Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் தந்த அழகிய வாழ்வு .....

Featured Replies

கைபேசியில் அலாரமாக இந்த அழகான பாடல் காற்றில் மிதந்து காதில் வருட இன்று என்னவோ காலையில் எழுந்திருக்க மனமில்லாமல் மிகவும் அசதியுடன் தன் அதிகாலை பணிகளை நினைத்தவாறே திரும்பி நேரத்தை பார்க்கின்றாள் வைதேகி. இன்னும் சிறிது நேரம் செல்ல எழும்பலாம் என்று நினைத்து திரும்பி படுக்கும் போது அவளின் மன ஓட்டம் 30 வருடங்களை பின்நோக்கி இழுத்துசெல்கின்றது.

என்ன அழகான ஒரு வாழ்க்கை! சிட்டுக்குருவிகளை போல் நண்பிகளுடன் சிறகடித்து எந்த கவலையும் இல்லாமல் பாடசாலை, மாலைநேர வகுப்பு  என்று இனிமையான காலங்கள். அந்த இனிமைக்காலத்தில்தான் தன்னோடு படித்த வாமனை சந்திக்க நேர்ந்தது. அவனின் அமைதியும் அறிவும் இவளை காதலில் விழவைத்தது. அதே போன்று வாமனும் வைதேகியின் அன்பான குணத்தாலும் அழகாலும் தைதேகி மேல் காதல் கொண்டான்.

இருவரது வீட்டிலும் தம் காதலை சொல்லவே அவர்களது பெற்றோர் முதலில் மறுத்தாலும் பின்பு அவர்கள் இருவரும் படித்து முடித்தபின்பு திருமணம் செய்து தரலாம் என்று கூறியதால் இருவரும் மிகவும் மகிழ்வுடன் தம் படிப்பை தொடர்ந்தார்கள்.

காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கரைந்து செல்ல படிப்பை முடித்த வாமன் கனடாவிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. வாமனுடன் கூடப்பிறந்தவர்கள் ஆண் சகோதரர்கள் அதனால் அவனின் பெற்றோருக்கு பெண்பிள்ளைகள் என்றால் மிகவும் விருப்பம். தான் கனடா பயணிக்கும் முன் நாட்டுப்பிரச்சனை காரணமா வைதேகியை தன் அம்மாவுடன் கொழும்பிற்கு சென்று அங்கே அவர்களுடன் இருக்கும்படி ஆலோசனை கூற அவளும் அவர்கள் கூடவே கொழும்பிற்கு சென்று வேலைக்கு செல்லத்தொடங்கினாள்.

பிரச்சனைகளுக்கு மத்தியில் ஊர் விட்டு ஊர் போய் பல இடங்களில் இடம் பெயர்ந்தநேரங்களில் அவளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து போனது. கொழும்பிற்கு வந்த பின்பு வைத்தியரிடம் சென்றபோது இடப்பெயர்வுகளின் போது அருந்திய தண்ணீரால் அவளுக்கு மஞ்சள் காமலை வந்துள்ளதாகவும் அதனால் அவளது ஈரல் சிறிதளவு பாதிப்படைந்திருப்பதாகவும் சொல்லியபோது உலகமே தலைகீழாக சுத்தியது.

இந்த விடயத்தை வாமனிடம் சொன்னபோது வாமனுக்கு உள்ளுக்குள் ஒரு வித பயம் ஏற்பட்டாலும் அதெல்லாம் இங்கு கனடா வந்தால் சரி செய்யலாம் பயப்பிடாமல் வருவதற்கு ஆயத்தங்களை செய்யும் படி வைதேகியிடம் கூறினான்.

ஒரு விதமாக வைதேகிக்கும் வாமனின் பெற்றோருக்கும் விசா கிடைத்து கனடாவிற்கு வந்து சேருகின்றார்கள்.  வாமன் வைதேகியின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வாமன் வைதேகி பலவித மனக்கோட்டைகளுடன் தங்கள் இல்லற வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றனர்.

திருமணம் முடிந்து மகிழ்வாக சென்ற அவர்கள் வாழ்வில் திரும்பவும் வைதேகிக்கு அடிக்கடி வயிற்றுவலி வர வைத்தியரை நாடியபோது தான் எடுத்து வரும் மாத்திரைகளுக்கு பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இப்படியே தொடர்ந்தால் ஈரல் பாதிப்படையும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள். அன்றிலிருந்து அவர் சாப்பாட்டில் உப்பு சேர்க்காமல் வைத்தியர்களின் அறிவுரைப்படி சாப்பிட்டு மருந்தும் எடுத்துவந்தாள் ஆனால் நாட்கள் செல்ல செல்ல வயிற்றுவலி அடிக்கடி வந்து பல முறை வைத்தியாலையில் அனுமதிக்கும் அளவிற்கு சென்றது.

வாமனோ எந்த வித முகச்சுழிப்பும் இல்லாமல் 10 வருடங்கள் வைத்தியசாலையும் வீடுமாக வைதேகியை கொண்டுதிரிந்தான். வைத்தியர்களோ வைதேகிக்கு ஈரல் மாற்றவேண்டும் என்றும் அவளுக்கு சரியாக பொருந்து ஈரல் கிடைக்கும் மட்டும் மருந்தால் காலத்தை போக்கிக்கொண்டு இருந்தார்கள். வைதேகி இருந்த அழகிற்கு தற்போது மெலிந்து கண்கள் உள்ளுக்குள் போய் ஆளை அடையாளம் காணமுடியாதளவிற்கு ஆகியிருந்தாள். இன்னும் 6 மாதத்திற்குள் அவளுக்கு பொருத்தமான ஈரல் கிடைக்காவிட்டால் அவளை காப்பாற்றுவது கடினம் என்றும் அத்துடன் தைதேகிக்கு முன்னால் 200 பேர் வரை ஈரல் மாற்று சிகிச்சகைக்காக காத்திருப்பதாகவும் வைத்தியர்கள் வாமனிடம் சொல்லிவிட்டார்கள். வாமனோ முடிந்தவரை எந்த மனக்கஸ்டத்தையும் வைதேகியிடம் காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் கவலையில் வாடிபோயிருந்தான். வாமனின் பெற்றோர் வைதேகியை மிகவும் அன்புடன் பாத்துக்கொண்டார்கள்.

திடீரென்று ஒரு நாள் காலையில் வைதியசாலையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு 22 வயது இளைஞன் வாகனவிபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டதாகவும் அவன் தனது உறுப்புக்களை தானம் செய்வதாக எழுதிவைத்திருப்பதாகவும் அவனது இரத்தவகை வைதேகிக்கு பொருந்துவதாகவும் அவனது ஈரலில் ஒரு பகுதியை வைதேகிக்கும் இன்னும் ஒரு பகுதியை 10 மாத குழந்தை ஒன்றுக்கும் மாற்று சிகிச்சை செய்யப்போவதான சொல்கின்றார்கள். வாமனுக்கும் அவனது பெற்றோருக்கும் அந்த தொலைபேசி அழைப்பு கடவுளை நேரில் கண்டது போன்று தோன்றியது.

அன்றே வைதேகியை அழைத்துகொண்டு வைத்தியசாலை செல்கின்றனர். மாற்று சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும் செய்து அறுவைச்சிகிச்சை 10 மணித்தியாளங்கள் நடைபெற்று வைதேகி சுகமடைந்தாள். வைதேகிக்கும் வாமனுக்கும் தமக்கு மீண்டும் வாழ்க்கை கிடைத்திருப்பதை நம்பமுடியவில்லை.

நான்கு வருடங்கள் உருண்டோடிவிட வாமனுக்கும் வைதேகிக்கும் அழகிய ஆண்குழந்தை பிறக்கின்றது. இப்போது அவர்கள் மகனுக்கு 9 வயதும் ஆகிவிட்டது.

வாமனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் வைதேகிக்கு வருத்தம் என்று வந்தபோது வைதேகி சுகமாக தன்னோடு இருந்தால் போதும் என்று மட்டுமே நினைத்திருந்தான். ஆனால் இரட்டிப்பு மகிழ்வாக குழந்தையும் சுகமே கிடைத்து அவர்களது வாழ்க்கை மீண்டும் பூத்துக்குலுங்கத்தொடங்கியது.

திரும்பவும் அலாரம் அடிக்கவே பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த வைதேகி தன் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த மகனை முத்தமிட்டு எழுபியவாறு தனக்கு மீள் வாழ்வு தந்த அந்த இறந்து போன இளைஞனை மனதில் நினைத்து நன்றி சொல்லியவாறே அவன் அன்று அவனது உடல் உறுப்புக்களை தானம் செய்யாதிருக்காவிட்டால் இன்று தானும் இல்லை தன் குழந்தையும் இல்லை எல்லாம் அவனது தாராள உள்ளமே என்று நினைத்தபடி அன்றய நாளை மகிழ்வுடன் ஆரம்பித்தாள்.

-இது கதையல்ல நிஜம்-

-முற்றும்-

நாம் இறந்தபின்பு யாருக்கும் பயன்படமால் போகும் எம் உடல் உறுப்புகளை நாம் உயிருடன் இருக்கும் போதே தானம் செய்ய விரும்பம் தெரிவித்தால் நாம் இறந்த பின்பு எம் உறுப்பால் பலர் உயிர் வாழ்வார்கள் என்பதற்கு தைதேகியின் வாழ்வே ஒரு உதாரணம். அந்த இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருந்தது. நாம் இறந்தபின்பு வைதேகி போன்று பலருக்கு அவர்களது வாழ்வு திருப்பிகிடைக்குமென்றால் நாம் நம் உடலை தீக்கும் மண்ணுக்கும் இரையாக்குவது ஏனோ?

  • கருத்துக்கள உறவுகள்

தங்கையும் களம் புகுந்தாச்சு

வாழ்த்துக்கள்

 கதை பற்றிய  விமர்சனம்  பின்னர் எழுதுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே எரித்தோ புதைத்தோ போவதைஇன்னும் பலருக்குப்பயன்படுத்தும் வகையில் செய்வது எவளவு நல்லது. நல்லதொரு கரு. வழிப்புணர்வுக்கானதும் கூட. அதைவிட ஒரு இசையும்கதையும் பாணியில், வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

 பாராட்டுக்கள் தமிழினி............நல்லதோர் விழிப்புணர்வுக் கதை .

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்துக்கள்.தொடருங்கள்.?

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையுமாக தந்து அசத்தியுள்ள தமிழினிக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அட இசையும் கதையும். இன்னுமொரு எழுத்தாளர் யாழுக்கு. வாழ்த்துக்கள் தமிழினி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி கதையால் எல்லோர் நெஞ்சங்களை தொட்டுச் சொல்வதுடன் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.ரொம்ப பாராட்டுக்கள்.பச்சசை நாளை.

  • கருத்துக்கள உறவுகள்

அருமை... தமிழினி. நல்லதொரு விழிப்புணர்வு கதையை.....
இசையும் கதையும் போல்... பாடல்களுடன் எழுதிய விதம் பிடித்திருந்தது. :)
ஒரே மூச்சில்... கதையை வாசித்து முடித்ததில், கதை எம்முடன் ஒன்றிப் போயிருந்தது. 
அதுதான்.... கதைக்கு கிடைத்த வெற்றி. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோ இன்னும் தொடரட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நன்றாக எழுதிஉள்ளீர்கள் சகோதரி....?

  • தொடங்கியவர்
22 hours ago, விசுகு said:

தங்கையும் களம் புகுந்தாச்சு

வாழ்த்துக்கள்

 கதை பற்றிய  விமர்சனம்  பின்னர் எழுதுகின்றேன்

20 hours ago, nochchi said:

உண்மையிலேயே எரித்தோ புதைத்தோ போவதைஇன்னும் பலருக்குப்பயன்படுத்தும் வகையில் செய்வது எவளவு நல்லது. நல்லதொரு கரு. வழிப்புணர்வுக்கானதும் கூட. அதைவிட ஒரு இசையும்கதையும் பாணியில், வாழ்த்துகள்.

19 hours ago, நிலாமதி said:

 பாராட்டுக்கள் தமிழினி............நல்லதோர் விழிப்புணர்வுக் கதை .

19 hours ago, யாயினி said:

நல்வாழ்துக்கள்.தொடருங்கள்.?

19 hours ago, Kavallur Kanmani said:

இசையும் கதையுமாக தந்து அசத்தியுள்ள தமிழினிக்கு பாராட்டுக்கள்

18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட இசையும் கதையும். இன்னுமொரு எழுத்தாளர் யாழுக்கு. வாழ்த்துக்கள் தமிழினி.

15 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழினி கதையால் எல்லோர் நெஞ்சங்களை தொட்டுச் சொல்வதுடன் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.ரொம்ப பாராட்டுக்கள்.பச்சசை நாளை.

13 hours ago, தமிழ் சிறி said:

அருமை... தமிழினி. நல்லதொரு விழிப்புணர்வு கதையை.....
இசையும் கதையும் போல்... பாடல்களுடன் எழுதிய விதம் பிடித்திருந்தது. :)
ஒரே மூச்சில்... கதையை வாசித்து முடித்ததில், கதை எம்முடன் ஒன்றிப் போயிருந்தது. 
அதுதான்.... கதைக்கு கிடைத்த வெற்றி. 

11 hours ago, முனிவர் ஜீ said:

வாழ்த்துக்கள் சகோ இன்னும் தொடரட்டும் 

8 hours ago, suvy said:

வாழ்த்துக்கள் நன்றாக எழுதிஉள்ளீர்கள் சகோதரி....?

நான் எழுதிய முதல் கதை இது.  என் கன்னி முயற்ச்சியை வரவேற்று வாழ்த்துகூறிய அனைவருக்கும் ஊக்கப்புள்ளிகள் வழங்கியவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினி,

கன்னி முயற்சியே நன்றாக உள்ளது தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன். 

வாழ்த்துக்கள் தமிழினி

நல்ல ஒரு விடயத்தை தொட்டு இருக்கிறீர்கள்.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

கருவுக்கும் கதைக்கும் 

முயற்ச்சிக்கும் நன்றி  சகோதரி..

நான் இன்றும் இது பற்றி  யோசித்தபடி தான்   உள்ளேன்

இறப்புக்கும் வாழ்வுக்குமான இறுதிப்போராட்டநிலையிலிருந்த 

சிலருடன் அவர்களது இறுதிக்கணம்வரை உடனிருக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன

அந்த நேரங்களில் இது அதிகமாக வலித்ததும் உண்டு

பாகங்கள் பழுதடைய முன் எடுக்கவேண்டும்  என்ற காரணத்தால்

கையெழுத்து வாங்குவதற்கு 

அவசரப்படுத்துவது போன்று குடும்பத்தினருக்கு வலித்ததுண்டு

அந்த நிமிடங்களை

கணங்களை  வார்த்தைகளால்  வர்ணித்துவிடமுடியாது

அதையே  நாமே கையெழுத்து வைத்து கொடுத்துவிட்டால்???

இருந்தாலும் தற்பொழுது பிரான்சில் சட்டப்படி 

அனுமதியின்றி  எடுக்கலாம் என்று சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

இதனால் பிரான்சிலேயே இவை தவறாக பயன்படுத்தப்படலாம் என்றநிலை

அப்படியாயின்  சமூக ஏற்றத்தாழ்வுள்ள நாடுகளில் ....????

நல்லதொரு விதையை  விதைத்த கரு

முயற்சி

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினி!!

தமிழ் இனி வளரும். :296_tulip: 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் இப்படியான கருத்துள்ள கதைகளை பதியுங்கள் இளவரசியாரே வாழ்த்துக்கள்  

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ..அதே வேளை...ஆழமான கருத்துள்ள ஒரு படைப்பு!

வாழ்த்துக்கள் தமிழினி!

தொடர்ந்தும் இணைந்திருங்கள்!

  • தொடங்கியவர்
19 hours ago, தமிழரசு said:

வாழ்த்துக்கள் தமிழினி,

கன்னி முயற்சியே நன்றாக உள்ளது தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன். 

19 hours ago, நவீனன் said:

வாழ்த்துக்கள் தமிழினி

நல்ல ஒரு விடயத்தை தொட்டு இருக்கிறீர்கள்.

18 hours ago, விசுகு said:

கருவுக்கும் கதைக்கும் 

முயற்ச்சிக்கும் நன்றி  சகோதரி..

நான் இன்றும் இது பற்றி  யோசித்தபடி தான்   உள்ளேன்

இறப்புக்கும் வாழ்வுக்குமான இறுதிப்போராட்டநிலையிலிருந்த 

சிலருடன் அவர்களது இறுதிக்கணம்வரை உடனிருக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன

அந்த நேரங்களில் இது அதிகமாக வலித்ததும் உண்டு

பாகங்கள் பழுதடைய முன் எடுக்கவேண்டும்  என்ற காரணத்தால்

கையெழுத்து வாங்குவதற்கு 

அவசரப்படுத்துவது போன்று குடும்பத்தினருக்கு வலித்ததுண்டு

அந்த நிமிடங்களை

கணங்களை  வார்த்தைகளால்  வர்ணித்துவிடமுடியாது

அதையே  நாமே கையெழுத்து வைத்து கொடுத்துவிட்டால்???

இருந்தாலும் தற்பொழுது பிரான்சில் சட்டப்படி 

அனுமதியின்றி  எடுக்கலாம் என்று சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

இதனால் பிரான்சிலேயே இவை தவறாக பயன்படுத்தப்படலாம் என்றநிலை

அப்படியாயின்  சமூக ஏற்றத்தாழ்வுள்ள நாடுகளில் ....????

நல்லதொரு விதையை  விதைத்த கரு

முயற்சி

பாராட்டுக்கள்.

17 hours ago, Paanch said:

வாழ்த்துக்கள் தமிழினி!!

தமிழ் இனி வளரும். :296_tulip: 

15 hours ago, வாத்தியார் said:

தொடர்ந்தும் இப்படியான கருத்துள்ள கதைகளை பதியுங்கள் இளவரசியாரே வாழ்த்துக்கள்  

15 hours ago, புங்கையூரன் said:

அருமையான ..அதே வேளை...ஆழமான கருத்துள்ள ஒரு படைப்பு!

வாழ்த்துக்கள் தமிழினி!

தொடர்ந்தும் இணைந்திருங்கள்!

வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்! யாழின் 19வது அகவைக்காக மட்டுமே எழுதிப்பார்த்தேன். இதற்கு முன் கதை எழுதிய அனுபவம் இல்லை இருந்தும் நான் எழுதியதை கதை என்று ஏற்றுக்கொண்டு என்னை உற்சாகப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழினி said:

வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்! யாழின் 19வது அகவைக்காக மட்டுமே எழுதிப்பார்த்தேன். இதற்கு முன் கதை எழுதிய அனுபவம் இல்லை இருந்தும் நான் எழுதியதை கதை என்று ஏற்றுக்கொண்டு என்னை உற்சாகப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!!

நாங்களும் அப்படித்தான் கதையென்ற பெயரில அடிச்சு விடுவதுதான் பிறகு கருத்து வந்த பிறகு அது கதையாகிவிடும் நீங்களும்  அடிச்சு விடுங்கோ என்ன  tw_blush:tw_blush:tw_blush:

  • தொடங்கியவர்
20 hours ago, முனிவர் ஜீ said:

நாங்களும் அப்படித்தான் கதையென்ற பெயரில அடிச்சு விடுவதுதான் பிறகு கருத்து வந்த பிறகு அது கதையாகிவிடும் நீங்களும்  அடிச்சு விடுங்கோ என்ன  tw_blush:tw_blush:tw_blush:

:):)

முதல் முயற்சியே சமூக பிரக்ஞையுடன் அமைந்து இருக்கு. பாராட்டுகள் தமிழினி. ஒரே வீட்டில் இரு எழுத்தாளர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

முதல் முயற்சியே சமூக பிரக்ஞையுடன் அமைந்து இருக்கு. பாராட்டுகள் தமிழினி. ஒரே வீட்டில் இரு எழுத்தாளர்கள்!

யாரப்பா அந்த மற்ற எழுத்தாளர்:unsure:

On 11/04/2017 at 3:30 AM, தமிழினி said:

நாம் இறந்தபின்பு யாருக்கும் பயன்படமால் போகும் எம் உடல் உறுப்புகளை நாம் உயிருடன் இருக்கும் போதே தானம் செய்ய விரும்பம் தெரிவித்தால் நாம் இறந்த பின்பு எம் உறுப்பால் பலர் உயிர் வாழ்வார்கள் என்பதற்கு தைதேகியின் வாழ்வே ஒரு உதாரணம். அந்த இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருந்தது. நாம் இறந்தபின்பு வைதேகி போன்று பலருக்கு அவர்களது வாழ்வு திருப்பிகிடைக்குமென்றால் நாம் நம் உடலை தீக்கும் மண்ணுக்கும் இரையாக்குவது ஏனோ?

......வாழ்த்துக்கள் தமிழினி உங்களது கன்னி முயற்சிக்கு

5 hours ago, putthan said:

யாரப்பா அந்த மற்ற எழுத்தாளர்:unsure:

Kavallur Kanmani

  • உறுப்பினர்
  •  
  • Kavallur Kanmani
  • கருத்துக்கள உறவுகள்
  • 297
  • 647 posts

கண்மணி அக்கா..:)

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

உடல் உறுப்புக்களைத் தானம் செய்வதனால் பலர் வாழ்க்கையை உயிர்ப்பிக்கலாம் என்ற கருத்தை ஆழமாகச் சொல்லும் தமிழினியின் முதலாவது கதை நன்றாக இருந்தது. ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.