Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்கு எதற்கு அரசியல் கட்டமைப்பு???? ஆண்கள் மனதிலும் பெண்கள் மனதிலும் தெளிவு வேண்டும்.

எப்படியான தெளிவு....எந்த விதத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

  • Replies 85
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது.
குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர  எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா.
இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். 
எதுக்கு இந்த வேல ...
நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 உதாரணம் 
தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள்.
யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு.
தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு 
லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு 
உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ...
எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்??

எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். 
மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, Sasi_varnam said:

அக்காவின்... மனநிலை, எனக்கு  எப்பவோ.. தெரியும். ?
இதுக்குத் தான்.... நான் இந்தப் பக்கம், கருத்து எழுவதில்லை. :110_writing_hand:
விளக்கமாக எழுதியமைக்கு....  நன்றி,  சசி வர்ணம். ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிலாமதி said:

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

உண்மையான கருத்து நிலாக்கா!

பெண்ணடிமைத்தனம் எம்மிடம் இருந்ததில்லை!

பெண்ணை அர்த்த நாரீஸ்வரியாக்கி ...அழகு படுத்தியது....எமது மதம்!

ஏன் உங்கள் மதம் கூட அவளை அன்னை வடிவாக்கி ....உயரத்தில் வைத்தது!

தனது சமூகத்தின் கண்ணியத்தையே..எமது சமூகம் பெண்ணில் தான் வைத்தது!

அதனால் தான்...பெண்ணை...அண்ணனும், தம்பியும், அப்பாவும்...அம்மாவும்...அத்தானும் கூடப் பொத்தி வளர்த்தார்கள்!

அந்தப் பொத்தலில்....கொடுமையோ....வன்மமோ இருக்கவில்லை! அன்பும்..அணைப்பும் தான் இருந்தது!

எத்தனை...அண்ணாக்கள், அப்பாக்கள், தம்பிகள்,..தங்கள் வாழ்க்கைகளைக் கருக்கியும், சுருக்கியும்,,தங்கள் தன்கைகளுக்காக, மகள்களுக்காக, அக்காக்களுக்காக..உழைத்திருக்கிறார்கள்?

தலையில்...மயிர் கொட்டத் தொடங்கிய பிறகு தான்...அண்ணா.... திருமணம் செய்கிறான்!

காலம்...காலமாகத் தங்கையைப் பொத்தி வளர்த்தவன்...அதே கவனத்தால் தான்...வந்த துணையையும் பொத்தி வைக்க முனைகிறான்!

ஏனெனில்....வெளியுலகம்...அப்படி!

ஆனால்...வெளியுலகம் பாதுகாப்பானது என...அவன் கருதுகையில்...தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்துகிறான்!

அது தான்....இப்போது நடக்கின்றது!

ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்!

அண்மையில்...நிழலி ஓரிடத்தில் எழுதிய...ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

அது அன்னையர் தினத்தன்று எழுதியது...!

மனைவிகளை...அன்னையராகக்கிய தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்!

எனவே....அவன்...அவள்..என்ற வேறு பாடின்றி...நாம்.....நமது குடும்பம்...என்ற மனநிலையில் பயணிப்போமே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லா இடங்களிலும் அண்ணாக்கள்;தம்பிகள் மற்றும் பெரியவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது...எல்லாவற்றையும் விபரிக்கவும் இயலாது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/16/2018 at 11:57 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எப்பவும் உதே வசனத்தைச் சொல்லி பெண்களைப் பயப்பிடுத்தி வைக்கிறதே இவையின்ர வேலையாப் போச்சு. சேலை கட்டினால்த்தானே சேலை சேதமாகும். டெனிம் போட்டால் ஒண்டும் ஆகாது?

நான் சேலை என்று குறிப்பிட்ட து  சேலையை அல்ல பெண்ணை 

டெனிம் போடலாம் ஆத்திர அவசரத்துக்கு கழட்ட என்ன கஸ்ரம் எல்லா இடமும் இழுத்து பிடிச்சு கவ்விக்கொண்டு இருக்கிற பீலிங் எனக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுதந்திரம் தாண்டி .......
எமது சொந்த வாழ்வு என்று வரும்போது   யாராகினும் அதை அனுபவித்து விடுங்கள் 
மற்றவரையும் அனுபவிக்க விடுங்கள்.
இந்த முடிவே இல்லாத பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறு புள்ளியான 
பூமியில் எப்படி தோன்றினோம் என்று தெரியவில்லை ... இறந்த பின்பு 
எங்கு போவோம் என்றும்  புரியவில்லை. இடையில் இப்போது இருக்கிறோம் 
இதுதான் நிஜம்.

ஆரம்பம் குழந்தை பருவம் 
தாய் தந்தையரை பின்தொடர்ந்தோம் 

இறுதிக்காலம் நோய் நொடி வழியே பின்தொடர்வோம் 

இடைக்காலம் என்றால் 20-65 வயதுவரை உழைக்கும் காலம் 
முன்னேறுவது ......பின்னேறுவது ... கல்வி .... திருமணம் 
குழந்தை வளர்ப்பு .... குழந்தைகளின் கல்வி ... அவர்களின் திருணம் 
இந்த அவசர அஞ்சல் ஓடத்துக்குள்தான் எமது வாழ்வையும் பார்த்து கொள்ள வேண்டும்.
65 வயதில் உடலில் போதுமான சக்தி இருக்காது ....... கேக் இருக்கும் பழம் இருக்கும் ... கூடவே உடலில் சுகர் இருக்கும்  உண்ண முடியாது. 

சமூக கடடமைப்பை எளிதாக உத்தர முடியாது 
எமக்கு பாதுகாப்பு அரணும் அதுதான் .... ஆனாலும் 
அது கால காலத்து மூட நம்பிக்கைகளையும் தன்னோடு கொண்டிருக்கும்.
எதை எடுப்பது ... எதை விடுவது என்பதில் சொந்த அறிவு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு மனிதனின் வாழ்வானது நான்கு கால்களில் தொடங்கி.இரண்டு காலில் நடந்து.முன்று காலில்(ஊன்று கோல்)நடந்து முடிக்கும் கால அளவு தானாம் யமேக்காவில் மருத்துவ ஆய்வு ஒன்றின் முலம் கண்டு பிடித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவை எல்லாம் எந்த யுகத்தில இருக்கினம். இப்ப பொம்பிளையள்.. அவை அவை இஸ்டத்துக்கு கொலிடே போகினம்.. என்ஜாய் பண்ணினம்.. வருகினம்.. உது இப்ப சர்வ சாதாரணம்.

ஆம்பிளையளும்.. இப்ப இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.. காரணம்.. அவைக்கும் வீட்டில ஒரு நிம்மதி.. ஆறுதல்.. அவைட இஸ்டத்துக்கும் எதையாச்சும்.. அந்த காப்பில செய்யலாம். 

ஆக.. இரு தரப்புக்கும்.. மாறி மாறி நன்மை கிடைப்பதால்.. உது இப்ப சர்வசாதாரணமாகி விட்டது. 

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்களை தனியே வீட்டில் விட்டுவிட்டு வாரக்கணக்காய் வீட்டுக்கு வராம சுற்றி திரியும் பொறுப்பென்றால் என்னவென்று தெரியாத ஆண்களும் உண்டு...

ஆண்களையும் பிள்ளைகளையும் தனியே விட்டுபுட்டு சமையல்கூட செய்யாமல்  அலங்காரம் பண்ணி வெளியே சுற்றும் பொறுப்பற்ற பெண்களும் உண்டு...

இங்கே  சுதந்திரம் கெட்டுபோச்சு என்ற ஆப்பு எங்கே ஆரம்பிக்குது என்றால்...

 கல்யாணமான புதிதில் ஆண்களுக்கு...பெண்களும்...பெண்களுக்கு ஆண்களும்...

அளவு கடந்த ரொமான்ஸ் மூடில்...வெட்டி தனமாய் கொடுத்த வாக்குறுதிகளே விடாமல் அவர்களை தொரத்துகின்றன... 

கடைசிவரை உன்னை கண் கலங்காம பாப்பன்,,, உன்னை கருணாநிதி பொண்டாட்டிபோல ராஜாத்தி மாதிரி வைச்சிருப்பன் என்ற உளறலும்...

நீங்கள் என்ன சொன்னாலும் கேப்பன்... நீங்கள் இல்லையெண்டால் உடனயே செத்துபோவன் என்ற பெண்களின் கோமாளிதனமான  

வார்த்தைகளின்/வாக்குறுதிகளின்  ஆரம்பமே..... 

தப்பு பண்ணிட்டோமா என்பதை தலைமுறை கடந்தபின் மீட்டி பார்க்க தோன்றுகிறது...

இது என் சொந்த வாழ்க்கையில் பட்ட அனுபவமில்லை என்று சுமே அக்கா சொன்னாலும்...

என் பேர குழந்தைகளைகூட நான் என் பொருளாதாரமீட்டும் வசதிகளை தூக்கி தூர போட்டுவிட்டு நல்லா பார்க்குறேன் என்று  காவலூர்.. கண்மணி அக்கா சொன்னாலும்...

எமது அனுமதி பெறாமலே எம்மை சுற்றி வளைத்த ஒரு கலாச்சாரத்தின்  மின்சார வேலிகளுக்கு இடையில் சிக்குப்பட்டு...ஒரு மன அழுத்ததில்  இரு பாலரும் வாழ்கிறோம்...

இதில் பெண் என்ற  ஒரு பாலினத்தின் சுதந்திரம் பற்றிய ஆய்வு எதுக்கு?

எங்கோ ஒரு முனையில் இந்த சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சமுதாய கடப்பாடுகளால் அவதி பட்டிருக்கிறோம்/இனியும் அவதிபடுவோம் என்பதே பொருள்.

இது மட்டுமே எனக்கு உங்க தலைப்பு பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பது...

மற்றும்படி அதிக பிரசங்கிதனம் ஒன்றுமல்ல...

விவாதத்துக்குரிய தலைப்புக்கள் ஆரம்பிப்பவர்களால் மட்டுமே ...

ஒரு தளம் உயிர்ப்புடன் இருக்கும்...

நன்றி இதுபோன்ற தலைப்புக்களை ஆரம்பிப்பவர்களுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, nedukkalapoovan said:

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

யூ டூ  நெடுக்கர் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? 

நீங்கள் சிரித்துக்கொண்டே பதிவிட்டாலும், மிக சீரியஸான கருத்து...

ஆனால் அந்த வீடியோவுக்கு தலைப்பு போட்டவர்  வேம்படி மகளிரின் குத்தாட்டம் என்று போட்டிருக்கிறார்... அப்படியெல்லாம் இல்ல, வாழ்வின்  தருணங்களில்  காலத்தால் இழந்ததை கண்ணியமாக நினைவு கூர்கிறார்கள்... அதில் ஒன்றும் அசிங்கம் தெரியவில்லையே!

கூடபோன வெங்காய பொண்ணு ஒன்று... வீடியோ பண்ணி  வீணாபோன தன் புருஷனிடம் கொடுத்திருக்கு, அந்த உத்தம ராசாதான் யூ ரியூப்ல இதை அரங்கேற்றியிருக்கார்னு நினைக்குறேன்...

அதுதான் அப்பவே சொன்னேன் நல்லவர்களும் கெட்டவர்களும் ஆணிலும் பெண்ணிலும் இருப்பார்கள்.....

பகிர்வுக்கு நன்றி குமாரசுவாமி அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/17/2018 at 10:53 PM, குமாரசாமி said:

எப்படியான தெளிவு....எந்த விதத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பெண்கள் துணிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். தமது விருப்பங்க்களை கணவனிடம் துணிவுடன் சொல்ல வேண்டும். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும் கணவனும் பிள்ளைகளும் உயிர் வாழ்வார்கள் என்று நம்பவேண்டும். குற்ற உணர்வை அறவே விட வேண்டும். நாம் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற மனநிலையில் இருந்து வெளியே வரவேணும். மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று எல்லாவற்றுக்கும் பயப்பிடாது தனது நியாயமான ஆசைகளை அனுபவிக்க வேண்டும்.

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

On 5/19/2018 at 4:02 PM, Maruthankerny said:

சுதந்திரம் தாண்டி .......
எமது சொந்த வாழ்வு என்று வரும்போது   யாராகினும் அதை அனுபவித்து விடுங்கள் 
மற்றவரையும் அனுபவிக்க விடுங்கள்.
இந்த முடிவே இல்லாத பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறு புள்ளியான 
பூமியில் எப்படி தோன்றினோம் என்று தெரியவில்லை ... இறந்த பின்பு 
எங்கு போவோம் என்றும்  புரியவில்லை. இடையில் இப்போது இருக்கிறோம் 
இதுதான் நிஜம்.

ஆரம்பம் குழந்தை பருவம் 
தாய் தந்தையரை பின்தொடர்ந்தோம் 

இறுதிக்காலம் நோய் நொடி வழியே பின்தொடர்வோம் 

இடைக்காலம் என்றால் 20-65 வயதுவரை உழைக்கும் காலம் 
முன்னேறுவது ......பின்னேறுவது ... கல்வி .... திருமணம் 
குழந்தை வளர்ப்பு .... குழந்தைகளின் கல்வி ... அவர்களின் திருணம் 
இந்த அவசர அஞ்சல் ஓடத்துக்குள்தான் எமது வாழ்வையும் பார்த்து கொள்ள வேண்டும்.
65 வயதில் உடலில் போதுமான சக்தி இருக்காது ....... கேக் இருக்கும் பழம் இருக்கும் ... கூடவே உடலில் சுகர் இருக்கும்  உண்ண முடியாது. 

சமூக கடடமைப்பை எளிதாக உத்தர முடியாது 
எமக்கு பாதுகாப்பு அரணும் அதுதான் .... ஆனாலும் 
அது கால காலத்து மூட நம்பிக்கைகளையும் தன்னோடு கொண்டிருக்கும்.
எதை எடுப்பது ... எதை விடுவது என்பதில் சொந்த அறிவு வேண்டும்.

அதைத்தான் நானும் சொல்கிறேன்

On 5/20/2018 at 12:48 PM, nedukkalapoovan said:

இவை எல்லாம் எந்த யுகத்தில இருக்கினம். இப்ப பொம்பிளையள்.. அவை அவை இஸ்டத்துக்கு கொலிடே போகினம்.. என்ஜாய் பண்ணினம்.. வருகினம்.. உது இப்ப சர்வ சாதாரணம்.

ஆம்பிளையளும்.. இப்ப இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.. காரணம்.. அவைக்கும் வீட்டில ஒரு நிம்மதி.. ஆறுதல்.. அவைட இஸ்டத்துக்கும் எதையாச்சும்.. அந்த காப்பில செய்யலாம். 

ஆக.. இரு தரப்புக்கும்.. மாறி மாறி நன்மை கிடைப்பதால்.. உது இப்ப சர்வசாதாரணமாகி விட்டது. 

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

நீங்கள் கூறுவதுபோன்று இங்கு பிறந்த பிள்ளைகள் போகின்றனர் தான். ஆனால் எனது தலைமுறையினரை எடுத்துக்கொண்டால் 5 வீதத்தினர் கூட சுதந்திரமாக இல்லை.

இப்பதானே கலியாணம் கட்டி இருக்கிறியள். இப்ப சேர்ந்து போவதுதான் நல்லது. ஒரு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சொல்லுங்கோ.எது நல்லது எண்டு ?

19 hours ago, குமாரசாமி said:

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? :grin:

இதில கூடப் பாருங்கோ ஆண்களும் மூக்கை நுளைத்துக்கொண்டு. இதுவும் பெண்களின் ஒருவித அடிமைப்ப் புத்திதான். கணவன் மாரை விட்டுவிட்டு போகவேண்டியதுதானே. அவர்களும் வேம்படியிலா படித்தவர்கள். இப்படி ஒன்றுகூடி ஆடினால் கவலைகளைப் பெண்கள் மறப்பார்கள் என்று எண்ணுவதுதான் ஆண்கள் புத்தி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, valavan said:

நீங்கள் சிரித்துக்கொண்டே பதிவிட்டாலும், மிக சீரியஸான கருத்து...

ஆனால் அந்த வீடியோவுக்கு தலைப்பு போட்டவர்  வேம்படி மகளிரின் குத்தாட்டம் என்று போட்டிருக்கிறார்... அப்படியெல்லாம் இல்ல, வாழ்வின்  தருணங்களில்  காலத்தால் இழந்ததை கண்ணியமாக நினைவு கூர்கிறார்கள்... அதில் ஒன்றும் அசிங்கம் தெரியவில்லையே!

கூடபோன வெங்காய பொண்ணு ஒன்று... வீடியோ பண்ணி  வீணாபோன தன் புருஷனிடம் கொடுத்திருக்கு, அந்த உத்தம ராசாதான் யூ ரியூப்ல இதை அரங்கேற்றியிருக்கார்னு நினைக்குறேன்...

அதுதான் அப்பவே சொன்னேன் நல்லவர்களும் கெட்டவர்களும் ஆணிலும் பெண்ணிலும் இருப்பார்கள்.....

பகிர்வுக்கு நன்றி குமாரசுவாமி அண்ணா...

இதில் பெண்கள் ஆடிப்பாடுவதை ஏன் நீங்கள் தப்புப்போல் கூறுகிறீர்கள். விசர்ப் பெண்கள் கூடவே கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு போய்.........

On 5/18/2018 at 9:54 PM, நிலாமதி said:

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

அதுதான் அக்கா அந்த வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும்

On 5/18/2018 at 11:32 PM, Sasi_varnam said:

சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது.
குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர  எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா.
இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். 
எதுக்கு இந்த வேல ...
நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 உதாரணம் 
தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள்.
யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு.
தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு 
லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு 
உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ...
எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்??

எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். 
மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.

முதல் பந்தியிலேயே எந்தப் பெண்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேனே. வடிவா வாசிக்காமல் வந்து எழுதக் கூடாது. பெண்கள் வீட்டில் இருக்கத்தான் விரும்புவாள் என்று ஆண்கள் தான் ஒரு வரையறை செய்கிறீர்கள். திருமணம் ஆனா நாளில் இருந்து மறைமுகமாகப் பெண்ணுக்கு உங்கள் எண்ணங்களை உணர்த்திவிடுவீர்கள். அதன்பின் பெண் என்ன செய்வாள் பாவம். என் கணவன் எனக்கு உழைத்துக் கொட்டுகிறார். நான் வீட்டில் இருந்து அவர் மனம் கோணாமல் இருக்க வேண்டும் என்று தன மனதுக்குத் தானே கடிவாளமிட்டபடி எந்த ஆசைகளையும் ஏற்ப்படுஹ்த்திக் கொள்ளாது இருக்கிறாள் என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/19/2018 at 12:37 AM, புங்கையூரன் said:

உண்மையான கருத்து நிலாக்கா!

பெண்ணடிமைத்தனம் எம்மிடம் இருந்ததில்லை!

பெண்ணை அர்த்த நாரீஸ்வரியாக்கி ...அழகு படுத்தியது....எமது மதம்!

ஏன் உங்கள் மதம் கூட அவளை அன்னை வடிவாக்கி ....உயரத்தில் வைத்தது!

தனது சமூகத்தின் கண்ணியத்தையே..எமது சமூகம் பெண்ணில் தான் வைத்தது!

அதனால் தான்...பெண்ணை...அண்ணனும், தம்பியும், அப்பாவும்...அம்மாவும்...அத்தானும் கூடப் பொத்தி வளர்த்தார்கள்!

அந்தப் பொத்தலில்....கொடுமையோ....வன்மமோ இருக்கவில்லை! அன்பும்..அணைப்பும் தான் இருந்தது!

த்தனை...அண்ணாக்கள், அப்பாக்கள், தம்பிகள்,..தங்கள் வாழ்க்கைகளைக் கருக்கியும், சுருக்கியும்,,தங்கள் தன்கைகளுக்காக, மகள்களுக்காக, அக்காக்களுக்காக..உழைத்திருக்கிறார்கள்?

தலையில்...மயிர் கொட்டத் தொடங்கிய பிறகு தான்...அண்ணா.... திருமணம் செய்கிறான்!

காலம்...காலமாகத் தங்கையைப் பொத்தி வளர்த்தவன்...அதே கவனத்தால் தான்...வந்த துணையையும் பொத்தி வைக்க முனைகிறான்!

ஏனெனில்....வெளியுலகம்...அப்படி!

ஆனால்...வெளியுலகம் பாதுகாப்பானது என...அவன் கருதுகையில்...தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்துகிறான்!

அது தான்....இப்போது நடக்கின்றது!

ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்!

அண்மையில்...நிழலி ஓரிடத்தில் எழுதிய...ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

அது அன்னையர் தினத்தன்று எழுதியது...!

மனைவிகளை...அன்னையராகக்கிய தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்!

எனவே....அவன்...அவள்..என்ற வேறு பாடின்றி...நாம்.....நமது குடும்பம்...என்ற மனநிலையில் பயணிப்போமே!

தலையில் மயிர் கொட்டிய பின்னும் திருமணம் ஆகாமல் அண்ணன் இருப்பது சீதனம் வாங்கும் ஆண்களாலும் தானே புங்கை. நாம் நமது குடும்பம் என்று பெண்ணை வீட்டுக்குள் அடடைப்பதையேதான்நீங்களும் கூறுகிறீர்கள்.

On 5/19/2018 at 1:20 AM, யாயினி said:

எல்லா இடங்களிலும் அண்ணாக்கள்;தம்பிகள் மற்றும் பெரியவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது...எல்லாவற்றையும் விபரிக்கவும் இயலாது..

பெண்கள் பல நேரங்களில் மனதில் எண்ணுவதைச் சொல்வதே இல்லை.

On 5/19/2018 at 12:01 AM, தமிழ் சிறி said:

அக்காவின்... மனநிலை, எனக்கு  எப்பவோ.. தெரியும். ?
இதுக்குத் தான்.... நான் இந்தப் பக்கம், கருத்து எழுவதில்லை. :110_writing_hand:
விளக்கமாக எழுதியமைக்கு....  நன்றி,  சசி வர்ணம். ? 

நாங்கள் ஒன்றும் வெற்றிலை பாக்கு வைக்கவே இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

 சொந்த வீட்டுப்பிரச்சனை போல இருக்கிறது. வீட்டில சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் யாழில் கருத்தினை எழுதுகிறார்போல இருக்கிறது.  
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தலையில் மயிர் கொட்டிய பின்னும் திருமணம் ஆகாமல் அண்ணன் இருப்பது சீதனம் வாங்கும் ஆண்களாலும் தானே புங்கை. நாம் நமது குடும்பம் என்று பெண்ணை வீட்டுக்குள் அடடைப்பதையேதான்நீங்களும் கூறுகிறீர்கள்.

இப்பத் தான் விசயத்துக்கே வாறீங்கள்!

சீதனத்தை...உயிர்ப்புடன் இன்னும் வைத்துப்பது ஆண் அல்ல!

நன்றாகக் கவனித்துப் பார்த்தால்....பெண் தான் என்று தெரியும்!

அவள் ஒரு ஆண் பிள்ளைக்குச் சகோதரியாக இருக்கும் போதும்.....தாயாக இருக்கும் போதும்...சீதனத்தை ஆதரிக்கிறாள்!

அதே வேளை....பெண்ணுக்குத் திருமணம் என்று வரும்போது...சீதனத்தை எதிர்க்கிறாள்!

சமத்துவம் என நான் இங்கு குறிப்பிட்டது.....பெண்களை வீட்டுக்குள் அடைப்பதை அல்ல....!

ஆணும்...பெண்ணும்...சமம் என்பதையே!

ஒரு மாறுதலுக்கு நீங்கள் புல்லை வெட்டுங்கள்....நாங்கள் சமைக்கிறோமே...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண்கள் துணிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். தமது விருப்பங்க்களை கணவனிடம் துணிவுடன் சொல்ல வேண்டும். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும் கணவனும் பிள்ளைகளும் உயிர் வாழ்வார்கள் என்று நம்பவேண்டும். குற்ற உணர்வை அறவே விட வேண்டும். நாம் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற மனநிலையில் இருந்து வெளியே வரவேணும். மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று எல்லாவற்றுக்கும் பயப்பிடாது தனது நியாயமான ஆசைகளை அனுபவிக்க வேண்டும்.

நீங்கள் சொல்லுறது மெத்தச்சரி...உண்மை....உண்மை...

வாழைப்பழத்தை குடுக்கலாம்.....சரி தோலை உரிச்சும் குடுக்கலாம்.....இல்லை கடிச்சும் குடுக்கோணுமெண்டால்.....எதுக்கும் ஒரு இது இருக்கெல்லே!!!!! பொம்புளையளுக்கு எல்லாச்சுதந்திரமும் அட்சய பாத்திரம் மாதிரி குறைவில்லாமல் இருக்கெண்டது உங்கடை கூட்டுவளுக்கு போய் சொல்லலாமெல்லே

அது சரி  குற்ற உணர்வை அறவே விடவேணுமெண்டு நீங்கள்கள் சொல்ல வந்தது என்னத்தை??????????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். 

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் ஒரு சில வீடுகளில் இருக்கத்தான் செய்கின்றது.....அதற்காக ஒட்டுமொத்த ஆண்வர்கத்தையும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

ஒரு கணவனால்  ஒரு பாசத்தை இதய பூர்வமான அன்பை வெளிப்படுத்த இதை விட வேறு என்ன வேண்டும்? 
பெண்களாகிய நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு புள்ளியில்.....ஒரு விடயத்திலாவது திருப்திப்பட்டு வாழவே மாட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கை எனக்குத் தெரிந்து ஒரு பெண் இருக்கிறா.அவவுக்க கடையில் பொருட்க்கள் வாங்க பாவிக்கிற வண்டிலுக்கு டோக்கன் போடவே தெரியாது.ஒரு பெட்டி உப்பு வாங்க வேண்டுமென்டாலும் ர்ருசன்காரன் தான் போக வேனும்.விட்டால் அந்தப் பெண்னுக்கு வண்னிலுக்கு டோக்கன் போடுற உரிமையை புருசக் காரன்தான் மறுத்தார் என்டு சொல்லுவிங்கள் போல் உள்ளது.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/22/2018 at 5:12 AM, கந்தப்பு said:

 சொந்த வீட்டுப்பிரச்சனை போல இருக்கிறது. வீட்டில சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் யாழில் கருத்தினை எழுதுகிறார்போல இருக்கிறது.  
 
உடன சொந்த வீட்டுப் பிரச்சனை எண்டு மடக்கிறது.☺️ ஒவ்வொரு வாரமும் நான் நாற்பது குடும்பங்களைச் சந்திக்கிறேன். என் பள்ளியில் பன்னிரண்டு ஆசிரியர்கள். இதில் அரைவாசிப் பேரின் கதையும் நான் கேட்காமலே காதுக்கு வரும். அதைவிட வேலையிடத்தில் பொதுவெளியில் முகநூல் வட்டத்தில் என்று எத்தனையோ பெண்களுடன் உரையாடுவது.

கந்தப்பு நீங்கள் எழுதிய ஒரு கருத்தாடலில் தான் இதை எழுதவேண்டும் என நான் தீர்மானித்தது.

On 5/22/2018 at 7:42 AM, புங்கையூரன் said:

இப்பத் தான் விசயத்துக்கே வாறீங்கள்!

சீதனத்தை...உயிர்ப்புடன் இன்னும் வைத்துப்பது ஆண் அல்ல!

நன்றாகக் கவனித்துப் பார்த்தால்....பெண் தான் என்று தெரியும்!

அவள் ஒரு ஆண் பிள்ளைக்குச் சகோதரியாக இருக்கும் போதும்.....தாயாக இருக்கும் போதும்...சீதனத்தை ஆதரிக்கிறாள்!

அதே வேளை....பெண்ணுக்குத் திருமணம் என்று வரும்போது...சீதனத்தை எதிர்க்கிறாள்!

சமத்துவம் என நான் இங்கு குறிப்பிட்டது.....பெண்களை வீட்டுக்குள் அடைப்பதை அல்ல....!

ஆணும்...பெண்ணும்...சமம் என்பதையே!

ஒரு மாறுதலுக்கு நீங்கள் புல்லை வெட்டுங்கள்....நாங்கள் சமைக்கிறோமே...!

என் வீட்டில் இருவருமே இரண்டும் செய்வதாக்கும்.

On 5/23/2018 at 12:37 AM, குமாரசாமி said:

நீங்கள் சொல்லுறது மெத்தச்சரி...உண்மை....உண்மை...

வாழைப்பழத்தை குடுக்கலாம்.....சரி தோலை உரிச்சும் குடுக்கலாம்.....இல்லை கடிச்சும் குடுக்கோணுமெண்டால்.....எதுக்கும் ஒரு இது இருக்கெல்லே!!!!! பொம்புளையளுக்கு எல்லாச்சுதந்திரமும் அட்சய பாத்திரம் மாதிரி குறைவில்லாமல் இருக்கெண்டது உங்கடை கூட்டுவளுக்கு போய் சொல்லலாமெல்லே

அது சரி  குற்ற உணர்வை அறவே விடவேணுமெண்டு நீங்கள்கள் சொல்ல வந்தது என்னத்தை??????????

கணவனுக்கு சிலநேரம் சேவகம் செய்ய முடியாமல் போகும்போது எதோ தான் தவறு செய்தது போல் குற்ற உணர்வில் பதருபவ்ர்களைப் பார்த்துள்ளேன்  குமாரசாமி. அதுக்குத்தான் இது.

On 5/23/2018 at 12:56 AM, குமாரசாமி said:

ஒரு கணவனால்  ஒரு பாசத்தை இதய பூர்வமான அன்பை வெளிப்படுத்த இதை விட வேறு என்ன வேண்டும்? 
பெண்களாகிய நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு புள்ளியில்.....ஒரு விடயத்திலாவது திருப்திப்பட்டு வாழவே மாட்டீர்களா?

திருப்திப் படவேண்டிய விடயங்களுக்கு திருப்திப் பட்டதனாலதான் முப்பது ஆண்டுகளாகியும் சேர்ந்து வாழுறம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/23/2018 at 8:04 AM, சுவைப்பிரியன் said:

இங்கை எனக்குத் தெரிந்து ஒரு பெண் இருக்கிறா.அவவுக்க கடையில் பொருட்க்கள் வாங்க பாவிக்கிற வண்டிலுக்கு டோக்கன் போடவே தெரியாது.ஒரு பெட்டி உப்பு வாங்க வேண்டுமென்டாலும் ர்ருசன்காரன் தான் போக வேனும்.விட்டால் அந்தப் பெண்னுக்கு வண்னிலுக்கு டோக்கன் போடுற உரிமையை புருசக் காரன்தான் மறுத்தார் என்டு சொல்லுவிங்கள் போல் உள்ளது.?

வண்டிலுக்கு டோக்கன் போடத் தெரியவில்லை என்றால் கணவன் காட்டிக் குடுக்காமல் எதுக்குத் தானே போடுறார். அப்பிடிக் கணவன் காட்டிக் குடுத்த பின்னும் போடத் தெரியாமல் இருந்தால் அவருக்கு எதோ நோய் என்றுதான் கொள்ளவேண்டும். வண்டிலுக்கு டோக்கன் போடுவதை இரண்டு வயதுக் குழந்தையே செய்யும்.

உப்பு வாங்க ஏன் அவர் ஓட வேண்டும். நீ தான் போய் வாங்க வேண்டும் என்றால்  வாங்க மாட்டாரா???? உதெல்லாம் அவுசில் நடக்கிற கதையோ ??? அங்கே கிட்டக் கடைகள் இல்லாமல் போக்குவரத்து வசதி இல்லை என்றால், வாகன அனுமதிப் பத்திரம் எடுக்கக் கணவன் அனுமதிக்கவில்லை என்றால் அந்தப் பெண் எதுக்கும் கணவனைத் தான் கடைக்குக் அனுப்புவாள்.

On 5/23/2018 at 12:48 AM, குமாரசாமி said:

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் ஒரு சில வீடுகளில் இருக்கத்தான் செய்கின்றது.....அதற்காக ஒட்டுமொத்த ஆண்வர்கத்தையும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு பத்து வீதமான ஆண்கள் பெண்களை மதித்து உண்மையாய் சுதந்திரமாய் இருக்கவிடுகிறார்களா??? 

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.