Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ‌ ப‌ற்றாள‌ர் மாமா சாகுல் அமீது ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 எம் த‌லைவ‌ரை ஆத‌ரிச்ச‌ கார‌ண‌த்துக்கா  17மாத‌ம் சிறை வாழ்க்கையை அனுப‌வித்த‌வ‌ர் 2002ம் ஆண்டு , எல்லாரும் அன்போடு மாமா என்று அழைக்கும் மாமா எம்மோடு இல்லை என்று நினைக்கும் போது க‌ண்ணீர் ஆறா ஓடுது 😢😓 ,

மாமாவுக்கு ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல்
மாமாவின் ஆத்மா சாதி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திப்போம் 🙏🙏🙏

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் சாகுலுக்கு அஞ்சலிகள்.
ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள், ஆத்மா சாந்தியடையட்டும்🙏

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்,ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தனியேவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? – சீமான்

என்னை தனியேவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? - சீமான்

 

என்னை தனியேவிட்டு எங்கே சென்றீர்கள் என் தாய் மாமனே?

மாமா!

உங்களது பிரிவு மாபெரும் இருட்டுக்குள் என்னை தள்ளிவிட்டிருக்கிறது. என் வாழ்நாளின் பல தருணங்களில் சொல்வழியே, செயல்வழியே நம்பிக்கை அளித்து வழிநடத்திய நீங்கள் நட்ட நடுவழியில் தவிக்கவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா?

நீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன்?

என் வாழ்வின் அனைத்துப்பொழுதுகளிலும் நீங்கள்தானே மாமா நிறைந்து இருக்கிறீர்கள்! உங்களைப் போன்று என்னை உணர்ந்தவர் யாருண்டு மாமா?

நான் மேடையேறியப் பொழுதுகளிலிருந்து உங்கள் விரல் பிடித்துதானே மாமா நான் வழிநடந்திருக்கிறேன்!

என் வாழ்க்கையின் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளிலும் கூடவே இருந்திருக்கிறீர்கள்!

எனது சுக துக்கங்களில் பங்கெடுத்திருக்கிறீர்கள்!

நீங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த பொழுதில், ‘நான் இருக்கிறேன் மருமகனே!’ என நம்பிக்கை அளித்திருக்கிறீர்கள்! பொருளாதாரத்தில் வீழ்ந்த காலக்கட்டத்திலும் “எப்படியாவது தேறி வந்து விடுவேன் மருமகனே! நீ துணிந்து நில்” என ஒவ்வொரு நொடியும் தேறுதல் வார்த்தைகள் பேசி கண்ணின் இமை போல என்னை காத்திருக்கிறீர்கள்!

நாம் தமிழர் என்கின்ற இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்க நாம் முடிவு செய்தபோது, நீங்கள் தானே மாமா எனக்கு முதுகெலும்பாய் மாறி நின்றீர்கள்! இப்போது என்னைவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா?

ஈழ விடுதலைக்களத்தில், தமிழ்த்தேசியப் பயணத்தில் எண்ணற்றோர் சமரசமடைந்து மெளனித்தபோதும் நீங்கள் என்னோடு இருந்து நாம் செல்கின்ற திசை சரியென உலகுக்கு உணர்த்தினீர்களே மாமா! உளவியல் பலமாய், உற்ற துணையாய் எப்போதும் இருந்தீர்களே மாமா! இப்போது எங்கே சென்றீர்கள்?

இனத்திற்காக பொல்லாத பொடா சட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம்! இனமான பணிகளுக்கென எவர் வந்தாலும் அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளலைப் போன்ற வாழ்க்கை என எந்த சூழ்நிலையிலும் தமிழினத்தையும், தமிழ் மொழியையும் பற்றி சிந்திக்காமல் நீங்கள் இருந்ததில்லையே மாமா!

இப்போது என்னை மட்டும் தனியே விட்டு தூரம் போய்விட்டீர்களே மாமா!

நோயுற்ற பொழுதுகளிலும்கூட மருத்துவமனையிலிருந்து அலைபேசி வழியாக காணொளி அழைப்பு பேசியபோது வலது கரம் உயர்த்தி நம்பிக்கையோடு புன்னகைத்தீர்களே மாமா! அந்தப் புன்னகையை இனி நான் எங்கு காண்பேன்?

எப்படியும் நீங்கள் திரும்பி வந்து விடுவீர்கள் என்றுதானே நான் காத்திருந்தேன்! இப்படி என்னை ஏமாற்றிவிட்டு சென்றீர்களே மாமா!

உங்கள் மருமகனை முதல்முறையாக காத்திருக்க வைத்துவிட்டு, தாயற்றப் பிள்ளை போல தவிக்க விட்டுவிட்டு எங்கே சென்றீர்கள்‌ மாமா?

போராட்டமென்றதும் முதல் ஆளாய் களத்தில் நிற்பீர்களே! இனி எங்கு உங்களைக் காண்பேன்?

‘மருமகனே’ எனும் அந்தக் குரலை இனி எப்படி கேட்பேன்?

‘இறுதிவரை களத்தில் நிற்போம் மருமகனே!’ என நெஞ்சார சொல்வீர்களே! இப்படி பாதியிலேயே விட்டுவிட்டு போய்விட்டீர்களே மாமா?

‘மருமகனே’ என நீங்கள் அழைக்கும்போதெல்லாம் உங்கள் அன்பின் நிழல்பட்டு சிலிர்த்திருக்கிறேனே மாமா! அதுவெல்லாம் கனவாய் காற்றில் கரைந்துவிடுமா மாமா?

தனியே கண்கலங்கி துடிக்கிறேன் மாமா! தேற்ற நீங்கள் இல்லை!

மனம் கலங்கி நான் தவித்த பொழுதுகளிலெல்லாம் ஆறுதல் வார்த்தைகளால் நெஞ்சம் நிறைத்து தேற்றுவீர்களே மாமா! இப்போது நீங்கள் அழுகையைத் தந்து மீள முடியாத் துயரில் ஆழ்த்தி சென்றுவிட்டீர்களே மாமா!

பொங்கிவரும் என் கண்ணீரின் ஊடே எந்த இலட்சியத்திற்காக இவ்வாழ்வில் நமது கரங்கள் ஒன்று சேர்ந்ததோ? அந்த இலட்சியம் வெல்ல நான் உயிர் உள்ளவரை உழைப்பேன் என உங்கள் பேரன்பு முகம் நினைத்து உறுதி ஏற்கிறேன் மாமா!

நீங்கள் சுவாசித்த காற்று இன்னும் இந்த மண்ணில்தான் உலவிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையோடு, எமது உணர்வாக, எமது விடுதலை கனவாக நிறைந்திருந்து நீங்கள் என்னை வழி நடத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் மாமா.

மீளாத் துயருடன்
உங்கள் மருமகன்

செந்தமிழன் சீமான்.

https://www.naamtamilar.org/seeman-sends-condolence-message-to-tamil-mulakkam-sahul-hameed/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முழக்கம் சாகுல் ஹமீத் அவர்களுக்கு.. புகழஞ்சலியும் இரங்கலும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

, ஆழ்ந்த அனுதாபங்கள், அஞ்சலியும் உரித்தாகட்டும்.✍️🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சாகுல் அமீது: தவிக்க விட்ட தாய்மாமன் - கதறி அழுத சீமான்

spacer.png

 

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய அரசியலில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்தவருமான தமிழ் முழக்கம் சாகுல் அமீது கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி., நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டுமன்றி கட்சி பேதமின்றி தமிழ் தேசிய அரசியல் தளத்தில் இயங்கிவரும் பல்வேறு தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சாகுல் அமீது தனது உழைப்பால் சிறந்த தொழிலதிபராக விளங்கியவர். தான் தொழிலில் ஈட்டிய பணத்தை எல்லாம் தமிழ் தேசிய அரசியலுக்கு தயங்காமல் செலவிட்டவர்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஊடகங்களை சந்தித்தார். அந்த செய்தியாளர் சந்திப்பு குறித்த புத்தகத்தின் திறனாய்வுக் கூட்டத்தை சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் தனது தமிழ் முழக்கம் இயக்கம் சார்பாக நடத்தினார் சாகுல் ஹமீது. அதுவரை தமிழ் முழக்கம் சாகுல் அமீது என அறியப்பட்டவர் அதன் பின் பொடா சாகுல் அமீது ஆனார்.

ஜெயலலிதா ஆட்சியில் அந்தப் புத்தகத் திறனாய்வுக் கூட்டத்துக்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சாகுல் அமீது 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் அவரது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டபோதும், சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் தன் தொழிலையும் தமிழ் தேசிய அரசியலையும் கட்டியெழுப்பினார். பழ.நெடுமாறனின் ஈழப்பயணம் குறித்த ‘மண் சிவந்தால்’ புத்தகத்தை விநியோகிப்பதற்காக பொறுப்பேற்று தன் தமிழ் முழக்கம் அலுவலகத்தில் வைத்திருந்தபோது அதற்காக ஒரு தேசியப் பாதுகாப்பு வழக்கை எதிர்கொண்டு ,மீண்டும் சிறை சென்றார் சாகுல் அமீது.

spacer.png

 

2009 ஈழப் போருக்கு முன்பிருந்தே ஈழத் தமிழர் விடுதலை தொடர்பாக பெரும் ஈடுபாடு கொண்டிருந்தவர் சாகுல் அமீது. இந்த அடிப்படையில் கட்சி வேறுபாடு கடந்து பலருக்கும் உதவியர். சீமானிடம் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்தியவர், தான் நடத்துகிற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சீமானை அழைத்தார். சமூக நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் வகையில் சீமானை தன் மருமகன் என்றும் தான் சீமானுக்கு தாய்மாமன் என்றும் கூறிய சாகுல் அமீது அப்படியே சீமானை அழைத்தும் வந்தார். சீமானும் சாகுல் அமீதுவை அன்புத் தாய்மாமன் என்றே அழைப்பார்.

நாம் தமிழர் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் கட்டப்பிள்ளை அப்புவிடம் பேசினோம்.

“சாகுல் அய்யா செப்டம்பர் முதல் வாரம் வரை நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார். புதிய கல்விக்கொள்கை எதிர்ப்புப் போராட்டம், சுற்றுச் சூழல் வரைவு அறிக்கைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை நாகை மண்டலத்தில் தீவிரமாக முன்னெடுத்தார். அப்போது கூட உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம். நம்மையெல்லாம் கொரோனா ஒன்றும் செய்யாதுடா என்று சிரித்துக் கொண்டே கூறினார். ஆனால் சென்னை சென்ற சில நாட்களில் அவர் உடல் நலம் குன்றி ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில்தான் எங்களை விட்டுப் போய்விட்டார்”என்றார்.

தனியார் மருத்துவமனையில் இருந்து சாகுல் அமீதுவின் உடல் அவரது குடும்பத்தினரிடமும், கட்சியினரிடமும் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை போர்த்தி, வீரவணக்கம் செலுத்தினர்.

spacer.png

ராயப்பேட்டை பள்ளிவாசலில் நல்லடக்கத்துக்காக சாகுல் அமீது உடல் கொண்டுவரப்பட்டது. அங்கே சென்ற சீமான் தலையில் அடித்துக் கொண்டு ஓவென ஓலமிட்டுக் கதறி அழுதார். ஐயோ...மாமா... ஐயோ மாமா என்று சீமான் கதறிய கதறல் அனைவரையும் உலுக்கியது.

தொழிலதிபராக இருந்து பல்வேறு தமிழ் தேசிய நிகழ்வுகளுக்குப் புரவலராக விளங்கிய சாகுல் அமீது சமீபத்திய ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சைக்குக் கூட போதிய தொகை இல்லாமல் கட்சி மூலம் நிதி திரட்டப்பட வேண்டிய நிலைக்கு ஆளானார் என்பதுதான் கொடுமை.
 

 

https://minnambalam.com/politics/2020/09/20/43/tamil-muzhakkam-sahul-hameed-nam-tamilar-passed -away-seeman-crying

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

தொழிலதிபராக இருந்து பல்வேறு தமிழ் தேசிய நிகழ்வுகளுக்குப் புரவலராக விளங்கிய சாகுல் அமீது சமீபத்திய ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சைக்குக் கூட போதிய தொகை இல்லாமல் கட்சி மூலம் நிதி திரட்டப்பட வேண்டிய நிலைக்கு ஆளானார் என்பதுதான் கொடுமை.

ஊழல் இலஞ்சம் போன்றவற்றில் மூழ்கி திளைக்கும் நாடுகளில் நேர்மையாய் வாழ்ந்தால் பிச்சைதான் எடுக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு செய்தி.
நாம்தமிழர் கட்சியும் அதன் உறுப்பினர்களும் நேர்மையானவர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். நல்லதுக்கு காலமில்லை என்பது சரியாகவே இருக்கின்றது.

திமுக,அதிமுக போல் செல்வச்செழிப்புடன் எல்லோரும் வாழமுடியுமா என்ன? 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஊழல் இலஞ்சம் போன்றவற்றில் மூழ்கி திளைக்கும் நாடுகளில் நேர்மையாய் வாழ்ந்தால் பிச்சைதான் எடுக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு செய்தி.
நாம்தமிழர் கட்சியும் அதன் உறுப்பினர்களும் நேர்மையானவர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். நல்லதுக்கு காலமில்லை என்பது சரியாகவே இருக்கின்றது.

திமுக,அதிமுக போல் செல்வச்செழிப்புடன் எல்லோரும் வாழமுடியுமா என்ன? 😎

நான் நினைத்து இருந்தேன் கூடிய‌ விரைவில் குன‌ம் ஆகி வீடுட்டுக்கு வ‌ந்துடுவார் என்று , மாமாவின் இற‌ந்த‌ செய்தி கேட்டு க‌ண் க‌ல‌ங்கி அழுது விட்டேன் ,

சாகுல் அமீது மாமா கொரோனாவால் பாதிக்க‌ ப‌ட்டு உள்ளார் உத‌வி வேனும் என்று வெளிப்ப‌டையாய் கேட்டு இருந்தின‌ம் ,  பேசுக்குள் காசு இருந்தும் சிறு உத‌வி கூட‌ செய்ய‌ வில்லையே என்று நினைத்து நேற்று மிக‌வும் வ‌ருத்த‌ ப‌ட்டேன் தாத்தா , 

போன‌ மாச‌ம் நீட் தேர்வுக்கு எதிரா செய்த‌ ஆர்பாட்ட‌த்தின் போது தான் சாகுல் அமீது மாமாவுக்கு கொரோனா வ‌ந்த‌து , க‌ட்சி பெடிய‌ங்க‌ளிட்டை தான் சீக்கிர‌ம் மீண்டு வ‌ருவேன் என்று சொன்ன‌வ‌ர் க‌ட‌சியில் எங்க‌ளை க‌ண்ணீரில் மூழ்க‌ விட்டு போய் விட்டார் ,

எம் போராட்ட‌த்தை ஆத‌ரிச்ச‌ கார‌ண‌த்துக்காக‌ ப‌ல‌த‌‌ இழ‌ந்தவ‌ர் , 17 மாத‌ம் சிறை வாழ்க்கை அனுப‌வித்தார் ,  சிறை வாழ்க்கையில் சாகுல் அமீது மாமாவின் தொழிலையும் பாதிச்ச‌து ,

நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கோடி கோடியாய் ப‌ண‌ம் வ‌ருது என்று புர‌ளிய‌ கில‌ப்பி விடுப‌வ‌ர்க‌ள் இனி வாயை அட‌க்கி வாசிக்க‌னும் , 

ஜ‌யா கலைக்கோட்டுதயத்துக்கு அடுத்த‌தாய் நான் பெரிதும் நேசித்த‌து சாகுல் அமீது மாமாவை தான் , 

சாகுல் அமீது மாமாவை ம‌ன‌தில் வைத்து இந்த‌ கொரோனா கால‌த்தில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் விழிப்புண‌ர்வுட‌ன் இருக்க‌ வேனும் கொரோனா எப்ப‌ எங்கை எப்ப‌டி வ‌ரும் என்று யாருக்கும் தெரியாது , அதுவும் த‌மிழ் நாட்டில் மிக‌வும் க‌வ‌ணமாக‌  இருக்க‌னும் ,

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஊழல் இலஞ்சம் போன்றவற்றில் மூழ்கி திளைக்கும் நாடுகளில் நேர்மையாய் வாழ்ந்தால் பிச்சைதான் எடுக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு செய்தி.
நாம்தமிழர் கட்சியும் அதன் உறுப்பினர்களும் நேர்மையானவர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். நல்லதுக்கு காலமில்லை என்பது சரியாகவே இருக்கின்றது.

திமுக,அதிமுக போல் செல்வச்செழிப்புடன் எல்லோரும் வாழமுடியுமா என்ன? 😎

உங்கள் தலைவர் தான் பதுக்கி வைத்திருக்கும் காசை கொடுத்தாவது காப்பாற்றி இருக்கலாம் அல்லது மாமாட உயிர் பெரிசு என்று நினைத்திருந்தால் வீட்டை வித்தாவது காசை கொடுத்திருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரதி said:

உங்கள் தலைவர் தான் பதுக்கி வைத்திருக்கும் காசை கொடுத்தாவது காப்பாற்றி இருக்கலாம் அல்லது மாமாட உயிர் பெரிசு என்று நினைத்திருந்தால் வீட்டை வித்தாவது காசை கொடுத்திருக்கலாம் 

வாடகை வீட்டை எப்படியம்மா விற்பது?
எங்களுக்கும் சொல்லித் தாங்கோவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

உங்கள் தலைவர் தான் பதுக்கி வைத்திருக்கும் காசை கொடுத்தாவது காப்பாற்றி இருக்கலாம் அல்லது மாமாட உயிர் பெரிசு என்று நினைத்திருந்தால் வீட்டை வித்தாவது காசை கொடுத்திருக்கலாம் 

நான் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளன். அவர்களின் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட கொள்கைகள் பிடித்திருக்கு. அவர்களின் எதிர்கால திட்டங்கள் பிடித்திருக்கு.பசுமைவாத கொள்கைகள் பிடித்திருக்கு.
நாளைக்கு சீமான் போய் இன்னொருவர் சீமானின் இடத்துக்கு வந்தாலும் கொள்கைகள் மாறாதவரை நாம் தமிழர் கட்சிக்குத்தான் என் ஆதரவு.
மற்றும் படி எமக்கு தலைவர் என்றால் தேசியத்தலைவர் பிரபாகரன் மட்டுமே.உலகெங்கும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் மரியாதையும் கூடிக்கொண்டு போகின்றதே தவிர......

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

 

இதை ஒரு விளம்பரம் என எடுத்துக்கொண்டால்......
கலைஞர் பேசிய மேடை பேச்சுக்கள் உட்பட அனைத்துமே விளம்பரங்கள் தான்.....

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

வாடகை வீட்டை எப்படியம்மா விற்பது?
எங்களுக்கும் சொல்லித் தாங்கோவன்.

ஸ்ஸ்ஸ்ஸ் சீமானுக்கு ஒரு சொந்த வீடு கூட இல்லையா...தம்பிமார் சேர்த்து குடுக்கிற காசை சும்மா சாக்கு மாடு மாதிரி இருந்து கொண்டு குடி ,பொம்பிளையல் என்று செலவழிக்காமல் ஒரு வீட்டை வாங்க சொல்லுங்கோ 
உண்மையாகவே அவருக்கு இறந்தவர் மீது பாசம் இருந்திருந்தால் கடன் பட்டாவது அவரை காப்பாற்றி இருப்பார்...அவரது இறப்பை  இவரது அரசியலுக்கு பயன்படுத்துவார் 
 

21 hours ago, குமாரசாமி said:

இதை ஒரு விளம்பரம் என எடுத்துக்கொண்டால்......
கலைஞர் பேசிய மேடை பேச்சுக்கள் உட்பட அனைத்துமே விளம்பரங்கள் தான்.....

 

அண்ணா , சீமானுக்கு எதிராய் எழுதினால் கருணாநிதியையோ ,ஜெயையோ ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

ஸ்ஸ்ஸ்ஸ் சீமானுக்கு ஒரு சொந்த வீடு கூட இல்லையா...தம்பிமார் சேர்த்து குடுக்கிற காசை சும்மா சாக்கு மாடு மாதிரி இருந்து கொண்டு குடி ,பொம்பிளையல் என்று செலவழிக்காமல் ஒரு வீட்டை வாங்க சொல்லுங்கோ 
உண்மையாகவே அவருக்கு இறந்தவர் மீது பாசம் இருந்திருந்தால் கடன் பட்டாவது அவரை காப்பாற்றி இருப்பார்...அவரது இறப்பை  இவரது அரசியலுக்கு பயன்படுத்துவார் 

 

அண்ணா , சீமானுக்கு எதிராய் எழுதினால் கருணாநிதியையோ ,ஜெயையோ ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா 

 

அப்ப நீங்கள் நடுநிலைவாதிகள்!! :cool:
ஐ மீன் நடுச்சென்ரர் ஆக்கள்.  😁

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் போராட போனால் 
அவன் மனைவி பிள்ளைகள் எல்லாம் கரும்புலியா போகணும் 

கருத்து குஞ்சுகள் காலுக்கு மேல் கால்போட்டு கொண்டு 
கருத்து எழுதுவார்கள் அதன் படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

காறி துப்பினால் டிஜிட்டல் வழியா கொண்டு சேர்க்காதா 
என்றுதான் எண்ண தோன்றுகிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.