Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை திரும்புகிறார் முன்னாள் ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை திரும்புகிறார் முன்னாள் ஜனாதிபதி!

நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கை திரும்பவுள்ளார்.

ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அது, அவருக்கும், அவரது மனைவிக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு மாதத்தில் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.samakalam.com/இலங்கை-திரும்புகிறார்-மு/

  • கருத்துக்கள உறவுகள்

போட்ட திட்டம் நிறைவேறவில்லை, இதுக்கு மேல் முயற்சித்தால் கைது செய்யப்படலாம் என்கிற அச்சம், தொடரும் எதிர்ப்பு இந்தநாடே பாதுகாப்பானது என திரும்புகிறார் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இலங்கை திரும்புகிறார் முன்னாள் ஜனாதிபதி!

53 நாடுகளின்  உதவியுடன்... 30 வருட போரை வென்றவர்  என்று சொல்லியவருக்கு...
ஒரு நாடும், அடைக்கலம் கொடுக்கவில்லையா?
பேசாமல்.... கள்ளத் தோணியில் ஏறி, அவுஸ்திரேலியா போயிருக்கலாம்.🤣

நான்...  திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... 
ஒரு கிழமைக்கு முன்னாடி, எப்படி போனேனோ... அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு.
கோத்தாடா...  கபாலிடா.... நெருப்புடா... பருப்புடா...  
அவ்வ்வ்வ்...   😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

கள்ளத் தோணியில் ஏறி, அவுஸ்திரேலியா போயிருக்கலாம்.

உடனேயே திருப்பி அனுப்பி, நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படும். லபக்கென்று கைது செய்துவிடுவார்கள் என்று பயந்திருப்பார் மாத்தையா! வேணும்னா இந்தியாவுக்கு போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

உடனேயே திருப்பி அனுப்பி, நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படும். லபக்கென்று கைது செய்துவிடுவார்கள் என்று பயந்திருப்பார் மாத்தையா! வேணும்னா இந்தியாவுக்கு போகலாம்.

இந்தியா... கோத்தாவை, முன்பே நாசூக்காக நிராகரித்து விட்டது. 👇

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த... நாமல்.. எல்லாம் நாட்டில் இருக்க முடியும் என்றால்.. ஏன் இவர் முடியாது. ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாவலராக உள்ள ரணில் உள்ளிட்டவர்கள் அரச உயர் பதவிகளில் இருக்கும் வரை ராஜபக்ச கும்பலுக்கு என்ன கவலை. 

  • கருத்துக்கள உறவுகள்

 நல்ல நண்பனை ஆபத்தில் உணரலாம்.  சுயநலத்தோடு உறவாடிய நட்பு. மூச்சுக்கு முன்னூறு தடவை நண்பன் என்று கூறியது, உதவியது எல்லாம் தமிழரை அழிக்கவேயொழிய நட்பில்லல்ல.

1 minute ago, nedukkalapoovan said:

மகிந்த... நாமல்.. எல்லாம் நாட்டில் இருக்க முடியும் என்றால்.. ஏன் இவர் முடியாது. ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாவலராக உள்ள ரணில் உள்ளிட்டவர்கள் அரச உயர் பதவிகளில் இருக்கும் வரை ராஜபக்ச கும்பலுக்கு என்ன கவலை. 

அதனாற்தான் யோசிச்சுப்போட்டு திரும்புகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரத்தில எதையோ விட்டிட்டு போட்டார் போல.😆

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை கொள்ளையடித்து கொளுத்தியது காணாது என்று முடிவெடுத்து விட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, satan said:

நாட்டை கொள்ளையடித்து கொளுத்தியது காணாது என்று முடிவெடுத்து விட்டார்.

போரை வென்ற தலைவன்,கொரோனாவை தனியொருவனாக முறியடித்தவன் என்ற பெருமையே போதும் எதுவும் எப்படியும் செய்யலாம் என்ற முடிவெடுக்க.....

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, சுவைப்பிரியன் said:

அவரத்தில எதையோ விட்டிட்டு போட்டார் போல.😆

👉  https://www.facebook.com/100011075821681/videos/779949883005792  👈

இந்த ஜட்டியைத்தான் விட்டடிட்டுப்  போனவர். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஜனாதிபதியாகச் செய்யப்படுவது உறுதியாகி வருவதால் நாடு திரும்புவது அவருக்குப் பாதுகாப்பாகவும் முன்னாள்ஜனாதிபதிக்குரிய சலுகைகளை அனுபவிக்கவும் முடியும் என்று நினைத்திருப்பார்.இனி பொருளாதாரததைப்பற்றிய பிரச்சினை அவருக்கு இல்லை. நிம்மதியாக காலத்தைக் கழிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, புலவர் said:

ரணில் ஜனாதிபதியாகச் செய்யப்படுவது உறுதியாகி வருவதால் நாடு திரும்புவது அவருக்குப் பாதுகாப்பாகவும் முன்னாள்ஜனாதிபதிக்குரிய சலுகைகளை அனுபவிக்கவும் முடியும் என்று நினைத்திருப்பார்.இனி பொருளாதாரததைப்பற்றிய பிரச்சினை அவருக்கு இல்லை. நிம்மதியாக காலத்தைக் கழிக்கலாம்.

நூறுவீதம் சரியான கருத்து. வெளிநாடுகளில் தங்கியிருந்தால் பாதுகாப்பில்லை. சொந்த நாட்டில் சொந்தமக்களால் என்றும் காப்பாற்றப்படுவார்.

ஏனெனில் இவர் சிங்கள இனவாதத்தின் ஹீரோ.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

போரை வென்ற தலைவன்,கொரோனாவை தனியொருவனாக முறியடித்தவன் என்ற பெருமையே போதும் எதுவும் எப்படியும் செய்யலாம் என்ற முடிவெடுக்க.....

அதன் பயனை அவர்காலத்தில் அவரே அறுவடை செய்ய வேண்டுமென்று காலம் கணித்து காத்திருந்திருக்கு. எப்படியாகுமென்று பாப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அவரத்தில எதையோ விட்டிட்டு போட்டார் போல.😆

அது தான் அந்த கோவணம்.....😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

ரணில் ஜனாதிபதியாகச் செய்யப்படுவது உறுதியாகி வருவதால் நாடு திரும்புவது அவருக்குப் பாதுகாப்பாகவும் முன்னாள்ஜனாதிபதிக்குரிய சலுகைகளை அனுபவிக்கவும் முடியும் என்று நினைத்திருப்பார்.இனி பொருளாதாரததைப்பற்றிய பிரச்சினை அவருக்கு இல்லை. நிம்மதியாக காலத்தைக் கழிக்கலாம்.

உண்மை, இன்னும் பல திருப்பங்ளை இலங்கை மக்கள் தரிசிக்கப்போகிறார்கள். முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைத் தமது மொட்டுக் கட்சி உறுப்பினர் ஊடாக நரிக்கு(ரணிலுக்கு) வழங்கி அதற்கான கையூட்டாக ராயபக்ச அன்ட் கோ தனக்கான பாதுகாப்பையும் சுகபோக வாழ்வையும் உறுதிப்படுத்தப்போகிறது. இதிலே பலியானது 'கோட்டா கோ கோம்' போராட்டமும் அதற்காக உழைத்த மக்களின் சக்தியுமே. இதன் பின்னால் சக்தி மிகு நாடுகளின் ஆலோசனைகளும் இருக்கும். அதற்கான விட்டுக்கொடுப்புகளும் பேசப்பட்டிருக்கும். 'கோத்தா கோ கம' போராட்ட அணியினர் தற்போது செய்யக்கூடியது அரச அதிகாரத்திற்கு ராயபக்ச அன்ட் கோவினர் பதவிக்கு வந்தபின் தேடிய சொத்துகளைப் பகிங்கரங்கப்படுத்திப் பட்டியலிட்டு அவற்றை மீண்டும் அரச திறைசேரிக்குத் திருப்புவித்தல். அனைத்தையும் ஊழல் மோசடி குற்றச்சாட்டின் கீழ் ஒருங்கிணைத்துச் சட்ட நடவடிக்கையெடுத்தல் என்பவற்றை செய்தால் மட்டுமே இவர்களது போராட்டம் பெறுமதியானதாகும். இல்லையேல் அதிகார முகமாற்றம் மாற்றத்தோடு அரசப்பொறி தனது ஒடுக்குமுறையையும் அடக்குமுறையையும் தொடரும் நிலை மிஞ்சும்.  தமிழ் அரசியல்வாதிகள் தமது உறைநிலையிலிருந்து விடுபட்டுத் தமிழினத்தின் அரசியல் உரிமையை உறுதிப்படுத்தும் காலப்பொருத்தமான செயல்களை இவ்வேளையிலாவது முன்னெடுப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவித முன் ஆயத்தப்படுத்தலோ அல்லது திட்டமிடலோ இல்லாமல் நாட்டைவிட்டு ஓடிவிட்டு மீண்டும் நாடு திரும்ப உள்ளார், இந்தளவிற்கு ஒரு அரச தலைவர் தெளிவில்லாமலா இருப்பார்?

சில வேளை உல்லாசபயணமாக செண்ரவர் மீண்டும் வந்து பதவியினை பொறுப்பேற்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

மாலை தீவிலும் Gota go home 

சிங்கப்பூரிலும் Gota go home 

என்றால் அந்தாள் திரும்பி வரும் தானே!

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளுக்கு 15 நாட்கள் மட்டுமே சிங்கப்பூரில் தங்க அனுமதி என செய்தி வாசித்த ஞாபகம்.

வகித்த பதவிக்குறிய காப்பு இல்லாமல் உள்ளிருந்தபடியே விசாவை நீட்டிப்பு செய்ய இயலுமா..?

அவசிய, தவிர்க்க முடியாத காரணங்கள் இல்லாமல் விசாவை நீட்டிக்க இயலாது என அறிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது ? 

😉

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா go home என்பதே அரகலியாவின் மந்திரம்.

இதை வாய் மூடி பார்த்திருந்து அமெரிக்கா 

கோத்த போனவுடன் சட்டம், ஒழுங்கு போன்றவற்றை பற்றி பீற்றத்  தொடங்கியது.

அதற்கும் மேலாக, ரணில் கோ home என்பது வலுவுப்பற்று வருகிறது என்ற அறிகுறி தெஇந்ரதவுடன், இலங்கை மக்கள் இப்பொது ஏற்றப்பட்டு இருக்கும் அதிகாரா ஏற்றப்பாடுடன் முரணப்படாமல் போகவேண்டும் என்ற தொனிப்பட சொல்ல தொடங்கி இருக்கிறது அமெரிக்கா.

சிங்கள மக்கள்  தமிழர்கள் போலன்றி, எதை எந்த இடத்தில் எதிர்க்க வேண்டும், எதிர்க்க கூடாது, ஆதரிக்க வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவர்கள்.

கோத்த வருவார். ஒரு பிரச்னையும் அவருக்கு இருக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஒரு கிழமைக்கு முன்னாடி, எப்படி போனேனோ... அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு.

சேர் இன்னும் ஜொக்கா போடாமலா அலையுறீங்க😆

4 hours ago, nedukkalapoovan said:

மகிந்த... நாமல்.. எல்லாம் நாட்டில் இருக்க முடியும் என்றால்.. ஏன் இவர் முடியாது. ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாவலராக உள்ள ரணில் உள்ளிட்டவர்கள் அரச உயர் பதவிகளில் இருக்கும் வரை ராஜபக்ச கும்பலுக்கு என்ன கவலை. 

அது👆

3 hours ago, குமாரசாமி said:

போரை வென்ற தலைவன்,கொரோனாவை தனியொருவனாக முறியடித்தவன் என்ற பெருமையே போதும் எதுவும் எப்படியும் செய்யலாம் என்ற முடிவெடுக்க.....

இது👆

17 minutes ago, Kadancha said:

சிங்கள மக்கள்  தமிழர்கள் போலன்றி, எதை எந்த இடத்தில் எதிர்க்க வேண்டும், எதிர்க்க கூடாது, ஆதரிக்க வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவர்கள்.

இதுவும்👆

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இலங்கை திரும்புகிறார் முன்னாள் ஜனாதிபதி!

நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கை திரும்பவுள்ளார்.

ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அது, அவருக்கும், அவரது மனைவிக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு மாதத்தில் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.samakalam.com/இலங்கை-திரும்புகிறார்-மு/

ஒரு ஜனாதிபதியோ பாராளுமன்ற உறுப்பினரோ பதவிக்காலம் 5 வருடத்தை முழுமையாக பூர்த்தி செய்தாலே ஓய்வூதியம் பாதுகாப்பு என்று வேறும் பலபல வசதிகள் சாகும்வரை அனுபவிக்கலாம்.

இதுக்காகவே ஏதோ திட்டத்தை போடுகிறார்கள்.

இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் இதேநிலை தான்.

ஏதாவது ஒரு பிரச்சனை வந்து அரசு கவிழ்ந்து மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் அடுத்த தடவை வெல்லவே முடியாது போகலாம்.எனவே இருக்கும் மிகுதி காலத்தையும் ஏதாவதொரு பேய்க்கு ஆதரவு கொடுத்து முழுசாக ஓய்வூதியம் தொடக்கம் சகலதையும் அனுபவிக்கவே விரும்புவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அது, அவருக்கும், அவரது மனைவிக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

என்ன கொடுமை இது. இவ்வளவு காலமும் சுருட்டிய காசு போதாதா 73 வயசு மனுசனுக்கு எஞ்சியுள்ள மிகுதி காலத்தை கழிக்க.

நேர்மையானவன் என்றால் இந்த சலுகைகளை இவன் புறக்கணிக்க வேண்டும். இவனுக்கு கொடுக்கப்படும் சலுகைகளுக்கான செலவை எல்லாம் இலங்கை மக்கள் செலுத்தவேண்டும். இது தேவையா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  சலுகைகளுக்காக வருகிறாரா ? நான் நினைக்கவில்லை. ஆனால் அவருக்கு உரிய முறையில் தங்க எந்த நாடும் வசதி கொடுக்கவில்லை(visa etc) என்பதால் தான் திரும்பி வருகிறார். 
மகிந்த குடும்பத்தின் தலையாட்டி ரனில் பதவியில் உள்ள போது பாதுகாப்பு பற்றி யோசிக்க தேவை இல்லை. தொடர்ந்து நாட்டில் இருந்து மீண்டும்  இதே மக்களால் தெரிவு செய்து ஆட்சி செய்யவே மகிந்த குடும்பம் விரும்பும். சிறிலங்காவை விட இவர்களுக்கு பாதுகாப்பான இடம் வேறில்லை. வைத்திருக்கும் பணத்தை அனுபவிக்கவும் சிறிலங்காவே தற்போதைய நிலையில் சிறந்த இடம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.