Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி தெரியுமா?

கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி தெரியுமா?
 
குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….

உங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.

உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள்.

முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் கடுப்பாக வாய்ப்பு அதிகம்.

வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.

மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம்.

ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்.

கணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.

எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

சண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்.

https://www.maalaimalar.com/health/womensafety/2020/12/14103312/2158763/tamil-news-Do-you-know-how-to-deal-with-an-angry-wife.vpf

  • கருத்துக்கள உறவுகள்

நமது சமயத்திலே அட்டாங்க நமஷ்காரம் சொல்லித்தந்திருப்பது எதற்காக ஆலயத்தில் செய்து ஆண்டவனை வழிபடமட்டுமா அதைச் செய்து அம்மணியையும் அசரச்செய்வமில்ல.தடால் என்று விழுதல் சட்டையைத் துடைத்தபடி எழுதல்.

  • கருத்துக்கள உறவுகள்

பிழையான தலைப்பு இது.

மனைவி என்று மட்டும் போட்டால் போதாதா ? 

மனைவி என்றால் கோவக்காரி என்பது தொக்கி நிற்கும்🤪

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மனைவியரும் கோபக்காரரா ? கோபமூட்டுவது யார் ?😀

16 minutes ago, நிலாமதி said:

எல்லா மனைவியரும் கோபக்காரரா ? கோபமூட்டுவது யார் ?😀

கோபிக்கிறதுக்கு ஒன்றும் இல்லாவிடின் ஏன் இண்டைக்கு கோபிக்க ஒன்றும் இல்லையென்று கோபிக்கும் கூட்டம் அல்லவா இந்த மனிசிமார்..😀

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா சொல்லுவா இவனுட்ட ஏதும் சொன்னால் செய்யுறதில்ல செவிடன் காதில ஊதின சங்கு போல என்று இப்பெல்லாம் மனிசி மார் என்ன கதைச்சாலும் செவிடனாக இருந்தால் மிக நல்லம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

எல்லா மனைவியரும் கோபக்காரரா ? கோபமூட்டுவது யார் ?😀

கோபக்காரி வந்திட்டால்லோ??🤣

  • கருத்துக்கள உறவுகள்

மனிசி கோபப்பட்டால் அதை உடனே அணைக்கக் கூடாது, மனைவியையுந்தான்......அதைவிட பெரிய அவ மறந்திருந்த  பழைய கோபமொன்றை ஞாபகப் படுத்துங்கள்.  கொஞ்சநேரம் கூரைக்கும் நிலத்துக்குமாய் குதிப்பார்கள். பின் அப்படியே அடங்கிடுவார்கள். நெருப்பை நெருப்பால் அணைப்பதுபோல்தான் இதுவும். கோபத்தை கோபத்தால் அணைப்பது.....!  🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, உடையார் said:

கோபக்கார மனைவியை

நான் அவையளுக்கு கோபம் வாற அளவுக்கு நடக்கிறதேயில்லை..😎

ஏழேழு பிறவிக்கும் ஆதர்ச தம்பதியராய் வாழ செய்ய வேண்டிய பரிகாரம்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரிதான், ஆனால் யாருடைய மனைவி என்று சொன்னால்தானே ஈசியாக இருக்கும்.. 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, Kapithan said:

எல்லாம் சரிதான், ஆனால் யாருடைய மனைவி என்று சொன்னால்தானே ஈசியாக இருக்கும்.. 😜

11 hours ago, உடையார் said:

குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….

உங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.

உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள்.

கோதாரி விழ...   நியூசை நல்லவடிவாய் வாசிச்சிட்டு வாங்கோப்பா.சும்மா  இடக்கு முடக்காய் கேள்வியளை கேக்காமல்.....? 😁

Edited by குமாரசாமி
x0=xy

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நந்தி said:

நமது சமயத்திலே அட்டாங்க நமஷ்காரம் சொல்லித்தந்திருப்பது எதற்காக ஆலயத்தில் செய்து ஆண்டவனை வழிபடமட்டுமா அதைச் செய்து அம்மணியையும் அசரச்செய்வமில்ல.தடால் என்று விழுதல் சட்டையைத் துடைத்தபடி எழுதல்.

யாரப்பா இது.அனுபவ பழமாய் கிடக்கு.😊

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கோதாரி விழ...   நியூசை நல்லவடிவாய் வாசிச்சிட்டு வாங்கோப்பா.சும்மா  இடக்கு முடக்காய் கேள்வியளை கேக்காமல்.....? 😁

சாமியார் குழம்பிடுவாரல்லோ

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, text that says 'பெரிய கஷ்டத்துல மனசு உடைஞ்சு போய் இருக்கும் போது!!! மனைவியோட போன் வந்தா போதும் ks மனசுக்கு ஒரு தெம்பு கிடைக்கும்!! லம் போடி இவளையே சமாளிச்சுட்டோம், இந்த கஷ்டம்லாம் சாதரணம்ணு. அதான் மனைவி'

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நான் அவையளுக்கு கோபம் வாற அளவுக்கு நடக்கிறதேயில்லை..😎

ஏழேழு பிறவிக்கும் ஆதர்ச தம்பதியராய் வாழ செய்ய வேண்டிய பரிகாரம்

கலியாணம் முடிச்சு ஹனிமூனுக்கு காரில் சென்றபொது கார் தகராறு பண்ண அந்த அனுபவம் அப்படி......!  😁

Knock Out Car GIF by SYFY - Find & Share on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அம்மா சொல்லுவா இவனுட்ட ஏதும் சொன்னால் செய்யுறதில்ல செவிடன் காதில ஊதின சங்கு போல என்று இப்பெல்லாம் மனிசி மார் என்ன கதைச்சாலும் செவிடனாக இருந்தால் மிக நல்லம் .

கொடுத்து வைத்த ராசா. ஒருத்தி கோபித்தால் மற்றவளிடம் போய்விடலாம். 😛

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு 72 கன்னியர் சொர்கத்தில் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

கொடுத்து வைத்த ராசா. ஒருத்தி கோபித்தால் மற்றவளிடம் போய்விடலாம். 😛

ஒன்றையே சமாளிக்கிக்கிற பெரிய பிரச்சினையா கிடக்கு இதுல இன்னும் பலதா  கருத்து மெருகூட்ட சொன்னாலும் பிழை கண்டு பிடிக்கிறாங்கள் அப்பா😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒன்றையே சமாளிக்கிக்கிற பெரிய பிரச்சினையா கிடக்கு இதுல இன்னும் பலதா  கருத்து மெருகூட்ட சொன்னாலும் பிழை கண்டு பிடிக்கிறாங்கள் அப்பா😎

இன்னும் இரண்டு மூண்டு பிள்ளையளை பெத்தால்....பக்குவம் தானாய் வரும் ராசா...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, colomban said:

எங்களுக்கு 72 கன்னியர் சொர்கத்தில் இருக்கு 

செத்தாப்பிறகு 720 இருந்தும் என்ன பண்றது?

வெறும் காத்து தான்

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் கொடுப்பினை..!

கூடுமானவரை தட்டுமுட்டு சமான்கள் இல்லாத இடமா பார்த்து ஒதுங்குதல் சிறப்பு..! ☺️👍

47 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவரவர் கொடுப்பினை..!

கூடுமானவரை தட்டுமுட்டு சமான்கள் இல்லாத இடமா பார்த்து ஒதுங்குதல் சிறப்பு..! ☺️👍

தோழர், நீங்கள் புத்திசாலிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இன்னும் இரண்டு மூண்டு பிள்ளையளை பெத்தால்....பக்குவம் தானாய் வரும் ராசா...:cool:

ம்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'Posted on: ShareChat Posted by: @kuttypaiyan5... அடிச்சது மனைவியா இருந்தா! ரத்தமே வந்தாலும் சத்தம் போட்டு அழுக்கூடாது.. KG Memes கேஜி மீம்ஸ் GMemes அது தான் உண்மையான கணவனுக்கு அழகு.. # கல்யாண மீம்ஸ் கல்யாண மீம்ஸ் #... T ON Google Play'

  • கருத்துக்கள உறவுகள்

Annai Anai GIF - Annai Anai Priyan - Discover & Share GIFs

மேலுள்ள பதிவுக்கு பெருமாள் குத்தினதில ஒரு ஞாயம் உள்ள இருக்கு, இந்த ஜெகதா துரை குத்தினதுதான் யோசனையாய் இருக்கு......!   😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.