Jump to content

சம்பந்தர் காலமானார்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இந்த சம்பந்தன் சும் வாலுகள் தான் பெரும் தொல்லை ஒழுங்கா போன திரி அனுதாபம் தெரிவிக்கவில்லை என்ற கோதாவில் இறங்கியதால் வந்த வினை இந்த திரி இனி கொஞ்ச பக்கம் ஓடித்தான் அணையும் சில நேரம் இழுத்து பூட்டப்படும் சம்பந்தர் சுமத்திரன் கூட்டத்தால் தமிழர் அரசியல் பல ஆண்டுகள் பின்னோக்கி போயுள்ளது அதை ஒத்து கொண்டு நடக்க வேண்டிய விடயங்களில் கவனம் செலுத்துவது நல்லது ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால்  வேலையிடத்து பிரசர் வீட்டு பிரசர் ஒப் லைசன்சில் பகல் பொழுது கை காசுக்கு வேலை பார்த்து முதலாளியின் பிரஸரை இரவு மூன்று மணி மட்டும் யாழில் கொட்ட கொட்ட முழித்து இருந்து இறக்குவது வாடிக்கையாகி  போயிட்டுது .

பிழையை பிழை என்று ஒத்து கொண்டு நடக்க வேண்டிய அலுவலை பார்க்க செல்வது நல்லது ஆனால் இங்கு நடப்பது என்ன? பிழை 1௦௦வீதம் என்று தெரிந்தும் அதற்க்கு வக்காலத்து வாங்குவது? என்ன ரகம் ?

நல்லவன் கெட்டவன். துரோகி ......யார் இறந்தாலும் செலுத்துவது அஞ்சலி  அது தமிழரின் குணம் பண்பு    இங்கே எழுதப்படும் கருத்துகள்  தீர்வு இருந்தது  சிங்களம் தந்து இருக்கும்  வேண்டாம் என்று விட்டு விட்டீர்கள்  என்பதாக இருக்கிறது   தமிழ் மக்கள் சம்பந்தனை  மீண்டும் மீண்டும் ஏன் பாராளுமன்றம் அனுப்பினார்கள??   ஒரு முறையா.?? இல்லை இரண்டு முறையா. ??  பலமுறை அனுப்பினார்களே !!  ஏன் வேறு ஒருவரை தெரிவு செய்யவில்லை??  இன்றைய போராட்டம் அற்ற சூழ்நிலையில் பிரபாகரன் தேர்தலில் சம்பந்தனுடன். போட்டி இட்டாலும். தமிழ் மக்கள்  சம்பந்தனை தான்  தெரிவு செய்வார்கள்,.......🙏🙏

Link to comment
Share on other sites

  • Replies 162
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

வாத்தியார்

1977  இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் . அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு

நிழலி

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May132012.jpg

01_05_2012_May_Day_Sampanthan_Ranil_afte

முள்ளிவாய்க்காலில் சிங்களம் கொன்று குவித்த தமிழர்களின் இரத்தம் காய முதல்,
தமிழ் மக்களின் சுயகௌரவத்திற்கு இழுக்கு தேடும் வகையில்... 
சம்பந்தன், சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்த காட்சி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவித்தல்!

உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.

அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று (30) இரவு 11 மணியளவில் காலமானார்.

அவர் உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
 
http://www.samakalam.com/சம்பந்தனின்-இறுதிக்-கிரி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் மறைவுக்கு இந்திய பிரதமர் இரங்கல்

image_44927ddadf.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவார். இலங்கையின் தமிழ் தேசங்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை அவர் இடைவிடாமல் பின்பற்றினார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் அவர் இழக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தனின்-மறைவுக்கு-இந்திய-பிரதமர்-இரங்கல்/175-339688
 
மூத்த தமிழ் அரசியல்வாதி சம்பந்தன் காலமானார் : அரசியல்வாதிகள், பிரமுகர்கள்   இரங்கல்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் இயற்கை எய்தினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணித்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

1933ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி பிறந்த சம்பந்தன் இயற்கை எய்தும்போது அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த அரசியல்வாதியான இரா. சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இரங்கல் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எனது நீண்டகால நண்பர் நாங்கள் கடந்த பல காலங்களாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு பாரிய இழப்பாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இரங்கல் !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது. இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இரங்கல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் மறைவில் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகின்றேன்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் ஒரு முன்மாதிரியான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
https://thinakkural.lk/article/304895

சம்பந்தன் மறைவுக்கு அங்கஜன் இரங்கல்

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மறைவுக்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அன்னாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து தன்னை மக்கள் அரசியலில் ஈடுபடுத்திய பெருமகனார் அவர்.

தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த அவரது இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது.

வரலாற்று பாரம்பரியம் மிக்க கட்சியையும், வேறுபட்ட நீரோட்டங்களில் பயணித்த கட்சிகளின் கூட்டமைப்பையும் தனது இயலுமைக்காலங்கள் அனைத்திலும் தன் ஆளுமையால் சிதைவடையாது காப்பாற்றியதில் அவருக்கு இணை அவர் மட்டுமே.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றின் நீண்டகால அனுபவப் பக்கமொன்றை எங்கள் இனம் இன்று இழந்துள்ளது. 

அன்னாரின் இழப்பால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தன்-மறைவுக்கு-அங்கஜன்-இரங்கல்/175-339678

பாராளமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களின் மறைவையொட்டி இந்துக் குருமார் அமைப்பின் இரங்கல் செய்தி !

image_1490034965-d06667b4f8%20(1).jpg

இரங்கல் பகிர்ந்து, ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம்.

எமது தமிழினம் ஓர் பெரும் பலத்தினை இழந்த சூழலில் உள்ளது. சுமார் ஆறு தசாப்தங்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக விளங்கித் ஆற்றல்மிகு சக்தியாக தமிழ் மக்கள் மத்தியில் விளங்கிய ஓர் பண்புமிக்க அறிவாளனை இழந்துள்ளோம். இராஜதந்திர நகர்வுகளை செய்யும் சிறப்பாளர். பல்வேறு நாட்டு தலைவர்களாலும் இராஜதந்திரிகளாலும் மதிக்கப்பட்டவர். எமது தமிழ் பிரதிநிதிகளை ஓர் அணியாக செயற்பட வேண்டும் என செயற்பட்டவர். நிதானமாக நுண்ணறிவுடன் செயலாற்றிய, தலைமை தாங்கிய தலைவரை இழந்துள்ளோம்.

இச்சமயத்தில் அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் இறை பிரார்த்தனை செய்கிறோம்.

ஓம் சாந்தி.

கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர் இந்துக் குருமார் அமைப்பு.

சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.
செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.

https://www.battinews.com/2024/07/blog-post_47.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் சம்பந்தன் எனும் தவிர்க்க முடியாத ஆளுமை

ஜூலை 01, 2024
1000272468.jpg

ஈழத் தமிழர்களின் மூத்த பெரும் தலைமை தனது 91ஆவது வயதில் இன்று தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டது.

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாததும் மறுக்க முடியாததுமான மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்கள்.

உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இயற்கை எய்தினார்.

சுதந்திரத்திற்கு பின்னரான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றிலும், உரிமை கோரிய ஈழ விடுதலைப் போராட்ட காலம் மற்றும் ஆயுத போராட்டம் மெனிக்கப்பட்டதன் பின்னரான காலத்திலும் ஈழத் தமிழ் மக்களிடத்தினின்றும் அவர் சார் அரசியலினின்றும் பிரிக்க முடியாத ஒரு ஆளுமையாக சம்பந்தன் அவர்கள் இருந்திருக்கின்றார்.

விமர்சனங்களுக்கு அப்பால் தன்னுடைய காலத்திற்குள் ஈழத்தமிழர்களுக்கு அரசியல்சார் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது மாத்திரமின்றி இறுதிவரை அதே கொள்கையில் உறுதியாகவும் நின்று மடிந்து போயிருக்கின்றார்.

1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் பிறந்தவர் சம்பந்தன். சம்பந்தன் யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி மற்றும் மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வியை தொடர்ந்த சம்பந்தன் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானவர் சம்பந்தன்.

1972ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்து பின்னர் 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவெடுத்த கட்சியின் ஊடாக 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் மூலம்  திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 15,144 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார் சம்பந்தன்.

1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனையடுத்து 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட சம்பந்தனால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாமல் போனது.

இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம், அவர் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட ஏழு சந்தர்ப்பங்களிலும் ஒரே ஒரு முறை மாத்திரமே தோல்வியை சந்தித்திருக்கின்றார்.  

இதேபோல, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈபிஆர்எல்எப், டெலோ உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதன் பின்னர், அந்த கூட்டமைப்புக்கு சம்பந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு 18 வருடங்களின் பின்னர் மீண்டும் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அதன் பின்னர், 2004, 2010, 2015 மற்றும் 2020ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தல்களின் தமிழரசுக் கட்சியின் ஊடாக போட்டியிட்ட சம்பந்தன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

1000272464.png

இவற்றுள், 2015ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் சம்பந்தன் செயற்பட்டு வந்துள்ளார்.

இதற்கு முன்னர், 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று எதிர்ப்பு தெரிவித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி  விலகியிருந்தார்.

அத்தோடு, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை அனுமதிக்காததால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட நேர்ந்தது.

இந்த சமயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னரான தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் ஊடாக தேர்தலில் போட்டியிட்ட சம்பந்தன் தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். 

2020ஆம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், உடல்நலக் குறைவு காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் உள்ளிட்ட  பல அரசியல்சார் நிகழ்ச்சிகளில்  பங்கெடுப்பது குறைவாக இருந்த போதும்,  தமிழர் சார் அரசியல் நகர்வுகளை பழைய உத்வேகத்துடனேயே முன்னெடுத்து வந்தார். 

1000272414.jpg

குறிப்பாக, தற்போதைய அரசியல் பரப்பில் இருக்கக் கூடிய மூத்த அரசியல் தலைவர்களான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூத்த தலைவர்களாக இருக்கட்டும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகளாக இருக்கட்டும் அனைவருக்குமே சம்பந்தன் மீது தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் காணப்பட்டது. இதற்கு சம்பந்தனுடைய ஆளுமையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். 

1000272459.webp.webp

இலங்கை, தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக உள்ளூர் மாத்திரமின்றி சர்வதேச தலைவர்களையும் சந்தித்து தமது அழுத்தங்களை கொடுப்பதும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் சம்பந்தன் எப்போதுமே சோர்வு காட்டியதில்லை. 

குறிப்பாக, நாடாளுமன்றத்திற்குள் இடம்பெறும் வாத விவாதங்களின் போதும், தமிழர்களுக்கு எதிராகவோ, அல்லது தமிழர்களை தூற்றும் விதமாகவோ, கீழ்நிலைப்படுத்தியோ சிங்கள அரசியல்வாதிகள் கூச்சலிடும் போது அதற்கு தக்க பதிலடி கொடுத்து சம்பந்தன் ஆற்றும் உரை பலரிடத்தில் வரவேற்பை பெற்ற ஒன்றாக பார்க்கப்பட்டிருக்கின்றது  

இவைகளைக் கடந்து தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்குப் பின்னர் ஒரு அடைமொழியுடன் நோக்கப்பட்ட ஒரு தலைவர் என்றால் அது இராஜவரோதயம் சம்பந்தன் ஒருவரேயாவார்.

செல்வநாயகம் ‘தந்தை’ என்று விழிக்கப்பட்டது போன்று, சம்பந்தன் ‘ஜயா’ என்று விழிக்கப்பட்டார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது பல தசாப்தங்களாக கேள்விக் குறியாகவே இருக்கும் நிலையில், தன்னுடைய காலத்தில் ஏதாவதொரு விடயத்தை உருப்படியாக செய்ய வேண்டும் என்பதில் சம்பந்தன் மிகத் தெளிவாகவே செயற்பட்டிருந்தார்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளிருந்து தமிழர் உரிமைக்காக சம்பந்தன் குரல் கொடுத்து வந்த போதிலும், உரிமை கோரிய ஆயுத போராட்டக் காலத்தில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டுக் காலத்தில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக சம்பந்தன் செயற்பட்டிருக்கவில்லை என வரலாறு கூறுகிறது..

குறிப்பாக, அந்த காலப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய  அமைப்புக்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ தமிழர் அரசியலில் எவ்விதமான தீர்மானிக்கும் இடமும் இருந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்தான் சம்பந்தன் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றிருக்கின்றார். தலைமைப் பொறுப்பை ஏற்ற சம்பந்தன் என்றுமே சளைத்துப் போய்விடவிலலை.

அவர் முன்னால் அடுத்த தமிழர் தலைமுறை நிம்மதிப் பெருமூச்சு விட தேவையான பாதையை அமைக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, தன்னுடைய காலத்தில் ஒரு சரியான அடித்தளத்தை இடுவதற்கான தற்துணிவும் ஆற்றலும் உள்ள தலைமைத்துவம் அவரிடம் இருந்தமை மறுக்க முடியாத ஒன்று...  அவரது இழப்பும் ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
 
https://www.battinatham.com/2024/07/blog-post_48.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

May132012.jpg

01_05_2012_May_Day_Sampanthan_Ranil_afte

முள்ளிவாய்க்காலில் சிங்களம் கொன்று குவித்த தமிழர்களின் இரத்தம் காய முதல்,
தமிழ் மக்களின் சுயகௌரவத்திற்கு இழுக்கு தேடும் வகையில்... 
சம்பந்தன், சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்த காட்சி.

 சம்மபந்தர் மட்டுமா தூக்கிப் பிடிக்கிறார்????😳🤔

பாம்பின் நஞ்சு கொடியது உயிரைக் கொல்லும். ஆனால் அதுவே மனிதரின் கொடிய நோய்களைத் தீர்ப்பதற்கு ஒரு மருந்தும் ஆகிறது. சம்பந்தரின் தமிழின துரோகத் தலைமை வாழ்க்கையும் தமிழினத்திற்கு ஒரு மருந்தாகட்டும். 

சம்பந்தரின் ஆத்மா சாந்திபெற வேண்டுவதோடு, அவர்போன்றோர் இனிப் பிறவாதிருக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

கட்டுரையாளரை கேட்கிறேன் இதனை எழுதும் போது உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா .
இறந்தபிறகு ஒருவரை பற்றி இப்படியா துதி பாடுவது . அவரது ஆத்மா குழம்ப போகின்றது , அப்படி என்னத்த தான் செய்து இவங்கள் புளுகுகின்றார்கள் என . 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

துரோகி என்று முத்திரை குத்த யாருக்கும் அதிகாரம் இல்லை.

துரோகி பட்டம் வீட்டு அலுமாரி  நிறைய அடுக்கி வைத்திருக்கின்றார்கள் எடுத்து தாராளமாக வழங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ஒரு சக மனிதனாக மட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வசை பாடுபவர்கள், ஒரு வேளை சம்பந்தன் அந்த (2009 இல் இருந்து) இடத்தில இல்லாவிட்டால் என்பதை சிந்தித்தது பார்த்தது உண்டா?

ஆனல் 2009 இல் இருந்து இருபதத்திற்கு, சம்பந்தனின் அனுபவமும், சிங்களதுடன் நடத்திய (சட்ட) நாய் சண்டை வாதங்களும், அடிபிடியும், கிந்தியவுடன் அனுபவமும், ஆயுத போராட்டகால அனுபவவும்  தான் புடம் போட்டது சம்பந்தனை 

சம்மந்தன் இல்லாவிட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகளாக உடைந்து, பின்பு கட்சிகளும் உதிரிகளாக உடைந்து  இருக்கும்.

கிந்தியா, சிங்களம், ஏன் மேற்கு கூட மனித உரிமை சபையில் நடப்பதை கைகழுவி விடக் கூடிய நிலை வந்து இருக்க சாத்திய கூறுகள் மிக கூட.

குறைகள் இருப்பினம், சம்பந்தன் செய்தது காலத்துக்கு ஏற்ற சேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வரும்போது ஊர்புதினம் மட்டுமே அதிகமாய் பார்க்கும் வழக்கம் கொண்டவன், ஏனோ சம்பந்தர் போன செய்தியை கவனிக்கவேயில்லை, தற்செயலாக  ஒரு இணையதளம் பார்த்தபோது அன்னாரின் இறுதி கிரியை ஏற்பாடு என்றிருந்தது ,

எப்போடா போனார் என்றிருந்தது, வேலை இடத்திலும் எவரும் இதுபற்றி பேசவில்லை சும்மா சொல்லகூடாது அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலில் ரொம்ப பிஸியாக இருந்துவிட்டு  போயிருக்கிறார் மனிசன்.

சம்பந்தர் எதுவும் பெற்றுதரவில்லை என்ற மனதாங்கலில் பலர் திட்டினாலும்  சிங்களவன் கொடுத்தால்தானே இவர் வாங்க என்ற பரிதாபமும் உண்டு. ஆனாலும் அவன் தரமாட்டான் என்று தெரிந்தும்  வாங்கி தருவோம் என்று சொல்லி ஆறு தசாப்தங்களுக்குமேல் ரீல் விட்டுபோட்டு போனதுக்கு திட்டலாம் தவறில்லை.

சம்பந்தர் மட்டுமல்ல இன்று ஜனநாயக  வழியில் போராடி சிங்களத்திடம் தீர்வு பெற்று தருவோம் என்று பீலாவிடும் அப்பர் , சுந்தரர்,மாணிக்க வாசகர்கள் எல்லாம் காலம் முடியும்வரை சிங்கள பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்படித்தான் கிளம்பி போவார்கள் என்பதில் எந்த குழப்பமும் எப்போதுமே இல்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை தமிழருக்கு தலைமை வகித்த அனைவருமே தமிழர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து பொறுப்பற்ற வகையில் நடந்து  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின்  உயிர் அழிவுக்கும் தமிழரின் உரிமை அரசியல் பல தலைமுறைக்கு பின்தள்ளப்பட்டதற்கும் காரணமானவர்களே. இதில் சம்பந்தரை மட்டும் திட்டும் அரசியல் என்பது,  தாம் விசுவாசம் வைத்திருக்கும் தலைவர்களின் மாபெரும் தவறுகளை மறைத்து சம்பந்தர் மீது மட்டும் முழுப் பழியையும் போடும் இழிவான அரசியலே. 

  • Like 2
  • Thanks 1
  • Downvote 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இங்கே வசை பாடுபவர்கள், ஒரு வேளை சம்பந்தன் அந்த (2009 இல் இருந்து) இடத்தில இல்லாவிட்டால் என்பதை சிந்தித்தது பார்த்தது உண்டா?

ஆனல் 2009 இல் இருந்து இருபதத்திற்கு, சம்பந்தனின் அனுபவமும், சிங்களதுடன் நடத்திய (சட்ட) நாய் சண்டை வாதங்களும், அடிபிடியும், கிந்தியவுடன் அனுபவமும், ஆயுத போராட்டகால அனுபவவும்  தான் புடம் போட்டது சம்பந்தனை 

சம்மந்தன் இல்லாவிட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகளாக உடைந்து, பின்பு கட்சிகளும் உதிரிகளாக உடைந்து  இருக்கும்.

கிந்தியா, சிங்களம், ஏன் மேற்கு கூட மனித உரிமை சபையில் நடப்பதை கைகழுவி விடக் கூடிய நிலை வந்து இருக்க சாத்திய கூறுகள் மிக கூட.

குறைகள் இருப்பினம், சம்பந்தன் செய்தது காலத்துக்கு ஏற்ற சேவை.

2009 இல் சிநை்தது கிடந்த தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து அதன் தலைமைப் பொறுப்பை அப்போதைய நிலையில் அரசியல் அனுபவமும் வயதில் மூத்தவருமான சம்பந்தனிடம் கையளித்துவிட்டுத்தான் புலிகள் இயக்கம் தனது செயற்பாட்டை நிறுத்தியது. ஆனால். 2009 இற்குக்பின் சர்வதேசம் முன்னெடுத்த தமிழர்கள் தொடர்பான போர்க்குற்ற விசாரணை.தமிழ்களுக்கான தீர்வு தொடர்பாக எந்த செயற்பாட்டையும் செய்யாமல் கொழும்பில் சகல வசதிகளுடன் கூடிய வீட்டையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்திற்கும் போகாமல் திருகோணமலைக்குரிய பிரதிநிதியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்ல. தமிழர்களின் தேசியத்தலைம சம்பந்தனிடம் கையளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை  பல பிரிவுகளாக உடைத்து தனது சொந்தக் கட்சியான தமிழரகசுக்கட்சியையும் உடைத்து குழப்ப நிலையில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மிக மோசமான அரசியல்தலைவராக சம்பந்தன் இதுவரை காலமும் இந்தப் பூமிக்குப் பாரமாக இருந்தததைத்தவிர வேறு எதனையும் செய்ய வில்லை 

Edited by புலவர்
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தனின் மறைவிற்கு அதிமுக பொதுசெயலாளரான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

Published By: DIGITAL DESK 3   01 JUL, 2024 | 03:41 PM

image
 
''இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் ஐயாவின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.'' என அதிமுக பொது செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரை தொடர்ந்து முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

''இலங்கை தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும், மறுக்க முடியாதவருமாகிய..  ஈழ தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய தூணாக திகழ்ந்தவருமான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் தனது 91 வது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுகாப்பான வாழ்வியலை கட்டமைக்க ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத்தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது

அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.'' என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/187400

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அவருடைய நீண்ட சேவைக்கு நன்றிகளும்!

இங்கே எழுதும் சில உறவுகள் போல என்னால் சம்பந்தரைத் திட்ட இயலவில்லை.

உயிருக்கு அச்சுறுத்தல் இரு தரப்பிலிருந்தும் வந்த போதும், இந்தியாவைத் தாண்டி எங்கும் போகாமல் நாட்டிலேயே இருந்தவர், போட்டியாளர்களை துப்பாக்கியால் போட்டுத் தள்ளி விட்டு தலைமையை/பதவியைப் பிடித்துக் கொண்டிருக்காதவர், தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆகாயக் கோட்டை கட்டி மக்கள் காதில் பூச்சுத்தாமல் இயலக் கூடிய தீர்வை மட்டும் பேசியவர். இந்தக் காரணங்களாலேயே உலக அரசுகளின் பிரதிநிதிகளால் இறுதி வரை மரியாதையோடு நடத்தப் பட்டவர்.

சம்பந்தரை, அவரது மரண வீட்டில் வைத்து  "வேஸ்ட்டு" என்று விமர்சிக்கும் எவரும் நிச்சயம் அவரை விட முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார்கள், அதன் பலன்களை மக்களுக்குக் கொடுத்து விட்டு தமக்கு எதுவும் வேண்டாமென்று இப்போது அமைதியாக ஒதுங்கி வாழ்கிறார்கள் என்று தான் ஊகிக்கிறேன்😎.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரா.சம்பந்தன் மறைவு: தமிழக முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்:
இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கை மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன் .
இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார், செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் அவர்கள் போராடி வந்தார்.
இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் பேணி வந்தார். கருணாநிதியின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார்.
ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தன் அவர்களின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும்.
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ்:
இரா. சம்பந்தன் முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினர், ஈழத்தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த இரா.சம்பந்தன், ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே போர் மூள்வதை தடுக்க இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர். அவரது மறைவு ஈழத்தில் தமிழர்களுக்கு உரிமைகளையும், அதிகாரங்களையும் வென்றெடுத்துத் தரும் முயற்சிகளுக்கு பெரும் இழப்பு ஆகும்.

டிடிவி தினகரன்:
இலங்கையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான சம்பந்தன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வந்த முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தனை இழந்துவாடும் உறவினர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்புமணி இராமதாஸ்:
இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான பெரியவர் இரா. சம்பந்தன் முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடிப்படையில் வழக்கறிஞரான இரா.சம்பந்தன் தமது வாழ்நாள் முழுவதையும் இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டவர். அதற்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் மன்றாடியவர். கடந்த அரை நூற்றாண்டில் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த அனைவரிடமும் நட்பு பாராட்டியவர்.
இலங்கை இறுதிப் போருக்குப் பிறகு ஒன்று பட்ட இலங்கை என்ற அமைப்புக்குள்ளாகவாவது ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வந்தார். நான் ஸ்ரீலங்கன் என்று பொதுவெளியில் முழங்குவதற்கு கூட தயாராக இருக்கிறேன்; ஆனால், ஒருபோதும் இரண்டாம் தர குடிமகனாக வாழ விரும்பவில்லை என்று முழங்கியவர். அவரது விருப்பத்திற்கிணங்க இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவது தான் அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.

https://thinakkural.lk/article/304956

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சம்பந்தர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அவருடைய நீண்ட சேவைக்கு நன்றிகளும்!

இங்கே எழுதும் சில உறவுகள் போல என்னால் சம்பந்தரைத் திட்ட இயலவில்லை.

உயிருக்கு அச்சுறுத்தல் இரு தரப்பிலிருந்தும் வந்த போதும், இந்தியாவைத் தாண்டி எங்கும் போகாமல் நாட்டிலேயே இருந்தவர், போட்டியாளர்களை துப்பாக்கியால் போட்டுத் தள்ளி விட்டு தலைமையை/பதவியைப் பிடித்துக் கொண்டிருக்காதவர், தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆகாயக் கோட்டை கட்டி மக்கள் காதில் பூச்சுத்தாமல் இயலக் கூடிய தீர்வை மட்டும் பேசியவர். இந்தக் காரணங்களாலேயே உலக அரசுகளின் பிரதிநிதிகளால் இறுதி வரை மரியாதையோடு நடத்தப் பட்டவர்.

சம்பந்தரை, அவரது மரண வீட்டில் வைத்து  "வேஸ்ட்டு" என்று விமர்சிக்கும் எவரும் நிச்சயம் அவரை விட முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார்கள், அதன் பலன்களை மக்களுக்குக் கொடுத்து விட்டு தமக்கு எதுவும் வேண்டாமென்று இப்போது அமைதியாக ஒதுங்கி வாழ்கிறார்கள் என்று தான் ஊகிக்கிறேன்😎.

சம்மந்தர் ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

ஆயுத போராட்ட காலத்தில் இலங்கையில் அரசியலில் தமிழ் அரசியல்வாதிகள் செல்லாக்காசுகளே. இந்த காலத்தில் ஆயுதங்களே பேசின. நடைபெற்ற தமிழ் அரசியல் ஆயுத முனையிலேயே நடைபெற்றது.  

இந்தவகையில் பார்த்தால் சம்மந்தன் ஐயா தன்னால் முடியுமான அரசியலை தாயகத்தில் செய்துள்ளார். 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

நல்லவன் கெட்டவன். துரோகி ......யார் இறந்தாலும் செலுத்துவது அஞ்சலி  அது தமிழரின் குணம் பண்பு    இங்கே எழுதப்படும் கருத்துகள்  தீர்வு இருந்தது  சிங்களம் தந்து இருக்கும்  வேண்டாம் என்று விட்டு விட்டீர்கள்  என்பதாக இருக்கிறது   தமிழ் மக்கள் சம்பந்தனை  மீண்டும் மீண்டும் ஏன் பாராளுமன்றம் அனுப்பினார்கள??   ஒரு முறையா.?? இல்லை இரண்டு முறையா. ??  பலமுறை அனுப்பினார்களே !!  ஏன் வேறு ஒருவரை தெரிவு செய்யவில்லை??  இன்றைய போராட்டம் அற்ற சூழ்நிலையில் பிரபாகரன் தேர்தலில் சம்பந்தனுடன். போட்டி இட்டாலும். தமிழ் மக்கள்  சம்பந்தனை தான்  தெரிவு செய்வார்கள்,.......🙏🙏

ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை  அவன் இறக்கும்போதுதான்   தெரிய வரும் சமூக ஊடகங்களில் சம்பந்தரின் இறப்பு செய்தி எப்படி கொண்டாடுகிறார்கள்  என்பதை தேடி பாருங்கள் இங்கிருப்பதை விட மோசமாக கழுவி ஊற்றுகிறார்கள் அதை பார்த்து தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் இறப்பின் பின் என்ன நடக்கும் என்பதை புரிந்து இனியாவது தமிழர்களுக்கு இதைய  சுத்தியுடன் செயல்பட்டால் மிக நல்லது .

இங்கு சம்பந்தரால் தமிழர்கள் நன்மையடைய வில்லை மாறாக இனவழிப்பு செய்த சிங்கள அரசுகளை காப்பற்றி கிழக்கில் சிங்களமயமாக்கம் நடைபெறும்போது பாரளுமன்றத்தில் கொறட்டை விட்டு தூங்கியதுதான் அவர் செய்த சாதனை .சிங்களமயமாக்கம் நடை பெறுவதை தடுக்க முடியாதவர் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்று சொல்லி உங்களை போன்ற ஆட்களை  குதூகலிக்க வைத்தவர் .

இங்கு நான் எழுதி உங்களை மாற்ற முடியாது ஆனால் மாற தயராக இருக்கிறேன் சம்பந்தர் தமிழருக்கு செய்த நாலு நல்ல விடயத்தை எழுதுங்கள் இன்றே நான் உங்கள் பக்கம்தான் தயாரா ?

சம்பந்தருக்கு இனவாத சிங்கள அரசால் பரிசாக கொடுக்கப்பட்ட கொழும்பு  வீட்டையும் சம்பந்தர் மேலே போகும்போது கொண்டு போனாரா என்று அவரின் உறவினர்களிடம் கேட்டு சொல்லவும் 😁

தமிழர்களுக்காக  கடைசி வரை போராடி மறைந்த ஒரு மனிதனையும் சிங்கள அரசின் அற்ப சலுகைக்களுக்கு கொறட்டை விட்ட மனிதனை யும் ஒரே தட்டில் வைத்து நிறுவ முயலும் அளவுக்கு கருத்து வறட்சி உங்களிடம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த உரையில் சம்பந்தர் சொல்லியிருப்பவை நிகழ்ந்த சம்பவங்கள் தானே? இவையெல்லாம் நிகழ்ந்தை மறந்து, மன்னித்து  விட்டார்களாமா? நடந்தவற்றை ஒலி வாங்கியின் முன்னால் சம்பந்தர் பேசியது தான் மன்னிக்க இயலாமல் இருக்கிறதாமா? யார் இந்த தமிழர் போராட்ட வரலாறு தெரியாது அரைவேக்காடு கேசுகள்😂?

ஒரு மைக்கையும், 30 டொலர் கமெராவையும் தூக்கித் திரிபவரெல்லாம் ஊடகவியலாளர் என்று ஏற்றுக் கொண்டால் இப்படியான கீச்சுக்கள் தான் விளைவாகும்! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

நான் இலங்கை பற்றி கதைக்கிறேன். இந்தியா பற்றி அல்ல  சீமான் இந்தியன் என்பது அனைவரும் அறிந்தது    

அப்ப இந்தியன் பற்றி நான் இலங்கையன் கதைக்ககூடாது எண்டு மூடிட்டு இருக்கவேணும் நீங்கள்.. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

இதுவரை தமிழருக்கு தலைமை வகித்த அனைவருமே தமிழர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து பொறுப்பற்ற வகையில் நடந்து  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின்  உயிர் அழிவுக்கும் தமிழரின் உரிமை அரசியல் பல தலைமுறைக்கு பின்தள்ளப்பட்டதற்கும் காரணமானவர்களே. இதில் சம்பந்தரை மட்டும் திட்டும் அரசியல் என்பது,  தாம் விசுவாசம் வைத்திருக்கும் தலைவர்களின் மாபெரும் தவறுகளை மறைத்து சம்பந்தர் மீது மட்டும் முழுப் பழியையும் போடும் இழிவான அரசியலே. 

நான் சம்பந்தரை மட்டுமல்ல சைக்கிள் ரீமை இதைவிட மோசமாக திட்டுவேன்.. கள்ளனுவள்.. தமிழ்தேசியத்தை காட்டி உசுப்பேத்தி எப்பிடி பேய்க்காட்டுராணுவள்..

நிற்க..

அரசியல்வாதிகள் சாகும்போது ஒருபகுதி அனுதாபம் தெரிவிக்கும் வேளை இன்னொரு பகுதி திட்டத்தான் செய்யும்.. அரசியலுக்கு வரும்போதே இதை அறிந்துதான் வருகிறார்கள்.. கருணாநிதி யெயலலிதாகூட இதுக்கு விதி விலக்கல்ல.. ஏன் தலைவர் பிரபாகரனுக்கே மண்டை பிளந்து கிடகிறான் என்று ஒருமையில் திட்டிய மாற்றுக்கருத்தாளர்கள் இருக்கின்றனர்.. 

எனவே சம்பந்தனை திட்டுபவர்கள் திட்டுவார்கள் அனுதாபம் தெரிவிப்பவர்கள் தெரிவிப்பார்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு அஞ்சலி செய்வது என்றால் ஏதாவது ஒன்றை அவர் நமக்காக நம் இனத்துக்காக செய்திருக்கணும். அவ்வாறு இல்லையாயின் எமது ஆதரவு அல்லது அஞ்சலி அவரது வாழ்வின் செயற்பாடுகளை சரியாக்கி செப்பனிட்டு வரும் கால சந்ததிக்கு அவரை தவறாக இனம் காட்டிவிடும். முள்ளிவாய்க்காலில் தொடங்கிய உங்கள் மௌனத்தை மன்னிக்க மறக்க முடியாது. போங்க ஜயா.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உயிரிழந்த 4 மீனவர்களின் சடலங்களும் தங்காலை துறைமுகத்தை வந்தடைந்தது! கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை குடித்து உயிரிழந்த Dovon Son 5 மீன்பிடிக் கப்பலின் நான்கு மீனவர்களின் சடலங்களையும் ஏற்றிச் சென்ற மீன்பிடி கப்பல் இன்று தங்காலை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.   இதேவேளை தங்காலை நீதவான் அங்கு வருகை தந்து  விசாரணைகளை மேற்கொள்ளும் வரை மீனவர்களின் சடலங்கள் கப்பலிலேயே இருக்கும் எனவும், பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://athavannews.com/2024/1390773
    • இலங்கையைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி. இலங்கையின் தருஷி கருணாரத்ன மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகிய வீரங்கனைகள் இவ்வாண்டு பிரான்ஸின் தலைநகரான பரீஸில்  நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத்  தகுதி பெற்றுள்ளனர்.   அந்தவகையில் இலங்கையின் இளம் வீராங்கனையான தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதி பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் தில்ஹானி லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்துத் தகுதி பெற்றுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1390764
    • 300 BCஇற்குப் பிறகு அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்ற கருத்துப்பட எழுதியிருக்கிறீர்கள். 1977இல் கட்சி,மதம், ஜாதி வேறுபாடுகள் இன்றி, ஜி.ஜி. பொன்னம்பலம், ஜே.வி. செல்வநாயகம் இருவரினதும் மறைவுகளின் போது  ஈழத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்றதை நான்   கண்டிருக்கின்றேன்.
    • சிலந்தி, பல்லி என்று பலவற்றுக்கு வீட்டில் இடம் கொடுத்திருக்கிறீர்கள்.சாப்பாடு போட்டு அவைகளை வளர்க்கத் தேவையில்லை. உங்களுக்கும் செலவில்லை. இருந்திட்டுப் போகட்டுமே. சிலந்தி வலையை வாசிக்கும் போது. “சிலந்தி வலையைப் பின்னி வைத்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்குதடா பலரை இங்கே பணிய வைக்க பணம்தான் வலையா உதவுதடா…” கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. உங்களுக்கு ஒன்று தெரியுமா? காலையில் முதலில் நான் தேடி வாசிப்பது உங்கள் குறுங்கதையைத்தான். உடன்பிறப்புக்களுக்கு கருணாநிதி நாள்தவறாமல் எழுதியது போல் ரசோதரனும் எழுத ஆசைப்படுகிறேன்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.