Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவியை கடத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய ஆசிரியர்களால் கிழக்கில் பதற்றம்!

Featured Replies

மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவி ஒருவரை அதேபாடசாலையில் கல்p கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் ஆசிரியர்கள் இருவரால் கடத்தப்பட்டு குறித்த மாணவி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு அவரை பெற்றோர்களிடம் ஒப்படைக்க மறுத்துவரும் சம்பவம் கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவியான கிருஸ்னகுமார் கௌரிதேவி எனும் மாணவியை அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் இருவர் குறித்த மாணவிக்கு பலவந்தமாக குறான் கற்பித்துள்ளனர்.

அதன் பின்னர் 29.12.2018 அன்று பின்நேர வகுப்பிற்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவியை முஸ்லிம் ஆசிரியர்கள் இருவரும் காத்தான்குடிக்கு கூட்டிச்சென்று குறான் கற்பித்துள்ளனர் பின்னர் 03.01.2019 அன்று வீட்டில் இருந்து மாணவி காணாமல் போய் உள்ளார்.

மாணவி காணாமல் போன விடயம் குறித்து ஏறாவூர் பொலீசில் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அதன் பின் மாணவி பரிதாவுடன் புகைப்படம் எடுத்து பெற்றோருக்கு அனுப்பி உள்ளார். அதன் பின்பு பெற்றோருடன் தொர்பு கொண்டு நான் குறான் படிக்கன் என்னை தேடவேண்டாம் என்று கூறியுள்ளார்.

தற்போது அந்த மாணவி காத்தான்குடியில் இருப்பதா அறிந்து பெற்றோர் காத்தான்குடி பொலீசில் முறையிட்டு உள்ளனர்.

அதன் பின்னர் நாளை (07.01.2019) காலை காத்தான்குடி பொலீஸ்நிலையம் வரும்படியும் மாணவியை பெற்றோருக்கு காட்டமுடியும் ஆனால் ஒப்படைக்க முடியாது என மாணவியை கடத்திய முஸ்லிம் ஆசிரியர்கள் சர்பாக கூறப்பட்டுள்ளதால் குறித்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களை நம்பி பெற்றோர் பிள்ளைகளை பாடசாலை அனுப்பும் போது ஆசிரியர்கள் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு ஆசை வார்த்தைகளை காட்டி கணனி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் செயற்பாடானது இலங்கை சட்டதிட்டங்களுக்கு முரணானது என்றும் இவ்வாறான ஆசிரியர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

களுவண்கேனி பிரதேசத்தில் ஒரு தமிழ் ஆசிரியர் உட்பட சுமார் 6 தமிழ் மாணவிகள் இவ்வாறு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பல தமிழ் குடும்பங்களை இலக்குவைத்து இவ்வாறான மதமாற்றம் இடம்பெறுவதாகவும் இதனை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மதவாதிகள் சிலர் ஒரு செயற்றிட்டமாக செய்து வருவதுடன் மதம் மாறும் குடும்பம் ஒன்றிற்கு பத்து இலட்சம் வரை வழங்குவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது குறித்த மதம் மாற்றும் செயற்பாடுகளை பாடசாலைகளிலும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளமையானது கிழக்கு மாகாண நிர்வாகத்தில் முஸ்லீம்களின் ஆதிக்கம் எந்தவகையில் அதிகரித்துள்ளது என்பதனை எடுத்துக்காட்டியுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளேன தமிழ் ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/111954

9 hours ago, போல் said:

களுவண்கேனி பிரதேசத்தில் ஒரு தமிழ் ஆசிரியர் உட்பட சுமார் 6 தமிழ் மாணவிகள் இவ்வாறு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பல தமிழ் குடும்பங்களை இலக்குவைத்து இவ்வாறான மதமாற்றம் இடம்பெறுவதாகவும் இதனை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மதவாதிகள் சிலர் ஒரு செயற்றிட்டமாக செய்து வருவதுடன்

இந்த முஸ்லீம் மதவெறியர்கள் நாடுகடத்தப்பட்ட வேண்டியவர்கள்.
இலங்கையில் வசிக்க இவர்களுக்கு தகுதியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

இந்த முஸ்லீம் மதவெறியர்கள் நாடுகடத்தப்பட்ட வேண்டியவர்கள்.
இலங்கையில் வசிக்க இவர்களுக்கு தகுதியில்லை.

கிழக்கு மாகாணம் இப்ப அவங்கடதான் என்ன செய்வியள் எல்லோரையும் :grin:

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு மாகாணம் இப்ப அவங்கடதான் என்ன செய்வியள் எல்லோரையும் :grin:

அது மட்டுமல்ல எங்கட யாழ் களத்தில் தமிழ் தேசியம் எண்டு கூவிர ஒருத்தரையும் காணோம்.

எல்லாறும் வேறு திரி திறந்து சுமந்திரனை திட்டுரதில பிசி.

இங்கை ஒரு இனம் வாழ போராட்ட்ம் நடக்குது.

ஆனால் கிழக்கு தமிழர் மேலும் எனக்கு கோபம் உண்டு, தமக்கு இருக்கும் பிரச்சனைகளை புலம் பெயர் தமிழரின் நிதி மற்றும் சட்ட உதவியுடன் முறியடிக்கும் எண்ணம் இல்லை.

அண்மையில் கூட வாகரையில் பல ஏக்கர் காணி கை மாறிட்டுதாமே.....!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மாணவியை கடத்தி மதம் மாற்றி காத்தான்குடியில் அடைத்து வைத்திருக்கும் சம்பவத்தால் பதற்றம்.

தமிழ் மாணவியை கடத்தி மதம் மாற்றி காத்தான்குடியில் அடைத்து வைத்திருக்கும் சம்பவத்தால் பதற்றம்.
Published on January 7, 2019-11:09 am 
மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவி ஒருவரை அதேபாடசாலையில் கல்p கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் ஆசிரியர்கள் இருவரால் கடத்தப்பட்டு குறித்த மாணவி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு அவரை பெற்றோர்களிடம் ஒப்படைக்க மறுத்துவரும் சம்பவம் கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவியான கிருஸ்னகுமார் கௌரிதேவி எனும் மாணவியை அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் இருவர் குறித்த மாணவிக்கு பலவந்தமாக குறான் கற்பித்துள்ளனர்.

அதன் பின்னர் 29.12.2018 அன்று பின்நேர வகுப்பிற்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவியை முஸ்லிம் ஆசிரியர்கள் இருவரும் காத்தான்குடிக்கு கூட்டிச்சென்று குறான் கற்பித்துள்ளனர் பின்னர் 03.01.2019 அன்று வீட்டில் இருந்து மாணவி காணாமல் போய் உள்ளார்.

மாணவி காணாமல் போன விடயம் குறித்து ஏறாவூர் பொலீசில் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அதன் பின் மாணவி பரிதாவுடன் புகைப்படம் எடுத்து பெற்றோருக்கு அனுப்பி உள்ளார். அதன் பின்பு பெற்றோருடன் தொர்பு கொண்டு நான் குறான் படிக்கன் என்னை தேடவேண்டாம் என்று கூறியுள்ளார்.

தற்போது அந்த மாணவி காத்தான்குடியில் இருப்பதா அறிந்து பெற்றோர் காத்தான்குடி பொலீசில் முறையிட்டு உள்ளனர்.

அதன் பின்னர்  காத்தான்குடி பொலீஸ்நிலையம் வரும்படியும் மாணவியை பெற்றோருக்கு காட்டமுடியும் ஆனால் ஒப்படைக்க முடியாது என மாணவியை கடத்திய முஸ்லிம் ஆசிரியர்கள் சர்பாக கூறப்பட்டுள்ளதால் குறித்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களை நம்பி பெற்றோர் பிள்ளைகளை பாடசாலை அனுப்பும் போது ஆசிரியர்கள் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு ஆசை வார்த்தைகளை காட்டி கணனி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் செயற்பாடானது இலங்கை சட்டதிட்டங்களுக்கு முரணானது என்றும் இவ்வாறான ஆசிரியர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

களுவண்கேனி பிரதேசத்தில் ஒரு தமிழ் ஆசிரியர் உட்பட சுமார் 6 தமிழ் மாணவிகள் இவ்வாறு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பல தமிழ் குடும்பங்களை இலக்குவைத்து இவ்வாறான மதமாற்றம் இடம்பெறுவதாகவும் இதனை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மதவாதிகள் சிலர் ஒரு செயற்றிட்டமாக செய்து வருவதுடன் மதம் மாறும் குடும்பம் ஒன்றிற்கு பத்து இலட்சம் வரை வழங்குவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது குறித்த மதம் மாற்றும் செயற்பாடுகளை பாடசாலைகளிலும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளமையானது கிழக்கு மாகாண நிர்வாகத்தில் முஸ்லீம்களின் ஆதிக்கம் எந்தவகையில் அதிகரித்துள்ளது என்பதனை எடுத்துக்காட்டியுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளேன தமிழ் ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த‌ செய்தி எந்த‌ள‌வுக்கு உண்மை என்று தெரிய‌வில்லை. விரைவில் இத‌ன் உண்மை வெளியாகும்.

ஆனாலும் இச்செய்தி ஒரு விட‌ய‌த்தை மிக‌த்தெளிவாக‌ சொல்கிற‌து அந்த‌ மாண‌வி ப‌லாத்கார‌ம் இன்றி சுய‌விருப்பில் இஸ்லாத்தை த‌ழுவியுள்ளாள் என்ப‌து.
அவ‌ள் ப‌லாத்கார‌மாக‌ ம‌த‌ம் மாற்ற‌ப்ப‌ட்டிருந்தால் த‌ன் பெற்றோரிட‌ம் த‌ன்னை காப்பாற்றும்ப‌டி செய்தி அனுப்பியிருப்பாள்.
அவ‌ள் இஸ்லாத்தை த‌ழுவிவிட்ட‌தாக‌ அவ‌ளே த‌ன் பெற்றோருக்கு செய்தி அனுப்பிய‌தாக‌ மேலே செய்தி சொல்கிற‌து.
இது போன்று ப‌ல‌ த‌மிழ் பெண்க‌ள் இஸ்லாத்துக்கு வ‌ர‌ துடிக்கிறார்க‌ள். ஆனால் ம‌த‌ வெறிய‌ர்க‌ளால் அவ‌ர்க‌ளின் சுத‌ந்திர‌ம் ப‌றிக்க‌ப்ப‌டுகிற‌து.
ந‌ம‌து நாட்டில் ம‌த‌ சுத‌ந்திர‌ம் உண்டு.எந்த‌ ம‌த‌த்தையும் யாரும் ப‌டிக்க‌லாம் யாருக்கும் ப‌டிப்பிக்க‌லாம். அப்ப‌டியென்றால் தின‌க‌ர‌ன் போன்ற‌ ப‌த்திரிகைக‌ளை த‌டை செய்ய‌ வேண்டி வ‌ரும். கார‌ண‌ம் அவ‌ற்றில் வார‌த்துக்கொருமுறை இந்து ம‌த‌ம் ப‌ற்றியும், கிறிஸ்த‌வ்ம், இஸ்லாம் ப‌ற்றிய‌ த‌னிப்ப‌க்க‌த்தில் க‌ட்டுரை வெளியிட‌ப்ப‌ட்டு போதிக்க‌ப்ப‌டுகிற‌து.
நாம் இந்து ம‌த‌த்தையும் ப‌டித்த‌ச‌ர்க‌ள். அத‌ற்காக‌ ம‌த‌ம் மாறுகிறோமா?
ம‌த‌ம் உண்மையான‌தாக‌ இருந்தால் யாரும் அதை விட்டு மாற‌மாட்டார்க‌ள்.
ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் இந்து ம‌த‌ த‌மிழ‌ர்க‌ளாக‌ இருந்து மத‌ம் மாறிய‌வ‌ர்க‌ள்தான். இத‌ற்கு அழாத‌வ‌ர்க‌ள் ஒரு த‌மிழ் மாப‌வி சுய‌ விருப்பின் பேரில் இஸ்லாத்துக்கு சென்றால் ஒப்பாரி வைக்கிறார்க‌ள். இத்த‌கையோர் இந்து ம‌த‌ தீவிர‌வாதிக‌ள்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

http://www.aljazeeralanka.com/2019/01/blog-post_8.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவியைக் கடத்தி இன மாற்றம் செய்த முஸ்லிம்கள்! கொதித்தெழுந்த மக்கள்!!

தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை களுவன்கேணியில் ஆர்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாடப் பேரணியில் நுற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுரைக்கமைய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.

வேண்டாம் வேண்டாம் மதம் மாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டாம், வழித்துக்கொள் தமிழா முஸ்லிம்களின் மதமாற்றத்துக்கு எதிராக, முஸ்லிம் சமூகமே உனது மத்தை எம்மீது திணிக்காதே, எமது பகுதியில் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இன நல்லுறவை சீர்குலைக்கும் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இனமாற்றத்தை கூட்டாதே இனகலவரத்தை தூண்டாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த மாணவியின் தந்தை வேலுப்பிள்ளை கிருஸ்ணகுமார் கருத்து தெரிவிக்கையில், ”இந்த பாடசாலையில் உள்ள இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் எனது மகளுக்கு மூளைச் சலவை செய்து மதமாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். எனது மகளை வீட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த விடயத்தில் இஸ்லாமிய மத தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். எனது மகள் வீடு திரும்பாவிடின் பாராதூரமான விளைவுகளை எதிர்நோக்கும் நிலை ஏற்படும். அந்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மத ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

களுவன்கேணி கடலில் பிடிக்கப்படும் மீன்களில் பெருமளவானவை சகோதர முஸ்லிம் வியாபாரிகளுக்கே விற்பனை செய்செய்கிறோம். பல வருடங்களாக நாங்கள் எந்த வித இன வேறுபாடுகளுமின்றி தொழில் செய்கிறோம். ஒருசிலர் இன ரீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மூலம் ஒட்டுமொத்தாக தமிழ் - முஸ்லிம் உறவு பாதிக்கப்படும்.” என்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவியிடம் கையளித்தனர். கோரிக்கையைப் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

”குறித்த வியடம் தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து சம்மந்தப்பட்டதாக கூறப்படும் ஆரிசியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம். மாணவியின் பொற்றோருடனம் கலந்துரையாடியுள்ளோம். விபரங்களை திரட்டி விபரங்கள் அனைத்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் உத்தரவுக்கமைய நடவடிக்கையெடுக்கவுள்ளோம்.

பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாட்டில் வாழுகின் நாங்கள் மதம் சார்ந்த விடயங்களில் ஈடுபடுகின்றபோது சமாதானமான வழியினைப் பின்பற்ற வேண்டும். குறித்த மாணவி யாருடைய வீட்டில் இருக்கிறார் என்றால் அதனை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவித்திருக்க வேண்டும். மாணவியின் விடயத்தில் ஆசிரியங்களுக்கு சம்மந்தம் இருப்பதாக அறிந்தால் நாங்கள் கடுமையான நடவடிக்கையெடுப்போம்” என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/112043?ref=home-imp-parsely

இன ஒற்றுமையை சீரழிக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

IMG_20190108_093810_resized_20190108_111059509-720x450.jpg

தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி களுவன்கேணியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர், அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுரைக்கமைய, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, ‘வேண்டாம் வேண்டாம் மதம் மாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டாம்’, ‘விழித்துக்கொள் தமிழா முஸ்லிம்களின் மதமாற்றத்துக்கு எதிராக’, ‘முஸ்லிம் சமூகமே உனது மதத்தை எம்மீது திணிக்காதே’, ‘எமது பகுதியில் முஸ்லிம் இன மாற்றத்தை நிறுத்து’, ‘இன நல்லுறவை சீர்குலைக்கும் முஸ்லிம் இன மாற்றத்தை நிறுத்து’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவியிடம் கையளித்தனர்.

கோரிக்கையைப் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், “குறித்த விடயம் தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆசிரியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம். மாணவியின் பெற்றோருடனும் கலந்துரையாடியுள்ளோம். விபரங்கள் அனைத்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் உத்தரவுக்கமைய நடவடிக்கையெடுக்கவுள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இன-ஒற்றுமையை-சீரழிக்கும்/

625.0.560.320.160.600.053.800.700.160.90

18 minutes ago, Rajesh said:

தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி களுவன்கேணியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

இப்படிப்பட்ட மட்டரகமான மதவெறிக் கயவர்கள் கிழக்கிலும் மன்னாரிலும் பெருமளவில் உள்ளனர்.

இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட வேண்டியவர்கள்!

35 minutes ago, Rajesh said:

இப்படிப்பட்ட மட்டரகமான மதவெறிக் கயவர்கள் கிழக்கிலும் மன்னாரிலும் பெருமளவில் உள்ளனர்.

இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட வேண்டியவர்கள்!

ஒன்றும் செய்ய் இயலாது அவர்களுக்கு அடிபணிந்து வாழ்வதை விட.......!!!!!

தமிழ் ஈழம் இனிமேல் இஸ்லாமிய பூமியாக மாறும், அதற்கு காரணம் தமிழனின் சுயநலம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணக்கல்விப்பணிப்பாளர் என்றால் யார்.அவரும் *******************.இதில் தொடர்பு பட்டவர்களுக்கு மேலும் ஊக்குவிப்புகளும் சலுகைகளும் வழங்கப்படும்.சிலவேளை கிழக்குமாகாண ஆளுணர் விசேடவிருதுகள் கூட இந்த கயவர்களுக்கு வழங்குவான்.ஏனெனில் முஸ்லிம்கள் அனைவரும் இவ்வாறான விடயங்களில் ஒன்றுபட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் பெரும் பாலும் இது காதல் விவகாரமாய்த் தான் இருக்கும்...அங்கு இருப்பவர்கள் தான் வந்து எழுதோணும் 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

நான் நினைக்கிறேன் பெரும் பாலும் இது காதல் விவகாரமாய்த் தான் இருக்கும்...அங்கு இருப்பவர்கள் தான் வந்து எழுதோணும் 

அப்படித் தான் நானும் ஊகிக்கிறேன். தலையில் துவக்கை வைத்துக் கடத்தி யாரையும் மதம் மாற்ற இயலுமா? ஆனாலும், இதை அங்கிருப்போர் உறுதிப் படுத்த வேண்டும்! உறுதிப் படுத்தினாலும் இந்தத் திரி அணையாது எரியும் என நினைக்கிறேன்! ஏனென்றால், நாங்கள் சவூதி அரேபிய வஹாபி முஸ்லிம்களை விடவும் பிற்போக்காக மாறிக் கனகாலம்!

https://www.bbc.com/news/world/asia

1 hour ago, Justin said:

ஜஸ்ரின்,

இது காதல் காரணமாக இடம்பெற்றது எனில் மக்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு செல்கின்றனர்? தங்கள் பொறுமை எல்லை மீறும் போதும், எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனும் போதுதானே போறாட வெளிக்கிடுகின்றனர்.

கிழக்கில் இஸ்லாமிய மதமாற்றம் பல காரணங்களால் இடம்பெறுகின்றது என்பதை அறியவில்லைய? பொருளாதார காரணங்களை காட்டியும், வாழ்வாதாரங்களைக் காட்டியும் மட்டுமல்ல அச்சுறுத்தலின் மூலமும் பெருவாரியாக அங்கு மதமாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.  கடந்த வருடம் ஒரு கிழக்கில் ஒரு கிராமத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை என்பதால் ஒரு குடும்பத்தின் வீட்டையும் முச்சக்கரவண்டியையும் கொளுத்தி நடுத்தெருவுக்கு கொண்டு வந்த செய்தியை அறியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நிழலி, நான் இன்னொரு திரியில் எழுதியுள்ளதைப் போலவே, பொருளாதாரக் காரணங்களைக் காட்டி ஒருவர் மதம் மாறினால், அதை மற்றவர்கள் கேட்க உரிமை இருக்கிறதா? இல்லை என்பது என் கருத்து. அச்சுறுத்தல் நீங்கள் சொன்ன வழிகளில் நிகழ்ந்தால் அது குற்றம். மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தவறான தகவல் கூடக் காரணமாக இருக்கலாம்! நான் ஊகமாகவே இது தனிப் பட்ட காதலாக இருக்கும் என்றேன், நானும் அறியேன்! அப்படி இருந்தால் அது குழந்தைத் திருமணத்திற்கெதிரான நடவடிக்கை மூலம் மட்டுமே அணுகலாம்! முஸ்லிமைக் காதலிக்காதே என்று எந்தக் கோர்ட்டில் போய் வாதாட இயலும்? அந்த வீடு எரிப்பு பற்றிக் கூட காப்புறுதி மோசடி என்பதாகக தகவல் ஒன்று வந்திருந்ததே? அது உண்மையா?

28 minutes ago, Justin said:

நிழலி, நான் இன்னொரு திரியில் எழுதியுள்ளதைப் போலவே, பொருளாதாரக் காரணங்களைக் காட்டி ஒருவர் மதம் மாறினால், அதை மற்றவர்கள் கேட்க உரிமை இருக்கிறதா? இல்லை என்பது என் கருத்து. அச்சுறுத்தல் நீங்கள் சொன்ன வழிகளில் நிகழ்ந்தால் அது குற்றம். மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தவறான தகவல் கூடக் காரணமாக இருக்கலாம்! நான் ஊகமாகவே இது தனிப் பட்ட காதலாக இருக்கும் என்றேன், நானும் அறியேன்! அப்படி இருந்தால் அது குழந்தைத் திருமணத்திற்கெதிரான நடவடிக்கை மூலம் மட்டுமே அணுகலாம்! முஸ்லிமைக் காதலிக்காதே என்று எந்தக் கோர்ட்டில் போய் வாதாட இயலும்?

ஒருவர் ஒரு மதத்தில் இருக்கும் நல்ல விடயங்களுக்காக அதன் நம்பிக்கைகளுக்காக மதம் மாறுவது வேறு. ஒருவரின் ஒரு சமூகத்தின் இயலாமையை, ஏழ்மையை பயன்படுத்தி அதிக பணம் கொடுத்து மதம் மாற்ற முற்படுவது வேறு.  இது இன்று இலங்கையில் சட்டப்படி குற்றம் இல்லையாயினும் இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று.

கிழக்கில் எண்ணற்ற தமிழ் காணிகளும், கிராமங்களும், மக்களும் இஸ்லாமியப்படுத்தப்படுவதற்கு அம் மக்களின் ஏழ்மையை பயன்படுத்துகின்றார்கள். இதுவும் பாலியல் லஞ்சம் பெற்று வேலை கொடுப்பதற்கு ஒப்பான தவறாக பார்க்கபட வேண்டியது. அதுவும் கிழக்கின் இனப்பரம்பலை பாதிக்கும் அளவுக்கு கண்ணுக்கு முன் நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது, இது சட்டப்படி குற்றமா இல்லையா, கேள்வி கேட்பது சரியா பிழையா என்ற விவாதங்களுக்குள் சென்று இருப்பதையும் தொலைத்து விட முடியாது. எனவே இதையிட்டு மற்றவர்கள் / கிழக்கு மக்கள்  கண்டிப்பாக கேள்வி கேட்க வேண்டும்.அதற்கு எதிராக போராட வேண்டும். இதற்கான எந்த சாத்தானுடன் சேர்ந்தாவது இயங்க வேண்டும்.

28 minutes ago, Justin said:

 அந்த வீடு எரிப்பு பற்றிக் கூட காப்புறுதி மோசடி என்பதாகக தகவல் ஒன்று வந்திருந்ததே? அது உண்மையா?

சில முஸ்லிம் ஊடகங்களும் , உலமா சபைத் தலைவர் எனுஜ் ஜோக்கரும் இவ்வாறு சொல்லியிருந்தனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

நான் நினைக்கிறேன் பெரும் பாலும் இது காதல் விவகாரமாய்த் தான் இருக்கும்...அங்கு இருப்பவர்கள் தான் வந்து எழுதோணும் 

தங்கச்சி! ரோட்டிலை பதாதைகளோடை வந்து நிக்கிற சனத்தையும்,பதாகையிலை எழுதியிருக்கிறதையும் பார்த்தால் காதல் கலியாணத்தை எதிர்த்த மாதிரியே தெரியுது? ஏதோ ஒண்டு எல்லைமீறி போனபடியாலைதானே சனம் நடுறோட்டுக்கு வந்து நிக்கிது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

  • தொடங்கியவர்
10 hours ago, Rajesh said:

இப்படிப்பட்ட மட்டரகமான மதவெறிக் கயவர்கள் கிழக்கிலும் மன்னாரிலும் பெருமளவில் உள்ளனர்.

இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட வேண்டியவர்கள்!

மத மாற்றம் என்பது ஒரு வியாபாரமாகவே நடக்கிறது! 

மதம் மாற்றவென்று பல மதவெறி வியாபாரிகள் தினந்தோறும் தெருக்களிலும், வீடு வீடாகவும் அலைகின்றனர். 

இதில் முன்னணியில் இருக்கும் மதவெறி வியாபாரிகள் கிருஸ்தவ மதத்தின் சில பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவும், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள். பௌத்த மதவெறியர்களும் குழந்தைகளைக் கடத்தி பிக்குவாக்கி தமது மதவெறி வியாபாரத்தைத் தொடர்கிறார்கள். 

ஒருதடவை தெருவில் சென்று கொண்டிருந்த என்னை இந்து / சைவர் என தாங்களே ஊகித்து கிருஸ்தவ மதத்தின் சில பிரிவுகளைச் சேர்ந்த 3 பேர் என்னுடன் சில நிமிடங்கள் கதைக்க விரும்புவதாகவும், என்னை தங்கள் பிரிவில் சேர்ந்தால் மட்டுமே சொர்க்கத்துக்கு போக முடியும், அது இது என அத்துமீறி பல கட்டுக் கதைகளை சொல்லி மூளைச் சலவை செய்யும் முயற்சியை  தொடங்கினார்கள். இவர்களின் தன்மையை அறிய எண்ணிய நானும் அவர்கள் சொல்வதை அமைதியாக கேட்க ஆரம்பித்தேன்.  அவர்கள் என்னை முட்டாளாக கருதி, நான் கல்லை வழிபடுவதாகவும், நரகத்துக்கு செல்லும் பாதையில் பயணிப்பதாகவும், உலகில் உண்மையாக மக்களை நல்வழிப்படுத்தும் ஒரே மதமான கிருஸ்தவ மதத்தில் தங்கள் பிரிவில் இணையுமாறும், இதன் மூலம் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு மனிதனாக வாழ முடியும் என்றும், தங்கள் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்த சாத்தான்கள் ஏனைய மதத்தின் தீய சாத்தான்களை விட வலுவானது என்பதால் அவை ஏனைய மதத்தின் தீய சாத்தான்கள் எம்மை நெருங்க விடாது என்றும், பேய் பிசாசு என பல மூடக் கதைகளை அவிழ்த்து விட்டார்கள். தங்கள் சபையில் சேர்ந்து வந்தால் எனது குடும்பத்துக்கு பண உதவிகள் கிடைக்கும் எனவும், இன்னும் பலரை தங்கள் சபைக்கு சேர்க்க உதவினால் ஒரு தலைக்கு 50,000 ரூபா வரை எனக்கு தருவதாகவும் கூறினார்கள். இறுதியில் நான் என்னைப் பற்றிய அவர்கள் ஊகம் மிகத் தவறானது எனக் கூறி, அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

இது போன்ற கேவலமான மதவெறியர்கள் மனித இனத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள். 

பிரச்சாரம் செய்து, பணம் கொடுத்து, ஏனைய மதங்களை இழிவு செய்து, மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி  மத மாற்றம் செய்ய முயற்சிப்பது என்பது காட்டுமிராண்டிகளால் முன்னெடுக்கப்படும் வியாபாரம் ஆகும். இது போதைப்பொருள் வியாபாரத்தை விட மிக மோசமானது. எனவே இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும்! 

Edited by போல்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2019 at 12:02 AM, ரதி said:

நான் நினைக்கிறேன் பெரும் பாலும் இது காதல் விவகாரமாய்த் தான் இருக்கும்...அங்கு இருப்பவர்கள் தான் வந்து எழுதோணும் 

காதல் விவகாரம் இல்லை ஆனால் காதலுக்குள் விழ வைக்கும் ஓர் தந்திரம் கிழக்கில் நடந்துகொண்டு இருக்கிறது  அதனால் காதலுக்குள் வீழ்கிறார்கள் 

On 1/9/2019 at 3:58 AM, குமாரசாமி said:

தங்கச்சி! ரோட்டிலை பதாதைகளோடை வந்து நிக்கிற சனத்தையும்,பதாகையிலை எழுதியிருக்கிறதையும் பார்த்தால் காதல் கலியாணத்தை எதிர்த்த மாதிரியே தெரியுது? ஏதோ ஒண்டு எல்லைமீறி போனபடியாலைதானே சனம் நடுறோட்டுக்கு வந்து நிக்கிது.

ம்ம் எங்கும் அவர்கள் கைகள் ஓங்கி இருக்கும் போது நாம் அடங்கி செல்லவேண்டிய நிலை இதை பற்றி மாகாண கல்விப்பணிப்பாளருக்கு அறிவித்தால் அங்கே மன்சூர் இருக்கிறார் , இப்ப ஆளுநராக ஹிஸ்புல்லா சுத்தமாக கிழக்கு வெளுத்துடும் .

அந்த வாத்திக்கு 

*** மதம் என்பது உங்கள் உள்ளாடை மாதிரிடா ****** அதை நீங்கள் தான் போட்டுக்கொள்ளவேண்டும் அடுத்தவன் மீது கொடுத்து திணீக்க கூடாது அதை நீங்கள் போடுங்கள் என்று:grin:

கடத்திய பிள்ளையை பற்றி ஏதாவது தகவல்?  

.....  எம்மவர்கள், ஏதாவது நடந்தால் ஓர் கொதி கொதிப்பார்கள், பின்பு "ஆறிய கஞ்சி பழங்கஞ்சி" ஆகிவிடும்! இது சிங்களத்துக்கு மட்டுமல்ல முஸ்லீங்களுக்கும் தெரியும்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nellaiyan said:

கடத்திய பிள்ளையை பற்றி ஏதாவது தகவல்?  

.....  எம்மவர்கள், ஏதாவது நடந்தால் ஓர் கொதி கொதிப்பார்கள், பின்பு "ஆறிய கஞ்சி பழங்கஞ்சி" ஆகிவிடும்! இது சிங்களத்துக்கு மட்டுமல்ல முஸ்லீங்களுக்கும் தெரியும்! 

ஊடகங்களுக்கு செய்திப்பஞ்சம் வரும்போது மேலதிக தகவல்களை எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

களுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..? (முழு விபரம் இணைப்பு)

Thursday, January 10, 2019  Jaffna Muslim  3

-Mohamed Nasir-

தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்படுகின்ற மாணவி கிருஷ்ன குமார் கௌரி தேவி என்பவராவார்.

நான்கு வருடங்களாகவே இம் மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டிராத, கண்டிக்காத பெற்றோரும், மற்றோரும் தற்போது கூச்சலிட்டு தன் மகளின் செயலுக்கு இனவாதம் பேசுவதில் எந்தவித நியாயமுமில்லை.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அம் மாணவியின் வீட்டார் பலதையும் பேசிக்கொண்டிருக்கும் போது, தனது மகளின் சுயவிபரத்தையும் கூறியபோதுதான், அம் மகளின் மனதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளளது.

எங்களது மகள் முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்ததென்றும் , பெற்றோர் மரணித்ததால் அவர்களோடு உறவாகயிருந்த நாங்கள் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் கூறிய விடயத்தை செவியுற்ற கௌரி தேவிக்கு, மாற்றம் தேவைப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை நான்கு வருடமாக அவரது பகுதியால் வழக்கமான தொழில்கள் செய்து வரும் முஸ்லீம் சகோதரர்களிடம் தெரிவித்து 

,"நான் இஸ்லாமிய பெண், என்னை அழைத்துச்செல்லுங்கள் "என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

இவ் விடயத்தை அப்பவே மௌலவிமாருக்கு அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அதற்கு மௌலவிமார்கள், இந்த வயதில் இஸ்லாத்துக்கு வருவதாகயிருந்தால் பெற்றோருடன்தான் வரவேண்டுமென்று சொல்லியனுப்பியுள்ளார்கள்.

இந்த மாணவியை களுவன்கேனியில் அவரது சுற்றத்தார் சோனகத்திட புள்ள என்றே அழைப்பார்களாம்.

பெற்றோருடன் முறன்படும்போது "சோனகத்திட புத்திய காட்டுறா " என்றுதான் ஏசுவார்களாம்.

இவ்வாறான நிலையில்தான் இம் மாணவியின் மனதில் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றியுள்ளது. 

முதலில் நெற்றியில் பொட்டு வைப்பதை நிறுத்தியுள்ளார்.

அது மாத்திரமின்றி பாடசாலைக்கு சீருடையில் செல்லும்போது முழங்கால் தெரியாதளவு ஆடை அணிவதோடு, தனியார் வகுப்புகளுக்கு செல்லும் போது டவுசர் அணிந்தே சென்றிருக்கிறlறாராம்

சென்ற வருடம் ரமழான் மாத நோன்பையும் பிடித்திருக்கிறார்.

இவை அத்தனையும் இம் மாணவியின் செயற்பாட்டில் நடந்தேறிய வேளை கண்டிக்காத பெற்றோரும், மற்றோரும் இன்று தன் படிமுறை வளர்ச்சியில் 18 வயதை அடையும் வரை காத்திருந்து "இஸ்லாத்தை படிக்க வீட்டைவிட்டு வெளியேறுகிறேன், என்னை தேட வேண்டாம் " என பெற்றோருக்கு சுயமாக நான்கு பக்க கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறியதை மறைத்து,

அம் மாணவி கல்விகற்ற பாடசாலையில் கற்பித்த இஸ்லாமிய ஆசிரிய ஆசிரியைகள் மீது வீண் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

உங்கள் பாடசாலைக் கல்வியின் உயர்ந்த அடைவு மட்டத்திற்கு இவ் இஸ்லாமிய ஆசிரியர்களின் பங்களிப்பு மிகையானது என்பதை ஏற்றுக்கொள்வீர்களா! 

இறைவனின் ஏற்பாடு இம் மாணவி இஸ்லாத்தையே காதலிக்கிறார்.... நீங்கள் கூறுகின்ற ஆசிரியரையல்ல.

கடந்த 4வருடங்களாக அவர் இஸ்லாத்துக்குள் வர முயற்சித்திருக்கிறார்.

- 18வயது பூர்த்தியாகும் வரை அவர் காத்திருந்து இந்த முடிவினை எடுத்துள்ளார், 

இம் மாணவியின் உளத்தூய்மையை கொச்சைப்படுத்த வேண்டாம்..

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து அம் மாணவியின் பெற்றோர்,

பிள்ளை விரும்புகின்ற மதத்தை பின்பற்ற சம்மதம் தெரிவித்திருந்தும், அதனை முறியடிக்கவே ஓரிரு இனவாதிகள் முன்னின்று செயற்பட்டு, சமூக வலைத்தளங்களில் மிகவும் கேவலமாக இஸ்லாமிய சமூகத்தை கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.

அன்பின் சகோதர சமூகமே, நமக்குள் பிரிவினை வேண்டாம்

பிரிக்கத்துடிக்கும் கயவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம்.

நம்மை பிரிக்க பல்வேறு சக்திகள் கிளம்பியிருக்கின்றன.

அவதானமாகயிருப்போம்,

மாணவி கௌரிதேவி சுயமாக பெற்றோருடன் இணைந்து செல்ல இணக்கம் தெரிவித்தால் அழைத்துச்செல்லுங்கள்.

தனி நபரின் விடயத்தை சமூக பிரிவினையாக பார்ப்பதை தவிர்ப்போம்...

களுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, இஸ்லாத்தை ஏற்றது ஏன்..?

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Muslim இன் கதையைப் பார்த்தால் சிறுமி முடிவெடுக்கும் அளவிற்கு முதிர்ச்சி உள்ளவர் என்றும் தத்து எடுத்தமையால் (உண்மையா தெரியாது) அவர் முஸ்லிமாக மாறியது சரி என்றும் சப்பை கட்டுகின்றது.

சிறுமி மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதால் அவர் கூறுவதெல்லாம் உண்மையாகிவிடாது.

முதலில் இந்த முஸ்லிம் இணையத்தளங்கள் கிழக்கில் தமிழர்கள் மதமாற்றத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். ஆனால் அது அவர்களின் அரசியல், சமூக நிலைப்பாட்டுக்கு எதிர் என்பதால் செய்யமாட்டார்கள். நடுநிலைமை என்ற பெயரில் இனவாதப் பிரச்சாரம் செய்வதை கட்டுரையில் உள்ள “நெடி”  வெளிக்காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2019 at 6:32 PM, ரதி said:

நான் நினைக்கிறேன் பெரும் பாலும் இது காதல் விவகாரமாய்த் தான் இருக்கும்...அங்கு இருப்பவர்கள் தான் வந்து எழுதோணும் 

On 1/8/2019 at 7:11 PM, Justin said:

அப்படித் தான் நானும் ஊகிக்கிறேன். தலையில் துவக்கை வைத்துக் கடத்தி யாரையும் மதம் மாற்ற இயலுமா? ஆனாலும், இதை அங்கிருப்போர் உறுதிப் படுத்த வேண்டும்! உறுதிப் படுத்தினாலும் இந்தத் திரி அணையாது எரியும் என நினைக்கிறேன்! ஏனென்றால், நாங்கள் சவூதி அரேபிய வஹாபி முஸ்லிம்களை விடவும் பிற்போக்காக மாறிக் கனகாலம்!

https://www.bbc.com/news/world/asia

காதலா? அது உண்மையாயின் வாத்தியார் உள்ள போகவேண்டியவர் அல்லவா?

பக்கா, பிக்கர் ஞானசேரர் உள்ள இருப்பதால் இவர்களுக்கு குளிர் விட்டுப் போச்சுது.

சும்மா இருக்கிற பொடியளை, ஜிகாதிகளாவும், பெட்டயள, அந்த ஜிகாதிகளிள் பாலியல் அடிமையாக்கி, மூளை சலவை செய்தனுப்பிற கோஸ்டிகளுக்கு இது சின்ன வேலை.

////பக்கா, பிக்கர் ஞானசேரர் உள்ள இருப்பதால் இவர்களுக்கு குளிர் விட்டுப் போச்சுது.////

ஞானசேரர் வெளியே வருவதற்கு, சுமந்திரன் முயற்சி  செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.