Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

modi-tna-300x201.jpgதமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு வந்த இந்தியப் பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசரமாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று, கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியிருந்தது.

அரசியலமைப்பு திருத்தங்கள் ஒரு சிக்கலான பிரச்சினை என்பதால் இந்த விவகாரத்தை ஆய்வு செய்த பின்னரே, அதுகுறித்து பார்க்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

அதேவேளை, பலாலி விமான நிலையத்தை  அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்தியப் பிரதமரிடம் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கோரியிருந்தனர் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.

எனினும், கூட்டமைப்பு பிரதிநிதிகளின் புதுடெல்லி பயணம் எப்போது என்ற தகவல் அந்தச் செய்தியில் கூறப்படவில்லை.

http://www.puthinappalakai.net/2019/06/17/news/38570

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு .... இது வரை இந்தியாவுக்கோ, அல்லது வேறு எந்த வெளிநாட்டுக்கோ போய்...
தமிழ் மக்களுக்கு, சாதகமாக  சாதித்ததாக  எதுவுமே இல்லை.

அப்படியிருக்க... இவர்கள்  "ஷொப்பிங்" செய்வதற்காக போகும் பயணங்களால்,  அர்த்தம் இல்லை.
மூடிக் கொண்டு... ஊரிலேயே இருப்பதுதான் நல்லது.

31 minutes ago, nunavilan said:

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திரு, சுமந்திரன் அவர்கள் அரசாயல் தீர்வு கிடைக்காவிடில் பதவியை துறப்பேன் என்று முன்னர் உறுதி வழங்கியிருந்தார். அதற்கு என்னவாயிற்று?

அரசாங்கத்துக்கான தமது ஆதரவை வழங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அரங்கேற்றவே அரசுக்கான தங்களின் ஆதரவு தொடர்வதாகக் கூட்டமைப்புக் கூறிவந்தது.

ஆனால் இப்போது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு என்னவாயிற்று என்றே தெரிய வில்லை 😞 

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பங்கள்...கிடைக்கின்ற போதெல்லாம்.....தூதாக அனுப்புவதற்க்குத்...தமிழனிடம்....ஒரு கிருஷ்ணன் கூட இல்லை  என்பதே நிதர்சனம்....!

  • கருத்துக்கள உறவுகள்

4 சமோஷா & சாய்.......

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் வருகுது!          நல்லகாலம் வருகுது!

நாலுபேர் சென்றால் நல்லது நடக்கும்.!! 

LRG_20170623150404311932.jpg

4 hours ago, nunavilan said:

அதேவேளை, பலாலி விமான நிலையத்தை  அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்தியப் பிரதமரிடம் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கோரியிருந்தனர் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.

இது ரொம்ப முக்கியம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

இது ரொம்ப முக்கியம். 😂

முக்கியம் மட்டுமல்ல, அவசரமும்கூட. தமிழீழத்தில் குடியேற்றப்பட்ட, குடியேற்றப்படும் சிங்களமக்கள்  தமிழர்களைப்போல் கொழும்புவந்து சிரமப்படாது பயணிக்கவேண்டும் என்ற கூட்டமைப்பின் நல்லெண்ணமே தவிர வேறொன்றுமில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பு .... இது வரை இந்தியாவுக்கோ, அல்லது வேறு எந்த வெளிநாட்டுக்கோ போய்...
தமிழ் மக்களுக்கு, சாதகமாக  சாதித்ததாக  எதுவுமே இல்லை.

அப்படியிருக்க... இவர்கள்  "ஷொப்பிங்" செய்வதற்காக போகும் பயணங்களால்,  அர்த்தம் இல்லை.
மூடிக் கொண்டு... ஊரிலேயே இருப்பதுதான் நல்லது.

கொழும்பிலை வீடு  டெல்லியிலும் வீடு கிடைக்கும் என்று அலையிதுகள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, nunavilan said:

தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

Bildergebnis für rocket ready gif

ஆ....வருது...வருது.......ஆ  விலகு விலகு....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

திரு, சுமந்திரன் அவர்கள் அரசாயல் தீர்வு கிடைக்காவிடில் பதவியை துறப்பேன் என்று முன்னர் உறுதி வழங்கியிருந்தார். அதற்கு என்னவாயிற்று?

அரசாங்கத்துக்கான தமது ஆதரவை வழங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அரங்கேற்றவே அரசுக்கான தங்களின் ஆதரவு தொடர்வதாகக் கூட்டமைப்புக் கூறிவந்தது.

ஆனால் இப்போது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு என்னவாயிற்று என்றே தெரிய வில்லை 😞 

சுமத்திரன் தமிழனை வைச்சு பிழைக்க வந்தவர் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா ampaani?

இந்திய பிரதமருடனான சந்திப்புக்கு இன்னும் உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கவில்லை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைத்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தன.

இது சம்பந்தமாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் எமது செய்தி சேவை தொடர்புகொண்டு வினவிய போது, கொழும்பில் வைத்து கூட்டமைப்பு மோடியை சந்தித்த வேளையில் இதற்கான அழைப்பு கிடைத்திருந்த போதும் அதன் பின்னர் இதுவரையில் அதிகார பூர்வமான அழைப்புக்கள் எதுவும் விடுக்கப்படவில்லை என கூறினார்.

இதேவேளை இந்த செய்தி குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்த்தானிகரகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்திய மத்திய அசரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் தங்களுக்கு அனுப்பப்படவில்லை எனவும் அதன் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

http://www.hirunews.lk/tamil/218597/இந்திய-பிரதமருடனான-சந்திப்புக்கு-இன்னும்-உத்தியோகபூர்வ-அழைப்பு-கிடைக்கவில்லை-த-தே-கூ

சவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை  அடைந்தே தீர்வோம் - சுமந்திரன் 

முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

sumanthiran.jpg

ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்திய வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா நேற்று விளையாட்டுக்கழக மைதானத்தில் கழகத்தின் தலைவர் சே.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களின் அரசியல் பயணத்திலே பல வித்தியாசமான தசாப்தங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். ஆனால், இன்று நாங்கள் இருக்கின்ற சூழல் இதற்கு முன்னெப்போதும் இல்லாத சூழலாக இருக்கின்றது.  

எங்களுக்கு உகந்த ஒரு சூழலை நாம் உருவாக்கி விட்டோம் என்று நினைத்திருந்தபோது அந்தச் சூழலே எங்களுக்கு மாறானதாகவும், நாங்கள் சறுக்கி விழக்கூடியதாகவும்,  விழுந்தால் பாரிய காயம் ஏற்படக்கூடியதாகவும் இன்று  எங்கள் முன்னால் இருந்து கொண்டிருக்கின்றது. 

மிக நிதானமாக, மிக கவனமாக நாங்கள் எங்களது மக்களது நலன்களை முன்னிறுத்தி முன்னேற வேண்டிய காலமாக இருக்கின்றது. 

விசேடமாக இந்த வருடத்தில் இவை எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய வேண்டும். எமது நீண்டகால இலக்குகளை அடைவதற்கான வழிகள் என்ன? பொதுமக்களினது நலன்களை அடைவதில் அவர்களுக்கு எப்படித் தலைமைத்துவம் கொடுக்க முடியும்? என்பது குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலமாக இது இருக்கின்றது.

இது இலகுவான ஒரு சவால் அல்ல. முன்னெப்போதும் இல்லாத பலத்த சவால். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு  நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக முகம் கொடுக்க வேண்டிய ஒரு சவாலாக இது இருக்கின்றது. எனவே, இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/58436

  • கருத்துக்கள உறவுகள்
On 6/17/2019 at 4:15 AM, nunavilan said:

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ****  நாலு பேர்... இந்தியாவுக்கு  போறதிலும்  பார்க்க,
மனோ கணேசனை... தனிய  அனுப்பி வைக்கலாம்.  பிரயோசனமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

Thanni-Lorry-833x474.jpg

அங்கிட்டு போய் நேர விரயம் செய்து தேதண்ணி, கொப்பி, வடை, சமோசா,பஜ்ஜி சாப்பிட்டுவதை விடுத்து மக்கள் பணிகளில் கவனம் செலுத்தலாமே..?👍

அவனவன் குடிக்க .. தண்ணீர் இல்லையென்று அலையுறான் .. மக்கள் பிரதிநிதிகள் எண்டு சொல்பவர்கள் ஆளுக்கு ஒரு ரெங்கர் லொறியில் தண்ணீர் விநியோகம் செய்யலாம்..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுனருக்கெதிராக உண்ணாவிரதமிருந்து அதில் வெற்றியும் கண்ட அத்திரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதம் தமிழர்களுக்கும் சேர்த்தே  தெளிவாக ஒரு செய்தியை அப்போதே சொல்லியிருக்கிறது 

அது, என்னதான் ஐநா பக்கம் ஓடிபோயோ இந்தியா பக்கம் சாய்ந்து நின்றோ எமக்கென ஒரு தீர்வு வந்தாலும் பெளத்த பீடஙகள் அதை முளையிலேயே கிள்ளியெறிய ஓடிபோய் உண்ணாவிரதமென்று சொல்லி தலதா மாளிகைக்கு முன்னாடி மல்லாந்து படுத்துக்கொள்ளும்.நாடு தழுவிய ரீதியில்.சிங்களவர்களை கட்சி பேதஙகளை மறந்து தீர்வுக்கெதிராய் ஒன்று திரட்டும் ,தீர்வுக்கு  தலையசைக்கும் அரசை ஒரே மாசத்தில் கவிழ்க்கும்.

On 6/17/2019 at 1:51 PM, ampanai said:

திரு, சுமந்திரன் அவர்கள் அரசாயல் தீர்வு கிடைக்காவிடில் பதவியை துறப்பேன் என்று முன்னர் உறுதி வழங்கியிருந்தார். அதற்கு என்னவாயிற்று?

செய்தி: அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக  அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சொன்னது: ஜூலை 2013. 

கேள்வி: அதற்கு என்னவாயிற்று?

இப்பொது : 2013இல் உடுத்த காட்சட்டை சைசும் காணாது!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, puthalvan said:

இப்பொது : 2013இல் உடுத்த காட்சட்டை சைசும் காணாது!

கோவணம் கட்டினால் உந்த சைசு பிரச்சனை இல்லையே. ! 🤣

A_Farmer_in_Tamil_Nadu.JPG

"அண்மையில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தான் ஒரு போராட்டம் ஒன்றினை நடத்திய தளபதி போன்று தீர்வுக்கு முயலுவோம் என்று  உரையாற்றியிருந்தார். இவ்வுரையானது தமிழர்களிடையேயும், சமுக வலைத்தளங்களிலேயும் ஒரு கேலிக்குரிய விடயமாக நகைச்சுவையான விடயமாகவும் பார்க்கப்படுகின்றது. அதனால் இவர்கள் அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்குவதுதான் தமிழர்களிற்கான உண்மையான தீர்வாக அமையும் என தெரிவித்தார்."

போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் எண்ணுகின்றார் ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்.!

https://www.virakesari.lk/article/58512

  • கருத்துக்கள உறவுகள்

13 hours ago, ampanai said:

சவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை  அடைந்தே தீர்வோம் - சுமந்திரன் 

முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அந்த இலக்கு  என்னவென்று ஒருக்கா  என்றாலும்  ஓபிணா சொல்லுங்க  சார்...???

On 6/17/2019 at 8:45 AM, nunavilan said:

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

On 6/17/2019 at 8:58 PM, குமாரசாமி said:

Bildergebnis für rocket ready gif

ஆ....வருது...வருது.......ஆ  விலகு விலகு....:cool:

சம்மந்தன்-மாவை-சுமந்திரன் கோஷ்டியின் நிலையை காட்டும் அருமையான சலனக் காட்சி!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி படிசிட்டு போங்கோ... அலுவல்கள் விறு, விறு எண்டு நடக்கும்.

(அப்ப சிங்களத்தைப் படித்தால் பிரச்சனையே இல்லாமல் போடும்)

Edited by Nathamuni

சுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்! 
 
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத்தமிழர்களிற்கு முற்றுமுழுதாக உதவுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அர்ஜுன் சம்பத் தனக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஈழம் சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு அதிலும் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. ஈழத் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை எனவும் செய்யப் போவதும் இல்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அண்மையில் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அர்ஜீன் சம்பத் இலங்கை ஆதிகாலம் தொட்டுச் சிவபூமி இருந்தது.அதன் பின்னரே ஏனைய மதங்கள் வந்திருந்தன.

ஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை. தமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே .அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிறிஸதவர்கள்; ஆக்குவதே.

தூண்டுதல் மதமாற்றத்தையோ கட்டாய மதமாற்றத்தையோ பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கிறார்.

திருக்கேதீச்சரம் திருக்கோயில் கட்டுவதற்கு இந்திய அரசு பல கோடி ரூபாய்களை வழங்கியது. மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடிஸ்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் ஆபிரகாம் சுமந்திரன். மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் சாவித்திரி சுமந்திரன்.

தமிழர்களுக்கு எதிரான சைவர்களுக்கு எதிரான கடும் போக்குடைய இவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கப் போனால் பிரதமர் மோடி உதவமாட்டார். ஈழத்தமிழர் சார்பாளராக இவர்கள் போவதை இந்திய அரசு விரும்பவில்லை எனப் பலமுறை எடுத்துக் கூறியுள்ளது .

அண்மைக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தில்லி வந்த பொழுதும், கிறித்தவர்களை உங்கள் சார்பாக அனுப்பாதீர்கள் எனப் பாரதிய சனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு சிறப்பாக சைவர்களுக்கு உதவி வேண்டுமானால் அரசியல் தீர்வைக் கொண்டு வர வேண்டுமானால் சைவ தலைமை உள்ள கட்சிகள் பாரதப் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும்.பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு முற்று முழுதாக உதவுமெனவும் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

https://www.pathivu.com/2019/06/hindu_18.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடிஸ்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் ஆபிரகாம் சுமந்திரன். மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் சாவித்திரி சுமந்திரன்.

இந்தக் கறுப்பாட்டைச் சம்பந்தர் எதற்காகக் கொண்டுவந்தார்....????? 🤔🤔

13 hours ago, ampanai said:

சுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்! 

ஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை. தமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே .அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிறிஸதவர்கள்; ஆக்குவதே.

இந்திய அரச மடையர்களால் உருவாக்கப்பட்டு வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றுக்கும்முதவாத மாகாணசபை  சட்டவரைபுகளைக் கூட நடைமுறைப்படுத்த வக்கில்லாத இந்திய மாயையில் மூழ்கியுள்ள இந்தியக் கயவர்கள் தங்களது கையாலாகாத் தனத்தை மறைக்க இது போன்ற நொண்டிச்சாட்டுகளை அவிழ்த்துவிடுவது புதிதல்ல.

சிங்கள-பௌத்த அரசுகள் கொடுக்கும் சன்மானங்களை கைகட்டி வாய்பொத்தி வாங்கிக்கொண்டு தமிழின அழிப்புக்கு துணைபோகும் இந்திய அரச பயங்கரவாதிகளின் சுயரூபங்களை வெளிப்படுத்தும் முதுகெலும்பில்லாத அர்ஜுன் சம்பத் போன்ற ஹிந்திய அடிவருடிகள் இது போன்ற நொண்டிச்சாட்டுகளை அவிழ்த்துவிடுவது புதிதல்ல.

அதற்காக சுமந்திரன் திறமானவர் என்று நான் சொல்லவரவில்லை! ஆனால், சுமந்திரனைப் போலவே அடிமைத்தன அரசியல் செய்யும் கையாலாகாத அர்ஜுன் சம்பத் போன்ற ஹிந்திய அடிவருடிகளின் போலித் தனங்களில் மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

மறவன்புலவு சச்சிதானந்தன் மட்டுமல்ல ஈழத்து சைவர்களும் (இந்துக்களும்) மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.