Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழரின் தமிழக மயக்கம்: தெளியாத போதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் தமிழக மயக்கம்: தெளியாத போதை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஈழத்தமிழர்களின் தமிழக மயக்கம் புதிதல்ல. கடந்த அரை நூற்றாண்டில் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது. தமிழகத்தின் மீதும் குறிப்பாக, தமிழக அரசியல் மீதும் வைக்கப்பட்ட நம்பிக்கைகள், தொடர்ச்சியாகப் பொய்ப்பிக்கப்பட்ட போதும், ‘சூடுகண்டாலும் அஞ்சாது, அடுப்பங்கரை நாடும் பூனை’ மனநிலையில், தொடர்ந்து நம்பிக்கை வைப்பதை இன்றும் காணுகிறோம். 

எம்.ஜி. இராமச்சந்திரனில் தொடங்கி, சீமான் வரை, ஈழப்போராட்டத்தை சரிவர விளங்காத, அணுக இயலாத, தங்கள் சுயஅரசியலுக்குப் பயன்படுத்தியோரை நம்பி, சீரழிந்தவர்கள் ஈழத்தமிழர்கள். இன்றும் அந்தநிலை வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்தத் ‘தமிழக மயக்கம்’ வெறுமனே அரசியலுடன் மட்டுப்பட்டல்ல! 

தமிழக மக்களிடையே உள்ள ஆதரவு, இலங்கை தமிழரது போராட்டத்துக்கு ஒரு தார்மீக ஆதரவாயிருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதைச் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்துவதற்கு, இலங்கை தமிழர் உடந்தையாக இருக்கக் கூடாது. 

போர் அதன் கோர முடிவை எட்டுகின்ற போது, தமிழகத்தில் இளம் தலைமுறையினரிடையே ஈழத்தமிழர்களுக்காக அறம்சார்ந்த தீரம்மிக்க ஆதரவு எழுந்தது. அதை மடைமாற்றுவது, இந்திய அதிகாரத்துக்கு அவசியமானது. இதற்கு சீமான் பயன்பட்டார். 

சீமான் தமிழக இளைஞர்களின் நேசத்துக்கு உரிய திரையுலகப் பிரமுகராகத் தன்னை உயர்த்திக் கொள்ள, அவருக்கு ஈழத் தமிழரின் கண்ணீர் கைகொடுத்த அளவுக்கு, திரைப்படத் துறையில் அவருடைய ஆற்றல் கைகொடுத்திருக்கவில்லை. ஆனால், இன்று ஈழப்பிரச்சினைக்குக் காப்புரிமை வாங்கியது போல செயற்படுகிறார். அதற்குப் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வற்றாத நிதி உதவுகிறது. 

ஈழத்தமிழர்களை, விடுதலைப் புலிகளுடன் சமன்செய்து, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் குறுக்குகின்ற பணியை, சீமானும் அவர்தம் ஆதரவாளர்களும் செய்கிறார்கள். 

சீமானும் அவர்தம் அடிவருடிகளும், ஈழத்தமிழர்களின் விடுதலையை வாங்கித் தருவார்கள் என்று, புலம்பெயர் ஈழத்தமிழர்களில் ஒருபகுதியினர் நம்புகிறார்கள். இது ஆச்சரியமானதல்ல! ஏனெனில், ஈழத்தமிழர்களின் விடுதலைக்குச் செய்ய வேண்டியவை பற்றிய சரியான புரிதல் இருந்திருந்தால், இந்த நிலையை நாம் அடைந்திருக்க மாட்டோம் அல்லவா? 

எம்.ஜி.ஆரைச் சந்திக்க, பிரபாகரனைப் பழ நெடுமாறன் அழைத்துச் சென்றபோது, ‘ஈழத்தை பெற, எவ்வளவு பணம் தேவை’ என்று எம்.ஜி.ஆர் கேட்டதாகவும் அதற்குரிய தொகையைப் பிரபாகரன் சொன்னதாகவும், கேட்டதற்கு அதிகமாகவே எம்.ஜி.ஆர் கொடுத்ததாகவும், பழ நெடுமாறன் தனது நூலில் எழுதியிருக்கிறார். இது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே உரித்தானதல்ல; பிற இயக்கங்களிலும் இந்த மனநிலை இருந்தது. 

இதன் தொடர்ச்சியாக, விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்து, விடுதலையைப் பெறலாம் என நினைத்த புலம்பெயர் தமிழர்களின் மனநிலையின் தொடர்ச்சியே, சீமானுக்கான புலம்பெயர் தமிழர்களின் நிதியாதரவு.     

சில விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில், எந்த நிலையிலுமே தமிழக அரசு, மத்திய அரசை மீறிச் செயற்படத் துணிந்ததில்லை. உண்மையில், அந்த விதமான எண்ணம் இருந்ததுமில்லை; அதுவொரு தோற்றமயக்கம். அன்றிலிருந்து இன்றுவரை, இலங்கை விடயத்தில், இந்தியா குறுக்கிட வேண்டும் என்ற கோரிக்கை, நடை முறைச் சாத்தியமற்றது மட்டுமன்றி, அடிப்படையிலேயே தவறானதும் கூட. ஈழத்தமிழரின் விடுதலையை குத்தகைக்காரர்களால் பெற்றுத்தர இயலாது. 

1983 வன்முறைக்குப் பின்பு, குறிப்பாக, 1984 முதல் 1987 வரை, போர்ச் சூழல் ஏற்படுத்திய உக்கிரமான நெருக்கடிகளின் விளைவாக, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஈழத்தமிழர்கள் சிதறி ஓடுகின்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவுக்குப் போனவர்களில் வசதியுள்ளவர்கள், பிரதான நகரங்களில் குறிப்பாகச் சென்னையில், வசதிகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். 

கையில் எதுவுமில்லாமல் உயிருக்கு அஞ்சி ஓடியவர்களில் பெரும்பான்மையானவர்கள், முன்பு இலங்கையில் கற்பனை செய்திராத விதமாக அகதி முகாங்களிலும், ‘அகதி’ என்ற அடையாளமின்றி வெளியிலும் அன்று முதல் அல்லற்பட்டு வருகிறார்கள்.

இலங்கை மக்களின் அவலங்கள் பற்றி, எந்த விதமான அக்கறையுமே இல்லாமல், அவர்களுடைய அவலத்தை அரசியல் பிழைப்பாக்கிக் கொண்ட தமிழக அரசியல் தலைமைகள் ஒருபுறமும், அதற்குக் கொஞ்சமும் சளைக்காத, இலங்கை தமிழ்ச் சமூகத்தின் வேறு சில பலவீனங்களைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி வருகிற தமிழகத்தின் வேறு சில குழுக்களும், ஈழத்தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்திகள் என்ற மாயையை உருவாக்கினார்கள். 

தாங்கள் உலகத்தால் கவனிக்கப்படவில்லை; தங்களைத் தமிழகம் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம், இலங்கை கலைஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல, இந்தியாவிலிருந்து வருகிற ‘குப்பை’களை எல்லாம், கலை இலக்கியம் என்று கொண்டாடிப் பரவலாக்குகிற ஒரு வணிகக் கூட்டமும் இருந்து வந்திருக்கிறது. 

கோவில் திருவிழாக்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து சின்னமேளமும் மேளக்காரர்களும் வந்த நிலை, இன்று பெரும்பாலும் இல்லை. என்றாலும், அதன் இடத்தில் தமிழ்ச் சினிமா, சின்னத் திரை, இந்தியக் கலைஞர்களது நிகழ்ச்சிகள் என்பனவே, எமது பொழுதுபோக்குகளாக மாறியிருக்கின்றன. 

இன்று, பேரினவாதத்துக்கு முகங்கொடுக்கத் தடுமாறுகிற ஒரு சமூகத்திடமும் புலம் பெயர்ந்தோரிடமும், ஒரு நல்ல மாற்றுச் சிந்தனை உருவாக்குவதற்கு வழிகாட்ட, தமிழ்த் தேசியத்தால் இயலவில்லை. எனவே, தமிழ் மக்களிடையிலும் படைப்பாளிகள் இடையிலும் கலைஞர்கள் மத்தியிலும் அறிஞர்கள் என்று சொல்லப்படுகிற தரப்பினரிடையிலும் உள்ள மன உளைச்சலை வைத்துப் பணம் பண்ணுவதில், தமிழகத்துச் சஞ்சிகைகள் சிலவும் வெளியீட்டு நிறுவனங்கள் சிலவும், புதிய உச்சங்களை எட்டியுள்ளன. 

ஈழத்து எழுத்தாளர்களுக்குச் சடங்காசாரமான அங்கீகாரம், ஈழ எழுத்தாளர் குழுக்களுடன் விளம்பர, வணிகத் தொடர்புகள், இடையிடையே ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிச் சூடான விவாதங்களைக் கிளறிவிடுவது போன்ற உபாயங்கள் மூலம், தம்மை நிலை நிறுத்திக் கொண்ட சஞ்சிகைகளும் இலக்கியப் பிரமுகர்களும் பற்றி நிறையவே கூறமுடியும். 

படைப்பாளிகளிடமிருந்து பணம் பறித்து, அவர்கள் எழுத்துகளை வெளியிட்டுக் காசுபார்க்கும் இந்திய பதிப்பகங்கள் ஏராளம் வலம்பருகின்றன. தங்களது எழுத்துகளுக்கு நூல் வடிவம் வேண்டி ஏங்குகிறவர்களது அவலத்தை, தங்களுக்குப் பணமாக்கும் கலையை அவர்கள் கற்றிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகிற பணத்தை வழங்கி, தமிழ்நாட்டில் புத்தகம் பிரசுரமாவதை பாக்கியமாகக் கருதும் புலம்பெயர்ந்தோர் ஏராளம் உளர்.  

இப்படியெல்லாம், ஈழத் தமிழர் ஏமாறக் காரணம் என்ன? நாம், நமக்கான ஒரு பண்பாடு உடையவர்கள் என்றும் நம்மிடையே உள்ள ஆற்றல்களைச் கொண்டு நம்மை அறிந்து, நம்மை மேம்படுத்தி மற்ற எல்லாருடனும் நல்லுறவு பேண வேண்டியவர்கள் என்பதையும் நாம் மறந்து விடுகிறோம்.

 நமது உயர்வுக்குத் தேவையான பண்பாட்டுச் செயற்பாடுகள் நம்மிடையே நலிந்து வருகின்றன. நமது இசையும் நடனமும் தமிழகத்தில் பார்ப்பனியம் போட்ட கோட்டுக்கு வெளியே நகர மறுக்கிறது. அதை, ‘எமது’ என்று சொல்லி ஏமாறுகிறோம். தமிழகத்தில், அவர்களது கலைஞர்களுக்குக் கிடைக்கிற சிறிய அங்கீகாரமோ வெறும் உபசாரமான புகழுரையோ, நமக்குப் போதுமாகிறது. அதை ஏற்படுத்தவல்ல உள்ளூர்த் தரகர்கள் புரவலர்களாக, இலக்கியவாதிகளாக, ஊடக ஜாம்பவான்களாக, அரசியல்வாதிகளாக உலா வருகிறார்கள்.

நம்மிடம் வாசிப்புப் பழக்கம் போதாது. இளைய தலைமுறையினரிடம் அதை ஊக்குவிக்கின்ற ஆர்வமும் நம்மிடம் மிகக் குறைவு. மரபின் பேரால் நடக்கின்ற கேலிக் கூத்துகளிலும் சமூகத்துக் கேடான பொழுது போக்குகளிலும், நாசமாகின்ற காசையும் காலத்தையும் நமது எழுத்துகளையும் மேடைக் கலைகளையும் ஓவியம், சிற்பம் போன்றவற்றையும் அறியவும் ஊக்குவிக்கவும் துணிவோமானால், நம்மை மற்றவர்களின் தயவில் வைத்திருக்கிற அவலம் நமக்கு நேராது.

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், வெறும் உணர்ச்சி வசப்பட்டு நம்மைப் பற்றிய போலி அக்கறைகளுக்கும் வஞ்சகமான புகழுரைகளுக்கும் மயங்காமல், வெறுமனே பணத்தை வழங்குவதுடன் தங்களது பொறுப்பு முடிந்து விடுவதாக இல்லாமல், எல்லாவற்றிலும் தொடர்ச்சியான விமரிசன முறையிலான ஈடுபாடு காட்டுவார்கள் என்றால், அவர்கள் தங்களுக்கும் உலகத் தமிழ்ச் சமூகத்துக்கும்  நல்ல சேவையாற்றுகின்றவர்களாவார்கள். 

தேங்கிய நீரில் தான் பாசி படருகிறது. நோய் பரப்பும் தீய உயிரினங்கள் விளைகின்றன. சமூகம் என்பது, பாய்கிற நதி போல எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமாயின் அது, என்றென்றும் உயிரோட்டத்துடன் இருக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஈழத்தமிழரின்-தமிழக-மயக்கம்-தெளியாத-போதை/91-275056

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு வீரம் உண்டு எப்படியான வீரம் என்றால் !......................வெம்பிளியில் கடைக்கு மேல் உள்ள நம்ம ஆட்கள் கீழே கடை லீசுக்கு எடுத்து வந்த தமிழர்களிடம் சன்  காட்டி அந்த கடையில் தினமும் ஒரு சாராய போத்தல் கப்பமாக வாங்கி கொள்வார்கள் சில சமயம் வீக்கெண்ட்  இரண்டு மூன்று போத்தல்  கூட போகும் .ஒரு கட்டத்தில் மேல் உள்ளவர்களின் தொல்லை தாங்க முடியாமல் பங்காளதேஸ் காரருக்கு  கடையை கைமாற்றி விட்டு பழைய தமிழ் முதலாளி வேறு இடத்தில் கடையை எடுத்துக்கொண்டு போயிட்டார் . வழக்கம்போல் சனி இரவு மேலே பார்ட்டி தொடங்க கீழே வந்த புதிய  முதலாளி  மேலே வந்து கதவை தட்டி தமிழ் பொடிக்கூட்டத்துக்கு அங்கு தொடர்ந்து இருப்பது என்றால் சத்தம் ஆட்டம் இருக்க கூடாது மீறினால் கவுன்சில் போலீஸ் இடம் போகவேண்டி வரும் என்று நீண்ட லெக்சர் ஆங்கிலத்தில் சொல்ல அவ்வளவு பொடிக்கூட்டமும் கப் சிப் கொஞ்ச நாளில் பொடிக்கூட்டம் அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்று விட்டார்கள் .

மேல் உள்ள கதை எதை சொல்லுது என்றால் தமிழர்கள் எங்களுக்குள்தான் வீரமும் கெத்தாப்பும் மற்ற இனத்தவன் தன்னுடைய மொழியில் வந்து நாலு பேச்சு பேசினால் அடிமைத்தனமாய் மனது இருக்க சொல்லிவிடும்  இங்கும் சரி வேறு இணைய ஊடகங்களிலும் சரி சீமானை திட்டி தாங்களும் வீரர் என்பவர்கள் இனவாத சிங்கள அரசின் பிழைகளை சுட்டி காட்ட தயங்கிக்கொண்டு இருப்பார்கள் ஆனால் சீமானை எதிர்த்து நாலு அறிக்கை விடுவதெண்டால் அல்வா சாப்பிடுவது போல் பாய்ந்து பாய்ந்து சீமானிய எதிர்கருத்துக்கள் வைப்பினம் அதே வேகத்தை சிங்கள இனவாத அரசை எதிர்க்க காட்ட மாட்டினம் .

அதாவது எங்களுக்குள் தான் வீரம் பகிடி எல்லாமே .....................நந்தலாலா .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

எப்படியும் 10 தான்டும்

நான் நினைக்கேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உறவே, இதைப் பல தடவை கேட்டிருக்கிறேன். பதில் சொல்லுங்கள்: தமிழர்கள் மட்டும் பார்க்கும் இந்தத் தளத்தில் சிங்களவனின் அநியாயங்களை அலசி, திட்டி என்ன செய்லபாட்டு ரீதியான விளைவு வரப் போகிறது? ஆளுக்காள் மாறி மாறி முதுகுப் புண்ணைச் சொறிந்து  சுகம் காண்பது மாதிரியல்லவா அது?

அல்லது இங்கே இருப்போருக்கு - அவர்கள் எந்த நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் - சிங்களவனின் அநீதிகளை நாம் சொல்லித் தான் தெரிய வைக்க வேண்டியிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

(எனக்கென்னவோ நீங்கள், "ட்ராபிக் கான்ஸ்ரபிள்" நடை முறையில் இறங்கியிருப்பதாகவே படுகிறது! இல்லையெனில் மன்னியுங்கள்!)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இங்கும் சரி வேறு இணைய ஊடகங்களிலும் சரி சீமானை திட்டி தாங்களும் வீரர் என்பவர்கள் இனவாத சிங்கள அரசின் பிழைகளை சுட்டி காட்ட தயங்கிக்கொண்டு இருப்பார்கள்

சிங்கள அரசின் பிழைகள் பற்றி தமிழர் எழுதிவரும் வேறு மொழி இணையத்தளங்களை நீங்கள் பார்த்ததே இல்லையா?  உங்களுக்கு வேறு மொழிகள் புரியாவிட்டால், இந்த கேள்வி மனதை புண்படுத்தியிருக்கும் - மன்னியுங்கள். தமிழர் - முக்கியமாக பிரித்தானிய, கனேடிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய தமிழர் சிங்கள அரசின் பிழைகள் பற்றி கடந்த 40வருடங்களாக ஆங்கிலத்தில் எழுதி வருகிறார்கள். பிரெஞ்சு தமிழர் பிரெஞ்சு மொழியில் நிறைய எழுதியுள்ளார்கள். சுவிஸ், ஜேர்மானிய தமிழர் ஜேர்மன் மொழியில் எழுதி வருகிறார்கள். இப்படியான முயற்சிகள் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையில் இன்று சிங்கள அரசு பற்றிய விசாரணைகளுக்காக பணம் ஒதுக்கப்பட்டு ஒரு பிரிவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவை பற்றிய தகவல்கள் மாற்று மொழிகளிலேயே அதிகம் வருகின்றன. உங்களுக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாவிட்டால் இவை பற்றிய அறிவு கிடைக்கும் சாத்தியம் குறைவு என்பதும் உண்மையே.

2 hours ago, Justin said:

உறவே, இதைப் பல தடவை கேட்டிருக்கிறேன். பதில் சொல்லுங்கள்: தமிழர்கள் மட்டும் பார்க்கும் இந்தத் தளத்தில் சிங்களவனின் அநியாயங்களை அலசி, திட்டி என்ன செய்லபாட்டு ரீதியான விளைவு வரப் போகிறது?

ஐஸ்ரின்,

நீண்ட போரினால் எமது மக்கள் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறாக மீண்டும் மீண்டும் மனம் ஆறும் வரை சிங்கள அரசின் அநியாயங்கள் பற்றி பேசுவது உளவியல் ரீதியாக மனதை தேற்றிக் கொள்ள நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழிமுறை. யாழ் களம் இந்த ஆற்றுக்களமாக செயற்பட்டு எங்களில் பலரை மனநோயில் இருந்து காப்பாற்றி இருக்கிறது. மற்றவர்களையும் காப்பாற்ற இந்த யாழ் களம் உதவுகிறது - நாமும் வழி விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளருக்கு ஒரு நோக்கம் இருப்பது தெரிகிறது 

அதேபோல் ஈழத்தமிழர் வரலாறு அரசனை நம்பி புருஷனை கைவிடாதே என்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கான் விடுதலை எமது கையில். 

அவர்களின் பிரச்சனையை நாங்களோ எங்களின் பிராச்சனையை அவர்களோ புரிந்துகொள்ளப்போவதில்லை. இருவரும் அவரவர் பிரச்சனைக்காக போராடுவதுக்கு தார்மீக ரீதியான ஆதரவைத்தவிர வேறு எதையும் செய்ய முடியாது என்பதை இருவரும் புரிந்துகொண்டாலே போதுமானது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

மீண்டும் மீண்டும் மனம் ஆறும் வரை சிங்கள அரசின் அநியாயங்கள் பற்றி பேசுவது உளவியல் ரீதியாக மனதை தேற்றிக் கொள்ள நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழிமுறை.

ஒப்பாரி வழிமுறை

File:ஒப்பாரி.svg

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

ஈழத்தமிழரின் தமிழக மயக்கம்: தெளியாத போதை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஈழத்தமிழர்களின் தமிழக மயக்கம் புதிதல்ல. கடந்த அரை நூற்றாண்டில் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது. தமிழகத்தின் மீதும் குறிப்பாக, தமிழக அரசியல் மீதும் வைக்கப்பட்ட நம்பிக்கைகள், தொடர்ச்சியாகப் பொய்ப்பிக்கப்பட்ட போதும், ‘சூடுகண்டாலும் அஞ்சாது, அடுப்பங்கரை நாடும் பூனை’ மனநிலையில், தொடர்ந்து நம்பிக்கை வைப்பதை இன்றும் காணுகிறோம். 

எம்.ஜி. இராமச்சந்திரனில் தொடங்கி, சீமான் வரை, ஈழப்போராட்டத்தை சரிவர விளங்காத, அணுக இயலாத, தங்கள் சுயஅரசியலுக்குப் பயன்படுத்தியோரை நம்பி, சீரழிந்தவர்கள் ஈழத்தமிழர்கள். இன்றும் அந்தநிலை வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்தத் ‘தமிழக மயக்கம்’ வெறுமனே அரசியலுடன் மட்டுப்பட்டல்ல! 

தமிழக மக்களிடையே உள்ள ஆதரவு, இலங்கை தமிழரது போராட்டத்துக்கு ஒரு தார்மீக ஆதரவாயிருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதைச் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்துவதற்கு, இலங்கை தமிழர் உடந்தையாக இருக்கக் கூடாது. 

போர் அதன் கோர முடிவை எட்டுகின்ற போது, தமிழகத்தில் இளம் தலைமுறையினரிடையே ஈழத்தமிழர்களுக்காக அறம்சார்ந்த தீரம்மிக்க ஆதரவு எழுந்தது. அதை மடைமாற்றுவது, இந்திய அதிகாரத்துக்கு அவசியமானது. இதற்கு சீமான் பயன்பட்டார். 

சீமான் தமிழக இளைஞர்களின் நேசத்துக்கு உரிய திரையுலகப் பிரமுகராகத் தன்னை உயர்த்திக் கொள்ள, அவருக்கு ஈழத் தமிழரின் கண்ணீர் கைகொடுத்த அளவுக்கு, திரைப்படத் துறையில் அவருடைய ஆற்றல் கைகொடுத்திருக்கவில்லை. ஆனால், இன்று ஈழப்பிரச்சினைக்குக் காப்புரிமை வாங்கியது போல செயற்படுகிறார். அதற்குப் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வற்றாத நிதி உதவுகிறது. 

ஈழத்தமிழர்களை, விடுதலைப் புலிகளுடன் சமன்செய்து, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் குறுக்குகின்ற பணியை, சீமானும் அவர்தம் ஆதரவாளர்களும் செய்கிறார்கள். 

சீமானும் அவர்தம் அடிவருடிகளும், ஈழத்தமிழர்களின் விடுதலையை வாங்கித் தருவார்கள் என்று, புலம்பெயர் ஈழத்தமிழர்களில் ஒருபகுதியினர் நம்புகிறார்கள். இது ஆச்சரியமானதல்ல! ஏனெனில், ஈழத்தமிழர்களின் விடுதலைக்குச் செய்ய வேண்டியவை பற்றிய சரியான புரிதல் இருந்திருந்தால், இந்த நிலையை நாம் அடைந்திருக்க மாட்டோம் அல்லவா? 

எம்.ஜி.ஆரைச் சந்திக்க, பிரபாகரனைப் பழ நெடுமாறன் அழைத்துச் சென்றபோது, ‘ஈழத்தை பெற, எவ்வளவு பணம் தேவை’ என்று எம்.ஜி.ஆர் கேட்டதாகவும் அதற்குரிய தொகையைப் பிரபாகரன் சொன்னதாகவும், கேட்டதற்கு அதிகமாகவே எம்.ஜி.ஆர் கொடுத்ததாகவும், பழ நெடுமாறன் தனது நூலில் எழுதியிருக்கிறார். இது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே உரித்தானதல்ல; பிற இயக்கங்களிலும் இந்த மனநிலை இருந்தது. 

இதன் தொடர்ச்சியாக, விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்து, விடுதலையைப் பெறலாம் என நினைத்த புலம்பெயர் தமிழர்களின் மனநிலையின் தொடர்ச்சியே, சீமானுக்கான புலம்பெயர் தமிழர்களின் நிதியாதரவு.     

சில விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில், எந்த நிலையிலுமே தமிழக அரசு, மத்திய அரசை மீறிச் செயற்படத் துணிந்ததில்லை. உண்மையில், அந்த விதமான எண்ணம் இருந்ததுமில்லை; அதுவொரு தோற்றமயக்கம். அன்றிலிருந்து இன்றுவரை, இலங்கை விடயத்தில், இந்தியா குறுக்கிட வேண்டும் என்ற கோரிக்கை, நடை முறைச் சாத்தியமற்றது மட்டுமன்றி, அடிப்படையிலேயே தவறானதும் கூட. ஈழத்தமிழரின் விடுதலையை குத்தகைக்காரர்களால் பெற்றுத்தர இயலாது. 

1983 வன்முறைக்குப் பின்பு, குறிப்பாக, 1984 முதல் 1987 வரை, போர்ச் சூழல் ஏற்படுத்திய உக்கிரமான நெருக்கடிகளின் விளைவாக, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஈழத்தமிழர்கள் சிதறி ஓடுகின்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவுக்குப் போனவர்களில் வசதியுள்ளவர்கள், பிரதான நகரங்களில் குறிப்பாகச் சென்னையில், வசதிகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். 

கையில் எதுவுமில்லாமல் உயிருக்கு அஞ்சி ஓடியவர்களில் பெரும்பான்மையானவர்கள், முன்பு இலங்கையில் கற்பனை செய்திராத விதமாக அகதி முகாங்களிலும், ‘அகதி’ என்ற அடையாளமின்றி வெளியிலும் அன்று முதல் அல்லற்பட்டு வருகிறார்கள்.

இலங்கை மக்களின் அவலங்கள் பற்றி, எந்த விதமான அக்கறையுமே இல்லாமல், அவர்களுடைய அவலத்தை அரசியல் பிழைப்பாக்கிக் கொண்ட தமிழக அரசியல் தலைமைகள் ஒருபுறமும், அதற்குக் கொஞ்சமும் சளைக்காத, இலங்கை தமிழ்ச் சமூகத்தின் வேறு சில பலவீனங்களைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி வருகிற தமிழகத்தின் வேறு சில குழுக்களும், ஈழத்தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்திகள் என்ற மாயையை உருவாக்கினார்கள். 

தாங்கள் உலகத்தால் கவனிக்கப்படவில்லை; தங்களைத் தமிழகம் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம், இலங்கை கலைஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல, இந்தியாவிலிருந்து வருகிற ‘குப்பை’களை எல்லாம், கலை இலக்கியம் என்று கொண்டாடிப் பரவலாக்குகிற ஒரு வணிகக் கூட்டமும் இருந்து வந்திருக்கிறது. 

கோவில் திருவிழாக்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து சின்னமேளமும் மேளக்காரர்களும் வந்த நிலை, இன்று பெரும்பாலும் இல்லை. என்றாலும், அதன் இடத்தில் தமிழ்ச் சினிமா, சின்னத் திரை, இந்தியக் கலைஞர்களது நிகழ்ச்சிகள் என்பனவே, எமது பொழுதுபோக்குகளாக மாறியிருக்கின்றன. 

இன்று, பேரினவாதத்துக்கு முகங்கொடுக்கத் தடுமாறுகிற ஒரு சமூகத்திடமும் புலம் பெயர்ந்தோரிடமும், ஒரு நல்ல மாற்றுச் சிந்தனை உருவாக்குவதற்கு வழிகாட்ட, தமிழ்த் தேசியத்தால் இயலவில்லை. எனவே, தமிழ் மக்களிடையிலும் படைப்பாளிகள் இடையிலும் கலைஞர்கள் மத்தியிலும் அறிஞர்கள் என்று சொல்லப்படுகிற தரப்பினரிடையிலும் உள்ள மன உளைச்சலை வைத்துப் பணம் பண்ணுவதில், தமிழகத்துச் சஞ்சிகைகள் சிலவும் வெளியீட்டு நிறுவனங்கள் சிலவும், புதிய உச்சங்களை எட்டியுள்ளன. 

ஈழத்து எழுத்தாளர்களுக்குச் சடங்காசாரமான அங்கீகாரம், ஈழ எழுத்தாளர் குழுக்களுடன் விளம்பர, வணிகத் தொடர்புகள், இடையிடையே ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிச் சூடான விவாதங்களைக் கிளறிவிடுவது போன்ற உபாயங்கள் மூலம், தம்மை நிலை நிறுத்திக் கொண்ட சஞ்சிகைகளும் இலக்கியப் பிரமுகர்களும் பற்றி நிறையவே கூறமுடியும். 

படைப்பாளிகளிடமிருந்து பணம் பறித்து, அவர்கள் எழுத்துகளை வெளியிட்டுக் காசுபார்க்கும் இந்திய பதிப்பகங்கள் ஏராளம் வலம்பருகின்றன. தங்களது எழுத்துகளுக்கு நூல் வடிவம் வேண்டி ஏங்குகிறவர்களது அவலத்தை, தங்களுக்குப் பணமாக்கும் கலையை அவர்கள் கற்றிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகிற பணத்தை வழங்கி, தமிழ்நாட்டில் புத்தகம் பிரசுரமாவதை பாக்கியமாகக் கருதும் புலம்பெயர்ந்தோர் ஏராளம் உளர்.  

இப்படியெல்லாம், ஈழத் தமிழர் ஏமாறக் காரணம் என்ன? நாம், நமக்கான ஒரு பண்பாடு உடையவர்கள் என்றும் நம்மிடையே உள்ள ஆற்றல்களைச் கொண்டு நம்மை அறிந்து, நம்மை மேம்படுத்தி மற்ற எல்லாருடனும் நல்லுறவு பேண வேண்டியவர்கள் என்பதையும் நாம் மறந்து விடுகிறோம்.

 நமது உயர்வுக்குத் தேவையான பண்பாட்டுச் செயற்பாடுகள் நம்மிடையே நலிந்து வருகின்றன. நமது இசையும் நடனமும் தமிழகத்தில் பார்ப்பனியம் போட்ட கோட்டுக்கு வெளியே நகர மறுக்கிறது. அதை, ‘எமது’ என்று சொல்லி ஏமாறுகிறோம். தமிழகத்தில், அவர்களது கலைஞர்களுக்குக் கிடைக்கிற சிறிய அங்கீகாரமோ வெறும் உபசாரமான புகழுரையோ, நமக்குப் போதுமாகிறது. அதை ஏற்படுத்தவல்ல உள்ளூர்த் தரகர்கள் புரவலர்களாக, இலக்கியவாதிகளாக, ஊடக ஜாம்பவான்களாக, அரசியல்வாதிகளாக உலா வருகிறார்கள்.

நம்மிடம் வாசிப்புப் பழக்கம் போதாது. இளைய தலைமுறையினரிடம் அதை ஊக்குவிக்கின்ற ஆர்வமும் நம்மிடம் மிகக் குறைவு. மரபின் பேரால் நடக்கின்ற கேலிக் கூத்துகளிலும் சமூகத்துக் கேடான பொழுது போக்குகளிலும், நாசமாகின்ற காசையும் காலத்தையும் நமது எழுத்துகளையும் மேடைக் கலைகளையும் ஓவியம், சிற்பம் போன்றவற்றையும் அறியவும் ஊக்குவிக்கவும் துணிவோமானால், நம்மை மற்றவர்களின் தயவில் வைத்திருக்கிற அவலம் நமக்கு நேராது.

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், வெறும் உணர்ச்சி வசப்பட்டு நம்மைப் பற்றிய போலி அக்கறைகளுக்கும் வஞ்சகமான புகழுரைகளுக்கும் மயங்காமல், வெறுமனே பணத்தை வழங்குவதுடன் தங்களது பொறுப்பு முடிந்து விடுவதாக இல்லாமல், எல்லாவற்றிலும் தொடர்ச்சியான விமரிசன முறையிலான ஈடுபாடு காட்டுவார்கள் என்றால், அவர்கள் தங்களுக்கும் உலகத் தமிழ்ச் சமூகத்துக்கும்  நல்ல சேவையாற்றுகின்றவர்களாவார்கள். 

தேங்கிய நீரில் தான் பாசி படருகிறது. நோய் பரப்பும் தீய உயிரினங்கள் விளைகின்றன. சமூகம் என்பது, பாய்கிற நதி போல எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமாயின் அது, என்றென்றும் உயிரோட்டத்துடன் இருக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஈழத்தமிழரின்-தமிழக-மயக்கம்-தெளியாத-போதை/91-275056

இக்கட்டுரை பேமிலி மான் 2 வந்தபோது வந்திருந்தால் வரவேற்றிருக்கலாம். ஆனால் மேதகு வந்தபின்னர் அல்லவா அவசரப்பட்டு எழுதப்படுகிறது. அப்படியானால் இதன் பின்னாலிருக்கும் அரசியல் என்ன?

பேமிலிமான் 2 வினை ரசித்தவர்கள், மேதகு பற்றி மூச்சே விடாதவர்கள், இப்போது மேதகுவிற்கான எதிர்ப்பை நேரடியாகக் கக்க முடியாமல் "தமிழக ஊடகங்களின் ஈழத்தமிழனை ஏமாற்றி பணம் கறக்கும் வழி" எனும் பெயரினில் கக்கும் இந்த கட்டுரையினை விழுந்தடித்து ஆதரிப்பது ஏனோ?

இங்கேயும் புலியெதிர்ப்பா? அடக் கடவுளே !!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாதிகளின் "தமிழ்" பத்திரிக்கையான இப் பத்திரிக்கை விஜய செய்திப் பத்திரிக்கைக் குடும்பத்தைச் சார்ந்தது. லங்காதீப போன்ற சிங்களப் பத்திரிகையினையும் சண்டே டைம்ஸ் எனும் ஆங்கிலப் பத்திரிக்கையினையும்  தரும் சிங்களவர்களின் பத்திரிக்கை. அதில் தமிழில் ஒருவர் எழுதுவது வெளிவருகிறது என்றால் நிச்சயம் அது தமிழ் சார்ந்து இருக்கப்போவதில்லை. எழுதுபவர் பணம் பார்க்க எழுதுகிறார், படிப்பவர் தமது இச்சை தணிக்கப் படிக்கிறார்கள். இதைவிட இதுபற்றி நாம் அலட்டிக்கொள்ள வேறு ஏதுமில்லை. 

சிங்கள இனவாதிகள் எமக்குச் சரியானது எதுவென்று நினைப்பதைத் தூக்கிக் கொண்டாடும் நிலைமையில் நாம் இருக்கிறோம், ஆகா இதுவல்லவா ஆனந்தம் !!!

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் & ரா வும்  போராட்டத்தை வைத்து தேசியத்தை காயடிக்கிறார்  என்ற  அயல்வீட்டு  எலியை பார்த்து  கூப்பாடு போடுபவர்கள், 
மத்திய அரசும் & ரா வும் சேர்ந்து கூத்தமைப்பை வைத்து தமிழர்களை அடியோடு காலிசெய்கிறது என்ற உள்வீட்டு பெருச்சாளியை  கண்டுகொள்ளாதது ஏனோ..மீனிலங்கோவும் மஜில்சும் எப்படியான கேஸுகள் என்பது எங்களுக்கு எப்போதோ தெரிந்தவிடயம், சீமானை இந்திய உளவுத்துறை வழிநடத்துகிறது என்று பொரிந்துதள்ளுவர், அதையே கூத்தமைப்பு இந்தியாவிற்கு,இந்திய தூதரகத்திற்கு  போய் உயர்மட்ட சந்திப்புக்கள் செய்துவிட்டு வந்தால் பம்முவர், சீமானை உளவுத்துறை வழி நடத்துவதால் எமக்கு போனது கூந்தல் ,ஆனால் எமது கூத்தமைப்பு அவர்களது Proxy க்களாக இருப்பது எமது இருப்பையே காலி செய்யும் உத்தி, உள் வீட்டு பெருச்சாளிகளை அடித்து துவைத்து விட்டு அயல் வீட்டுக்காரனுக்கு  போகலாம்.         

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

ஆனால் இந்த கட்டுரையாளரின் கீழ்வரும் இந்த கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா? 

//கோவில் திருவிழாக்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து சின்னமேளமும் மேளக்காரர்களும் வந்த நிலை, இன்று பெரும்பாலும் இல்லை. என்றாலும், அதன் இடத்தில் தமிழ்ச் சினிமா, சின்னத் திரை, இந்தியக் கலைஞர்களது நிகழ்ச்சிகள் என்பனவே, எமது பொழுதுபோக்குகளாக மாறியிருக்கின்றன//

COVIDற்கு முன்பு எத்தனை கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் நடந்திருக்கும்.. இதில் எத்தனை இலங்கையில் உள்ள கலைஞர்களை வரவழைத்து நடாத்தப்பட்டன?.. 

இங்கே அவுஸ்ரேலியாவில் திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழாக்களுக்கு சினிமா கலைஞர்களையோ, பாட்டுகலைஞர்களை அழைக்கிறார்களோ தெரியாது, அதே போல  மற்றைய நாடுகளைப்பற்றி தெரியாது, ஆனால் இங்கிலாந்தில் இந்தமாதிரி அழைத்து நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கிறார்கள்..

அத்துடன், கொஞ்ச காலத்திற்கு முன்பு எங்களுடைய ஈழத்தமிழர்களில் நன்கு வசதிபடைத்தவர்கள் சிலர் சினிமாபடம் எடுக்கிறேன், சினிமாவில் நடிக்கிறேன் என பணத்தை இழந்த கதைகளும் உண்டு.. 

இந்த கட்டுரையாளரையோ, இல்லை இந்த பத்திரிக்கையைபற்றியும் நான் அறியமாட்டேன், ஆனால் அவருடைய மேற்சொன்ன கருத்தை நடைமுறையில் காணலாம்.. 

அதேபோல சில வாரங்களுக்கு முன்பும்(மேதகு வெளியாவதற்கு முன்பு) “ இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும்” என்ற தலைப்பில் கூட இந்த மயக்கத்தை இன்னொருவர் எழுதியையும் வாசித்த நினைவு உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

இந்தக் கட்டுரையில் புலியெதிர்ப்பு எங்கே இருக்கிறது?  எங்களிடையே இருக்கிற தமிழகக் களைகளைப் பற்றி பேசினால் அது புலியெதிர்ப்பு என்றால் , அதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்ன ரஞ்சித்?

தமிழ் மிரர் உங்கள் ஆய்வின் படி சிங்கள நிறுவனத்தின் பதிப்புத் தான், ஆனால் மீநிலங்கோவைத் தனிப்படத் தெரிந்தவர் யாரும் அவர் சிங்களவர்களின் ஏஜென்ட் என்று ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

சீமான் & ரா வும்  போராட்டத்தை வைத்து தேசியத்தை காயடிக்கிறார்  என்ற  அயல்வீட்டு  எலியை பார்த்து  கூப்பாடு போடுபவர்கள், 
மத்திய அரசும் & ரா வும் சேர்ந்து கூத்தமைப்பை வைத்து தமிழர்களை அடியோடு காலிசெய்கிறது என்ற உள்வீட்டு பெருச்சாளியை  கண்டுகொள்ளாதது ஏனோ..மீனிலங்கோவும் மஜில்சும் எப்படியான கேஸுகள் என்பது எங்களுக்கு எப்போதோ தெரிந்தவிடயம், சீமானை இந்திய உளவுத்துறை வழிநடத்துகிறது என்று பொரிந்துதள்ளுவர், அதையே கூத்தமைப்பு இந்தியாவிற்கு,இந்திய தூதரகத்திற்கு  போய் உயர்மட்ட சந்திப்புக்கள் செய்துவிட்டு வந்தால் பம்முவர், சீமானை உளவுத்துறை வழி நடத்துவதால் எமக்கு போனது கூந்தல் ,ஆனால் எமது கூத்தமைப்பு அவர்களது Proxy க்களாக இருப்பது எமது இருப்பையே காலி செய்யும் உத்தி, உள் வீட்டு பெருச்சாளிகளை அடித்து துவைத்து விட்டு அயல் வீட்டுக்காரனுக்கு  போகலாம்.         

அவர்களும் ஈழ டமிளர்கள் 
நாங்களும் ஈழ டமிளர்கள் 

அங்கு நடப்பதும் 
இங்கு நடப்பதும் 
ஒன்ருக்குள்ள ஒன்றுதானே 

எமக்குள்ளே பேசி ஏதாவது நடக்க போகிறதா? இதை பலமுறை கேட்க்கிறேன் 
அல்லது அதை வாசித்து அறிய யாரும் இருக்கிறார்களா?

சீமான் மாட்டர் என்றால் கொண்டுவாருங்கள் 
எல்லோரும் பேசுவோம் அது எவ்வளவு முக்கியமான விஷயம் 
தெற்காசிய கண்டமே ... அவர் பேசித்தான் கெட்டு போய் இருக்கு 

இப்போ இந்தியாவில் போதிய மலை வீழ்ச்சி இல்லை வறட்ச்சி 
சீமான் பேசு முன்பு ஒழுங்காக மழை இருந்தது. 

அவர் எவ்வளவு பெரிய கட்டுரை எழுதி இருக்கிறார் 
வாசிச்சு அறிய எவ்வளவு அரசியல் இருக்கு ...

அத விட்டுட்டு வந்திட்டார் கூட்டமைப்பு அது இது இது என்று 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 13:06, கிருபன் said:

சில விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில், எந்த நிலையிலுமே தமிழக அரசு, மத்திய அரசை மீறிச் செயற்படத் துணிந்ததில்லை. உண்மையில், அந்த விதமான எண்ணம் இருந்ததுமில்லை

உண்மை  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

உண்மை  

இது பொய் .....

1987இல் இந்தியா தூத்த்துக்குடியில்  இருந்து உணவு மருந்துகளை கப்பலில் அனுப்பியது 
அதை இலங்கை நேவி வழிமறித்து திருப்பி அனுப்பியது 

அவற்றை மிராச் ரக விமானத்தில் அத்துமீறி இலங்கைக்குள் ஊடுருவி 
இந்திய விமானப்படை வீசிவிட்டு சென்றது 

அது எம் ஜி ஆரின் முழு அழுத்தத்தால் நடந்தது 
அதை பலர் எழுதி இருக்கிறார்கள் 

நம்பிக்கை இல்லா சட்டத்தை அமுலாக்கி 
அதை ஆளுநர் மூலம் நிறைவேற்றி 

தமிழக அரசை கலைக்க முடியும் தவிர 
மாநிலங்களுக்கு இராணுவ கடற்படை அதிகாரம் இல்லை 
அதற்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும் என்பதுதான் உனையே தவிர 

அரசை மீறி செயற்பட துணிந்தஇல்லை என்பது இவர்கள் சோடிப்பு 

கருணாநிதியே இந்திய இராணுவம் திரும்பி சென்றபோது 
அவர்களை வரவேற்க்க போகவில்லை தனது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்தார் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

இந்தக் கட்டுரையில் புலியெதிர்ப்பு எங்கே இருக்கிறது?  எங்களிடையே இருக்கிற தமிழகக் களைகளைப் பற்றி பேசினால் அது புலியெதிர்ப்பு என்றால் , அதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்ன ரஞ்சித்?

இது எனது தவறு. கட்டுரையினைப் படிக்காமலேயே கருத்து எழுதுவதால் வந்த வினை. நீங்களும் துல்ப்பனும் இக்கட்டுரைக்குப் பச்சையிட்டதால் ஏதோ புலியெதிர்ப்பு என்று எண்ணிவிட்டேன். மன்னிக்கவும்.

7 hours ago, Justin said:

தமிழ் மிரர் உங்கள் ஆய்வின் படி சிங்கள நிறுவனத்தின் பதிப்புத் தான், ஆனால் மீநிலங்கோவைத் தனிப்படத் தெரிந்தவர் யாரும் அவர் சிங்களவர்களின் ஏஜென்ட் என்று ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கவில்லை!

இது அடுத்தது. சிங்கள இனவாதிகளின் தமிழ்ப் பத்திரிக்கை ஒன்றிலிருந்து தமிழருக்குச் சார்பான கட்டுரை ஒன்று வெளியாகுமா என்கிற எனது கேள்வியிலிருந்து உதித்தது அது. அதுகூடத் தவறுதான் என்று புரிகிறது.

கட்டுரையில் திராவிட ஆதரவு மேலாகத் தூவப்பட்டதுபோலத் தெரிகிறது. இதுகூட எனது அனுமானம் தான். ஆனால் கட்டுரையில் நான் எதிர்பார்த்த தவறேதும் இருப்பதுபோலத் தெரியவில்லை. 

இக்கட்டுரைக்கான உங்களினதும் துல்ப்பனினதும் பச்சைகளைப் பார்த்தபோது சில புள்ளிகளை இணக்கத் தொடங்கிவிட்டேன். அதனால் வந்த குழப்பமே இது. சரி, அந்தப்புள்ளிகளையும் இங்கு சொல்லிவிடுகிறேன்.

1. இதே கட்டுரையாளர் இதற்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையொன்றின் அடிப்படையில் இன்றைய கட்டுரையும் சிங்களச் சார்ப் - தமிழர் விரோத (புலியெதிர்ப்பு) அரசியலைப் பேசுகிறது என்கிற எனது தவறான எண்ணம்.

2. பேமிலி மான் 2 விமர்சனத்தில் நீங்கள் எழுதிய "இதனைக் கட்டாயம் பார்ப்பேன்" எனும் கருத்தும், மேதகு வெளியானபின் நீங்கள் வேண்டுமென்றே காக்கும் மெளனமும் , இக்கட்டுரை மேதகு வெளிவந்தபின்னர் வெளியானதால் நிச்சயம் அதனை விமர்சிப்பதாகவே அமைந்திருக்கும் என்கிற எண்ணமும், அதனாலேயே இதனை நீங்கள் ஆதரித்தீர்கள் என்கிற எனது எனது நம்பிக்கையும்.

ஆனால் கட்டுரையினைப் படித்தபோதுதான் இவை எதற்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகிறது.

நாகரீகமாகச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 16:40, Justin said:

உறவே, இதைப் பல தடவை கேட்டிருக்கிறேன். பதில் சொல்லுங்கள்: தமிழர்கள் மட்டும் பார்க்கும் இந்தத் தளத்தில் சிங்களவனின் அநியாயங்களை அலசி, திட்டி என்ன செய்லபாட்டு ரீதியான விளைவு வரப் போகிறது? ஆளுக்காள் மாறி மாறி முதுகுப் புண்ணைச் சொறிந்து  சுகம் காண்பது மாதிரியல்லவா அது?

அல்லது இங்கே இருப்போருக்கு - அவர்கள் எந்த நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் - சிங்களவனின் அநீதிகளை நாம் சொல்லித் தான் தெரிய வைக்க வேண்டியிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

(எனக்கென்னவோ நீங்கள், "ட்ராபிக் கான்ஸ்ரபிள்" நடை முறையில் இறங்கியிருப்பதாகவே படுகிறது! இல்லையெனில் மன்னியுங்கள்!)

பதில் கருத்து வைக்க பிந்திவிட்டது .

@கற்பகதருஉங்களுக்கும் தான் பாஸ் தமிழ் இடதுசாரிகளின் முக்கியமான ஆக்கம் ஆறுதலாக படித்து பாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் இந்த கட்டுரையாளரின் கீழ்வரும் இந்த கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா? 

//கோவில் திருவிழாக்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து சின்னமேளமும் மேளக்காரர்களும் வந்த நிலை, இன்று பெரும்பாலும் இல்லை. என்றாலும், அதன் இடத்தில் தமிழ்ச் சினிமா, சின்னத் திரை, இந்தியக் கலைஞர்களது நிகழ்ச்சிகள் என்பனவே, எமது பொழுதுபோக்குகளாக மாறியிருக்கின்றன//

COVIDற்கு முன்பு எத்தனை கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் நடந்திருக்கும்.. இதில் எத்தனை இலங்கையில் உள்ள கலைஞர்களை வரவழைத்து நடாத்தப்பட்டன?.. 

இங்கே அவுஸ்ரேலியாவில் திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழாக்களுக்கு சினிமா கலைஞர்களையோ, பாட்டுகலைஞர்களை அழைக்கிறார்களோ தெரியாது, அதே போல  மற்றைய நாடுகளைப்பற்றி தெரியாது, ஆனால் இங்கிலாந்தில் இந்தமாதிரி அழைத்து நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கிறார்கள்..

அத்துடன், கொஞ்ச காலத்திற்கு முன்பு எங்களுடைய ஈழத்தமிழர்களில் நன்கு வசதிபடைத்தவர்கள் சிலர் சினிமாபடம் எடுக்கிறேன், சினிமாவில் நடிக்கிறேன் என பணத்தை இழந்த கதைகளும் உண்டு.. 

இந்த கட்டுரையாளரையோ, இல்லை இந்த பத்திரிக்கையைபற்றியும் நான் அறியமாட்டேன், ஆனால் அவருடைய மேற்சொன்ன கருத்தை நடைமுறையில் காணலாம்.. 

அதேபோல சில வாரங்களுக்கு முன்பும்(மேதகு வெளியாவதற்கு முன்பு) “ இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும்” என்ற தலைப்பில் கூட இந்த மயக்கத்தை இன்னொருவர் எழுதியையும் வாசித்த நினைவு உள்ளது. 

ஜஸ்டினிக்குக் கூறிய பதில்தான் உங்களுக்கும் பிரபா,

கட்டுரையினைப் படிக்காது கருத்து எழுதுவதால் வந்த வினை.

நீங்கள் கூறியது தவறில்லை. உண்மையும் அதுதான். 

தமிழக சினிமா மோகம் என்பது ஈழத்து சினிமாவினது வர்த்தகத் தோல்வியாலும், சிங்கள அரசுகளின் பாராமுகத்தாலும் ஏற்பட்டது என்று நம்புகிறேன். ஈழத்துச் சினிமாவின் வெற்றிடத்தை தமிழக சினிமா ஆக்கிரமித்துக் கொண்டது. ஆரம்பத்தில் திரைப்படங்களை தருவித்ததுமுதல் இன்று ஈழத்துத் தமிழனின் பணத்தை இலக்குவைத்தே அது புலம்பெயர் நாடுகளில் விரிவுபடுத்தப்படுவதுவரை அது ஆக்கிரமித்து நிற்கிறது. 

கட்டுரையாளர் சொல்வதுபோல ஈழத்தமிழனின் அவலத்தையும், பணத்தையும் தமது அரசியல் குறிக்கோள்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் பாவிக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதில் விதிவிலக்காக இன்று எவரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

இறுதியாக ஈழத்தமிழினம் தமிழகத்தவரைப் போல் அல்லாமல் கலாசார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மேம்பட்ட சமூகமாக இருக்கிறது என்று நாம் நம்புவோமாக இருந்தால் அது தவறு என்றே நான் நினைக்கிறேன். தமிழகத்தவர்கலுக்கும் எமக்கும் இடையே இருக்கும் ஒரே வித்தியாசம் நாம் ஒரு இனவழிப்பினுள் வாழ்பவர்கள். எமது வாழ்வு இந்த இனவழிப்பினுள் இருந்து எம்மைத் தக்கவைக்கும் எமது முயற்சிகளைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. இதனாலேயே கடந்த 40 வருட காலத்தில் நாம் எமது கலாசார, கலை அமைப்புக்களை விருத்திசெய்வது பற்றிச் சிந்திக்காமலும், இலகுவாகக் கிடைக்கின்ற தமிழகச் சினிமாவை இறக்குமதி செய்வதிலும் உழன்று வருகிறோம். அடுத்ததாக, முற்றான அடிமைத்தனத்தில் வாழும் எம்மால் உள்ளூரில் சுதந்திரமாக, எமது அன்றாட போராட்ட வாழ்வினை பிரதிபலிக்கும் ஒரு தரமான சினிமாவை எடுத்துவிட முடியுமா? ஆனால், புலம்பெயர் தேசத்தில் அந்தச் சுதந்திரம் இருக்கிறது, ஆனால் நாம் அதனைச் செய்யாமல் இலகுவாக நமது காலடிக்கே வரும் தமிழகச் சினிமாவை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்கிறோம். இது ஒரு பிரச்சினைதான்.

அதுசரி, உங்களது கேள்வியென்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, அக்னியஷ்த்ரா said:

சீமான் & ரா வும்  போராட்டத்தை வைத்து தேசியத்தை காயடிக்கிறார்  என்ற  அயல்வீட்டு  எலியை பார்த்து  கூப்பாடு போடுபவர்கள், 
மத்திய அரசும் & ரா வும் சேர்ந்து கூத்தமைப்பை வைத்து தமிழர்களை அடியோடு காலிசெய்கிறது என்ற உள்வீட்டு பெருச்சாளியை  கண்டுகொள்ளாதது ஏனோ..மீனிலங்கோவும் மஜில்சும் எப்படியான கேஸுகள் என்பது எங்களுக்கு எப்போதோ தெரிந்தவிடயம், சீமானை இந்திய உளவுத்துறை வழிநடத்துகிறது என்று பொரிந்துதள்ளுவர், அதையே கூத்தமைப்பு இந்தியாவிற்கு,இந்திய தூதரகத்திற்கு  போய் உயர்மட்ட சந்திப்புக்கள் செய்துவிட்டு வந்தால் பம்முவர், சீமானை உளவுத்துறை வழி நடத்துவதால் எமக்கு போனது கூந்தல் ,ஆனால் எமது கூத்தமைப்பு அவர்களது Proxy க்களாக இருப்பது எமது இருப்பையே காலி செய்யும் உத்தி, உள் வீட்டு பெருச்சாளிகளை அடித்து துவைத்து விட்டு அயல் வீட்டுக்காரனுக்கு  போகலாம்.         

3 hours ago, Maruthankerny said:

அவர்களும் ஈழ டமிளர்கள் 
நாங்களும் ஈழ டமிளர்கள் 

அங்கு நடப்பதும் 
இங்கு நடப்பதும் 
ஒன்ருக்குள்ள ஒன்றுதானே 

எமக்குள்ளே பேசி ஏதாவது நடக்க போகிறதா? இதை பலமுறை கேட்க்கிறேன் 
அல்லது அதை வாசித்து அறிய யாரும் இருக்கிறார்களா?

சீமான் மாட்டர் என்றால் கொண்டுவாருங்கள் 
எல்லோரும் பேசுவோம் அது எவ்வளவு முக்கியமான விஷயம் 
தெற்காசிய கண்டமே ... அவர் பேசித்தான் கெட்டு போய் இருக்கு 

இப்போ இந்தியாவில் போதிய மலை வீழ்ச்சி இல்லை வறட்ச்சி 
சீமான் பேசு முன்பு ஒழுங்காக மழை இருந்தது. 

அவர் எவ்வளவு பெரிய கட்டுரை எழுதி இருக்கிறார் 
வாசிச்சு அறிய எவ்வளவு அரசியல் இருக்கு ...

அத விட்டுட்டு வந்திட்டார் கூட்டமைப்பு அது இது இது என்று 

அண்ணா, தம்பி,

என்னை பற்றி எழுதுவதெண்டால் குறைந்த பட்சம் ஒரு @goshan_che போட்டாவது எழுதுங்க மக்காள். நீங்கள் திரி திரியா புறு புறுப்பதற்கெல்லாம் தேடி தேடியா ஒரு மனுசன் பதில் எழுத முடியும்.

1. கூட்டமைப்பு றோவின் கைப்பாவை என்பதை நான் மறுக்கவில்லையே? இந்திய தூதரகத்தில் என்ன சிஐஏ ஆட்களா இருப்பார்கள்? இந்திய வெளிவிவகார அமைச்சரே 90களின் மத்தியில் இலங்கையின் ரோவின் ஏஜெண்ட்தான். கூட்டமைப்பு ரோ கிழித்த கோட்டை தாண்டாத பத்தினி என்பது ஊருக்கே தெரிந்த விசயம் இதில் கோசான் அதை பற்றி எழுதினால் என்ன. எழுதாவிட்டால் என்ன. தவிரவும் அந்த திரியில் - மிக தெளிவாக கோட்டா பேச மறுத்தவுடன், கூடமைப்பு இந்தியாவுடன் போய் பேசியுள்ளது என்று எழுதியே போனேன்.

2. கூட்டமைப்பை அடித்து துவைக்க நானும் ரெடி. ஒவ்வொருக்கா அடிக்கும் போதும் ஒரு @ போட்டு விடுங்கள். வந்து ஒரு கை போடுகிறேன்.

3. ஆனால் வியாழேந்திரனின், சந்திரகாந்தனின், முரளிதரனின் ஓட்டைகளை மறைக்க நீங்கள் கூட்டமைப்பையும், ஒட்டு மொத்த தேசிக்காய்களையும் போட்டு கும்முவதையும் சுட்டியும் காட்டுவேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 07:06, கிருபன் said:

எம்.ஜி. இராமச்சந்திரனில் தொடங்கி, சீமான் வரை, ஈழப்போராட்டத்தை சரிவர விளங்காத, அணுக இயலாத, தங்கள் சுயஅரசியலுக்குப் பயன்படுத்தியோரை நம்பி, சீரழிந்தவர்கள் ஈழத்தமிழர்கள்.

சரிவர விளங்காதவர்தளை நம்பி சீரழிந்துபோக ஈழ தமிழர்கள் அவ்வளவு மோசமான கூமுட்டைகள் அல்ல, தமிழகம் தமிழக அரசியல் தலைமகளை தவிர்த்து வேறெங்குமே ஈழபோராட்டத்துக்கு போராளிகளுக்கு நேரடியான தார்மீக ஆதரவுகள் இருந்ததில்லை, கிடைத்த ஆதரவை தமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் ஒரு பகுதியாக பயன்படுத்தினார்கள் அவ்வளவுதான்.

சிங்களவனுக்கெதிராய் போராடி உயிர் துறக்க எமக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சொல்லி தரவில்லை அது போராளிகளை, போராட்டத்தை கொச்சை படுத்துவதற்கு சமம்.

எம்ஜிஆர் எமது பிரச்சனையை 100% சுயநல அரசியலுக்கு பயன்படுத்தியிருப்பார் என்று நாம் பேசினால் எம் நாக்கு அழுகிபோகும்.

எம் போராட்டத்துக்கு அள்ளி அள்ளி வழங்கியபோதோ,கைது செய்யப்பட்ட தலைவரை விடுதலை செய்தபோதோ , கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை தொலை தொடர்பு சாதனங்களை  திருப்பி கொடுத்தபோதோ  எம்ஜிஆர் ஒன்றும் எதிர்கட்சியிலோ அல்லது ஆட்சிக்கு வர ஆசைபடும் ஒரு சிறு கட்சியிலோ இருந்திருக்கவில்லை,

அவர் எப்போதோ தமிழக மக்களின்  மிக பெரும் ஆதரவுடன் அரியாசனத்தில் இருந்தார் ,ஒருதடவை ஆட்சியை பிடித்த அவர் மீண்டும் மீண்டும் தேர்தல் வந்தபோதும் அவரே ஆட்சிக்கட்டிலை பிடித்தார், அதற்கு ஈழதமிழர்களை வைத்தான சுயநல அரசியல் அவருக்கு தேவைப்பட்டிருக்கவில்லை.

புலிகள் இயக்கம் ஒரு கட்டத்தில் கோபுரமாய் எழுந்து நின்றதென்றால், அதன் அத்திவாரத்திற்க்கு தோள் கொடுத்தவர்களில் முதன்மையானவர் எம்ஜிஆர் என்பதை தலைவரே காணொலியில் ஒப்புக்கொண்ட விசயம், அது மகத்தானது மட்டுமல்ல மறக்கப்பட முடியாதது.

உயர்ந்த இடத்திலிருந்துகொண்டே எம் போராட்டத்துக்கு முதுகெலும்பாக இருந்து மறைந்தார் எம்ஜிஆர்  . அவர்பற்றி கட்டுரை எழுதி கலாய்க்க கண்டவருக்கெல்லாம் உரிமை கிடையாது.

On 27/6/2021 at 07:06, கிருபன் said:

சீமான்  ஈழப்பிரச்சினைக்குக் காப்புரிமை வாங்கியது போல செயற்படுகிறார். அதற்குப் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வற்றாத நிதி உதவுகிறது. 

2009ன் பின்னர் ஈழதமிழர் சம்பந்தமான எந்த நடவடிக்கைகளுக்கும் வற்றாதநிதி என்று புலம்பெயர் தமிழர்கள் எந்த ஒரு விஷயத்துக்குமே வழங்கவில்லை, இனியும் வழங்கபோவதில்லை.

போரினால் வாழ்வாதாரம் சிதறி சின்னாபின்னமான எமது மக்களுக்குகூட தனிப்பட்ட ரீதியில் உதவி செய்வதை தவிர்த்து , அரசியல் கட்சிகளோ அமைப்புக்கள் மூலமோ வற்றாதநிதி வழங்கி திட்டங்களை செயல்படுத்த அவர்கள் ஒருபோதும் தயாரில்லை,

அதற்கு அவர்களின் சுயநலம் காரணமில்லை இனிமேல் எவரையும் நம்பி பொன் பொருள் என வற்றாதநிதி வழங்க புலம்பெயர் சமூகம் தயாரில்லை என்பதே பொருள்.

கட்டுரையாளரின் நோக்கம் எம்மீதுள்ள பரிவல்ல, காயப்பட்டிருக்கும் ஈழதமிழரை அவர்கள் நடத்திய போராட்டத்தை நக்கலடிப்பது மட்டுமே குறிக்கோள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

சரிவர விளங்காதவர்தளை நம்பி சீரழிந்துபோக ஈழ தமிழர்கள் அவ்வளவு மோசமான கூமுட்டைகள் அல்ல, தமிழகம் தமிழக அரசியல் தலைமகளை தவிர்த்து வேறெங்குமே ஈழபோராட்டத்துக்கு போராளிகளுக்கு நேரடியான தார்மீக ஆதரவுகள் இருந்ததில்லை, கிடைத்த ஆதரவை தமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் ஒரு பகுதியாக பயன்படுத்தினார்கள் அவ்வளவுதான்.

சிங்களவனுக்கெதிராய் போராடி உயிர் துறக்க எமக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சொல்லி தரவில்லை அது போராளிகளை, போராட்டத்தை கொச்சை படுத்துவதற்கு சமம்.

எம்ஜிஆர் எமது பிரச்சனையை 100% சுயநல அரசியலுக்கு பயன்படுத்தியிருப்பார் என்று நாம் பேசினால் எம் நாக்கு அழுகிபோகும்.

எம் போராட்டத்துக்கு அள்ளி அள்ளி வழங்கியபோதோ,கைது செய்யப்பட்ட தலைவரை விடுதலை செய்தபோதோ , கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை தொலை தொடர்பு சாதனங்களை  திருப்பி கொடுத்தபோதோ  எம்ஜிஆர் ஒன்றும் எதிர்கட்சியிலோ அல்லது ஆட்சிக்கு வர ஆசைபடும் ஒரு சிறு கட்சியிலோ இருந்திருக்கவில்லை,

அவர் எப்போதோ தமிழக மக்களின்  மிக பெரும் ஆதரவுடன் அரியாசனத்தில் இருந்தார் ,ஒருதடவை ஆட்சியை பிடித்த அவர் மீண்டும் மீண்டும் தேர்தல் வந்தபோதும் அவரே ஆட்சிக்கட்டிலை பிடித்தார், அதற்கு ஈழதமிழர்களை வைத்தான சுயநல அரசியல் அவருக்கு தேவைப்பட்டிருக்கவில்லை.

புலிகள் இயக்கம் ஒரு கட்டத்தில் கோபுரமாய் எழுந்து நின்றதென்றால், அதன் அத்திவாரத்திற்க்கு தோள் கொடுத்தவர்களில் முதன்மையானவர் எம்ஜிஆர் என்பதை தலைவரே காணொலியில் ஒப்புக்கொண்ட விசயம், அது மகத்தானது மட்டுமல்ல மறக்கப்பட முடியாதது.

உயர்ந்த இடத்திலிருந்துகொண்டே எம் போராட்டத்துக்கு முதுகெலும்பாக இருந்து மறைந்தார் எம்ஜிஆர்  . அவர்பற்றி கட்டுரை எழுதி கலாய்க்க கண்டவருக்கெல்லாம் உரிமை கிடையாது.

இது ஓரளவிற்கு உண்மைதான்.

ஈழத்தமிழருக்கான ஆதரவென்று பார்க்கும்போது மூன்றுவகையான  பிரிவுகள் இந்தியாவில் இருக்கின்றன. 

1. இந்தியாவின் பூகோள பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினை மட்டுமே நோக்காகக் கொண்டு ஈழத்தமிழ்ப் போராளிகளுக்கான ஆயுத உதவியை செய்தது. ஆனால் தமிழர்களுக்கான தனிநாடு என்பது எப்போது இந்த நோக்கங்களில் ஒன்றாக இருந்ததில்லை - இந்திய நடுவண் அரசு

2. தமிழகத்தில் இருந்த, இருக்கின்ற சில அரசியல்வாதிகள் தமது எதிர்த்தரப்பு ஈழத்தமிழ்ப் போராளிகளுக்கு உதவும்போது, அதனால் அத்தரப்பு அரசியல் ஆதாயம் பெற்றுவிடக் கூடாதென்பதற்காக தாமும் போராளிகளுக்கு உதவியமை - கருனாநிதி, ஜெயலலிதா.....நீண்டு செல்லும் பட்டியல்

3. எந்தவிதமான பிரதியுபகாரத்தையும் எதிர்பாராமல் தனது மொழிபேசும் இனம் அழியும்போது இயல்பாகவே ஏற்படும் பரிதாபத்தாலும், இரக்கத்தாலும் அவ்வினத்திற்காக உணர்வுரீதியாகக் குரல்கொடுக்கும் வகையினர் - சாதாரண பொதுமக்கள், சில கலையுலக பிரதிநிதிகள். வேண்டுமென்றே பெயர்களை இங்கு தவிர்த்துவிடுகிறேன். 

எம் ஜி ஆர் புலிகளுக்கு உண்மையாகவே உதவினார். தமிழர் தனிநாடு அடையவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. இதனை எவரும் மறுக்கப்போவதில்லை. எம் ஜி ஆர் தமிழருக்கு வழங்கிய ஆதரவினை சாக்கடை அரசியல்வாதிகளான கருனாநிதி மற்றும் ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் மீதான முதலைக் கண்ணீருடன் ஒப்பிட முடியாது. ஆனால், எம் ஜி ஆர் ஈழத்தமிழருக்கான தனது ஆதரவினால் அரசியல் ரீதியான அனுகூலங்களைப் பெற்றாரா இல்லையா என்பதற்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன். இதனால் நான் எம் ஜி ஆரின் தார்மீக ஆதரவினையும், உண்மையான கரிசனையினையும் கேள்விகேட்கிறேன் என்று மட்டும் கருதிவிடாதீர்கள். அது என் நோக்கமும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, valavan said:

சரிவர விளங்காதவர்தளை நம்பி சீரழிந்துபோக ஈழ தமிழர்கள் அவ்வளவு மோசமான கூமுட்டைகள் அல்ல, தமிழகம் தமிழக அரசியல் தலைமகளை தவிர்த்து வேறெங்குமே ஈழபோராட்டத்துக்கு போராளிகளுக்கு நேரடியான தார்மீக ஆதரவுகள் இருந்ததில்லை, கிடைத்த ஆதரவை தமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் ஒரு பகுதியாக பயன்படுத்தினார்கள் அவ்வளவுதான்.

சிங்களவனுக்கெதிராய் போராடி உயிர் துறக்க எமக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சொல்லி தரவில்லை அது போராளிகளை, போராட்டத்தை கொச்சை படுத்துவதற்கு சமம்.

எம்ஜிஆர் எமது பிரச்சனையை 100% சுயநல அரசியலுக்கு பயன்படுத்தியிருப்பார் என்று நாம் பேசினால் எம் நாக்கு அழுகிபோகும்.

எம் போராட்டத்துக்கு அள்ளி அள்ளி வழங்கியபோதோ,கைது செய்யப்பட்ட தலைவரை விடுதலை செய்தபோதோ , கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை தொலை தொடர்பு சாதனங்களை  திருப்பி கொடுத்தபோதோ  எம்ஜிஆர் ஒன்றும் எதிர்கட்சியிலோ அல்லது ஆட்சிக்கு வர ஆசைபடும் ஒரு சிறு கட்சியிலோ இருந்திருக்கவில்லை,

அவர் எப்போதோ தமிழக மக்களின்  மிக பெரும் ஆதரவுடன் அரியாசனத்தில் இருந்தார் ,ஒருதடவை ஆட்சியை பிடித்த அவர் மீண்டும் மீண்டும் தேர்தல் வந்தபோதும் அவரே ஆட்சிக்கட்டிலை பிடித்தார், அதற்கு ஈழதமிழர்களை வைத்தான சுயநல அரசியல் அவருக்கு தேவைப்பட்டிருக்கவில்லை.

புலிகள் இயக்கம் ஒரு கட்டத்தில் கோபுரமாய் எழுந்து நின்றதென்றால், அதன் அத்திவாரத்திற்க்கு தோள் கொடுத்தவர்களில் முதன்மையானவர் எம்ஜிஆர் என்பதை தலைவரே காணொலியில் ஒப்புக்கொண்ட விசயம், அது மகத்தானது மட்டுமல்ல மறக்கப்பட முடியாதது.

உயர்ந்த இடத்திலிருந்துகொண்டே எம் போராட்டத்துக்கு முதுகெலும்பாக இருந்து மறைந்தார் எம்ஜிஆர்  . அவர்பற்றி கட்டுரை எழுதி கலாய்க்க கண்டவருக்கெல்லாம் உரிமை கிடையாது.

2009ன் பின்னர் ஈழதமிழர் சம்பந்தமான எந்த நடவடிக்கைகளுக்கும் வற்றாதநிதி என்று புலம்பெயர் தமிழர்கள் எந்த ஒரு விஷயத்துக்குமே வழங்கவில்லை, இனியும் வழங்கபோவதில்லை.

போரினால் வாழ்வாதாரம் சிதறி சின்னாபின்னமான எமது மக்களுக்குகூட தனிப்பட்ட ரீதியில் உதவி செய்வதை தவிர்த்து , அரசியல் கட்சிகளோ அமைப்புக்கள் மூலமோ வற்றாதநிதி வழங்கி திட்டங்களை செயல்படுத்த அவர்கள் ஒருபோதும் தயாரில்லை,

அதற்கு அவர்களின் சுயநலம் காரணமில்லை இனிமேல் எவரையும் நம்பி பொன் பொருள் என வற்றாதநிதி வழங்க புலம்பெயர் சமூகம் தயாரில்லை என்பதே பொருள்.

கட்டுரையாளரின் நோக்கம் எம்மீதுள்ள பரிவல்ல, காயப்பட்டிருக்கும் ஈழதமிழரை அவர்கள் நடத்திய போராட்டத்தை நக்கலடிப்பது மட்டுமே குறிக்கோள்.

மீநியின் இந்த கட்டுரையை பொறுத்தவரை உங்கள் பார்வைதான் எனதும்.

நாம் ஒரு போதும் தமிழ்நாட்டில் இருந்த எவராலும் வழிநடத்தபட்டவர்கள் இல்லை. 

சீமான் விடயத்தில் கூட, இதை யாழில் கூட காணலாம், பலர் அதிகம் அலட்டி கொள்வதில்லை.

மிக சொற்பமானோரே கடுமையாக ஆதரித்தும், எதிர்த்தும் எழுதுகிறார்கள்.

இது புலம்பெயர் நாட்டில்.

ஊரில் சீமான் ஒரு பேசு பொருளே இல்லை. 

ஆகவே நாம் எல்லோரும் தமிழக மாயையில் இழுபட்டு போனோம், போகிறோம் என்பது ஏற்புடையதல்ல.

எமது வீடுகளுக்குள் மானாட மயிலாடிய போது, இன்னும் பல வழிகளில் நாம் தமிழ்நாட்டின் பலவகை பொருட்களுக்கும், சேவைகளுக்கும் நுகர்வு சந்தை ஆனபோது எழாத இந்த கட்டுரை “மேதகு”வின் பின்வருவது ஏன்? என்ற கேள்வியிலும் அர்த்தம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, valavan said:

2009ன் பின்னர் ஈழதமிழர் சம்பந்தமான எந்த நடவடிக்கைகளுக்கும் வற்றாதநிதி என்று புலம்பெயர் தமிழர்கள் எந்த ஒரு விஷயத்துக்குமே வழங்கவில்லை, இனியும் வழங்கபோவதில்லை.

போரினால் வாழ்வாதாரம் சிதறி சின்னாபின்னமான எமது மக்களுக்குகூட தனிப்பட்ட ரீதியில் உதவி செய்வதை தவிர்த்து , அரசியல் கட்சிகளோ அமைப்புக்கள் மூலமோ வற்றாதநிதி வழங்கி திட்டங்களை செயல்படுத்த அவர்கள் ஒருபோதும் தயாரில்லை,

அதற்கு அவர்களின் சுயநலம் காரணமில்லை இனிமேல் எவரையும் நம்பி பொன் பொருள் என வற்றாதநிதி வழங்க புலம்பெயர் சமூகம் தயாரில்லை என்பதே பொருள்.

கட்டுரையாளரின் நோக்கம் எம்மீதுள்ள பரிவல்ல, காயப்பட்டிருக்கும் ஈழதமிழரை அவர்கள் நடத்திய போராட்டத்தை நக்கலடிப்பது மட்டுமே குறிக்கோள்.

கிட்டத்தட்ட எனது கருத்தும் இதுதான்.

புலிகளுக்காக வழங்கப்பட்ட நிதியினைப்போன்று புலம்பெயர் தமிழினம் வேறு எவருக்கும் இதுவரை வழங்கவில்லை, சீமான் உட்பட. 

ஆனால், புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சீமானுக்கு பணத்தினை வாரியிறைக்கிறார்கள் என்பது அண்மைய தமிழகத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தாலும், அக்கட்சியினது உதிரிகளாலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. ஈழத்தமிழனத்தின் இனக்கொலையில் பங்காளியாகிவிட்ட திராவிடக் கட்சிகள் ஈழத்தமிழினம் இனி ஒருபோதுமே தம்மை அனுசரிக்கப்போவதில்ல என்கிற முடிவினால் ஈழத்தமிழினத்தை நேரடியாகவே எதிர்ப்பது எனும் நிலைப்பாட்டினால் சீமானுக்கு புலம்பெயர் பணம் உதவுகிறது எனும் அபத்தத்தை முன்னிறுத்தி வாக்குக் கேட்டது. திராவிடக் கும்பல்களின் இக்குற்றச்சாட்டு, புலிகளுக்கு புலம்பெயர் தமிழர்களின் நிதி உதவுகிறது எனும் சிங்களப் பேரினவாதத்தின் பிரச்சாரத்தினை ஒட்டி வந்தது. 

எமது வியர்வையாலும், குருதியாலும் சேர்க்கப்படும் பணம் எமது இனத்தின் அன்றாட வாழ்வினை மேம்படுத்தவும் விடுதலையினை வென்றெடுக்கவும் மட்டுமே பயன்படும் என்பது எனது நம்பிக்கை. இப்பணம் எக்காரணம் கொண்டும் தமிழக அரசியல் குதிரைகளில் கட்டப்படாது என்றும் நான் நம்புகிறேன். ஏனென்றால் தமிழகத்து அரசியல்வாதிகளுக்கு நாம் வழங்கும் பணத்தினால் எமக்கு நண்மைகள் ஏதும் கிட்டப்போவதில்லை. அப்பணம் அவர்களின் அரசியல் இருப்பிற்காகவே பயன்படும் என்பதையும் மறுக்கமுடியாது. இதுதொடர்பாக புலம்பெயர் ஈழத்தமிழினம் தெளிவாகவே இருக்கிறது என்பது எனது நம்பிக்கை. 

11 minutes ago, goshan_che said:

எமது வீடுகளுக்குள் மானாட மயிலாடிய போது, இன்னும் பல வழிகளில் நாம் தமிழ்நாட்டின் பலவகை பொருட்களுக்கும், சேவைகளுக்கும் நுகர்வு சந்தை ஆனபோது எழாத இந்த கட்டுரை “மேதகு”வின் பின்வருவது ஏன்? என்ற கேள்வியிலும் அர்த்தம் உண்டு.

அதே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.