Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: துணை வேந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: துணை வேந்தர்

January 10, 2021
 
spacer.png

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் என்னிடம் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

உடைக்கப்பட்ட தூபியை மீள கட்ட வேண்டுமென வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்ட களத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டக்களத்திற்கு சென்றனர். பின்னர், பல்கலைகழக துணைவேந்தரை சந்தித்து பேசினர்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

“எனக்கு அதிக அரசியல் அழுத்தம் இருந்ததாக அவர் கூறுகிறார். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக கூறினார். இந்த நினைவுத்தூபியை இடிக்க எனக்கு அழுத்தம் தந்தார்கள். இப்பொழுது பலர் தமக்கு தொடர்பில்லையென கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன்.

போராடும் மாணவர்களின் உணர்வு எனக்கும் உள்ளது. இந்த தூபியை இடித்தது எனக்கும் கவலைதான். அதை மீள அமைக்க- உரிய வழிமுறைகளில்- நான் தயாராக இருக்கிறேன். இது பற்றி மாணவர்களுடன் பேசவுள்ளேன்.

நாம் மீண்டும் தூபியை அமைப்பதற்கு உரிய அனுமதி பெறுவது உள்ளிட்ட விடயங்களில் தமிழ் அரசியல்வாதிகள் துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்“ என தெரிவித்தார்.
 
http://www.pagetamil.com/167186/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

நாகரீக அடிப்படையில் புணர் நிர்மாணங்கள் அவ்வப்போது நிகழ்வது வழமை தானே அந்த நோக்கில் புதுசா கட்டுங்கோ பிரச்சனை இல்லை..🤫

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: துணை வேந்தர்

January 10, 2021
 
spacer.png

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் என்னிடம் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

உடைக்கப்பட்ட தூபியை மீள கட்ட வேண்டுமென வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்ட களத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டக்களத்திற்கு சென்றனர். பின்னர், பல்கலைகழக துணைவேந்தரை சந்தித்து பேசினர்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

“எனக்கு அதிக அரசியல் அழுத்தம் இருந்ததாக அவர் கூறுகிறார். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக கூறினார். இந்த நினைவுத்தூபியை இடிக்க எனக்கு அழுத்தம் தந்தார்கள். இப்பொழுது பலர் தமக்கு தொடர்பில்லையென கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன்.

போராடும் மாணவர்களின் உணர்வு எனக்கும் உள்ளது. இந்த தூபியை இடித்தது எனக்கும் கவலைதான். அதை மீள அமைக்க- உரிய வழிமுறைகளில்- நான் தயாராக இருக்கிறேன். இது பற்றி மாணவர்களுடன் பேசவுள்ளேன்.

நாம் மீண்டும் தூபியை அமைப்பதற்கு உரிய அனுமதி பெறுவது உள்ளிட்ட விடயங்களில் தமிழ் அரசியல்வாதிகள் துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்“ என தெரிவித்தார்.
 
http://www.pagetamil.com/167186/

இவரின் கதையை கேட்க்கும்போது  இதே கரவெட்டியை  சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பியாரின் வயதான நேரத்தில்   கருணாநிதி உலகத்தமிழ் ஆராட்சி மாநாடு என்று  கொடுமை பத்தியது நினைவில் வந்து போகுது . 

உண்மையில் அன்றைய நிலையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட சிறிது காலத்திலே 2010ல் கருணாநிதி நடாத்துவத்துக்கு விடாப்பிடியாய் நிண்டவர் எவ்வளவோ சொல்லியும் கேட்க்காமல்  நடாத்த முற்பட .உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் கருணாநிதி திமிராக  தமிழ் உலக செம்மொழி மாநாடு என்று தானே பெயர் வைத்து   ஒரு மாநாடு 2010 யூலையில்  நடாத்தினவர் .

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பேர்தான் நூல் விட்டு பார்ப்பது..👍

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Paanch said:

சரி அடிப்பதை இப்படி சொல்கிறீர்கள்..விறாண்டி காயம் வைப்பது எந்த வகை..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதற்கு பேர்தான் நூல் விட்டு பார்ப்பது..👍

இந்தியா விட்ட நூல் அறுந்துவிட்டதோ.. 😂

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாய் கட்டுவதைவிட , அதனை இடித்த சிதைவுகளை அந்த இடத்திலேபே நினைவு சின்னமாய் வைத்திருந்து வருடா வருடம் நினைவேந்தல் செய்யுங்கள்., எதிர்கால மாணவ சந்ததிக்கு அதனை பார்க்கும் போதெல்லாம் வலியும் கோபமும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

கூடவே துரோகங்களும் நினைவில் நிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

“எனக்கு அதிக அரசியல் அழுத்தம் இருந்ததாக அவர் கூறுகிறார். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக கூறினார். இந்த நினைவுத்தூபியை இடிக்க எனக்கு அழுத்தம் தந்தார்கள். இப்பொழுது பலர் தமக்கு தொடர்பில்லையென கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன்.

பாவம் இந்த முட்டாளை பகடைக்காயாக பாவித்திருக்கிறார்கள். இவர் ஆதாரத்தை வெளியிடும் வரை உயிரோடு இருப்பாரோ தெரியவில்லை. அடுத்து யார் பழி சுமத்தப்படப் போகிறார்களோ? ஒவ்வொரு மாணவனின் பாதுகாப்பும் முக்கியம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இந்த நினைவுத்தூபியை இடிக்க எனக்கு அழுத்தம் தந்தார்கள். இப்பொழுது பலர் தமக்கு தொடர்பில்லையென கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன்

அதுவரை காத்திராமல் உடனடியாக வெளிப்படுத்துவது இவரது மாண்புக்கு நல்லது. இல்லையேல் வரலாறு முழுக்க இவரே பழி சுமப்பார். இவரது உயிருக்கு உத்தரவாதம் யார்? 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, satan said:

பாவம் இந்த முட்டாளை பகடைக்காயாக பாவித்திருக்கிறார்கள். இவர் ஆதாரத்தை வெளியிடும் வரை உயிரோடு இருப்பாரோ தெரியவில்லை. அடுத்து யார் பழி சுமத்தப்படப் போகிறார்களோ? ஒவ்வொரு மாணவனின் பாதுகாப்பும் முக்கியம். 

4 minutes ago, satan said:

அதுவரை காத்திராமல் உடனடியாக வெளிப்படுத்துவது இவரது மாண்புக்கு நல்லது. இல்லையேல் வரலாறு முழுக்க இவரே பழி சுமப்பார். இவரது உயிருக்கு உத்தரவாதம் யார்? 

நீங்கள்தான் 😄

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

சரி அடிப்பதை இப்படி சொல்கிறீர்கள்..விறாண்டி காயம் வைப்பது எந்த வகை..

பற் குறி, நகக் குறி என்று துன்பத்தை இன்பமாக்கும் வகையைச் சேர்ந்ததம்மா.🤣

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கல் நாட்டும் காணொளி வந்துவிட்டது.....பார்த்துவிட்டேன் இணைக்க முடியவில்லை...மாணவச் செல்வங்களின் ...மிகப்பெரும் வெற்றி...

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

அடிக்கல் நாட்டும் காணொளி வந்துவிட்டது.....பார்த்துவிட்டேன் இணைக்க முடியவில்லை...மாணவச் செல்வங்களின் ...மிகப்பெரும் வெற்றி...

https://youtu.be/0Re6i8ZD9JQ

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, alvayan said:

அடிக்கல் நாட்டும் காணொளி வந்துவிட்டது.....பார்த்துவிட்டேன் இணைக்க முடியவில்லை...மாணவச் செல்வங்களின் ...மிகப்பெரும் வெற்றி...

யாழ் பல்கலையில் உடைக்கப்பட்ட நினைவுத்தூபி மீள் கட்டப்பட அடிக்கல் நாட்டல் ! திடீர் திருப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

மீண்டும் இந்தியா தோற்றுவிட்டது..... 😂

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

மீண்டும் இந்தியா தோற்றுவிட்டது.....

வாய்ப்பேயில்லை ராஜா 
இந்த அடிக்கல் மீண்டும் மகிந்த கோவின் மரணவெற்றிக்கு  , கொரோனா தடுப்பில் கவ்விய மண், பொருளாதார முடக்கம் மக்களிடையே கணீசமாக வளரும் அரச வெறுப்பு போன்றவற்றை மடைமாற்றம் செய்து மாகாண சபை தேர்தலில் பெருவெற்றி பெற போடப்பட்ட அடிக்கல், இனி இந்த தூபியை காட்டுவதற்கு எத்தனை தடைகள், ஸ்டே ஆர்டர்கள் ,வழக்குகள் சிங்கள இனவாதிகளிடமிருந்து வருகிறது என்று பாருங்கள்

இந்த தூபியை வைத்து இன்னும் இருபத்துவருடம் இலங்கையை ஆண்டுவிடுவார்கள் மஹிந்த மாபியா   

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத் தூபி மீண்டும் அமைக்கப்படும் – அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

J
7-2.jpg
 139 Views

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு யாழ் பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

1-81.jpg

யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

Video Player
 
00:00
 
02:50

4-1.jpg

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்குச் சென்ற துணைவேந்தர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார்.

3-3.jpg

இதன் பின்னர் இன்று காலை ஏழு மணிக்கு நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.1-82.jpg

துணைவேந்தர் இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தார் . இதில் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

https://www.ilakku.org/?p=39126

  • கருத்துக்கள உறவுகள்
அதிகாலை அமைதியில் அடிக்கல் நாட்ட சென்ற போது, #யாழ் #பல்கலை #உபவேந்தர் #சற்குணராஜா, இடையில் குறுக்கிட்ட பொலிஸ் அதிகாரியிடம், "இவ்விடயம் தொடர்பான பிரச்சினை இந்திய தமிழ்நாட்டுக்கும் போய் அங்கே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது."
"ஆகவே அரசாங்க மேலிடம் இதை சுமூகமாக முடிக்க சொல்லி விட்டது" என்கின்ற மாதிரி கூறுகிறார்.
ஆகவே இன்னமும் இலங்கை பிரச்சினையில், தமிழகத்துக்கு ஒரு வகிபாகம் இருக்கின்றது..!
அங்கே, இப்போ தேர்தல் காலம். ஆகவே "இலங்கை பிரச்சினை" பற்றிய பேச்சுகள் வழமையைவிட உரக்கவும், பரவலாகவும் நடைபெற்றாலும் சரி, இங்குள்ள சில தமிழ், சிங்கள அரசியல் தரப்புகள் அவ்வப்போது தமிழக அரசியல்வாதிகளை கிணடலடித்து, திட்டி தீர்த்தாலும் சரி, இதுதான் உண்மை போலும்..!
-மனோ கனேசனின் முகநூலில் இருந்து 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:
இங்குள்ள சில தமிழ், சிங்கள அரசியல் தரப்புகள் அவ்வப்போது தமிழக அரசியல்வாதிகளை கிணடலடித்து, திட்டி தீர்த்தாலும் சரி, இதுதான் உண்மை போலும்..!
 
தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் (அதிமுக, திமுக உள்ளிட்ட) எல்லாம் உரத்துக் குரல்கொடுக்கும்போது கேட்கவேண்டியவர்கள் எல்லோருக்கும் கேட்கும்.  அதனால்தான் ஈழத்தமிழர்கள் தமிழக அரசியல் விடயங்களில் கட்சிசார்பு நிலை எடுக்காமல் எல்லோருடன் நல்லுறவைப்பேணி அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையா இவருக்கு? நம்பி இருந்த சிங்களம் கைகழுவி விட்டது, வேறு வழியில்லை இவருக்கும். "மதிகேடர் பேசத் தொடங்கினால் வாக்குவாதம் பிறக்கும், அவரது பேச்சு அவருக்கு அடிவாங்கித்தரும்." நல்லவேளை அடிவிழமுதல் சரண்டர் ஆகிவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

வாய்ப்பேயில்லை ராஜா 
இந்த அடிக்கல் மீண்டும் மகிந்த கோவின் மரணவெற்றிக்கு  , கொரோனா தடுப்பில் கவ்விய மண், பொருளாதார முடக்கம் மக்களிடையே கணீசமாக வளரும் அரச வெறுப்பு போன்றவற்றை மடைமாற்றம் செய்து மாகாண சபை தேர்தலில் பெருவெற்றி பெற போடப்பட்ட அடிக்கல், இனி இந்த தூபியை காட்டுவதற்கு எத்தனை தடைகள், ஸ்டே ஆர்டர்கள் ,வழக்குகள் சிங்கள இனவாதிகளிடமிருந்து வருகிறது என்று பாருங்கள்

இந்த தூபியை வைத்து இன்னும் இருபத்துவருடம் இலங்கையை ஆண்டுவிடுவார்கள் மஹிந்த மாபியா   

மாகாண சபைத் தேர்தல் இப்போது நடைபெறப் போவதில்லை. மகிந்த கட்சியினர் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறு குறைவு என்று விசேட புலனாய்வு அறிக்கை மகிந்தவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. 

நானறிந்தவகையில்,  

இந்தியாவை தமிழர் ஒருவரும் நம்புவதற்குத் தயாரில்லை என்பது இந்தியாவுக்குத் தெழிவாகச் சொல்லப்பட்டுவிட்டது.

இல்லை, இந்தியாவை விட்டால் உங்களுக்கு நாதியில்லை என தமிழர்களை மீண்டும் இந்தியாவின் காலடியில் கொண்டுவருவதற்கான வேலைத் திட்டத்தின் தொடக்கமே இந்த அமைதியின்மை.

இதுபோல பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் எதிர்வரும் காலத்தில் இடம்பெறலாம்.

இதனூடாக இந்தியா சொல்ல விரும்பியது..

சிங்களத்திற்கு

1) நான் விரும்பினால் மாத்திரமே இலங்கையில் அமைதி திரும்பும் 

தமிழருக்கு

1) இந்தியாவை விட்டால் உங்களுக்கு நாதியில்லை

பொறுத்திருந்து பார்ப்போம்.. 😀

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் வெற்றிபெற்று நினைவுச் சின்னம் திரும்பவும் எழுவதற்கு, அதுவும் சைவசமய முறையில் ஆராதனை செய்து எழுவதற்கு சிங்கள அரசு ஆவன செய்வது மிகப்பெரிய ஆச்சரியம். அதனைவிடவும் ஆச்சரியம், அங்குள்ள சிங்கள மாணவர்கள் மிகவும் அமைதியாக இருப்பதே...! இந்தத் தமிழ் மாணவர்களின் வெற்றி ஏதோ தமிழர்களின் பிரச்சனைகள் அனைத்தையுமே அரசு தீர்த்துவைக்கும் என்ற ஒரு மாயத் தோற்றத்தை தமிழர்களிடம் தோற்றுவித்திருப்பதும் தெரிகிறது.

நினைவுச்சின்ன அழிப்பும், அதன் மீள் வருகைக்கான அடிக்கல் நாட்டு விழாவும், இந்திய அரசின் ஆலோசனையில் நடைபெற்றது போலவும் தோன்றுகிறது, நடைபெறப்போகும் ஐ.நா சபைக் கூட்டத்தில் இந்தியா சிங்கள அரசின் பயங்கரவாத இராணுவத்தைக் காப்பாற்றிக் கொடுத்துத் தனது இராணுவமும் ஈழத்தில் அப்பாவித் தமிழர்களையும் கொன்று புரிந்த பயங்கரவாத செயற்பாடுகளும் வெளிவராது தடுத்துத் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள எடுக்கும் முயற்சி போலவும் தெரிகிறது.

இவை உண்மையா.? பொய்யா.? என்பதை இனிவரும் சிங்கள அரசின் அடிவருடிகளாக இருக்கும் சில தமிழ்த் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் வெளிப்படுத்தும் என நம்பலாம். இந்தப் பின்னூட்டம் எதிர்மறையானது அல்ல. சிங்கள அரசுகளின் ஆட்சியில் வாழ்ந்து கண்ட கசப்பான அனுபவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, கிருபன் said:

தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் (அதிமுக, திமுக உள்ளிட்ட) எல்லாம் உரத்துக் குரல்கொடுக்கும்போது கேட்கவேண்டியவர்கள் எல்லோருக்கும் கேட்கும்.  அதனால்தான் ஈழத்தமிழர்கள் தமிழக அரசியல் விடயங்களில் கட்சிசார்பு நிலை எடுக்காமல் எல்லோருடன் நல்லுறவைப்பேணி அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

நாம் தமிழர் கட்சியையும் சேர்த்தா சொல்கின்றீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.