Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை: விசாரணை அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

2,900 முதல் 3,200 பேர் வரை சிறாரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய குற்றங்களில் ஈடுபட்டதாக திருச்சபை உறுப்பினர்களின் கொடுமைகள் தொடர்பாக விசாரிக்கும் குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி தமக்கு வலியை ஏற்படுத்துவதாக போப்பாண்டவர் பிரான்சிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியர்கள் போன்ற திருச்சபையின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

திருச்சபை அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் சங்கமான லா பரோல் லிபரேயின் (சுதந்திர பேச்சு) நிறுவனர் பிரான்சுவா டெவாக்ஸ், "இது நம்பிக்கைக்கு துரோகம், மன உறுதிக்கு துரோகம், குழந்தைகளுக்கு துரோகம்" என்று கூறினார்.

இது பிரான்சின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார். "திருச்சபையின் அனைத்துப் பொறுப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் இறுதியாக நிறுவன ரீதியிலான அங்கீகாரம் வழங்கியுள்ளீர்கள். இது ஆயர்கள் மற்றும் போப் ஆண்டவர் இன்னும் செய்யத் தயாராக இல்லாத ஒன்று." என்று அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சங்கத் தலைவர்

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

பாதிக்கப்பட்டவர்களின் சங்கமான லா பரோல் லிபரேயின் (சுதந்திர பேச்சு) நிறுவனர் பிரான்சுவா டெவாக்ஸ்

போப் கடந்த சில நாட்களில் வருகை தந்த பிரெஞ்சு ஆயர்களை சந்தித்த பிறகு இந்த அறிக்கை பற்றி அறிந்து கொண்டதாக வாடிகன் கூறியுள்ளது.

"பாதிக்கப்பட்டவர்களின் காயங்களுக்கு ஆழ்ந்த கவலையும், முன்வரும் துணிச்சலுக்கு நன்றியும் அவர் தெரிவித்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையின் வெளியீடு உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளுக்கு எதிரான பல கோரிக்கைகள் மற்றும் வழக்குகளைத் தொடர்ந்து நடந்திருக்கிறது.

சுயேச்சையான இந்த விசாரணை 2018 இல் பிரெஞ்சு கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்டது.

இது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றம், காவல்துறை மற்றும் திருச்சபை பதிவுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமும் சாட்சிகளிடமும் தகவல்களைப் பெற்றது.

விசாரணையால் மதிப்பிடப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பிரெஞ்சு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர மிகவும் பழையவை எனக் கருதப்படுகின்றன.

'பாதிக்கப்பட்டவர்களை நம்பவில்லை'

ஏறக்குறைய 2,500 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களில் "பெரும்பான்மையானவர்கள்" 10 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்று கூறியுள்ளது.

திருச்சபை பாலியல் கொடுமைகளைத் தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், அது தொடர்பாக புகார் அளிக்கவும் தவறியது, சில தருணங்களில் பாலியல் வேட்டை நடத்துவோர் எனத் தெரிந்தே அவர்களுடன் குழந்தைகளைத் தொடர்பு கொள்ள வைத்திருக்கிறது என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.

"முழுமையான அலட்சியம், குறைபாடு, மவுனம், நிறுவன அளவிலான ஒட்டுமொத்த மறைப்பு போன்றவை நடந்திருக்கின்றன" என்று விசாரணையின் தலைவர் ஜீன்-மார்க் சாவே செய்தியாளர்களிடம் கூறினார்.

2000களின் முற்பகுதி வரை பாதிக்கப்பட்டவர்கள் மீது "கொடூரமான அலட்சியத்தை" திருச்சபை காட்டியது என்று அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டவர்கள் நம்பப்படுவதில்லை, அவர்களின் குரல் கேட்கப்படுவதில்லை. அப்படிக் கேட்கப்பட்டாலும், நடந்தவற்றில் அவர்களுக்கும் பங்களித்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது" என்று அவர் விளக்கினார்.

போப்

பட மூலாதாரம்,VATICAN POOL/GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அறிக்கை குறித்து போப் ஆண்டவர் கவலை தெரிவித்துள்ளார்

கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் கொடுமை நடப்பது ஒரு தொடரும் பிரச்சனையாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

1,15,000 பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களில் மொத்தம் 3,200 பேருக்கு எதிரான ஆதாரங்களை விசாரணை ஆணையம் கண்டறிந்தது. இதுவும் இது அநேகமாக குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம் என்று ஆணையம் கூறியுள்ளது.

"குடும்பம் மற்றும் நண்பர்களின் வட்டத்திற்குப் பிறகு, பாலியல் வன்முறை அதிகமாக இருக்கும் சூழல் கொண்டது கத்தோலிக்க திருச்சபை" என்று அறிக்கை கூறுகிறது.

பார்லஸ் எட் ரெவிவர் (பேசுங்கள், மீண்டும் வாழுங்கள்) என்ற பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவரான ஆலிவியர் சவிநாக், தனது 13 வயதில் ஒரு கத்தோலிக்க விடுமுறை முகாமின் இயக்குநரால் பாலியல் கொடுமைக்கு ஆளானார்.

கொடுமை இழைக்கப்படுவதற்கு முன்னதாக பாதிரியாரை "நல்லவர், அக்கறையுள்ள நபர்" என்று நினைத்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

"வளர்ந்து வரும் நீர்க்கட்டி போன்ற, உடலிலும் ஆன்மாவில் உள்ள புற்றைப் போன்ற இதை நாங்கள் சுமந்து கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

பாலியல் கொடுமைக்கு ஆளானோரில் 60 சதவிகித ஆண்களும் பெண்களும் "தங்கள் உணர்வு மற்றும் பாலியல் வாழ்க்கையில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்" என்று விசாரணையில் கண்டறியப்பட்டிருக்கிறது.

இழப்பீடு கோரிக்கை

விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில மட்டுமே குற்றவியல் வழக்குகள் தவிர்த்து, ஒழுங்கு நடவடிக்கை வரை சென்றிருக்கின்றன.

ஆனால் பெரும்பாலான கொடுமைகள் இப்போது நீதிமன்றங்கள் வழியாக வழக்கு தொடுக்க முடியாத அளவுக்கு பழையதாகிவிட்டன. இருப்பினும் நடந்தவற்றுக்கு திருச்சபை பொறுப்பேற்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டும் என விசாரணை அறிக்கை கூறியிருக்கிறது.

நிதி இழப்பீடு பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த அதிர்ச்சிக்கு நிவாரணமாக அமையாது என்றாலும், "அங்கீகார செயல்முறைக்கு அது இன்றியமையாதது" என்று அறிக்கை கூறுகிறது.

பிரார்த்தனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாதிக்கப்பட்டவர்களுக்கு "நிதி அளிக்கும்" திட்டத்தை பிரான்ஸ் திருச்சபை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்கான தொடர் பரிந்துரைகளையும் விசாரணை அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது.

"திருச்சபையின் தெளிவான மற்றும் உறுதியான பதில்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று பாதிக்கப்பட்டோரின் ஆறு சங்கங்கள் கூறியிருக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் துயர அனுபவங்கள் "நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கின்றன" என்று இந்த விசாரணை அறிக்கையைக் கோரிய பிரான்சின் ஆயர்கள் கூட்டமைப்பின் தலைவரான பேராயர் எரிக் டி மவுலின்ஸ்-பியூஃபோர்ட் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு "நிதி அளிக்கும்" திட்டத்தை பிரான்ஸ் திருச்சபை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. அது அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

பாலியல் கொடுமைகளை வெளிப்படையான குற்றமாக்கும் வகையில் கத்தோலிக்க சட்டங்களை போப் ஆண்டவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாற்றியமைத்தார். இது கடந்த 40 ஆண்டுகளில் மிகப் பெரிய திருத்தமாக அமைந்தது.

பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை: விசாரணை அறிக்கை - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒண்ணையும் காணோமே.. 😔

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே அதிக சிறுவர் துஸ்பிரயோகம் செய்பவர்கள் கத்தோலிக்க பாதிரியாரும், புத்த பிக்குகளும் ஆகும். இயற்க்கைக்கு எதிரான அவர்களின் வாழ்வு  முறையே,  அவர்களை இப்படிப்பட்ட பாதக செயலை செய்ய தூண்டுகின்றது.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றங்கள் பின்வருமாறு உத்தரவிடுமாறு கோரி பல வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
1. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச நட்டயீடு வழங்கப்பட வேண்டும்.
2. பாதித்தவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

3. கத்தோலிக்க திருச்சபை இனிமேல் திருமணமானவர்களையும், ஒரே பாலின திருமணமானவர்களையும் மட்டுமே தமது சமய நிறுவனங்களில் நியமிக்க சட்டரீதியாக கட்டாயப்படுத்த வேண்டும்.

4. பாலியல் துஷ்பிரயாக நடவடிக்கை இடம் பெறுகிறதா என மாதம் ஒருமுறையாவது எல்லா கத்தோலிக்க திருச்சபை நிறுவனங்களும் பொலிசால் விசாரணைக்கு உட்டபடுத்தப்பட பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண மனிதர்களான இவர்களுக்கு (பாதிரியார், பிக்குகள்)  திருமணம் செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகளே அவர்களை இப்படி செய்ய தூண்டுகிறது என நினைக்கிறேன். இத்தகைய கட்டுப்பாடுகளில் நெகிழ்வு தன்மை எதிர்காலத்தில் இருக்குமாயின் மேற்படி துஸ்பிரயோகங்கள் இல்லாமல் போகலாம்.
 

இதன் உள் நோக்கங்கள் புரியாவிட்டாலும் இது ஒரு ஆரோக்கியமான அறிக்கை.  

- இந்த அறிக்கைக் குழுவை 3 மில்லியன் ஈரோ செலவில் சுயாதீனமாக இயங்க வைத்தது கத்தோலிக்க திருச்சபை
- பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு தருவதாகக் கூறியுள்ளனர்
- பாப்பரசர் வருத்தம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பிரான்ஸ் திருச்சபை மன்னிப்புக் கேட்டுள்ளது
- மூடி மறைக்காமல் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததால் எல்லோரும் கவனமாக இருப்பார்கள்.

குற்றவாளிகளை இனம்கண்டு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் விஞ்னானத்துக்கு எதிராகச் செயற்பட்டது, பின்னர் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டது உட்பட கிறிஸ்தவ மதம் சரியான பாதையில் பயணிக்கிறது என்பது எனது கருத்து. மூடி மறைப்புகளும் பழமைவாதமும் மாற்றங்களும் இல்லாத எதுவும் எதிர்கால இருப்பிற்குப் பாதகமாகவே அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

சாதாரண மனிதர்களான இவர்களுக்கு (பாதிரியார், பிக்குகள்)  திருமணம் செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகளே அவர்களை இப்படி செய்ய தூண்டுகிறது என நினைக்கிறேன். இத்தகைய கட்டுப்பாடுகளில் நெகிழ்வு தன்மை எதிர்காலத்தில் இருக்குமாயின் மேற்படி துஸ்பிரயோகங்கள் இல்லாமல் போகலாம்.
 

 

அப்படியானால் இஸ்லாத்தில் 4 முறை கட்டலாம் எனவே இஸ்லமிய முல்லாக்கள் உத்தமர்களா? இப்படி எல்லாம் பொதுவாக சொல்ல முடியாது. 

13 hours ago, zuma said:

உலகிலே அதிக சிறுவர் துஸ்பிரயோகம் செய்பவர்கள் கத்தோலிக்க பாதிரியாரும், புத்த பிக்குகளும் ஆகும். இயற்க்கைக்கு எதிரான அவர்களின் வாழ்வு  முறையே,  அவர்களை இப்படிப்பட்ட பாதக செயலை செய்ய தூண்டுகின்றது.

அப்படியானால் இஸ்லாத்தில் 4 முறை கட்டலாம் எனவே இஸ்லமிய முல்லாக்கள் உத்தமர்களா? இப்படி எல்லாம் பொதுவாக சொல்ல முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே அருவருப்பாக உள்ளது, பாதிரியார்களின் முகத்தில் காறி உமிழவேண்டும்போலிருக்கின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்டஸ்டன்ட் மதத்திலை உந்த சோலியள் இல்லை எண்டு நினைக்கிறன்....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது ஆடம்பரமான வாழ்க்கை முறைகளோடு மஸ்த்தான உணவுப் பழக்கங்களும்தான் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களை கொண்டு செல்கிறது......!   🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதிரியார்களாக இருந்தாலும் சரி ஐயர் மற்றும் பிக்குகளாக இருந்தாலும் சரி அவர்களும் சாதாரண உணர்ச்சியுள்ள மனிதர்களே.

இதில் ஐயர்மார்  மணம் முடித்து சர்வசாதாரண வாழ்க்கை வாழ்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் விஞ்னானத்துக்கு எதிராகச் செயற்பட்டது, பின்னர் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டது உட்பட கிறிஸ்தவ மதம் சரியான பாதையில் பயணிக்கிறது என்பது எனது கருத்து. மூடி மறைப்புகளும் பழமைவாதமும் மாற்றங்களும் இல்லாத எதுவும் எதிர்கால இருப்பிற்குப் பாதகமாகவே அமையும்.

கத்தோலிக்கம்  இப்போதுதான்   சரியான பாதையில் பயணிக்க முயற்சிக்கிறது என்பதே சரியான கருத்தாக இருந்திருக்கும். ஜப்பான், தாய்லாந்து இந்தியா, சீனாவில் பௌத்தமும், தென்னிந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் இந்துமதமும் சரியான பாதைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பே   திரும்பிவிட்டன.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

https://www.dailymail.co.uk/news/article-10065191/Priest-absolved-raping-altar-boy-sexual-abuse-trial-heard-Popes-criminal-court.html
 

போப்பாண்டவரினால் இதற்கென அமைக்க பட்ட குற்றிவியல் நீதிமன்றின் முதலாவது வழக்கில் இரு பாதிரியார்களும் குற்றமற்றவர்களாக காணப்பட்டுள்ளனர்.

சில குற்றங்களில் இருந்து விடுவிப்பு சிலதை காலம் பிந்தியதால் நடத்தமுடியாது என தள்ளிவைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

சாதாரண மனிதர்களான இவர்களுக்கு (பாதிரியார், பிக்குகள்)  திருமணம் செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகளே அவர்களை இப்படி செய்ய தூண்டுகிறது என நினைக்கிறேன். இத்தகைய கட்டுப்பாடுகளில் நெகிழ்வு தன்மை எதிர்காலத்தில் இருக்குமாயின் மேற்படி துஸ்பிரயோகங்கள் இல்லாமல் போகலாம்.

அவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து எனக்கு சேவை செய்ய வேண்டும் என்று கடவுள் உத்தரவிட்டுள்ளார்.கடவுளின் உத்தரவில் விருப்பத்தில் மீறல்கள் செய்ய முடியாது.

இவர்கள் குற்றம் புரிவது தாங்கள் கடவுளின் சேவகர்கள் அவரோடு சம்பந்தம் கொண்டவர்கள் என்று மற்றவர்கள் நம்புவது தருகின்ற பாதுகாப்பு தான்.

9 hours ago, இணையவன் said:

மூடி மறைப்புகளும் பழமைவாதமும் மாற்றங்களும் இல்லாத எதுவும் எதிர்கால இருப்பிற்குப் பாதகமாகவே அமையும்.

நூறுவீதம் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

இதன் உள் நோக்கங்கள் புரியாவிட்டாலும் இது ஒரு ஆரோக்கியமான அறிக்கை.  

- இந்த அறிக்கைக் குழுவை 3 மில்லியன் ஈரோ செலவில் சுயாதீனமாக இயங்க வைத்தது கத்தோலிக்க திருச்சபை
- பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு தருவதாகக் கூறியுள்ளனர்
- பாப்பரசர் வருத்தம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பிரான்ஸ் திருச்சபை மன்னிப்புக் கேட்டுள்ளது
- மூடி மறைக்காமல் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததால் எல்லோரும் கவனமாக இருப்பார்கள்.

குற்றவாளிகளை இனம்கண்டு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் விஞ்னானத்துக்கு எதிராகச் செயற்பட்டது, பின்னர் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டது உட்பட கிறிஸ்தவ மதம் சரியான பாதையில் பயணிக்கிறது என்பது எனது கருத்து. மூடி மறைப்புகளும் பழமைவாதமும் மாற்றங்களும் இல்லாத எதுவும் எதிர்கால இருப்பிற்குப் பாதகமாகவே அமையும்.

100% உண்மை 

4 hours ago, வாலி said:

வாசிக்கவே அருவருப்பாக உள்ளது, பாதிரியார்களின் முகத்தில் காறி உமிழவேண்டும்போலிருக்கின்றது!

காறி உமிழ்ந்தால் போச்சு..🤮

(பாதிரியார்கள் எல்லோரையும் சொல்கிறீர்களா அல்லது குற்றம் புரிந்தவர்களை மட்டும் குறிப்பிடுகிறீர்களா ? மயக்கமாக உள்ளது )

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளைத்தான் சொல்கின்றேன். தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளட்டும். (நான் பாதிரிகள் என்று கருதுவது கிறீஸ்தவத்தின் எல்லாப் பிரிவினரையும்தான்)

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரியார்கள் புத்த துறவிகளுக்கு மாட்டுக்கு நாய்க்கு செய்வது போல் பதவி பிரமாணத்தின் போது செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் தேறி வருகின்றார்: வத்திகான்!

பிரான்ஸ் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: இது அவமானத்துக்கான தருணம் என்கிறார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்!

பிரான்ஸில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் அவமானத்துக்கான தருணம் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். தேவாலயத்தின் இயலாமைக்காகவும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தேவாலயங்கள் நிற்காததற்கும், நீண்டகாலமாக, பாதிக்கப்பட்டவர்களைக் கவலையில் வைத்திருந்ததற்காகவும் நான் அவமானம் கொள்கிறேன். இது அவமானத்துக்கான தருணம்’ என கூறினார்.

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுருமார்களால் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருப்பதாக சமீபத்தில் வெளியான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜீன் மார்க் சாவ் தலைமையில் இரண்டு ஆண்டுகளாகத் தனியார் விசாரணைக் குழு நடத்திய ஆய்வு முடிவில், ‘ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், உலகெங்கிலும் தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்து வருவதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. பிரான்ஸில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக, இந்தப் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்து வருகின்றன.

பிரான்ஸில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் இந்தப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர். 1950ஆம் ஆண்டு முதல் இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1243509

  • கருத்துக்கள உறவுகள்

பாவ மன்னிப்பின் ரகசியத்தன்மை நாட்டின் சட்டங்களை விட உயர்வா?

October 8, 2021

spacer.png

கத்தோலிக்கத் தலைமை ஆயரை ஆஜராகுமாறு அமைச்சு அழைப்பு அரசுக்கும் மதத்துக்கும் இடையே ஒருபெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

பிரான்ஸின் ஆயர்கள் மன்றத்தின் தலைமைக் குருவை (head of the Bishops’ Conference of France) உள்துறை அமைச் சில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸின் தேவாலயங்களில் மிக நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்ற மத குருமார்கள் சம்பந்தப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று இந்த வாரம் வெளியாகியிருந்தது.

1950 – 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கத்தோலிக்கத் தேவாலயங்களில் இடம் பெற்ற சிறுவர்கள் மீதான குற்றங்கள் பற்றி ஆய்வு செய்த ஆணைக்குழு வெளியிட்ட அந்த அறிக்கையில் சுமார் இரண்டு லட்சத்து 16 ஆயிரம் குற்றச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் பதிவாகி உள்ளன. தொடுகை முதல் வல்லுறவு வரை சிறுவர்கள் மீது புரியப்பட்ட பல்வேறு குற்றங்கள் அடங்கிய அந்த அறிக்கை கத்தோலிக்க சமூகத்தினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் Eric de Moulins-Beaufort அந்த அறிக்கை பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்து வெளியிடுகையில், ‘பாவமன்னிப்பு’ அல்லது’ஒப்புதல் வாக்குமூலம்’ எனப்படுகின்ற குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மதச் சடங்கில் பேணப்படும் ‘ரகசியம்’ நாட்டின் சட்டங்களை விட மேலானது என்ற சாரப்படக் கருத்து வெளியிட்டிருந்தார்.

பாவிகள் தங்கள் பாவங்களை பாதிரியாரிடம் ஒப்புக் கொண்டு கடவுளிடம் மன்னிப்புக் கோருகின்ற ஒரு சடங்கே ஒப்புதல் வாக்கு மூலம் அல்லது பாவ மன்னிப்புஎனப்படுகிறது. அது ஒரு திரைக்குப் பின்னால் செய்யப்படுகிறது.அதன்போது பாவம் செய்தவரது குரலை மட்டுமே மத
குருவானவர் செவிமடுப்பார். அதில் பேணப்படுகின்ற மிக உயர்ந்த ரகசியத்தன்மையையே ‘நாட்டின் சட்டங்களை விடமேலானது’ என்று ஆயர்கள் அமைப்பின் தலைமைக் குரு குறிப்பிட்டிருந்தார்.

சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் அவ்வாறு பாவ மன்னிப்புக் கோரியிருக்கலாம். அது பற்றிய ரகசியத் தன்மையை வெளிப்படுத்த முடியாது என்பதை மனதில் வைத்தே ஆயர் தனது கருத்தை வெளியிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவரது அந்தக் கருத்துக் குறித்து விளக்கம் கேட்பதற்காகவே-அரசுத் தலைவர் மக்ரோனின் பணிப்பின் பேரில்- உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா ஆயரை அமைச்சுக்கு அழைத்திருக்கிறார்.நாட்டின் குடியரசுச் சட்டங்களை விடஉயர்வானவை என்று எதுவும் இல்லை”என அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால் கூறியிருக்கிறார். அமைச்சின் ஆணையை ஏற்றுக் கொண்டுள்ள ஆயர், எதிர்வரும் செவ்வாய்க் கிழமை உள்துறை அமைச்சரைச் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரெஞ்சுச் சட்டங்களின் படி சிறுவர் குற்றங்களை அறிந்திருந்த ஒருவர் அதுபற்றி அரச அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளார். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அபராதம் மற்றும் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் .சிறுவர் குற்றங்கள் புரிந்தோர் பாவ மன்னிப்புக் கோருவதன் மூலமாக நாட்டின்சட்டங்களில் இருந்து தப்பிவிட முடியுமாஎன்ற கேள்வியை எழுப்பியிருக்கின்ற இந்த விவகாரம் ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது.

 

https://globaltamilnews.net/2021/166947

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.