Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

Lalith-weeratunga.jpg

இறுதிக் கட்டப் போரின் போது இந்தியாவுடனான நெருங்கிய உறவு விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியது என இலங்கையால் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்த விடயத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

அத்துடன், இரு தரப்பினரும் (இந்தியா-இலங்கை) ஒரே பக்கத்தில் இருப்பதை விவாதங்கள் உறுதி செய்துள்ளதாக லலித் வீரதுங்க குறிப்பிட்டார். அத்துடன், வெல்ல முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா தங்களுக்கு உதவியது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கொரோனா வைரஸுக்கு எதிரான போரை வெல்லவும் இலங்கைக்கு இந்தியா இப்போது உதவுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதிசெய்ய பெரிய அளவில் உதவியதாக வீரதுங்க கூறியுள்ளார்.

http://www.battinews.com/2021/01/blog-post_950.html

  • Replies 130
  • Views 10.2k
  • Created
  • Last Reply

விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடியாது என்பது உண்மை. ஆனால் அவர்களை தோற்கடிக்கு இலங்கை அரசுக்கு மிக அதிகம் உதவியவர்கள் விடுதலைப்புலிகளே. அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களை தோற்கடித்திருக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

சிறீலங்கா அரசானது, தனது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடி, தனது வீரப்பிரதாபங்களை வெளியிட்டு மகிழ்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் இத்தருணத்தில் சனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கா உண்மையை வெளியிடுவதானது, ஒரு அவமானத்தை அரசுக்கு ஏற்படுத்திக் கூனிக் குறுக வைத்துவிடுமே.😭    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டிக்கொடுப்புகளாலும் மனிதத் தன்மையின்மையாலும் சுய நலன்களுக்குமாகவும் அழிக்கப்பட்டது ஒரு விடுதலை இயக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடியாது என்பது உண்மை. ஆனால் அவர்களை தோற்கடிக்கு இலங்கை அரசுக்கு மிக அதிகம் உதவியவர்கள் விடுதலைப்புலிகளே. அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களை தோற்கடித்திருக்க முடியாது. 

ஏனுங்க

உங்க  வாயில  நல்ல  வார்த்தை

நல்ல  எண்ணங்களே  வராதா???

விடிஞ்சா பொழுது பட்டா

*****??

வாயில  வருகுது???

43 minutes ago, விசுகு said:

ஏனுங்க

உங்க  வாயில  நல்ல  வார்த்தை

நல்ல  எண்ணங்களே  வராதா???

விடிஞ்சா பொழுது பட்டா

*****??

வாயில  வருகுது???

நான் எழுதியதில் எது கெட்ட வார்த்தை, எது கெட்ட எண்ணம்.  புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

ஏனுங்க

உங்க  வாயில  நல்ல  வார்த்தை

நல்ல  எண்ணங்களே  வராதா???

விடிஞ்சா பொழுது பட்டா

*****??

வாயில  வருகுது???

புலியை நேரடியாய் பிடிக்காது என்று சொல்ல முடியாத வாலும்  தலையும் காட்டும் ஆட்களை வெல்வது கஷ்ட்டம் விசுகண்ணே இந்த வித்தை  புலிகளுக்கு தெரிந்து இருந்தால் இன்று அவர்கள் தங்கள் குடும்பம் குட்டியுடன் நிம்மதியாய் இருந்து இருப்பார்கள் .என்ன செய்வது கொண்ட கொள்கையிலும் நீண்டகால தமிழ்மக்களின் நலனுக்கும் தாங்களே ஆகுதியாக்கி கொண்டார்கள்.

இப்ப புலிதான் இல்லையே மக்களுக்கு தீர்வை கொடுங்கடா என்ற கேள்விக்கு விடை சொல்ல பயந்து ஆரம்பத்திலேயே புலியை  திட்டிடாமல் திட்டுவது ஒரு வகையான தந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடியாது என்பது உண்மை. ஆனால் அவர்களை தோற்கடிக்கு இலங்கை அரசுக்கு மிக அதிகம் உதவியவர்கள் விடுதலைப்புலிகளே. அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களை தோற்கடித்திருக்க முடியாது. 

தமிழர் மிகப் பலமானவர்கள். அவர்களைத் தோற்கடிக்க முடியாது. ஆனால் தமிழரின் ஒத்துழைப்பின்றி தமிழரைத் தோற்கடித்திருக்க முடியாது. தமிலரைத் தோற்கடிக்க மிகவும் உதவியாது தமிழரே.. 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

புலியை நேரடியாய் பிடிக்காது என்று சொல்ல முடியாத வாலும்  தலையும் காட்டும் ஆட்களை வெல்வது கஷ்ட்டம் விசுகண்ணே இந்த வித்தை  புலிகளுக்கு தெரிந்து இருந்தால் இன்று அவர்கள் தங்கள் குடும்பம் குட்டியுடன் நிம்மதியாய் இருந்து இருப்பார்கள் .என்ன செய்வது கொண்ட கொள்கையிலும் நீண்டகால தமிழ்மக்களின் நலனுக்கும் தாங்களே ஆகுதியாக்கி கொண்டார்கள்.

இப்ப புலிதான் இல்லையே மக்களுக்கு தீர்வை கொடுங்கடா என்ற கேள்விக்கு விடை சொல்ல பயந்து ஆரம்பத்திலேயே புலியை  திட்டிடாமல் திட்டுவது ஒரு வகையான தந்திரம்.

சரியாக சொன்னீர்கள்.அவர்கள் மனதில் தனிய புலி வக்கிரம் மட்டுமே நிறைந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

சரியாக சொன்னீர்கள்.அவர்கள் மனதில் தனிய புலி வக்கிரம் மட்டுமே நிறைந்திருக்கும்.

கடைசி நேரம்களில் புலி எதிர்ப்பாளர்கள் கருணா கூட தலைவரை எதிர்ப்பதில்லை  ஆனால் புலிகளை அழிதொழிப்பதுக்கு எந்த எல்லைவரை போக முடியுமோ அவ்வளவும் செய்தார்கள் .

இங்கும் அதே பாணியில் நேரடியாக புலி எதிர்ப்புவாதி என்று காட்டிக்கொண்டால் ஆரம்பத்திலே ஒதுக்கப்படுவீர்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்த பட்டுள்ளது .

வெளிநாடுகளில் பத்து வருடம் தாண்டியும் புலி, புலிக்கொடி செல்வாக்கு இழந்து விடவில்லை மாறாக இன்னும் புதுவேகம் கொள்கிறது பழைய தலைமுறைகள் தாண்டி புதிய இங்கு பிறந்தவர்களின் கைகளுக்கு போராட்டத்தின் மாரத்தான் கம்பு  செல்லும் நேரம் அதன் பாதிப்பு சிங்களத்துக்கு கிந்தியர்களுக்கு பாரதூரமானது என்பதை அவர்கள் அறிவார்கள் உதாரணம் கனடாவில் அமையும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இப்படி உலகெங்கும் புது வேகம் கொள்ளும். எனவே Trojan Horse   ட்ரோஜன் ஹார்ஸ் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன .

இவர்களை எவ்வாறு இனம் காண்பது ? யுத்தம் முடிந்தவுடன் பல காரணம்களுக்கு ஊர் சென்றவர்கள் பலர் அதில் கொஞ்சப்பேர் தலகீழான முடிவுடன் இங்கு வந்து இலங்கை ராணுவத்துக்கு வெள்ளை அடித்தவர்கள் புலியை  கண்டபடி திட்டி தீர்த்தார்கள் .காலப்போக்கில் இங்குள்ளவர்கள் நியாயமான ஆதாரமுள்ள பேச்சுக்களில் மனம் மாறியது போன்று நடித்து  சிலீப்பர் செல் போன்று இருந்தவர்கள் சமீப ஆண்டுகளில் எஜமானர்களில் தொடர்பு போதனைகள் பெற்று மறுபடியும் புலிவாந்தியும் தமிழ் கசப்புணர்வும் தமிழ் மக்களிடையே பரப்புரையை மேற்கொள்வது சந்தடி சாக்கில் யோவ் நீ புலியை  எதிர்கிறாயா ? அப்பவியாய் முகத்தை வைத்துக்கொண்டு மக்கள் பாதிக்கப்பட்டதை  சொன்னேன் அது உங்கள் பார்வைக்கு புலி எதிர்ப்பு போல் தெரிகிறது ஹீ  ஹீ  என்று சிரித்து மழுப்புவார்கள் இப்படி பலவடிவங்களில் இங்கு  Trojan Horse   இறக்கிவிடடபட்டுள்ளது எம்முள்         இது மிகவும் பாரதூரமான விடயம் ஒன்று புலி எதிர்ப்பாளி  என்று சொல்லணும் இல்லை அனுதாபி என்று வரணும் இரண்டுக்கும் நடுவில் இருப்பவர்கள் என்று சொல்லிக்கொண்டு சமயம் வரும்போது புலிகளை தூற்றுபவர்கள் மீது மிக மிக  கவனமாக இருக்கனும் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் ,தமிழ்ஈழத்தை முற்றுமுழுதாக  தங்கள் பூரண கட்டுபாட்டில வைத்திருத்தால்கூட,அது தமிழ்ஈழமாகிவிடமுடியாது. தமிழ்ஈழத்தை முதல் சிறிலங்கா அங்கிகரிக்கவேண்டும் .ஏனைய உலகநாடுகளும் அங்கிகரிக்கவேண்டும். சிறிலங்கா அங்கிகரித்தாலும்கூட இந்தியா அங்கிகரிக்கமாட்டாது. தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு.. வந்தாலும் ..இந்தியாவை  தமிழ்ஈழத்தை அங்கிகரிக்கும்படி செய்யமுடியாது.ஆனல் மற்றைய மாநிலக்கார்  நினைத்தால் ..தமிழ்ஈழத்தை..இந்தியாவைக்கொண்டு அங்கிகரிக்கமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இதைவிட அருமையாக தமிழ்நாட்டை எவராலும் எடைபோட முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

தமிழர் மிகப் பலமானவர்கள். அவர்களைத் தோற்கடிக்க முடியாது. ஆனால் தமிழரின் ஒத்துழைப்பின்றி தமிழரைத் தோற்கடித்திருக்க முடியாது. தமிலரைத் தோற்கடிக்க மிகவும் உதவியாது தமிழரே.. 👍

புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்தவன். ஆதரிப்பவன் நான். அதனை இன்றும் உறுதியாக கூறுவேன். காரணம் ஒன்றே ஒன்று தான். அவர்களது கொள்கைப் பிடிப்பு.அது சம்பந்தமான தெளிவு மற்றும் தியாகம். 

இனி அவர்கள் போல் எவரும் வரப்போவதில்லை வரவும் முடியாது.

எனவே தேவையற்ற சீண்டுதல்கள் வசைகளை விடுத்து ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வைத்தால் அதை விட சந்தோஷமாக விடயங்கள் எதுவுமில்லை எம் வாழ்வில்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

விடுதலை புலிகளின் மீதான மக்களின் ஏகோபித்த ஆதரவும் மரியாதையும்தான் பலர் வயிறெரியக் காரணம்.. 😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

இறுதிக் கட்டப் போரின் போது இந்தியாவுடனான நெருங்கிய உறவு விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியது

எங்கே தமிழகத்தின் வற்புறுத்தலால் இந்தியா ஜெனீவாவில் தங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து விடுமோ எனும் பயத்தில் நன்றி சொல்வதுபோல் அதன் உதவியால் தான் வென்றோம் என்று நினைவூட்டுகினமாம். என்னைக்காட்டிக்கொடுத்தால் நீயுந்தான் மாட்டுப்படுவாய் என்றிருக்கலாம். ஆனால் அந்தத் தவறை இந்தியா ஒருபோதும் செய்யாது. சீனாவோடு குடும்பம் நடத்தி, துரோகம் செய்யும்  தன்னை இந்தியா களட்டி விடாமல் இருக்க, புகழின் உச்சியில் ஏத்தி விழுதுவதாய் இருக்கலாம். ஏமாந்தது, ஏமாறுவது, விழுவது எல்லாம் இந்தியாதான். எப்படி நம்பியிருந்த எம்மினத்தை கழுத்தறுத்ததோ அவ்வாறே அதற்கும் நிகழுகிறது. இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் பாணியில் திரும்பத் திரும்ப விழுந்தெழும்புது இந்தியா.

12 hours ago, கிருபன் said:

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

அந்தப்போரை நாங்கள் வெல்லவில்லை இந்தியாதான் வென்றது என்று வெளிப்படையாகச் சொல்ல வறட்டுக் கவுரவம் தடுக்குதோ  லலித் வீரதுங்கவுக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் விவகாரம் சூடு பிடிக்கும் நேரத்தில்  இந்தக் கருத்து கசிய விடப்படுவதின் நோக்கம்   இது தான்...!

இந்தியா அண்ணே.!  போர்க் குற்ற விசாரணை என்று ஒண்டு வந்தால்...பாதிக்கப் படுவது   சிங்களம் அல்ல....!

நீங்கள் தான்...!  ஓடிப் பிடிச்சு கெதியா அலுவலைப் பாருங்கோ..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Kapithan said:

விடுதலை புலிகளின் மீதான மக்களின் ஏகோபித்த ஆதரவும் மரியாதையும்தான் பலர் வயிறெரியக் காரணம்.. 😀

பல ஆச்சரியப்படத்தக்க இராணுவ வெற்றிகளும் அடங்கும். தாம் சார்ந்த இயங்கங்களால் முடியவில்லையே என்ற ஏக்கமும்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kandiah57 said:

தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் ,தமிழ்ஈழத்தை முற்றுமுழுதாக  தங்கள் பூரண கட்டுபாட்டில வைத்திருத்தால்கூட,அது தமிழ்ஈழமாகிவிடமுடியாது. தமிழ்ஈழத்தை முதல் சிறிலங்கா அங்கிகரிக்கவேண்டும் .ஏனைய உலகநாடுகளும் அங்கிகரிக்கவேண்டும். சிறிலங்கா அங்கிகரித்தாலும்கூட இந்தியா அங்கிகரிக்கமாட்டாது. தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு.. வந்தாலும் ..இந்தியாவை  தமிழ்ஈழத்தை அங்கிகரிக்கும்படி செய்யமுடியாது.ஆனல் மற்றைய மாநிலக்கார்  நினைத்தால் ..தமிழ்ஈழத்தை..இந்தியாவைக்கொண்டு அங்கிகரிக்கமுடியும். 

கந்தையர்! உங்களுக்காக இந்த இணைப்பு....

«Sri Lanka verleugnet seine Vergangenheit» – ein Uno-Bericht erhöht den Druck auf den Inselstaat

Das Urteil des Hochkommissariats für Menschenrechte fällt scharf aus. Fraglich ist, ob es etwas ändern wird.

f2e7de7f-8c67-4d8c-bd0c-ff4c302f2a38.jpeg?width=1360&height=900&fit=crop&quality=75&auto=webp

Gotabaya Rajapaksa, der in der Endphase des Bürgerkrieges den Sicherheitsapparat dirigierte, verfolgt eine singhalesisch-nationalistische Politik.

Die Worte sind scharf, ungewohnt scharf, wie Insider sagen. Diese Woche hat das Uno-Hochkommissariat für Menschenrechte (OHCHR) einen Bericht über Sri Lanka veröffentlicht. Darin heisst es, auch 12 Jahre nach dem Ende des Bürgerkriegs in Sri Lanka würden Initiativen zur Aufarbeitung immer wieder scheitern. «Sri Lanka verleugnet seine Vergangenheit, Bemühungen zur Wahrheitssuche wurden abgebrochen, und höchste Staatsoffizielle weigern sich, vergangene Verbrechen zuzugeben», heisst es weiter. Der Bürgerkrieg in Sri Lanka dauerte 26 Jahre und endete 2009, als das Militär die tamilischen Rebellen der Tamil Tigers auslöschte. Es geschahen Kriegsverbrechen auf beiden Seiten, Zehntausende Zivilisten wurden getötet. Insgesamt forderte der Bürgerkrieg über 100 000 Opfer.

In der Endphase dirigierte Gotabaya Rajapaksa den Sicherheitsapparat. Ende 2019 wurde er in Sri Lanka zum Präsidenten gewählt; Rajapaksa verfolgt eine singhalesisch-nationalistische Politik, die sich oft gegen Minderheiten wie die Tamilen richtet. Im OHCHR-Bericht ist dargelegt, wie er seither Generäle und Militärangehörige aus der Bürgerkriegszeit in politische Führungspositionen gehievt hat – mehreren werden Kriegsverbrechen und Verbrechen gegen die Menschlichkeit vorgeworfen, auch Gotabaya Rajapaksa selber.

Der Bericht geht an den Uno-Menschenrechtsrat. Dort soll er am 24. Februar besprochen werden. Mit dem Bericht endet eine Resolution, die der Menschenrechtsrat 2015 erlassen und zweimal verlängert hat, um Sri Lanka aufzufordern, die Verbrechen der Vergangenheit aufzuarbeiten. Als die Resolution 2015 erlassen wurde, erklärte sich die damalige Regierung in Sri Lanka zur Aufarbeitung bereit. Mehrere Empfehlungen der Resolution wurden umgesetzt, zum Beispiel wurde ein Büro eingerichtet, das sich um vermisste Personen kümmert. Vergangenes Jahr, nur Monate nach dem Regierungswechsel, entzog Sri Lanka der Resolution dann die Unterstützung. Gotabaya Rajapaksa verschloss damit dem Menschenrechtsrat die Tür nach Sri Lanka. Rajapaksa und seine Vertrauten betrachten die Resolution als Einmischung des Westens.

Nun muss der Menschenrechtsrat entscheiden, wie es weitergeht mit Sri Lanka. Wenn er die Resolution per Mehrheitsentscheid auslaufen lässt, gibt es keinen multilateralen Druck mehr auf Sri Lanka, die Verbrechen des Bürgerkriegs aufzuklären und für Versöhnung auf der Insel zu sorgen. Der Menschenrechtsrat hat 47 Mitglieder, und es ist keineswegs sicher, ob der Rat für eine neue Resolution stimmen wird. Dafür sorgen die Mehrheitsverhältnisse. China ist seit letztem Jahr Mitglied – und ein Verbündeter Sri Lankas. Der Inselstaat ist hoch verschuldet und hat in den vergangenen Jahren Milliardenzahlungen aus China erhalten. China könnte seinen Einfluss auf die Verbündeten im Menschenrechtsrat geltend machen, auch in Staaten wie Pakistan, Russland und Kuba dürfte das Narrativ vom westlichen Hochmut verfangen.

Mehrere Staaten im Rat, auch westliche, sollen eine sanfte Resolution bevorzugen, die von der sri-lankischen Regierung mitgetragen wird.

Dies wäre kaum im Sinne des scharfen Berichts des Hochkommissariats für Menschenrechte. Dieses sorgt sich nicht nur um die Menschenrechtslage in Sri Lanka. Er gibt auch mehrere Empfehlungen an den Menschenrechtsrat und dessen Mitgliedstaaten ab: Man solle nicht nur die Situation in Sri Lanka verstärkt beobachten, sondern auch Sanktionen ergreifen gegen jene Personen, denen Kriegsverbrechen vorgeworfen werden. Zudem müsse geprüft werden, ob die Rückführung von abgelehnten Asylbewerbern nach Sri Lanka aufgrund der schlechten Menschenrechtslage weiterhin zulässig sei.

https://www.nzz.ch/international/sri-lanka-ein-bericht-der-uno-macht-druck-wegen-kriegsverbrechen-ld.1599013?fbclid=IwAR3wy8wP92mcnNzWYgSK1yhV5DDHfajAVb9898TVlaeBebTVRyRAfpVl0iA

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

மனித உரிமைகள் விவகாரம் சூடு பிடிக்கும் நேரத்தில்  இந்தக் கருத்து கசிய விடப்படுவதின் நோக்கம்   இது தான்...!

இந்தியா அண்ணே.!  போர்க் குற்ற விசாரணை என்று ஒண்டு வந்தால்...பாதிக்கப் படுவது   சிங்களம் அல்ல....!

நீங்கள் தான்...!  ஓடிப் பிடிச்சு கெதியா அலுவலைப் பாருங்கோ..!

அண்ணா வணக்கம்,

லோங் டயிம் நோ ஸீ? எப்படி இருக்கிறியள்?
 
2 hours ago, குமாரசாமி said:

இதில என்ன சொல்லப்பட்டிருக்கு? சாரம்சம் ஏதாச்சும்??

உட்புறங்கள் சொல்வது போல் வார்த்தைகள் கூர்மையானவை, வழக்கத்திற்கு மாறாக கூர்மையானவை. இந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் (OHCHR) இலங்கை குறித்த அறிக்கையை வெளியிட்டார். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த விவகாரத்துடன் இணங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக அது கூறுகிறது.

இலங்கை அதன் கடந்த காலத்தை மறுக்கிறது, உண்மையைத் தேடுவதற்கான முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன, மேலும் உயர் மாநில அதிகாரிகள் கடந்த கால குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் it, அது தொடர்கிறது. இலங்கையில் உள்நாட்டுப் போர் 26 ஆண்டுகள் நீடித்தது மற்றும் 2009 ல் இராணுவம் தமிழ் கிளர்ச்சியாளர்களான தமிழ் புலிகளை அழித்தபோது முடிந்தது. இரு தரப்பிலும் போர்க்குற்றங்கள் செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மொத்தத்தில், உள்நாட்டுப் போரில் 100,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இறுதிக் கட்டத்தில், கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு கருவியை இயக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் அவர் இலங்கையில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; ராஜபக்ஷ சிங்கள தேசியவாதக் கொள்கையை பின்பற்றுகிறார், இது பெரும்பாலும் தமிழர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு எதிராக இயக்கப்படுகிறது. உள்நாட்டுப் போரிலிருந்து ஜெனரல்களையும் இராணுவ வீரர்களையும் அவர் எவ்வாறு அரசியல் தலைமைப் பதவிகளுக்கு உயர்த்தியுள்ளார் என்பதை OHCHR அறிக்கை விளக்குகிறது - பலரும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கோட்டபய ராஜபக்ஷ உட்பட.

அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் செல்கிறது. அங்கு பிப்ரவரி 24 அன்று விவாதிக்கப்பட வேண்டும். இந்த அறிக்கை 2015 இல் மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தை முடித்து, கடந்த கால குற்றங்களுடன் இணங்குமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்க இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இலங்கையில் அப்போதைய அரசாங்கம் அதனுடன் இணங்க ஒப்புக்கொண்டது. தீர்மானத்தின் பல பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன, எடுத்துக்காட்டாக காணாமல் போனவர்களைக் கையாள்வதற்காக ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு, அரசாங்கம் மாற்றப்பட்ட சில மாதங்களிலேயே, இலங்கை தீர்மானத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றது. கோதபய ராஜபக்ஷ மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான கதவை மூடினார். ராஜபக்ஷவும் அவரது கூட்டாளிகளும் இந்த தீர்மானத்தை மேற்கு நாடுகளின் தலையீடு என்று கருதுகின்றனர்.

இப்போது மனித உரிமைகள் பேரவை இலங்கையுடன் எவ்வாறு தொடர வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானம் காலாவதியாக அவர் அனுமதித்தால், உள்நாட்டுப் போரின் குற்றங்களை விசாரிக்கவும் தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இலங்கையின் மீது இனி பலதரப்பு அழுத்தம் இருக்காது. மனித உரிமைகள் பேரவையில் 47 உறுப்பினர்கள் உள்ளனர், மேலும் கவுன்சில் ஒரு புதிய தீர்மானத்திற்கு வாக்களிக்கும் என்பதில் உறுதியாக இல்லை. பெரும்பான்மை விகிதங்கள் அதை உறுதி செய்கின்றன. கடந்த ஆண்டு முதல் சீனா ஒரு உறுப்பினராக இருந்து வருகிறது - மற்றும் இலங்கையின் நட்பு நாடு. தீவு நாடு மிகவும் கடன்பட்டுள்ளது மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் சீனாவிலிருந்து பில்லியன் கணக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளது. மனித உரிமைகள் பேரவையில் நட்பு நாடுகளின் மீது சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தலாம், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் கியூபா போன்ற மாநிலங்களில் கூட மேற்கத்திய ஆணவத்தின் கதை பிடிபடும்.

சபையில் பல மாநிலங்கள், மேற்கு நாடுகள் உட்பட, இலங்கை அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு மென்மையான தீர்மானத்தை விரும்புவதாகக் கூறப்படுகிறது. இது மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் கடுமையான அறிக்கையின் ஆவிக்குரியதாக இருக்காது. இது இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து மட்டுமல்ல. மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் அவர் பல பரிந்துரைகளை வழங்குகிறார்: இலங்கையின் நிலைமையை இன்னும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளும் எடுக்கப்பட வேண்டும். கூடுதலாக, நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திரும்புவது இன்னும் அனுமதிக்கப்படவில்லையா என்பதை சரிபார்க்க வேண்டும்.

சத்தியமா இது கூகிள் மொழிபெயர்ப்பு. ஜேர்மனி பாஷையில இருந்ததால எனக்கு வேறு வழி தெரியவில்லை. கருத்துப்பிழையிருந்தால் கோவிக்கவேண்டாம். படிச்சுப் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

மனித உரிமைகள் விவகாரம் சூடு பிடிக்கும் நேரத்தில்  இந்தக் கருத்து கசிய விடப்படுவதின் நோக்கம்   இது தான்...!

இந்தியா அண்ணே.!  போர்க் குற்ற விசாரணை என்று ஒண்டு வந்தால்...பாதிக்கப் படுவது   சிங்களம் அல்ல....!

நீங்கள் தான்...!  ஓடிப் பிடிச்சு கெதியா அலுவலைப் பாருங்கோ..!

IMG-20210131-122159.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் ரஞ்சித் .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

ஆக்கபூர்வமான கருத்துக்களை

உதாரணத்துக்கு நாலு ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதிக்காட்டினால் தானே நாங்களும் எழுதலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கற்பகதரு said:

உதாரணத்துக்கு நாலு ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதிக்காட்டினால் தானே நாங்களும் எழுதலாம்?

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

Rate this topic

எவ்வாறு உதவியது?

யாரை எல்லாம் கூட்டுச் சேர்த்தது?

அதற்காக என்ன என்ன ஆயுதங்களை வழங்கி இருந்தனர்?

இறுதி கட்டத்தில் வெளியே இருந்து பாதுகாக்க வந்த சர்வதேச கரங்களை எவ்வாறு தடுத்தார்கள்??

இன்னும் இன்னும் எவ்வளவோ விடயங்களை பதியலாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம்.

22 minutes ago, விசுகு said:

அடுத்தவர் செய்த தவறுகளை மட்டும் எதிர்கால சந்ததி அறிவதோடு நின்றுவிடாது  எம்மவர் அதாவது விடுதவை புலிகள் செய்த தவறுகளையும் எதிர்கால சந்ததி அறிந்தால் தான் அவர்கள் எதிர்  காலத்தில்   அவ்வாறான தவறுகளை இனிமேல் செய்ய மாட்டார்கள்.

 இதை கூறுவதில் எந்த தவறும் இல்லை விசுகு. இதை கூறுவதால்  தமிழருக்கோ தமிழ் தேசியத்திற்கோ எந்த பாதிப்பும் வராது. விடுதலைப்புலிகள் என்ற இயக்கம் தமிழர் சார்பில்  போராடிய இயக்கம் என்ற வரலாறு நிலைத்து நிற்கும். அவர்களது பெருமைகளும் அவர்களது தவறுகளை ஒத்துக் கொள்வதால கெட்டுவிடப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

நீங்கள் அல்லது உங்கள் போன்றோரின் இதுவரையான கருத்துக்களின் அவை அனைத்தையும் பதிந்து விட்டீர்கள் 

மனச்சாட்சி இருந்தால் இந்த திரியிலாவது இந்திய சர்வதேச சிறீலங்காவின் தவறுகளை பதிவிடுங்கள்.

அதைவிடுத்து தொடர்ந்து புலிகள் மீதான குறை காணல் அல்லது குற்றம் காணல் அடுத்த தலைமுறைக்கு புலிகளை தீண்டத்தகாதவர்களாகவே கொண்டு செல்லும்.

இது தான் உங்களது நோக்கம் என்று இங்கே பல உறவுகளால் தொடர்ந்து குற்றச்சாட்டும் உங்கள் மேல் உண்டு. அதிலிருந்து நீங்கள் வெளியே வரவும் முயற்சிக்கலாமே? 

உங்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டையே ஏற்காத அல்லது நிரூபிக்க முடியாத நீங்கள் எப்படி மற்றவரை நோக்கி சுட்டு விரல் நீட்ட முடியும்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.