Jump to content

ஒரு பெயர் சொல்லுங்க - [உதவி]


Recommended Posts

வணக்கம், நானும் 2 நண்பர்களும் சேர்ந்து ஒரு சின்ன கேரள உணவுகளை வளங்கிற உணவகம் ஒன்றயாழ்ப்பாணத்தில தொடங்க போறம், , கேரளாவில இருந்து ஒரு நண்பர் சமையலறை பொறுப்பை எடுக்க வாறார். 

 

இப்போ சரியா ஒரு பெயர் கிடைக்குதில்ல உங்களுக்கு ஏதும் நல்ல பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோவன், கொஞ்சம் நகைச்ச்சுவையாவும் இருக்கணும் அதே நேரம் எங்கட உணவகத்தின்ட special கேரளா & தென் இந்திய உணவு எண்டுறதையும் காட்டனும். 

நீங்க சொல்லுற பெயர் பிடிச்சு நாங்க வச்சா, என்க உணவகத்தில் ஒரு விருந்து இலவசம் 😅 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

’மலையாள கரையோரம்’,  இல்லாட்டில் ’

ஓமன பெண்ணே’ உணவகம்’ எண்டு வையுங்க 

ஏதோ நமக்கு தோன்றியது இதுதான்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, valavan said:

’மலையாள கரையோரம்’,  இல்லாட்டில் ’

ஓமன பெண்ணே’ உணவகம்’ எண்டு வையுங்க 

வளவன்... உங்களின் இரண்டாவது பெயர்,
யாழ்ப்பாணத்தான்... வாயில், வேறு மாதிரி, நுழைந்து விடும். 😂
ஆகவே... அந்தப் பெயர் வேண்டாமே.... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சின் கிச்சன்

 

மலபார் மஹால்

டேஸ்ட் ஒவ் கேரளா

1 hour ago, sivarathan1 said:

வணக்கம், நானும் 2 நண்பர்களும் சேர்ந்து ஒரு சின்ன கேரள உணவுகளை வளங்கிற உணவகம் ஒன்றயாழ்ப்பாணத்தில தொடங்க போறம், , கேரளாவில இருந்து ஒரு நண்பர் சமையலறை பொறுப்பை எடுக்க வாறார். 

 

இப்போ சரியா ஒரு பெயர் கிடைக்குதில்ல உங்களுக்கு ஏதும் நல்ல பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோவன், கொஞ்சம் நகைச்ச்சுவையாவும் இருக்கணும் அதே நேரம் எங்கட உணவகத்தின்ட special கேரளா & தென் இந்திய உணவு எண்டுறதையும் காட்டனும். 

நீங்க சொல்லுற பெயர் பிடிச்சு நாங்க வச்சா, என்க உணவகத்தில் ஒரு விருந்து இலவசம் 😅 

வாழ்துக்கள்.

நான் அன் லிமிடட் மீல்ஸ் ரெண்டு சாப்பிடுவன். ஓகேயா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வளவன்... உங்களின் இரண்டாவது பெயர்,
யாழ்ப்பாணத்தான்... வாயில், வேறு மாதிரி, நுழைந்து விடும். 😂
ஆகவே... அந்தப் பெயர் வேண்டாமே.... 🤣

அது உலக புகழ்பெற்ற ஏ ஆர் ரஹ்மான் பாட்டு அதனால ஒரு அடையாளம் கிடைக்கும் எண்டு நினைச்சன் ..

தமிழ்சிறி சொன்ன பின்னர் யோசிச்சன், குசும்பு பிடிச்ச யாழ்ப்பாணத்துக்காரர் கோமணம் என்று உச்சரிக்க பலமான வாய்ப்புக்கள் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆலப்புழா அன்ன விலாஸ் " 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் அன் லிமிடட் மீல்ஸ் ரெண்டு சாப்பிடுவன். ஓகேயா🤣.

அங்கே கக்கூஸ் இல்லை.

தம்பிக்கு ஓக்கேயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள்  முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.  "அக்கரைச் சமையல் "
" சாப்பிடலாம் வாங்க    "    "ஸ்பெசல் விருந்து "   "போதும் உணவகம்".  ( ஒரு தடவையே போதுமானதாக கொடுப்பீர்கள். நனறாக    பரிமாறுகிறீர்கள் போதும் ,  திருப்தி ) "ருசிக்க வாங்க "... "கிச்சன் கேரளா "....பசிக்கு ருசி கிச்சன் ."  .....

பரிசு  விருந்தை  கனடாவுக்கு அனுப்பி வைக்கவும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, sivarathan1 said:

நீங்க சொல்லுற பெயர் பிடிச்சு நாங்க வச்சா, என்க உணவகத்தில் ஒரு விருந்து இலவசம் 😅 

தம்பி உண்மை பெயரைச் சொல்லி அல்லது யாழில் உள்ள புனைபெயரை வைத்து எவருமே திங்க வரமாட்டான்.

ஆனபடியால் எந்த டீலை வேணுமானாலும் போடுங்க.

இதை சொல்லி தந்ததுக்காக எனக்கும் ஒரு டீலை மறக்காமல் தாந்திடுங்க.

6 minutes ago, நிலாமதி said:

பரிசு  விருந்தை  கனடாவுக்கு அனுப்பி வைக்கவும். 😀

வெகுவிரைவில் கனடாவிலும் ஒருகடை திறக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, sivarathan1 said:

இப்போ சரியா ஒரு பெயர் கிடைக்குதில்ல உங்களுக்கு ஏதும் நல்ல பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோவன்,

மல்லு மெஸ்

மலபார் குசினி

மால்குடி உணவகம் (மால்குடி உணவு என்பது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா  ஆகிய நான்கு மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகளாகும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*கொச்சி உணவகம்

*சேரப்பாட்டன் உணவகம்

*கொச்சின் குசினி

*மலையாளி குசினி

*சேரநாட்டு குசினி

*சேரன் குசினி

*சேரன் கிச்சன்

*யாழ்மலையாளி கிச்சன்

*யாழ்மலையாளி குசினி

*யாழ்மலையாளி உணவகம்

*பரதகளி உணவகம்

*பரதகளி கிச்சன்

*பரதகளி குசினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

கீழேயுள்ள 'மல்லு அயிட்டங்களை' போடுங்கள், கூட்டம் பிச்சுக்கும்..! 😍

7 Must try breakfasts of Kerala - Kerala Cuisine - Tyndis HeritageSadhya-Famous-Food-in-Kerala.jpg

 

3 hours ago, sivarathan1 said:

நீங்க சொல்லுற பெயர் பிடிச்சு நாங்க வச்சா, என்க உணவகத்தில் ஒரு விருந்து இலவசம் 😅

தங்கள் கரிசனைக்கு நன்றி,

ஆனால் பாருங்கோ எனக்கு "மல்லு" என்றாலே வ்வ்வ்வ்வ்வே..! இலவசமா கொடுத்தாலும் வேண்டாம்..!! 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அங்கே கக்கூஸ் இல்லை.

தம்பிக்கு ஓக்கேயா?

அது ஓனர் பிரச்சனை அல்லோ🤣

நான் தனூஸ் பாணியில் “நாறிடுவே” என்று சொல்லிவிட்டு போய்கிட்டே இருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேட்டண்ணன் போசனசாலை

ஓமணக்குட்டி உணவகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிவரதன். கடையின் பெயரை பின்னர் கூறுங்கள். அங்கு வரும் சமயம் உணவு உட்கொள்ள வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனையாள் ஆசியா உணவகம் 

மலையாழ்  ஆசியா உணவகம்

கொல் பசி ஆசியா உணவகம் 

ஆரோக்கியம் நிறைந்த ஆசியா உணவகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.உங்கள் முயற்ச்சி கன்டிப்பாக வெற்றி அடையும்.நான் நிச்சயம் சாப்பிட வருவேன் இலவசமாக அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நாயர் கடை."

பெயர் ஒரு மாதிரி இருந்தாலும்....
உணவு தரமாக இருந்தால்... காலப் போக்கில், மக்கள் மனதில் பிரபலயமாகி....   
அது, பெரிதாக தோன்றாது. 

உதாரணத்துக்கு... "மொக்கன் கடை",  "திருநெல்வேலி அல்வா இருட்டுக் கடை"
போன்றவை... நாடு முழுக்க,  பலருக்கும்  தெரிந்த கடைகள்தான். 

Link to comment
Share on other sites

எல்லா பெயரும் நல்லா இருக்கு, நண்பரோட கதைச்சு என்ன பெயர் வைக்கிறன் எண்டு சொல்லுறன்,  தொடங்கினா பிறகு கட்டாயமா எல்லாரும் வாங்க, வந்து சாப்பிட்டு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க,   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, sivarathan1 said:

எல்லா பெயரும் நல்லா இருக்கு, நண்பரோட கதைச்சு என்ன பெயர் வைக்கிறன் எண்டு சொல்லுறன்,  தொடங்கினா பிறகு கட்டாயமா எல்லாரும் வாங்க, வந்து சாப்பிட்டு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க,   

 

 

ஊபர் ஈற்,டோர் டாஸ்,ஸ்கிப்த்தடிஷ் மூலம் அனுப்பலாம், குறைந்தது ஒரு மணித்தியாலத்தில் பார்சல்களை உரியவர்களிடத்தில் அல்லது வீட்க்கு முன் வைச்சுட்டு போகலாம்..👋✍️😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ரதன்  


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளியம்  அல்லது யாழ் கேரளியம்  எண்டு வைங்க.

எங்க எங்க ரதன்?👀

ஒரு மாதம் விருந்து எனக்குத்தான்😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 13:15, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.உங்கள் முயற்ச்சி கன்டிப்பாக வெற்றி அடையும்.நான் நிச்சயம் சாப்பிட வருவேன் இலவசமாக அல்ல.

அப்ப சம்பவம் இருக்கு 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப சம்பவம் இருக்கு 😅

தனி சந்தர்ப்பம் கிடைத்தால் ஒன்றாக போய்ச் சாப்பிடுவம்.இப்ப நான் இலங்கையில் இல்லை.வந்தவுடன் தொடர்பு கொள்கிறேன்.இதெல்லாம் பாத்த பின்பும் அந்த மனுசன் கடை தொடங்குவார் என்று நம்புறீங்களா.😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.