Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் மனைவி மகளுடன் நலமாக இருக்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 94
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

 

இந்த பாடலுக்கு ஈழத் தமிழர்களிடையே ஏனிந்த வரவேற்பு?? ஏன் இந்த எதிர்பார்ப்பு??

இறந்து விட்ட ஒருவரை எப்படி கூட்டி வரமுடியும்????

ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு நம்பிக்கை????

  • கருத்துக்கள உறவுகள்+

என்னுடைய கருத்து:

இது இந்திய அல்லது சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரின் தமிழரைக் குழப்பும் வேலையே... இதற்குத் தமிழர்கள் விழமாட்டார்கள். 

இவர்கள் யாரும் உயிருடன் இல்லை. இவர் தான் அன்னவர் என்று யாரையேனும் படம் காட்டினாலோ அல்லது நிகழ்படம் மூலம் காட்டினாலோ அதைத் தமிழர்கள் யாரும் நம்பப்போவதில்லை....

நீங்கள் தலை கீழாக நின்று எதை முயற்சித்தாலும் நாங்கள் நம்பப்போவதில்லை...

நந்திக்கடற்கரையில் வீரமரணமாகிய தலைவர் மாமாவிற்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எனது வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

இந்த பாடலுக்கு ஈழத் தமிழர்களிடையே ஏனிந்த வரவேற்பு?? ஏன் இந்த எதிர்பார்ப்பு??

இறந்து விட்ட ஒருவரை எப்படி கூட்டி வரமுடியும்????

ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு நம்பிக்கை????

இல்லை.

இது ஒரு அங்கலாய்ப்பு, கவலை, ஏக்கம் ஆகயவற்றின் பிரதிபலிப்பு 🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு நம்பிக்கை????

நிச்சயமாக இல்லை.

நாதம் சொல்வது போல் எங்கள் மனங்களில்,

ஒரு உதாரண புருசனாக, இன்னும் கரைசேராத எங்கள் படகுக்கு வாய்த்த ஒரே ஒரு திறமையான ஓட்டியாக, அடி வாங்கியே வாழ்ந்த நமக்கு, நாமும் திருப்பி அடிப்போம் என்று இறுமாந்து சிங்கள பகுதியில் கூட தலை நிமிர்த்து நின்ற, இனி வரவே முடியாத ஒரு காலத்தை தந்த தலைவரான அவர் - இனி இல்லை என்ற அங்கலாய்ப்பே இது.

திரும்பி வருவார் என்ற நம்பிக்கை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் மனைவி , மகளுடன் இருக்கிறார்  என்ற காணொளி யில் உரையாடிய சகோதரி ஏதும் நிர்பந்தத்தின் மத்தியில் உரையாடி இருக்கலாம்.
அவரது முகத்தில் ஒருவகை இறுக்கம் ,யாரோ பின்புலத்தில் சொல்ல சொன்னதை ஒப்புவிப்பதுபோல் இருக்கிறது . ஒரு வேளை அவர்கள் இருந்தால் ....நன்றி கெடட   துரோகமும் காட்டிக் கொடுப்பும் சுருட்ட்லும் நிறைந்த இந்த இனத்துக்காக அவர்கள் அரசியலுக்கு வரவேண்டியதில்லை. நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப்போகட்டும். உரையாற்றியவருக்கு பிரச்சினை வரும் என தெரிந்தும் ஏன் இந்த சூழலுக்கு  தள்ளப்படடார்? இதனால் யாருக்கு லாபம் ? . ஈழமக்களை  ஏன் குழப்ப வேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் புலனாய்வுத் துறை மேற்கு நாடுகளில் தொழிட்படும் முறை நாம் நினைப்பதை விட அதிகம்.

சில ஆண்டுகளுக்கு முன் சில ஜெர்மன் நாட்டை சேர்ந்த இந்தியர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஜெர்மனி இந்திய உளவுத்துறைகாக வேலை செய்த சிலரை கைது செய்தது. இன்றும் அங்கு சிறையில் உள்ளார்கள்.

இங்கு கனடாவில் காலிஸ்தான் அமைப்பு சார்பில் மும்முரமாக செயல்பட்ட இருவர் இங்கு வைத்தே சுட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

ஒரு மில்லியன் டொலர் தருகின்றோம் இதனை செய்யுங்கள் என்று சொன்னால் ஒருவர் அதை செய்யாமல் விட இன்றைய அழுத்தம் நிறைந்த வாழ்வு விடுமா என்ற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டும்.

பிரபாகரன் அல்லது அவரின் மகள் இருந்தால் இப்போது எமக்கு ஒரு ஆத்ம திருப்த்தி என்பதைத் தவிர எமக்கு வேறு என்ன லாபம்? என்று கேள்வியை கேட்டால் எம்மால் இந்த எம்மாற்றுக் கதையை இலகுவில் கடந்து போய் விட முடியும் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இல்லை.

இது ஒரு அங்கலாய்ப்பு, கவலை, ஏக்கம் ஆகயவற்றின் பிரதிபலிப்பு 🙏

இப்படி தான் சகோ நம்மை நாமே தேத்திக்கொள்கிறோம். 

நாம் எவ்வளவோ எம் ரத்த உறவுகளை இழந்திருந்தாலும் இப்பாடசாலை கேட்டவுடன் தலைவர் எதுக்கு ஞாபகம் வரணும் என்று சிந்தித்தால் ....?

  • கருத்துக்கள உறவுகள்

ஆக தாயகத்தில் மிஞ்சி வாழும் மக்களை நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சுவைப்பிரியன் said:

ஆக தாயகத்தில் மிஞ்சி வாழும் மக்களை நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்க்ள் , கைது செய்யப்பட்டவர்கள் நிலை போல இன்னும் பல ஆண்டுகள் இப்படி வைத்திருக்க யாரோ சதியை கிளப்பி விட்ட கதைதான் இது போல இருக்கு 

இருந்தால் இருந்து விட்டு போகட்டுமே அவர்களாவது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஆக தாயகத்தில் மிஞ்சி வாழும் மக்களை நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை.

நிம்மதியாக மட்டுமல்ல உயிர உடனும்.  கூட விடப்போவதில்லை    ...தலைவர்   அவருடைய மனைவி   மகள  மகன்  ....பொட்டம்மான்....இயக்கத்திலிருந்த முக்கியத்தார்கள்.  இப்படி..யார் இருந்தாலும்      நாங்கள் மகிழ்ச்சி அடையலாம்”    ஆனால் அவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தி போரடுவார்கள்.  என்று கற்பனை பண்ண கூடாது ...மதிவதனி   தூவராகா.   இருக்கிறார்கள்  .எனவே… பழைய படி ஆயுதப் போராட்டம் நடக்க போகிறது   என்று  அவர்கள் சொல்லாமலே    கற்பனை செய்வது சுத்த பயித்தியக்காரத்தனம்.    கண்டிக்கத்தக்கது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஆக தாயகத்தில் மிஞ்சி வாழும் மக்களை நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை.

த‌லைவ‌ரின் ம‌னைவியின் ச‌கோத‌ரியின்  பேச்சால் பாதிப்பு தான் அதிக‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி  சல்லி பிரயோஜனம்  இல்லை

விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ முன்ன‌ள் போராளிக‌ளை கைது செய்வாங்க‌ள்............சிறையில் வாடும் முன்னாள் போராளிக‌ளின் சிறை வாழ்க்கை நீடிக்க‌ப் ப‌டும்..............சோத‌னை என்ர‌ பெய‌ரில் ப‌ல‌ கொடுமைக‌ள் ந‌ட‌க்கும்
விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ கானிக‌ள் இட‌த்தில் மீண்டும் இராணுவ‌ த‌ள‌ம் அமைப்பாங்க‌ள்
ம‌க்க‌ள் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாடேலாது............இண்டைக்கு வேலைக்கு போகாட்டி நாளை சாப்பாடு சாப்பிடேலாத‌ நிலையில்  ம‌க்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம்
அதுக‌ள் வ‌றுமை ப‌சி கொடுமை நோய் தொல்லையால் இற‌ந்து போவின‌ம்................இப்ப‌டி ப‌ல‌ கொடுமையான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌க்கும்


இவான்ட‌ பேச்சுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தை விட‌ அகிம்சைய‌ கையில் எடுப்ப‌து மேல்.....................க‌ன‌டா நாட்டு பிர‌த‌ம‌ரே சொல்லி இருக்கிறார் 2009 த‌மிழீழ‌த்தில் ந‌ட‌ந்த‌து இன‌ ப‌டு கொலை 

இப்ப‌டி ம‌ற்ற‌ நாட்டு அர‌சாங்க‌ளும் அறிக்கை விடும் ப‌டி நாம் முய‌ற்ச்சி செய்ய‌னும்..............இந்தியா அர‌சிய‌ல் வாதிள் ம‌ன‌ம் மாறி ஆதாரிச்சா ந‌ம்ம‌ க‌ண் முன்னே த‌மிழீழ‌ நாட்டை காண‌லாம்

எல்லாம் அகிம்சை ஆயுத‌ போர் ஈழ‌ தேச‌த்தில் மீண்டும் வேண்டாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கிறார் அல்லது இல்லை என்ற இரண்டாம் பட்ச  செய்திகளை தவிர்த்து வேறு விடயங்களில் கவனத்தை செலுத்தலாம். குண்டு சட்டிக்குள் வண்டி ஓட்டுவது போல் சும்மா ஒரு செய்தியை மென்று கொண்டிருப்பதும் ஒரு வித பொழுதுபோக்கு தான்.

சுபாஷ் சந்திரபோஸ்  கதை போல் இதையும் நீட்டிக்கொண்டிருந்தால் ஈழத்தமிழினத்திற்கு எவ்வித விடிவும் வரப்போவதில்லை.

என்னை பெற்றெடுத்து வளர்த்தவர்கள் இன்று உயிரோடில்லை. அவர்கள் இறுதி நிகழ்விலும் நானில்லை. அதை பார்க்கவுமில்லை. அதனால்  அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற மனம்தான் கண் முன் நிற்கின்றது.அதே மனம் அவர்கள் திரும்பி வந்தாலும் ஏற்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இருக்கிறார் அல்லது இல்லை என்ற இரண்டாம் பட்ச  செய்திகளை தவிர்த்து வேறு விடயங்களில் கவனத்தை செலுத்தலாம். குண்டு சட்டிக்குள் வண்டி ஓட்டுவது போல் சும்மா ஒரு செய்தியை மென்று கொண்டிருப்பதும் ஒரு வித பொழுதுபோக்கு தான்.

சுபாஷ் சந்திரபோஸ்  கதை போல் இதையும் நீட்டிக்கொண்டிருந்தால் ஈழத்தமிழினத்திற்கு எவ்வித விடிவும் வரப்போவதில்லை.

என்னை பெற்றெடுத்து வளர்த்தவர்கள் இன்று உயிரோடில்லை. அவர்கள் இறுதி நிகழ்விலும் நானில்லை. அதை பார்க்கவுமில்லை. அதனால்  அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற மனம்தான் கண் முன் நிற்கின்றது.அதே மனம் அவர்கள் திரும்பி வந்தாலும் ஏற்கப்போவதில்லை.

இவான்ட‌ இந்த‌ அறிக்கையால் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ ந‌ன்மை தாத்தா..............மூளைய‌ க‌ச‌க்கி யோசிச்சு பார்த்தா இப்ப‌டியான‌ அறிக்கையால் த‌மிழ‌ர்க‌ளுக்கு எப்ப‌வும் பின்ன‌டைவு தான்...............

150 போராளிக‌ளுட‌ன் த‌லைவ‌ர் ந‌ல‌முட‌ன் உள்ளார் இவா அதை நேரில் பார்த்தாவாம்.............ஆண்ட‌வா இவாக்கு நீ பாவ‌ ம‌ன்னிப்பு கூட‌ குடுத்துடாதை மாவீர‌ர்க‌ளின் ஆன்மா கூட‌ இவாவை ம‌ன்னிக்காது
 

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா என்ன சொல்லுறார் என்றால் புலம்பெயர் தமிழர்கள் தலைவரது குடும்பப்பற்றி வெளிவரும் செய்தியையிட்டுக் குழம்பவேண்டாம் என காரணம் அவரும் அவரது குடும்பமும் இறுதிப்போரில் கொல்லப்பட்டதாக,

அவரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் ஆகவே சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவும் சர்வதேச போர்குற்றவியல் நீதிமன்றமும் அவரை அழைத்து என்ன நடந்தது என விசாரிக்கலாம்தானே ஆனால் விசாரிக்கமாட்டினம்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Elugnajiru said:

இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா என்ன சொல்லுறார் என்றால் புலம்பெயர் தமிழர்கள் தலைவரது குடும்பப்பற்றி வெளிவரும் செய்தியையிட்டுக் குழம்பவேண்டாம் என காரணம் அவரும் அவரது குடும்பமும் இறுதிப்போரில் கொல்லப்பட்டதாக,

அவரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் ஆகவே சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவும் சர்வதேச போர்குற்றவியல் நீதிமன்றமும் அவரை அழைத்து என்ன நடந்தது என விசாரிக்கலாம்தானே ஆனால் விசாரிக்கமாட்டினம்

உண்மை தான்

2008ம் ஆண்டே பொன்சேக்கா சொன்னார் இது தான் பிர‌பாக‌ர‌னின் க‌ட‌சி மாவீர‌ நாள் உரை 

அவ‌ன் சொன்ன‌து போல் க‌ண் முன்னே எல்லாம் ந‌ட‌ந்து விட்ட‌து

 

த‌லைவ‌ரின் ம‌னைவியின் ச‌கோத‌ரியின் அறிக்கை ஒன்றுக்கும் உத‌வாது எல்லாம் ப‌ச்சை பொய்................

இதே புட்டின் விவ‌கார‌த்தில் உல‌க‌ நாடுக‌ள் விரைந்து செய‌ல் ப‌டுவின‌ம்

 

இந்த‌ உல‌க‌மே சுய‌ ந‌ல‌ம் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால ஒரு செய்தி: தலைவரின் குடும்பம் இருக்குமிடம் கண்டுபிடிப்பு. சுற்றி வளைக்கத்திட்டமாம். 

இவர்களுக்கு பச்ச மட்ட தான் சரி.

நித்தீட கைலாசா போல, கண்டுபிடிச்சது எவ்விடம் எண்டு சொல்லுறாங்களில்லை! 🥹🤷‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4355.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

IMG-4355.jpg

அருமையான‌ ஓவிய‌ம்
வாழ்த்துக்க‌ள்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பிரான்சில் இருந்து வந்த ஆய்வாளர் ஆம்  தலைவர் குடும்பம் நூறுக்கு 5௦௦ வீதம் உயிருடன் இருக்கிறார் என்று பொங்கி வழிகிறார் அத்துடன் இந்தியாவின் காலில் விழணும் என்கிறார் இப்ப  என்னடா என்றால் வடக்கனுக்குத்தான் தமிழினின் இரத்தம் தேவைபடுது  இந்த கருத்தை மட்டுக்கள் எப்படி எடுத்து கொள்வினம் என்பது எனக்கு கவலை இல்லை முடிந்தால் போடட்டும் இல்லையேல் துக்கி எறி எட்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அங்கால ஒரு செய்தி: தலைவரின் குடும்பம் இருக்குமிடம் கண்டுபிடிப்பு. சுற்றி வளைக்கத்திட்டமாம்.  

கனவாக இருந்தாலும்

அப்படி ஒரு நிலை வந்தால் எம் இனமே இடத்தை காட்டிக் கொடுத்து அதை வெடி கொழுத்தி கொண்டாட தயாராக உள்ளது என்பதைத் தான் மேலே எழுதப்பட்ட பல கருத்துக்கள் சொல்கின்றன. 

இருக்கிறார்கள் இல்லை என்பதைப் தாண்டி இனி வரக்கூடாது வந்தால் தமிழினத்துக்கு மீண்டும் ஆபத்து என்ற கருத்துக்களே இங்கே அதிகமாக பதியப்பட்டுள்ளது. நன்றி.

இதை இங்கே நான் பதிந்த நோக்கம் இதை அறிதலே. எம் தலைவன் முள்ளிவாய்க்காலில் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமானதே. 

எனக்கு அவர் இருந்தால் தலைவன். இறந்திருந்தால் இறைவன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

அப்படி ஒரு நிலை வந்தால் எம் இனமே இடத்தை காட்டிக் கொடுத்து அதை வெடி கொழுத்தி கொண்டாட தயாராக உள்ளது என்பதைத் தான் மேலே எழுதப்பட்ட பல கருத்துக்கள் சொல்கின்றன. 

இருக்கிறார்கள் இல்லை என்பதைப் தாண்டி இனி வரக்கூடாது வந்தால் தமிழினத்துக்கு மீண்டும் ஆபத்து என்ற கருத்துக்களே இங்கே அதிகமாக பதியப்பட்டுள்ளது. நன்றி.

தலைவர் மீண்டும் வருவார் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. ஏனென்றால் அவரது குணவியல்பு குறித்து நாம் அறிந்திருப்பதாலும், அவர் உயிருடன் தப்பிப் போக எத்தனிக்கமாட்டார் என்பதாலும் அவர் மீண்டும் வருவார் என்பதை நான் நம்பவில்லை. 

அவரது குடும்பமும் இறுதிப்போரில் வீரச்சவடைந்ததாகவே நான் சில இடங்களில் இருந்து கேள்விப்பட்டேன். முன்னாள் புலநாய்வுப் போராளிகள், சிங்கள இராணுவத்தின் மேஜர் ஒருவன், தமிழ் ஊடகவியலாளர்கள் என்று பலரின் கருத்துக்கள் மூலம் இந்த முடிவிற்கு வந்தேன். இது சரியா தவறா என்பது எவராலும் உறுதிப்படுத்த முடியாது. 

ஆனால், எமக்கு எமது தலைவர் போல இன்னொருவர் தேவையா என்றால், ஆம் நிச்சயமாக. அடிமைகளாக, சிங்களப் பேரினவாதத்தின் கால்களுக்குக் கீழே மிதிபட்டு, அதுவே வாழ்க்கை என்று வாழும் நடைபிணங்களான எமக்கு நிச்சயம் ஒரு தலைவர் தேவை. துவண்டுபோய் வீழ்ந்து, அரைமரணத்தில் இருக்கும் எமதினம் மீண்டும் விழித்துக்கொள்ள ஒரு தலைவர் தேவை. அது எமது தலைவரே வந்தால் நான் அன்றுடன் மகிழ்வோடு கண்களை மூடுவேன். ஆனால், அவர் வரப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆகவேதான், எமக்கு இன்னொரு தலைவர் எமக்குள் இருந்து வரவேண்டும். வந்தால் அவரும் பிரபாகரனே.

பிரபாகரன் ஒரு தனிமனிதனின் பெயரல்ல. ஒரு இனம் வீறுகொண்டெழுது தனது இருப்பிற்காகப் போராடிய உந்துதலின் பெயர். எவரெல்லாம் தன் இனத்திற்காக தனது உயிரையும் தியாகம் செய்ய துணிந்து முன்வருகிறாரோ, அவரெல்லாம் பிரபாகரனே!

இறுதியாக நீங்கள் கூறியபடியே, இருந்தால் அவன் என் தலைவன், இல்லையென்றால் அவனே என்றைக்கும் என் இறைவன்!

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தால் தலைவன்...... இல்லையென்றால் அவரே எங்களுக்கு என்றும் இறைவன்......!   🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.