, I say

இதற்கு தீர்வாக படம் வெளியாகி

ஒரு வாரத்துக்குள் டிவிடி யை தயாரிப்பாளரே

வெளிவிடுவது தான் உத்தமம்

 

  • கருத்துக்கள உறவுகள்

சேரன் உண்மையை தானே சொல்கிறார்.
எங்கட இலங்கை தமிழர்தான் வெளிநாடுகளில் திருட்டு கொப்பி எடுத்து இணையத்த்தில் போடுபவர்கள். படம் வந்து அடுத்த நாள் நல்ல கொப்பி இணையத்தில் வருது. படம் ஓடும். அதனால் பட தயாரிப்பாளர்களுக்கு இழப்புதானே. அதில் உள்ள நியாயத்தை ஏற்க விரும்பாமல் அவரை தூற்றுவது தப்பு. ஒரு படம் எடுப்பது எத்தனை பேரின் உழைப்பு. அதை மதிக்க தெரியாது.

எங்க ஈழ தமிழன் வெளிநாட்டில் இருப்பவர்கள் முக்கால்வாசி பேர் காசுக்காக வெளிநாட்டுக்கு வந்தார்கள். தன் இனம் ஈழத்தில் சாவதை தன் பொருளாதார நலனுக்கு பாவிக்கும் இழிய இனம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனின் சாயல் விளங்குது.....பெயரை  மாற்றீனாலும்...எழுத்தை மாற்ற முடியாதுதானே...

19 minutes ago, M.P said:

சேரன் உண்மையை தானே சொல்கிறார்.
எங்கட இலங்கை தமிழர்தான் வெளிநாடுகளில் திருட்டு கொப்பி எடுத்து இணையத்த்தில் போடுபவர்கள். படம் வந்து அடுத்த நாள் நல்ல கொப்பி இணையத்தில் வருது. படம் ஓடும். அதனால் பட தயாரிப்பாளர்களுக்கு இழப்புதானே. அதில் உள்ள நியாயத்தை ஏற்க விரும்பாமல் அவரை தூற்றுவது தப்பு. ஒரு படம் எடுப்பது எத்தனை பேரின் உழைப்பு. அதை மதிக்க தெரியாது.

எங்க ஈழ தமிழன் வெளிநாட்டில் இருப்பவர்கள் முக்கால்வாசி பேர் காசுக்காக வெளிநாட்டுக்கு வந்தார்கள். தன் இனம் ஈழத்தில் சாவதை தன் பொருளாதார நலனுக்கு பாவிக்கும் இழிய இனம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சேரனா.... இப்படிச் சொல்வது.
தனது ஆற்றாமையை... ஈழத் தமிழர் மேல் வெளியிட்டதன் மூலம், தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டார். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அட பல்லிக்குப் பிறந்தவனே இப்படியா ஈழத்தமிழரைப்பற்றி அவதூறா சொல்லுற-நாசமா போக.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

எங்க ஈழ தமிழன் வெளிநாட்டில் இருப்பவர்கள் முக்கால்வாசி பேர் காசுக்காக வெளிநாட்டுக்கு வந்தார்கள்.

நீங்க எதுக்கு வெளிநாட்டிட்க்கு போனீங்க ....? படித்தது இலவசக்கல்வி  இலங்கையில் தானே ...? மலையே இடிந்து விழுந்தாலும் இலங்கைக்கே பணி,சேவை  செய்வேன் என்று  இங்கயே இருந்திருக்கலாமே ...இலங்கை தமிழர்கள் இனிமேல் தமிழ்நாட்டு கூத்தாடிகள் நடித்து வெளியிடும் அத்தனை படங்களையும் புறக்கணிப்பு செய்யவேண்டும் ..அது காவாலியாக இருந்தாலும் சரி வேதாளப்புலிகளாக இருந்தாலும் சரி ...இவர்களது எந்தப்படமும் ஈழத்தமிழனை நம்பி போணியாகாது என்பதை காட்டவேண்டும் ..யாருக்கு தேவை இவர்களும் இவர்களது போராட்டமும்  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, M.P said:

சேரன் உண்மையை தானே சொல்கிறார்.
எங்கட இலங்கை தமிழர்தான் வெளிநாடுகளில் திருட்டு கொப்பி எடுத்து இணையத்த்தில் போடுபவர்கள். படம் வந்து அடுத்த நாள் நல்ல கொப்பி இணையத்தில் வருது. படம் ஓடும். அதனால் பட தயாரிப்பாளர்களுக்கு இழப்புதானே. அதில் உள்ள நியாயத்தை ஏற்க விரும்பாமல் அவரை தூற்றுவது தப்பு. ஒரு படம் எடுப்பது எத்தனை பேரின் உழைப்பு. அதை மதிக்க தெரியாது.

எங்க ஈழ தமிழன் வெளிநாட்டில் இருப்பவர்கள் முக்கால்வாசி பேர் காசுக்காக வெளிநாட்டுக்கு வந்தார்கள். தன் இனம் ஈழத்தில் சாவதை தன் பொருளாதார நலனுக்கு பாவிக்கும் இழிய இனம்.

இது தானா சந்துல சிந்து பாடுற எம். பி 

இந்த தமிழ் நாடு திரையுலகத்தினரால் சொல்லும்படியாக என்ன நடந்தது என்பதை விவரித்து சொல்லுங்கள் ஈழ தமிழர்களுக்கு

 வெளிநாடு என்று வரும் போது எத்தனையோ வியாபாரங்கள் நடக்கின்றன அதில் இந்த திரப்படங்களும் அடக்கம் ஆனால் அதை செய்வது ஈழ தமிழர்களா?? 

படங்களின் கதைகள் பல்பேரின் நாவல்கள்  திருடப்பட்டு படமாக்கிறவர்கள் கதைக்கப்படாது இந்த திருட்டு பற்றி 
சும்மா ஆடும் கூத்தாடிகளூக்கு கோடிக்கு மேல் ஏன் கொட்டி கொடுக்க வேண்டும் பிறகு ஏன் நட்டம் வராடது 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழ தமிழர்களுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்து இருக்கிறார்கள்? தீக்குளிப்புகள், ஏன போராடி வீரமரணமானார்கள

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, M.P said:

எத்தனை தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழ தமிழர்களுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்து இருக்கிறார்கள்? தீக்குளிப்புகள், ஏன போராடி வீரமரணமானார்கள

தமிழ்நாட்டு சாமானிய தமிழர்கள்தானே .... திரைத்துறையினர் இல்லையே .....
விசையோ அசித்தோ ரஜினியோ தீக்குளித்தனர் ...? ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் குளிப்பினமோ ...? ஒன்னாம் நம்பர் வியாபாரிகள் 
இவர்களை கடவுள்களாக தமிழ்நாட்டு மக்கள் பார்த்து மோட்சம் பெறட்டும் ..எங்களுக்கு அவசியமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அக்னியஷ்த்ரா said:

தமிழ்நாட்டு சாமானிய தமிழர்கள்தானே .... திரைத்துறையினர் இல்லையே .....
விசையோ அசித்தோ ரஜினியோ தீக்குளித்தனர் ...? ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் குளிப்பினமோ ...? ஒன்னாம் நம்பர் வியாபாரிகள் 
இவர்களை கடவுள்களாக தமிழ்நாட்டு மக்கள் பார்த்து மோட்சம் பெறட்டும் ..எங்களுக்கு அவசியமில்லை 

சினிமா எத்தனை சாமானிய மக்களுக்கு சாப்பாடு போடுது என்று உங்களுக்கு தெரியாது போல்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, M.P said:

சினிமா எத்தனை சாமானிய மக்களுக்கு சாப்பாடு போடுது என்று உங்களுக்கு தெரியாது போல்.

அப்படி யோசிக்கும் திரைத்துறையினர் முதலில் அவர்களது நாட்டிற்குள்ளே திருட்டு டீ வீ டியை தடுக்கட்டும். அதற்கே வக்கில்லை வந்துவிட்டார்கள் ஈழத்தமிழரை கைகாட்ட 

  • கருத்துக்கள உறவுகள்

சேரன் சொல்வது நியாயம் என்று பட்டாலும்.. சினிமாத்துறையின் காசு பார்க்கும் பேராசையும் இதற்கு ஒரு காரணம். தமிழகத்தில்.. படங்கள் வெளியாக முன்.. வெளிநாட்டில் வெளியிடுவதால்.. திருட்டி விசிடி குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மேல் பாய்கிறது. இதில் பலதை வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தான் செய்கிறார்கள்.

ஆனால்.. திருட்டு ஆன்லைன் படங்களை தரவிறக்கி அதை இதோ உயர் தர சிடியில் கபாலின்னு கடையில் போட்டு 1 பவுனுக்கு விக்கிறது என்னவோ.. ஈழத்தமிழன் தான். அதை மறுக்க முடியாது. tw_blush:

ஆனாலும்.. சினிமாவோடு ஈழத் தமிழ் மக்களின் துயர் களைவு.... உரிமையை வேண்டி நடத்திய.. போராடிய போராட்டங்களைக் கலக்கும்.. சேரனின் புத்தி.. மாற்றிக் கொள்ளப்பட வேண்டியது. tw_warning:

33 minutes ago, M.P said:

எத்தனை தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழ தமிழர்களுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்து இருக்கிறார்கள்? தீக்குளிப்புகள், ஏன போராடி வீரமரணமானார்கள

வெளிநாடுகளில்.. படம் பார்க்க வரும் இந்திய மாணவர்களும்.. தொழிலாளர்களும்.. தான் அதிகம் நவீன போன்களில்.. முழுப்படத்தையும் பதிவு செய்து இணையங்களில் தரவேற்றுகின்றனர். அதெப்படி.. ஈழத்தமிழர்கள் என்று இதை பொத்தாம் பொதுவாகச் சொல்ல முடியும். :206_cat:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

இரண்டு விடயங்கள் மட்டுமே நிஐம்

1 - யாரையும் பகைக்கும் நிலையில் நாமில்லை

2- ஒரு வார்த்தையை வைத்து ஒருவரை எம்மிலிருந்து தூக்குவோம் என்றால் எவரும் எம்முடன் இருக்கப்போவதில்லை (நான் உட்பட)

துரும்பும் பல் குத்த உதவும்.

வறுத்தெடுத்ததால் இதுவரை கண்டது என்ன காண்????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

இரண்டு விடயங்கள் மட்டுமே நிஐம்

1 - யாரையும் பகைக்கும் நிலையில் நாமில்லை

2- ஒரு வார்த்தையை வைத்து ஒருவரை எம்மிலிருந்து தூக்குவோம் என்றால் எவரும் எம்முடன் இருக்கப்போவதில்லை (நான் உட்பட)

துரும்பும் பல் குத்த உதவும்.

வறுத்தெடுத்ததால் இதுவரை கண்டது என்ன காண்????

 

7 hours ago, M.P said:

சேரன் உண்மையை தானே சொல்கிறார்.
எங்கட இலங்கை தமிழர்தான் வெளிநாடுகளில் திருட்டு கொப்பி எடுத்து இணையத்த்தில் போடுபவர்கள். படம் வந்து அடுத்த நாள் நல்ல கொப்பி இணையத்தில் வருது. படம் ஓடும். அதனால் பட தயாரிப்பாளர்களுக்கு இழப்புதானே. அதில் உள்ள நியாயத்தை ஏற்க விரும்பாமல் அவரை தூற்றுவது தப்பு. ஒரு படம் எடுப்பது எத்தனை பேரின் உழைப்பு. அதை மதிக்க தெரியாது.

சேரன் சொன்னது தவறானது. நீங்களோ, நானோ திருட்டு வீடியோ சிடி யாவாரமா பண்ணுறோம். தவமாய்த் தவமிருந்து, ஆட்டோகிராப் பார்க்க தியேட்டர் போனோமே.

அங்கே முள்ளிவாய்க்காலில் உயிர் விட்டவர்கள், திருட்டு வீடியோ சிடி யாவாரமா பண்ணீணார்களா?

ஒரு சிலர் செய்வது உண்மை என்றாலும், இங்கே தியேட்டரில் படம் பார்த்து பலர் தரும் பணம் பாக்கெற்றினும் வருகிறது என்பதும் உண்மைதானே.

அதில் மட்டும் அருவருப்பு இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, M.P said:

எத்தனை தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழ தமிழர்களுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்து இருக்கிறார்கள்? தீக்குளிப்புகள், ஏன போராடி வீரமரணமானார்கள

 ம் அது உன்மைதான் ஆனால் இந்தியாவை பொறுத்த வரையில் தமிழர்கள் உயிர்  என்றால்........  ம... ர் ஒன்று போனது போலவே அவர்கள் சாவுகளுக்கு ஏதாவது பதில் கிடைத்ததா எம். பி உன்மையில் திருட்டு வீசிடியை தயாரிப்பு செய்து விற்பனை செய்யவது பற்றி விசாரணை நடத்தினால் கன பேர் உள்ள போவார்கள் அதில் திரைஉலகில் பிரபலமானவர்கள் கூட அடங்கும் 

இந்தியாவில் அகதிகள் முகாம்களில் 115 முகாம் 12000 பேர் இன்னும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் இவர்களுக்கு ஏதாவது செய்கிறார்களா ஆனால் நல்லா வச்சி செய்றாங்கள் அவர்களை

ஈழதமிழர்களுக்கு இனி யாராவது அனுதாபபடவேண்டியதில்லை தமிழர்கள் இங்கு சிறைக்குள் வாழ்கிறார்கள் இல்லையென்றால் இந்த கண்டத்துக்கே விரலை விட்டு ஆட்டுவான் தமிழன் இவரெல்லாம் கதைக்கவே (சேரன்)அருகதை இல்லாதவர்கள் எம் பி

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதமுனி முனிவர்ஜீ இருவரின் கருத்துக்களை ஆமோதிக்கின்றேன்.

தீபம் தொலைக்காட்சியின் ஆரம்பகாலங்களில் விஜயகாந்தின் பேட்டியொன்று போனது அதை தேடித்திரிகின்றேன்.சேரனுக்கு இன்று பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் ரீதியான சவால்களை சமாளிக்க தேவையான பொறிமுறைகளை அணுகாமல்/வக்கில்லாமல், பொத்தம் பொதுவாக குறிபிட்ட இனத்தவரையும், அவர்களின் உணர்வோடும் இணைந்தவற்றை கொச்சைப்படுத்தி சேரன் பேசியது தவறு.

’நான் சொன்னதில் மாற்றமில்லை. விளக்கம் தேவையில்லை!’ - இயக்குநர் சேரன்

Untitled.png

நேற்று 'கன்னா பின்னா' என்கிற படத்தின் ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் சேரன் பேசிய பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. புதுமுக இயக்குநரான தியாவின் இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னதாக பேசிய ஜாகுவார் தங்கம் திருட்டு டிவிடி விற்பவனின் கைகளை உடைப்பேன் என பேசி அரங்கை சூடாக்கினார். அதன் பின்னர் பேச வந்த இயக்குநர் சேரன் முதலில் குழுவினைரை பாராட்டி பேசிவிட்டு இறுதியில் திருட்டு டிவிடி மற்றும் ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியிடுவது குறித்து பேசும்போது

" 'கபாலி' போன்ற படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகின்றதே தவிர மற்ற பட தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும். ஆன்லைனாக இருக்கட்டும்..ஆனால் அது முறையாக இருக்கவேண்டும். திருட்டுத்தனமாக இருக்க கூடாது.. பலரின் உழைப்பையும் தயாரிப்பாளரின் பணத்தையும் சுரண்டும் தீமைக்கு நாம் துணைபோக கூடாது. இது போன்ற படங்களை வெளியிடும் இணையதளங்களுக்கு மனசாட்சியே இல்லையா என்றே கேட்கத்தோன்றுகிறது. தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள்.. போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்து கொண்டிருக்கிறது . ஆனால் கண்டுகொள்ளவதில்லை .ஏனெனில் நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. ஏன்..  மத்திய மாநில அரசுகள் கூட இதைப்பற்றி கவலைப்படுவதில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.பல்வேறு இடங்களுக்கு சென்று போராடி இருக்கிறோம், பலவற்றை இழந்து போராடியிருக்கிறோம். ஆனால் அதை சார்ந்த சில நண்பர்கள்தான் இதை செய்கிறார்கள் என்கிற போது, ஏண்டா இதையெல்லாம் செய்தோம் என அருவருப்பாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது." என்றார். இந்தப்பேச்சுக்கு தற்போது கடும் சர்ச்சையாகியுள்ளது. சேரனின் இந்த கருத்துக்கு புலம் பெயர் ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது " இந்த விவகாரத்தில் எனக்கு கண்டனம் தெரிவிப்பவர்களெல்லாம் யார் என்றே தெரியவில்லை. என்னை தெரிந்தவர்களுக்கு நான் சொன்ன கருத்து புரியும். இதற்கு விளக்கம், பின்னர் அதற்கு விளக்கம் என்றெல்லாம் போய்க்கொண்டிருக்க விரும்பவில்லை. நான் பேசியது அப்படியே இருக்கட்டும், அது உண்மைதான்" என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/67641-cheran-about-his-controversy-talk-about-srilankan-tamils.art

  • கருத்துக்கள உறவுகள்

இவரை யாரோ சில ஈழத்து புலம் வாழ் பணக்காரார் ஏமாத்திப் போட்டினம் போல.அது தான் கத்துகிறார்...நிதி மோசடி தொடர்பாக மகள் பிணையில் வந்தார் என்று அண்மையில் எங்கோ செய்தியில் வாசிச்சன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.