Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் சனாதிபதியாக தமிழர் தெரிவாகியுள்ளார்

Featured Replies

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தமிழர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவாகியுள்ளார். 

இவர் 70.4% வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மொத்த சனத்தொகையில் வெறுமனே 5% மட்டுமே தமிழர்களின் எண்ணிக்கை அங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.channelnewsasia.com/singapore

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவும் தானாக சேர்ந்த வாக்குகள்.......தனத்தால் கிடைத்ததல்ல...... வாழ்த்துக்கள்......!   💐

நன்றி நிழலி .......!  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தமிழர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவாகியுள்ளார். 

இவர் 70.4% வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மொத்த சனத்தொகையில் வெறுமனே 5% மட்டுமே தமிழர்களின் எண்ணிக்கை அங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தமிழன் இந்த உலகையே ஆழும் காலம் கூட வரலாம் இருந்தும்  ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்காக  அவரால் எந்த ஒரு ஆணியையும் அசைக்க முடியாது 

இந்த தமிழ் ஜனாதிபதி ஈழத்து தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுத் தருவாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும்

வாழ்த்துக்கள் சொல்லி பெருமைப்படுவதில் ஒன்றுமில்லை

  • தொடங்கியவர்
35 minutes ago, வாத்தியார் said:

ஒரு தமிழன் இந்த உலகையே ஆழும் காலம் கூட வரலாம் இருந்தும்  ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்காக  அவரால் எந்த ஒரு ஆணியையும் அசைக்க முடியாது 

இந்த தமிழ் ஜனாதிபதி ஈழத்து தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுத் தருவாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும்

வாழ்த்துக்கள் சொல்லி பெருமைப்படுவதில் ஒன்றுமில்லை

நான் இவர் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுப்பார் என்று நம்பி வாழ்த்தவில்லை. அது அவரது பணியும், பொறுப்பும் அல்ல. சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்நாட்டு மக்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தால் போதும்.

ஈழத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க இதயபூர்வமாக பணியாற்ற மறுக்கும் போது இவரிடம் நான் ஏன் அதை எதிர்பார்க்கப் போகின்றேன்?

ஆனாலும் உலகில் எங்காவது ஒரு மூலையில் ஒரு தமிழர் நேர்மையான வழி மூலம் உயர் பதவிகளை மற்றும் சாதனைகளை செய்வாராகின், சக தமிழனாக அவரை என்றும் வாழ்த்துவேன். 

  • கருத்துக்கள உறவுகள்+

இந்திய ஊடகங்கள் யாவும் உவரை இந்தியர் என்று சொல்லி செய்தி போட, துவிட்டர் எங்கும் உவர் இந்தியர் என்று வாழ்த்துச் சொல்லிப் பெருமைப்படுகிறார்கள் இந்தியர்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்

கமலா அக்காவை மானிப்பாய் தமிழச்சி என்று சொந்தம் கொண்டாடினோம். 

தர்மன் அண்ணா ஊரெழு தமிழனாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஒரு தமிழன் எம் பி ஆகிட்டால்... தமிழனுக்கு விடிவு என்றது..

இங்கிலாந்தில் ஒரு தமிழர் கவுன்சிலர் ஆகிட்டால்.. தமிழனுக்கு விடிவென்பது..

இலங்கையில்.. ஒரு சிங்கள எடுபிடி தமிழன்.. அமைச்சராகிட்டால்.. தமிழனுக்கு விடிவென்பது...

அமெரிக்காவில்.. ஒரு தமிழ் பின்னணி உப சனாதிபதியானால்.. தமிழனுக்கு விடிவென்பது..

மலேசியாவில்.. ஒரு தமிழன் எதிர்கட்சி தலைவரானால்.. தமிழனுக்கு விடிவென்பது..

இப்ப சிங்கப்பூரில் ஒரு தமிழன் சனாதிபதி ஆகிட்டதால்.. தமிழனுக்கு விடிவென்று கனவு கண்பது..

அவரவர் அந்தந்த நாட்டு சட்டதிட்டத்துக்குள் தான்.. சவாரி செய்ய முடியும். இதனால்... தமிழனுக்கு தமிழன் விரும்பியது கிடைக்காது. தமிழனுக்கு என்று ஒரு நாடு உருவாகி அதனை தமிழன் ஆளும் வரை.. இது கனவுகளாகவே எழுந்து இருந்து கலைந்து போகும்.

வாழ்த்துக்கள்.. புதிய சிங்கப்பூர் சனாதிபதி அவர்களே. நீங்கள் உங்களுக்கு வாக்களித்த.. மற்றும் வாக்களிக்காத உங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாவும் சேவையாளராகவும் இருக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்திய ஊடகங்கள் யாவும் உவரை இந்தியர் என்று சொல்லி செய்தி போட, துவிட்டர் எங்கும் உவர் இந்தியர் என்று வாழ்த்துச் சொல்லிப் பெருமைப்படுகிறார்கள் இந்தியர்கள்... 

இலங்கையின் வடகிழக்கை கிந்தியாவுக்குள்  உள்வாங்கி போட்டினம் போல் உள்ளது .

😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

ஒரு தமிழன் இந்த உலகையே ஆழும் காலம் கூட வரலாம் இருந்தும்  ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்காக  அவரால் எந்த ஒரு ஆணியையும் அசைக்க முடியாது 

இந்த தமிழ் ஜனாதிபதி ஈழத்து தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுத் தருவாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும்

வாழ்த்துக்கள் சொல்லி பெருமைப்படுவதில் ஒன்றுமில்லை

1௦௦ வீத உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

ஒரு தமிழன் இந்த உலகையே ஆழும் காலம் கூட வரலாம் இருந்தும்  ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்காக  அவரால் எந்த ஒரு ஆணியையும் அசைக்க முடியாது 

இந்த தமிழ் ஜனாதிபதி ஈழத்து தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுத் தருவாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும்

வாழ்த்துக்கள் சொல்லி பெருமைப்படுவதில் ஒன்றுமில்லை

இவர் ஸ்ரீ லாங்கன் தமிழர் இல்லை. இவர் சிலோனிஸ் தமிழர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே சிலோனிஸ் தமிழர் இடம் இருந்து ஸ்ரீ லாங்கன் தமிழர் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

இவர் ஸ்ரீ லாங்கன் தமிழர் இல்லை. இவர் சிலோனிஸ் தமிழர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே சிலோனிஸ் தமிழர் இடம் இருந்து ஸ்ரீ லாங்கன் தமிழர் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாதுதான். 

எனது அம்மா வழி தாத்தா அம்மம்மா எல்லோரும் மலேசியா, சிங்கப்பூர்வில் இருந்து பின் உலகயுத்தத்தின் போது இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். அவர்கள் சகோதரங்கள் எல்லாரும் அங்குதான் வசிக்கிறார்கள். அவர்களும் இலங்கையை சிலோன் என்றுதான் சொல்லுவார்கள். நானும் அப்படித்தான் சொல்லிறனான். நாங்கள் என்னத்திற்கு சிங்களப் பெயரான சிறீலங்கா என்று சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

நான் இவர் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுப்பார் என்று நம்பி வாழ்த்தவில்லை. அது அவரது பணியும், பொறுப்பும் அல்ல. சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்நாட்டு மக்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தால் போதும்.

ஈழத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க இதயபூர்வமாக பணியாற்ற மறுக்கும் போது இவரிடம் நான் ஏன் அதை எதிர்பார்க்கப் போகின்றேன்?

ஆனாலும் உலகில் எங்காவது ஒரு மூலையில் ஒரு தமிழர் நேர்மையான வழி மூலம் உயர் பதவிகளை மற்றும் சாதனைகளை செய்வாராகின், சக தமிழனாக அவரை என்றும் வாழ்த்துவேன். 

தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்தால் சிங்கள தமிழ் அரசியல் வாதிகளுக்கு வாழ்க்கை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

கனடாவில் ஒரு தமிழன் எம் பி ஆகிட்டால்... தமிழனுக்கு விடிவு என்றது..

இங்கிலாந்தில் ஒரு தமிழர் கவுன்சிலர் ஆகிட்டால்.. தமிழனுக்கு விடிவென்பது..

இலங்கையில்.. ஒரு சிங்கள எடுபிடி தமிழன்.. அமைச்சராகிட்டால்.. தமிழனுக்கு விடிவென்பது...

அமெரிக்காவில்.. ஒரு தமிழ் பின்னணி உப சனாதிபதியானால்.. தமிழனுக்கு விடிவென்பது..

மலேசியாவில்.. ஒரு தமிழன் எதிர்கட்சி தலைவரானால்.. தமிழனுக்கு விடிவென்பது..

இப்ப சிங்கப்பூரில் ஒரு தமிழன் சனாதிபதி ஆகிட்டதால்.. தமிழனுக்கு விடிவென்று கனவு கண்பது..

அவரவர் அந்தந்த நாட்டு சட்டதிட்டத்துக்குள் தான்.. சவாரி செய்ய முடியும். இதனால்... தமிழனுக்கு தமிழன் விரும்பியது கிடைக்காது. தமிழனுக்கு என்று ஒரு நாடு உருவாகி அதனை தமிழன் ஆளும் வரை.. இது கனவுகளாகவே எழுந்து இருந்து கலைந்து போகும்.

வாழ்த்துக்கள்.. புதிய சிங்கப்பூர் சனாதிபதி அவர்களே. நீங்கள் உங்களுக்கு வாக்களித்த.. மற்றும் வாக்களிக்காத உங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாவும் சேவையாளராகவும் இருக்கவும். 

உங்கள் கருத்துடன் பரிபூரணமாக  100%  உடன் படமுடியும்   என்னிடம் ஒரு கேள்வி உண்டு”  இந்த கருத்துகள் கருணாநிதிக்கும்  பொருந்தும் தானே??  அவரை ஏன். தீட்டி கொண்டிருக்க வேண்டும்?? அவர் மூன்று பெணகளுக்கும். வாழ்க்கை  கொடுத்துமிருக்கிறார். வாழ்தலாமில்லையா?? 🤣🤣🤣

16 minutes ago, சுவைப்பிரியன் said:

தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்தால் சிங்கள தமிழ் அரசியல் வாதிகளுக்கு வாழ்க்கை இல்லை.

உண்மை தான்   அவர்கள் வாழ்வதற்காக. மக்கள் அழிய வேண்டுமா?? 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தர்மன் சண்முகரத்தினம் 

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு, இஸ்ரேலியர்கள் ஒன்று சேர்ந்தது போல் ஒரு காலத்தில், உலகெங்குமுள்ள தமிழர்கள் ஒன்று சேர்வார்கள் ஒரு தலைமையின் கீழ் மீண்டும்.

அப்போது இவர்களை போன்றவர்களின் தயவு எமக்கு தேவை

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

மொத்த சனத்தொகையில் வெறுமனே 5% மட்டுமே தமிழர்களின் எண்ணிக்கை அங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா ஜனாதிபதியாக தமிழன் வந்தால்  ஈழத்தமிழர்க்கு  விடிவு கிடைக்கும் என்று நம்பும் நம்மவர் இருக்கும் மட்டும் நமக்கு விமோசனம் இல்லை .

சிங்கபூர் ஜனதிபதி ஆக அங்கு குடியேறிய தமிழனால் முடிகிறது அதுவும் ஐந்தே ஐந்து விகிதம் உள்ள தமிழர் உள்ள நாட்டில் ஆனால் சொந்த நாட்டில் முடியுமா  ? பக்கத்தில் ஆறு கோடிக்கு மேல் தமிழர்கள்  உள்ள தமிழ்நாட்டில் கடந்த மூன்று தலைமுறைக்கு முன் அகதியாய் போன ஈழதமிழர் இன்றும் அகதிதான் .அதே நிலைதான் முன்னூறு வருடங்களுக்கு முன்பு சிலோன் எனும் நாட்டை முன்னேற கொண்டுவரப்பட்ட தமிழ்நாட்டு தமிழர்கள் நிலையும் இப்படி தான் இப்படி  நமது இனம் சீரழிய என்ன காரணம் ? எல்லாம் எனக்கு தெரியும் மமதையை தவிர வேறொன்றும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரின் 9வது அதிபரானார் தமிழரான தர்மன் சண்முகரத்னம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.

அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டது.

1116357.jpg  
 
தேர்தல் பிரச்சாரம் வரும் நேற்றுமுன்தினம் (ஆகஸ்ட் 30-ம் தேதி) நிறைவு பெற்ற நிலையில் இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முதல்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களித்தனர். சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்த நிலையில் இன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தர்மன் சண்முகரத்னம் யார்?: இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

https://www.hindutamil.in/news/world/1116357-singapore-s-former-indian-origin-minister-tharman-shanmugaratnam-wins-presidential-election.html

அதிபர் தேர்தலில் போட்டியிடும் இங் கொக் சொங் கடந்த 1970-ம்ஆண்டில் சிங்கப்பூர் அரசின் நிதியமைச்சக முதலீட்டு ஆய்வாளராகப் பணியை தொடங்கினார். கடந்த 2007-ம் ஆண்டில் ஜிஐசி என்றழைக்கப்படும் சிங்கப்பூர் அரசின்முதலீட்டு நிறுவனத்தின் தலைமைஅதிகாரியாக பதவியேற்றார். கடந்த2013-ல் ஓய்வு பெறும் வரை அந்த பதவியை வகித்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

மற்றொரு வேட்பாளர் டான் கின்லியான் சுமார் 30 ஆண்டுகள் என்டியுசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தார். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் இருக்கிறார். சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்றவர் என்பதால் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற 2 வேட்பாளர்களும் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர்.

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

அவர் யாழ்ப்பாணத்தில் ஊரெழு என்னும் இடத்தை சேர்ந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அவர் யாழ்ப்பாணத்தில் ஊரெழு என்னும் இடத்தை சேர்ந்தவர்.

“ சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

இதில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்”….

இவ்வாறு ஒரு ஊடகச்செய்தி கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்னர் சிங்கை ஜனாதிபதியாக  தேவன் நாயர் என்ற மலையாளியும் (யாழ்பாண தமிழராயும் இருக்கலாம்🤣), எஸ் நாதன் என்ற இந்திய வம்சாவளி தமிழரும் இருந்துள்ளனர். 

இது மிக சொற்பமான நிறைவேற்று அதிகாரங்களையுட, அலங்கார பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மனுக்கு வாழ்துக்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

உங்கள் கருத்துடன் பரிபூரணமாக  100%  உடன் படமுடியும்   என்னிடம் ஒரு கேள்வி உண்டு”  இந்த கருத்துகள் கருணாநிதிக்கும்  பொருந்தும் தானே??  அவரை ஏன். தீட்டி கொண்டிருக்க வேண்டும்??

எனக்கும் நெடுக்காலபோவானின் இந்த கருத்துடன் உடன்பாடு. ஒரு தமிழர் வெளிநாட்டில் எம்பியாக கவுன்சிலராக வெற்றி பெற்று விட்டால் அவரை சொந்தம் கொண்டாடி மகிழ்வதும் இலங்கை தமிழர்க்கு விடிவு வந்துவிட்டது என்பதும் கேலிகூத்தாக உள்ளது.

கருணாநிதியை திட்டுவது சீமான் தான் இலங்கை தமிழர்களுக்கான ஒரே ஒரு பாதுகாப்பு என்பதற்கான பிரசாரமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragaa said:

எனது அம்மா வழி தாத்தா அம்மம்மா எல்லோரும் மலேசியா, சிங்கப்பூர்வில் இருந்து பின் உலகயுத்தத்தின் போது இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். அவர்கள் சகோதரங்கள் எல்லாரும் அங்குதான் வசிக்கிறார்கள். அவர்களும் இலங்கையை சிலோன் என்றுதான் சொல்லுவார்கள். நானும் அப்படித்தான் சொல்லிறனான். நாங்கள் என்னத்திற்கு சிங்களப் பெயரான சிறீலங்கா என்று சொல்லவேண்டும்.

மலேசியாவில் பழையகாலத்தில் குடியேறியவர்களின் வம்சாவளி எனக்கு தெரிந்தவர்களை வைத்து சொல்கிறேன், அவர்களுக்கு சிறிலங்காவை தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சிலோன் தான். சிலோனில் இருந்து தான் அவர்கள் பெற்றோர்களோ, தாத்தாவோ அங்கே போனார்கள். மலேசியாவில் உள்ள இந்தியர்களும் சிலோன் என்று தான் சொல்வாகள்.சிலங்காவான பின்பு வெளிநாடு சென்ற இலங்கையர் சிறிலங்கா என்றனர். எனக்கு தெரிந்த வெள்ளையர் ஒருவரின் அப்பா சொல்வார் தனது மொழியில் சைலோன் என்று இலங்கையை முன்பு சொல்வார்ககளாம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிலோன் என்றால் ரஷியன் மொழியில் யானை என்று அர்த்தம்.

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகிடி said:

சிலோன் என்றால் ரஷியன் மொழியில் யானை என்று அர்த்தம்.

ஓ அப்படியா 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.