Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அழகிப் போட்டி - முதல் தடவையாக யாழ் மண்ணில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அழகிப் போட்டி - முதல் தடவையாக யாழ் மண்ணில்!

Vhg மார்ச் 14, 2023
Photo_1678811904638.jpg

சர்வதேச அழகிப் போட்டியான Miss Globe 2023 ஐ நடத்துவதற்கான வாய்ப்பை இம்முறை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் 75ற்கு மேற்பட்ட நாடுகளின் அழகிகளின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எமது நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாக அமைகிறது.

இலங்கை வரலாற்றில் இப்படியான ஒரு சர்வதேச நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெறுவதுடன் அதனை சுற்றுலாத்துறை அமைச்சுடன் Tronic Entertainment நிறுவனம் சேர்ந்து ஏற்பாடு செய்கின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக Miss Globe 2023 இலங்கை அழகிப் போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பும் அங்குரார்பண நிகழ்வும் கொழும்பு ஹில்டன் விடுதியில் 11.03.2023 அன்று இடம்பெற்றதுடன் முதற்கட்ட அழகிப் போட்டி தெரிவும் அன்றே வெற்றிகரமாக நடைபெற்றது.

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இப்போட்டியின் இரண்டாம் கட்ட தெரிவுகள் எதிர்வரும் 18.03.2023 அன்று காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஜெட்விங் விடுதியில் இடம்பெறவுள்ளது.

யாழ் மண்ணில் முதன்முறையாக இடம்பெறும் இப்போட்டியானது தமது திறமைகளை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கில் கால் பதிக்க காத்திருக்கும் வட மாகாண யுவதிகளுக்கான ஒரு அரிய சந்தர்ப்பமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

18-30 வயதிற்கிடைப்பட்ட அழகியல் துறையில் சாதிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கான ஒரு சிறந்த சர்வதேச களத்தை Tronic Entertainment யாழ்ப்பாணத்திற்கு அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.battinatham.com/2023/03/blog-post_919.html

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை ஒருத்தரையும் காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி இடுவோருக்கு வாழ்த்துக்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியிடுபவர்கள்அனைவருக்கும் வாழ்த்துகள். 👍🏼

ஐயய்யோ. இதுவா எங்கள் கலாச்சாரம்?. தமிழ் கலாச்சாரம் இதால் சீரழியப்போகுது. யாழ் மண்ணின் பண்பாடு மட்பாண்டம் மாதிரி உடையப் போகுது.. எங்கள் பெண்களின் மானம் மரியாதை எல்லாம் காற்றோடு கலக்கப் போகுது.. எல்லாம் சிங்களத்தின் நுட்பமான வேலை இது

(இப்படிக்கு புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து கொண்டு, அனைத்து களியாட்டங்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் போய் தானும் பங்கெடுத்து குதியாட்டம் போடுகின்றவர்களில் ஒருவன்)

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

சர்வதேச சதி😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

எங்கை ஒருத்தரையும் காணோம்.

எங்க ஒரு படங்களையும் காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்க ஒரு படங்களையும் காணோம்.

என்ன ஒரு ஆர்வம் பொறுங்க பொறுங்க நடந்த பிறகு படம் அனுப்புறம் 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இதை வரவேற்பதாகவே நான் விளங்கிக்கொள்கிறேன். பதில்கள் எல்லாம் சும்மா பகிடிக்கு போல தெரியுது. ஈழப்பிரியன் அண்ணா பொறுமை பொறுமை😁

5 minutes ago, nilmini said:

எல்லோரும் இதை வரவேற்பதாகவே நான் விளங்கிக்கொள்கிறேன். பதில்கள் எல்லாம் சும்மா பகிடிக்கு போல தெரியுது. ஈழப்பிரியன் அண்ணா பொறுமை பொறுமை😁

பெரும்பாலானோர் கண்டிப்பாக வரவேற்பர். கிளிநொச்சியில் நிகழ்ந்த அழகிப் போட்டிக்கும் பலர் ஆதரவு கொடுத்து இருந்தனர். யாழிஂணையத்திலும் வரவேற்று இருந்தனர்.

அதே நேரம், பங்கு கொண்ட பெண்களை பாலியல் தொழிலாளர் என்று கூட விளித்து, திட்டி, ஒருமையில் கேவலப்படுத்தி ஒரு சிலர் புலம்பெயர் பேர்வழிகள்  வீடியோக்கள் கூட சமூக வலைத்தளங்களில்.பகிர்ந்து இருந்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்க ஒரு படங்களையும் காணோம்.

என்ன அவசரம் இப்பதானே ஆரம்பம்.......!

Eating-cereal GIFs - Get the best GIF on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

பெரும்பாலானோர் கண்டிப்பாக வரவேற்பர். கிளிநொச்சியில் நிகழ்ந்த அழகிப் போட்டிக்கும் பலர் ஆதரவு கொடுத்து இருந்தனர். யாழிஂணையத்திலும் வரவேற்று இருந்தனர்.

அதே நேரம், பங்கு கொண்ட பெண்களை பாலியல் தொழிலாளர் என்று கூட விளித்து, திட்டி, ஒருமையில் கேவலப்படுத்தி ஒரு சிலர் புலம்பெயர் பேர்வழிகள்  வீடியோக்கள் கூட சமூக வலைத்தளங்களில்.பகிர்ந்து இருந்தனர். 

நிச்சயம் வரவேற்றக்கத்தக்கவை. காலத்துடன்  ஒன்றி நடக்க வேண்டும். இல்லையென்றால் பின்னுக்குத்தான் நிக்க வேணும். சில புலம் பெயர் பேர்வழிகள் வாயால், எழுத்தால் ஈழத்தை ஆள்கிறார்கள். 

அழகியல் ஒரு கலை. அது நிறையபேருக்கு தெரிவதில்லை. ஆள் பாதி ஆடை பாதி என்று எம் முன்னோர்கள் சும்மாவா சொல்லிவிட்டு போனார்கள்?

31 minutes ago, suvy said:

என்ன அவசரம் இப்பதானே ஆரம்பம்.......!

Eating-cereal GIFs - Get the best GIF on GIPHY

அதானே? பொறுத்தார் பூமி ஆள்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நல்ல முன்நேற்றம்.வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எங்கட பிள்ளைகளும் உடல் அழகில்(அளவில்) அக்கறை செலுத்த தொடங்குகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அட நல்ல முன்நேற்றம்.வாழ்த்துக்கள்.

என்ன அவசரம் கலாச்சாரய்தூண்கள் இன்னும் வரவில்லை 

இப்போட்டி நிகழும் திகதியை சரியாக சொல்லவும். ஊருக்கு டிக்கெட் போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வாழ்த்துக்கள்    🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இப்போட்டி நிகழும் திகதியை சரியாக சொல்லவும். ஊருக்கு டிக்கெட் போட வேண்டும்.

18-03-2023.  முற்பகல் 10,00.    க்கு       போகும் போது யாழ் களத்தில் இருந்து   இரண்டு மூன்று பேரை   அழைத்து கொண்டு போகவும்........🤣. சும்மா பாதுகாப்புக்கு......[.அழகிகள் உங்களை மடக்குவதை தடுப்பதற்கும்  மீண்டும் கனடா வருவதை உறுதிபடுத்தவும்.  ]😂

4 hours ago, suvy said:

என்ன அவசரம் இப்பதானே ஆரம்பம்.......!

Eating-cereal GIFs - Get the best GIF on GIPHY

முடிவு எப்போது????????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டிக்கு மட்டும் ஏன் இவ்வளவு வரவேற்பும் வாழ்த்துக்களும்???

தமிழர் பிரதேசங்களில் தமிழர் சார்ந்து அதிலும் பெண்கள் சார்ந்து நடாத்தப்படும் கூடிய நடாத்தப்படவேண்டிய எத்தனையோ விடயங்கள் பற்றி எவரும் எழுதுவதில்லை ஊக்குவிப்பதில்லையே ஏன்??

உதாரணமாக பல வருடங்களாக நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடும் தாய்மார்களின் போராட்டத்துக்கு ஆதரவு எந்தளவிற்கு இருக்கிறது???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இப்போட்டி நிகழும் திகதியை சரியாக சொல்லவும். ஊருக்கு டிக்கெட் போட வேண்டும்.

மாபெரும் வரவேற்பு. பெரும் எதிர்பார்ப்பு☺️

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

என்ன அவசரம் கலாச்சாரய்தூண்கள் இன்னும் வரவில்லை 

நிறையபேரின் குழப்பமான மன நிலை யாதெனில், யாழ் கலாச்சாரம் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான். மிகவும் அருமையான கல்வி, கடவுள் வழிபாடு, கட்டுப்பாடு, ஒழுக்கம் நிறைந்த ஒரு கலாச்சாரம். சிங்களவர்கள் எல்லோரும் இப்படித்தான் எம்மை வெகு அண்மையில் வரை கூறிவந்தார்கள்.  அதனால் இப்போது அவர்களும் அதையே எம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். 

ஆனால் Globalization  ஆல் இந்த யதார்த்தம் தவிர்க்கமுடியாத ஒரு மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. 50 வருடங்களுக்கு முன் கிளாலி மனிசி கோடாலிகொண்டையுடன் குறுக்க கட்டிக்கொண்டு வெங்காயம் இப்போது விற்பதும் இல்லை,  மீன்கார கறுவல் சைக்கிளால் இறங்கி கைகட்டி வாய்பொத்தி நின்று விளமீன் விற்கப்போவதும் இல்லை. நாகரத்தினம், கண்மணி, சீதைகள் பின்விறாந்தையில் நின்று சிரட்டையில் தேத்தண்ணி குடித்து மா, தூள் இடிக்கப்போவதும் இல்லை.

எப்படி எமது பேரன், பூட்டன்கள் நாம் அடைந்த மாற்றங்களை விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொன்றாகளோ, அதே மாதிரி நாமும் இந்த மாற்றங்களை அனுசரித்து வரவேற்று ஆதரிக்கும் நிலையில் இருக்கிறோம். 

மாற்றம் ஒன்றே மாறாதது.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

(இப்படிக்கு புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து கொண்டு, அனைத்து களியாட்டங்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் போய் தானும் பங்கெடுத்து குதியாட்டம் போடுகின்றவர்களில் ஒருவன்)

கலை வேறு... விடுதலை வேறு.
பெண்கள் அடக்கப்படும்போது அவர்களின் மன நிலை   எப்படி இருக்கும்.  அதையே ஆடவர்கள் கலை என்ற நோக்கில் கவர்ச்சியைப் பற்றி  நோக்கி களியாட்டத்தில் நோட்டமிடுகின்றனர்.
யாழில் இப்படி ஒரு திரி பற்றி எரிந்தால் ரசிக்கவே ஒரு கூட்டம் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இந்தப் போட்டிக்கு மட்டும் ஏன் இவ்வளவு வரவேற்பும் வாழ்த்துக்களும்???

தமிழர் பிரதேசங்களில் தமிழர் சார்ந்து அதிலும் பெண்கள் சார்ந்து நடாத்தப்படும் கூடிய நடாத்தப்படவேண்டிய எத்தனையோ விடயங்கள் பற்றி எவரும் எழுதுவதில்லை ஊக்குவிப்பதில்லையே ஏன்??

உதாரணமாக பல வருடங்களாக நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடும் தாய்மார்களின் போராட்டத்துக்கு ஆதரவு எந்தளவிற்கு இருக்கிறது???

பெண்கள் வாழ்வியல் முன்னேற்றம் எல்லாவிதமான துறைகளிலேயும், நிறைய தனி மனிதர்களினால் அமைப்புக்குகளினால் ஊரில் நடைபெற்றுக்கொன்றிருக்கிறது. காணாமல் போனோரை பற்றி நாம் பல தசாப்தமாக போராடுகிறோமே?  யாழில் பகிராவிட்டாலும் கள உறுப்பினர்கள் பலரும் இதில் மிகுந்த ஈடுபாடுடையவர்கள்தான். அவையெல்லாம் நாம் எப்போதும் போராடும் விடயங்கள். இது  நம்மில் பலருக்கு  முற்றிலிலும் புதிய, நினைத்தே பார்க்க முடியாத ஆனால் தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் தான் இவ்வளவு வெளிக்கொணர்வு.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

பலபேர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு அதை ஆமோதிக்க மற்றவர்களுக்காக காத்திருக்கின்றனர்? தேடுகின்றனர்?  அல்லது மற்றவர்களை உசுப்புகின்றனரோ? இவர்களே கருத்திடுகின்றனர் ஆக்களை காணேல்லை என்று தேடுகின்றனர் அவர்களுக்கு கல்லெறிந்து தாம் தப்பிக்கொள்ள. அப்படி நீங்கள் சொல்வதுபோல் யாராவது கருத்தெழுதியிருந்தால்; அதுபற்றி விமர்சனம் செய்வது உகந்தது அதைவிட்டு ஊகிக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் வெளியூர் உலக அழகுராணி போட்டிக்குளுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வருடம்தோறும் போகிறார்கள். யாரோ ஒருவர் அழகுராணி என்று கிரீடம் சூடுகிறார்கள் 
மிகுதி 999 பேருக்கும் என்ன நடக்கிறது அதில் பெரும்பான்மையினரின் வாழ்வு நிலை பற்றி 
யாரவது தேடியதுண்டா? 

யாழில் மிஸ் க்ளோப் நடத்தும் அளவிற்கு வசதிகள் போதுமான விடுதிகள் இருப்பதாக தெரியவில்லை 

இது உண்மையில் யாழ் யுவதிகளின் முன்னேற்றத்துக்கவே நடத்தப்படுகிறதா?
இதன் மூலம் எவ்வாறான முன்னேற்றம் காணலாம் என்று அறிந்தவர்களிடம் இருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.