Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின்.... முன்னாள் உறுப்பினர்கள் உட்பட, 93 கைதிகள் விடுதலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

LTTE இன் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட 93 கைதிகள் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின்.... முன்னாள் உறுப்பினர்கள் உட்பட, 93 கைதிகள் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரைத் தவிர்த்து சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்திருந்தார்.

அதன்படி, விடுதலை செய்யக்கூடிய 17 சந்தேகநபர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

பொசன் பூரணையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1224588

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது – சிசிர ஜயக்கொடி!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது – சிசிர ஜயக்கொடி!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நாகவிகாரையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘வடக்கிலுள்ள இளைஞர்கள் பலர் சிறைகளில் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் இதனை மேற்கொள்ளும் போதே இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1224638

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருடமும், கள்ளரும், காடைகளும் ஜனாதிபதியால் விடுதலை செய்யப் படும் போதும், எமது போராளிகள் விடுதலை செய்யப் படா மாட்டார்களா என்னும் ஆதங்கம் எழுவதுண்டு!

இப்போது சிலராவது விடுதலை செய்யப் படுவது கண்டு மிக்க மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் கணனி திறந்ததும் கண்ணையும் மனதையும் கவர்ந்த செய்தி......அவர்களின் வாழ்வு சிறக்கட்டும்........! 💐  🙏

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்சி.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இனியாவது நிம்மதியாக தங்கள் வாழ்வை அமைதியாக ஆரம்பிக்கட்டும். இதே போல் இந்திய சிறையில் உண்மைகள் மறைக்கப்பட்டு,  தங்கள் கனவை, இளமையை தொலைத்துவிட்டு நோயாளிகளாக வாழும் உறவுகளும் விடுதலை செய்யப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தோசமான செய்தி. அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலையாகி வர வேண்டுகின்றேன். 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வருக என் இனத்தின் உண்மையான பிரதிநிதிகளே.

நீங்கள் சிறைக்கு சென்றபோது இருந்த உலகம் வேறு.சிறையிலிருந்து மீளும்போது இருக்கும் உலகம் வேறு.

அன்று கொள்கைக்காக உயிரை பணயம் வைத்து போராடி உள்ளே போன உங்களை சிறையிலிருந்து மீளும்போது கும்பல் கும்பலாக மோட்டார் சைக்கிள்களில் சுற்றியபடியும் கூல்பார்களில் கூட்டம் கூடமாக அலைமோதும் எம்மவர்களில் பலர் கண்டு கொள்ளமாட்டார்கள்.

சிங்களவன் ஒதுக்கிறான் என்று போராடி உள்ளே போன உங்களை வெளியே வரும்போது புலனாய்வுதுறைக்கு பயத்தில் தமிழர்களே ஒதுக்குவார்கள் அந்த மன அழுத்தம் சிறையில் இருந்தபோது ஏற்பட்டதைவிட கொடுமையானதாயிருக்கும்.

விடுதலையான போராளிகள் திருமணமாகாதவர்களாயின் அவர்களின் உறவினர்கள் உடனடியாக அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களுக்கு ஒரு புது வாழ்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இல்லையெனில் எல்லாவற்றையும் கைவிட்டு போராட போனவர்கள், திரும்பி வரும்போது எல்லாமே அவர்களை கைவிட்டதயெண்ணி மனம் புழுங்கி போவார்கள் மனசுக்குள் காலம் முழுவதும் அழுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையானோர் விபரம் (உறுதிபடுத்தபடாத செய்தி).

நடராஜா சரவணபவன்
புருஷோத்தமன் அரவிந்தன்
இராசபல்லவன் தபோரூபன்
இராசதுரை ஜெகன்
நளன் சிவலிங்கம்
சூரியமூர்த்தி ஜீவோகன்
சிவப்பிரகாசன் சிவசீலன்
மயில்வாகனம் மாடன்
சூர்யகுமார் ஜெயச்சந்திரன்
சைமன் சந்தியாகு
ராகவன் சுரேஸ்
சிறில் இராசமணி
எம்.எம். அப்துல் சலீம்
சந்தன் ஸ்ராலின் ரமேஸ்
கபிரியேல் எட்வேட் யூலியன்
விஸ்வநாதன் ரமேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றிய தீர்மானமே தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு காரணம் – மனோ

 
mano-ganesan-1-696x387.jpg
 27 Views

சில தினங்களுக்கு முன் வந்த ஐரோப்பிய ஒன்றிய GSP+ தொடர்பான தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையர் கூறிய கருத்து மற்றும் செப்டம்பரில் ஆணையர் வெளியிட உள்ள இலங்கை பற்றிய “வாய்மொழி அறிக்கை” ஆகியவைதான், ராஜபக்ச அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நீண்டகாலம்” சிறையில் இருக்கும், தமிழ் கைதிகள் விடுதலை பற்றி நேற்று முதல் நாள் அமைச்சர் நாமல் சபையில் விசேட அறிவிப்பு செய்தார்.

கடத்த சில வாரங்களுக்கு முன், எம்பீக்கள் சார்ள்ஸ், ஸ்ரீதரன் ஆகியோர் முன்னெடுப்பில், தமிழ் எம்பீக்கள் கட்சி பேதமின்றி, வெளி விவகார அமைச்சர் தினேஷை சந்தித்தோம். அதன் தொடர்ச்சியே இது என நேற்று அமைச்சர் தினேஷ் என்னிடம் கூறினார்.

இவை நல்ல நிகழ்வுகளே..!

சில தினங்களுக்கு முன் வந்த ஐரோப்பிய ஒன்றிய GSP+ தொடர்பான தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையர் கூறிய கருத்து மற்றும் செப்டம்பரில் ஆணையர் வெளியிட உள்ள இலங்கை பற்றிய “வாய்மொழி அறிக்கை” ஆகியவைதான், ராஜபக்ச அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம்.

ஆனால் இவற்றை சொல்லி நாம் இன்று “காரசாரமான அரசியல்” செய்ய தேவையில்லை.

அதேபோல், சமூக ஊடகங்களில் “அரசுக்கு எதிராக எழுதினார்கள்” என சமீப சில மாதங்களாக பயங்கரவாத தடை சட்டம் மூலம், கைதாகும் நபர்கள் பற்றியும் பேச வேண்டும்.

நீதி அமைச்சர் பக்கத்தில் இருக்கும்போது, அமைச்சர் நாமல் எதற்கு இதைப்பற்றி பேச வேண்டும் என்பதும் ஒரு கேள்வி.

ஆனால் இவற்றை எல்லாம் காரணங்களாக கூறி, பல்லாண்டுகளாக சிறையில் வாடும் “நீண்டகால” கைதிகளின் விடுதலையை குழப்பி விடக்கூடாது.

எமது நல்லாட்சியின் போது, 2015க்கும், 2019க்கும் இடையில் சுமார் 100 தமிழ் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டார்கள்.

இதை நமது அரசு சத்தமில்லாமல் செய்தது. அதேபோல் இதையும் சத்தமில்லாமல் செய்ய வேண்டும்.

ஏறக்குறைய தமது இளமைக்காலம் முழுவதையும் சிறைகளில் கழித்து விட்ட இந்த “மனிதர்கள்” படிப்படியாக விடுவிக்கப்பட கூடிய சூழலை பொறுப்புடன். பொறுமையாக ஏற்படுத்துவோம்.

அதேபோல் தொடர்ந்தும் எமது அழுத்தங்களை கவனமாக முன்னெடுப்போம்.

 

https://www.ilakku.org/?p=53227

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகள் மற்றும் சந்தேகத்தின்பேரில் சிறைவைக்கப்பட்ட தமிழர்களின் விடுதலைக்கு உரிமைகோர எமது அரசியல் கட்சிகள் இப்போது வரிசையில் நிற்பார்கள். தமிழருக்கு ஒரு சிறு நன்மையாவது கிடைக்கும்போது அதற்கு பின்னணியில் பலமடங்கு நன்மைகள் சிங்களவனுக்கு கிடத்ததுதான் இதுவரை சரித்திரம். பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vanangaamudi said:

முன்னாள் போராளிகள் மற்றும் சந்தேகத்தின்பேரில் சிறைவைக்கப்பட்ட தமிழர்களின் விடுதலைக்கு உரிமைகோர எமது அரசியல் கட்சிகள் இப்போது வரிசையில் நிற்பார்கள். தமிழருக்கு ஒரு சிறு நன்மையாவது கிடைக்கும்போது அதற்கு பின்னணியில் பலமடங்கு நன்மைகள் சிங்களவனுக்கு கிடத்ததுதான் இதுவரை சரித்திரம். பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் அரசியல்வாதிகளை சிறையில் போட வேண்டும். ஓடிவந்து அறிக்கை விடும் எவரும் கைதிகளுக்கு ஒரு உதவியும் செய்ததில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ்அரசியல்வாதி முந்தி கொண்டு வந்துவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு தமிழ்அரசியல்வாதி முந்தி கொண்டு வந்துவிட்டார்

இன்னும் வருவார்கள். உதவுகிறோம் என்று சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்து படமும் காட்டுவார்கள். அந்தப் படங்களைப் பார்த்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உதவிகளுக்கு கட்டை போடுவினம் பாருங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, shanthy said:

தமிழ் அரசியல்வாதிகளை சிறையில் போட வேண்டும். ஓடிவந்து அறிக்கை விடும் எவரும் கைதிகளுக்கு ஒரு உதவியும் செய்ததில்லை. 

எனக்கு பார்க்க விடுவிக்கப்பட்டவர்களில் 16 பேர்தான் தமிழ் அதில் ஒருத்தர் முஸ்லீம் மிகுதி அனைவரும் சிங்களவர் நம்ம அரசியல்வாதிகள் ஓவரா கூவிபோயிட்டினம் போல் உள்ளது .

safe_image.php?d=AQFaCHivHSgM73f8&w=800&h=450&url=http%3A%2F%2Fwww.dailynews.lk%2Fsites%2Fdefault%2Ffiles%2Fnews%2F2021%2F06%2F24%2Fpresidentil-pardon.jpg&ccb=3-5&_nc_hash=AQGT9ft5iu8aLV8K

A special Presidential pardon was granted to 93 prison inmates in view of the Poson Poya day this year.

Accordingly, 93 prisoners including 16 convicted LTTE cadres and 77 other inmates who have been jailed for minor offences were released.

http://www.dailynews.lk/2021/06/24/local/252370/presidential-pardon-former-ltte-cadres-and-77-other-prisoners

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கொலைகாரன் துமிந்தவை விடுதலை செய்வதற்காகவே இத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கொலைகாரன் துமிந்தவை விடுதலை செய்வதற்காகவே இத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எல்லாம் அவன் செயல்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

கொலைகாரன் துமிந்தவை விடுதலை செய்வதற்காகவே இத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நாங்கள் விரும்புகிறோமோ இல்லையோ அவர்கள் தங்கள் இனத்தவரில் காட்டும் கரிசனம் மாறப்போவதில்லை. 

எம்மவர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர் அதுபற்றி அவர்கள் அடுத்த கட்ட வாழ்க்கை பற்றி பேசலாம். 

அதைவிடுத்து துமிந்த சில்வா பற்றிய ஆராய்ச்சியை நிறுத்துவது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு மாதம் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் முன்னாள் போராளியான சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று விடுதலை – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு தமிழ்அரசியல்வாதி முந்தி கொண்டு வந்துவிட்டார்

அங்கிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் புலம்பெயர் மக்கள் பொதுநலபணிகளில் ஈடுபட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

அங்கிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் புலம்பெயர் மக்கள் பொதுநலபணிகளில் ஈடுபட முடியுமா?

ஏன் முடியாது ? தாராளமாக பணிகள் செய்யலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, shanthy said:

ஏன் முடியாது ? தாராளமாக பணிகள் செய்யலாம்.

உங்களுக்கு எவ்வித இடையூறுகளும் வரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

கொலைகாரன் துமிந்தவை விடுதலை செய்வதற்காகவே இத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதேதான். சும்மா ஒரு படம் காட்டல். எத்தனையோ கொலைகாரரை இலகுவாய் விடுவித்தவர்கள், இப்போ விமர்சனம் சர்வதேசத்திடமிருந்து, ஆட்சி கதிரையில் ஏற்றி அழகு பார்த்தவர்களே அரசை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். பலபக்கத்தாலும் கயிறு இறுகுது. தனது கொலைகாரரின் விடுதலையை உரு மறைக்க செய்யும் தந்திரம். இறந்தவர்  மஹிந்தவின் நெருங்கிய நண்பன், துமிந்த கோத்தாவுக்காகவே பாரத லட்சுமனனை கொலை செய்ததாக சம்பவம் நடந்தபோது  பேசப்பட்டது. தங்களுக்கு வேண்டிய போது ஒரு சட்டமியற்றுவதும் பின் அதை மீறுவதும், இறைமை என்று கூவுவதும் வேடிக்கை. நீதித்துறை செத்து பல ஆண்டுகள் கழிந்துவிட்டது ஏதோ அது இன்னும் செயற்படுவதுபோல் இவர்கள் கருத்து தெரிவிப்பது தான் பெரிய புதிர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.