Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்குப் பெயர் பக்தியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறேன்   நண்பர்களே

மதம்  சார்ந்த  விடயங்களில்  மற்றவர்கள்  மூக்கை நுளைப்பது வெறுப்பாகவே  பார்க்கப்படும்

நீங்கள்  அறியாததல்ல

எமக்குள்  பிரிவுகள்  வேண்டாமே

  • Replies 186
  • Views 17.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

செத்தை பாம்பை அடித்துக் கொண்டிருக்காமல் போய் வேலையைப் பாருங்கப்பா?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

மதம்  சார்ந்த  விடயங்களில்  மற்றவர்கள்  மூக்கை நுளைப்பது வெறுப்பாகவே  பார்க்கப்படும்

நீங்கள் கூறும் எந்த அறிவுரையையும் கேட்க நான் தயாராக இருக்கிறேன் 
நீங்கள் நேரடியாக பேசினால் கூட நான் இதில் கோபிக்கமாட்டேன். 

நான் புரிதல் என்பது ஏன் புரியப்படாமலே போகிறது 
எனும் கேள்வியுடன் மட்டுமே இங்கே இப்போது நிற்கிறேன். 

மற்றவர்கள் என்று  நீங்கள் கூற முனைவது யாரை? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

பேசப்படும் மதத்தை  சாராதவர்கள்

எப்பொழுதுமே

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

அந்த  மதத்தை  விமர்சிக்கும்  போது

அது நன்மையை  விட  தீமையையும்

வெறுப்பையுமே தருகிறது

எனவே  சில  நாட்களாக இங்கே மதம்  சார்ந்து  நடக்கும் தாக்குதல்களும்  மறு  தாக்குதல்களும்

எமக்குள்  விரிசலை  ஏற்படுத்துவதை  நான்  விரும்பவில்லை

Edited by விசுகு

a-cartoon-comic-book-style-fight-dust-cl

தெளிவு கிடைக்குமென்றீங்க........

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

பேசப்படும் மதத்தை  சாராதவர்கள்

எப்பொழுதுமே

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

அந்த  மதத்தை  விமர்சிக்கும்  போது

அது நன்மையை  விட  தீமையையும்

வெறுப்பையுமே தருகிறது

எனவே  சில  நாட்களாக இங்கே மதம்  சார்ந்து  நடக்கும் தாக்குதல்களும்  மறு  தாக்குதல்களும்

எமக்குள்  விரிசலை  ஏற்படுத்துவதை  நான்  விரும்பவில்லை

உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ...
ஊரில் பொதுவாகவே சொல்வார்கள் 
மாட்டுக்கு மாடு சொன்னா கேட்க்காதாம் .... மணி கட்டின மாடுதான் சொல்லவேண்டும் என்று.
இப்படியான ஒரு பொது புத்தி இருக்கலாம் என்பதை ஒத்தததாக உங்கள் கருத்தும் இருக்கிறது.

இதுக்குள் நான் அடங்கவில்லையே?
நான் எனது மதம் பற்றியே பேசுகிறேன் காரணமும் சொல்கிறேன் 
எனது வீட்டுக்குள் குப்பைகளை வைத்துக்கொண்டு எப்படி அடுத்தவன் மதம் பற்றி பேசுவது என்று?

என்னுடைய கருத்துக்கும் 
கிறிஸ்தவ பாதிரிகளும் 
மற்ற கயவர் காவலிகளும்தானே பதிலாக வருகிறார்கள்? 

இதை இங்கு கருத்து எழுதும் யாரும் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை 
அவர்களுக்கான தண்டனை கொடுத்து அதை சரி செய்யவேணும் என்றுதான் எல்லோரும் எழுதுகிறார்கள் 

ஏன் அதே எழுத்து இந்துசமயத்துக்கு வக்காலத்து வாங்குவரிடம் இருந்து வரவில்லை.

மேலே இரண்டு சிறார்களை பக்தி எனும் பெயரில் கொடுமை செய்கிறார்கள் 
இதில் என்ன நன்மை இந்து மதத்துக்கு உண்டு?
இதை நீக்கினால் அடுத்தவனும் மதிப்பான் அல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ...
ஊரில் பொதுவாகவே சொல்வார்கள் 
மாட்டுக்கு மாடு சொன்னா கேட்க்காதாம் .... மணி கட்டின மாடுதான் சொல்லவேண்டும் என்று.
இப்படியான ஒரு பொது புத்தி இருக்கலாம் என்பதை ஒத்தததாக உங்கள் கருத்தும் இருக்கிறது.

இதுக்குள் நான் அடங்கவில்லையே?
1 - நான் எனது மதம் பற்றியே பேசுகிறேன் காரணமும் சொல்கிறேன் 
எனது வீட்டுக்குள் குப்பைகளை வைத்துக்கொண்டு எப்படி அடுத்தவன் மதம் பற்றி பேசுவது என்று?

என்னுடைய கருத்துக்கும் 
கிறிஸ்தவ பாதிரிகளும் 
மற்ற கயவர் காவலிகளும்தானே பதிலாக வருகிறார்கள்? 

இதை இங்கு கருத்து எழுதும் யாரும் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை 
அவர்களுக்கான தண்டனை கொடுத்து அதை சரி செய்யவேணும் என்றுதான் எல்லோரும் எழுதுகிறார்கள் 

ஏன் அதே எழுத்து இந்துசமயத்துக்கு வக்காலத்து வாங்குவரிடம் இருந்து வரவில்லை.

2- மேலே இரண்டு சிறார்களை பக்தி எனும் பெயரில் கொடுமை செய்கிறார்கள் 
இதில் என்ன நன்மை இந்து மதத்துக்கு உண்டு?
இதை நீக்கினால் அடுத்தவனும் மதிப்பான் அல்லவா ?

1 -  மேலே இரண்டு  விதமானவர்களை  குறிப்பிட்டிருக்கின்றேன்

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

  இதுவரை  உங்களது  எழுத்தை  வாசித்தவன்  என்றமுறையில்  நீங்கள்   இதில்  இரண்டாவது  வகையினர்

2 - பழைய  செருப்பால்   அடிக்கணும்  என்று நானே  எழுதியிருக்கின்றேன்

அத்துடன்  திரிக்கான விடை  முடிவடைந்தது

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு இப்போது எழுதுவது மதம் தொடர்பாகவோ 
அல்லது அதன் சரி பிழை சார்ந்தோ அல்ல அதை இப்போ தள்ளிவைக்கவே விரும்புகிறேன்.

எனது கேள்வியும் தேடலும் 
இங்கே எழுதுபவர்களின் மனோநிலை சார்ந்தது 
இங்கேயே இப்படி நன்கு பரிச்சயமான நாங்களே ஒரு முடிவை 
இந்து சம்மந்தமாக எட்ட முடியவில்லை என்றால் .......

எமது நாட்டு பிரச்சனை அது இது என்று வரும்போது 
எவ்வாறு தீர்வை காணப்போகிறோம்?
இப்படியொரு மனோநிலையை வேறு இனங்களில் காண கூடியதாக இல்லை.

நான் தெளிவாக எழுதுகிறேன் 
இந்த பிள்ளைகளின் பெற்றோரை என்னால் புரிய முடிகிறது 
அவர்களை நான் குற்றம் சாட விரும்பவும் இல்லை.... அவர்களுடைய தவறு 
அவர்கள் வாழும் சமூகம் சார்ந்தது .

எதை எட்டி நின்று பார்க்கும் மனிதர்களின் மனோநிலைதான் என்னால் விளங்க முடியாது இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

மீண்டும்  முதலிருந்தா  ராசா

நாடு தாங்குமா??:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, குமாரசாமி said:

அங்கபிரதட்சணம் செய்வது சைவ வழிபாட்டு முறையில் ஒன்று.அதையெல்லாம் மூட நம்பிக்கை என்று கருதமுடியாது.

Bildergebnis für à®à®à¯à®à®ªà®¿à®°à®¤à®à¯à®à®£à®®à¯

18 hours ago, இணையவன் said:

ஏன் என்று விளக்க முடியுமா ? :grin:

எமது வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்று.....😎

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

1 -  மேலே இரண்டு  விதமானவர்களை  குறிப்பிட்டிருக்கின்றேன்

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

  இதுவரை  உங்களது  எழுத்தை  வாசித்தவன்  என்றமுறையில்  நீங்கள்   இதில்  இரண்டாவது  வகையினர்

2 - பழைய  செருப்பால்   அடிக்கணும்  என்று நானே  எழுதியிருக்கின்றேன்

அத்துடன்  திரிக்கான விடை  முடிவடைந்தது

இதுவரைக்கும் நீங்கள் எழுதியதுக்கு நன்றி !

கொஞ்சம் புரிகிறது .....
நீங்கள் என்னைப்பற்றி சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் 
நான் கடவுளை கூட நம்புவதில்லை .... ஆகவே மதத்தை கடந்தவனாகவே இருக்க வேண்டும்.

அப்போ யார் எழுதுவது? 
என்பதுதான் கேள்வி ......... இப்படியே இதை விடுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

இதுவரைக்கும் நீங்கள் எழுதியதுக்கு நன்றி !

கொஞ்சம் புரிகிறது .....
நீங்கள் என்னைப்பற்றி சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் 
நான் கடவுளை கூட நம்புவதில்லை .... ஆகவே மதத்தை கடந்தவனாகவே இருக்க வேண்டும்.

அப்போ யார் எழுதுவது? 
என்பதுதான் கேள்வி ......... இப்படியே இதை விடுவோம். 

நானும்  அதே...

ஆனால் அம்மாவை  குற்றம்  சொன்னால்   பொத்துக்கொண்டு வந்து  விடுகிறது

யான்  என்ன  பண்ணும்????

இவ்வாறான விடயங்கள் பொது வெளிக்கு வரும்  போது நாம் அனைவரும் திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டியது இதை போல் எம்மால் கடைப்பிடிக்கப்படும் அனைத்து மூடப்பழக்கங்களையும் பற்றி என்பது எனது அபிப்பிராயம். இவை மூடத்தனம் என்று இங்கு கருத்தெழுதும் அனைவரின் மனச்சாட்சிக்கு மட்டுமல்ல  தமிழர்களிலும் பலரின்   மனச்சாட்சிக்கும. நன்கு தெரியும். இருப்பினும் ஈகோ காரணமாக எல்லா  மூடத்தனத்துக்குள்ளும் ஏதோ அறிவியல் கலந்துள்ளதாக தம்மை தாமே  ஏமாற்றி அதற்கு வக்காலத்து வாங்கி மக்களை மட்டுமல்ல தம்மையும் ஏமாற்றி வருகிறார்கள். . 

எங்கோ பல மில்லியன் கிலோ மீற்றருக்கு அப்பால் சுற்றும்  Saturn planet மற்றும்  Jupiter planet    தன்னை பிடித்துவிடும் என்று அஞ்சுவதும் அதற்கு எண்ணெய் எரித்து பரிகாரம் தேடுவதும் மிக மோசமான அறிவீனத்தின் வெளிப்பாடு. இவை போன்ற எண்ணற்ற மூடத்தனத்தை மக்கள்  மனதில் விதைத்து அவர்களை நிரந்தரமாக அச்சநிலையில் வைத்திருப்பதன் மூலம் தமது வாழ்வை பெருக்கிக்கொள்ளலாம் என்பதே இவற்றை பரப்பிய அயோக்கியர்களின் நோக்கமாகும் 

இதை உணர்ந்து இப்படியான மூடத்தனத்தை களை எடுப்பது  எமது தமிழ் சமுதாயம் முன்னேற மிக முக்கியமான செயற்பாடு என்பது எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உண்மையில் இந்த விடயத்தில் நீள நீளமாக எழுத ஒன்றும் இல்லை! சிறுவர் துன்புறுத்தல் சட்ட ரீதியிலும் தவறு தார்மீக ரீதியிலும் தவறு! இதை இன மத பேதமில்லாமல் யாரும் சுட்டிக்காட்டவும் கண்டிக்கவும் வேண்டும். அந்தக் கண்டனம் வரமுதல் மனதில் "ஐயோ என் மதநம்பிக்கை!" என்ற கணநேரத்தயக்கம் ஒருவருக்கு வந்தால், அப்படிப்பட்டவருக்கு ஆழமான பிரச்சினைகள் இருக்கின்றன என்று அர்த்தம்! அமெரிக்க கிளிஷேயில் சொல்வது போல: I do not envy them!

அவ்வளவு தான் இந்தத் திரிக்கு என் நேரக் கோட்டா!

இந்தக் கருத்தை உங்களது இரண்டாவது கருத்தாய் இத் திரியில் எழுதி இருந்தால்  உங்கள் மேல் உள்ள மரியாதை இன்னும் உயர்ந்து இருக்கும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

 மேலே படத்தில் இருப்பது போன்ற ஒரு பிழையை பிழை என்று சொல்ல உங்கள் போன்ற ஒருவருக்கு நேர்மை இல்லை!  வேறு இரண்டு மதங்களை இழுத்து அதிலேயும் பொய் செய்தியைக் கலந்து தான் சமாளிபிகேசன் செய்ய வேண்டியிருக்கிறது! அப்படியானால் உங்கள் தனிப்பட்ட உள்ளக நேர்மையை விட ஒரு மதத்தின் சடங்கு தான் உங்களை பெருமைக்குள்ளாக்குகிறது! 

யார் அதை பிழையில்லை என்று சொன்னார்கள். எமது விருப்புகளையோ அல்லது வேண்டுதல்களையோ மற்றவர்கள் மீது திணிப்பது அநாகரீகமானது. அதுவும் இப்படி சிறு குழந்தைகள் மீது திணிப்பது கடுமையாக கண்டிக்கப்படவேண்டியதே. அதற்காக மதச்சடங்குகள் எல்லாவற்றையும்  (ஒருவர் தானாக விரும்பி செய்வதை) மட்டம் தட்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். 

அதுசரி எந்தக்கோவிலில் சும்மா போறவாற ஆட்களையெல்லாம் பிடித்து அலகு  குத்தி அனுப்பிறவை. சும்மா சகட்டுமேனிக்கு எழுதாமல் மாறின மதத்துக்காவது விசுவாசமா இருக்கப்பாருங்கோ (இன்னொருவன் வந்து இன்னும் கொஞ்சம் கூட சலுகைகள் தாறன் எண்டால் அதுக்கு மாறாமல்). உங்கட மதத்தை நாங்கள் விமர்சிப்பதில்லையே, அதேபோல் நீங்களும் பொத்திக்கொண்டு இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

யாரும் தான் தனக்கு முக்கியம் என்று கருதும் ஒரு காரணத்திற்காக மதம் மாறலாம் என்பது என் நிலைப்பாடு! மதங்கள் ஒன்றும் சட்டத்தால் பிறந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்ட கூறு அல்ல! இதை ஒரு அமைப்பு ஊக்குவித்தால் அதில் தவறில்லை! தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் போல செய்தால் தவறு, குற்றம்! மாறுபவன் சொல்லும் காரணம் வலுவான காரணமா இல்லையா என்று மதிப்பிடும் உரிமை யாருக்கும் கிடையாது! இது கறுப்பு வெள்ளை நிலைமை, இதில் உங்களுக்குக் குழப்பம் இருப்பது என் தவறல்ல! 

அதேபோல் ஒருவன் நேர்த்திக்காக காவடி எடுப்பதும், பிரதட்ச்சணை செய்வதும் அவரவரின் விருப்பமே. அதில் தலையிட  நீங்கள் யார். அவர்  யாரையும் அதை செய்ய சொல்லி நிர்பந்திக்காதவரை ஒருவர் செய்வதை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.

இந்து மதமல்லாத பிற மதங்களைப் பற்றியும் எழுதவேண்டிய காரணத்தைக் கேட்போருக்கு:

இந்து மத மூடநம்பிக்கையை எதிர்ப்பதாக இவ்வாறான பல திரிகள் முன்னரும் ஆரம்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இது இங்குள்ள பலருக்கும் தெரியும்.

இத் திரிகளுக்கு கருத்து எழுதுபவர்கள் ஒட்டுமொத்தமாக இந்து மதத்தில் இருக்கும் வேறு பல நம்பிக்கைகளையும் அனாவசியமாகக் கேலி செய்கிறார்கள் என்று திரிகளை முழுவதுமாக வாசித்தவர்களுக்குப் புரியும். 

இவ்வாறு அவர்கள் வீண் வம்பிழுக்கும்போது நாமும் தலைப்பை விட்டு விலகி அவர்களின் கருத்துக்கு மறு கருத்து எழுதவேண்டிய நிலை உள்ளது. மற்ற மதங்்களிின் குறைகளை எழுதுவதன் நோக்கம் 'எல்லா மதங்களிலும் குறைகள் உண்டு தான். அதற்காக இந்து மதத்தை இலக்காக வைத்து நடாத்தப்படும் அனாவசிய தாக்குதல்களை வேடிக்கை பார்க்க எனது மனம் ஒப்பவில்லை. கூடவே ஏனைய மதங்களின் குறைகளை மறைக்கும் போது அதைச் சுட்டிக் காட்டி குறைகள் எங்கும் உண்டு எனப் புரியவைக்கத் தான்.

ஏனைய மதங்களை கிண்டவடிக்கும் திரிகளை நானாகவே ஆரம்பித்ததும் கிடையாது. அவ்வாறான திரிகளில் நான் அநாவசியமாக மூக்கை நுழைப்பதும் இல்லை. 

இங்கு ஒரு படத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோரை விசாரித்தால் அல்லது அந்த இடத்தில் இருந்தோரைக் கேட்டால் தான் இதற்கான தெளிவான பதில் கிடைக்கும். 

பெரிய பதவியில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பாதிரியார்கள் செய்த பாலியல் தவறுக்கும், இந்தப் படத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. முன்னுதாரணமாக இருக்க வேண்டியோரை முதலில் திருத்தலாமே!

என்றும் தமிழனுக்கு என்று ஒரு சுதந்திர நாடு அமையப்போவதில்லை. எம்மை சுற்றி பார்த்தால், இன்றும் மூன்று இல்லை நான்கு தலைமுறையில் தமிழே இருக்காது. ஆனால், தமிழர்கள் இருப்பார்கள் உலகெங்கும். 

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்

எது தப்பு?
1. பாதிரிகளின் சிறுவர் துஸ்பிரயோகம்
2. சுன்னத்
3. குழந்தைகளுக்கு அலகு குத்துவது
4. குழந்தை பிக்குகள்
5. ஆசை/பயம் காட்டி மதம் மாற்றுவது

நீ வேற்று மதத்தான் நீ என் மதத்தை பற்றி கதைக்கபடாது அல்லது நீ நம்பிக்கை அற்றவன் நீயும் கதைக்க கூடாது என்பதெல்லாம் குழு மனோநிலையே அன்றி வேறில்லை.

மனித குலத்துக்கு விரோதமான செயலகளை கண்டிக்க அது என்ன மதத்தில் இருந்து வருகிறது என்று பார்ப்பது தேவை அற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இனத்தின் வழமை என்பதால், வயசுக்கு வந்த பிள்ளையை - புலம் பெயர் நாட்டில், மாதம் 3 நாள் வீட்டு கார்டனில் கொட்டில் போட்டு வைக்கிறோமா?

இறந்த பிணத்தை வெட்ட வெளியில் நெஞ்சாங் கட்டை வைத்து ஏரிக்கிறோமா?

வயது வந்தவர்கள் சமய நம்பிக்கை என்றபெயரில் தூக்கு காவடி எடுங்கோ, தீ மிதியுங்கோ, அல்லது சியாக்கள் செய்வது போல சங்கிலியால் ரத்தவாறாக அடியுங்கோ, பெண்டிகோஸ்டர் செய்வது போல் மருந்தெடாமல் சாவுங்கோ - ஆனால் பிள்ளைகள் பெற்றாரின் சொத்து அல்ல. மிருகங்களுகே உரிமை பேசும் காலத்தில், முடிவெடுக்கும் பராயம் வராத குழந்தைகள் மீது, அது எந்த மதமாகினும், மதத்தின் பெயரால் வன்முறை ஏவப்பட்டால் - அதை தட்டிக் கேட்டே ஆகவேண்டும்.

இதுவே வெளிநாட்டில் நடந்திருந்தால் இப்போ புள்ளைகள் சோசல் சேவிசிடம் இருந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எது தப்பு?

2. சுன்னத்
.

மனித குலத்துக்கு விரோதமான செயலகளை கண்டிக்க அது என்ன மதத்தில் இருந்து வருகிறது என்று பார்ப்பது தேவை அற்றது.

பல்கலைக் கழகத்தில் தொடங்கிய முதல் நாள் பகிடிவதையில் என்னிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று  குளிக்கும் போது முன் தோலை விரித்து சுத்தம் செய்யிறனீ தானே என்று.     கிணற்று குளியலின் வசதிகளில்  இந்த விதமான எண்ணப்பாடுகளே வந்ததில்லை என்று சொன்னேன் .  இதற்காண்டித்   தானே ஒரு பகுதியினர் தோலை முற்றாக அகற்றி விடுகிறார்கள் - 'எலிமினேஷன் of ரிஸ்க் ' என்று சொன்னார்கள்
அதை விடவும் உணர்ச்சி மேம்பாடு கட்டுப்பாடு என்று வேறு விடயங்களும் இருக்கின்றன போல் தெரிகின்றது
அடலீஸ்ட் இதனையாவது விட்டு விடலாமா   

4 hours ago, ampanai said:

என்றும் தமிழனுக்கு என்று ஒரு சுதந்திர நாடு அமையப்போவதில்லை. எம்மை சுற்றி பார்த்தால், இன்றும் மூன்று இல்லை நான்கு தலைமுறையில் தமிழே இருக்காது. ஆனால், தமிழர்கள் இருப்பார்கள் உலகெங்கும். 

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம். 

பெருமைமிக்க தனது அடையாளமான மொழியை இழந்த பின்னர் இப்படியான குப்பைகளை வைத்திருப்பது    தமிழருக்கு இழிவையே தரும்.  மொழியை இழப்பார்களானால் அதன் பின்னர்  இந்த  தரங்கெட்ட  குப்பைகளை  தூக்கி எறிந்து விட்டு தாம் வாழும்   நாட்டு மக்களில் குடிமக்களில்  ஒருவராக மனித கலாச்சாரத்தில்  வாழ்வதே சிறந்தது. அதுவே அவர்களுக்கு  பெருமை தரும்.  நாடு  இல்லாவிட்டாலும் பரவாயில்லை,  தமிழ் மொழி  அழிந்து போனாலும் பரவாயில்லை. இப்படியான மூடத்தனங்கள்  மட்டும் எங்களை மட்டும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்தால் போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு உங்கள் அறிவை எங்கு அடகு வைத்தீர்கள். சிந்தித்து பாருங்கள்.

நீங்கள் கூறுவது எப்படி என்றால் வீடு வைத்திருக்கும் ஒருவர் ஏதாவது  காரணத்தால்  வீட்டை இழப்பேனோ  நிலை வந்த போது   தனது வீட்டை இழந்தாலும் பரவாயில்லை என் வீட்டில் இருந்த அழுக்கு மூட்டைகளை மட்டும் என்னிடம்  தந்து விடுங்கள். வாடகை வீட்டில் எனது அடையாளத்தை  பாதுகாக்க  அந்த அழுக்கு மூட்டைகளை வைத்துக்கொள்ளுகிறேன் என்று கூறுவதற்கு நிகரானது. 

Edited by tulpen

57 minutes ago, tulpen said:

அது அழுக்கு மூட்டையா இல்லை அவரது சொத்தா என்பது அதை வைத்திருப்பவரின் பார்வையைப் பொறுத்தது. உங்கள் பார்வையில் அழுக்கு மூட்டையாக தெரிவது அவருக்கு மாபெரும் பொக்கிஷமாக இருக்கலாம். வெளியே நின்று பார்த்து எப்படி நீங்கள் யூகிக்க முடியும்? எல்லோருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் என்று முற்போக்குவாதியான உங்களுக்கு தெரியாது போனதன் காரணம் என்ன???

அது சரி பிறர் வீட்டு சமாச்சாரங்களில் அப்படி என்ன அக்கறை உங்களுக்கு? உங்கள் மன அழுக்குகளை முதலில் களையுங்கள்; சூழல் அழகாய் தெரியும் உங்களுக்கு. 😊

5 hours ago, goshan_che said:

நீ வேற்று மதத்தான் நீ என் மதத்தை பற்றி கதைக்கபடாது அல்லது நீ நம்பிக்கை அற்றவன் நீயும் கதைக்க கூடாது என்பதெல்லாம் குழு மனோநிலையே அன்றி வேறில்லை.

இது குழு மனோநிலை அல்ல.

மற்றய மதங்களை முழுவதுமாக புரியாமல், ஏன் சொந்த மதத்தை பற்றிய அரைகுறை அறிவோடு பிறரின் நம்பிக்கையை கேவலப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கை. 

அவ்வாறு மற்ற மதங்களை புரிந்து கொள்ள முயலும் போது இவ்வாறான வீண் விவாதங்கள் எழாது.

5 hours ago, goshan_che said:

மனித குலத்துக்கு விரோதமான செயலகளை கண்டிக்க அது என்ன மதத்தில் இருந்து வருகிறது என்று பார்ப்பது தேவை அற்றது.

இது மனித குலத்துக்கு விரோதமா இல்லையா எனத் தீர்மானிக்க திரியின் ஆரம்பத்தில் தரப்பட்ட படம் மட்டும் போதாது. உரியவர்களிடம் தீர விசாரித்தே முடிவு செய்யலாம்.

5 hours ago, goshan_che said:

எங்கள் இனத்தின் வழமை என்பதால், வயசுக்கு வந்த பிள்ளையை - புலம் பெயர் நாட்டில், மாதம் 3 நாள் வீட்டு கார்டனில் கொட்டில் போட்டு வைக்கிறோமா?

இறந்த பிணத்தை வெட்ட வெளியில் நெஞ்சாங் கட்டை வைத்து ஏரிக்கிறோமா?

நாம் புலம்பெயர்ந்திருக்கும் இடத்தில் செய்ய முடியாத சூழ்நிலை என்பதால், செய்யக் கூடிய நிலையில் இருப்பவர்கள் அதைச் செய்வது தவறு என முடிவு பண்ணக்கூடாது. அவனவன் மனத் திருப்திக்காகவோ இல்லையேல் உண்மையான காரணங்களுக்காகவோ செய்யலாம். அது தவறில்லை. நாங்கள் அது புரியாமல் கண்டதையும் விமர்சிப்பது தான் தவறு.

5 hours ago, ampanai said:

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம். 

இதே தான் எனது கருத்தும். 😊

நாட்டை  உருவாக்க முடியவில்லை. மொழியை காப்பாற்ற முடியவில்லை. மூடத்தனத்தை மட்டும்  எதிர்காலசந்ததியிடம் திணிப்போம்.  இது தான் எம் முன்னோர் எமக்கு காட்டிய வழி. அவர்இகளைம் அதையே எமக்கு செய்தார்கள். நல்ல வேளை புலம் பெயர் நாடுகளில் பல அறிவுள்ள தமிழ் பிள்ளைகளை சந்தித்தேன். அவர்களவது இந்த மூடர்களில் இருந்து தப்பி மனித கலாச்சாரத்தில் வாழட்டும். 

வயசுக்கு வந்த பெண்பிள்ளையை மாதம்  மூன்று நாள் வெளியில் கொட்டில் போட்டு விடுவதைக் கூட சந்தர்பம் கிடைத்தால் அதை செய்தால் என்ன என்று  ஆதரிப்பவர்களை மூடர்கள் என்று கூறாமல் வேறு  எப்படி கூறுவது. 

எதிர்கால் தமிழ்பிள்ளைகளே இந்த தலிபான் காட்டுமிராண்டிகளிடம் இருந்து தப்பிப் போய் மனி நாகரீகத்தோடு வாழுங்கள் என்று கூறுவதை தவிர வேறு என்ன சொல்ல. 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.