Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

Featured Replies

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அமசசர-ஆறமகன-தணடமன-கலமனர/150-250937

 

ஆறுமுகம் தொண்டமான் காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் காலமானார்.

வீட்டிலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்

29 மே மாதம் 1964 ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகம் பல்வேறு அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்தவராவார்.

http://www.palmyrahtamilnews.com/2020/05/26/ஆறுமுகம்-தொண்டமான்-காலமா/

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான்(வயது 55) சற்றுமுன்னர் காலமானார்.

இவரின் மரணத்தை தலங்கம வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/144082?ref=imp-news

இனி இவரினிடத்தில் மலையக மக்களின் உரிமைகளை அடகு வைச்சு பிழைக்கப்போவது யாரு?

என்ன தான் மலையக மக்களுக்கு சம்பள விடயங்களில் கடும் துரோகம் இழைத்திருந்தாலும் சம்பந்தன்-சுமந்திரன்-மாவை கோஷ்டியை விட கொஞ்சம் மேலானவர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.jpg

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலம் ஆனார்….

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணமானார். மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக செயற்பட்டு வந்த அவர், தனது 55ஆவது வயதில் காலமானார்.

ஆளும் அரசாங்கங்களுடன் பேரம் பெசும் சக்தியை வளர்த்து வந்த ஆறுமுகன் தொண்டமான, தற்போதைய அரசாங்கத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சராகவும்  செயற்பட்டார்.

1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்துள்ள அவர் 1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றினார்.

பின்னர் 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட அவர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.

தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்த அவர், பல அமைச்சு பதவிகளை வகித்ததுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/1106750-2/

  • தொடங்கியவர்
26 minutes ago, Rajesh said:

இனி இவரினிடத்தில் மலையக மக்களின் உரிமைகளை அடகு வைச்சு பிழைக்கப்போவது யாரு?

இவருக்கு நேரடியாக வாரிசுகள் இல்லாவிடடால், தொண்டமான் என குடும்பபெயருடன் ஒருவர் தலைவராக கட்சிக்கு வரலாம், சாபம் நீடிக்கும். 

அதேவேளை, சுதந்திரமாக ஒருவரை தலைவராக தெரிந்தால், மக்கள் பயன்பெறுவார்கள். 

இன்று சில மணிநேரங்களின் முன் தான் ஹிந்திய தூதுவரை மகிந்த கோஷ்டியுடன் கூட்டு வைத்துள்ள ஆறுமுகன் சந்தித்துள்ளார்.

ஹிந்திய தூதுவர் குடுத்த அழுத்தங்களால் அறுமுகனுக்கு ஸ்ட்ரெஸ் ஏறி மாரடைப்பால் மண்டையை போட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மா சாந்தியடையட்டும்.

அதேவேளை இவர் மொடாக்குடிக்காரர் என்பதும், குடித்தால், அருகில் உள்ள எந்தபெண்ணானாலும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதும் மறைக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் ஒரு 5* ஹோட்டலில், நிறை போதையில், அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை கையை பிடித்து இழுத்து கட்டி அணைக்க முயன்ற வேளை , போலீசார் அழைக்கப்பட்டு, இவர் இலங்கை அரசியல்வாதி என்று தெரிந்து, டெல்லி வரை போய், கேஸ் அமுக்கப்பட்டதாக தமிழக இதழில் வாசித்திருக்கிறேன்.

சந்திரிகா காலத்தில், ஸ்ரீ லங்கன் நிறுவன, தமிழக பொது வியாபார முகவராக பெரும் பணம் பார்த்தார். அதில் பெரும் மோசடியும் நடந்தது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகன் தொண்டமானின் முறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு; முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன்

praba-ganeshan-300x202.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்தியா வம்சாவளி மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாக இருந்தாலும் கூட 1970ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியின் ஊடாக அதனை இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களின் கூட்டுத்தலைமையாக மாற்றியமைத்தவர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

சௌமியமூர்த்தி தொண்டமானை தொடர்ந்து ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மலையக தமிழர்களுக்கு பல சேவைகளை ஆற்றிக்கொண்டு இருக்கும் போது ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆறுமுகன் தொண்டமான் என்ற ஒரு தலைவனின் சகாப்தம் முடிவடைந்ததாக நான் கருதவில்லை மாறாக தொண்டமான பரம்பறையூடாக மலையக மக்கள் பெற்றுக்கொண்ட உரிமைகள் ஒரு போதும் முற்றுப்பெறாது.

இந்த இயக்கத்தின் தொடர் செயற்பாடுகள் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு தொடர்ந்தும் அளப்பெரிய சேவையினை ஆற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அன்னாரின் பிரிவில் சொல்லொன்னா துயரம் கொண்டிருக்கும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் இலங்கை தொழிளாலர் காங்கிரஸின் பிரமுகர்களுக்கும் முக்கியமாக அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கின்றேன்.

http://thinakkural.lk/article/43640

5 hours ago, Rajesh said:

இன்று சில மணிநேரங்களின் முன் தான் ஹிந்திய தூதுவரை மகிந்த கோஷ்டியுடன் கூட்டு வைத்துள்ள ஆறுமுகன் சந்தித்துள்ளார்.

ஹிந்திய தூதுவர் குடுத்த அழுத்தங்களால் அறுமுகனுக்கு ஸ்ட்ரெஸ் ஏறி மாரடைப்பால் மண்டையை போட்டிருக்கலாம்.

இன்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் செய்தியினை நம்ப முடியவில்லை; இந்திய உயர் ஸ்தானிகர் அதிர்ச்சி

baglay-2-300x173.jpg“இன்று மாலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்திருந்த நிலையில் அவரது திடீர் மறைவு குறித்த செய்தியினை நம்ப முடியவில்லை” என இலங்கைக்கான இந்தியாவின் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது;

“அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள். இன்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் இந்த செய்தியினை நம்ப முடியவில்லை.”

1-3.jpg

இன்று மாலை இந்தியத் தூதுவரை ஆறுமுகன் தொண்டமான் குழுவினர் சந்தித்த போது எடுத்துக்கொண்ட படம்

http://thinakkural.lk/article/43614

  • தொடங்கியவர்

ஆழ்ந்த இரங்கல்கள் 

#ஆறுமுகன்_தொண்டமான்

98349705_10163466492460562_4567616703327895552_n.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=T1AewAhG4z0AX8YT0sS&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=a71cb61c2463af3fa4d1413d1d799528&oe=5EF3AC17

  • கருத்துக்கள உறவுகள்

சக மனிதன் என்ற ரீதியில் அனுதாபங்கள் .
ஆனால் தொண்டமான், மலையக மக்களின் இரத்தம் குடித்த  அட்டை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, zuma said:

சக மனிதன் என்ற ரீதியில் அனுதாபங்கள் .
ஆனால் தொண்டமான், மலையக மக்களின் இரத்தம் குடித்த  அட்டை.

எனது கருத்தும் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சக மனிதன் என்ற ரீதியில் அனுதாபங்கள் .
ஆனால் தொண்டமான், மலையக மக்களின் இரத்தம் குடித்த  அட்டை.

அந்த பாவப்பட்ட மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவது அதுகளுக்கே தெரியாமல்  வெள்ளையடிப்பதில் சிங்கனுக்கு தான் முதலிடம் 1998ல் குடியிருமை என்ற பேச்சில் மயங்கி இன்னும் நம்பிக்கை யோடு இருக்குதுகள் .

சமீபத்தில் என் நண்பன் ஒருத்தன் நுவரெலியாவில் கனடாவில் இருந்து கொண்டு போன பாவித்த குளிர் உடுப்புகளை கொடுக்கும்போது அந்த மக்கள் அடிபட்டு வாங்கும் நிலையை பார்க்க முடியாமல் அந்த காணொளியை நிப்பாட்ட வேண்டி மனது கனத்தது .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.  இறந்த பின்பு அவரின் அரசியலை விமர்சிக்க விரும்பவில்லை. அம்மக்களுக்கு நல்ல ஒரு  தலைவர் கிடைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை 89 வயது சொச்சம் வரை இருந்து அரசியல் செய்தார். மகன் 55 வயதுடனேயே விடைபெற்று விட்டார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனது கருத்தும் இதுதான்.

ம்ம் மகிந்த ஆட்சி மாறி மைத்திரி ஏறும் போது இவர்களது பதுங்கு தளத்தில் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட , வழங்கப்பட்ட பொருட்கள் கூரைதகடுகள் பல பொருட்களை பதுக்கி இருந்தார்  

ஒட்டு மொத்த தமிழ் அரசியல் வாதிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் எதிரியானாலும் 

அவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் இறந்தால் 

அஞ்சலிகள் ஆறுமுகம் தொண்டமான் 

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

சந்திரசேகரன் இருந்த போது.. இவருடைய ஈழத்தமிழர் விவகார அணுகுமுறை வேறாகவும்.. இரண்டும் கெட்டான் நிலை.. அவர் இறந்த பின்.. இவரின் அணுகுமுறை சிங்கள ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவது மட்டுமாகவே இருந்தது.

இவர் மட்டுமல்ல.. எம்மினப் பெரும் இன அழிப்புத் துரோகத்தை கண்டிகத்தவறியவர்கள் பலர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

india-3.jpg

“மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்” – ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஸ்டாலின் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகன் தொண்டமான் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களின் நலன்களுக்காக காலமெல்லாம் பாடுபட்ட ஒரு இளம் தலைவரை மலையக தமிழர்கள் இழந்து தவிப்பதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/மலையக-தமிழர்களின்-உரிமை/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

தந்தை 89 வயது சொச்சம் வரை இருந்து அரசியல் செய்தார். மகன் 55 வயதுடனேயே விடைபெற்று விட்டார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

இவர் தொண்டமானின் பேரன் என நினைகின்றேன். தந்தை அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

செளமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் வாழ்வை முன்னேற்ற பலவற்றைச் செய்தார். நாடற்றவர் என்றிருந்த நிலையை மாற்றினார்.

பேரனாரின் பெயரில் குளிர்காய்ந்து தனது பின்னிரவு களியாட்ட வாழ்வுக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டதைத் தவிர ஆறுமுகன் தொண்டமான சாதித்தது எதுவுமில்லை.

மலையக மக்களின் வாழ்வை முன்னேற்ற ஒரு நல்ல தலைவர் இச்சந்தர்ப்பத்தில் வந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இவர் தொண்டமானின் பேரன் என நினைகின்றேன். தந்தை அல்ல

நானறிந்த வகையிலும் பேரன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ......!  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

தந்தை 89 வயது சொச்சம் வரை இருந்து அரசியல் செய்தார். மகன் 55 வயதுடனேயே விடைபெற்று விட்டார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

நியாயத்தை, நாயமா கதைப்போமா? :grin:

சௌமியமூர்த்தி தொண்டைமானின் பேரன் தான் ஆறுமுகம். தந்தை இளமையிலேயே இறந்ததால், பாட்டாவின் கவனிப்பில் வளர்ந்தார்.

பொன்னம்பலம், திருச்செல்வம், தொண்டைமான் என்று பலமிக்க தமிழ் தலைமைத்துவத்தில், கிழட்டு குள்ளநரி ஜெயவர்த்தனே செய்த வேலையினால் அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு முதலில் கழண்டு கொண்டவர் தொண்டைமான். 

பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அஷ்ரபினை அதே வகையில் கழட்டி, தீவின் ஒட்டு மொத்த தமிழர்களையும் பிரித்து மேய்ந்தார்கள்.

அதேபோல, ஜெயவர்த்தனே மருமகன் ரணில், புலிகளை, கருணாவை கழட்டி, வீழ்த்தினார்.

இந்த குள்ள நரித்தனத்தினால் தான், ஜெயவர்த்தனேவின் ஐதேக இன்று வரை அவர் உருவாக்கிய ஜனாதிபதி பதவிக்கு வரமுடியாமல் தவிக்கின்றது.

புலிகளும், 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு தராமல் போனதன் காரணமும் இந்த குள்ளநரித்தனம் தான். 

Edited by Nathamuni

 

மகிந்த கோஷ்டியுடன் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக மகன் ஜீவன் தொண்டமான் தேர்தலில்.

jeevan-thonaman.jpg?fit=640,374&ssl=1

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.