Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்.. பின் எடுத்த முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் உள்ள Monarch Parade-ல் நேற்று உள்ளூர் நேரப்படி சரியாக 4 மணிக்கு இரண்டு பேர் காயங்களுடன் கிடப்பதாக மெட்ரோ பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ள நிலையில் அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கணவன் கூறுகையில், மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும் மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் பிள்ளை இறந்து விட்டதாகவும். தாய் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் பல தமிழர்கள் மன அழுத்தத்தில் உள்ளார்கள். ஆனால் இதனை வெளியே சொல்ல எவரும் தயாரா இல்லை அண்மையிலும் மன அழுத்தத்தினால் ஒரு கொலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…

பொலிசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் தேடவில்லை, யாரையும் கைது செய்யவில்லை.

குழந்தையின் மரணம் மற்றும் பெண்ணின் காயங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

http://jaffnaboys.com/2020/07/01/15765/

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் பகுதியில் ஒரு பெண்,தன்  நான்கு வயசு பெண் பிள்ளையை கொலை செய்து விட்டு,தற் கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு இருக்கிறார் ...அங்கால இருக்கும் உறவுகள் இன்னும் கேள்விப் படேல்லையோ 

அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளை கொலைசெய்த இலங்கைத் தாய் - லண்டனில் நடந்தது என்ன..? (முழு விபரம்)

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

நேற்றைய தினம் 30.06.2020 பிரித்தானியா மிட்சம் பகுதியில் தனது மகளை கத்தியால் குத்தி தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற இலங்கையைச் சேர்ந்த பெண் முல்லைத்தீவு நெடுங்கேணியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலும் அந்தத் தாய் தொடர்பிலும் உறவினர்கள் தெரிவித்த தகவலின்படி,

சுதா என எல்லோராலும் அழைக்க்ப்படும் நெடுங்கேணியைச் சேர்ந்த குறித்த தாய் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தனக்கு கான்சர் என்னும் மாறாநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்கடி உறவினர்களிடம் தெரிவித்திருந்தார் . தன் உயிருக்கு ஏதும் நடப்பின் என் பெண் பிள்ளையை யார் கவனிப்பார்களோ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவேளை நான் இறந்தாலும் என் மகளையும் என்னுடனேயே கூட்டிச்செல்வேன் என உறவினர்களிடம் சொல்லுவாராம்.

முல்லைத்தீவு கள்ளப்பாட்டைச் சேர்ந்த கருணாநிதி சிவானந்தம் (சுகந்தன்) நெடுங்கேணியைச் சேர்ந்த சுதா தம்பதியினருக்கு சுடர்ணனன்(10), சயனிகா(4) என்னும் இரு பிள்ளைகள்.

சம்பவத்தன்று , தினமும் 4 மணிக்கு குளிக்கப் போகும் மகனை 3 மணிக்கு குளிக்கப்போகும்படி தாயார் வற்புறுத்தியதை அடுத்து குளிக்கச்சென்ற மகன் முடித்துவந்து பார்க்கையில் தாயார் இரத்தம் சொட்டச் சொட்ட படுத்திருந்ததைக் கண்டு அயலவர்களின் உதவியை நாடியதாகவும், பின்னர் தந்தைக்கும் உறவினர்களுக்கும் தகவலை தெரிவித்துள்ளான்.

உடன் அங்கு வந்த அயலவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தியதையடுத்து அவசர சிகிச்சை உலங்குவானூர்தி மூலம் கத்தியால் குத்தப்பட்ட 4 வயது சிறுமி சயனிகாவையும், 35 வயது நிரம்பிய சுதாவையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கையில் சிறுமி சயனிகா உயிரிழந்துள்ளார். தாயார் அவசர சிகிச்சைப் பிரிவில் உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அயலவர் தெரிவிக்கையில்,

பதற்றத்தோடு உதவி கேட்ட சிறுவனின் நான் பிளாட்டுக்குள் சென்றேன். படுக்கையறையில், எல்லா இடங்களிலும் ரத்தம் இருந்தது. தாயின் உடலில் ஒரு காயம் இருந்தது. அவள் இன்னும் பதிலளித்தாள், ஏதோ முணுமுணுத்தாள். பின்னர் நான் படுக்கையைப் பார்த்தேன், அவளுடைய மகள் அவள் பக்கத்தில் இருந்தாள். நான் மருத்துவ பயிற்சி பெற்றவள், அவள் போய்விட்டாள் என்று எனக்குத் தெரியும்.. உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தொடர்பை ஏற்படுத்தினேன் என்றார்.

மேலும் அவர்கள் மிகவும் அருமையான குடும்பத்தினர். ஆனாலும் தாய் ஏதோ மனவருத்தத்தில் இருந்தாள் எனவும் அயலவர் தெரிவித்திருந்தார்.

நாங்கள் மிகவும் சோகமாக இருக்கின்றோம். இவ்வாறு நடந்திருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. சுதா மன வருத்தத்தில் இருந்தார். தற்போது இத் துயர்ச் சம்பவம் தொடர்பாக கருணாநிதி சிவானந்தம் மிகவும் குழப்பத்திலேயே இருக்கின்றார் என உறவினரான தினேஷ் சிவானந்தம் தெரிவித்திருந்தார்.

அப் பகுதியில் உள்ள தமிழ்க் கடை ஒன்றின் உரிமையாளர் பத்மநாதன் அரியரட்னம் தெரிவிக்கையில், மிகவும் அற்புதமான குடும்பம். அடிக்கடி கடைக்கு வருவார்கள். ஆனால் அந்த குறித்த தாய் மிகவும் மனவருத்தத்தில் இருந்ததாகவும் அவர் ஆயுர்வேத வைத்தியத்தை (மூலிகை சிகிச்சை) நாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

அயலவரான தபேகா துரைரட்ணேஸ்வரன் தெரிவிக்கையில் சிறுமி சயனிகா மிகவும் அழகானவள். அடிக்கடி இங்கு விளையாட வருவாள். அவளுக்கு இப்படி நடந்தது என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. மிகவும் கவலையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் கருணாநிதி சிவானந்தம் சூப்பர்மார்க்கெட் செயின்ஸ்பெரியில் பணிபுரிபவர்.

இதுதொடர்பில் மேலும் சில உறவினர்கள் தெரிவிக்கையில், என்ன நடந்திருக்கும் என்பதனை சித்தரித்துக்கூட பார்க்கமுடியவில்லை ஆனால் திட்டமிட்டு செயற்படிருக்கின்றாள் சுதா என தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில் செயின்ஸ்பெரியில் வேலைமுடித்து கணவன் 5 மணிக்கு வருவார் என தெரிந்தும் வழமையாக 4 மணிக்கு குளிக்க போகும் மகனை 3 மணிக்கு குளிக்க அனுப்பிவிட்டு தனது மகளையும் மாய்த்து, தன்னையும் மாய்க்க நினைத்துள்ளார். ஏனோ பாவம் குழந்தை உடனேயே உயிரைவிட சுதாவோ உயிர்தப்பியுள்ளார்.

மகன் சுடர்ணனனனோடு ஏதுமறியாத கருணாநிதி சிவானந்தம் என்ன நடந்தது, எவ்வாறு இதுந் அடந்தது எப்படி இது சாத்தியமாகும் என்ற மனக்குழப்பத்தில் செய்வதறியாது நிலைதடுமாறியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினமும் சுதா மருத்துவ அப்பொயிண்ட்மெண்ட் வைத்திருந்ததாகவும் தெரிவித்த உறவினர்கள் இப்படி செய்துவிட்டாளே என கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் தெரிவிக்கையில் இக் கொலை தொடர்பில் வேறு யாரும் தொடர்புபடவில்லை என தெரித்துள்ளனர்.

குழந்தையின் இளஞ் சிவப்பு சைக்கிள் மலர் அஞ்சலிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தையான கருணாநிதி சிவானந்தம் என்பவர் - தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதிகளில் ஒருவரான சுடர்ணனன் அவர்களின் சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.jaffnamuslim.com/2020/07/blog-post_23.html

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. தனது மகளின்மீது அந்தத் தாய்கொண்ட அளவுக்கு மீறிய அன்பும், பாசமுமே இத்தகைய கொடூரத்தைச் செய்யவைத்துள்ளது. 

சயனிக்காவின் ஆத்மா இறவனடிசேர வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவினர் நண்பர்களிடம் தனது கவலைகள் பிரச்சனைகளை சொல்லாமல் அல்லது சொல்லமுடியாமல் தானே எடுத்த விபரீத முடிவு. தனக்கு கான்சர் என்றாலும் தகப்பனும் தமையனும் மகளை பார்த்துக்கொள்வார்கள் தானே. இன்னொரு உயிரை  மாய்ப்பதற்கு எமக்கு உரிமை இல்லை என்று  இந்த தாய்க்கு தோன்றவில்லை. மிகவும் கவலையான விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும்..🙏

.தாயார் பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை.இவ்வாறன செயல்பாடுகளை விவாதிக்க பட வேண்டிய அவசியம் இல்லை.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

உறவினர் நண்பர்களிடம் தனது கவலைகள் பிரச்சனைகளை சொல்லாமல் அல்லது சொல்லமுடியாமல் தானே எடுத்த விபரீத முடிவு. தனக்கு கான்சர் என்றாலும் தகப்பனும் தமையனும் மகளை பார்த்துக்கொள்வார்கள் தானே. இன்னொரு உயிரை  மாய்ப்பதற்கு எமக்கு உரிமை இல்லை என்று  இந்த தாய்க்கு தோன்றவில்லை. மிகவும் கவலையான விடயம். 

38 minutes ago, யாயினி said:

அந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும்..🙏

.தாயார் பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை.இவ்வாறன செயல்பாடுகளை விவாதிக்க பட வேண்டிய அவசியம் இல்லை.

கொரோனா கொடுமை தான்...

ஆறுதல், தைரியம் சொல்ல உறவினர்களோ, நண்பர்களோ வரமுடியாத சூழல். டாக்டர்களும் போனில் தான் பேச்சு.

மனஉளைச்சல்..... மூலையினை குழப்பி விட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தை என்ன பாவம் செய்தது? குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கொரோனா கொடுமை தான்...

ஆறுதல், தைரியம் சொல்ல உறவினர்களோ, நண்பர்களோ வரமுடியாத சூழல். டாக்டர்களும் போனில் தான் பேச்சு.

மனஉளைச்சல்..... மூலையினை குழப்பி விட்டுள்ளது. 

அப்படி என்றில்லை.. எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நடந்து விட்டால் உடன் சொல்வது மன உளைச்சல்,இது வழக்கமாக சொல்லப்படும் குற்றச்சாட்டு..இப்போ பத்தாததிற்கு கொரோனா சாட்டு..ஒரு நோய் என்று வந்துவிட்டால் அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடக்க வேண்டுமா..அந்தப் பிள்ளை பெண்ணாய் பிறந்ததை விட என்ன பாவம் செய்தது...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

உறவினர் நண்பர்களிடம் தனது கவலைகள் பிரச்சனைகளை சொல்லாமல் அல்லது சொல்லமுடியாமல் தானே எடுத்த விபரீத முடிவு. தனக்கு கான்சர் என்றாலும் தகப்பனும் தமையனும் மகளை பார்த்துக்கொள்வார்கள் தானே. இன்னொரு உயிரை  மாய்ப்பதற்கு எமக்கு உரிமை இல்லை என்று  இந்த தாய்க்கு தோன்றவில்லை. மிகவும் கவலையான விடயம். 

11 hours ago, Nathamuni said:

கொரோனா கொடுமை தான்...

ஆறுதல், தைரியம் சொல்ல உறவினர்களோ, நண்பர்களோ வரமுடியாத சூழல். டாக்டர்களும் போனில் தான் பேச்சு.

மனஉளைச்சல்..... மூலையினை குழப்பி விட்டுள்ளது. 

9 hours ago, யாயினி said:

அப்படி என்றில்லை.. எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நடந்து விட்டால் உடன் சொல்வது மன உளைச்சல்,இது வழக்கமாக சொல்லப்படும் குற்றச்சாட்டு..இப்போ பத்தாததிற்கு கொரோனா சாட்டு..ஒரு நோய் என்று வந்துவிட்டால் அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடக்க வேண்டுமா..அந்தப் பிள்ளை பெண்ணாய் பிறந்ததை விட என்ன பாவம் செய்தது...

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

அந்தப் பிஞ்சுக்  குழந்தையின்.... முகத்தைப் பார்க்க, கண்கள் கலங்குகின்றது.

பொதுவாக பெரும்பாலான....  பெண்களுக்கு,
40 வயதிற்கு மேல்... மாதவிடாய் நிற்கும் காலங்களில்...
மன அழுத்தம் ஏற்படும், என்று பல உளவியலாளர்கள் கூறியுள்ளது வாசித்துள்ளேன்.

அந்த நேரம் அவர்களுக்கு... மனதில் எவரோ ஒருவர்.. கட்டளை இடுவது போல், 
ஒரு செயலை சொல்லிக் கொண்டே இருப்பது மாதிரி... ஒரு பிரமை ஏற்படுமாம்.
சிறிது காலத்தில்... அந்தக் கட்டளைக்கு அவர்கள் பயந்து, 
அதனை நிறைவேற்றி விடுவார்களாம்.

அதே... பிரச்சினைதான்... இந்தத் தாய்க்கும், ஏற்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.

அந்த வயதுள்ள பெண்களில் ஏற்படும் மாற்றங்களை ... 
உறவினர்கள் நன்கு அவதானித்து, வைத்திய வசதியை நாடினால்...
உடனே  மறைந்து விடக் கூடிய, தற்காலிக மன அழுத்தம் தான் இது.
ஆனால்... இதனைப் பற்றிய விழிப்புணர்வு.. எமது சமூகத்தில் இல்லை என்பதே வேதனையானது.

நில்மினி, இதனைப் பற்றி.... "நலமோடு வாழ பகுதியில்"
விரிவாக விளக்கம் கூறினால்... நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையின் ஆத்மா சாந்தியடையட்டும்.....ஆழ்ந்த இரங்கல்கள்.....!

அந்தக் குடும்பத்தின் உள் விவகாரங்கள் தெரியாத வரை இதைப்பற்றி என்ன சொல்வது......! 

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

2019  மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் நடைபெற்ற ஊர்வலத்தில் சிறிய பிள்ளைகள் உள்ள மூன்று குடும்பங்களை முன்வரிசையில் விட்டோம். அப்ப கொடியைப் பிடித்துக்கொண்டு  உணர்வுபூர்வமாக  கத்தியபடிசென்றாள் இச்  சிறுமி.

Image may contain: 5 people, shoes and outdoor

இச் சிறுமியின் ஆத்மா சாந்தியடையட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு குடும்பவிவகாரம் ஆகையால் அதைப்பற்றி எதுவும் எழுத எனக்கு விருப்பம் இல்லை, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

2019  மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் நடைபெற்ற ஊர்வலத்தில் சிறிய பிள்ளைகள் உள்ள மூன்று குடும்பங்களை முன்வரிசையில் விட்டோம். அப்ப கொடியைப் பிடித்துக்கொண்டு  உணர்வுபூர்வமாக  கத்தியபடிசென்றாள் இச்  சிறுமி.

Image may contain: 5 people, shoes and outdoor

இச் சிறுமியின் ஆத்மா சாந்தியடையட்டும் .

இதன் படி அவருக்கு இப்போ வயது 15 ஆக அல்லவா இருக்கவேண்டும்?
4 வயது சிறுமி என்று செய்தி சொல்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

இதன் படி அவருக்கு இப்போ வயது 15 ஆக அல்லவா இருக்கவேண்டும்?
4 வயது சிறுமி என்று செய்தி சொல்கிறது? 

மருதர் 2009 இல்லை 2019

  • கருத்துக்கள உறவுகள்

திரிக்கு சம்மந்தம் இல்லாத.... சம்மந்தம் ஒன்று உண்டு என்பதால் எழுதுகிறேன்.

இன்னொரு திரியில் துல்பன் கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் எழுதவில்லை 
வேலை நிமித்தம் நேரமின்னமையால் எழுத முடியவில்லை விரிவாக எழுத வேண்டும் என்பதால்.

எமது கலாச்சாரம் சார்ந்த தலைப்பு ஒன்று.

எந்த கலாச்சாரம் மனித வாழ்வை முழுமை காண வழி சமைக்கிறது? என்பதே நான் முன்வைத்த கேள்வி.
வாழ்வின் முழுமை 
மகிச்சியான வாழ்வு 
நிம்மதியான குடும்பம் 
நித்தியாமான நம்பிக்கை 

இவற்றை உலகில் எந்த கலாச்சார பின்னணி கொண்டுள்ளது?
தற்கொலைகள் .... விவாகரத்துகள் .... விவாகமின்னமை 
போன்றவை சுதந்திரம் எனும் மாயைக்குள் மறைக்க முடியுமா?

இந்த பெண்மணியின் விரக்தி நிலை எங்கு உருவானது?
இந்த முடிவை எங்கிருந்து பெற்றுக்கொண்டார்?
போன்ற கேள்விகளுக்கான பதில்கள் ஒற்றை வரிகள் அல்ல 
நாம் அலசி ஆராய நிறைய உண்டு.

நான் இந்துமதம் பற்றி காழ்ப்புணர்வு கொள்ளவும் எழுதவும் நிறைய காரணம் உண்டு 
தமிழரின் மொழியை காலச்சாரத்தை உள்ளிருந்தே ஒரு கிருமி போல அழித்து தமிழரை 
வெறும் மூடர் ஆக்குவதில் பெரும்பங்கு திட்டமிடுதலுடன் அதில் இருக்கிறது. 
அதை புரியும் நிலையில் கூட தமிழர்கள் இல்லை.

அருமைகளை தொலைத்து அசிங்கல்களை விலைகொடுத்து வாங்கியவர்கள் தமிழர்கள். 
வினோதமான விளம்பரங்களுக்கு மயங்கி இன்னமும் இது தொடர்கிறது. 
-----------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த பெண்மணியின் மனநிலை குறித்து நாம் எழுதிவிட முடியாது 
இப்படியொரு முடிவை வெறும் கோமாளி தனமாக அவர் எடுத்திருக்க மாட்டார் 
நாம் ஆத்மா சாந்தியடையட்டும் என்று வெறும் வார்த்தை மட்டுமே எழுத முடியும் 
தாயின் வலியும் உணர்வும் அவரால் மட்டுமே உணர கூடியது. 

முடிந்த அளவுக்கு பிறரிடத்த்தில் அன்பாய் இருப்போம் 
ஒரு புன்னகை கூட சிலருக்கு உற்சாகம் கொடுக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Maruthankerny said:

இதன் படி அவருக்கு இப்போ வயது 15 ஆக அல்லவா இருக்கவேண்டும்?
4 வயது சிறுமி என்று செய்தி சொல்கிறது? 

2019 தொடக்கம் 2020 வரை 15 ஆண்டுகளா ????? ஒன்றுமே புரியவில்லையே

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழரசு said:

இது ஒரு குடும்பவிவகாரம் ஆகையால் அதைப்பற்றி எதுவும் எழுத எனக்கு விருப்பம் இல்லை, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.
 
இந்த செய்தியின் பின்னணியில் எழும் விளைவுகளை யாருமே எண்ணிப்பார்க்க விரும்புகினம் இல்லை .

நமக்கோ இந்த கொலைதான் கடைசியாக புலம்பெயர் தமிழ் மக்களில் மன அழுத்த இழப்பாய் இருக்கனும் இனி ஒரு மனஅழுத்த கொலையோ தற்கொலையோ வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடைக்காமல் குறைந்தது ஒரு நாள் அல்லது இரு நாளாவது வேலைக்கு போக வேண்டும் அல்லது சரட்டி[தொண்டு ] வேலைக்காவது போக வேண்டும்...அந்த பெண் தனக்கு கான்சர் இருக்குமோ என்று சந்தேகப்பட்டு இருக்கிறா அதை உறவினர்களுக்கும் சொல்லி இருக்கிறா...உறவினர்கள் அந்த பெண்ணோடு போய் அக்கறையாய் ,அன்பாய் கதைத்திருந்தால் அந்த பெண் இப்படி செய்திருப்பாவா ?...கணவருக்கும் அவவின் நிலை தெரியும் ....அப்படியிருந்தும் உரிய  நேரத்தில் சிகிச்சைக்கு கூட்டிப் போகாததால் அந்த பெண் தனது மகளை கொல்லும் அளவிற்கு  போயிருக்கிறார் [எவ்வளவு மனா அழுத்தம் இருந்திருக்கும்]...வீட்டில் கணவர் இல்லாத  நேரம் 5 வயசு மகளை கொடூரமாய் கொலை செய்து அதை 10  மகனை பார்க்க /தவிர்க்க விட்ட கொடூரத்தை என்ன என்று சொல்வது ...இவ்வளவு போர் ,இறப்புக்களை தாண்டி வந்த எங்கள் சமூகம் இவ்வளவு கோழையாய் இருப்பது வேதனையானது .
 
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இந்த செய்தியின் பின்னணியில் எழும் விளைவுகளை யாருமே எண்ணிப்பார்க்க விரும்புகினம் இல்லை .

நமக்கோ இந்த கொலைதான் கடைசியாக புலம்பெயர் தமிழ் மக்களில் மன அழுத்த இழப்பாய் இருக்கனும் இனி ஒரு மனஅழுத்த கொலையோ தற்கொலையோ வேண்டாம்.

14 minutes ago, ரதி said:

பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடைக்காமல் குறைந்தது ஒரு நாள் அல்லது இரு நாளாவது வேலைக்கு போக வேண்டும் அல்லது சரட்டி[தொண்டு ] வேலைக்காவது போக வேண்டும்...அந்த பெண் தனக்கு கான்சர் இருக்குமோ என்று சந்தேகப்பட்டு இருக்கிறா அதை உறவினர்களுக்கும் சொல்லி இருக்கிறா...உறவினர்கள் அந்த பெண்ணோடு போய் அக்கறையாய் ,அன்பாய் கதைத்திருந்தால் அந்த பெண் இப்படி செய்திருப்பாவா ?...கணவருக்கும் அவவின் நிலை தெரியும் ....அப்படியிருந்தும் உரிய  நேரத்தில் சிகிச்சைக்கு கூட்டிப் போகாததால் அந்த பெண் தனது மகளை கொல்லும் அளவிற்கு  போயிருக்கிறார் [எவ்வளவு மனா அழுத்தம் இருந்திருக்கும்]...வீட்டில் கணவர் இல்லாத  நேரம் 5 வயசு மகளை கொடூரமாய் கொலை செய்து அதை 10  மகனை பார்க்க /தவிர்க்க விட்ட கொடூரத்தை என்ன என்று சொல்வது ...இவ்வளவு போர் ,இறப்புக்களை தாண்டி வந்த எங்கள் சமூகம் இவ்வளவு கோழையாய் இருப்பது வேதனையானது .

மிகவும் வேதனையாக... உள்ளது.
இது, வேறு ஒரு திரியில்...  பல,  தமிழ் குடும்பத்தினரை..
சென்று அடையக் கூடிய வகையில்... உரையாட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

மிகவும் வேதனையாக... உள்ளது.
இது, வேறு ஒரு திரியில்...  பல,  தமிழ் குடும்பத்தினரை..
சென்று அடையக் கூடிய வகையில்... உரையாட வேண்டும்.

நிச்சயம் உரையாடி இதற்கு என்ன தீர்வு, என்ன வழி என்றும் பார்க்கவேண்டும் 

16 hours ago, ரதி said:

வீட்டில் கணவர் இல்லாத  நேரம் 5 வயசு மகளை கொடூரமாய் கொலை செய்து அதை 10  மகனை பார்க்க /தவிர்க்க விட்ட கொடூரத்தை என்ன என்று சொல்வது ...இவ்வளவு போர் ,இறப்புக்களை தாண்டி வந்த எங்கள் சமூகம் இவ்வளவு கோழையாய் இருப்பது வேதனையானது .
 
மிகவும் உண்மை. 

On 1/7/2020 at 23:15, தமிழ் சிறி said:

ஆனால்... இதனைப் பற்றிய விழிப்புணர்வு.. எமது சமூகத்தில் இல்லை என்பதே வேதனையானது.

நில்மினி, இதனைப் பற்றி.... "நலமோடு வாழ பகுதியில்"
விரிவாக விளக்கம் கூறினால்... நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

நிச்சயம் தொடங்க வேண்டும் சிறி. மற்றும் இந்த அறிவுரைகள் சம்பந்தப்பட்டோருக்கு சென்றடையவும் வேணும் . உங்கள் செல் போன் சம்பந்தமான கேள்விக்கு இன்று பதிவு போடுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

தற்கோலை என்பது வேறு ஒருவரை அழித்துவிட்டு
தானும்  தற்கொலை செய்வது  என்பது வேறு

அதிலும்  பெற்ற பிள்ளையை  கொன்று தன்னுடன்  எடுத்துச்செல்வதாக கொலை செய்வது

மூடநம்பிக்கையின்  உச்ச  மனநோய்

பச்சிளம்  குருத்துக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை ஜரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் நல்ல உதவி செய்வர். ஆனால் லண்டனில் தமிழருக்கு அந்த பழக்கம் இல்லை ...போட்டி ,பொறாமை ,எரிச்சல் இங்குள்ளவர்களுக்கு அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.