Jump to content

யாழில் கட்டிமுடிக்கப்பட்ட கலாச்சார மண்டபத்துக்குக்கான பெயர் தேவை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைந்துள்ள கலாச்சார (கலாச்சாரம் என்பது சம்ஸ்கிரதம் என்பதாக எனது கருத்து) மண்டபத்துக்குப் பெயர் வைப்பதுதொடர்பில் அம்மண்டபத்தை வடிவமைத்தவரால் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடப்பட்டுள்ளது, யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபம் எனப் பெயர்வைப்பதில் அவ்வளவு உடன்பாடாகக்தெரியவில்லை. 

சிலவேளை எனது இக்கருத்திடுகையை பலவிதமான நிறங்கள் கொண்டு பார்க்கப்படலாம் ஆனால் கட்டிய மண்டபத்தை இடிக்கமுடியாதுதானே தவிர பத்தோடு பதிணொன்றாகப் பெயர் வைத்துவிட்டு எதிர்காலத்தில் அதை மாற்றுவதற்க்கு முக்கேனப்படவேண்டும் ஆகவேதான் அம்மண்டபத்தை வடிவமைத்தவர் தனக்குத் தெரிந்த புலம்பெயர் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார் சரியான பெயர் ஒன்றைக்கூறும்படி. 

யாழ் களத்தில் உறவுகள் உங்களால் முடிந்தால் கருத்துக்களைக்கூறவும் குறிப்பாக கவிஞர் கெயா அண்ணர் இதைக்கவனிக்கவும் சமஸ்கிரதம் கலக்காத பெயரை வைப்பதற்கு முயல்வோம்.

மேலதிக செய்தியாக 

இம்மண்டபத்தை வடிவமைத்தவர் சுற்றுச்சூழலில் பனைமரங்களை நட்டு உண்டாக்கவெண்டும் என வரைபடத்தில் கூறியிருந்தார் ஆனால் இந்திய துணைத்தூதுவர்கள் இல்லை அசோகா மரத்தை வைத்து உண்டாக்கவேண்டும் என கண்டிப்புக்காக்ட்டியதாகவும் இறுதியில் பனைமரமே முடிவானதாகவும் கூறியிருந்தார் இது ஒரு சிறு உதாரணமே ஆனால் நிறைய விடையங்களில் க்டாநாட்டில் அடையாளப்படுத்தக்கூடிய கட்டிட வரைபடத்தின் பல பகுதிகளை மாற்றம் செய்ய மல்லுக்கட்டி கூடிய அளவு அவர்களுடன் போராடி இறுதியில் கட்டிடத்தை முடிவுக்குக்க்கொண்டுவந்ததாகத் தெரிவித்திருந்தார்.

இதை வாசிக்கும்போது எனது முகம் பச்சை நிறமாகவும் நீல நிறமாகவும் காவி நிறமாகவும் உங்களுக்குத் தென்படலாம் எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. முடிந்தால் உங்களது கருத்தைக்கூறி நல்ல ஒரு பெயரையும் தெரிவுசெய்யுங்கள்.

இதுபற்றித்தொலைபேசியவர் அதாவது அந்தக்கட்டிடக்கலைஞருடன் தொடர்பிலிருப்பவர் இன்று அல்லது நாளை கொடுத்தால் நல்லது எனக்கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கலை, பண்பாட்டு மையம் -யாழ்ப்பாணம்.

Tamil Centre for Arts and Culture -Jaffna.

Link to comment
Share on other sites

யாழில் அமைந்துள்ளதால் யாழுக்கு மட்டும் உரித்தானதா அல்லது ஈழத் தமிழக் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதற்காக உருவாக்கப்பட்ட மண்டபமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இணையவன் said:

யாழில் அமைந்துள்ளதால் யாழுக்கு மட்டும் உரித்தானதா அல்லது ஈழத் தமிழக் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதற்காக உருவாக்கப்பட்ட மண்டபமா ?

இந்த கேள்வியே தேவையில்லாதது. எம்மத்தியில் எது, எங்கே அமைந்தாலும், அது எமது மக்கள் எல்லோருக்குமானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் கோஷன் ... அப்படியான பட்சத்தில் "யாழ்" என்ற ஊர் பெயரை தவிர்க்கலாம் அல்லவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

உண்மை தான் கோஷன் ... அப்படியான பட்சத்தில் "யாழ்" என்ற ஊர் பெயரை தவிர்க்கலாம் அல்லவா?

 

கட்டிடத்தின் பெயர் தமிழர் கலை, பண்பாட்டு மையம்தான். - அப்பால் வரும் யாழ்பாணம் எங்கே இருக்கிறது என்பதை குறிக்க மட்டும்.

யா/ திருக்குடும்ப கன்னியர் மடம் என்பதை போல.

ஊர் பெயரைத் தூக்கிறெண்டாலும் ஓகே.

இது எனது சுய ஆக்கம் இல்லை.

விடுதலை புலிகள் கலை கலாச்சாரப் பிரிவாக இருந்து பின்னர் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகமாக மாறியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த மையம் , மையத்து ... இந்த சொற்களை கேட்க முஸ்லீம் பொணம் தான் ஞாபகம் வருது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ கலாச்சார பல் நோக்கு மையம்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

எனக்கு இந்த மையம் , மையத்து ... இந்த சொற்களை கேட்க முஸ்லீம் பொணம் தான் ஞாபகம் வருது 

 

😂 தமிழர் மையவாடி என்று வச்சிட்டாப் போச்சு.

மையத்து என்பது மேய்யத் எனும் அரபு சொல்லின் தமிழ் வடிவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கலைக்  கோயில்
தமிழ் கலை அரங்கம் 
தமிழ்தாய் கலை அரங்கம்
தமிழ் நாற்றுமேடை  ... 

அவர்கள் எதோ ஒரு பெயரை சூட்டப்போகிறார்கள்...
சும்மா நாங்களும் எதோ சொல்லிப்பார்ப்பம்

  😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாசாரம் என்பது தமிழ் சொல்லல்ல.

பொதுவான பெயராக.. "தமிழர் கலை பண்பாட்டகம்" என்று வகைக்கலாம். 

அல்லது.. தமிழ் கலை பண்பாட்டகம் என்று அழைக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

கலாசாரம் என்பது தமிழ் சொல்லல்ல.

பொதுவான பெயராக.. "தமிழர் கலை பண்பாட்டகம்" என்று வகைக்கலாம். 

அல்லது.. தமிழ் கலை பண்பாட்டகம் என்று அழைக்கலாம். 

தமிழ் கலை பண்பாட்டகம் ...I like it 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் கலாசார மண்டபம்.


இதன் பெயர் ஈழத்தமிழ் தேசத்தின் அடையளாம் பாற்ப்பட்டதாக இருக்கவேண்டும்.

அதே நேரத்தில், பெயரின் தன்மை யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஈழத்தமிழர் கலை, கலாசார மற்றும் விழுமியங்கள் பரவுவதாகவோ அல்லது ஊற்றெடுப்பதாகவோ  (source, radiate) இருக்க கூடாது. 

சிங்கள இனவாதிகள் மற்றும் போலி வரலாற்றைப் பரப்பும் இணையதளங்கள் (ஆசிரியர்கள், புத்தி ஜீவிகள் உட்பட), ஈழத்தமிழரை, யாழ்ப்பணத்துடன் முடக்கி விடுவதற்கு பெரியளவிலான நிறுவனமயப்படுத்தப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டுளார்கள்.

ஏனெனில், ஈழத்தமிழர் தேசம் பண்டைய தமிழகத்தின் நீட்சி என்று காண்பிப்பதற்கு.

தற்போதைய தமிழக தேசமும், ஈழத்தமிழர் தேசமும் தன்னகத்தே அவற்றிற்க்கே உரிய  தனித்துவமும், வெவ்வேறு அடையாளங்களும் கொண்டவை, தொப்புள் கோடி உறவானாலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கொழும்பு தமிழன், மலையக தமிழன் என்ன செய்வான், நீர் கொழும்பு தமிழன் என்ன செய்வான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் பண்பாட்டு நினைவகம்....!

யாழ்ப்பாணம்

5 minutes ago, colomban said:

அப்ப கொழும்பு தமிழன், மலையக தமிழன் என்ன செய்வான், நீர் கொழும்பு தமிழன் என்ன செய்வான்?

கொழும்பிலும், மலையகத்திலும்.....நீர் கொழும்பிலும் ஒவ்வொன்றைக் கட்டினால் போச்சுது...!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, colomban said:

அப்ப கொழும்பு தமிழன், மலையக தமிழன் என்ன செய்வான், நீர் கொழும்பு தமிழன் என்ன செய்வான்? 

தமிழ் கலை பண்பாட்டகம்  யாழ்ப்பாணம்

தமிழ் கலை பண்பாட்டகம் கொழும்பு 

தமிழ் கலை பண்பாட்டகம் மலையகம்

தமிழ் கலை பண்பாட்டகம் நீர் கொழும்பு

இப்படிப் பெயர்களைச் சூட்டலாம். தமிழ் கலை விரிவடையவேண்டும். அது எந்த ஊரில் விரிவடைகிறதோ அந்த ஊரின் பெயரைக் குறிப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. இதற்காகப் பட்டிமன்றம் நடாத்தத் தேவையில்லை. பட்டிமன்றில் தாய்ப்பால் குழந்தைக்கு நஞ்சு என்று விவாதம் நடாத்தினால், நஞ்சுதான் என்று சிறப்பாக வாதிடவும் தமிழ்மொழி சொற்களை வழங்கும். அது தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டான சிறப்பு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கலாச்சார மையம் இந்திய அரசின் நிதிஉதவியுடன் இந்திய கட்டுமானப் பொறியியலாளர் மற்றும் இந்தியக் கட்டுமான நிறுவனம் ஆகியவற்றின் முழுமையான பங்களிப்புடனேயே கட்டி முடிக்கபட்டது. இக்கட்டிடத்திற்கான வரைபடத்தை மட்டும் இலங்கையைச்சேர்ந்த சிங்கள இனக் கட்டிடக்கலைஞர் வடிவமைத்துள்ளார் இக்கட்டிடம் கட்டப்படும்போது அது தாம் வடிவமைத்ததற்கு அமைய வரும்முகமாக ஆரம்பத்திலிருந்து முடிவுறும் இத்தறுவாய்வரை மேற்பார்வை செய்துள்ளார் தவிர இக்கட்டிடத்திற்கான வரைபடம் இவர் ஒருவரால் மட்டும் வரையப்படவிலை இவரைத் தலைமையாக்கக் கொண்டு ஒரு குழுவாகவே செயற்பட்டிருக்கிறார்கள்.

இக்கட்டிடம் கட்டப்படும்போது யாழில் உள்ள இந்திய அதிகாரிகளத் தலையீடு நிறையவே இருந்திருக்கிறது எனப் பிறிதொரு செய்தியின்மூலம் இவ்விடையத்தில் மட்டுமல்ல வடக்குக்கிழக்கின் அனைத்து விடையங்களிலும் அவர்களது தாக்கம் நிறையவே இருக்கிறதாக அறிந்தேன் 

டெல்கியின் கருத்துப்படி தமிழ், தமிழர் உரிமை, வடக்குக்கிழக்கில் வாழும் தமிழர்களது தனித்தன்மை, அவர்களது வரலாறு, போராட்ட வரலாறு இவை எவையும் எவ்விடத்திலும் அடையாளம் கொள்ளக்கூடாது என்பதில்  கொள்கை வகுக்கக்கூடிய சிங்களவரைத்தவிர்ந்த சாதாரண சிங்களவர்களைவிட அதிகமாகவே இருப்பதாகவே கவனிக்கப்பட்டிருக்கிறது.

இக்கட்டிடத்துக்கான வரைபடத்தை வரைந்தவர் அண்மையில் பின்லாந்து வந்திருந்தார் சில தேவைகளுக்காக அவரை நேர்காணல் செய்ய விரும்பி அதற்கான கேள்விகளைத் தயார்படுத்தி ஏற்கனவே அவரிடம் கொடுத்திருந்தேன் அதைப்பார்த்துவிட்டு, இப்போது இப்படியான கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது ஒருவேளை நான் பதிலளித்தால் என்னைப் இக்கலாச்சார மண்டபம் தொடர்பான வேலைகளில் சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என நேர்காணலை ரத்துச்செய்துவிட்டார். ஆனால் நான் கேட்பதாக அவருக்குக் கொடுத்த கேள்விகள் அனைத்தும் நியாயமானதாகும் எனவும் பிறிதொரு தருணத்தில் இவற்றுக்கு நான் பதில் தருகிறேன் எனவும் தவிர என்னை நேரடியாகச் சந்தித்தால் பேட்டியில்லாது அங்குள்ள நிலைமை மற்றும் பிரச்சனைகளை விளங்கப்படுத்துகிறேன் எனவும் கூறியிருந்தார் நேரமின்மை காரணமாக என்னால் அவரைச்சந்திக்க முடியவில்லை.

ஆனால் ஒரு விடையம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ளதுபோன்ற மிகவும் நல்ல முறையில் திட்டமிட்டுக் கட்டபட்ட ஒரு கட்டிடம் அதனை யாழ் மாநகர சபையோ அன்றேல் மாகாண சபையோ தனித்துப் பராமரிக்கும் அளவுக்கோ அன்றேல் எதிகாலத்தில் தேவைக்கேற்றாற்போல் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கும் அடிப்படை வசதிகளோ அன்றேல் ஆளணியோ அதற்கான செலவை ஏற்றுக்கொள்ளும் பெருந்தொகை நிதிவளமோ அங்கு இல்லை மாதம் ஒன்றுக்கு பத்து மில்லியன் இலங்கை ரூபாயை பராமரிப்புக்காகச் செலவு செய்யவேண்டும் அந்த அளவுக்கு எதிர்காலத்தில் அங்கு யாரும் செய்ய முடியாது. எனவு தனது கருத்தைத் தெரிவித்தார்.

ஆனால் இந்திய அரசாங்கம் தாங்கள் ஒரு பெரிய விடையத்த தமிழ்பகுதியில் சாதித்துவிட்டோம் எனக் காட்டுவதற்கான முகாந்திரமாகவே இக்கட்டிடத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது தான் இதில் பங்கெடுத்துகொள்ளவில்லை என்றாலும் யாரோ ஒருவர் இகட்டிடத்துக்கான வரை படத்தைத் தயாரித்திருப்பார் அவர் ஒரு இந்தியராகவே இருப்பார் அது பொதுவாக இலங்கைத் தீவின் எந்த அடையாளத்தையும் வெளிக்கொணராது வேறு ஒரு மாதிரியாக இருக்கும் ஆகவேதான் நான் இதில் கரிசனம் எடுத்தேன் எனக்கூறியதாக எனது நண்பர் கூறியிருந்தார்.

மேற்கூறிய எனது கருத்துப்படி அக்கட்டிடத்துடன் தொடர்புள்ள அரசியலையும் எங்களது இயலாமையையும் அறிந்திருப்பீர்கள் (எங்களது எனச்சொல்லப்படுவது தகுதியுடையோரைத் திட்டமிட்டுப் புறமொதுக்கி நானே பிணமாகவும் நானே அழுபவனாகவும் இருக்கவேண்டும் எனக்கூறும் இந்திய நடுவண் அரசின் நடவடிக்கயால் ஓரம்கட்டப்பட்ட அனைவரயும் கூறுகிறேன்)

இறுதியாக 

யாழ் களத்தின் உறவுகளில் சிலர் கூறியதிலிருந்து 

கலை பண்பாட்டகம்
யாழ்ப்பாணம் 

என உங்களால் பெயர் வைக்கமுடியுமாகவிருந்தால் வையுங்கள் எனக்கூறியுள்ளேன் காரணம் தமிழ் தமிழீழம் போன்ற சொற்களை நாம் பயன்படுத்திய பொற்காலத்தில் இப்போது நாம் இல்லை கலை பண்பாட்டகம் எனும் தூய தமிழில் பெயர் வந்தாலே ஆச்சரியமே.

இவ்விடுகையில் கருத்தெழுதிய அனைவருக்கும் எனது நன்றிகள். இதுபற்றி என்னிடன் வினவியிருந்தவர் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் உதயணன் எனும் பெயரில் கனடாவில் சில ஆக்கங்களை இப்போதும் எழுதிக்கொண்டிருப்பவரும் பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தவருமாகிய திரு சிவலிங்கம் அவர்களது மகனாகும், தவிர சம்பந்தபட்ட கட்டிடக்கலைஞர் அவரது நண்பராகும்  மற்றப்படி புலம்பெயர் தேசத்தில் படித்த சாதி படிக்காத சாதி எனும் புதிய சாதி ஒழுங்கு முறைகளுக்குள் தம்மை புகுத்திக்கொண்ட சாராருடன் என்னால் ஒரு விடையத்தை காதில் போட மட்டுமே முடியும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி எழுஞாயிறு ,

இன்றைய யதார்த்த சூழ்நிலையில், தமிழீழம் , ஈழம் என்ற சொற்களை உட்புகுத்துவது சாத்தியமாகாது என்பது உண்மைதான். ஆனாலும் தமிழுக்காய் அமையவிருக்கும் மேடையில் "தமிழ்" என்ற சொல்லே இல்லாமல் தவிர்க்கப்படுவது மிகுந்த வேதனையான விடயம். 
எப்படி அதனை சாதிக்கலாம் என்று சிந்திப்போம்.  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கறையுடன் கருத்தாடும் உறவுகளுக்கு வணக்கம்.  எழுஞாயிறு எழுதியவிடயத்தைக் காட்டிலும் இன்னொரு விடயம் எனக்கு தாயகத்தில் அதக கவனப்படுத்தியிருக்கிறது. இவ்விடத்தில் அதனைத் தெரிவிப்பதும் சாலச்சிறந்ததென்று எண்ணுகிறேன்.

 

ஒரு காலத்தில் எங்கள் பாடசாலைகளில் பாடசாலை ஆரம்பிக்கும்போது தேவாரம் திருவாசகம் மற்றும் கத்தோலிக்க ஆராதனை என்பன தமிழில் இடம்பெறும் கல்விச்சாலைகளின் காலை ஆரம்ப நிகழ்வே அதுதான் மொழியோடு ஒத்த பிரார்த்தனைகள் எல்லாப் பாடசாலைகளிலும் நடைபெற்றது. தற்சமயம் பாடசாலைகளில் கட்டாயமாக 

 

ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்..!
 
 
 
என்கின்ற சமஸ்கிருத மந்திரம் பாடப்படுகிறது. அழகு தமிழில் வீணைமகளுக்கு வெண்டாமரைப்பதிகம் இருக்கும்போது இந்து சமய அமைச்சு இந்த தமிழ் அல்லாத மொழியை எல்லா பாடசாலைகளிலும் பாடவேண்டும் என்று சட்டம் இயற்றி இருப்பதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எங்கள் மக்களின் வாழ்வையும், வளர்வையும் ஒரு பக்கம் சிங்களமும் இன்னொரு பக்கம் இந்தியமும் கபாளீகரம் செய்து கொண்டிருக்கிறது. எதிர்காலச்சந்ததியை குறி வைத்து நகர்ந்து வேர்களிலேயே தனித்துவத்தை அழிக்கும் கைங்கரியத்தை செய்யும் இச்செயலை   யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி அநேகருக்கு (நான் உள்பட) அறிந்திருக்க சாத்தியம் இல்லை. நன்றி சகாறா அக்காச்சி !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்பத்தான் கேள்விப்படுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருமே அதுபற்றி இதுவரை அறியத்தந்ததில்லை. நன்றி சகாறா அவர்களே! அறிந்தும் என்ன செய்யப் போகிறோம்? பேய்கள் அரசு செய்கின்றன. சாத்திரங்கள் பிணம் தின்னுகின்றன. எல்லாம் விதி என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் தமிழர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

”தமிழர் தேசியக் கலை கலாச்சார நிலையம்”   என்று வைக்கலாம்.  --- தமிழர் என்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோரைக் குறிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/16/2019 at 9:51 PM, வல்வை சகாறா said:

அக்கறையுடன் கருத்தாடும் உறவுகளுக்கு வணக்கம்.  எழுஞாயிறு எழுதியவிடயத்தைக் காட்டிலும் இன்னொரு விடயம் எனக்கு தாயகத்தில் அதக கவனப்படுத்தியிருக்கிறது. இவ்விடத்தில் அதனைத் தெரிவிப்பதும் சாலச்சிறந்ததென்று எண்ணுகிறேன்.

 

ஒரு காலத்தில் எங்கள் பாடசாலைகளில் பாடசாலை ஆரம்பிக்கும்போது தேவாரம் திருவாசகம் மற்றும் கத்தோலிக்க ஆராதனை என்பன தமிழில் இடம்பெறும் கல்விச்சாலைகளின் காலை ஆரம்ப நிகழ்வே அதுதான் மொழியோடு ஒத்த பிரார்த்தனைகள் எல்லாப் பாடசாலைகளிலும் நடைபெற்றது. தற்சமயம் பாடசாலைகளில் கட்டாயமாக 

 

ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்..!
 
 
 
என்கின்ற சமஸ்கிருத மந்திரம் பாடப்படுகிறது. அழகு தமிழில் வீணைமகளுக்கு வெண்டாமரைப்பதிகம் இருக்கும்போது இந்து சமய அமைச்சு இந்த தமிழ் அல்லாத மொழியை எல்லா பாடசாலைகளிலும் பாடவேண்டும் என்று சட்டம் இயற்றி இருப்பதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எங்கள் மக்களின் வாழ்வையும், வளர்வையும் ஒரு பக்கம் சிங்களமும் இன்னொரு பக்கம் இந்தியமும் கபாளீகரம் செய்து கொண்டிருக்கிறது. எதிர்காலச்சந்ததியை குறி வைத்து நகர்ந்து வேர்களிலேயே தனித்துவத்தை அழிக்கும் கைங்கரியத்தை செய்யும் இச்செயலை   யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

அதிபராக இருக்கும் நண்பரை கேட்டு பாப்பம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்"  அது முற்றிலும் சரி  யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால்,  எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும்,  அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை.  அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது  மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு  இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது  "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்  அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம்  ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை.  ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான்  புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள்.  புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது  நன்றி உங்கள் கருத்துக்கு  "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது.  உதாரணமாக,  இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911  இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு.  ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது.  இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்?  இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம்.  நன்றி 
    • நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍
    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த் ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................   இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................
    • எனக்கும் இதே பிரச்சனை. போட்டிகளைப் பார்த்தாலே போதும் என்று விட்டுவிட்டேன்.
    • நேபாளம் ஒல்லாந்தரை கலைச்சு அடிப்பாங்கள்! அதுக்கு ஸ்ரோங்காக முட்டை வேணும்தான்!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.