Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவர் உண்டு.. ஆனால்.. தாம்பத்யம் இல்லை.. பெருகிவரும் சைபர் விதவைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் உண்டு.. ஆனால்.. தாம்பத்யம் இல்லை.. பெருகிவரும் சைபர் விதவைகள்

கணவர் உண்டு.. ஆனால்.. தாம்பத்யம் இல்லை.. பெருகிவரும் சைபர் விதவைகள்

 

சுஜாதாவுக்கு திருமணமாகிவிட்டது. கணவரும், அவளும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் முகம்பார்த்து பேசி பல வாரங்கள் ஆகிவிட்டன. `அவர் என்னை வாய்க்கு வந்தபடி திட்டினால்கூட நான் வருத்தப்படமாட்டேன். அப்படி திட்டும்போதாவது நானும், அவரும் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா. ஒரு பெண்ணால் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், கணவர் பேசாமலே புறக்கணிப்பதை தாங்கிக்கொள்ளவே இயலாது' என்று கண்ணீர் விடுகிறார், அவர்.

இப்படி ஒருசில சுஜாதாக்கள் அல்ல, பல்லாயிரம் சுஜாதாக்கள் நம்மோடு இருக்கிறார்கள். அவர்கள் கணவரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பெயரளவுக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கணவர் உண்டு.. ஆனால் (வாழ்க்கை) இல்லை.. என்ற நிஜமே அவர்களுக்குள் நிலவிக்கொண்டிருக்கிறது.

 


சமீபத்தில் மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்று வந்திருக்கும் சென்னையை சேர்ந்த சீமா, ‘‘எனது கணவர் இன்டர்நெட்டுக்கு அடிமையாகி விட்டார். எத்தனையோ விதங்களில் அதை எடுத்துச்சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. கணவருடன் ஒரே வீட்டிற்குள் வசித்தாலும், (இன்டர்நெட்டால்) நான் விதவையை போன்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார். இவரை போன்று குமுறும் பெண்கள் ஏராளம்!

‘‘நானும், என் கணவரும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலைசெய்கிறோம். வேலையின் பரபரப்பு இருவரிடமுமே உண்டு. காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு கிளம்பினால் இரவுதான் திரும்புவோம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை, அவரது அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது என் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்து என்னையும் வீட்டிற்கு அழைத்துவருவார். பின்பு அதற்கு நேரமில்லை என்று அவர் சொன்னதால் நான் வேறு வாகனம் வாங்கி தனியாக அலுவலகத்திற்கு சென்று வருகிறேன்.

வீட்டிற்கு வந்தால் இரண்டொரு வார்த்தைகள் பேசுகிறார். பின்பு இன்டர்நெட்டில் மூழ்கிவிடுகிறார். பேஸ்புக்கிலோ, சாட் ரூமிலோ பொழுதை கழிக்கிறார். ஆன்லைனில் அடிக்கடி ஷாப்பிங்கும் செய்கிறார். பேஸ்புக்கில் அவரது புரோபைலுக்கு நானும் ரெக்வெஸ்ட் அனுப்பினேன். அப்படியாவது கணவரோடு பேச்சுத் தொடர்பில் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரை கண்காணிக்க நான் ரெக்வெஸ்ட் அனுப்புவதாக கூறி நிராகரித்துவிட்டார்.

ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தாலும், அவர் என்னுடன் அத்தியாவசிய தேவைக்குகூட பேசாமல் இருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனது தோழிகள் எல்லாம் அலுவலக டென்ஷனை வீட்டில் கணவரிடம் பகிர்ந்து தீர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் எனக்கு டென்ஷனே வீட்டில்தான் உருவாகிறது. என் கணவர் நெட்டில் வெகுநேரத்தை செலவழித்துவிட்டு ரொம்ப தாமதமாக தூங்குகிறார். அதையே காரணங்காட்டி மறுநாள் தாமதமாக விழிக்கிறார். பெயரளவுக்கு வாழும் இந்த வாழ்க்கை எனக்கு தேவையில்லை. கணவர் உயிருடன் இருக்கும்போதே என்னால் விதவை போன்று வாழ முடியாது. ஆன்லைன் நண்பர்களோடு அவர் விருப்பம்போல் வாழட்டும்’’ என்று, பெங்களூருவை சேர்ந்த ஸ்டெல்லா சீறுகிறார்.

கணவரின் இன்டர்நெட் மோகத்தால் பாதிக்கப்படும் இத்தகைய பெண்கள் `சைபர் விதவைகள்' என்று அழைக்கப்படுகிறார்கள். கணவரிடம் இருந்து இவர்களுக்கு மனோரீதியான பங்களிப்போ, உடல்ரீதியான பங்களிப்போ கிடைப்பதில்லை. கிடைத்தாலும், அது பெயரளவுக்கே கிடைக்கிறது. அதில் அவர்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை.

இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் இன்டர்நெட்டில் மூழ்கி, தனிப்பட்ட வாழ்க்கையை தொலைக்கும் திருமணமான ஆண்களை பற்றிய முழுமையான புரிதல் அவர்களது குடும்பத்தினருக்கோ, சமூகத்திற்கோ இல்லை. தனது கணவர் குடிப்பழக்கம் கொண்டவர் என்று ஒரு பெண் சொன்னால், அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை சமூகம் புரிந்திருக்கிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். தன் கணவர் இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடக்கிறார் என்று அவள் தனது மாமனார்- மாமியாரிடம் சொன்னால் `அவன் வீட்டில்தானே இருக்கிறான். வெளியே எங்கேயாவது சென்றால்தானே எங்களால் தட்டிக்கேட்க முடியும். இதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாதே' என்று கூறிவிடுகிறார்கள். பிரச்சினையின் ஆழத்தை புரியாமல் பெரியவர்களே மேம்போக்காக நடந்துகொள்வது பெண்களுக்கு கூடுதல் கவலையளிக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த விவாகரத்துகளை கணக்கிட்டால், அவற்றில் 30 சதவீதத்திற்கு இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடப்பது காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது வழக்குதொடுத்த பெண்களின் எண்ணிக்கை மட்டுமே. சகித்துக்கொண்டு கணவரின் வீட்டிலேயே தனிமரமாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் சதவீத கணக்கு மளமளவென உயர்ந்துவிடும்.

அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகளிடம் சில நிமிடங்கள்கூட பேச தயங்கும் இன்றைய ஆண்களில் பலர் மணிக்கணக்கில் இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயமாகும். பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யவே பரபரத்துக் கொண்டிருக்கும் அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

இன்றைய நடுத்தர வயதுக்காரர்களின் இரவு உலகம் வித்தியாசமானதாக இருக்கிறது. பழைய பள்ளி, கல்லூரித் தோழமையோ- பஸ், ரெயிலில் கிடைக்கும் தோழமையோ சமூகவலைத்தளங்கள் வழியாக பலரது இரவு நேரத்தை அபகரித்துக்கொள்கிறது. அதில் சிக்கிக்கொள்ளும் ஆண்கள் அருகில் இருக்கும் தனது மனைவியின் தனிமையையோ, ஏக்கத்தையோ, எதிர்பார்ப்புகளையோ நினைத்துப்பார்ப்பதே இல்லை. அடுத்தவர்களோடு ஆன்லைன் இரவு உலகத்தில் வலம் வருகிறவர்களால் திருமணத்திற்கு பிந்தைய முரண்பாடான உறவுகள் தோன்றிவிடுகின்றன.

போட்டோ வழியாக ஒரு லைக்கிலும், கமெண்ட்டிலும் உருவாகும் பந்தங்கள் மெல்ல மெல்ல போன் தொடர்புகளுக்கும், போன் செக்ஸூக்கும் துணைபுரிகின்றன. தடம்மாறிச்செல்லும் இத்தகைய ஆண்களை சகித்துக்கொண்டு பிள்ளைகளுக்காகவும், சமூகத்திற்காகவும் பல பெண்கள் பொருந்திப்போய்க் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் நான்கு சுவர்களுக்குள் கண்ணீரோடு தனித்தீவில் இருப்பதுபோல் ஏராளமான சைபர் விதவைகள் வாழ்ந்து வருகிறார்கள்.

சைபர் விதவையாக வாழ்ந்துவரும் மும்பையை சேர்ந்த ஒரு பெண் தனது சோக கதையை சொல்கிறார்:

‘‘எங்களுக்கு திருமணம் நடந்து 15 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. எங்கள் இரண்டு பிள்ளைகளும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். என் கணவர் சுயதொழில் செய்துவருகிறார். அவர் தொழிலில் பரபரப்பாக இருந்தாலும் வீட்டிற்கு வந்த பின்பு போன் அழைப்புகளை கண்டுகொள்ளமாட்டார். பிள்ளைகளோடும், என்னோடும் பேசிக்கொண்டிருப்பார். நாங்கள் அனைவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிடுவோம்.

அவரது அலுவலகத்திலும், வீட்டிலும் கம்ப்யூட்டரும் நெட் கனெக்‌ஷனும் உண்டு. வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை அவரும், பிள்ளைகளும் பயன்படுத்துவார்கள். எனக்கு அதில் ஆர்வம் கிடையாது. குழந்தைகளுக்கும் பயன்படும் என்று கூறிக்கொண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு லேப்டாப் ஒன்றை வாங்கினார். ஆனால் அதன் அருகில்கூட குழந்தைகளை விடுவதில்லை. எப்போதும் அதை அவரது அறைக்குள் வைத்துக்கொள்வார்.

அன்று இரவு அவர் லேப்டாப்புடன் இருந்த அறைக்குள் நான் திடீரென்று சென்றுவிட்டேன். அங்கு நான் பார்த்த காட்சி என்னை அதிரவைத்துவிட்டது. அவர் ஹெட்செட் மாட்டியிருந்தார். மைக்ரோபோனில் மிக மெல்லிய குரலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். வீடியோ சாட்டிங்கில் இருக்கிறார் என்பது தெரிந்தது. ஸ்கிரீனில் ஒரு பெண் நிர்வாணமாக நின்றிருந்தாள். அவர்கள் இருவரும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டு ஏதேதோ செய்துகொண்டிருந்தார்கள்.

நான் பின்னால் நிற்பதை பார்த்ததும் அவர் திடுக்கிட்டு, லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு உடலை துணியால் போர்த்திக்கொண்டு குதித்து எழுந்தார். நடந்ததை எல்லாம் நினைத்துப்பார்த்தபோது இந்த உலகமே நொறுங்கி என் தலையில் விழுவதுபோல் இருந்தது. அப்படியே அந்த லேப்டாப்பை தூக்கிப்போட்டு உடைத்துவிடலாம் என்று நினைத்து அதை தூக்கினேன். ஆனாலும் சத்தம்கேட்டு குழந்தைகள் வந்துவிடுவார்கள் என பயந்து, அதனை படுக்கையிலே போட்டுவிட்டு தலையில் அடித்துக்கொண்டு அழுதேன்.

நான் பார்த்த காட்சி அனைத்தையும் என் குடும்பத்தாரிடமும், மாமனார்- மாமியாரிடமும் விளக்கிசொன்னேன். ஆனால் அவரோ என்னை குறைகூறி, பிரச்சினையை திசைதிருப்புகிறார். அதாவது நான் சந்தேக புத்திகொண்டவள் என்றும், அவர் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு நடிகையின் போட்டோ என்றும் கூறி எல் லோரையும் நம்பவைத்துக்கொண்டிருக்கிறார்’’ என்று அழுகிறாள், அந்த பெண்.

குடும்பத்தைலைவிகள் சைபர் விதவைகளாக உருவாகுவதை தவிர்க்கவேண்டும் என்றால், அவர்களது கணவர்கள் சைபர் அடிமையாகிவிடாத அளவுக்கு கவனித்துக்கொள்ள வேண்டும். சைபர் அடிமைகளை கண்டறிவது எப்படி தெரியுமா?

அலுவல் காரணம் எதுவும் இன்றி சமூக வலைத்தளங்களிலோ, சாட் ரூமிலோ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரத்தை செலவிட்டால் அவரை கண்காணியுங்கள். அதிக நேரத்தை அதில் செலவிட்டால் அது தாம்பத்ய வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். சாட்டிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் இரவில் வெகுநேரம் நெட்டை பயன்படுத்துவார்கள். அவர்கள் பயன்படுத்தும் லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவைகளை தனி இடத்தில்வைத்து தான் மட்டுமே பயன்படுத்துவேன் என்று அடம்பிடிப்பார்கள். தான் செய்வது தவறு என்பது அவருக்கே புரியும் என்பதால் எப்போதும் ஒருவித பயம், பதற்றத்துடன் காணப்படுவார்கள்.

`நான் மற்றவர்கள் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. பிறருடைய செல்போனையோ, கம்ப்யூட்டரையோ நான் திறந்து பார்ப்பதில்லை. அதுபோல் நீங்களும் என் விஷயத்தில் தலையிடக்கூடாது. என்னை சுதந்திரமாக விடவேண்டும்' என்று அவ்வப்போது மறைமுகமாகவோ, நேரடியாகவோ உணர்த்திக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடம் ஒரு டிடெக்டிவ் போன்று நடந்துகொள்ளாமல், `நாம் இருவரும் கணவன்- மனைவி. நமக்குள் பெரிய அளவில் ரகசியங்கள் இருக்கக்கூடாது' என்று கூறி பக்குவமாக அணுகி, அவர்கள் மனதில் இருப்பதை எல்லாம் மனைவி அறிந்துகொள்ளவேண்டும்.

கணவர் தொடர்ந்து பொய் பேசினால் அவர்மீது கவனம் செலுத்துங்கள். சொல்வது சிறிய பொய்யாக இருந்தாலும், அதை சொல்ல என்ன காரணம் என்று கேட்டு மனம்விட்டுப் பேசுங்கள். சைபர் அடிமைகளால் தாம்பத்ய தொடர்பில் உற்சாகம் காட்டமுடியாது. அலுவலக வேலை, உடல்நிலை சரியில்லை என்றுகூறி மனைவியுடன் தாம்பத்ய தொடர்பை தவிர்க்க முயற்சிப்பார்கள். அவர்கள் தூங்கும் நேரம் மாறும். இரவில் வெகுநேரம் விழித்திருந்துவிட்டு, மிக தாமதமாக எழுவார்கள். வேலை மற்றும் அவர்கள் செய்யும் தொழிலிலும் கவனம் குறையும். இதனால் அவர்களது திறமை மங்கும்.

இதுபோன்ற செயல்பாடுகளும், மனோரீதியான தடுமாற்றங்களும் உங்கள் கணவரிடம் இருந்தால், உடனே அவரை சைபர் அடிமை என்று முத்திரைகுத்திவிட வேண்டாம். அவரது செயல்பாடுகளை ஆராயுங்கள். அவரிடம் மனம்விட்டுப்பேசுங்கள். அன்பாலும், நடத்தையாலும் அவரை உங்கள் பக்கம் ஈர்த்திடுங்கள். இதற்கு மனநல நிபுணர்களின் ஆலோசனையும் கைகொடுக்கும்.

 

https://www.maalaimalar.com/health/womensafety/2021/04/27115510/2579144/illegal-affair.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு உதவ ஒரு அமைப்பு உருவாக்கினால் என்ன, நான் அடிமட்ட தொண்டனாக என்றென்றும் சேவை செய்வேன் என உறுதி மொழி தருகின்றேன்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, உடையார் said:

இவர்களுக்கு உதவ ஒரு அமைப்பு உருவாக்கினால் என்ன, நான் அடிமட்ட தொண்டனாக என்றென்றும் சேவை செய்வேன் என உறுதி மொழி தருகின்றேன்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

31936573_1258418744260975_6387875593433645056_n.jpg?_nc_cat=101&ccb=1-3&_nc_sid=8bfeb9&_nc_ohc=5IYE3Zxow_YAX-8oiiu&_nc_oc=AQlGdbRQ3JvZx_zi847IqbHxi2b1iQ3QqZd_bsa6PheSta6VWnphqZRyWkLqE0aSFU-YJ5K_jcaMHFVV4rPO0obC&_nc_ht=scontent-ham3-1.xx&oh=6c318e91df3c21861f3f286cfb52eb08&oe=60AE8259

  • கருத்துக்கள உறவுகள்

“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை”

என்று பொய்யாமொழி இதற்கான தீர்வினை அன்றே சொல்லிவிட்டார்.அன்பாக,ஆதரவாக,பண்பாக,

பாலியலாக பாட்னரை பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுப்பைச்சுற்றும் பூனைபோல் இடுப்பைச்சுற்றிக் கிடப்பாரே.

இது என்ன புதுசாய் ஒரு பிரச்சனை.உண்மையில் குழந்தைகள்தான் இன்டர்நெட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் பெற்றோர்களுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

எனது யூத டாக்டர் அவரது கிளினிக், ஒரு ஆங்கில கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளதாகவும், தமிழர் நலனுக்காக, என்னை தமிழில் மொழிபெயர்த்து தருமாறு கோரினார். விசயம் பாலியல் சமபந்தமானது, மிகவும் சங்கடமாக இருந்ததால் இன்னும் செய்யவில்லை.

அதில் ஒரு விடயம்: உடலுறவு, இயற்கையாக இருந்தால் மட்டுமே மன உறவும் சிறப்பாக இருக்கும். வர்த்தக ரீதியில், வேண்டும் என்றே உருவாகும், நீலப்படங்களை பார்த்து, அது போல நடக்க வேண்டும் என்றால், பல பிரச்சனைகள் வரும். முடிவில், குற்ற உணர்வினால், மன உறவு, முறியும். அதன் காரணமாக சாதாரண பாலியல் வாழ்வும் பாழாகும். இதுவே மேலுள்ளகட்டுரை சொல்வதன், எதிர் நிலை. (மேலை நாடுகளில் ஆய்ந்து கண்டுள்ளார்கள்)

அதாவது, தமிழர் உள்பட்ட, பலர், பிரச்னைகளுடன் டாக்டரிடம் போகின்றனர். 

மேலும்.... வேண்டாம்... விடுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

எனது யூத டாக்டர் அவரது கிளினிக், ஒரு ஆங்கில கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளதாகவும், தமிழர் நலனுக்காக, என்னை தமிழில் மொழிபெயர்த்து தருமாறு கோரினார். விசயம் பாலியல் சமபந்தமானது, மிகவும் சங்கடமாக இருந்ததால் இன்னும் செய்யவில்லை.

அதில் ஒரு விடயம்: உடலுறவு, இயற்கையாக இருந்தால் மட்டுமே மன உறவும் சிறப்பாக இருக்கும். வர்த்தக ரீதியில், வேண்டும் என்றே உருவாகும், நீலப்படங்களை பார்த்து, அது போல நடக்க வேண்டும் என்றால், பல பிரச்சனைகள் வரும். முடிவில், குற்ற உணர்வினால், மன உறவு, முறியும். அதன் காரணமாக சாதாரண பாலியல் வாழ்வும் பாழாகும். இதுவே மேலுள்ளகட்டுரை சொல்வதன், எதிர் நிலை. (மேலை நாடுகளில் ஆய்ந்து கண்டுள்ளார்கள்)

அதாவது, தமிழர் உள்பட்ட, பலர், பிரச்னைகளுடன் டாக்டரிடம் போகின்றனர். 

மேலும்.... வேண்டாம்... விடுவோம். 

பிரச்சனையே அது தானே.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இவர்களுக்கு உதவ ஒரு அமைப்பு உருவாக்கினால் என்ன, நான் அடிமட்ட தொண்டனாக என்றென்றும் சேவை செய்வேன் என உறுதி மொழி தருகின்றேன்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

அய்யா, இன்னோரு விசயமுங்கோ.... வெளியே சொல்லாமல் குமுறும், ஆம்பிளையளும் இருக்கிறாங்கோ. 

அவர்களுக்கும், உதவிகள் தேவையுங்கோ  😁

1 hour ago, உடையார் said:

இவர்களுக்கு உதவ ஒரு அமைப்பு உருவாக்கினால் என்ன, நான் அடிமட்ட தொண்டனாக என்றென்றும் சேவை செய்வேன் என உறுதி மொழி தருகின்றேன்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

சங்கத்தின் கனடா நாட்டுச் செயலாளராக 24 மணி நேரமும் பணியாற்று என்னால் உங்களுக்கு உதவ முடியும்.

1 minute ago, Nathamuni said:

அய்யா, இன்னோரு விசயமுங்கோ.... வெளியே சொல்லாமல் குமுறும், ஆம்பிளையளும் இருக்கிறாங்கோ. 

அவர்களுக்கும், உதவிகள் தேவையுங்கோ  😁

துலைஞ்சுது... நான் இக்கணமே கனடா நாட்டு செயலாளர் பதவியை ராஜீனமா செய்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சங்கத்தின் கனடா நாட்டுச் செயலாளராக 24 மணி நேரமும் பணியாற்று என்னால் உங்களுக்கு உதவ முடியும்.

 

பழுத்த என்னை போல அனுபவமிக்கவர்கள் அந்த பதவிக்கு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து. 

9 minutes ago, Sasi_varnam said:

பழுத்த என்னை போல அனுபவமிக்கவர்கள் அந்த பதவிக்கு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து. 

மேலே நாதம் குறிப்பிட்ட துணைத் துறையிலும் பழுத்த அனுபவம் இருக்க வேண்டுமாம்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

பிள்ளைகளிடம் சில நிமிடங்கள்கூட பேச தயங்கும் இன்றைய ஆண்களில் பலர் மணிக்கணக்கில் இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடக்கிறார்கள்

எங்கள் இரண்டு பிள்ளைகளும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 

கணவர் உண்டு.. ஆனால்.. தாம்பத்யம் இல்லை.. எப்படிப் பிள்ளைகள்.....????????????????? 🤔

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகவே 35 வயதுக்கும் 50 வயதுக்கும் இடையில் 
UP and DOWN        இருப்பது இயற்கையே. இதுக்கு பல புற நிலை காரணிகளும் 
எங்கள் உடலின் உள்ளக மாற்றங்களும்தான் முக்கிய காரணம். 

உடல்பயிற்சி என்பதை ஒழுங்காக செய்துவந்தால் 
பல பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். 

உடல்பயிற்சி இதுக்கெல்லாம் தீர்வாகுமா? என்று சிலர் எண்ணலாம் 
உடல் பயிற்சி என்பது வெறுமனே உடல்  மட்டும் திடகாத்திரம் ஆக்குவது இல்லை 
சீரான இரத்த ஓட்டம் மூலம் உங்கள் மூளையையும் சரியான நிலையில் வைத்திருக்கும் 
அதனால் உங்கள் எல்லா செயலிலும் சற்று வேகம் இருப்பதையும் 
சோம்பேறித்தனத்தில் வெறுப்பு வருவதையும் உணர முடியும். 

எண்ணம் சிந்தனை எல்லாம் ஆக்கபூர்வனதாக இருக்கும் 
நித்திரை தவிர்த்து மற்ற நேரங்களை வீணாக வீணடிப்பதில் 
அதிக இஷடம் இருக்காது .. இது தானாகவே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Paanch said:

கணவர் உண்டு.. ஆனால்.. தாம்பத்யம் இல்லை.. எப்படிப் பிள்ளைகள்.....????????????????? 🤔

பிள்ளையை பெத்தா கண்ணீரு 
தென்னையை வைத்தால் இளநீரு 
என்று நீங்கள் பாடல்  கேட்பதில்லையா?

வாழ்க்கை என்பது மிக எளிதான ஒன்று 
அடிப்படை வாழ்வுக்கு தேவையான அனைத்தும் எம்மிடம் 
தேவைக்கு அதிகமாக இருக்கிறது .....இருந்தாலும் 
பணத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம் 
கற்பனை மகிழ்ச்சிகளை நம்பி ... வீட்டில் கிடைக்க கூடிய 
சாதாரண மகிழ்ச்சியையும் தொலைத்து நிற்கிறோம். 

(உண்மையான) சாமியாராக போகிறவன் எல்லாவற்றையும் துறந்து போவதில்லை 
எல்லாவற்றையும் கடந்து போகிறான். அவனுடைய தேடல் உணர்தல் எல்லாம் 
சாதாரணமானவர்களின் தேடலை உணர்தலை கடந்து இருக்கும் ... சாதாரண மனிதர்களின் 
தேடலில் உணர்தலில் உண்மை இல்லாமையே அதன் முக்கிய காரணம். 
நாம் ஒரு பெரும் திரள் மக்கள் கூட்டத்தை பின் தொடர்ந்து ஓடுவதால் 
நாம் சரியான பாதையில் ஓடுகிறோம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம் 
இது சரியான பாதைதானா? என்ற கேள்விகள் கூட நாம் கேட்பதில்லை 

2020 ஆம் ஆண்டில் நேர்த்தியாக வாழ்ந்தவன் 
மிக கூடிய எதிர்பார்புடனேயே 2021இல் கால் வைக்கிறான் 
படுத்து கிடந்தவன் இன்னம்மும் சோம்பேறி ஆகிறான் 

நீங்கள் இனறைய நாளில் முழுமையாக வாழ்ந்துகொண்டு இருந்தால் 
வெளியில் மழை குளிர் வெயில் புயல் எது நடந்துகொண்டு இருந்தாலும் 
அதை ரசித்துக்கொண்டே இருப்பீர்கள். இன்றைய நிகழ்வுகளில் நிர்ச்சயமாக 
ஒரு மாறுதல் இருக்கும் அதை நீங்கள் உணர்ந்துகொண்டு இருப்பீர்கள் 
இன்றைய நாள் கடக்கும்போது .. அதை மகிழ்ச்சியாகவே கடப்பீர்கள் 
நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்ந்து இருப்பீர்கள். உங்களிடம் மகிழ் நிலை 
என்பது  எப்போதும் தங்கு நிலையில் இருப்பதால் உங்களை சுற்றி இருக்கும் 
மனைவி பிள்ளைகள் நண்பர்கள் ஒன்றாக வேலை செய்பவர்கள் என்று எல்லாருடனும் 
அதை பகிர்ந்து கொண்டு இருப்பீர்கள். உங்களிடம் இருப்பதையே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும் .
நீங்களே ஐயோ வெளியில் குளிர் ... மழை .. என்று சலிப்புடன் இருந்தால் அந்த சலிப்பையே 
உங்கள் மனைவியுடனும் பகிர்ந்து கொள்வீர்கள். 

திரிக்கு தேவை என்பதால் ...
காஜலிசத்தை பற்றி எழுத வேண்டியதாயிற்று 
கடவுளை காணுதல் அல்லது பேரின்பம் காணுதல் 
என்பதை சிற்றின்பம் மனிதர்களை கடந்தவனால் மட்டுமே காணமுடியும் 
கடப்பது என்றால் நீங்கள் அதில் வாழ்ந்து இருப்பீர்கள் .. ஒவ்வாரு வினாடியும் அதில் 
வாழ்ந்து இருப்பீர்கள். அதை துறப்பவனால் அடுத்த நிலைக்கு போக முடியாது 

நீங்கள் பேரின்பம் எனப்படும் தெய்வீக நிலையை காணவேண்டும் என்றால் 
காஜலிசத்தின் கதவுகளை திறந்தே ஆகவேண்டும். காஜலிசத்தின் முடிவின் கதவுகளை திறப்பது 
என்றால் அதற்குள்ளால் நீங்கள் பயணித்து இருக்கவேண்டும் ... காஜலிசத்தில் ஒவொரு நொடியும் 
வாழ்ந்தவனால்தான் அதன் கதவுகளை திறந்து அடுத்த நிலையான கடவுளை காணமுடியும்.

"கடவுள்"  கட + உள்  

Image

  • கருத்துக்கள உறவுகள்

காஜலிசத்துக்குள் சென்றவன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறான் 
பேரின்பம் நோக்கி பயணிக்கிறான் ... ஆதலால் சிற்றின்பம் என்பதை முழுமையாக 
காண்கிறான் .. அதில் முழுமை அடைந்து அடுத்த நிலை நோக்கி நகர்ந்துகொண்டு 
இருக்கிறான்.

மற்ற மூடர்கள் போலியான பணம் போதை அந்தஸ்து கவுரவம் என்று 
மூழ்கி பிறருக்கு தம்மை சோடித்து காட்டிக்கொண்டு இருப்பதிலேயே 
வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். நீங்கள் பெர்லினில் இருந்து பிராங்போர்ட் 
போவது என்றால் .... ஒரு லட்ஷம் ஈரோ பி எம் டபுள்யூ விழும் போகலாம் 
20 ஆயிரம் டோயடடவிலும் போகலாம் .......... வெறும் 50 ஈரோ டிக்கெட் வாங்கி 
ரயிலிலும் போகலாம் ...... எந்த பயணம் உங்களுக்கு காயம் இன்றி மகிழ்வை 
தருகிறது? ஒரு ரசனையான பயணமாக இருக்க போகிறது? என்ற கேள்வி இருப்பவனே 
சரியான பதிலை தேடுகிறான் ... சரியான வாகனத்தில் பயணிக்கிறான் 
மற்றவர்கள் ஓடும் கூட்டத்தை பின்தொடர்கிறார்கள் ... எந்த ரசனையும் அற்று 
மியூசியத்தில் ஒரு கூட்டம் நிற்கிறது என்பதால் யாருக்கும் புரியாத ஒரு கிறுக்கு ஓவியத்தை 
பார்த்து போலியாக ஆகா ஓகோ என்கிறார்கள் .. அதை படம் பிடித்து பேஸ்புக்கில் போடுகிறார்கள் 
வீடு திரும்பும்போது மனசாட்ச்சி உறுத்துகிறது ... அதில் என்ன வெறும் கோடுதானே இருக்கிறது என்று கேள்வி வருகிறது .... இதுவே பின் வெறுப்பு விரக்தியாகிறது .. அது மனைவி பிள்ளைகளில் எதிர்பாலிக்கிறது 
அப்போ குடும்பத்தில் எங்கு மகிழிச்சிவரும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

மேலே நாதம் குறிப்பிட்ட துணைத் துறையிலும் பழுத்த அனுபவம் இருக்க வேண்டுமாம்...

அனைத்து துறையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் இங்கேய பெற்றுக்கொள்ளலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Maruthankerny said:

"கடவுள்"  கட + உள்  

Image

என்ன இவர் போற வாற இடமெல்லாம் இந்த பெட்டையை தூக்கிக்கொண்டு திரியுறார்? 😷

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

என்ன இவர் போற வாற இடமெல்லாம் இந்த பெட்டையை தூக்கிக்கொண்டு திரியுறார்? 😷

காஜலிசம் என்பது வெறும் பெட்டையல்ல 
அது ஒரு வாழ்க்கை தத்துவம் 

சிவன்+ சக்தி 
என்பது இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் 
சிவனும் சக்தியும் இல்லையென்றால் இங்கே அணுவும் அசையாது 
அதை வணங்குபவர்களுக்கு ஒரு வடிவத்தை கொடுக்க இவ்வாறு 
ஒன்றை வரைந்தார்களே தவிர ... சிவனுக்கும் சக்திக்கும் உருவம் இல்லை 

Siva Sakthi | Shiva parvati images, Lord shiva, Shiva
அதுபோல காஜலிசம் என்பதை இலகுவாக விளங்கி கொள்ள 
இவருடைய உருவம் கொடுக்கப்படுகிறதே தவிர 
உண்மையான காஜலிசம் என்பது ஒரு நிர்வாண நிலை 
மெய்நிலையில் படங்களை இங்கு இணைக்கமுடியாது என்பதால் 
ஆடைகளுடனான ஒரு மாய தோற்றத்தை இலகுவாக விளங்கிக்கொள்ள 
இணைத்து இருக்கிறேன் 

Image

  • கருத்துக்கள உறவுகள்

நாடி பிடித்து பார்த்து இவர்களுக்கு சரியான தீர்வை என்னால் வழங்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

நாடி பிடித்து பார்த்து இவர்களுக்கு சரியான தீர்வை என்னால் வழங்க முடியும்


என்னையும் அஸிஸிடெண்டா சேர்த்துக்கொள்ளுங்கோ ...
சும்மா தான் இருக்கிறேன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Maruthankerny said:


என்னையும் அஸிஸிடெண்டா சேர்த்துக்கொள்ளுங்கோ ...
சும்மா தான் இருக்கிறேன் 

அவனவன் படிச்சு பட்டங்கள் எடுத்து பென்னாம் பெரிய ஜொப்பிலை இருந்து.....டெய்லி ஜிம்முக்கு போய் தேக்குமர உடம்போடை இருந்தும் லேடீஸ்...லேடீஸ் எண்டு தவண்டடிக்கிறான்கள்.

இவர் சோபாவிலை குந்தியிருந்து மன்மதபாணம் வீசுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

நாடி பிடித்து பார்த்து இவர்களுக்கு சரியான தீர்வை என்னால் வழங்க முடியும்

 

7 hours ago, Maruthankerny said:


என்னையும் அஸிஸிடெண்டா சேர்த்துக்கொள்ளுங்கோ ...
சும்மா தான் இருக்கிறேன் 

முதல் யாருடைய நாடியை பிடித்துப்பார்க்கப்போகிறாரெனக் கேளுங்கள்?  உங்கள நாடியைத் தான் பிடித்துப் பார்பாரகின்  எப்படி நீங்கள் அஸிஸிடெண்டாக சேரமுடியும்?😜😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இவர் சோபாவிலை குந்தியிருந்து மன்மதபாணம் வீசுகின்றார்

 

7 hours ago, Maruthankerny said:


என்னையும் அஸிஸிடெண்டா சேர்த்துக்கொள்ளுங்கோ ...
சும்மா தான் இருக்கிறேன் 

சும்மா இருக்கிற நேரம் வீசிப்பார்க்கட்டும்  சிலசமயம் அகப்படலாம் ஏன் நீங்கள் எரிச்சல் அடைகிறீரகள்?😎😎

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2021 at 11:20, colomban said:

நாடி பிடித்து பார்த்து இவர்களுக்கு சரியான தீர்வை என்னால் வழங்க முடியும்

நாடி  தேடியயே இளைச்சு போவியள் 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே என் தம்பிகள் ஒருவரையும் காணவில்லை என்று பார்த்தால் எல்லோரும் இங்கே வரிசையில் நிற்கிறார்கள்.

அண்ணன் பெயரை காப்பாற்றுங்கள் ராசாக்கள் 

சமாளிக்க முடியாமல் இருந்தால் அண்ணன் பெயர் தானே உங்களுக்கு முதலில் ஞாபகம் வரும் 😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.