Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று (11.03.19) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய விவேக், 2ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு பழைமைவாய்ந்த, தொன்மையான பூமி இலங்கையெனவும், சுமார் 35000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்த ஒரே பூமி இலங்கையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அனைத்து வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைப் பூமியில் ஒற்றுமை மட்டும் கம்மியாக உள்ளதென குறிப்பிட்ட விவேக், அதனை சரிசெய்துவிட்டால் உலகில் இலங்கை மக்களை விஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2019/115854/

  • Replies 93
  • Views 8.4k
  • Created
  • Last Reply

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

விவேக் பார்ப்பனரல்லவே...

29 minutes ago, Nathamuni said:

விவேக் பார்ப்பனரல்லவே...

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, thulasie said:

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

நீங்கள் சொல்வது போன்று, விவேக் குரல் கொடுத்ததிற்கு ஆதாரம் உண்டா? இணையத்தள செய்திகள் அல்லது விடீயோக்கள்.

பார்ப்பனர் என்று சொல்வதின் அர்த்தம் உங்களுகு புரிந்து  தான் எழுதியிருக்கிறீர்களா?

இந்த பார்ப்பனர் என்ற சொல்ல தமிழ் நாட்டை பொறுத்தவரையில், ஈழத்தமிழரை பொறுத்தவரையில், ஆரிய பிராமணர்களில் ஒரு பகுதியையே குறிப்பிட்டு சொல்கிறோம்.

இந்த பாரிய பிராமணர்களின், தமிழ் நாட்டு பூர்விகம் கடந்த 1000 வருடங்களுக்கு உட்பட்டது.

உதாரணமாக, இந்து ராம் போன்றவர்கள் இந்த வரையறைக்குள் அடங்குவார்கள். இவர்களே தமிழருக்கு, தமிழ் நாட்டில் இருக்கும் தமிழருக்கே ஆப்பு வைக்கும் வேலைகளை செய்பவர்கள்.

பட்டுக்குடும்பி ராமன் (முன்னாள் செயலக RAW உளவாளி) இப்படிப்பட்ட ஆரிய பிராமணர்கள்.

இப்படிப்பட்ட ஆரிய பிராமன்கள் கையிலேயே, ஊடகம், அரசியல் செல்வாக்கு மற்றும் போதியளவு பணமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் பிராமணர்கள், தமிழே மூச்சு, பேச்சு, உயிர் என்று வாழ்பவர்கள். இவர்கள் பொதுவாக  சாதரண வாழக்கை வாழபவர்கள்.  உதாரணமாக, ராஜீவுடனும், மற்றும் கேரளா  நம்பூதிரிகளுடனும் சவுத் ப்ளாக்கில், ஈழத்தமிழருக்கு எதிரான கொள்கையைக் கண்டு கொதித்து கொள்ளுவுப்பட்டு, தனது பத்தாஹ்வியைத் துறந்த வெங்கடராமனும் பிராமணர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எதற்கெடுத்தாலும் சினிமாக்காரர்களை ஊருக்கு கூப்பிடும் பழக்கம் தோன்றியுள்ளது (நான் விவேக்கிற்கு எதிர் இல்லை)...அவர்களை கூப்பிட்டு கலை நிகழ்ச்சி வைப்பது என்பது வேறு...ஆனால் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சினிமாக்காரர்களை கூப்பிடுவது ஏற்புடையது அல்ல 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, பிழம்பு said:

இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவர் சொன்னதிலை உண்மை இருக்குத்தானே.....சும்மா எடுத்துக்கெல்லாம் கொதிக்கப்படாது...ஈழத்தமிழனின் வளர்ச்சி  சிங்களவருக்கும் இந்தியாவுக்கும் நன்றாகவே தெரிகின்றது.
ஆனால் எமக்கு??????
கோபுரத்தின் அழகு கிட்ட நின்று பார்த்தால் தெரியாதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

இப்ப எதற்கெடுத்தாலும் சினிமாக்காரர்களை ஊருக்கு கூப்பிடும் பழக்கம் தோன்றியுள்ளது (நான் விவேக்கிற்கு எதிர் இல்லை)...அவர்களை கூப்பிட்டு கலை நிகழ்ச்சி வைப்பது என்பது வேறு...ஆனால் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சினிமாக்காரர்களை கூப்பிடுவது ஏற்புடையது அல்ல 

முதல்லை உந்த சாமத்திய வீட்டு வீடியோ......கலியாணவீட்டு வீடியோக்களிலை சினிமாப்பாட்டு போட்டு வாழ்த்திறதை நிப்பாட்டச்சொல்லுங்கோ....:grin:

நல்லதை எடுத்து கெட்டதை விட்டுடணும்....இது நம்ம கொள்கை.😎

7 hours ago, thulasie said:

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

 

8 hours ago, Nathamuni said:

விவேக் பார்ப்பனரல்லவே...

பல்ப்:)

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விவேக், ஈழத் தமிழர்கள் மேல் அன்பு கொண்டவர் என்பதனை,
அவரின் பேச்சுக்களிலும், அவர் நடித்த சில படங்களிலும், ஈழத்து தமிழ் பேசி நடித்து இருப்பவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங் விவேக் தம்பி,  என்ன ஒரு சிந்தனை பட் இலங்கை டேமில்ஸ் எல்லாம் நல்ல ஒற்றுமை.

இப்ப பொள்ளாச்சி தானே issue , அதைக் கொஞ்சம் கவனிக்கிறது. . .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவர் குறிப்பிட்டதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

பிழைகளை நிவர்த்தி செய்ய ஆதங்கப்பட்டு சொன்னால், "எல்லாம் எமக்குத் தெரியும்,  ஒன் வேலையைப் பார்.." என சொல்வது என்ன மனநிலையோ..? :oO:

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் கூறியது முற்றிலும் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

எவரையும் Quote  பண்ண விரும்பவில்லை.  உவர் சொல்லும் உந்த ஒற்றுமையில் ஒரு சத வீதமேனும் அன்று உங்களிடையே இருந்து செயல்பட்டிருந்தால் இன்று நிலை வேறு.  நாங்கள் வேரறுந்து கொண்டிருந் த நேரம்  கடைசி வரையும் உங்களையும் நம்பிக் கொண்டிருந்து தானே இருந்தோம்.  நீங்கள்   - குறிப்பாக  நீங்கள் -  எங்களிடையே ஒற்றுமை பற்றி உபதேசிப்பது  சற்றே நகை முரணாக இல்லை நண்பனே.  

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லிக்கொண்டு அழிய வேண்டியதுதான்..ஒரு பயலும் தமிழர்களுக்கு உதவப்போவதில்லை..!

நன்றி.

15 hours ago, thulasie said:

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

விவேக் என்கின்ற மனிதர் மேல் ஏன் இப்படியான வீண் வாதங்கள் ...சினிமா அவரின் தொழில் அவ்வளவு தான் ...மற்றும் படி ஈழ தமிழர் மேல் மதிப்புள்ள மனிதர் ....பாப்பனர் என்றால் ஏன் இந்த கோபம் ...
நம் நாட்டிலும் இருக்கின்றார்கள் தானே .....

  • கருத்துக்கள உறவுகள்

விவேக்கை நான் பார்ப்பணனாகப் பார்க்கவில்லை. அவரது கருத்துக்களை நான் கேட்டிருக்கிறேன், சமூக சீர்திருத்தத்திற்காக பேசுபவர். அவர் பார்ப்பணத்தின் எடுபிடி என்பது நம்பமுடியாதது.

இங்கே அவர் குறிப்பிடும் எமக்கிடையைலான ஒற்றுமை என்பது உண்மைதானே? போராளிக்குழுக்கள், அரசியல்க் கட்சிகள் என்று எமக்குள் பேதங்களால் பிரிந்துதானே இருந்துவருகிறோம். இதைச் சுட்டிக் காட்டியதில் என்ன தவறு? 

எமக்குள் பிரிந்து அடிபட்டு அழிவதென்பது தமிழன் வாங்கிவந்த வரம். அது ஈழத் தமிழனாக இருந்தாலென்ன, தமிழகத் தமிழனாக இருந்தாலென்ன, நாம் மாறப்போவதில்லை.

எல்லோருக்குமாக ஒருத்தன் வந்தான், அவனையும் காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு தெருவில் நிற்கிறோம், இதுபோதாதா நாம் யாரென்று எமக்கு உணர்த்துவதற்கு? 

  • கருத்துக்கள உறவுகள்

எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தான் இன்றய இலங்கை தமிழினம்.

 இன்றைய நிலையில் தேவைப்படுவது உணைர்ச்சிகரமான புலம்பல்கள் அன்றி சகலரும் பங்கு பற்றி நிற்கும்  செயல்பாடுகளே.

 மிகப் பலர் தாயகத்திலும் புலத்திலும் அர்ப்பணிப்புடன் இவ்வகையில் செயல்பட்டு வருவது மனதிற்கு இதமளிக்கக் கூடிய விடயம்.

 சும்மா சகட்டு மேனிக்கு யாரவது புத்திமதி சொல்ல வெளிக்கிட்டால் அதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. செயல்படுபவர்கள் மட்டுமே புத்திமதி சொல்லத் தக்கவர்கள். வியாபாரம் செய்ய வருபவர்கள் அல்ல நிச்சயமாக ......

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பேர்வழி இதனையே தமிழ்நாட்டு அரங்கம் ஒன்றில் ( இலங்கை சம்பந்தப் பட்ட பல நிகழ்வுகள் அங்கேயும் நடக்கின்றது )  எழுந்து நின்று புத்திமதி சொல்லி பிறழ்வை நிவர்த்தி செய்ய தன்னால் என்ன செய்ய முடியும் என்று கோடி காட்டியிருந்தால் ....ம் ம் ம். ....

 

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் மட்டக்களப்பில் நடந்த நிகழ்வில் தமிழர்களிடையையே ஒற்றுமை இல்லை என்று சொன்னது  ஆதங்கத்தினால்தான் என்பதை புரியாமல் பார்ப்பனன் (அதுகூட உண்மையில்லை), கழிசடை என்று சொல்லி தம்மை மெச்சிக்கொள்பவர்களின் ரோதனை தாங்கமுடியவில்லை😡

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

முதல்லை உந்த சாமத்திய வீட்டு வீடியோ......கலியாணவீட்டு வீடியோக்களிலை சினிமாப்பாட்டு போட்டு வாழ்த்திறதை நிப்பாட்டச்சொல்லுங்கோ....:grin:

நல்லதை எடுத்து கெட்டதை விட்டுடணும்....இது நம்ம கொள்கை.😎

ஆன்மிகம் சம்மந்தப்படட ஒரு நிகழ்வில் சினிமாக்காரர்கள் தேவையில்லை என்பது என் கருத்து. சினிமாவை ரசிப்பதில் தப்பில்லை...விவேக் இதில் சொன்னதும் உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் கருத்தாடல்கள்,  திரியின் உணர்வு பூர்வமான உள்ளடங்கல்  காரணமாக, கருத்தாடலின் சில வரை முறைகளை தாண்டி செல்ல தலைப்பட்டிருக்கின்றது போலும்….

 

  1. முன்பே நினைத்தேன்,  சாதி பெயர்களை சொல்லி இணைக்கப்படும் கருத்தாடல்களை நிர்வாகம் ஏன் அனுமதித்திருக்கின்றது என.  பொதுவெளியில் இவற்றிற்கு இடமில்லை என்பது வெளிப்படை .

     

  2.  நடிகர் விவேக் தனது உரையில் தனது எல்லையத் தாண்டியே சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் அவை உண்மையா பொய்யா என்பதல்ல இங்கேயே பிரச்சினை . (  சபை அறிந்து சொல்லல் சந்தர்ப்பம் அறிந்து சொல்லல் … )  

     

  3. தமிழ் நாட்டினர் பல காலம் எங்களுக்கு புகலிடம் கொடுத்தார்கள் -- நன்றியுடையவர்களாக இருக்கிறோம் .

  4. தமிழ் நாட்டினரும் நாங்களும் ஒரே மொழியைப் பேசுகிறோம் --  நட்பாக இருக்கிறோம் .

     

  5. தமிழ் நாட்டினரின் சக்தி மிக்க ஒரு பகுதி எங்களை வியாபார சந்தையாக பார்க்கின்றனர் --  அவதானமாக இருக்கிறோம்  (  சில காலத்திற்கு முன்னர் எனது மகளின் நாட்டிய அர்நாகேற்றத்திற்கு சென்னையில் இருந்த ஒரு இசை வல்லுனரை பாட வர முடியமா என கேட்டிருந்தேன் .  பாட வருவற்கில்லை  , “ Chief Guest”  ஆக வேண்டுமென்றால் வருகின்றேன் என்கிறார் ?  கடுப்பாகி அதை கைவிடடேன்.  தொடர்ந்து வந்த மேலும் பல அனுபவங்களின் அடிப்படையில் , சுரண்டுவதற்கு இலகுவான இலக்குகள் என்று இலங்கைத் தமிழரை கணித்து வைத்திருக்கின்றனர் என தோன்றிற்று )

     

  6. 1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே , களத்திலும்  சரி புலத்திலும் சரி. இல்லாவிட்டால் , (தர்க்க ரீதியாக  பார்த்தாலும் கூட)  சம கால கட்டத்தில் தெரிந்தெடுக்கப் படாத  அரசாங்கம் அல்லாத  ஒரு அமைப்பு முப்படைகளையும் கொண்டு வருடக் கணக்காக இயங்கியிருக்க முடியாது.   பின்னடைவிற்கு   பல காரணங்கள் உண்டு,  தமிழ் நாட்டு காரணி உட்பட.

     

    ஆகவே விவேக் சார் , இலங்கைத் தமிழரின் ஒற்றுமை பற்றி போகிற போக்கில் கமெண்ட் அடிப்பதை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வலிக்கின்றது

 

இலங்கைத் தமிழர் நிலைமைகளைப் பார்த்து தனது மனதுக்கு தோன்றியதை தனது பாணியில் சொல்லியிருக்கிறார். இதில் தவறிருப்பதாக தெரியவில்லை!

மேலும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் செல்வது அந்த மக்களின் நிலைமைகளை நேரடியாக அறிய ஒருவாய்ப்பாக இருக்கும்.

காந்தி சிலைகளுக்கு மாலை போடுவதை தவிர்த்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்திக்க வைத்திருக்கலாம். இது விவேக்கின் தவறல்ல, மாறாக இது ஏற்பாடு செய்தவர்களின் வறட்டு / பிற்போக்கு மனநிலையை காட்டுகிறது.

விவேக் உண்மையில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள ஒருவரா என்பதை அவரது  எதிர்கால செயற்பாடுகள் உணர்த்தும். 

10 hours ago, சாமானியன் said:

1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே ,

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

அது ஒற்றுமையே இல்லை.

வன்முறை.

இதையே இன்றும் யாழ் தொடர்வதும்  வேதனையானது 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

முன்பே நினைத்தேன்,  சாதி பெயர்களை சொல்லி இணைக்கப்படும் கருத்தாடல்களை நிர்வாகம் ஏன் அனுமதித்திருக்கின்றது என.  பொதுவெளியில் இவற்றிற்கு இடமில்லை என்பது வெளிப்படை .

சாதி என்பது உண்மைகளை, அதுவும் வரலாற்று அல்லது நிகழ்கால உண்மைகளை சொல்வதத்திற்கும், சாதியால்  எப்படி ஒருவரை ஒருவர் வேறுபடுத்தி, சாதியின் அடிப்படையில் ஒருவரை உயர்த்தியும் ஏனெயயோரை தாழ்த்தியும்  வேறுபடுத்துதல் என்பது தவிர்க்கப்படுதல்  வேண்டும் என்ற நிர்வாகத்தின் உயர்ந்த கொள்கைக்கும் இடையேயான வெளியில், சாதி என்ற சொல்லின் விருப்புரிமை பிரயோகத்தின் உங்களின்(தவறான ) புரிதலே இது.

நான் நிர்வாகத்தின் ஓர் அங்கம் அன்று.   

மறுவளமாக, இங்கு சாதி என்ற சொல்லின் பிரயோகம் எப்படி அந்த குறித்த சாதியின்  ஓர் பகுதியினர், அவர்களது  தேசிய குழுமத்திற்கு  (அதாவது தமிழரை) எவ்வாறு பங்கம் விளைவிக்கின்றனர் எனும் கருத்தை முன்வைப்பதிற்கே பிரோயோகிப்பட்டது.

 சாதி (அல்லது வேறு எந்த சர்ச்சைக்குரிய சொல்லாகட்டும்) என்ற சொல்லின் இப்படிப்பட்ட பிரயோகம் தவிர்க்கப்பட முடியாதது.
 
சுருக்கமாக, சர்ச்சைக்குரிய சொல்லை பாவிக்கும் பொது எந்த நோக்கத்திற்காக பவிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அந்த சொல்லின் சகிப்புடமை,  ஏற்புடைமையோ அல்லது வெறுப்புடைமையோ தீர்மானிக்கப்படுகிறது.

இதை அடிப்படையாக வைத்தே, இதுவரையிலும் யாழில் எனது கருத்துக்களை பதிவிட்டிருக்கிறேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.