Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள பரிமளம் அறிவது!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/1/2019 at 4:36 AM, ஈழப்பிரியன் said:

பக்கத்து தோட்டத்து சந்திரனல்லோ வில்லனாக நிக்கிறான்.

என்னது உவன் சந்திரனோ?

நான் சும்மா அவன்ரை முகத்திலை ஊதி விட்டனெண்டாலே சந்திரமண்டலத்திலை போய் விழுந்து கிடப்பன்...🤪

On 4/1/2019 at 5:30 AM, ராசவன்னியன் said:

கடைசியில அரசாங்க தபால் ஊழியரை, 'புரோக்கரா'க்கிப் போட்டீங்களே ஐயா..! :)

  என்ன செய்வது? அவர் தலைவிதி அப்படி....tw_glasses:

On 4/1/2019 at 6:23 PM, தனிக்காட்டு ராஜா said:

இந்த ம்னுசன் வெளிநாடு வந்ததும் வெளிநாட்டு மாப்பிள்ளை ரேஞ்சுக்கு ஏதாவது எசகு பிசகா அடிச்சிருக்கும் அதான் பரிமளம் ஆச்சிக்கு கோபம் வந்திருக்கும் என நான் நினைக்கிறன் 

மண்வாசனை தெரிஞ்சவண்டா..... 👈  💪  👍

  • Replies 294
  • Views 47.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையார் துணை

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
16.04.1983

அன்புள்ள வசந்தி அறிவது!
                                                           நான் நல்ல சுகம். உங்கடை சுகங்கள் எப்படி?

உங்கடை கடிதம் வந்தவுடனை எனக்கு இனி இல்லையெண்ட சந்தோசமாய் இருந்தது. நீங்கள் கடிதம் எழுதுவியள் எண்டு நான் எதிர்பாக்கவேயில்லை.

வேலையெல்லாம் எப்படி போகுது.போக்குவரத்திலை கவனமாயிருங்கோ.சண்முகத்தின்ரை மூத்தவனும் மூண்டாவதும் கனடாவுக்கு வெளிக்கிட்டு இடையிலை பிடிபட்டு போச்சினம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ?

எனக்கு இஞ்சை விசா பிரச்சனை இறுகிக்கொண்டு போகுது.சுவீசுக்கு போகலாமெண்டால் அங்கையும் இப்ப திருப்பி அனுப்ப வெளிக்கிட்டுட்டாங்களாம். பரீஸ் போடர் இப்ப கஸ்டமெண்டு இஞ்சை கதைக்கினம்.நான் வேலை செய்யிற இத்தாலி முதலாளி சொன்னான் உனக்கு ஏதும்  பிரச்சனை எண்டால் சொல்லு நான் உன்னை இத்தாலியிலை கொண்டுபோய் விடுறன் அங்கை ஒரு பிரச்சனையுமில்லை எண்டான். எனக்கு இப்ப என்னத்துக்கடா ஊரைவிட்டு வெளிக்கிட்டன் எண்டிருக்குது.

உங்கடை தலைவி அதுதான் அன்பு அக்கா பரிமளம் என்ன செய்யிறா?கடிதத்துக்கு மேலை கடிதம் போட்டும் ஒரு பதிலுமில்லை.நான் ஒண்டும் அவவிட்டை வித்தியாசமாய்  கேக்கேல்லை. விசா பிரச்சனை இருக்கிறதாலை இப்பிடியும் ஒரு ஐடியா இஞ்சை இருக்குது எண்டு படத்தையும் அனுப்பினன். அதுக்குப்பிறகு பதில் எதுமில்லை.நான் விளக்கமாய் எல்லாம் எழுதி விளங்கப்படுத்தி விட்டன். இதுக்கு மேலை என்னாலை ஒண்டும் செய்யேலாது. ஒரேயொரு வழி நான் ஊருக்கு திரும்பி வாறதுதான்.

நீங்கள் அமைதியாய் யோசிச்சு முடிவெடுப்பீங்கள்.உங்கடை அக்கா அப்பிடியில்லை. உடனை கோபம் வரும்.அவ முடிவெடுத்தால் கடவுளாலையும் மாத்தேலாது.இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.

நீங்கள் வேலை செய்யிற இடத்திலை நீங்கள் கதைக்கக்கூடியமாதிரி ரெலிபோன் வசதி இருந்தால் நம்பரை தரவும்.

இத்துடன் முடிக்கின்றேன்.
அன்புடன்
குரு

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

அண்ணை, நான் நினைத்தது சரியாகும் போல இருக்கு.  நீங்கள் விசா பிரச்சனைக்காக ஒரு வெள்ளை பொம்பிளையை temporary ஆக கட்டி விசா எடுக்கும் planஇல் இருந்தீங்கள் போல இருக்கு. அந்த பெண்ணின் படத்தை அண்ணிக்குக்கு அனுப்பி பிரச்சனையை கிளறி விட்டீர்கள். ஆனாலும் இன்னும் சஸ்பென்ஸ் உடைக்கிறீங்கள் இல்லை. வேளைக்கு சொல்லுங்கோ, இல்லாட்டிக்கு வேற வேற மாதிரி எல்லாம் யோசனை போகுது. 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/1/2019 at 8:35 PM, ரதி said:

வரும் போது குறைந்தது 20 வயசு என்டால் இப்ப எத்தனை என்று யோசிக்கிறன் 🤔
 
கணக்கு பாக்கத்தெரியாதே?  கணக்கு வாய்ப்பாடு அனுப்பி விடட்டே? :grin:

ஆனால் நான் 20 வயசிலை ஜேர்மனிக்கு வரேல்லை தங்கச்சி....😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

ஆனாலும் இன்னும் சஸ்பென்ஸ் உடைக்கிறீங்கள் இல்லை. வேளைக்கு சொல்லுங்கோ, இல்லாட்டிக்கு வேற வேற மாதிரி எல்லாம் யோசனை போகுது. 🤔

விடுப்பில பொம்பிளைகளை விட மோசமா நிக்கிறியள்.

3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் அமைதியாய் யோசிச்சு முடிவெடுப்பீங்கள்.உங்கடை அக்கா அப்பிடியில்லை. உடனை கோபம் வரும்.அவ முடிவெடுத்தால் கடவுளாலையும் மாத்தேலாது.இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.

அக்கா கடிதம் போடாட்டி பரவாயில்லை.பக்கத்து தோட்டக்கார சந்திரனைப் பார்த்து சிரிக்கேக்கையே என்னைக் காய்வெட்டப் போறா என்று யோசிச்சனான்.
பரவாயில்லை நீங்களெண்டாலும் ஒழுங்காக கடிதம் எழுதுங்கோ.செலவுக்கு காசுகள் இருக்கோ அனுப்பட்டோ?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

... அக்கா கடிதம் போடாட்டி பரவாயில்லை.பக்கத்து தோட்டக்கார சந்திரனைப் பார்த்து சிரிக்கேக்கையே என்னைக் காய்வெட்டப் போறா என்று யோசிச்சனான்.

பரவாயில்லை நீங்களெண்டாலும் ஒழுங்காக கடிதம் எழுதுங்கோ.செலவுக்கு காசுகள் இருக்கோ அனுப்பட்டோ?

என்ன சார், ரூட் தடம் மாற யோசனை சொல்றீங்க.. ?

கு.சா அவர்களை ஏக பத்தினி விரதனாய் இருக்க விடமாட்டீர்களே..!  lancecoeurs.gif

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் விசாவுக்காக யாருக்கோ வலைவிரிச்ச செய்தி உள்ளால உ லாவுது என்பது தெரிகிறது . 

என்ன அவள் விசாவுக்கு மட்டுமா ?? அல்லது எல்லாவற்றுக்குமா என கேட்டுவிட்டு கதைக்க மறுத்திருப்பா என்பது உண்மையா இருக்குமே என்ன?

7 hours ago, குமாரசாமி said:

பிள்ளையார் துணை

சிவமயத்தோட தொடங்கின கடிதங்கள் இப்ப பிள்ளையாற்ர துணை வேண்டி எழுதியிருக்கு! இதில ஏதாவது clue கிடைக்குமோ?🤔 

(முருகனை வள்ளியுடன் சேர்த்துவைத்த பிள்ளையார் துணை வேண்டுவதும் பொருத்தமானதே!👌🤣)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

என்ன சார், ரூட் தடம் மாற யோசனை சொல்றீங்க.. ?

கு.சா அவர்களை ஏக பத்தினி விரதனாய் இருக்க விடமாட்டீர்களே..!  lancecoeurs.gif

அவர் கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஏக பத்தினி விரதர்.....அதுக்குமுன் ஏகப்பட்ட பத்தினி விரதர்....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

அவர் கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஏக பத்தினி விரதர்.....அதுக்குமுன் ஏகப்பட்ட பத்தினி விரதர்....!  😁

giphy.gif

  • கருத்துக்கள உறவுகள்

கதை அப்பிடிப்போகுதோ. விசாவுக்காக வேற றூட் யோசிச்சா பிழைதானே. பரிமளம் கோப்பட்டது சரிதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/1/2019 at 9:30 PM, ராசவன்னியன் said:

ஏறக்குறைய 60 வயசு தேறும்! :)

நீங்கள் பேக்காய் கண்டியளோ....:grin:

On 4/2/2019 at 1:18 AM, ரஞ்சித் said:

கரணவாய்....ம்ம்ம்...என்ர அம்மாவின்ர ஊரும் அதுதான். அருமையான, பச்சைப் பசேல் எண்ட ஊர். ஒவ்வொருமுறை பாடசாலை விடுமுறைக்குத் தவறாமல் போய்விடுவேன். உங்களின் கதையோடு, என்னையும் கரணவாயை எட்டிப் பார்க்க வைத்துவிட்டீர்கள்.

கரணவாய் எனது சொர்க்க பூமி.....ஆறுகள் நதிகள் இல்லாவிட்டாலும் அந்த பசுமையும் குளிர்ச்சியும் பிரமிப்பாக இருக்கும்.

On 4/2/2019 at 12:41 AM, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு தம்பி தான்.

அப்ப உங்களுக்கு?????? 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/2/2019 at 4:50 AM, ஏராளன் said:

திருப்பத்துக்கு மேல திருப்பமா இருக்கே?! எங்க போய் முடியுது என்று பாப்பம்.

என்னக்கே எங்கை போய் முடியப்போகுது எண்டு தெரியேல்லை.....🤣 🤣 🤣

On 4/2/2019 at 2:17 AM, nilmini said:

அது ஒரு பெரிய வில்லங்கம் தான் 

ம்ம்ம்...😃

On 4/2/2019 at 6:52 AM, ஈழப்பிரியன் said:

மரத்தால ஏறி கொப்பால இறங்கிறது.
கொப்பால ஏறி மரத்தால இறங்கிறது.
இது
கொப்பால ஏறி கொப்பால இறங்கிறது.

ச்சீச்சீ.....மரத்தாலைதான் எறினது....அது வேறை பெருங்கதை  🤪

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா நம்பரை தரட்டாம்!
போன் எடுக்கிறாராம் வசந்திக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/2/2019 at 7:09 AM, ராசவன்னியன் said:

கூட்டிக் கழித்துப் பார்த்தால்,  'பெரிய அண்ணனாக' இருப்பார் போலிருக்கே..? vil-sourcils.gif

19 hours ago, ரதி said:

அதை விடக் கூட இருக்கும் போல 😄

à®à®ªà¯à®ª à®à®¨à¯à®¤à¯à®à®®à®¾ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, நீர்வேலியான் said:

ஆனாலும் இன்னும் சஸ்பென்ஸ் உடைக்கிறீங்கள் இல்லை. வேளைக்கு சொல்லுங்கோ, இல்லாட்டிக்கு வேற வேற மாதிரி எல்லாம் யோசனை போகுது. 🤔

வேறைமாதிரி யோசினை எண்டால்? எங்கை அதை ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்??????? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

விடுப்பில பொம்பிளைகளை விட மோசமா நிக்கிறியள்.

அக்கா கடிதம் போடாட்டி பரவாயில்லை.பக்கத்து தோட்டக்கார சந்திரனைப் பார்த்து சிரிக்கேக்கையே என்னைக் காய்வெட்டப் போறா என்று யோசிச்சனான்.
பரவாயில்லை நீங்களெண்டாலும் ஒழுங்காக கடிதம் எழுதுங்கோ.செலவுக்கு காசுகள் இருக்கோ அனுப்பட்டோ?

கூத்து    இனித்தானே   தொடங்கப்போகுது   ராசா......🤠

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
24.04.1983

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                        நான் நல்ல சுகம் உங்கடை சுகத்துக்கும் சன்னதியானை வேண்டுறன்.

நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டிருந்தன். கிடைச்சிருக்குமெண்டு நினைக்கிறன்.எண்டாலும் இருப்புக்கொள்ளாமல் திருப்பியும் எழுதுறன்

நான் இப்ப வேலை செய்யிற இடத்திலை பதவி கூட்டி தந்திருக்கினம். சம்பளமும் கூட்டி தல்லாம் எண்டு மூனா சொல்லியிருக்கிறார்.உனக்கு என்ன பிரச்சனை எண்டாலும் சொல்லு நான் எல்லாஉதவியும் செய்வன் எண்டு மூனா சொன்னவர்.

உனக்கு விசாபிரச்சனை எண்டால் சொல்லு  எனக்கு ஆக்களை தெரியும் எல்லாம் வெட்டி ஆடலாம் எண்டு சொன்னவர்.ஆக மிஞ்சி போனால் இத்தாலிக்கு கொண்டு போய் உன்னை இறக்கி விடுறது என்ரை பொறுப்பு எண்டு சத்தியம் பண்ணாத குறையாய் சொன்னவர்.

நல்ல மனிசன் தெய்வம் மாதிரி. உனக்கு உன்ரை குடும்பத்திலை ஆரையும் கூப்பிடோணுமெண்டால் சொல்லு நான் அவையை இத்தாலிக்கு கூப்பிட வசதி செய்வன் எண்டும் சொன்னவர்.அதுக்கு பிறகு இஞ்சாலை ஜேர்மனிக்கு ஓட்டமெற்றிக்காய் வரலாமாம்.

நான் இப்ப ஒருத்தரும் இல்லையெண்டு சொல்லிப்போட்டன். என்னை பாக்க கவனிக்க ஆர் இருக்கினம். நான் தனியத்தானே இருந்து காலத்தை கடத்துறன். போனகிழமையும் சரியான தலையிடி காய்ச்சல் எழும்பி நடக்கேலாமல் போச்சுது. தேத்தண்ணி வைக்க சரியாய் கஸ்டப்பட்டு போனன்.

இஞ்சை ஆள் உதவி கட்டாயம் வேணும்.இல்லாட்டில் வாழேலாது.காய்ச்சலாலை நான் இரண்டு நாள் வேலைக்கு போகேல்லை. என்ரை மூனா வீட்டுக்கு வந்து உனக்கு வாழ்க்கை துணை கட்டாயம் வேணுமெண்டு தாறுமாறாய் பேசிப்போட்டு போட்டான்.அவங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கெமெண்டு நான் நினைக்கிறன்.

வசந்தி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

வேறை என்ன வசந்தி நான் பிறகு மிச்சம் எழுதுறன். காய்ச்சலாலை கைகால் எல்லாம் நடுங்குது.

உங்கடை பதில் கடிதத்தை

எதிர்பாத்து விடை பெறும்

அன்புடன்

குரு

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2019 at 5:44 AM, குமாரசாமி said:

எல்லாமே கற்பனை உலகம் சகோதரி. நிஜகடலில் மூழ்க வேண்டாம். :)

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ!!!

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா, பல்சுவையும் கொஞ்சுதம்மா...

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகிழமையில திரும்ப இன்னொரு கடிதமே?? இவரை நம்பி பரிமளம் எப்பிடி வாறது??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருகிழமையில திரும்ப இன்னொரு கடிதமே?? இவரை நம்பி பரிமளம் எப்பிடி வாறது??

இது துணைவியாக வசந்தி வாறதுக்கு , காச்சலுக்கு தேத்தண்ணி வச்சு குடுக்க.....!   😁

25 minutes ago, suvy said:

இது துணைவியாக வசந்தி வாறதுக்கு , காச்சலுக்கு தேத்தண்ணி வச்சு குடுக்க.....!   😁

வசந்தி படிச்சபிள்ளை,அதோட கச்சேரியில வேலை செய்யிறாதனே.

  • கருத்துக்கள உறவுகள்

குரு அத்தான்,

கரணவாய் பரிமளம், ஹைடெக் பரிமளமாய் பரிணமித்து கன நாளாச்சு.. ! :grin:

பெரியவர் அத்தான், நீங்கள் இன்னமும் 'வைகைக் கரை காற்றையும், வசந்தியையும்' தூதுவிடுகிறீர்களே..?

இது தகுமா..? tw_rage:

உங்கள் காணொளிக்கு, என் பதில் காணொளி கீழே..!

பரிமளமா.. கொக்கா..???  :)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இது துணைவியாக வசந்தி வாறதுக்கு , காச்சலுக்கு தேத்தண்ணி வச்சு குடுக்க.....!   😁

துணைக்கும், துணைவிக்கும் பாரிய வித்தியாசமுள்ளது..:unsure:

என்னங்கப்பா இது...  வள்ளி, தெய்வானை கதையாகவல்லோ போகுது..?

பேரு வேற 'குமாரசாமி'யாக வேறு இருக்கு..!  :)

துணைவியா..? இணைவியா..??  

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இன்னும் எத்தினை கடிதம் வசந்திக்கு எழுதப்போகிறாரோ தெரியவில்லை. இதைப்பார்த்தால் இவர் பரிமளம் அண்ணியோட சண்டையை திட்டமிட்டு உருவாக்கி , அதை காரணமாக வைத்து வசந்திக்கு லெட்டர் எழுதி விளையாடி இருக்கிறார் போல இருக்கு. இதுக்கு ஏட்டு (postman) ஏகாம்பரம் தூது வேறு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.