Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!

weera.jpg

சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

"சர்வதேச பொலிஸாருடன் (இண்டர்போல்) இணைந்து புலிகளின் சர்வதேச நிதிச் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"புலிகளின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை இலங்கையில் கொண்டு வரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம். தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் இயங்குகின்றது. எனவே, நாம் இன்னொரு போருக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருந்தால் மட்டுமே இதனை எம்மால் கையாள முடியும்.

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/09/06/16405/

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

இந்த விடயத்தை சரியாகவே சொல்லியிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

இந்தியாவை எவருமே தூண்டிவிடுவதில்லை. அதைச் செய்வது சிங்களவர்கள்தான். சீனாவின் பக்கம் சாய்வதாலேயே இந்தியா இலங்கைக்கு எதிராகச் செயற்படும் சந்தர்ப்பத்தினை சிங்களவர்களே செய்துகொண்டார்கள். தமிழ்த் தலைமைகளோ, தமிழர்களோ கேட்டுக்கொண்டதன்படி செயற்பட இந்தியா ஒன்றும் தமிழர்களின் நேச சக்தி கிடையாது. தனக்குத் தேவையென்றால் எதையுமே செய்யக்கூடிய ஒரு நாசகார சக்திதான் இந்தியா. கூடவிருந்தே குழிபறித்த தூரோகத்தாலும், இந்தியாவின் உதவிகளாலும் வீழ்த்தப்பட்ட நாம் எமது எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பதில் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.  ஒரு இனக்கொலையாளன் தமிழ்த் தலைமைகள் என்று அவனே சித்தரிக்கும் சில மனிதர்களைப் பார்த்துக் கொக்கரிக்கிறான் என்றால், அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில்த்தான் நாம்  இருக்கிறோம். 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா ஈடுபடு முன்னமே தமிழர்களைச் சிங்களவன் கொல்லத் தொடங்கிவிட்டான் என்பதை இன்று கொக்கரிக்கும் சிங்களவனை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் சிலர் இலகுவாக மறந்துவிட்டனர்.

தமிழனைப் பொறுத்தவரையில் சிங்களவன் எதிரி, இந்தியா முதுகில் குத்திய துரோகி. இவர்கள் இருவரில் எவரை ஒருவர் ஆதரித்தாலும் அவர் தமது சொந்த நலன்களுக்காகவும், தமிழினத்தின் இருப்பிற்கு எதிராகவுமே செயற்படுகிறார்கள்  என்று பொருள், இதற்கு அவர்கள் முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் என்னவாக இருந்தாலென்ன. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் சும்மாவே காவடி...

இப்ப இரண்டு கொம்பு....

அலம்பறை கூடப்போகுது....

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரஞ்சித் said:

தமிழனைப் பொறுத்தவரையில் சிங்களவன் எதிரி, இந்தியா முதுகில் குத்திய துரோகி. இவர்கள் இருவரில் எவரை ஒருவர் ஆதரித்தாலும் அவர் தமது சொந்த நலன்களுக்காகவும், தமிழினத்தின் இருப்பிற்கு எதிராகவுமே செயற்படுகிறார்கள்  என்று பொருள், இதற்கு அவர்கள் முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் என்னவாக இருந்தாலென்ன. 

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிங்களவர்களுக்குச் சோரம் போவதுதான் என்று நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

10 minutes ago, ரஞ்சித் said:

சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிங்களவர்களுக்குச் சோரம் போவதுதான் என்று நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா?

பல்கலைக்கழகப். படிப்பும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பாதுகாப்பும் வசதிகளும் உள்ளவர்களால் இதற்கு மேலாக சிந்தித்து பயனுள்ள வகையில் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

பல்கலைக்கழகப். படிப்பும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பாதுகாப்பும் வசதிகளும் உள்ளவர்களால் இதற்கு மேலாக சிந்தித்து பயனுள்ள வகையில் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

நான் நடப்பதைச் சொன்னேன் அண்ணோய்!!!

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

உங்கடை ஆலோசனைகளையும் சொல்வதுதானே ?

சொறிலங்காவில் இருக்கம்  கடன் விலைவாசி பிரச்சனைகளுக்கு  பொது எதிரி தேவை மவுனித்து போன புலியை  திரும்ப உருவாக்குவது சொறிலங்கா இனவாத அரசே .

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் ஹிந்தியாவுடன் சிரித்து மகிழ்ந்தாலும் ஹிந்தியனை கண்ணிலேயே காட்டமுடியாது சிங்களவனுக்கு , எமது கூத்தாடி கிங் சம்மு  13 இல் கைவைத்தால் தெரியும்  ஹிந்தியனின் ஆட்டம் என்று டான் கணக்கில் டயலொக் விட்டு சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றி விட்டிருக்கிறார், பாவம் ஹிந்தியனின் கையாலாகாத்தனம் தெரிந்தும் அது  ஐயாவின் கறல் கட்டிய மூளையில் ஏறவில்லை போல, ஏற்கனவே நாறி நச நசத்து போன 13 ஐ பாடையில் ஏற்றும் போது பாடி ஓவராக டேமேஜ் ஆகாமல் பார்த்து ஏத்துங்கோ என்று சொல்ல 
ஒரு விசேட தூதுவரை ஏற்பாடு செய்திருக்கிறான் ஹிந்தியன், ஒரு கட்டத்திற்கு மேல் அது இலங்கையின் இறைமை என்று பின் பக்கத்தை தட்டிவிட்டு நிண்ட இடத்திற்கும் விசலம் சொல்லாமல் ஆள்மாறிடுவான்
நம்மாள் அடுத்த இலவம் பஞ்சிற்கு நாக்கை தொங்கப்போடவேண்டியது தான் அடுத்த தபா வரை ஆள் தாங்குமா ...?       

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

தமிழ்த் தலைமைகளோ, தமிழர்களோ கேட்டுக்கொண்டதன்படி செயற்பட இந்தியா ஒன்றும் தமிழர்களின் நேச சக்தி கிடையாது. தனக்குத் தேவையென்றால் எதையுமே செய்யக்கூடிய ஒரு நாசகார சக்திதான் இந்தியா. கூடவிருந்தே குழிபறித்த தூரோகத்தாலும், இந்தியாவின் உதவிகளாலும் வீழ்த்தப்பட்ட நாம் எமது எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பதில் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.  

தமிழர் மூச்சோடு கலந்திருக்கும் இராசையா பார்த்திபன் எனப் பெயர்கொண்ட எங்கள் திலீபனும், பூபதி கணபதிப்பிள்ளை எனப் பெயர்கொண்ட எங்கள் அன்னை பூபதி அவர்களும், இந்தியா. கூடவிருந்தே குழிபறிக்கும் தூரோக நாடு என்பதை உலகமே ஐயமின்றி அறிவதற்கான வலுவான சாட்சிகளாக உள்ளனர்.   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த விடயத்தை சரியாகவே சொல்லியிருக்கிறார்

இந்தியா இலங்கைத் தமிழர்களை தூண்டிவிடுவதாக  கூறமுடியாதல்லவா 😂 ஆதலால் கத்தியை மறுவளமாகப் போட்டிருக்கிறார். 

அம்புட்டுதே 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

7 hours ago, பெருமாள் said:

உங்கடை ஆலோசனைகளையும் சொல்வதுதானே ?

சொறிலங்காவில் இருக்கம்  கடன் விலைவாசி பிரச்சனைகளுக்கு  பொது எதிரி தேவை மவுனித்து போன புலியை  திரும்ப உருவாக்குவது சொறிலங்கா இனவாத அரசே .

இருந்தா தனே... இன்னமும் ஜெர்மனி நாசிக்களை எதிர்த்து     பிரான்ஸ் மக்கள்  போராட வேண்டுமா இல்லையா என்பதற்கு அண்ணாச்சி இன்னமும் பதில் சொல்லவில்லை; இதுக்குள்ள புதிசா கேள்வி கேட்டு குடைய வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

இவை சரியான வழிகாட்டல்.  கொழும்பில் உள்ள Majestic City போன்ற பாரிய முதலீடுகள் தமிழருடையதே. இந்த கட்டடத்  தொகுதியின் ஆரம்பகாலத்தில் நானும் முதலிட்டு அண்மைக்காலம் வரை எனது பங்குகளை வைத்திருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக மேலதிக முதலீடுகளை வடக்கு-கிழக்கில், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செய்வது பற்றி கலந்துரையாடிய போது, அங்கே வணிகங்கள் வன்முறை குழுக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போரால் செய்யப்படுவதாக அறியக்கிடைத்தது. இவர்களில் சிலர் அரசியல்வாதிகள். மற்றவர்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள். புதிய வணிகம் தமக்கு போட்டியானது என இவர்கள் நினைத்தால் அழித்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது.  போட்டியாக இல்லாவிட்டாலும் வணிகம் சிறப்பாக வளர்ந்தால் அதை அவர்கள் தமதாக்க விரும்புகிறார்கள்.  இந்த நிலமைகளை எவ்வாறு கையாளலாம்?

இதைத்தான் பலரும் செய்து  கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இதைவிட சிங்களவனிடம் நாம் உங்கள் அடிமைகள் 

எந்த நிலையிலும் இந்த  நாட்டில்  உரிமை கொண்டாடமாட்டோம் என சரணடைதல் முன்னேற சுலபமான  வழி  என்று

பல்கலைக்கழகங்களில்  படித்து பட்டம்  பெற்றவர்கள்  என்று தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்கள் முன்னுக்கு நிற்கிறார்களே?

யாம் என்ன  பண்ணும்????

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா இனப்படுகொலை அரசு.. ஒரு இனத்தை அதன் அரசியல் விடுதலை தொடர்பான முயற்சிகளை முன்னிட்டு இன்ரபோலை தவறாக வழிநடத்தி.. அந்த இனக்குழும மக்களை பழிவாங்கவோ.. இன அழிப்புச் செய்யவோ அனுமதிக்கக் கூடாது.

புலம்பெயர் தமிழ் இளையோர் அமைப்புக்கள்.. இது தொடர்பில் இன்ரபோல்.. மற்றும் சர்வதேச உளவு அமைப்புக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தமிழ் இளையோர் இன்ரபோல்.. மற்றும் சர்வதேச உளவு அமைப்புக்களில் குறிப்பாக மேற்கு நாட்டு உளவு அமைப்புக்களில்.. தம்மை இணைத்துக் கொள்வதையும் அதிகரிக்க வேண்டும்.. இந்த சிங்களச் சவால்களை எதிர்கொள்ள. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

இவை சரியான வழிகாட்டல்.  கொழும்பில் உள்ள Majestic City போன்ற பாரிய முதலீடுகள் தமிழருடையதே. இந்த கட்டடத்  தொகுதியின் ஆரம்பகாலத்தில் நானும் முதலிட்டு அண்மைக்காலம் வரை எனது பங்குகளை வைத்திருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக மேலதிக முதலீடுகளை வடக்கு-கிழக்கில், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செய்வது பற்றி கலந்துரையாடிய போது, அங்கே வணிகங்கள் வன்முறை குழுக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போரால் செய்யப்படுவதாக அறியக்கிடைத்தது. இவர்களில் சிலர் அரசியல்வாதிகள். மற்றவர்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள். புதிய வணிகம் தமக்கு போட்டியானது என இவர்கள் நினைத்தால் அழித்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது.  போட்டியாக இல்லாவிட்டாலும் வணிகம் சிறப்பாக வளர்ந்தால் அதை அவர்கள் தமதாக்க விரும்புகிறார்கள்.  இந்த நிலமைகளை எவ்வாறு கையாளலாம்?

இவ்வாறான நிலமைகளை அரசியல்வாதியாகவும் வியாபாரியாகவும் சிந்தித்து புத்திசாலித்தனமாகக் கையாளவேண்டும். 

ஆடுற மாட்ட ஆடியும் பாடுற மாட்ட பாடியும் கறக்க வேண்டும். 👍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இதைத்தான் பலரும் செய்து  கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இதைவிட சிங்களவனிடம் நாம் உங்கள் அடிமைகள் 

எந்த நிலையிலும் இந்த  நாட்டில்  உரிமை கொண்டாடமாட்டோம் என சரணடைதல் முன்னேற சுலபமான  வழி  என்று

பல்கலைக்கழகங்களில்  படித்து பட்டம்  பெற்றவர்கள்  என்று தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்கள் முன்னுக்கு நிற்கிறார்களே?

யாம் என்ன  பண்ணும்????

உன்மையில் சரியான அரசியல் நகர்வை செய்தால் வெளிநாட்டு பணம் தங்கு தடையின்றி பாயும் எங்கு கதைக்கணுமோ அங்கு கதைக்காமல் இங்குவந்து சதிராடும் வேடதாரிகளை  என்ன செய்வது ?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

உன்மையில் சரியான அரசியல் நகர்வை செய்தால் வெளிநாட்டு பணம் தங்கு தடையின்றி பாயும் எங்கு கதைக்கணுமோ அங்கு கதைக்காமல் இங்குவந்து சதிராடும் வேடதாரிகளை  என்ன செய்வது ?

ஐயா பெருமாள், விசுகு, 

ஒரு விடயம் பிரயோசனமாய் கதைக்கும்போது எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைக் கொஞ்சம் தள்ளி வைத்தால் என்ன ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

நல்ல கருத்து, இதைதான் எம்மால் இப்ப செய்து முன்னேற்ற முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நல்ல கருத்து, இதைதான் எம்மால் இப்ப செய்து முன்னேற்ற முடியும்

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

59 minutes ago, Kapithan said:

இடம் மற்றும் நபர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடாமல் உங்கள் திட்டம் பற்றி 
விபரிக்கலாமே மறவர்களும் பின்பற்ற கூடும் அவர்களுக்கு சரி என தோன்றினால் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

வெற்றிபெற வாழ்த்துகள் கப்பிதான். ஏற்றுமதிக்கான உற்பத்தி செய்கிறீர்களா அல்லது உள்ளூர் பயன்பாட்டுக்கான பொருட்களா? பொதுநல நிறுவனங்களூடாக சைக்கிளில் இணைத்து இழுத்து செல்லத்தக்க பொருட்களை காவும் இணைப்பு வண்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எரிபொருள் செலவில்லாமல் விவசாயிகளும் வியாபாரிகளும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படும் இல்லையா? இரண்டு அல்லது நாலு துவிச்சக்கர வண்டிகள் இழுத்து செல்லத்தக்கதாக அமைந்தால் மேலும் அதிக பொருட்களை காவி செல்ல முடியும்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

அறிவின்மையை இங்கு புலம்பெயர் தேசத்திலும் 
ஈழத்திலும் முதலில் போக்க வேண்டும் 

சரியான ஒரு வழிகாட்டல் பொது அறிவு இல்லாமல் 
கடந்த 40-50 வருடமாக எனோ தானோ என்று வாழ்ந்த ஒரு சமூகம் நாம் 

எங்களை மூளைச்சலவை செய்வது முட்டாள்தனமான எண்ணங்களை 
புகுத்துவது என்பது மிக இலகுவானது காரணம் நாம் ஒரு தற்காப்பு 
நிலைக்கே தள்ளாடிக்கொண்டு இருந்தவர்கள் ஆதலால்  எமக்கு உயரிய எண்ணமோ 
எதிர்பார்ப்போ தேவையற்று இருந்தது 

இதை நாம் செய்ய தவறின் எந்த பயிரும் விளையலாம் 
வீடு வந்து சேராது. 

எங்களிடம் போதிய பலம் வளம் எல்லாம் உண்டு 
பயன்படுத்த போதிய அறிவில்லாமையால் அழிந்துபோகிறோம் 
இதற்கு கடந்த 10 வருடத்தில் வான் நோக்கி வளர்ந்த ஆயிர கணக்கான 
கோவில்கள்தான் ஆதாரம்.
ஏன்? எதற்கு?
என்ற கேள்விக்கே வேலையில்லாத மனித மூளையை சுமக்கும் 
ஒரு சுமைதாங்கி வாழ்க்கையில் இருந்து முதலில் வெளியேற வேண்டும்.

சம நேரத்தில் எங்களுடைய எல்லா வளமும் சூறையாடபட்டு கொண்டு இருக்கிறது  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.