Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

முன்பொரு காலத்தில் குரு, சாமியார், ஆசான் என்று பலர் தமிழரில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அன்றைய நாளில் அது அவசியமாக இருந்திருக்கலாம்.   இப்போதும் இவ்வாறான சாமியார்கள் தேவையா ? இன்று பெரும் செல்வத்திலும் ஊழல் அரசியல்வாதிகளின் பின் பலத்திலும் இயங்கும் சாமியார்களை நாம் பிந்தொடர்வது சரியா ?

ஆக்கபூர்வ்வமாக விவாதிப்போம்.

***

இணையத்தில் தேடியபோது கிடைத்த கட்டுரையின் ஒரு பகுதியை இணைக்கிறேன்.

https://vimarisanam.com/2016/03/31/சாமியார்களும்-சுஜாதா-சா/

ஒரு கேள்வி பதில் வடிவில் “சாமியார்கள்” குறித்து சுஜாதா தன் கருத்தைக் கூறி இருந்தார். முதலில் அவரது கருத்து –

——

கேள்வி : ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், சத்யசாயி பாபா, ஓஷோ, மாதா அமிர்தானந்தமயி என்று எந்த ஆன்மீக அமைப்பை எடுத்துக்கொண்டாலும் உலகெங்கும் கிளைகள்.
படிக்காத மற்றும் படித்த டாக்டர்கள், இஞ்சினீயர்கள், வெளிநாட்டவர்கள் போன்ற லட்ச கணக்கான மக்கள் கூட்டம். இதென்ன… மாஸ் ஹிஸ்டீரியாவா அல்லது
மாஸ் ஹிப்னாடிஸமா?

பதில்: இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது Domino effect என்ற சங்கதி அருகருகே இருக்கும் டாமினோக்களில் ஒன்றை தள்ளிவிட்டால் மற்றது தொடர்ந்து விழுமே… சைக்கிள் ஸ்டாண்டில் கூட பார்த்திருப்பீர்கள்.
அந்த வகைதான் இந்த இயக்கங்கள் பிரபலமடைவதும்! யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல, அவர் மற்றொருவருக்குச் சொல்ல… மெள்ள மெள்ள அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது.

இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன்.
என்னதான் இஞ்சினீயரோ, டாக்டரோ, வெளி நாடோ, உள் நாடோ, தன் பிறப்பு ‍ இறப்பைப் பற்றி தெளிவில்லாமல் இருப்பதும் – மரணத்துக்குப் பின் என்ன? என்கிற கேள்வி ‍ பதில் அளிக்காமலேயே இருப்பதும்தான். இந்த uncertainity – நிச்சயமின்மை அவனை இம்சிக்கிறது. ஏதாவது ஆணியில் தன் நம்பிக்கையை மாட்டிவைக்க விரும்புகிறான்.

முழுக்க முழுக்க பகுத்தறிவு வாதமும் ஏன் ஏன் என்கிற முடிவில்லாத கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஓர் எல்லைக்கு பிறகு, கேள்வி கேட்காமல் நம்பவே
விரும்புகிறான். அந்த எல்லை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஓர் எளிய மனதுக்கு தெருக்கோடி பிள்ளையாரில் துவங்கி, அண்ட சராசரங்களையும் பிரபஞ்ச விசைகளையும் ஆராய்ந்த ஐன்ஸ்டைனுக்கு இறுதியில் God என்ற ஓர் எளிய வார்த்தை
தேவைப்பட்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கின் போன்றவர்கள் கூட Determinism பற்றி பேசும் போது. ஆரம்ப கணத்தில் ஓர் எல்லையற்ற சக்தியைச் சொல்ல வேண்டியிருந்தது.

தெருக்கோடி பிள்ளையாரா இல்லை க்வாண்டம் இயற்பியலா இடையில் எத்தனையோ… மகான்கள். எல்லோருக்கும் பகுத்தறிவுக்கான எல்லை உண்டு.

என்னைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கைகளால் நல்லது நிகழும்வரை போனால் போகிறது நம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்.

——

நான் இதை வேறு கோணத்தில் பார்க்கிறேன்.

இவர்களை மூன்று விதங்களில் பார்க்கலாம்.

ரமண மகரிஷி, காஞ்சி முனிவர் போன்றவர்களை எல்லாம் இந்த சாமியார்களுடன் சேர்த்து பட்டியல் போடுவது தவறு.
அவர்கள் முழுக்க முழுக்க ஆன்மிகவாதிகள். மனிதர்களின் மனதில் உள்ள ஆசா பாசங்களை போக்கி, தூய வாழ்வு வாழ்ந்து – பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்த முயற்சித்த பெரியவர்கள் – நிஜமாகவே – சகலத்தையும் துறந்த சந்நியாசிகள்.

ராமகிருஷ்ணர் முற்றிலும் பக்தி மார்க்கத்தில் மூழ்கியவர்.

ஆனால், அவரது சீடரான விவேகானந்தரோ, ஆன்மிக வளர்ச்சியை விட சமுதாய நலத்தை முக்கியமென்று நினைத்தார்.

பல நூற்றாண்டுகளாக அடிமைத்தளையில் வீழ்ந்து சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து கிடந்த இந்திய சமூகத்தை – மீண்டும் அதன் உன்னத நிலைக்கு கொண்டு வர அரும்பாடு பட்டவர். மக்கள் நல்ல கல்வியறிவும், உடல் ஆரோக்கியமும் பெற வேண்டும் என்பதை முதல் நோக்கமாக கொண்டு நாடு முழுவதும் தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரில் கல்வி நிறுவனங்களையும், மருத்துவ மனைகளையும் நிறுவினார். அந்த வழியில், ராமகிருஷ்ணா மடங்கள் இன்றும் நாடெங்கும் கல்வித்துறையில் அருமையான முறையில் தொண்டாற்றி வருகின்றன. ( தமிழ்நாட்டில், திருச்சி அருகே திருப்பராய்த்துறையில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் “குடில்” ஆற்றும் அரும் பணிகள் பற்றி அண்மையில் இந்த இடுகையில் ஒரு நண்பர் விவரித்ததை இங்கு நினைவில் கொள்ளலாம்…)

இந்த முதல் இரண்டு வகை “சாமியார்” களாலும் சமுதாயத்தில் அளப்பரிய முன்னேற்றம் ஏற்படுகிறது. மக்களிடையே மனவளர்ச்சியும், கல்வியறிவும், உடல்நலமும்
பல்வேறு சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வும் வளர இவை உதவியிருக்கின்றன – இப்போதும் உதவுகின்றன. இவை வரவேற்கப்பட, போற்றப்பட வேண்டிய விஷயம்….

——

ஆனால், தங்களது பேச்சாற்றல், பெரும் கூட்டத்தை திரட்டி தன்வசப்படுத்தும் ஆளுமை, பெரிய அளவில் அடியார் கூட்டம் –

இவற்றைக் கொண்டு, தனித்தனியே கார்பொரேட் நிறுவனங்களைப் போன்ற ஆசிரமங்களை உருவாக்கிக் கொண்டு மேலும் மேலும் தங்கள் செல்வத்தையும், செல்வாக்கையும் வளர்த்துக் கொள்வதை மட்டுமே முதல் நோக்கமாக கொண்டு செயல்படும் “சாமியார்கள்” – மூன்றாம் வகையினர். இவர்களைக் கொண்டாடுவது – பெரும்பாலும் சமூகத்தின் மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களே. அதற்கு காரணம், மேலே சுஜாதா அவர்கள் கூறியுள்ளவை தான்.

  • Like 7
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு செக்கன் கூட இல்லை

சாமிகளும் சாமியார்களும் என்று ஒரு திரி தொடங்கி விவாதிக்கலாமா என்று யாழைத்தட்ட இது வந்து விழுகிறது. 

Posted

இந்த (மானிடப்) பிறப்பு எதற்கு? பிறக்க முதல் எங்கிருந்தோம்? இறந்த பின்பு எங்கு போகப் போகின்றோம்? என் பிறப்பின் அர்த்தம் என்ன? நான் பிறந்திருக்காவிட்டால் நான் எங்கு இருப்பேன்? என் ஆத்மா இறுதியில் போய் சேரும் இடம் என்ன?

ஏன் அவனை /அவளைப் போல என்னால் வாழ முடியுது இல்லை? அவனு(ள்)க்கு கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைப்பதில்லை? இவ்வளவு செல்வம் இருந்தும் ஏன் மனது அமைதியடையவில்லை? நான் ஏன் இன்னும் மிக ஏழ்மையில் உழல்கின்றேன்? கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணமா? இப் பிறவியில் நான் செய்த எல்லாம் அடுத்த பிறவிக்கும் வந்து சேருமா?

....இவ்வாறான அரதப் பழசான கேள்விகளை, சமூகத்துக்கோ தனக்கோ கொஞ்சம் கூட நன்மை கொடுக்காத  கேள்விகளை ஆன்மீகம் என்ற பெயரில் கேட்டுக் கொண்டு, சோம்பிக் கிடந்து உழல்கின்றவர்களில் பலர் தான் இவ்வாறான சாமியார்களிடம் தஞ்சம் அடைகின்றனர். 

தன் மீதான பயம். அளவுக்கு மீறிய ஆசை, தன்னம்ப்பிக்கை இன்மை, எதிர்காலம் பற்றிய அச்சம். தான் செய்யும் செயல்களால், தன் தொழிலால் ஏற்படும் மனவுளைச்சல் போன்றவற்றை தணிக்க கிடைக்கும் போதைப் பொருள் தான் இந்த சாமியார்களின் மீதான பக்தி.

கடின உழைப்பும் தன்னம்பிக்கையும், எதிர்காலம் மீதான பயமின்மையும் உள்ள கொண்ட எவரையும் இப்படியான சாமியார்களிடம் தஞ்சம் அடைவதையும், ஆன்மீகம் என்ற பெயரில் செய்து கொண்டு இருப்பதையும் நான் காணவில்லை.

கடவுள் (இறை) நம்பிக்கையும், சாமியார்களின் மீதான நம்பிக்கையும் ஒன்றுதான் என்று நம்புகின்ற கூட்டம் இது. 

உண்மையில் கடவுளை நேர்மையாக நம்புகின்ற எவரும் சாமியார்களை நம்பப் போவதில்லை. 

பின்குறிப்பு:

இணையவன், தலைப்பில் தமிழர்கள் என்று இட்டுள்ளீர்கள். இது தமிழர்களுக்கு மட்டுமான "வியாதி" அல்ல. 

எனக்கு தெரிந்து குஜாராத்திகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் தமிழர்களை விட மோசமாக சாமியார்களை நம்புகின்றனர். சாயிபாபாவை நம்புகின்ற தமிழர் அல்லாதவர்கள் பலர் உள்ளனர். தர்காவுக்கு சென்று மெளலவியை தெய்வமாக போற்றும் முஸ்லிம்கள் பலரை எனக்கு தெரியும். மாளிகாவத்தையில் கூட இப்படியான ஒரு முஸ்லிம் "பெரியார்" இருந்தார் (ஆனால் கோப்பரேட் மெளலவிகள் அரிது).

சிங்கள பெளத்தர்களுக்கு ஒவ்வொரு பிக்குவும் ஒரு பெரும் சாமியார் தான். 

  • Like 8
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, நிழலி said:

உண்மையில் கடவுளை நேர்மையாக நம்புகின்ற எவரும் சாமியார்களை நம்பப் போவதில்லை

இதை  இரண்டும்  கெட்டான் கூட்டம் எனலாம்

சொல்ல  வார்த்தையில்லை

நன்றி நேரத்திற்கு ...

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, இணையவன் said:

இந்த முதல் இரண்டு வகை “சாமியார்” களாலும் சமுதாயத்தில் அளப்பரிய முன்னேற்றம் ஏற்படுகிறது. மக்களிடையே மனவளர்ச்சியும், கல்வியறிவும், உடல்நலமும்
பல்வேறு சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வும் வளர இவை உதவியிருக்கின்றன
– இப்போதும் உதவுகின்றன

நீங்கள் கூறிய மூன்றாம் தர கார்ப்பரேட் சுவாமியார்களாலும் இவை சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனித சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் அப்பால் ஒரு சக்தி இருக்கிறது என்ற அகண்ட உணர்வு அந்த உணர்வின் மூலம் எழுப்பப்படும் கேள்விகள்; மனித பிறவி , அதன் நோக்கம், பிரபஞ்ச சக்தி, தெரியாமல் அறியாமல் இருக்கும் அதன் ஆழ்ந்த உண்மைகள் இப்படியான சிந்தனை ஆன்மீகத்தை சார்ந்து நிற்கும். அல்லது ஆன்மிக தேடல் என்றும் கூட சொல்லலாம். 
இந்த சிந்தனை மனிதர்களுக்கானது. இயல்பானது. 
இவை வெறுமனே அரதப்பழசான கேள்விகளோ அல்லது வெறுமனே சோம்பேரிகளின் போக்கிடம் என்னும் சிந்தனை ஆலமற்றது.  

முன்பொரு காலத்தில் குரு, சாமியார், ஆசான் என்று பலர் தமிழரில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அன்றைய நாளில் அது அவசியமாக இருந்திருக்கலாம்.   இப்போதும் இவ்வாறான சாமியார்கள் தேவையா ?

தேடுதல் உள்ளவனுக்கு குருவின் வழிகாட்டல் இப்போது / அப்போது என்று பார்க்காமல் தேவை உள்ளபோது தேவை. 

இன்று பெரும் செல்வத்திலும் ஊழல் அரசியல்வாதிகளின் பின் பலத்திலும் இயங்கும் சாமியார்களை நாம் பிந்தொடர்வது சரியா ?

அப்படியான சுவாமியார்களை பின்தொடர்வதை தவிர்த்து அவர்களால் நல்ல விடயங்கள் சொல்லப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் அந்த விடயங்களை நீங்கள் கடைபிடிக்கலாம்.

கார்ப்பரேட் மருத்துவ கம்பெனிகள் மேல் எண்ணற்ற குற்றச்சாட்டுகல் இருக்க; எனக்கு நம்பிக்கை, தேவை இருந்தால் வாக்சீன் போட்டுக்கொள்வேன் இல்லை என்றால் கடந்து போவேன் என்று இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, இணையவன் said:

 யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல, அவர் மற்றொருவருக்குச் சொல்ல… மெள்ள மெள்ள அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது.

இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன்.

இதே முறையில் தான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடையே மதம் மாறுவதும் நடைபெறுகின்றது. மதம் மாறிய  தமிழர்  மற்ற மதத்திற்கு போன பின்பு தனக்கு அற்புதம் நடந்ததாக புளுகி விட  அதை கேட்டவர் மற்றொருவருக்கு அதை சொல்ல...😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதங்கள், சாமியார்களில் நம்பிகை இல்லை என உறுதியாக சொல்லும் அளவுக்கு எனக்கு அறிவில்லை என கருதுகிறேன், அதனால் அதனை பற்றி சிந்திப்பதில்லை, திருமணமான பின்னர் கோவிலுக்கு செல்வதுண்டு, மத நம்பிக்கையில் இல்லை மற்றவர்களின் நம்பிக்கையினை மதிப்பதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Sad-guru உடான்ஸ்சாமியார் அருளுரை

கள்ள சாமியாருக்கும், சாமியாருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.

மறைத்து வைத்த CCTV கமராவ  கண்டுபிடிக்கத்தெரிந்தவன் சாமியார்

கண்டுபிடிக்க தெரியாதவன் கள்ளச் சாமியார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் வாழ்க்கை என் முடிவு,சாமியும் வேணாம் ஆசாமியும் வேணாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, விசுகு said:

ஒரு செக்கன் கூட இல்லை

சாமிகளும் சாமியார்களும் என்று ஒரு திரி தொடங்கி விவாதிக்கலாமா என்று யாழைத்தட்ட இது வந்து விழுகிறது. 

நம்ம உடான்சு சுவாமியார் பத்தி இல்லைதானே.

சரி இந்த சாமியார்கள் பற்றி சொல்லும் போது நேற்று பார்த்த செய்தி ஒன்றை பகிர விரும்புகிறேன்.

இந்திய பம்பாய் பக்கத்தில் ஒரு ரீச்சர், ரெயினிங் போன இடத்தில், அவர் படிப்பிக்கும் ஊரில் இருந்து பின் அங்கே இடம்மாறி வந்த முன்னாள் மாணவி வீட்டில் தங்கி இருந்திருக்கிறார்.

மாணவியின் தாயார், அவரிடம், கலியாணம் ஆகி கண நாளாகியும் பிள்ளை இல்லாமல் இருப்பது குறித்து விசாரித்து இருக்கிறார்.

அவரும் கண்ணீர் விட, பக்கத்து தெருவில், அருள் பாலிக்கும் திருநங்கை சாமியார் குறித்து சொல்லி, போய் பார்த்து ஆசி வாங்கி வருமாறு, மகளுடன் அனுப்பி வைத்தார்.

அவரது பிரச்சணையை கேட்ட சாமியார், மாணவியை, வெளியே இருக்கச் சொல்லி விட்டு, உடனடியாக பூசையை ஆரம்பித்தார்.

எதையோ பூச, ஆசிரியை மயக்கமாக, அவரை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார். இதை அரை மயக்கத்தில் உணர்ந்த போதும் தடுக்க முடியவில்லை.

வெளியே வந்த அவருக்கு என்ன நடந்தது என்று தெளிவின்மை இருந்தாலும் அவரது உடைகள் வரும் போது இருந்தது போலல்லாமல் களைந்திருந்ததை மாணவி கவனித்திருக்கிறார்.

மாணவியின் வீடு திரும்பிய ஆசிரியை மயக்கம் முமுவதுமாக திருப்பிய போது என்ன நடந்தது என புரியவும், திருநங்கை சுவாமியார், போலீசுக்கு போயிருப்பாரோ அல்லது ஊருக்குப் போயிருப்பாரோ என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மாணவி வீட்டுப்பக்கம் விசாரணைக்கு வர, ஆசிரியை கோவத்தில், தாக்க..... ஊரே கூடிவிட்டது.

போலீசாரும் வர, சாமியார் பக்தர்கள், அவ(ரு) தான் திருநங்கையாச்சே என்று, ஆசிரியை மேல் சந்தேகத்துடன் பேசத் தொடங்கினர்.

இறுதியில் போலீசார், திருநங்கை சாமியாரை கொண்டு போய் செக் பண்ணி அவர், திருநங்கை அல்ல, அப்படி வேடத்தில் இருந்த ஆண் சாமியார் என்று அறிவித்ததுடன், ஆசிரியை குற்றச்சாட்டை வைத்து கைதும் செய்துள்ளனர்.

இது புது ரெக்னிக் ஆக இருக்குதே.

படித்த ஒரு ஆசிரியரே இப்படி ஏமாறும் போது, படிக்காத பாமர மக்களை நம்பித்தான் இந்த சாமியார்கள் கிளம்புகிறார்கள் போல உள்ளதே.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, Nathamuni said:

படித்த ஒரு ஆசிரியரே இப்படி ஏமாறும் போது, படிக்காத பாமர மக்களை நம்பித்தான் இந்த சாமியார்கள் கிளம்புகிறார்கள் போல உள்ளதே.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ஆனால் அளவுகள் வேறுபடலாம், சாமியாரில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சாமியில் நம்பிக்கை வைக்கிறார்கள்.

மனிதர்களுக்கு மதம் ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் சட்டம் ஒன்று இருக்கும் போது பின்  எதற்கு மதம் என்பதனை ஏற்று கொள்வார்களா? 

ஆனால் சாமியாராக இருந்தாலும் சாமியாக இருந்தாலும் தமக்கு நன்மை வேண்டியே நாடுகிறார்கள், யாரும் உலகம் நன்றாக இருக்கவேண்டும் என சாமியினையோ சாமியாரினையோ நாடுவதில்லை.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

உண்மை சகோ

நன்றி 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/1/2023 at 15:20, இணையவன் said:

முன்பொரு காலத்தில் குரு, சாமியார், ஆசான் என்று பலர் தமிழரில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அன்றைய நாளில் அது அவசியமாக இருந்திருக்கலாம்.   இப்போதும் இவ்வாறான சாமியார்கள் தேவையா ? இன்று பெரும் செல்வத்திலும் ஊழல் அரசியல்வாதிகளின் பின் பலத்திலும் இயங்கும் சாமியார்களை நாம் பிந்தொடர்வது சரியா ?

அரசியல் கட்சிகளைப்போல் இவர்களும் ஏதோ ஒரு அமைப்பு. பல அமைப்புகள் பிழையானவர்களின் கையில் அகப்பட்டு அவலங்கள் தான் மிஞ்சுகிறது.
சில  அமைப்புகள் மக்களுக்கு நல்லது செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. எனினும்  சாமிகள் அருள் வழங்குதல் என்பது எனக்கு ஏற்புடையது அல்ல. நான் கடவுள் பக்தி மிக்கவன்.  எமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்பதை அதிகமாக நம்புபவன்.மனம் நிம்மதியடைய தியானம் செய்பவன். ஆனான் தனி மனித சாமிகளை இதுவரைக்கும் நாடியதில்லை.

ஆன்மீகமும் வியாபாரம் ஆகி விட்டதால் சாமிகளை பற்றி பெரிதாக சொல்வதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விரும்பியோ விரும்பாமலோ தமிழர்களின் பண்பாடும் கலாச்சாரமும் சைவத்துடன் பிணைந்துவிட்டது.

தமிழ் பேரரசுகளின் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் இருக்கும் சிற்பக்கலைகளும், இறைவனை நோக்கிப்பாடப்பட்ட தேவராங்களும் தமிழரின் பண்பாட்டையும் கலை கலாச்சாரத்தை சொல்லி நிற்கின்றன.

இதை தமிழரிடம் இருந்து பிரித்தால் மாத்திரமே தமிழை அழிக்கமுடியும்.

இதற்கு மதத்திற்குள்ளும் வெளியிலும் காலத்துக்கு காலம் செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் ஒரு பகுதியாகவே நான் இந்த போலி சாமியார்களை அணுகுகிறேன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

“சாமியார்”  என்பதை தனது நகைச்சுவை மூலம் பல காலங்களுக்கு முன்பே திரை மொழியில்  மக்களுக்கு எடுத்துரைத்த எம். ஆர். ராதா. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

“கடவுள் நம்பிக்கை இல்லனு சொல்ற நிலை வருதுன்னா அது உன்ன நம்புற இடத்துல இருந்து வரணும். கடவுள் நம்பிக்கைங்குறது சாஞ்சுக்குறதுக்கு ஒரு தோள் மாதிரி. அது இல்லங்குறப்போ உனக்கு நீயே தான் அந்தத் தோள் . அந்த strentgh  உனக்கு வரணும். வரப்போ கடவுள் நம்பிக்கை வேணுமா வேணாமான்னு முடிவு எடுத்துக்கோ"- கனிமொழி. ஒரு பகுத்தறிவுவாதியின் மொழியில் இருந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை....
 
"கடவுள் இருக்கு - இல்ல. அந்த topicகுள்ள போக மாட்டேன். எனக்கு கடவுள் வேணுமா இல்லையான்னு கேட்டா எனக்கு தேவப்படுது. ஏன்னா கடவுள் இல்லாம வாழலாம்னு சொல்றதுக்கு நிறைய clarityயும் தைரியமும் தேவைப்படுது. அது எனக்கு இன்னும் வரல. என்னுடைய சிக்கல்கள்ல இருந்து என்ன move -on பண்ணிக்கிறதுக்கு கடவுள் தேவையா இருக்கு எனக்கு.

நான் கடவுள கும்பிடறதால யாருக்கும் எந்த பிரச்னையும் இல்ல. கடவுள வச்சு வியாபாரம் பண்ணவோ அதிகாரத்த அடையவோ இல்ல வெறுக்கவோ பிரிக்கவோ try பண்ணும்போதுதான் கடவுள் பிரச்சனையா மாறுறார். Mathematicsல provlems solve பண்றதுக்கு ஒரு X போட்டு solve பண்ணுவோம்ல அப்டி எனக்கு கடவுள்."- கடவுள் நம்பிக்கை கொண்டவரான இயக்குனர் H.வினோத் சொல்லும் பார்வை...  

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாக படித்து பெரிய பதவியில் இருப்பவர்கள் இப்படி சாமியார் பின்னால் அலைவதை பார்க்க அதிர்ச்ச்சியாய் இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/1/2023 at 17:18, பாலபத்ர ஓணாண்டி said:

கடவுள் நம்பிக்கைங்குறது சாஞ்சுக்குறதுக்கு ஒரு தோள் மாதிரி. அது இல்லங்குறப்போ உனக்கு நீயே தான் அந்தத் தோள் .

தாங்கள் சாய்ந்து கொள்ள தோள் தேடி சாமியிடமும் சாமியார்களிடமும் செல்பவர்கள் தங்கள் தோள்களை கொடுத்து சாமியும் சாமியார்களும் சாய்ந்து இருப்பதற்கு உதவியல்லவா செய்கிறார்கள்.இந்தியாவில் திருப்பதி என்கின்ற கோவிலின் ஒரு நாள் வருமானம் 426 ஆயிரம் யுஎஸ் டொலராம். [426.000]

Posted

சாமி – யார்?

  • சாமி – யார்?
சாமி – யார்?

இந்துக்கள் சாமி, இயேசு சாமி, அல்லா சாமி இன்னும் பிற மதத்தினர் வழிபடும் சுவாமிகள்.

பொதுப்படையாக நான் கும்பிடும் தெய்வத்தை, ஒரு சக்தியை அந்தந்த மதத்தினர் “சாமி” என்றே அழைக்கின்றனர்.

தமிழ்நாட்டிற்கு சாமி என்றால் வடநாட்டுக்கு என்னவென்று கேட்டு விடாதீர்கள்! நமக்கு அவ்வளவு அறிமுகம் இல்லை. மொழிக்கு மொழி வேறுபடும் ஆனால் எல்லா மதத்தினரும் அந்த மொழியில் குறிப்பிட்ட ஒரு சொல்லைப் பயன்படுத்தித்  தங்கள் தெய்வங்களை குறிப்பிடுகின்றனர்.

சரி நமது தலைப்புக்கு வருவோம்!

சாமி – யார்?  எங்கிருந்து வந்தனர்?

நமக்கும் கடவுளுக்கும் இடையில் அவர்களுக்கு என்ன பணி?
சற்று யோசித்துப் பார்த்தால், வெங்காயம் போல ஒன்றுமே இல்லை. வெளியில் பார்க்கும்போது வெங்காயம் முழுமையாக தெரியும் ஆனால் அதை உறிக்க உறிக்க உள்ளே ஒன்றுமே இருக்காது. அப்படி தான் சாமியார்கள்.

நாம் மனவேதனையுடன் எதையாவது எதிர்பார்த்து அங்கு சென்று இருப்போம். அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று அவர்கள் ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருக்கும் நான்கு சொற்களை ஊதுபத்தி கொளுத்தி வைத்து, அல்லது கோர்வையான சொல்லில் உங்களுக்கு சொன்னால், அதை நமது மனதை ஆறுதல் அடைந்து ஏற்றுக்கொள்கிறது.

ஆனால் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் அதை நாமே செய்து விட முடியும். ஆனால் யாரோ ஒருவரை நம்பி இருப்பதே நமக்கு பழக்கமாகிவிட்டது. ஏனென்றால் ஒரு சக்தி இருக்கிறது அதை நம்பி தான் நாம் என்று ஆரியம் நமது மனதில் ஆழப்பதிய வைத்திருக்கிறது.

நாம் சிந்தித்துப் பார்த்தால் நாம் மனதார கும்பிடும் கடவுளுக்கும் நமக்கும் இடையில் இவர் எதற்கு? ஆனால் நாம் சிந்திப்போமா? கிடையாது! சிந்திக்காமல் இருக்க வைப்பதற்கு தான் ஆயிரத்தெட்டு சடங்குகளும் பரிகாரங்களும்.

நம் மனம் கொண்ட கொண்ட ஆசையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, அதை பெற்றுத் தருவதாக நமது மனதை நம்பவைக்கும் ஒரு கலையை தெரிந்து வைத்திருப்பதால்தான் அவர் சாமியார்!

உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். ஆனால் இவரிடம் சென்றதால் தான் கிடைத்தது என்பதை நம்ப வைக்கும் அளவுக்கு நமது யோசிக்கும் திறனும் வெகுவாக குறைத்து வைத்திருக்கின்றனர் இந்த சாமியார்கள். ஒரு புத்தகத்தை படித்தால் வரும் அறிவை விட முதிர்ச்சியை விட சாமியார்கள் கொடுத்துவிட முடியுமா? ஏன் இதை நாம் சிந்திக்கவே இல்லை. எதற்காக நமக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு தரகர் தேடுகிறோம்? பதில் இருக்காது!

ஏனென்றால் வழிவழியாக பரம்பரை பரம்பரையாக இதை நமக்கு கடத்திக் கொண்டு வருகிறார்கள். அறிவியல் இவ்வளவு வளர்ந்த பிறகும் நாம் கேள்வி கேட்க வேண்டாமா?

100 ஆண்டுகள் முன்புதான் எந்த அறிவியல் வளர்ச்சியும் இல்லாமல் ஆரியத்தின் சூழ்ச்சியால் நமது முன்னோர்களின் மனதில் இந்த பயத்தை ஆழப்பதிய வைத்துவிட்டார்கள். அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு இன்று நம்மிடமும் வந்து நிற்கிறது. ஆனால் அதில் பகுத்தறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள் என்று பெரியார் போன்று பலர் கூறியதால் இந்த பதிவை நான் எழுதுகிறேன். ஏனென்றால் பதினேழு வயது வரை நானும் இதே கூட்டத்தில் தான் இருந்தேன்.

ஒரு குடிசையோ கட்டிடமோ கட்டி ஆரம்பிக்கும் சாமியார் சில வருடங்களில் பல மாடிக் கட்டிடங்களும் பல நூறு ஆசிரமங்களும் திறக்கிறார் என்றால் எப்படி?

கொஞ்சம் மதத்தை தள்ளிவைத்துவிட்டு சிந்தியுங்கள் திராவிடர்களே!

எப்படி நமது தாய், தந்தையர், பாட்டி, தாத்தா மற்றும் நம் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள், புத்தகங்கள் சொல்லாத எந்த நல்ல விடயத்தை சாமியார்கள் சொல்லிவிடப் போகிறார்கள்?

நமக்கு அறிவு வேண்டாமா? சுய சிந்தனை வேண்டாமா?

இதற்கு சாட்சி ஜீசஸ், கால்ஸ், ஈசா யோகா போன்றோர். கடவுளின் ஏஜெண்டுகளாக இருக்கிறோம்! நாங்கள் கடவுளிடம் மன்றாடி உங்களுக்காக வேண்டுகிறோம் என்று சொன்னவர்களை இன்று இன்கம்டாக்ஸ் ரெய்டு முதல் அன்னிய செலாவணி மோசடி வரை துரத்துகிறது. இன்று சாமியார்களும் கார்ப்பரேட் மாயமாகி வருகின்றனர். தங்களுக்கு குடும்பம் என்று ஒன்று இருக்கும் பொழுது உங்கள் முன்னோர்கள் உங்களை நின்று காக்கும் பொழுது எதற்கு இந்த சாமியார்கள்?

ஏழைகளுக்கு உணவு அல்லது உதவிகளை செய்யும் பொழுது கிடைக்கும் மனநிறைவை விட அந்தச்  சாமியாரிடம் எடுத்துப் போய் பணத்தைக் கொட்டுவதில் கிடைக்கப் போகிறதா?

வரும் தலைமுறையினருக்கு இப்பேர்ப்பட்ட சிந்தனைகளைத் தான் கடத்த வேண்டுமே தவிர, சாமியார்களிடம் சென்றால் நமக்கு நன்மை நடக்கும்; மனநிறைவு கிடைக்கும் என்று சொல்லி வளர்க்கவே கூடாது.

திராவிடம் அறிவோம்! திராவிடம் பேசுவோம்! திராவிடம் பழகுவோம்!

வாழ்க தமிழ் தமிழ் வெல்லும்!

திராவிடன்

https://dravidan.in/2021/08/06/saami-yaar/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, nunavilan said:

சாமி, சாமியாரை நம்பாதவர்கள் கூட சாத்திரியாரை நம்புகிறார்கள்.

ஊரில் முன்னர் சாத்திரியார்களின் பொதுவான பலன் ஆள் ஊரில இருந்தால் உயிரிழக்கலாம் அல்லது கை கால்களை இழக்கலாம் என சொல்வார்கள்.

பொதுவாக அது நிகழ்வதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக  இருப்பதால், அதையும் பெற்றோர் நம்புவார்கள்,பிள்ளை வெளிநாடு வந்த பின்; வெளிநாடுதான் வந்துவிட்டார்களே என்று நிம்மதியாயிருக்காமல் மீண்டும் சாத்திரியாரிடம் போனால்; அவர் பாட்டிற்கு பெண்களால் ஆபத்து என ஏதாவது ஒன்றை அடித்துவிடுவார்கள்.

அதுவரை சிவனே என்று இரண்டு வேலை செய்து தாணுண்டு தன்பாடுண்டு இருப்பவர்களுக்கு ஒரு திருமணத்தினை செய்துவைத்துவிடுவார்கள் இந்த சாத்திரியார்களின் பேச்சினை நம்பும் பெற்றோர்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, nunavilan said:

ஒரு குடிசையோ கட்டிடமோ கட்டி ஆரம்பிக்கும் சாமியார் சில வருடங்களில் பல மாடிக் கட்டிடங்களும் பல நூறு ஆசிரமங்களும் திறக்கிறார் என்றால் எப்படி?

இப்படி பல சிந்திக்கவைக்கும் கேள்விகளை கொண்ட நல்ல கட்டுரை.

23 minutes ago, vasee said:

சாமி, சாமியாரை நம்பாதவர்கள் கூட சாத்திரியாரை நம்புகிறார்கள்.

அப்படியும் இருக்கிறதா  நான் நினைத்தேன் இவர்களுக்குள் உள்ள பொதுவான ஒற்றுமைகள் அது என்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vasee said:

சாமி, சாமியாரை நம்பாதவர்கள் கூட சாத்திரியாரை நம்புகிறார்கள்.

ஊரில் முன்னர் சாத்திரியார்களின் பொதுவான பலன் ஆள் ஊரில இருந்தால் உயிரிழக்கலாம் அல்லது கை கால்களை இழக்கலாம் என சொல்வார்கள்.

பொதுவாக அது நிகழ்வதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக  இருப்பதால், அதையும் பெற்றோர் நம்புவார்கள்,பிள்ளை வெளிநாடு வந்த பின்; வெளிநாடுதான் வந்துவிட்டார்களே என்று நிம்மதியாயிருக்காமல் மீண்டும் சாத்திரியாரிடம் போனால்; அவர் பாட்டிற்கு பெண்களால் ஆபத்து என ஏதாவது ஒன்றை அடித்துவிடுவார்கள்.

அதுவரை சிவனே என்று இரண்டு வேலை செய்து தாணுண்டு தன்பாடுண்டு இருப்பவர்களுக்கு ஒரு திருமணத்தினை செய்துவைத்துவிடுவார்கள் இந்த சாத்திரியார்களின் பேச்சினை நம்பும் பெற்றோர்.

சொந்த அனுபவம் போல் தெரிகிறதே…?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, MEERA said:

சொந்த அனுபவம் போல் தெரிகிறதே…?

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்படியும் இருக்கிறதா  நான் நினைத்தேன் இவர்களுக்குள் உள்ள பொதுவான ஒற்றுமைகள் அது என்று.

மீரா,
சொந்த அனுபவம் இல்லை, நகைசுவையாக எழுதுவதற்காக சும்மா எழுதியுள்ளேன்.

  • Haha 1
Posted

இங்கு எழுதியவர்கள் யாரும் சாமியார்கள் பணத்தில் மிதப்பவர்கள் என்பதை மறுதலிக்கவில்லை. அது மட்டுமல்லாது மோசமான அரசியல்வாதிகளிடமும் தொடர்புள்ளவர்கள். சாமியார்கள் செய்யும் சில சமுக சேவைகள் வெறும் கண்துடைப்புகள். அவர்களிடமுள்ள பலத்தோடு ஒப்பிடும்போது மிகச் சிறியவை.

சாமியார் ஒருவரை நம்புபவர் இன்னொரு சாமியை நம்புவது குறைவு. அதேபோல் இரு சாமியார்கள் ஒன்றுசேர்ந்து சமுகநலத் திட்டங்களை முன்னெடுப்பதும் மிக அரிது. ஏன் ஒரு சாமி இன்னொரு சாமியாருடன் சேர்வதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனது உறவினர்கள் நம்பும் சாமியார் பற்றி ஆதாரங்களுடன் அவர்களுக்கு விளக்கியபோதும் அதை ஏற்றுக் கொள்ள முடியாதவாறு அவர்களது நம்பிக்கை வேரூன்றியுள்ளது.

சாமியாரை நம்புவதும் நம்பாததும் அவரவர் சொந்த முடிவு என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது ? சாமியாரை நம்புவதால் எனது மனதில் இன்பம் உண்டாகிறது என்பதால் அவர் செய்யும் காரியங்களை நான் பொருட்படுத்தாமல் போவது சரியா ? போதை வஸ்து போலவே இதுவும். அப்பாவிகளை மயக்கி வரி கட்டாத பணத்தையும் கருப்புப் பணத்தையும் முடக்குவது தனது நாட்டுக்குச் செய்யும் தேச துரோகம். எனது சொந்த மன நிம்மதிக்காக நான் இதை எப்படி அனுமதிப்பது எப்படி நியாயமாகும் ?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.