Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச இலக்கிய விருது

Featured Replies

  • Replies 66
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, tulpen said:

"You will never be criticized by someone who is doing more than you. You will only be criticized by someone doing less than you."

பேசடி  ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்....அதில் ஏனடி உனக்கு பஞ்சம் பஞ்சம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பேசடி  ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்....அதில் ஏனடி உனக்கு பஞ்சம் பஞ்சம்?

உந்தாள் எதுக்கு இப்ப அவாவ கூப்பிடுது ....?வேலியிலை போற ஒணானை எதற்கப்பு வேட்டிக்குள் இழுத்துவிடும் வேலை உங்களுக்கு, யோவ் அவா வந்தா தெரியும்தானே ,பொறி பறக்கும்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உந்தாள் எதுக்கு இப்ப அவாவ கூப்பிடுது ....?வேலியிலை போற ஒணானை எதற்கப்பு வேட்டிக்குள் இழுத்துவிடும் வேலை உங்களுக்கு, யோவ் அவா வந்தா தெரியும்தானே ,பொறி பறக்கும்  

ஐயோ இவனுகள் கதைய  வேற பக்கம் திருப்பி விடுறானுகளே...நா எங்க போவேன் என்ன செய்வேன்?

Looking Vadivelu GIF - Looking Vadivelu Thalainagaram - Discover & Share  GIFs in 2021 | Comedy pictures, Meme faces, Gif

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உந்தாள் எதுக்கு இப்ப அவாவ கூப்பிடுது ....?வேலியிலை போற ஒணானை எதற்கப்பு வேட்டிக்குள் இழுத்துவிடும் வேலை உங்களுக்கு, யோவ் அவா வந்தா தெரியும்தானே ,பொறி பறக்கும்  

ஏனுங்க  அவர் பாட்டு பாடுறார் இந்த உலகித்தில் ரதி என்ற பெயர் அவவுக்கு மட்டும் தான் என்றால் நியாயம் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2021 at 12:42, goshan_che said:

வாழ்த்துக்கள் அன்ரி.

இதை புத்தசாசன/இந்து கலாச்சார அமைச்சு வழங்குவதாக தெரிகிறது.

முன்பு இலங்கை அரச சாகித்திய விருதுகள் என கொடுப்பார்கள் (இந்தியாவின் சாகித்திய அகெடமி விருதல்ல).

அதன் புதிய பெயரா இது? 

பிகு

நான் உப்பிடி எல்லாம் எடக்கு மடக்கு கேள்வியள் கேட்கமாட்டேன், நீங்களும் என்ர புத்தகத்தை வாசிச்சனிங்களோ எண்டு என்ன கேட்கப்படாது🤣.

டீல் ஓகேவா?

நீங்கள் கூறும் முன்னைய பெயர்தான் தற்போது அரச இலக்கிய விருது என்னும் பெயரில் வருகிறது. அனைத்துவகையான இலக்கியங்களுக்கும் வழங்கப்படுகிறது. 

நீங்கள் வாசிக்காட்டிலும் பரவாயில்லை. டீல் ஓகே.😀

On 28/12/2021 at 12:49, tulpen said:

மனமார்ந்த வாழ்ததுக்கள் சுமே. உங்கள்மு ன்னேற்றங்களை சகித்து கொள்ள முடியாதவர்கள் பற்றி கவலை வேண்டாம். உங்களை வாழ்தத பல நல்ல மனம் கொண்ட உறவுகள் உள்ளார்கள். 

"You will never be criticized by someone who is doing more than you. You will only be criticized by someone doing less than you."

மிக்க நன்றி துல்பன்

On 28/12/2021 at 14:07, வல்வை சகாறா said:

வாழ்த்துகள் சுமெ.

இந்த யாழ்க்களத்தில் உங்களை அறிந்தவரை உங்கள் ஆரம்ப காலங்களையும் படிப்படியாக உங்களை நீங்கள் செதுக்கி செழுமையாக்கி தொடர்ச்சியான எழுத்துகளால் உங்கள் துணிச்சலையும் தளராத முயற்சியையும் அறிவேன், பாராட்டுகள்.

மற்றவர்கள் கருத்து எவரையும் முடக்க முடியாது. எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமன்று. கிடைத்த வரத்தையும் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளங்கள்.

மிக்க நன்றி சகாரா. என்னை யாரும் முடக்க முடியாது. என்றாலும் இப்படியான சின்னத்தனமாக கருத்துக்களும் இவர்களின் செயல்களும் மனச்சோர்வை ஏற்படுத்தக் கூடியன தானே.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாழ்த்துத் தெரிவித்துத்  தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட பெருமாள், ஜெகதா துரை,ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், குமாரசாமி, நீர்வேலியான் , தமிழினி,   தமிழ் சிறி, கண்மணி அக்கா, புங்கையூரான், நிலாமதி அக்கா ஆகிய அன்புறவுகளுக்கும் மிக்கநன்றி.  

 

சந்தோசமான விடயம். வாழ்த்துகள் சுமே! மேலும் மேலும் எழுதுங்கள்! நாவல் ஒன்றை எழுத முயற்சி செய்யுங்கள்.

ஊடகவியலாளரும் எழுத்தாளரும் மான என்.சரவணனின் நூல் ஒன்று கடந்த ஆட்சியில் இலங்கை அரசின் விருது பெறும் போதும் இப்படியான அவமதிப்புகள் பலரால், அ.இரவி உட்பட பலரால் நிகழ்த்தப்பட்டது. 

இப்படியானவர்களும் இல்லையென்றால் ஊக்கமும் இருக்காது.

கடந்து செல்லுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2021 at 14:40, Paanch said:

சங்கீத உலகம் இனிமையானது. இருந்தும் அங்கு எல்லோராலும் கால்பதிக்க முடியாது. அதுபோன்று இனிமையானதே இலக்கிய உலகும். அங்கு கால்பதிக்கும் திறன்பெற்ற சுமேரியருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!!

நன்றி அண்ணா

On 28/12/2021 at 14:44, Nathamuni said:

இங்கை வந்து லொள்ளு பண்ணிக்கொண்டே.... பயங்கர வேலைகளும் பார்த்து இருக்கிறியள்...

வாழ்த்துக்கள், அக்கா!!

இங்கு பார்த்த வேலையின் தொகுப்புத்தான் அது நாதமுனி 😀

On 28/12/2021 at 19:32, பாலபத்ர ஓணாண்டி said:

சுமேரியர் யாழில் ஆரம்பத்தில் யாழில் இணைந்தபோது யாழில் எழுத தடக்கிவிழுந்து தடுமாறி பட்ட பாடு இண்டைக்கும் நேற்றுபோல எனக்கு நாபகம் இருக்கு.. வல்வைசகார சொன்னதுபோல அவர் தனது எழுத்தை யாழில் எழுதியதன் மூலமே செதுக்கியவர்.. ஆரம்பத்தில் எழுதிய போது கள உறவுகளே பம்பலா சுமேரியர் எழுதுவதை கலாய்த்திருக்கி(றோம்)றார்கள்.. வாழ்த்துக்களும் பெருமையுமாக இருக்கு.. இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி கருத்துக்கு ஓணாண்டி 😃

23 hours ago, கிருபன் said:

வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி👏👏👏

விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதும் அதனால் சிலர் பொறாமை கொண்டதுமே உங்கள் எழுத்துக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்.😀

 

உண்மைதான். நன்றி கிருபன்.

22 hours ago, valavan said:

 சிறுகதை தொகுப்பு அரசியல் பேசாத ஒன்றாக இருந்தால் சந்தோஷம், ஏனெனில் தமக்கு சார்பாக ஏதும் இருந்தால்தான் சிங்களம் தமிழர்களின் ஆற்றலையே அங்கீகரிக்கிறது என்றொரு எண்ணம் எப்போதும் உண்டு.

படைப்பாற்றல் என்பது எளிதில் எல்லோருக்கும் வந்துவிடாது பல ஆயிரம்பேரில் ஓரிருவருக்கு மட்டுமே கை வருவது. விமர்சிப்பவர்களை பற்றி  ஆதங்கம் கவலை சினம் கொள்வதெல்லாம் தவறு.

வாழ்த்து சொல்பவர்களைவிட எதிர்மறையானவர்களே இன்னும் சிறப்பாக ஏதாவது செய்ய தூண்டுகிறார்கள், மறைமுகமாக உங்களின் திறமையை முதலில்  அங்கீகரிப்பது அவர்களே.சும்மா இருப்பவர்களை பார்த்து எவரும் போட்டி பொறாமை கொள்வதில்லை.

தொடரும் உங்கள் எழுத்து பணியையிட்டு மகிழ்ச்சி.

மிக்க நன்றி வளவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

பொறாமை.. அதுஇதெல்லாம்.. எல்லாச் சமூகங்களிலும் உள்ள ஒன்று தான். நாம் நாமாக முன்னேறனுன்னா.. அதுகளை விட்டுத்தள்ள வேண்டும்.

முதலில் உங்கள் சுய சிறுகதை இதற்குப் பரிந்துரைக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

உங்களுடைய ஆக்கம் தொடர்பில் உங்களுக்கு திருப்தியாக அமைந்தாலே போதும்.. மற்றவர்களின் நேர் எதிர் விமர்சனங்கள் உங்களை எதுவும் செய்ய முடியாது. ஒரு ஆக்கம் சமூகத்தில் சிந்தப்படும் போது அது பலவேறு நோக்குகளை ஏற்படுத்தும்.. விமர்சனங்களை பிரசவிக்கும் என்பது இயல்பே. 

எங்களுடைய ஆதங்கம் என்னவெனில்.. தமிழ் மொழி இழிவையும்.. தமிழ் நில அழிவையும்.. தமிழின படுகொலையையும் செய்யும் செய்து வரும்.. ஒரு சிங்கள பெளத்த பேரினவாத அரசின் அருவருடி அமைப்பிடம் இருந்து உண்மையாக தமிழரின் உணர்வுகளை உள்வாங்கி வெளிப்படுத்தும்.. தமிழ் இலக்கியத்துக்கு ஒரு விருது கிடைக்குமா என்பது தான்..??!

மேலும்.. இந்த விருதுகளுக்கு எப்போ திறந்த வெளியில் ஆக்கங்களை சமர்பிக்கச் சொல்லினம்.. யார் இந்த விருதுகளுக்கான ஆக்கங்களை பரிசீலிக்கினம்.. என்ன அடிப்படையில் அந்தப் பரிசீலனைகள் இருக்கின்றன.. என்று பல விடயங்கள் மூடுமந்திரமாகவே உள்ளன.

எந்த ஒரு எழுத்தாற்றலும்.. என்ன தான் வாசகர் வட்டங்களைக் கொண்டிருந்தாலும்... இப்படி விருதுகளால்... போதையூட்டப்படும் போது.. அந்தப் புகழ் போதைக்குள் மூழ்காதவர்கள் இருக்க முடியாது. அது மனித மனத்தின் இயல்பு.

ஆனாலும்.. விருதுகள்.. வெளிப்படைத் தன்மையோடு.. ஒரு ஆக்கத்தின் உணர்வு பூர்வமான வெளிப்பாட்டை அங்கீகரிக்கும் தன்மையோடு இருக்க வேண்டும்..! அது சொறீலங்காவில் சாத்தியமா..?!

சம கால.. உலகத் தமிழ் இலக்கியங்களை ஊக்குவிக்க.. இப்படியான விருதுகளுக்கு அப்பால்.. ஆக்கங்களை ஆண்டுக்கு ஆண்டு பட்டியலிட்டு இனங்காட்டும்.. ஒரு நடைமுறை உலகத் தமிழ் இலக்கிய அமைப்பு ஒன்றினூடாக செய்யப்படும் போது.. அது தமிழக.. தமிழீழ.. சிங்கப்பூர்.. மலேசியா.. மொரிசியஸ்.. மற்றும் அனைத்து மேற்குலக.. தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்கி சிறந்த 20/25 படைப்புக்களை ஆண்டுக்கொருமுறை பட்டியலிடுதல்.. ஒரு நல்ல ஊக்குவிப்பாக இருக்க முடியும். 

தமிழ் மொழிக்கும்.. தமிழ் எழுத்துலகுக்கும்.. அது உபயோகமாக இருக்கும்.. இந்த சொறிலங்காவின்.. ஹிந்தியாவின்.. மூடுமந்திர.. அரைகுறை அங்கீகார விருதுகளை விட. 

எல்லா இடமும் எல்லாம் இருக்கும்தான். விருதை வளங்குவதும் அந்த ஏற்பாடுகளுக்கான பணத்தை வளங்குவதும் சிங்கள  அரசாங்கம் தான். ஆனால் தமிழ்  நூல்களை  தமிழ் பேராசிரியர்களும் அறிஞர்களுமே கையாளக்கின்றனர் என்று கேள்வி. நல்லகாலம் தெரிவுக் குழுவில் எனக்குத் தெரிந்த ஒருவருமில்லை. என நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தான் என்னவோலை அனுப்பச் சொன்னார்.

இலக்கியங்களை ஊக்குவிக்க நீங்கள் கூறியதுபோல் எத்தனையோ வழிகள் இருக்கின்றனதான். தமிழன் தமிழனை ஊக்குவிப்பதே பெரும் பாடு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இணையத்துள் நுழைந்து இப்பதிவைக் கிளிக் செய்தவுடன் ரதியின் படத்தைக் கண்டேன். இப்ப பார்க்கிறேன் காணவில்லை. ரதி எதை இப்பதிவில் எழுதியிருப்பார் என என்னால் ஊகிக்க முடிகிறது. அவர் என்ன எழுதியிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. வீணாக அவர் எழுதியதை அவரே தூக்கச் சொல்லிவிட்டாரா ??? எதுக்கு குமாரசாமி எசப்பாட்டுப் பாடுறார் என்றும் புரியவில்லையே.😂

விளங்க நினைப்பவனுக்கும் வாதவூரனுக்கும் மிக்க நன்றி.

26 minutes ago, நிழலி said:

சந்தோசமான விடயம். வாழ்த்துகள் சுமே! மேலும் மேலும் எழுதுங்கள்! நாவல் ஒன்றை எழுத முயற்சி செய்யுங்கள்.

ஊடகவியலாளரும் எழுத்தாளரும் மான என்.சரவணனின் நூல் ஒன்று கடந்த ஆட்சியில் இலங்கை அரசின் விருது பெறும் போதும் இப்படியான அவமதிப்புகள் பலரால், அ.இரவி உட்பட பலரால் நிகழ்த்தப்பட்டது. 

இப்படியானவர்களும் இல்லையென்றால் ஊக்கமும் இருக்காது.

கடந்து செல்லுங்கள்.

நீங்கள் கூறுவது சரிதான். நீங்கள் மேலே குறிப்பிட்டவர் என்னை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  முகநூலில் புளொக் செய்துவிட்டார். நல்ல காலம் என கண்ணுக்கு அவர் பதிவு தெரிவதில்லை. அவர் இதைப் பார்த்துவிட்டு என்ன என்ன எழுதினாரோ ..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே 👍💐. மற்றவர்களைப்பற்றி யோசிக்காமல் உங்கள் வழியில்  தொடர்ந்து செல்லுங்கள்.

Edited by Eppothum Thamizhan

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இணையத்துள் நுழைந்து இப்பதிவைக் கிளிக் செய்தவுடன் ரதியின் படத்தைக் கண்டேன். இப்ப பார்க்கிறேன் காணவில்லை. ரதி எதை இப்பதிவில் எழுதியிருப்பார் என என்னால் ஊகிக்க முடிகிறது. அவர் என்ன எழுதியிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. வீணாக அவர் எழுதியதை அவரே தூக்கச் சொல்லிவிட்டாரா ??? 

 

ரதி இந்த திரியில் எதுவும் இன்னும எழுதவில்லை சுமே. அத்துடன் அப்படி எழுதிவிட்டு அதை தூக்க சொல்பவரும் இல்லை அவர்🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கூறும் முன்னைய பெயர்தான் தற்போது அரச இலக்கிய விருது என்னும் பெயரில் வருகிறது. அனைத்துவகையான இலக்கியங்களுக்கும் வழங்கப்படுகிறது. 

நீங்கள் வாசிக்காட்டிலும் பரவாயில்லை. டீல் ஓகே.😀

கனமான விருதுதான்👏🏾.

முன்னர் கொழும்பு தமிழ் சங்கத்தில் இந்த விருதாளர்களுக்கு விழா எடுப்பார்கள்.

மீண்டுமொருமுறை வாழ்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2021 at 05:49, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

No photo description available.

No photo description available.

 

2019 ம் ஆண்டு வெளியான எனது சிறுகதைத் தொகுப்பான "உணர்வுகள் கொன்றுவிடு"  2020 இன் அரச விருதுக்காக மூன்றுக்குள் ஒன்றாகத் தெரிவாக்கியிருந்தது.  ஒருபுறம் இது மகிழ்வான விடயமாக, என தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒன்றாகவும் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் முதலாவதாகத் தெரிவாகியிருக்காமலேயே முகநூலில் இதைப் பகிர்ந்தபோது நீண்டகாலமாக என்னுடன் நட்புடன் இருந்த ஒருவர் என்னை வாழ்த்தவில்லை. மாறாக வெளிநாட்டு  Nationality வைத்திருப்பவர்களுக்கு  எப்படி இலங்கை அரச விருதை வளங்கலாம் எனப் பதிவு போட்டிருந்தார். அதைவிட நான் மதிப்பு வைத்திருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர், அவர் ஏற்கனவே இந்திய விருதைப் பெற்றிருந்தார். அவர் கூட எனக்குப் போனில் வாழ்த்துச் சொல்லிவிட்டு எப்படி உங்களையும் தெரிவு செய்தார்கள். உங்களுக்கு இலங்கை  Nationality இருக்கிறதா என்றதும் தான் நான் ஓடி விழித்து என்னிடம் இரண்டும் இருக்கிறது என்று கூறினேன்.

அன்றே அவர் முகநூலில் தன் நூல் ஒன்றைப் போட்டு அந்நூலுக்கு தன் பழைய  மாணவன் ஒருவர் எழுதியிருந்த விமர்சனத்தையும் போட்டு, " எல்லா விருதுகளிலும் விட இதையே நான் சிறந்த விருதாக எண்ணுகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார். இன்னொருவரோ உங்கள் சொந்தக்காரர் யாராவது தெரிவுக் குழுவில் இருக்கின்றனரா என்று கேட்டார். இவர்கள் மனங்களில் இத்தனை அழுக்குகளை வைத்துக்கொண்டு எதற்காக எழுதுகிறார்கள் என்றே புரியவில்லை.

மனதார வாழ்த்தவும் பலர் இருந்தார்கள் என்பதில் மனம் இலேசாகிப் போனது. இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்னும் எண்ணத்தையும் எனக்குள் தோற்றுவித்தது. முக்கியமாய் என்னை உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டும் யாழ் இணைய உறவுகளுக்கே எப்போதும் என் நன்றி.

 

முதலில், அக்கா உங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் பல காவியங்களைப் படைக்க இறையருள் கைகூடுவதாக.

அடுத்தது, உங்கள் வெற்றியில் மனம் புழுங்கிய புழுக்களை நினைக்கக் கடுப்பாகுது. இவர்கள் கதைகளை சைவரை போட்டு வெட்டிவிட்டு மேலும் எழுதுங்கள்.

மேலும், சிங்களத்தில் “ராஜ்ய சாஹித்ய சம்மான” என்றுதான் எழுதி இருக்கு. இது முன்னர் வழங்கப்பட்ட அரச சாஹித்திய விருதுதான். இப்போது சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து இருப்பது வரவேற்கத்தக்கது

கடைசியாக, உங்கட சொந்தக்காரர் யாரும் தெதிவுக்குழுவில் இருக்கின்மா? 😂(சும்மா பகிடிக்கு எழுதினனான். கோவிச்சுப் போடாதையுங்கோ)🤪😃😃😃😃

  • கருத்துக்கள உறவுகள்+

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயை👏👏👏

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே. ஏற்கனவே தமிழக புத்தகக் கண்காட்சிகளில் உங்கள் புத்தகங்கள் இடம்பிடித்திருக்கின்றன. அத்துடன் சேர்த்து இதுவும் உங்களுக்கான நல்ல அங்கீகாரம். எரிச்சல் பொறாமை எங்கள் எழுத்துலகில் மிகவும் சாதாரணம் என அறிந்திருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

இதில வாழ்த்துச் சொல்லி இருக்கிற அண்ணமார் சிலபேருக்கு.. எதுக்கு வாழ்த்திறினம் என்றே புரியல்லப் போல.

அக்காட ஆக்கம் சொறீலங்கா அரசின் விருது பெறவில்லை. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆக்களில் ஒன்று. சிலர் அக்காட ஆக்கத்துக்கு விருது கிடைச்ச கணக்கா அடிச்சு விடுறாங்கப்பா.

இது தான் தமிழரின் கந்தறு நிலைக்கு காரணம்.. ஒன்றில் அபரிமிதமாக்குவது இல்ல காலடியில் போட்டு மிதிப்பது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

இதில வாழ்த்துச் சொல்லி இருக்கிற அண்ணமார் சிலபேருக்கு.. எதுக்கு வாழ்த்திறினம் என்றே புரியல்லப் போல.

அக்காட ஆக்கம் சொறீலங்கா அரசின் விருது பெறவில்லை. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆக்களில் ஒன்று. சிலர் அக்காட ஆக்கத்துக்கு விருது கிடைச்ச கணக்க அடிச்சு விடுறாங்கப்பா.

இது தான் தமிழரின் கந்தறு நிலைக்கு காரணம்.. ஒன்றில் அபரிமிதமாக்குவது இல்ல காலடியில் போட்டு மிதிப்பது. 

நீங்கள் சொல்வது சரிதான். 

நான் சுமே இணைத்த படத்தை தவறாக பார்த்து விட்டேன்.

பரவாயில்லை shortlist இல் வாறதும் சாதனைதானே. 

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள் அன்ரி.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2021 at 21:19, nedukkalapoovan said:

இதில வாழ்த்துச் சொல்லி இருக்கிற அண்ணமார் சிலபேருக்கு.. எதுக்கு வாழ்த்திறினம் என்றே புரியல்லப் போல.

அக்காட ஆக்கம் சொறீலங்கா அரசின் விருது பெறவில்லை. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆக்களில் ஒன்று. சிலர் அக்காட ஆக்கத்துக்கு விருது கிடைச்ச கணக்கா அடிச்சு விடுறாங்கப்பா.

இது தான் தமிழரின் கந்தறு நிலைக்கு காரணம்.. ஒன்றில் அபரிமிதமாக்குவது இல்ல காலடியில் போட்டு மிதிப்பது. 

அட ஆமால்ல… நான் அதை எல்லாம் பாத்தனான்.. செலெக்டானதுக்குதான் வாழ்த்தின்னான் எண்டு பொய் சொல்லேல்ல..  நான் உண்மையா அதை கூர்ந்து அவதானைக்கவில்லை.. நான் உண்மையில் பரிசு பெற்றது என்று நினைத்து பரிசு பெற்றதுக்குத்தான் வாழ்த்தினேன்.. நன்றி தலைவா சுட்டிக்காட்டியதற்கு.. தெரிவானதுக்கு வாழ்த்துக்கள் சுமே அக்கா…

  • கருத்துக்கள உறவுகள்
  • மனமார்ந்த வாழ்த்துக்கள் சுமோ ...இவ்வளவுக்கு வந்ததே பெரிய விசயம் ...வெற்றி பெற முடியா விட்டாலும் , மனம் சோர்வடையாமல் தொடர்ந்தும் எழுதுங்கள் ...ஒரு நாள் நிட்சயம்  விருது கிடைக்கும் 
     
  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎12‎-‎2021 at 19:55, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இணையத்துள் நுழைந்து இப்பதிவைக் கிளிக் செய்தவுடன் ரதியின் படத்தைக் கண்டேன். இப்ப பார்க்கிறேன் காணவில்லை. ரதி எதை இப்பதிவில் எழுதியிருப்பார் என என்னால் ஊகிக்க முடிகிறது. அவர் என்ன எழுதியிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. வீணாக அவர் எழுதியதை அவரே தூக்கச் சொல்லிவிட்டாரா ??? எதுக்கு குமாரசாமி எசப்பாட்டுப் பாடுறார் என்றும் புரியவில்லையே.😂

விளங்க நினைப்பவனுக்கும் வாதவூரனுக்கும் மிக்க நன்றி.

நீங்கள் கூறுவது சரிதான். நீங்கள் மேலே குறிப்பிட்டவர் என்னை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  முகநூலில் புளொக் செய்துவிட்டார். நல்ல காலம் என கண்ணுக்கு அவர் பதிவு தெரிவதில்லை. அவர் இதைப் பார்த்துவிட்டு என்ன என்ன எழுதினாரோ ..

இந்த மாதிரி கேவலமான புத்தி எல்லாம் எனக்கில்லை ...என்னுடைய அவாட்டரில் உள்ள படம் எப்படி இந்த திரியில் வந்தது என்று மோகன் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் 

On ‎29‎-‎12‎-‎2021 at 21:11, நிழலி said:

ரதி இந்த திரியில் எதுவும் இன்னும எழுதவில்லை சுமே. அத்துடன் அப்படி எழுதிவிட்டு அதை தூக்க சொல்பவரும் இல்லை அவர்🙂

உங்களுக்காவது என்னைப் பற்றி தெரிந்து இருக்குதே 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.