Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த வாரம் 160 ரூபாவிலிருந்த சீனியின் விலை இவ்வாரம் 210 ரூபாவாக உயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை இந்த வாரம் 210 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

விலைவாசி உயர்வு நியாயமற்றது என்றாலும், அது குறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறியுள்ளார்.

இதனிடையே கொவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பொது மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அரசாங்கத்தின் வருமானம் கடுமையாக குறைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி உலகம் முழுவதையும் பாதித்துள்ளதாகவும், இந் நிலையில் விலை வீழ்ச்சியை பொதுமக்கள் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் 160 ரூபாவிலிருந்த சீனியின் விலை இவ்வாரம் 210 ரூபாவாக உயர்வு | Virakesari.lk

  • Replies 56
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இனி இப்படிப் பல காட்சிகள் அரங்கேறும். வங்கியில் இருந்து பணம் எடுப்பதிலும் கூட கெடுபிடிகள் ஆரம்பமாம். 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, nedukkalapoovan said:

இனி இப்படிப் பல காட்சிகள் அரங்கேறும். வங்கியில் இருந்து பணம் எடுப்பதிலும் கூட கெடுபிடிகள் ஆரம்பமாம். 

ஏன் பணம் எடுப்பது சிரமம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, யாயினி said:

ஏன் பணம் எடுப்பது சிரமம்.

கடந்தமுறை போட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கின்போது மட்டுப்படுத்திய அளவில் தான் வங்கிகள் பணம் எடுக்க அனுமதித்தன.

  • கருத்துக்கள உறவுகள்

சீனியை வியாபாரிகள் பதுக்கி விட்டார்கள். சர்க்கரை குடும்பத்துக்கு ஒரு கிலோ மட்டுப்படுத்தபட்ட அளவில் சில கடைகள் விநியோகம் செய்வதாக அறிந்தேன். சீனி உடல் நலத்துக்கு உகந்தது இல்லை என்ற அளவில் ஆறுதல் படவேண்டியதுதான் எல்லாம் நல்லதுக்கு என்றே.

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் பழைய கிளவி கதவை திறடி நிலமைதான் கற்கண்டோ ,சக்கரைக்கட்டியோ தெரியல நமக்கு பழக்கமான ஒன்று சிறட்டையில் தேநீரும் கையில் சக்கரைக்கட்டியுடன் எல்லோரும் கூடியிருந்த குடித்த ஞாபகம். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை உள்ளவர்கள் சீனி பாவிக்கும் அளவுக்கு சீனியாலையே நாடு முழ்கிப்போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

இங்கை உள்ளவர்கள் சீனி பாவிக்கும் அளவுக்கு சீனியாலையே நாடு முழ்கிப்போகும்.

பழகி விட்டார்கள் மாற்ற முடியாது அதுவும் உடம்பில் சீனி அதிகம் ஏற்படாமல் இருந்தால் இன்னும் தேவை அதிகமாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பனம்கற்காரம் சாப்பிடுங்கோ! 👏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விரைவில் பழைய கிளவி கதவை திறடி நிலமைதான் கற்கண்டோ ,சக்கரைக்கட்டியோ தெரியல நமக்கு பழக்கமான ஒன்று சிறட்டையில் தேநீரும் கையில் சக்கரைக்கட்டியுடன் எல்லோரும் கூடியிருந்த குடித்த ஞாபகம். 

வரலாறு மீண்டும்   மீண்டும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கட காலத்தில பேரீச்சம்பழச்சக்கை பாவிச்சனாங்கள்! பிளேன் ரீக்கு நல்லா இருக்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:
6 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கை உள்ளவர்கள் சீனி பாவிக்கும் அளவுக்கு சீனியாலையே நாடு முழ்கிப்போகும்.

பழகி விட்டார்கள் மாற்ற முடியாது

வசதிகள் இருக்கின்றது மாற்ற வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, புங்கையூரன் said:

எங்கட காலத்தில பேரீச்சம்பழச்சக்கை பாவிச்சனாங்கள்! பிளேன் ரீக்கு நல்லா இருக்கும்..!

உண்மையில் பேரீச்சம் பழம் அல்லது சக்கை, தேநீருக்கு ருசியானதே.

இப்பொது,ஹிஸ்புல்லாவிடம் கேட்களாம் காத்தான் குட்டியில் இருந்து பேரீச்சம் பழம் நாடு பூராவும் கொடுக்க முடியுமா என்று .  
 
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

எங்கட காலத்தில பேரீச்சம்பழச்சக்கை பாவிச்சனாங்கள்! பிளேன் ரீக்கு நல்லா இருக்கும்..!

நான் சின்னப்பருவத்தில் சிறிய சக்கரைக்கட்டி , சீனிக்கட்டியுடனும் குடித்து இருக்கிறன் தேநீர்  அதன் பிறகு அல்வா (பால்) கட்டியும் வந்தது 

19 hours ago, நிலாமதி said:

வரலாறு மீண்டும்   மீண்டும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது 

ம் சுமக்க நாங்கள் இருக்கிறம் என்ற வசனத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2021 at 12:53, சுவைப்பிரியன் said:

இங்கை உள்ளவர்கள் சீனி பாவிக்கும் அளவுக்கு சீனியாலையே நாடு முழ்கிப்போகும்.

உண்மைதான், இங்கமட்டுமல்ல, இலங்கையிலும் கடந்த காலத்தை நினைச்சு பார்க்கிறேன்,

தேத்தண்ணிக்கு சிலர் சீனி போடுவார்கள் ஒரு மிடறு குடிச்சா உதடுகள் அப்பிடியே ஒட்டிக்கொள்ளும்.

பால்மாவுக்கு சீனிய அள்ளிபோடுறது, புட்டுக்கு வாழைப்பழம் சீனிபோட்டு பினைஞ்சுபோட்டு வெளுத்துக்கட்டுறது, அந்தகளி இந்த களி எண்டு சொல்லி கிண்டுவினம் அதுக்குள்ள அரைகிலோ சீனிக்குமேல் இருக்கும் , கல்பணிஸ் சங்கிலிபாண் எண்டு ஒண்டு விக்கும் அதுக்குமேல சீனி சினோ ரேஞ்சில தூவியிருக்கும், கோப்பி குடிச்சிட்டு நிலத்தில் ஊத்தினா எறும்புகள்  தியேட்டர்ல படம் பாக்க போன ஆக்கள்மாதிரி   நூற்றுக்கணக்கில மொய்ச்சு நிக்கும்.

 கல்யாண வீட்டு பலகாரங்களுக்கு சீனி பாணியை காய்ச்சி அரை அங்குலத்துக்கு நிக்குறமாதிரி அதில ஊத்தி காயவிடுறது, மாம்பழ அல்வா எண்டு கிண்டுவார்கள் மாம்பழத்திலும் சீனி, அதுக்குமேல இன்னும் சீனி 

70/80 வயசு கிழடுகளே தேத்தண்ணிக்கு சீனி காணாது எண்டு சண்டைபிடிச்ச சம்பவங்கள் இன்னும்  நினைவிருக்கு.

இப்போ சும்மா அதை நினைச்சு பார்த்தாலே சுகர் எகிறிபோய் மண்டைய போட்டுடுவோம். நான் நினைக்கிறேன் வருசத்தில்  9 மாசம் கடும் வெயில் இருக்கிறதால எல்லாம் உருகி கமக்கட்டு வழியே ஓடிருக்கும், இல்லாட்டில் இந்த அளவுல சீனி திண்டா ஊருக்க ஒரு உசிர் மிஞ்சியிருக்காது.

பனங்கற்கட்டி பனம் கற்கண்டு ஆரோக்க்கியமானது என்று சொல்வார்கள், வறுமை சில சமயம் பட்டினியை விதைத்தாலும் ஆயுளை நீட்டிவிட உதவி செய்கிறது.

இயல்பாகவே பல கோடீஸ்வரர்களைவிட பரம ஏழைகள் வாழும்நாள் அதிகம்.அதுக்காக வெளிநாட்டில் நீங்கள் எல்லாம் ரவுண்டுகட்டி அடிச்சிட்டு எங்களுக்கு ஆரோக்கியம்பற்றி வகுப்பெடுக்கிறீர்களா எண்டு யாரும் சண்டைக்கு வந்திடாதீங்க, தாயகத்தில் இருப்பவர்களைவிட புலம்பெயர் நாட்டில் வசிக்கும் தமிழர்கள்தான் குளிசையும் கையுமாக அலைவது அதிகம்.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

உண்மைதான், இங்கமட்டுமல்ல, இலங்கையிலும் கடந்த காலத்தை நினைச்சு பார்க்கிறேன்,

தேத்தண்ணிக்கு சிலர் சீனி போடுவார்கள் ஒரு மிடறு குடிச்சா உதடுகள் அப்பிடியே ஒட்டிக்கொள்ளும்.

பால்மாவுக்குள் சீனிய அள்ளிபோடுறது- நான் வெளிநாட்டில் கண்ட உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

அப்போ எல்லாரும்  ரசிச்சு சாப்பிட்டுப்போட்டு இப்போ கசக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, valavan said:

உண்மைதான், இங்கமட்டுமல்ல, இலங்கையிலும் கடந்த காலத்தை நினைச்சு பார்க்கிறேன்,

நான் இங்கை என்றது இலங்கையைத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2021 at 01:05, புங்கையூரன் said:

எங்கட காலத்தில பேரீச்சம்பழச்சக்கை பாவிச்சனாங்கள்! பிளேன் ரீக்கு நல்லா இருக்கும்..!

எங்களுக்கு அம்மா வெறும் தேத்தண்ணி ஒருகையிலும், கொஞ்சச் சீனியை மறுகையிலும் அம்மா தருவா. நான் கண்ணை மூடு மட மட வென்று குடித்துவிட்டு கடைசியிலை இருக்கும் கொஞ்சத் தேத்தண்ணியிலை மற்றக்கையிலுள்ள சீனியைப்போட்டு இனிக்க இனிக்கக் குடித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. 😌

மட்டக்கிளப்பை நினைக்கத்தான் எனக்குப் பெரும் கவலையாக இருக்கிறது. அங்குதான் சீனி போடுபவர்கள் அதிகம். போட்டு அடி உதை வாங்கியவர்களையும் கண்டுள்ளேன். தனிக்காட்டு ராசாவுக்கும் அனுபவம் இருக்கலாம். 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

நான் இங்கை என்றது இலங்கையைத் தான்.

ஓ.. நான் நினைச்சேன் நீங்கள் வாழும் சுவிசை சொன்னீர்கள் என்று.

7 hours ago, satan said:

அப்போ எல்லாரும்  ரசிச்சு சாப்பிட்டுப்போட்டு இப்போ கசக்குது.

உண்மைதான்  satan அப்போலாம் இனிப்பை கிலோ கணக்கில் போட்டு தாக்கினோம் அதுபற்றி அச்சம் வந்ததேயில்ல, காலபோக்கில் சுகரால் போய் சேர்ந்தவர்கள் கோடிபேர் என்று தெரிஞ்சபிறகு சீனியை கண்டாலே ஒரு பயம்,

எனக்கு நேரடியாக தெரிந்த பலர் சீனியால் பார்வை பறிபோனதும் இரண்டு கிட்னியும் பெயிலியர் ஆனதும், ஒருவருக்கு காலைகூட கழட்டிபோட்டாங்கள் அதுவேற, காலை ஏன் கழட்டுகினம் எண்டு தெரியல,

சரி அவசரபட்டு எதுக்கு மண்டைய போடுவான் எண்டுதான் இனிப்பை நினைச்சால் கசக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீனி கெளரவ பிரச்சனை.

சீனி வேண்டாம் அல்லது குறைத்து போடுங்கோ என்று சொல்ல வெட்கம்.

நாமாக குறைத்து போடுங்கோ அல்லது போடாட்டிலும் சரி என்று சொன்னாலும் அப்படி செய்ய அங்குள்ளவர்களுக்கு ஏதோ அவமரியாதை என எண்ணுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2021 at 01:05, புங்கையூரன் said:

எங்கட காலத்தில பேரீச்சம்பழச்சக்கை பாவிச்சனாங்கள்! பிளேன் ரீக்கு நல்லா இருக்கும்..!

இப்ப நாங்க குடிக்கிற காட்டைய அந்த காலத்தில் எவ்வளவு நக்கல் அடித்து இருப்போம்?😀

நான் நினைக்கிறேன் அங்கே வெய்யில் அல்லது வியர்வையால் சீனி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஓ.. நான் நினைச்சேன் நீங்கள் வாழும் சுவிசை சொன்னீர்கள் என்று.

உண்மைதான்  satan அப்போலாம் இனிப்பை கிலோ கணக்கில் போட்டு தாக்கினோம் அதுபற்றி அச்சம் வந்ததேயில்ல, காலபோக்கில் சுகரால் போய் சேர்ந்தவர்கள் கோடிபேர் என்று தெரிஞ்சபிறகு சீனியை கண்டாலே ஒரு பயம்,

எனக்கு நேரடியாக தெரிந்த பலர் சீனியால் பார்வை பறிபோனதும் இரண்டு கிட்னியும் பெயிலியர் ஆனதும், ஒருவருக்கு காலைகூட கழட்டிபோட்டாங்கள் அதுவேற, காலை ஏன் கழட்டுகினம் எண்டு தெரியல,

சரி அவசரபட்டு எதுக்கு மண்டைய போடுவான் எண்டுதான் இனிப்பை நினைச்சால் கசக்குது.

அதிகமாக நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நோய் கால்களை விரல்களை தாக்குவது அதிகம்.....விரல் இறைகளுக்குள் நீர்சிரங்கு போல அவியும் ஒரு கட்டத்தில் அழுகிய பழம்போல் வருவதால் வேறு வழியின்றி அந்தப் பாகத்தை துண்டித்து விடுவார்கள்......வருமுன் காப்பதே சிறந்தது.......இங்கு ஊசிகள் மருந்துகளால் புண் வராமல் தடுப்பார்கள்.....ஊரில் அது குறைவு மேலும் நோயாளியின் அலட்டசியமும் கூட.....!  😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

நான் நினைக்கிறேன் அங்கே வெய்யில் அல்லது வியர்வையால் சீனி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று?

சீனியை தேநீரை விட வேறு ஏதாவது தருணங்களில் பாவிப்பது அருமை.

இங்கு எல்லாமே சீனி மயம்.

விசுக்கோத்திலிருந்து கேக் என்று நாளாந்தம் நொறுக்கு தீனி.

ஊரில் வறுத்த விசுக்கோத்து பாண் இரண்டும் தான்.எப்பவாவது மலிபன் விசுக்கோத்து.

கேக் ஏதாவது பெருநாளுக்கு வேதக்கார நண்பர்கள் வீடுகளுக்கு போனால்த் தான்.

நாளாந்த வேலைகள் செய்யவே உள்ள சீனி கொழுப்பு எல்லாம் இறங்கிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் சீனி கெளரவ பிரச்சனை.

சீனி வேண்டாம் அல்லது குறைத்து போடுங்கோ என்று சொல்ல வெட்கம்.

நாமாக குறைத்து போடுங்கோ அல்லது போடாட்டிலும் சரி என்று சொன்னாலும் அப்படி செய்ய அங்குள்ளவர்களுக்கு ஏதோ அவமரியாதை என எண்ணுகிறார்கள்.

சிரிப்பு தாங்கல, நீங்கள் சொன்னது 100%உண்மை . அதோட சீனி போடாமல் தேத்தண்ணி கொடுத்தால் இனிமே இங்கால் பக்கம் வராத என்று அவமானபடுத்துவதாகவும் அர்த்தம் என்று பேசி கொள்வார்கள் .

31 minutes ago, suvy said:

அதிகமாக நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நோய் கால்களை விரல்களை தாக்குவது அதிகம்.....விரல் இறைகளுக்குள் நீர்சிரங்கு போல அவியும் ஒரு கட்டத்தில் அழுகிய பழம்போல் வருவதால் வேறு வழியின்றி அந்தப் பாகத்தை துண்டித்து விடுவார்கள்......வருமுன் காப்பதே சிறந்தது.......இங்கு ஊசிகள் மருந்துகளால் புண் வராமல் தடுப்பார்கள்.....ஊரில் அது குறைவு மேலும் நோயாளியின் அலட்டசியமும் கூட.....!  😎

விளக்கத்துக்கு  நன்றி சுவியண்ணா. சீனிபற்றி அதிகம் விழிப்புணர்வு அவசியம், சில வருடங்களின் முன்னர் என் நண்பரோட மனைவி தனிய இருந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது அப்படியே மயங்கி சோபாவில் இருந்திருக்கிறா நித்திரையென்று யாரும் கவனிக்கவில்லை, தாமதமாக கவனித்து ஆஸ்பத்திரி கொண்டுபோனதில் அவ ஏற்கனவே இறந்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்கள், காரணம் இரத்த அழுத்தமும் சுகரும்.

உப்பும் சீனியும் சேர்ந்து ஒருவரின் கதையை முடிச்சிருக்கு.

பச்சைகள் முடிந்துவிட்டது நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.