Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Alternative said:

 எல்லா போராளிகளின் தியாகத்தையும் மதிக்கப் பழகுவோம்.

தியாகங்களை மட்டுமே.

  • Replies 66
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

சகோதரப் படுகொலைகளை எல்லா இயக்கங்களும் பாரபட்சமின்றி செய்தன என்பது உண்மைதான். ஆனால் உட்கொலைகளில் 80களில் முன்நின்றவை புளட்டும் ரெலோவும்தான்.

இது புலிகள் அமைபிதிற்குள் நடைபெறவில்லை என்பதே இதுவரையுலுமான எனது நம்பிக்கையும் அனுபவமும்.

ஏனெனில் புதிய புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளாக மீள் பரிமாணம் செய்யப்பட்ட போது, விதி முறையானது விரும்பாவிட்டால் வெளியேறலாம், அப்படி வெளியேறி வன்முறை  சார்ந்த மற்றும் வன்முறையற்ற  போராடக்கூடாது என்பது ஒன்று.

அதிலும் மேலாக, புலிகள் இராணுவ கட்டமைப்பையே கொண்டிருந்தது. இதனால் கட்டளைகள் மறுகேள்வியின்றி நிறைவேற்றப்பட்டது.

அப்படி இராணுவ ஒழுக்கம் தவறினால், இராணுவ நீதி பரிபாலிக்கப்பட்டது. 

1 hour ago, Kadancha said:

காத்தான் கருணை கொலைக்கும் அருணாவிடற்கு தண்டனை வழங்கப்பட்டது. புலிகளின் ராணுவ ஒழுக்கம் என்பது அமைப்பு விதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது.

"கந்தன் கருணை" படுகொலை அருணாவின் தலைமையில் நடந்திருந்தாலும் அவர் தனியாளாக அத்தனை தமிழ் இளைஞர்களையும் கொன்றொழித்திருக்கவில்லை. அந்தக் கொலைகளில் சம்பந்த பட்டவர்கள் ஏற்கனவே இவ்வகை கொலைகளிற்கு பழக்கப் பட்டவர்களே. அதற்கு முன் கிட்டு தலைமையில் புலிகள் பகிரங்கமாகவே சகோதரப் படுகொலைகளை செய்து சந்தியில் போட்டு உடல்களை எரித்த போது யாருமே தண்டிக்கப் படவில்லை. 
இப்போது அந்த தலைமை அதே வகை கோர முடிவைச் சந்தித்த பின்னர் தான் பலருக்கும் அதன் வலி புரியத் தொடங்கியிருக்கிறது. 

20 minutes ago, Kadancha said:

இது புலிகள் அமைபிதிற்குள் நடைபெறவில்லை என்பதே இதுவரையுலுமான எனது நம்பிக்கையும் அனுபவமும்.

உங்கள் நம்பிக்கை அப்படியே இருந்து விட்டு போகட்டும். அதனை இன்னும் கொஞ்சம் மெருகூட்டி எந்த இயக்கத்திலுமே உட்படுகொலை நடக்கவில்லை என்று நம்புவது மனதிற்கு நிம்மதி தரும். 
துணுக்காயில் இருந்த வதைமுகாமில் யாருடைய நகமும் பிடுங்கப் படவில்லை, சும்ம நகம் மட்டும் வெட்டி விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிமணி,தங்கத்துரையை தலைவர் காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால், சகோதர படுகொலைகள் நடக்காமல் இருந்திருந்தால்,பொன்னம்மான் போன்றோரை தலைவரே சுடாமல் இருந்திருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைத்திருக்கும்.

தான் மட்டுமே தலைவராய் இருக்கோணும். தான் மட்டும் தான் தமிழீழம் எடுத்து கொடுக்க  வேண்டும் என்ற அதீத பேராசை தான் மு.வாய்க்காலில் கொண்டு வந்து நிப்பாட்டியது.

ஆரம்பித்த புள்ளியிலேயே திரும்பவும் கொண்டு வந்து விட்டு விட்டு குடும்பத்தோடு சேர்த்து தானும் மறைந்து போனார்  எல்லா நாட்டுப் போராடங்களிலும் உட் கட்சி பூசல்கள்,காட்டிக் கொடுப்புகள் இருந்தது தான். ஆனால்  எங்கட போராடடம் தான் இப்ப்டிக் கேவலமாய் தோத்தது.

வரலாற்றில் இப்படி  ஒரு போராடடம் நடக்க கூடாது என்பதற்கு நாங்கள் தான் உதாரணம் 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

ஆர் என்ன நினைச்சாலும் இந்தியா தமிழீழம் எண்டதுக்கு அனுமதிக்காது எண்டுச்சினம்

தமிழீழம்  எண்டது இந்திய    பிராந்திய அரசியலுக்கு சரிப்பட்டு வராது எண்டுச்சினம்

ராஜீவ்காந்தியை போட்டதாலைதான் முள்ளிவாய்க்கால் முடிவு எண்டுச்சினம்

இந்த முடிவு எப்பவோ தெரியும்   எண்டெல்லாம் இஞ்சை கதைச்சுக்கொண்டு திரிஞ்சினம்....

அப்ப அதெல்லாம் பொய்யே  ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழினப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தகுதியில்லாத (தமிழக) நிலத்திலிருந்து அஞ்சலி செலுத்த எண்ணுகிறேன். களச் சூழல்கள் அங்கு இருப்போர்தாம் அறிவர். சிந்தனையிலும் அணுகுமுறையிலும் வேறுபட்டு போராளிக் குழுக்கள் தவறுகள் இழைத்திருக்கலாம். ஆனாலும் 'தன் பெண்டு தன் பிள்ளை' என்று மட்டுமே வாழாத அவர்கள் பேராண்மையைப் பாகுபாடின்றி வணங்குகிறேன்.

4 hours ago, ரதி said:

குட்டிமணி,தங்கத்துரையை தலைவர் காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால், சகோதர படுகொலைகள் நடக்காமல் இருந்திருந்தால்,பொன்னம்மான் போன்றோரை தலைவரே சுடாமல் இருந்திருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைத்திருக்கும்.

தான் மட்டுமே தலைவராய் இருக்கோணும். தான் மட்டும் தான் தமிழீழம் எடுத்து கொடுக்க  வேண்டும் என்ற அதீத பேராசை தான் மு.வாய்க்காலில் கொண்டு வந்து நிப்பாட்டியது.

ஆரம்பித்த புள்ளியிலேயே திரும்பவும் கொண்டு வந்து விட்டு விட்டு குடும்பத்தோடு சேர்த்து தானும் மறைந்து போனார்  எல்லா நாட்டுப் போராடங்களிலும் உட் கட்சி பூசல்கள்,காட்டிக் கொடுப்புகள் இருந்தது தான். ஆனால்  எங்கட போராடடம் தான் இப்ப்டிக் கேவலமாய் தோத்தது.

வரலாற்றில் இப்படி  ஒரு போராடடம் நடக்க கூடாது என்பதற்கு நாங்கள் தான் உதாரணம் 
 
பொன்னம்மான் நாவற்குழி படைமுகாம் தாக்குதல் முயற்சியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் வீரச்சாவடைநதார்.  குட்டிமணி தங்கத்துரையை தலைவர் காட்டிக்கொடுத்தார் என்று எங்கும் அறியவில்லை. 

-------------

கடந்த காலங்களை நிகழ்காலத்தில் இருந்து அணுகுவது என்பது ஒரு கற்பனை சார்ந்த அதிருப்தி நிலை.  சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒன்றாக இணைந்து ஒரு நாட்டை உருவாக்கியிருந்தால் இன்று தமிழர்களுக்கு என்று ஒரு பெரும் பலம்மிக்க தேசம் இருந்திருக்கும். வெள்ளைக்காரன் இலங்கை இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்தபோது தமிழகமும் தமிழீழமும் தனித்து செல்வது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். இயக்கங்கள் ஒன்றாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் மோதிக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் என இப்போது எண்ணுகின்றோம்.  ஒருவேளை மேதிக்கொள்ளாமல் ஒவ்வொரு இயக்கமும் என்னும் பலமாக வளர்ந்து பின்னர் மோதியிருந்தால் முப்பதாண்டுகால போராட்டம் பதினைந்து ஆண்டுகளில் முடிந்திருக்காலம். அப்போது ஒருவேளை இவ்வாறு எண்ணத் தோன்றும் காளான் மாதிரி முளைத்த இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் போராட்டம் தொடர்ந்திருக்கும் என்று. கடந்த கால தவறுகள் சார்ந்து எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் தமழீழம் என்ற ஒன்று கிடைத்திருக்காது 

சம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் இருந்த அரசியல் சூழல்., சமூக முரண்பாடுகள், இயக்கத் தலமைகள் எவ்வாறான காலகட்டத்தில் என்னமாதிரியான ஆழுமையுடன் வந்தார்கள். அவர்களை வழிநடத்தியவர்கள் என பல விசயங்களை அவதானிக்கவேண்டியுள்ளது.  கடந்த நாற்பதாண்டு காலத்தில் உலகச் சூழலே மாறிவிட்டது. இன்று மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் எமது சிந்தனை முறைகள் கற்பனைகள் அணுகுமுறைகள் பார்வைகள் அனைத்தும் மாறிவிட்டது. இப்போது நாம் சகோதர யுத்தத்தை அணுகும் முறை வேறாக இருக்கின்றது. 

சகோதர யுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் வேறு எங்கிருந்தும் வரவில்லை. எமதுசமூகத்தில் இருந்தே உருவானார்கள். நாமும் அதே சமூகத்தை சார்ந்தவர்களே. இன்று வாள்வெட்டில் ஈடுபடுகின்றவர்களும் அதே சமூகமே. இந்த சமூகத்தின் விடிவிற்காக நாற்பதாயிரம் பேர் உயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவ் எண்ணிக்கையை விட பல பத்துமடங்கான மக்கள் தாய்நிலத்தை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள். அகதி என்ற பேர்வையில் பொருளாதர விருத்திக்காக வெளியேறியவர்களே அதிகம். 

நேரடியக சுட்டுக்கொல்வதையே நாம் கொலை என்று அணுகுகின்றோம். கொலைக்கான பின்புலத்தில் நாமும் இருக்கின்றோம். அவற்றை உணராதவரை எதுவித முன்னேற்றமும் வரப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உங்களுக்கு வரலாறும் தெரியாது......

முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிற்பாட்ட காரணம்

1) அமைப்பின் நிர்வாகம் தலைவர் என்ற தனிமனித ஆளுமையை விட்டு மத்திய குழுவின் அதிகாரத்தின் கீழ் சென்றமை

2) உங்கட துரோகி அண்ணர்

On 5/6/2018 at 11:25 PM, valavan said:

ஆக சிங்களவர்களுக்கே ரயர் போட்டு தமிழர்களை கொளுத்தும் கலையை கற்பித்தவர்கள் நாங்களே என்று பெருமைப்படவேண்டிய தருணமிது...

83 கலவரத்தை மறந்து / மறைத்து விட்டீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கொலை செய்தார்கள். அது சகோதரப்படுகொலை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது.

அவ்வாறு சகோதர கொலைவெறி இச்சையினை புலிகள் கொண்டிருந்தார்களானால், புளொட், EPRLF, ஈரோஸ்  ஐ கொலை செய்து அகற்றியிருக்கலாம்.

இயக்கங்களுக்கிடையிலான போட்டியை வளர்த்தது கிந்தியா. புலிகள் இதத்திற்குள் அகப்படவில்லை. காரணம் புலிகள் தமது இயக்க இறைறமையினை ஒரு போதும் ஏனைய இயக்கங்கள் போன்று கிந்தியாவிடம் விட்டுக்கொடுக்கவில்லை.  

ஆயினும், ஹிந்தியா ஏதாவது ஓர் அல்லது சில இயக்கங்களை கூர்  தீட்டி ஏவி விடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படியே நடந்ததும் கூட. அப்படியான நிலையை எதிர்கொள்வதற்கு தம்மை தயார் படுத்தியிருந்தார்கள்.   

புலிகள் மட்டுமே அன்றய நிலையில் இராணுவ, அரசியல் மற்றும் சமூக புலனாய்வு அலகுகளை, எவ்வளவு சிறியதாயினும்,  அமைப்பு ரீதியாக கொண்டிருந்தது.  மற்றும் எலக்ட்ரானிக் ராணுவ தொடர்பாடல் வசதிகள்  தமது தேவைகள் மற்றும் கள நிலைமைக்ளிட்ற்கு ஏற்றவாறு புலிகளிடமீ மேலோங்கியிருந்தது.

இவையனைத்தும் மற்றும் ஏனைய ராணுவ அதிகரத்தை பிரயோகிக்கும் வசதிகளும் புலிகளிடம் களத்தில் புலிகளால் பரிசோதிக்கப்பட்ட நிலையில் இருந்தது என்பதை எவராவது மறுக்கமுடியுமா?   

பண்டிதர், காராட்டி ரவி மற்றும் போராளிகள் அச்சுவேலியில் கொல்லப்பட்ட பொது எடுக்கப்பட்ட ஆயுதங்கள்  அனைத்தும் புலிகளால் இறக்குமதி செய்யப்பட்டவை அல்லது சிங்கள ராணுவத்தில் இருந்து பறித்து எடுக்கப்பட்டவை.

அன்றைய நிலையில், பிரபாகரன் அவர்கள் அறிந்தோ அறியாமலோ புலிகளின் வளங்களுக்கும் இயலுமைக்கும் ஏற்ப ஓர் mobile warefare joint command தன்மையுள்ள ராணுவ அமைப்பை  உருவாக்கிவவிட்டிருந்தார். இதை பிரபாகரன் தனித்து நின்று உருவாகியிருப்பார் என்பது மிகவும் சந்தேகம்.

இதனால் தான் மிகவும் பெரிய சக்தியின் நிழல் இருந்துஇ கூட, டெலோவினால் தாக்கு பிடிக்க முடியாமல் போனது. தாஸ் குரூப் என்ற அமைப்பு டெலோவிடற்குள் இருந்ததே தவறு. அப்படி தாஸ் குரூப் இருந்திக்குமாயின் மிகவும்  கொடூரமாகவும், இரத்தக் களரியுடன் கணிசமான அளவு மார்ஜின் ஆல் புலிகள் டெலோவை அழித்திருப்பார்கள்.  

On 5/7/2018 at 9:23 AM, nunavilan said:

பாகுபாடு தேவையானது. இறுதிவரை புலிகளை அழித்தவர்களூக்கு உடந்தையானவர்கள் யார் என்பதை யாவரும் அறிவர். உங்களை வி.புலிகள் கேள்வி கேட்டார்கள் என்பதற்காக மற்றையவர்கள் உங்களின் கருத்துடன் உடன்பட வேண்டும் என்பது bull shit..

பாகுபாடு தேவையானது. இறுதிவரை புலிகளை அழித்தவர்களூக்கு உடந்தையானவர்கள் யார் என்பதை யாவரும் அறிவர். உங்களை வி.புலிகள் கேள்வி கேட்டார்கள் என்பதற்காக மற்றையவர்கள் உங்களின் கருத்துடன் உடன்பட வேண்டும் என்பது மூடத்தனமானது.

bull shit..

கடைசி சொட்டு இரத்தத்தை வன்னி மண்ணில் சிந்தி தமது இன்னுயிரை ஆகுதி ஆக்கியவர்கள் வி.புலிகள் என்பது உண்மையான வி.போராளிகளுக்கான அடையாளத்தை தந்துள்ளார்கள்.
அதே நேரம்  டக்ளஸ் தேவானந்தா, தொடக்கம் மிகுதியானவர்கள்  பற்றி உங்களின் கருத்து என்ன  எனபதை அறிய மிக்க ஆவல்.

யாழ் எங்கே போகுது ?? 

ஒரு நிர்வாக உறுப்பினரே  bull shit.. என்று வெட்கமில்லாமல் இவ்வாறான ஒரு வார்த்தையை ஒரு பொதுவெளியில் பாவிக்கின்றார். அதைப் பார்த்தும் பார்க்காமலும் ஒரு நிர்வாகம்

எக்கேடாவது கெட்டு தொலையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

83 கலவரத்தை மறந்து / மறைத்து விட்டீர்கள்

83 கலவரத்தில் தனது இனத்தை தானேயா கொளுத்தினான் சிங்களவன்?

தமிழீழவிடுதலைபோராட்டத்தில் புலிகளின் அர்ப்பணிப்பை,தியாகத்தை நாம் குறைகூறினாகூட உலகம் மட்டுமல்ல, சிங்களவர்கள்கூட அதை ஏற்கமாட்டார்கள்..தனது இனத்திற்காக அவர்கள் தம்மை ஆகுதியாக்கியது எத்தனை தலைமுறை கடந்தாலும் மறு விமர்சனங்களுக்கு இடமில்லாத ஒன்று...

ஆனால் எல்லாமே எம்மைவிட்டுபோனபின்பு, நாங்களும் தப்பு செய்தோமா என்பது எல்லோரும் திரும்பி பார்க்கவேண்டிய ஒன்று..

எமது இனத்திற்குள் நாம் செய்த அழிவுகளை ஒப்புக்கொள்ள முடியவில்லையென்றால்...

எதிரி இனம் எமக்கு செய்த அழிவை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களில்லை என்று எந்தவகையில் நாம் சர்வதேசத்தை அழுத்தம் கொடுக்கும்படி கோரிக்கை விடுக்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இப்படியே பளைய கதை பேசிக்கொன்டிருக்க ஊரில் தமிழ் மக்களை வலை போட்டு தேடவேண்டி வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

துரோகங்களுக்கும் தியாகங்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.. காக்கவன்னியனின் படத்துக்கும் மாலை அணிவிப்பார்கள். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா. 

உண்மையை உளமாரச் சொன்னால்.. இவர்களுக்கு அஞ்சலி செய்யனுன்னு ஒரு எண்ணமே உதிக்கவில்லை. அதற்கு காரணமும் அவர்களே. 

உலக போராட்ட வரலாறுகளின் வெற்றி தோல்வி பற்றிய.. முழு அறிவின்றி சிலர் முள்ளிவாய்க்கால்.. தோல்வி.. வெற்றின்னு கதைக்கினம். 

முள்ளிவாய்க்காலில் வெற்றின்னா.. பின்ன எதுக்கு இன்னும் சிங்களப் படை இருப்பும்.. சிங்கள இன இருப்பும்.. பெளத்த சின்னப் பெருக்கங்களும்.. தமிழர் நிலத்தில்.....???!

சிந்திக்க வக்கற்றவர்களால்.. வகையாக எதுவும் செய்ய முடியாது.. அதனால் வந்தது தான் தமிழர் போராட்டப் பின்னடைவுகள். இதற்கு முழுத்தமிழர்களும் பொறுப்பு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2018 at 10:35 AM, சண்டமாருதன் said:

பொன்னம்மான் நாவற்குழி படைமுகாம் தாக்குதல் முயற்சியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் வீரச்சாவடைநதார்.  குட்டிமணி தங்கத்துரையை தலைவர் காட்டிக்கொடுத்தார் என்று எங்கும் அறியவில்லை. 

-------------

அன்றைய காலகட்டத்தில் எனைய இயக்கங்கள் இப்படி பல கதைகளை உலாவ விட்டவையள்...மன்னார் விக்கடர்,தின்னவெளி செல்லக்கிளி இவர்களையும் அவரின்ட பிளானில் போட்டவையள் என பெரிய ரீல் விட்டவையள் 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎7‎/‎2018 at 12:10 PM, குமாரசாமி said:

ஆர் என்ன நினைச்சாலும் இந்தியா தமிழீழம் எண்டதுக்கு அனுமதிக்காது எண்டுச்சினம்

தமிழீழம்  எண்டது இந்திய    பிராந்திய அரசியலுக்கு சரிப்பட்டு வராது எண்டுச்சினம்

ராஜீவ்காந்தியை போட்டதாலைதான் முள்ளிவாய்க்கால் முடிவு எண்டுச்சினம்

இந்த முடிவு எப்பவோ தெரியும்   எண்டெல்லாம் இஞ்சை கதைச்சுக்கொண்டு திரிஞ்சினம்....

அப்ப அதெல்லாம் பொய்யே  ?

அண்ணா,, குட்டிமணி,தங்கத்துரை இருந்திருந்தால் கருணாநிதியின் சப்போட் எப்போதும் இருந்து இருக்கும்,

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎7‎/‎2018 at 1:35 PM, சண்டமாருதன் said:

பொன்னம்மான் நாவற்குழி படைமுகாம் தாக்குதல் முயற்சியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் வீரச்சாவடைநதார்.  குட்டிமணி தங்கத்துரையை தலைவர் காட்டிக்கொடுத்தார் என்று எங்கும் அறியவில்லை. 

-------------

கடந்த காலங்களை நிகழ்காலத்தில் இருந்து அணுகுவது என்பது ஒரு கற்பனை சார்ந்த அதிருப்தி நிலை.  சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒன்றாக இணைந்து ஒரு நாட்டை உருவாக்கியிருந்தால் இன்று தமிழர்களுக்கு என்று ஒரு பெரும் பலம்மிக்க தேசம் இருந்திருக்கும். வெள்ளைக்காரன் இலங்கை இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்தபோது தமிழகமும் தமிழீழமும் தனித்து செல்வது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். இயக்கங்கள் ஒன்றாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் மோதிக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் என இப்போது எண்ணுகின்றோம்.  ஒருவேளை மேதிக்கொள்ளாமல் ஒவ்வொரு இயக்கமும் என்னும் பலமாக வளர்ந்து பின்னர் மோதியிருந்தால் முப்பதாண்டுகால போராட்டம் பதினைந்து ஆண்டுகளில் முடிந்திருக்காலம். அப்போது ஒருவேளை இவ்வாறு எண்ணத் தோன்றும் காளான் மாதிரி முளைத்த இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் போராட்டம் தொடர்ந்திருக்கும் என்று. கடந்த கால தவறுகள் சார்ந்து எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் தமழீழம் என்ற ஒன்று கிடைத்திருக்காது 

சம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் இருந்த அரசியல் சூழல்., சமூக முரண்பாடுகள், இயக்கத் தலமைகள் எவ்வாறான காலகட்டத்தில் என்னமாதிரியான ஆழுமையுடன் வந்தார்கள். அவர்களை வழிநடத்தியவர்கள் என பல விசயங்களை அவதானிக்கவேண்டியுள்ளது.  கடந்த நாற்பதாண்டு காலத்தில் உலகச் சூழலே மாறிவிட்டது. இன்று மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் எமது சிந்தனை முறைகள் கற்பனைகள் அணுகுமுறைகள் பார்வைகள் அனைத்தும் மாறிவிட்டது. இப்போது நாம் சகோதர யுத்தத்தை அணுகும் முறை வேறாக இருக்கின்றது. 

சகோதர யுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் வேறு எங்கிருந்தும் வரவில்லை. எமதுசமூகத்தில் இருந்தே உருவானார்கள். நாமும் அதே சமூகத்தை சார்ந்தவர்களே. இன்று வாள்வெட்டில் ஈடுபடுகின்றவர்களும் அதே சமூகமே. இந்த சமூகத்தின் விடிவிற்காக நாற்பதாயிரம் பேர் உயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவ் எண்ணிக்கையை விட பல பத்துமடங்கான மக்கள் தாய்நிலத்தை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள். அகதி என்ற பேர்வையில் பொருளாதர விருத்திக்காக வெளியேறியவர்களே அதிகம். 

நேரடியக சுட்டுக்கொல்வதையே நாம் கொலை என்று அணுகுகின்றோம். கொலைக்கான பின்புலத்தில் நாமும் இருக்கின்றோம். அவற்றை உணராதவரை எதுவித முன்னேற்றமும் வரப்போவதில்லை. 

சுகன், முதலில் மன்னிக்கவும்  தலைவர் சுட்டது
 செல்லக்கிளியை.....குட்டிமணி பற்றி நீங்கள் கேள்விப் படவில்லை என்பதால் அது உண்மைi இல்லை என்றாகி விடாது அல்லவா?....அவர்கள் அந்த இடத்தில் அங்கருந்த்து  அந்த நேரம் தப்பி இந்தியா போகிறார்கள் என்பதை தெரிந்த ஒரேஆள்  தலைவர் மட்டும் தான்  

இயக்கங்களின் கொலைக்கான பின்னனியை ஆராய வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள்.அது புலிக்கு மட்டும் இருக்காது என்று நிலைக்கிறேன் ...நீங்கள் 40000 மாவீரர்கள் என்று சொல்லியுள்ளியிர்கள்...மற்ற இயக்கங்களில் இருந்து போராடப் போய் அநியாயமாய் சகோதர யுத்தத்தில் கொல்லப்படடவர்கள் மாவீரர்கள் இல்லையா?... அவர்களது உயிர் உயிரியில்லையா?....தலைவர்கள் செய்த பிழையினால் மாண்டது அப்பாவிகள் தான் என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை ?
 
On ‎5‎/‎7‎/‎2018 at 1:47 PM, MEERA said:

உங்களுக்கு வரலாறும் தெரியாது......

முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிற்பாட்ட காரணம்

1) அமைப்பின் நிர்வாகம் தலைவர் என்ற தனிமனித ஆளுமையை விட்டு மத்திய குழுவின் அதிகாரத்தின் கீழ் சென்றமை

2) உங்கட துரோகி அண்ணர்

83 கலவரத்தை மறந்து / மறைத்து விட்டீர்கள்

மீரா,சரியாய் சொன்னிங்கள். எப்படிப் பார்த்தாலும் யார்ல பிழை ?...தலைவர் ஒழுங்காய் இல்லா விடடால் அப்படித் தான்....பதவிப் போட்டி தான் காரணம்.... மாத்தையா உட்பட  சிலரை சதி திட்டம் தீட்டி மண்டையில் போடட  மாதிரி கருணாவையும் போடலாம் என்று தலைவருக்கு தெரியாமல் சதி திடடம் போட்டிச்சினம்.... அது ஒரு அமைப்பு ,போராட்ட்ம் எல்லாத்தையும் அழித்து விடடது ...மேலே சுகன் எழுதி இருக்கிறார் பின்னனியை ஆராய சொல்லி போய் ஆராயுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே பிடுங்க்ப்பிடுங்கோ.வெக விரைவில் முனா கையில் முதல் வட கிழக்கு பின் முழு இலங்கையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரதி said:

அண்ணா,, குட்டிமணி,தங்கத்துரை இருந்திருந்தால் கருணாநிதியின் சப்போட் எப்போதும் இருந்து இருக்கும்,

யாருக்கு சப்போட் இருந்திருக்கும்?  

ஏன் இந்த சப்போட்டுக்கு என்ன குறை??

karuna_fast

7 hours ago, ரதி said:

சுகன், முதலில் மன்னிக்கவும்  தலைவர் சுட்டது
 செல்லக்கிளியை.....குட்டிமணி பற்றி நீங்கள் கேள்விப் படவில்லை என்பதால் அது உண்மைi இல்லை என்றாகி விடாது அல்லவா?....அவர்கள் அந்த இடத்தில் அங்கருந்த்து  அந்த நேரம் தப்பி இந்தியா போகிறார்கள் என்பதை தெரிந்த ஒரேஆள்  தலைவர் மட்டும் தான்  

இயக்கங்களின் கொலைக்கான பின்னனியை ஆராய வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள்.அது புலிக்கு மட்டும் இருக்காது என்று நிலைக்கிறேன் ...நீங்கள் 40000 மாவீரர்கள் என்று சொல்லியுள்ளியிர்கள்...மற்ற இயக்கங்களில் இருந்து போராடப் போய் அநியாயமாய் சகோதர யுத்தத்தில் கொல்லப்படடவர்கள் மாவீரர்கள் இல்லையா?... அவர்களது உயிர் உயிரியில்லையா?....தலைவர்கள் செய்த பிழையினால் மாண்டது அப்பாவிகள் தான் என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை ? 

On 5/9/2018 at 4:48 AM, putthan said:

அன்றைய காலகட்டத்தில் எனைய இயக்கங்கள் இப்படி பல கதைகளை உலாவ விட்டவையள்...மன்னார் விக்கடர்,தின்னவெளி செல்லக்கிளி இவர்களையும் அவரின்ட பிளானில் போட்டவையள் என பெரிய ரீல் விட்டவையள் 

ரதி உங்கள் பதிலுக்கு நன்றி..

மேலே புத்தன் கூறியது போல் அக்காலகட்டத்தில் இப்படியான கதைகள் மிகப் பிரபலமாகக் கட்டிவிடப்பட்டது. இதற்காக ஒரு வானொலி சேவையே நடந்தது. மக்களை குழப்புவது.. இயக்கங்கள் மீதான நம்பிக்கையை சிதைப்பது என இந்திய உளவுத்துறை ஆதரவுடன் இந்த பிரச்சாரம் நடந்தது. அதனால் நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை. 

  இயக்கங்கள் மோதிக்கொண்டது சகோதரக் கொலைகளும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி பிரபாகரன் தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியராக முடியாது. இயக்கங்களின் ஆரம்ப காலங்களில் வங்கியை கொள்ளையிட்டு அதில் வரும் நிதியை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என்ற நிலையில் நடந்த முறைகேடுகளே சகோதரப் படுகொலைக்கு வித்திட்டது. இரண்டாவது இயக்கங்களில் இணைந்த பெண்பிள்ளைகள் மீதான துஸ்பிரயோகம். முறையே இவை ரெலோ மற்றும் புளட் உடன் சம்மந்தப்பட்டது. மேலும் முக்கியமாக இயக்கங்கள் இந்திய அரசின் பிடிக்குள் இருந்தது. 

இதன் நீட்சியாகவே புலிகள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் பெண்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை. பின்னர் இயக்க கோட்பாட்டை மீறிய பாலியல் சார்ந்த பிரச்சனைகளில் ஈடுபட்ட புலிகளுக்கு அவ்வியக்கத்தில் மரணதண்டனை வழங்கப்பட்டது.. நிதிமோசடியில் ஈடுபட்டாலும் மரணதண்டனை வழங்கப்பட்டது. இவை அனைவருக்கும் தெரியும் வகையிலே வழங்கப்பட்டது.  காலப்போக்கில் இத் தண்டனைகள் தவிர்க்கப்பட்டது.  இன்றய காலத்திலும் காதலர்கள் ஒன்றாக  யாழில் எங்கோ ஒரு இடத்தில் உலாவினால்,  சைக்கிளில் உலாவினால்,  கலாச்சாரம் சீர்கெடுகின்றது என்று ஒப்பாரிவைக்கின்ற நிலமைதான். இக்களத்திலேயே ஏராளமான கருத்தாடல்கள் நடந்துள்ளது. ஆண் பெண் உறவு குறித்த எமது சமூகத்தின் பார்வை என்ன அதன் பின்னணியில் உள்ள சாதீய இறுக்கம் என்ன என்ற நிறைய விசயங்களை புரிந்துகொள்ளாமல் புலிகள் வழங்கிய தண்டனையை புரிந்துகொள்ள முடியாது.  அதேபோல தான் புகைததல் மதுபானம் அருந்தக் கூடாது என்பதானாலும் சரி நிதிமோசடிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதானாலும் சரி. இவைகளில் இலகுப்போக்கு புலிகளிடத்தில் இருந்திருநதால் எங்கள் சமூகத்தில் புலிகள் வளர்ந்திருக்க சாத்தியமே இல்லை. ஒன்றில் இயக்கங்கள் வாயிலாக எமது சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டும்  அல்லது எமது சமூகத்தின் ஊடாக இயக்கங்களை புரிந்துகொள்ளவேண்டும். மூன்றாம் நபராக நம் வெளியில் நின்று இவற்றை அணுகி பிரயோசனமில்லை. 

தாயக விடுதலைக்காய் மடிந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதில் எந்த தடையும் தவறும் இல்லை.  தலைவர்கள் தவறு செய்தார்கள் என்றால் அவர்களுக்கு பின்னால் இந்த சமூகம் பல பத்து கூறுகளாக உள்ளது. அதில் சிலதில் நானும் நீங்களும் கண்டிப்பாக இருப்போம். சாதி மத பிரதேசவாத முரண்பாடுகள் நிறைந்த அதே நேரம் சிங்கள இந்திய அடக்குமுறைக்கு உட்பட்ட எமது சமூகத்தின் இயங்குநிலையின், எதிர்வினையின் கருவிகளே தலைவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சி பெரும்பாலும் அண்ணரின் வெளியுறவு செயலாளராக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

.....................
கூட நின்று பிரபாகரனுக்கு 
துவக்கு துடைத்தவர்கள் வரலாறு வாசித்து 
தேகம் புல்லரித்து போகிறது.

சிறியருக்கு ஈழ யோசனை இருந்து இருந்தால் ......
நாட்டுக்கு ஏதும் நல்லது நடந்து இருக்குமோ என்னமோ 
எனது வாழ்வு நன்றாக குறிப்பிட்ட காலம் இருந்து இருக்கும். 

2 hours ago, Maruthankerny said:

.....................
கூட நின்று பிரபாகரனுக்கு 
துவக்கு துடைத்தவர்கள் வரலாறு வாசித்து 
தேகம் புல்லரித்து போகிறது.

சிறியருக்கு ஈழ யோசனை இருந்து இருந்தால் ......
நாட்டுக்கு ஏதும் நல்லது நடந்து இருக்குமோ என்னமோ 
எனது வாழ்வு நன்றாக குறிப்பிட்ட காலம் இருந்து இருக்கும். 

நளினியுடன் இருந்த காலத்தில் கொஞ்சத்தையாவது பொபி-தாஸ் பிரச்சனையில் தலையிட்டு இருந்தால், புலிகள் இதில் தலையிடவேண்டி வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

இப்படியே பிடுங்க்ப்பிடுங்கோ.வெக விரைவில் முனா கையில் முதல் வட கிழக்கு பின் முழு இலங்கையும்.

 அப்படி ஒரு நிலை வ‌ந்தால் பெளத்தம் சைவம் கிறிஸ்தவம் அழிந்து தமிழ் மொழி வாழும்..முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசுவார்கள் ...சிங்களத்தை ஒதுக்கி தமிழ்மொழியை பேசக்கூடும் ....

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சண்டமாருதன் said:

ரதி உங்கள் பதிலுக்கு நன்றி..

மேலே புத்தன் கூறியது போல் அக்காலகட்டத்தில் இப்படியான கதைகள் மிகப் பிரபலமாகக் கட்டிவிடப்பட்டது. இதற்காக ஒரு வானொலி சேவையே நடந்தது. மக்களை குழப்புவது.. இயக்கங்கள் மீதான நம்பிக்கையை சிதைப்பது என இந்திய உளவுத்துறை ஆதரவுடன் இந்த பிரச்சாரம் நடந்தது. அதனால் நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை. 

  இயக்கங்கள் மோதிக்கொண்டது சகோதரக் கொலைகளும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி பிரபாகரன் தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியராக முடியாது. இயக்கங்களின் ஆரம்ப காலங்களில் வங்கியை கொள்ளையிட்டு அதில் வரும் நிதியை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என்ற நிலையில் நடந்த முறைகேடுகளே சகோதரப் படுகொலைக்கு வித்திட்டது. இரண்டாவது இயக்கங்களில் இணைந்த பெண்பிள்ளைகள் மீதான துஸ்பிரயோகம். முறையே இவை ரெலோ மற்றும் புளட் உடன் சம்மந்தப்பட்டது. மேலும் முக்கியமாக இயக்கங்கள் இந்திய அரசின் பிடிக்குள் இருந்தது. 

இதன் நீட்சியாகவே புலிகள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் பெண்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை. பின்னர் இயக்க கோட்பாட்டை மீறிய பாலியல் சார்ந்த பிரச்சனைகளில் ஈடுபட்ட புலிகளுக்கு அவ்வியக்கத்தில் மரணதண்டனை வழங்கப்பட்டது.. நிதிமோசடியில் ஈடுபட்டாலும் மரணதண்டனை வழங்கப்பட்டது. இவை அனைவருக்கும் தெரியும் வகையிலே வழங்கப்பட்டது.  காலப்போக்கில் இத் தண்டனைகள் தவிர்க்கப்பட்டது.  இன்றய காலத்திலும் காதலர்கள் ஒன்றாக  யாழில் எங்கோ ஒரு இடத்தில் உலாவினால்,  சைக்கிளில் உலாவினால்,  கலாச்சாரம் சீர்கெடுகின்றது என்று ஒப்பாரிவைக்கின்ற நிலமைதான். இக்களத்திலேயே ஏராளமான கருத்தாடல்கள் நடந்துள்ளது. ஆண் பெண் உறவு குறித்த எமது சமூகத்தின் பார்வை என்ன அதன் பின்னணியில் உள்ள சாதீய இறுக்கம் என்ன என்ற நிறைய விசயங்களை புரிந்துகொள்ளாமல் புலிகள் வழங்கிய தண்டனையை புரிந்துகொள்ள முடியாது.  அதேபோல தான் புகைததல் மதுபானம் அருந்தக் கூடாது என்பதானாலும் சரி நிதிமோசடிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதானாலும் சரி. இவைகளில் இலகுப்போக்கு புலிகளிடத்தில் இருந்திருநதால் எங்கள் சமூகத்தில் புலிகள் வளர்ந்திருக்க சாத்தியமே இல்லை. ஒன்றில் இயக்கங்கள் வாயிலாக எமது சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டும்  அல்லது எமது சமூகத்தின் ஊடாக இயக்கங்களை புரிந்துகொள்ளவேண்டும். மூன்றாம் நபராக நம் வெளியில் நின்று இவற்றை அணுகி பிரயோசனமில்லை. 

தாயக விடுதலைக்காய் மடிந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதில் எந்த தடையும் தவறும் இல்லை.  தலைவர்கள் தவறு செய்தார்கள் என்றால் அவர்களுக்கு பின்னால் இந்த சமூகம் பல பத்து கூறுகளாக உள்ளது. அதில் சிலதில் நானும் நீங்களும் கண்டிப்பாக இருப்போம். சாதி மத பிரதேசவாத முரண்பாடுகள் நிறைந்த அதே நேரம் சிங்கள இந்திய அடக்குமுறைக்கு உட்பட்ட எமது சமூகத்தின் இயங்குநிலையின், எதிர்வினையின் கருவிகளே தலைவர்கள்.

சுகன்,நீங்கள் நியாயமாக கருத்து எழுதுவீர்கள் என்று நினைத்தேன்....நான் எல்லாப் படுகொலைக்கும் ,சகோதர யுத்தத்திற்கும் புலிகளும்,தலைவரும் மட்டும் தான் காரணம் என்று எங்குமே எழுதியதில்லை.

சிறி சபாரத்தினத்தினத்தை புலிகள்  கொலை செய்ததை ஓரளவு மன்னிக்கலாம்....அவரை புலிகள் சுடாட்டில் அவர் புலியை அழித்திருக்க கூடும் ...அந்த நேரத்தில் லங்கா புவத் உட்பட பல பலரும் வதந்தீகளை பரப்பிக் கொண்டு இருந்தனர் . இப்பவும்  பரப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்....ஆனால் குட்டிமணி விடயத்தில்  தலைவரில் தான் முழுப் பிழையும்... இது பற்றி நான் மேலும் எழுத விருப்பமில்லை...மேலே பகலவன் சிறி சபா, நளினியை வைத்திருந்தவர் என எழுதி இருக்கிறார் அதற்கு ஆதாரம் இருக்கா?....புலிகளை பற்றியோ அல்லது தலைவரைப் பற்றியோ ஏதாவது கதைத்தால் .அது வதந்தி ஆனால் மற்றவர்களை பற்றிக் கதைத்தால் அது உண்மை

கருணா மடடக்களப்பான்.பிரதேசவாதம் கதைக்கிறார். துரோகி எண்டால் பதுமனும் அப்படியா?
ஏன் சூசை அண்ணா குடும்பத்தோட தப்பி ஓட வெளிக்கிடடவர்?
எப்படி அதிக வெறுப்பு கூடாதோ அதே மாதிரி அதீத நம்பிக்கையும் கூடாது

மற்ற இயக்கங்களை விட கட்டுக் கோப்பான இயக்கமாக  புலிகள் இருந்தார்கள்...அவர்களது தியாகங்களை நான் மதிக்கிறேன்.. அதற்காக அவர்கள் செய்தது எல்லாம் சரி என்றாகி விடாது .எங்களுக்கு ஒரு  நாடு வேண்டும் என்பதற்காக .அநியாயமாய் உயிர் நீத்தவர்களை மறக்கக் கூடாது....ஆனால் புலிகள்  30 வருடம் போராடி,அவ்வளவு உயிர்கள் மாண்டும்  கண்ட பலன் என்ன?...மற்ற இயக்கங்கள் போல சிக்கிரமாய் அழிந்திருந்தால் அரைவாசி உயிராவது மிகச்சமாயிருக்கும்.

உங்களோடு உரையாடியதில் மகிழ்சசி....நன்றி ,வணக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.