Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"தமிழன்" னா தமிழிலா பேசணும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழன்" னா தமிழிலா பேசணும்?

தமிழ் ஈழச் சின்னம் மற்றும் காந்தள் பூ பொறித்த முகக் கவசம் அணிந்து தமிழ் விற்பனை நிலையத்திற்குச் சென்ற ஒரு வாடிக்கையாளர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அதற்கு அங்குள்ள விற்பனையாளர் இந்தச் சின்னங்களை அணிந்தால் மட்டும் போதுமா தமிழில் பேசியிருக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார். அது தொடர்பாக அந்த வாடிக்கையாளர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, nunavilan said:

"தமிழன்" னா தமிழிலா பேசணும்?

ஓம்!

ஆனால் பல்மொழி பண்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டில் விற்பனை நிலையத்துக்குச் சென்று எந்த மொழியில் பேசவேண்டும் என்று தீர்மானிப்பது விற்பனையாளர் அல்ல. நீ இந்த மொழியில்தான் பேசு என்பது அடிப்படை உரிமை மீறலாகும். இங்கு விற்பனையாளர் தமிழர் அடையாளங்களை அணிவது மட்டுமல்ல தமிழில் பேசவேண்டும் என்று எந்த அடிப்படையில் அறிவுறித்தினார் என்ற கேள்வி எழுகின்றது. வரும் வாடிக்கையாளருக்கு அறிவுரை கூறுவதுதான் அவரின் வேலையா? 

கனடா வந்த புதிதில் ஒர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பகுதி நேரமாக வேலைசெய்துகொண்டிருந்தேன். கணவன், மனைவி மற்றும் மகள் கொண்ட ஒரு குடும்பம் எரிபொருள் நிரப்ப வருவார்கள். என்னுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களின் நிறம் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து இது ஒரு தமிழ்க் குடும்பம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு சில மாதங்களின் பின்னர் உங்களின் பின்புலம் என்ன என்று தயக்கத்துடன் கேட்டுவிட்டேன். தாங்கள் பிஜி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்.  இதை சொல்லுவதன் காரணம் தமிழர் போன்று தோற்றமளித்தாலும் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஒருவர் தமிழர் அடையாளங்களை அணிந்திருந்தால், அவரை நோக்கி தமிழர் அடையாளங்களை அணிவது மாத்திரமின்றி தமிழிலும் பேசவேண்டும் என்று சொன்னால் அது அவரை அவமதிப்பதாக அமையும். 

இனி, கனடாவில் தமிழ்க் கடைகளில் வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமானது. வாடிக்கையாளருடன் இங்கிதமாகப் பேசப் பழகத் தெரியாது. வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்.வாடிக்கையாளர் சேவையின் அவசியத்தை அறிந்துகொள்வதன் அல்லது அறிவுறுத்துவதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். 

இந்த வீடியோவில் வரும் டயானா சுப்பாரா இருக்காங்க❤️😍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தமிழன்" னா தமிழிலா பேசணும்?

எவன் ஒருவன் தன்மொழியை இழக்கிறானோ
அவன் தன் அடையாளத்தையே இழக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

இனி, கனடாவில் தமிழ்க் கடைகளில் வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமானது. வாடிக்கையாளருடன் இங்கிதமாகப் பேசப் பழகத் தெரியாது. வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்.வாடிக்கையாளர் சேவையின் அவசியத்தை அறிந்துகொள்வதன் அல்லது அறிவுறுத்துவதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். 

இந்தப்பிரச்சனை  எல்லா நாட்டிலும்தான் .

  • கருத்துக்கள உறவுகள்

// வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்//

இது தமிழ் மொழி பேசுபவர்களின் கடைகளில் மட்டுமல்ல, பொதுவாகவே மற்றைய மொழி(சீனா, அரேபிய) பேசுபவர்களின் கடைகளிலும் உள்ளது என்பது உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

// வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்//

இது தமிழ் மொழி பேசுபவர்களின் கடைகளில் மட்டுமல்ல, பொதுவாகவே மற்றைய மொழி(சீனா, அரேபிய) பேசுபவர்களின் கடைகளிலும் உள்ளது என்பது உண்மை

எந்த மொழியில் பேச வேண்டும் என்று... கடைக்காரர் வற்புறுத்த முடியாது என்றாலும்,

வேற்று மொழிக்காரர்.. தமது மொழியிலேயே பேசுவார்கள்.
வேற்று மொழிக்காரரும்... அது தமிழ்க் கடை என்றே தெரிந்து வருகின்றார்கள்.
தமிழில் பேசுவதனை, பெரும் பொருட்டாக எடுக்க மாட்டார்கள்.  

இங்குள்ள தமிழ்க் கடைகளுக்கு.... ஜேர்மன், பிலிப்பைன்ஸ் போன்ற  நாட்டவர்கள் அதிகம் வருவார்கள்.
தமிழில் பேசுவதை, அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். 
கடைக்காரரும்... கூடிய விரைவில்... அவர்கள் கேட்கும் பொருட்களை,
தமிழருக்கு...  முன்னரே, கொடுத்து அனுப்பி விடுவார்.

தமிழ்க் கடைகளில்... எனக்குப் பிடிக்காத விடயம்,
அங்குள்ள தொலைக்காட்சியில்...  தமிழ் சினிமா பாடல்களை,
அதிக சத்தத்துடன்... ஒளிபரப்பிக் கொண்டிருப்பதை பார்க்க... கடுப்பாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பிலிப்பைன்ஸ் காரிகள் சேர்ந்தால் போதும் பூனைச்சண்டையாத்தான் இருக்கும் அப்போது எனது செந்தமிழ்ச் சொற்களை எடுத்து அவள் மீது வீசுவேன் அடங்கி விடுவார்கள்.
வெளிநாட்டு அனுபவம். இந்த மொழி தான் பேசவேண்டும் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது அயல் நாடுகளில் ஆனால் நாங்கள் தமிழர்கள்  ஈழம் அது,இது என உணர்சியாக பேசுபவர்கள் கூட ஆங்கிலம் கலந்து தான் பேசி உசுப்பேற்றுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளில்... தமிழில்தான் பேசுவார்கள்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படியான இடங்களுக்கோ அல்லது கோவில்களுக்கோ போகும் போது பெரும்பாலும் தமிழில் தான் கதைப்பதுண்டு..!

யாரைப் பார்த்தாலும்.....  Hi அல்லது How  என்னும் இந்த நாய்.....எப்போது தன் மொழியில் குரைக்கப் போகின்றது?

சிங்களவன் சிங்களக் கடையிலும் தமிழ்க்கடையிலும் சிங்களத்தில் தானே கதைக்கிறான்?

எனது இனம் தன் மொழியைத் ..தாழ்வாக நினைத்துக் கொள்வதால்...இவ்வாறு எழுத நேர்ந்தது!

வெம்பிளியில் பஸ்ஸில் ஏறிய இந்தியாக்காரன்...இந்தியில் ரிக்கட் கேட்டு வாங்கிப் போகின்றான்!
வெள்ளை இன பஸ் சாரதி எதுவும் பேசாமல் ...ரிக்கட் கொடுத்ததை எனது கண்களால் கண்டு ஆச்சரியப் பட்ட நாட்களும் உண்டு..!

தமிழன் கொழும்பில் சிங்களம் பேசாது..தமிழில் வியாபாரம் செய்திருந்தால்.....சிங்களவனுக்குக் கொஞ்சமாவது தமிழ் படிக்கும்  தேவை இருந்திருக்கும்  எங்கிறது எனது பட்டறிவு..!

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

குறிப்பு: நாய் என்ற வார்த்தையை எந்த வித தீய நோக்கிலும் பயன்படுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

குறிப்பு: நாய் என்ற வார்த்தையை எந்த வித தீய நோக்கிலும் பயன்படுத்தவில்லை.

முன் ஜாக்கிரதை... முனுசாமி. 😁 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

எவன் ஒருவன் தன்மொழியை இழக்கிறானோ
அவன் தன் அடையாளத்தையே இழக்கிறான்.

உண்மையல்ல. ஊமையாகி போனவர்கள் கூட மொழியை இழப்பதில்லை - சைகை மொழியை தமதாக்கி கொள்கிறார்கள். வாழும் நாட்டை மாற்றிக் கொள்ள ஒருவருக்கு உரிமை இருப்பது போலவே தமது மொழி, மதம், பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளும் அடிப்படை மனித உரிமை அனைவருக்கும் உண்டு. வாழும் நாட்டை மாற்றிக்கொண்டவர்கள் தமது அடையாளத்தை மாற்றிக் கொள்கிறார்களேயன்றி இழந்து விடுவதில்லை. அது போலவே மொழி, மதம் ஆகியவற்றை மாற்றிக்கொள்பவர்களும் தமது அடையாளத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அது அவர்களின் அடிப்படை உரிமை. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாலி said:

ஓம்!

ஆனால் பல்மொழி பண்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டில் விற்பனை நிலையத்துக்குச் சென்று எந்த மொழியில் பேசவேண்டும் என்று தீர்மானிப்பது விற்பனையாளர் அல்ல. நீ இந்த மொழியில்தான் பேசு என்பது அடிப்படை உரிமை மீறலாகும். இங்கு விற்பனையாளர் தமிழர் அடையாளங்களை அணிவது மட்டுமல்ல தமிழில் பேசவேண்டும் என்று எந்த அடிப்படையில் அறிவுறித்தினார் என்ற கேள்வி எழுகின்றது. வரும் வாடிக்கையாளருக்கு அறிவுரை கூறுவதுதான் அவரின் வேலையா? 

கனடா வந்த புதிதில் ஒர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பகுதி நேரமாக வேலைசெய்துகொண்டிருந்தேன். கணவன், மனைவி மற்றும் மகள் கொண்ட ஒரு குடும்பம் எரிபொருள் நிரப்ப வருவார்கள். என்னுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களின் நிறம் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து இது ஒரு தமிழ்க் குடும்பம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு சில மாதங்களின் பின்னர் உங்களின் பின்புலம் என்ன என்று தயக்கத்துடன் கேட்டுவிட்டேன். தாங்கள் பிஜி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்.  இதை சொல்லுவதன் காரணம் தமிழர் போன்று தோற்றமளித்தாலும் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஒருவர் தமிழர் அடையாளங்களை அணிந்திருந்தால், அவரை நோக்கி தமிழர் அடையாளங்களை அணிவது மாத்திரமின்றி தமிழிலும் பேசவேண்டும் என்று சொன்னால் அது அவரை அவமதிப்பதாக அமையும். 

இனி, கனடாவில் தமிழ்க் கடைகளில் வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமானது. வாடிக்கையாளருடன் இங்கிதமாகப் பேசப் பழகத் தெரியாது. வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்.வாடிக்கையாளர் சேவையின் அவசியத்தை அறிந்துகொள்வதன் அல்லது அறிவுறுத்துவதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். 

இந்த வீடியோவில் வரும் டயானா சுப்பாரா இருக்காங்க❤️😍

வாலி

அந்த டயானாவுக்கு ஒரு பிள்ளை 10 வயதில் இருக்கிறான். .. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரனுடன் ஆங்கிலத்தில் பேசினால்தான் அவனுக்கு புரியும் என்பது தெரிந்த தமிழனுக்கு 
லத்தீன் நாட்டவர்களுடன் ஸ்பானிஷில் பேசினால்தான் புரியும் என்று தெரிந்த தமிழனுக்கு 
தமிழர்களுடன் தமிழில் பேசுவது என்றால் வயுத்துக்குத்தும் வியாக்கினங்களும் வந்து விடுகிறது.
இதுக்கு  சுத்த அறிவின்மை ஒன்றுதான் அடிப்படை காரணம் தவிர்த்து பிறிதொன்று இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தனிப்பட்ட முறையில் அந்தக் கடை பிடிக்காது காரணம் அவர்களின் வாடிக்கையாளர் சேவை.
ஆனால், மேற்குறிப்பிட்ட நிகழ்வில் அவர் தமிழில் தான் கதைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரியவில்லை.  தமிழர் தமிழில் கதைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் கூறியதாகவே தெரிகிறது.  ஆனால் எம்மவரில் பலரின் கதைக்கும் தோனி (சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாக கதைப்பார்) அதை எதிர்கொள்பவர்களுக்கு சங்கடமாக அமைகிறதென்பந்து உண்மை.  எம்மவர்கள் பலருக்கு பட்டர் பூசி கதைக்கத் தெரியாது  (எனக்கும் தான்).

டயானா கூறியது போல இவர் தனது publicity  க்கு வீடியோ விட்டது போல இருக்கு.

ஆரஞ்சு கலர் இல் இருப்பவர் அதிகப்பிரசங்கி மட்டுமல்லாது விதண்டாவாதம் கதைக்கிறார்.

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளில்... தமிழில்தான் பேசுவார்கள்.  :grin:

அண்ணனுக்கு சாம்பிள் வீடியோவே இருக்கு வேணாம் என நினைக்கிறன்  எந்த நாடு என தெரியல ஒரு பொண்ணு 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணனுக்கு சாம்பிள் வீடியோவே இருக்கு வேணாம் என நினைக்கிறன்  எந்த நாடு என தெரியல ஒரு பொண்ணு 

ராஜா... அந்த சாம்பிள் வீடியோவை போட்டு விடுங்கள்.
அதைப் பார்த்து.... எந்த நாடு என்று முடிவுக்கு வருவோம்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

எனக்குத் தனிப்பட்ட முறையில் அந்தக் கடை பிடிக்காது காரணம் அவர்களின் வாடிக்கையாளர் சேவை.
ஆனால், மேற்குறிப்பிட்ட நிகழ்வில் அவர் தமிழில் தான் கதைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரியவில்லை.  தமிழர் தமிழில் கதைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் கூறியதாகவே தெரிகிறது.  ஆனால் எம்மவரில் பலரின் கதைக்கும் தோனி (சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாக கதைப்பார்) அதை எதிர்கொள்பவர்களுக்கு சங்கடமாக அமைகிறதென்பந்து உண்மை.  எம்மவர்கள் பலருக்கு பட்டர் பூசி கதைக்கத் தெரியாது  (எனக்கும் தான்).

டயானா கூறியது போல இவர் தனது publicity  க்கு வீடியோ விட்டது போல இருக்கு.

ஆரஞ்சு கலர் இல் இருப்பவர் அதிகப்பிரசங்கி மட்டுமல்லாது விதண்டாவாதம் கதைக்கிறார்.

ஆரஞ்சு நிற T-shirt  அணிந்திருப்பவர் மட்டுமல்ல அங்கிருப்பவர்கள் அனைவருமே முத்தமிழ் வானொலியின்  ஒலிபரப்பாளர்கள். இந்த நிகழ்ச்சி உண்மையில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டது.

அதனால்தான் இந்த விவாதத்தில் ஒவ்வொருவரும் எதிர் எதிர் நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள். 

👍

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

ஆரஞ்சு நிற T-shirt  அணிந்திருப்பவர் மட்டுமல்ல அங்கிருப்பவர்கள் அனைவருமே முத்தமிழ் வானொலியின்  ஒலிபரப்பாளர்கள். இந்த நிகழ்ச்சி உண்மையில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டது.

அதனால்தான் இந்த விவாதத்தில் ஒவ்வொருவரும் எதிர் எதிர் நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள். 

👍

ஓ.. இதுவா வானொலி அரசியல் 😉 

இந்த வானொலி பற்றி கேள்விப்படவேயில்லை. இணைய வானொலியா?

வானொலி அறிவிப்பாளராக டயானா அக்காக்கு முழுமையான தமிழில் உரையாட முடியவில்லையே?

மற்றவர் ரூபன் அண்ணனா?

Edited by Sabesh

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமன்  East fmல் வேலை செய்பவர் என நினைக்கிறேன்.(நீல சட்டை)

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்கம் அண்ட் ஸ்ட்டீல்ஸ் சந்திக்கு அருகாமையில் ஒரு இளையவர் பூக்கடை வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். அவருடைய இன்ஸ்ட்டா கிராம் கணக்கு #தமிழீழம், # ஈழம் சார்ந்த P2P செய்திகளையும் தாங்கி இருந்ததால் முடக்கப்பட்டு உள்ளது. அவர் அந்த ஆதங்கத்தில் தனது கடையில் இருந்த பூக்கள் சுமார் பல ஆயிரம் $$$$ பெறுமதியான பூக்களை நடு வீதியில் விட்டெறிந்து தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.
இளையவர்கள் இப்படியான உணர்வுகளையும் மட்டுமே வெளிக்காட்டாது அறிவு பூர்வமாக தங்கள் எதிப்பை தெரிவிக்க வேண்டும். 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, Sasi_varnam said:

மார்க்கம் அண்ட் ஸ்ட்டீல்ஸ் சந்திக்கு அருகாமையில் ஒரு இளையவர் பூக்கடை வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். அவருடைய இன்ஸ்ட்டா கிராம் கணக்கு #தமிழீழம், # ஈழம் சார்ந்த P2P செய்திகளையும் தாங்கி இருந்ததால் முடக்கப்பட்டு உள்ளது. அவர் அந்த ஆதங்கத்தில் தனது கடையில் இருந்த பூக்கள் சுமார் பல ஆயிரம் $$$$ பெறுமதியான பூக்களை நடு வீதியில் விட்டெறிந்து தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.
இளையவர்கள் இப்படியான உணர்வுகளையும் மட்டுமே வெளிக்காட்டாது அறிவு பூர்வமாக தங்கள் எதிப்பை தெரிவிக்க வேண்டும். 

முகநூல் நண்பர்(முன்னால் யாழ்கள உறுப்பினர்) தனிமடலில் அனுப்பியிருந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தமிழரிடம் தமிழில் தான்  கதைப்பன். அது மட்டுமில்லாமல் தமிழர்கள் கூடியிருக்கும்  ஒரு பொது இடத்திலை வேறு மொழியில் கதைத்தால் எனக்கு கோபம் வரும். நீங்கள் தமிழர்தானே தமிழில் கதைக்கலாம் தானே எண்டு கோபமாய் கூட கேட்டிருக்கிறன்.வேறை நாட்டுக்காரனோடை என்ன மொழிலையும் பேசட்டும். ஆனால் தமிழரிடம் தமிழில் மட்டும் பேசுங்கள் என உரக்க கூறுவேன்.
எனக்கு தெரிஞ்சு ஜேர்மனியில் அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் ஆங்கிலம் பேசும் நாடுகளிலை ஆக மோசம்.

3dtamil.gif

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

சிங்களவன் சிங்களக் கடையிலும் தமிழ்க்கடையிலும் சிங்களத்தில் தானே கதைக்கிறான்?

எனது இனம் தன் மொழியைத் ..தாழ்வாக நினைத்துக் கொள்வதால்...இவ்வாறு எழுத நேர்ந்தது!

💯

தமிழர்கள் பலர் கடைகளில் ஆங்கிலத்தில் கதைத்து கொள்வது உண்மை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நான் தமிழரிடம் தமிழில் தான்  கதைப்பன். அது மட்டுமில்லாமல் தமிழர்கள் கூடியிருக்கும்  ஒரு பொது இடத்திலை வேறு மொழியில் கதைத்தால் எனக்கு கோபம் வரும். நீங்கள் தமிழர்தானே தமிழில் கதைக்கலாம் தானே எண்டு கோபமாய் கூட கேட்டிருக்கிறன்.வேறை நாட்டுக்காரனோடை என்ன மொழிலையும் பேசட்டும். ஆனால் தமிழரிடம் தமிழில் மட்டும் பேசுங்கள் என உரக்க கூறுவேன்.
எனக்கு தெரிஞ்சு ஜேர்மனியில் அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் ஆங்கிலம் பேசும் நாடுகளிலை ஆக மோசம்.

3dtamil.gif

மகா கவி பாரதியாரின் ஆதங்கமும் இவ்வாறு தான் இருந்தது...!

மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று.....இவற்றை மனதில் நினத்துத் தான்  பாடியிருப்பான் போலும்..!

ஒரு காலத்தில்...சிவாஜி கணேசனின் படங்கள் பார்க்கும் போது....மதுரைத் தமிழ் கேட்டுப் பெருமைப் பட்டிருக்கின்றேன்!

இப்போதெல்லாம் ஒருவரும் தமிழே...கலப்பில்லாமல் பேசுவதில்லை..!

இது ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சியா அல்லது  வேண்டுமென்றே அது சாகடிக்கப் படுகின்றதா என்பதில் எனக்குப் பலத்த சந்தேகங்கள் உண்டு..!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த ஒரு கவிதை மொழி....ஏன் சாகடிக்கப் படுகின்றது என்பது தான் தெரியவில்லை!

தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் தோற்றிய தமிழ் மொழியை இன்று அதைலிருந்து பிறந்த மொழிகளே அழிக்க முயல்வது தான் கொடுமை...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, புங்கையூரன் said:

மகா கவி பாரதியாரின் ஆதங்கமும் இவ்வாறு தான் இருந்தது...!

மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று.....இவற்றை மனதில் நினத்துத் தான்  பாடியிருப்பான் போலும்..!

ஒரு காலத்தில்...சிவாஜி கணேசனின் படங்கள் பார்க்கும் போது....மதுரைத் தமிழ் கேட்டுப் பெருமைப் பட்டிருக்கின்றேன்!

இப்போதெல்லாம் ஒருவரும் தமிழே...கலப்பில்லாமல் பேசுவதில்லை..!

எனது பல வருட அனுபவங்களில் பல நாட்டுக்காரர்களுடன் பழகியுள்ளேன். அதில் குடும்ப நண்பர்களாக கூட இருக்கின்றார்கள். துருக்கி,போலந்து,ருமேனியா,சேர்பியா,குர்தர்,கானா,ரஷ்யா தெலுங்கு மலையாளம் இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். இப்படியானவர்களுடன் பேசும் போது பொது மொழி ஜேர்மன் ஆகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் தம் நாட்டுக்காரருடன்  அவரவர் மொழியில் தான் பேசிக்கொள்வர். இதை அவர்கள் மரியாதைக்குறைவாகவே நினைப்பதில்லை. பொது இடங்களில் கூட.....தமது மொழியை பெருமையாக பேசுவர்.
எமது தமிழினத்தில் மட்டும் தான் சொந்த மொழியில் கதைப்பதை கேவலமாக நினைப்பர். அங்கை பார் வெள்ளைக்காரன் நிக்கிறான் இதுகள் தமிழிலை கதைக்குதுகள் என என் காதால் கேட்டிருக்கின்றேன். ஊரில் இருந்த ஆங்கில மோகம் இவ்வளவு அழிவுகளுக்கு பின்னரும் அந்த மோகம் அழியவேயில்லை.
எல்லாத்தையும் விட பெரிய கொடுமை என்னவெண்டால் ஐந்து பக்க தமிழ்க்கட்டுரை எழுதுவார்கள்.அதில் ஆங்காங்கே ஆங்கிலத்தில் சொற்களை எழுதி விடுவார்கள்.ஏனெண்டால்  தமிழிலை விளங்கப்படுத்தேலாதாம்.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.