Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இயலாமையின் மடிப்புகளில்: நிழலி

Featured Replies

இயலாமையின் மடிப்புகளில்..

ஒரு புழுவினும் கீழாய்

என்னை நிறுத்தி

நகர்கின்றது காலம்

எனது நிலங்களை

பேய்கள் அபகரிக்கும்

செய்திகளிலெல்லாம்

வந்தமருகின்றது

என் இயலாமையின்

தருணங்கள்

முகம் எங்கும் அப்பி கிடக்கிறது

போராட சென்ற

தோழர்களின் சாவு.

அங்கு

அவர்கள் சாகும் பொழுதுகளிலும்

குளிருகின்ற இரவில்

மனைவியுடன் கலவி

கொண்டு களித்து இருந்தேன்

நானிங்கு

வீட்டின் முன்

இலைகளற்றும் மண்ணின்

பிடிப்புடன் நிமிர்ந்து

நிற்கின்றது ஒரு

மரம்

மண்ணற்ற என்னை

பார்பதும் இல்லை

தன் கிளையில் வந்தமரும்

குருவியிடம் சொல்லி வைத்திருந்தது

என்னிடம் பேச வேண்டாமென

துணிவற்றவனுடன் கதையெதுக்கு

என்று கேட்டது அது

வீட்டிற்குள் சென்று

உடலினை குறுக்கி

அமருகின்றேன்

இயலாமையின் மடிப்புகளில்

இருந்து பொங்கி வரும்

அழுகையை எப்படி

நிறுத்துவது

-நிழலி--

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த அர்த்தமுள்ள கவிதை வரிகள்..! புலம்பெயர் தமிழன் ஒவ்வொருவனின் மனக்குமுறலும் இதுவே.. இதுபோன்ற கவிதைகளை உங்கள் வலைப்பூவிலும் தவழ விடலாமே..!

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிற்குள் சென்று

உடலினை குறுக்கி

அமருகின்றேன்

இயலாமையின் மடிப்புகளில்

இருந்து பொங்கி வரும்

அழுகையை எப்படி

நிறுத்துவது

உண்மை தான் நிழலி . யாருக்கு யார் ஆறுதல் சொல்வது .

நிழலி உங்கள் மனக் குமுறலை அழகாக கவிதையாக சொல்லிவிட்டீர்கள்.

இன்று புலிகளின் குரல் வானொலியில் ஒரு கவிதை கேட்டேன்!

இது அங்கு வாழும் மக்களுக்காய் எழுதப்பட்டது!

ஏன் இடிந்து போனாய்? எதை இழந்தாய்?

முன்னைய எமது இருப்பை கணக்கிட்டுப்பார்!

இன்றைய நகர்வை இழப்பு என்று சொல்லமாட்டாய்!

பட்டாம் பூச்சி பறக்கையிலும்

தன் முடிவை எண்ணி அழுவதில்லை!

இழந்துவிட்டோம் என சொல்லும்போது

சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் போன்று

மீண்டும் பிறப்பெடுத்தவர்கள் நாம்!

எவனும் எதையும் சொல்வான் - ஆனால்

நீ அதற்காய் குழம்பிவிடாதே!

நாம் விழுந்துவிட்டோம் என

எதிரி நினைக்கிறான்!

நாம் அழிந்து விட்டோம் என

உலகெலாம் சொல்கிறான்!

நம்பிக்கை எமக்கிருக்கிறது

நல்ல தலைமை அருகிருக்கிறது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலைகளற்றும் மண்ணின்

பிடிப்புடன் நிமிர்ந்து

நிற்கின்றது ஒரு

மரம்

மண்ணற்ற என்னை

பார்பதும் இல்லை

பத்து பதினைந்து நிமிடம் வார்த்தைகளைத் தேடிதிரிந்து

தோற்றுப்போய் அப்படியே மௌனமானேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வரலாமோ ....................

இலைகளற்ற மரம் மண்ணின் பிடிப்புடன்

அலை பாயும் என் மனம் தடு மாறி நிற்கிறது ,

மனமே இலையுதிர் காலத்தை எண்ணி பார்

பார்வைக்கு பட்ட மரமானாலும் வசந்தம் வரும்

தென்றல் வரும் ,சேதி வரும் ,பட்ட மரம் துளிர் வரும்

இயற்கையே இப்படியென்றால் , பகுத்தறிவு மனிதா

எண்ணிப்பார் ,காலம் கனிந்து வரும் ,தருணம் வரும்

கடந்த காலம் எண்ணிப்பார்,எதிரி விழ விழ வேகம் வரும்

,நம்பிக்கைவை தலைவன் தருணம் தலையெடுக்கும்

பொறுத்து பார் நிச்சயம் வெல்லும் ,சரித்திரம் சொல்லும்

நிழலி, ஆயிரம் வார்த்தைகளை கவிதைக்குள் அழகாக அடக்கியுள்ளீர்கள்.

  • தொடங்கியவர்

வாசித்த, பாராட்டிய, கருத்து சொன்ன அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எழுதும் போது எப்போதும் இலக்கிய நேர்மையுடன் எழுதவே முனைகின்றேன். எனது உண்மையான உணர்வுகளை மட்டும் தான் என்னால் எழுத முடியும். இழப்புகள் ஏற்படும் போது என்னால் எதனையும் செய்ய முடியவில்லையே என்னும் இயலாமையினை உணருகின்றேன். அதைத்தான் என்னால் எழுத முடியும். போரின் திசையில் நாளை என்ன நடக்கும் என என்னால் கற்பனை செய்து எழுத முடியாது. அப்படி செய்வதற்கோ கூட எனக்கு அருகதை இல்லை என்றே உணருகின்றேன். அண்மையில் சுகன் எழுதியிருந்த போல், என்று என் நிலத்தினை விட்டு நான் வெளியேறினேனோ (அது எந்த காரணத்திற்காக என்பதற்கு அப்பால்) அன்றே என் தோல்வி ஆரம்பமாகி விட்டது. மண்ணற்றவனாக, நாடற்றவனாக போன பின் போராளிகளை பார்த்து 'நாளை நீ வெல்வாய்' என என்னால் கவிதை எழுத முடியாது. அதற்கான குறைந்த பட்ச அருகதை கூட எனக்கு இல்லை. அப்படி எழுதுவதற்கான தார்மீக உரிமை வன்னி மக்களுக்கும், இராணுவ கட்டுப்பாடு பிரதேசங்களில் இருந்து போராளிகளிற்கு உந்து சக்தியாக இருக்கும் மக்களலுக்கும் மட்டுமே உள்ளது என கருதுகின்றேன்

இரவல் உணர்ச்சியில் எந்த விடயத்தையும் எழுத முடியாது

Edited by NIZHALI

நிழலியின் கவிதை அருமை

காலத்தின் தேவை கருதி வந்துள்ளது

வசியின் இணைப்பில் உள்ள கவிதை எம் புலத்தமிழர் கட்டாயம் வாசித்து உறைக்க உறைக்க மனதினில் ஒட்டவேண்டும்

தலைமை இருக்கும்வரை எதற்கு தள்ளாட்டம். இந்த இழப்புகள் எல்லாம் சில ஆண்டுகளிற்கு முன்பும் நிகழ்ந்தவைதான். ஆனாலும் இடையில் ஏற்பட்ட சமாதானக்காலம் இதை அதிகமாக காட்டுகின்றது. இழக்கும்போதுதானே இன்னும் வலி தோன்றும். ஓன்றை இழந்துதான் இன்னுமொன்றை பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் கட்டாயம் அதை இழந்துதான் தீர வேண்டும். அவர்களின் பலம் அவர்களிற்குத்தான் தெரியும். வெற்றிச்செய்தி விரைவில் வரும் அன்று நாம் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை அதற்காக இன்றே தயாராகுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nizhali

உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் நெஞ்சை சல்லடையாய் துழைத்துவிட்டன.

ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களும் மனதுக்குள்ளே சொல்லி அழுவதை உங்கள் வரிகளில் தந்த நிழலிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் வேதனையை கவிதையாக்கியது அழகு

இயலாமையின் மடிப்புகளில்..

வீட்டிற்குள் சென்று

உடலினை குறுக்கி

அமருகின்றேன்

இயலாமையின் மடிப்புகளில்

இருந்து பொங்கி வரும்

அழுகையை எப்படி

நிறுத்துவது

-நிழலி--

புலம் பெயர்ந்த, தேசப்பற்றுள்ள ஆனால் இயலாமையால் தவிக்கும் உள்ளங்களின் குமுறலை கவிதையாக்கினீர்கள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய நேர்மையுடன் எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். ஆயினும் நம்பிக்கையுடனிருப்போம். மண்ணற்றவர்களாக நாடற்றவர்களாகப் புலம்பெயர்ந்த போதே பாதி நம்பிக்கையைத் தொலைத்துவிட்டோம். எனினும் நம்பிக்கை என்றுமே தோற்றதில்லை.

யதார்த்தமான எண்ணமும் எழுத்தும் தங்களது எழுத்துக்களில் தெளிந்த ஓடையாய் சத்தமின்றி பாய்கிறது.

"முகம் எங்கும் அப்பி கிடக்கிறது

போராட சென்ற

தோழர்களின் சாவு"

மனதில் கனத்தை தந்துவிட்ட வரிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை நிழலி. நெஞ்சு கனக்கிறது!!!

மிக ஆழமாக வேதனைகளை வெளிப்படுத்துகின்றது இந்த கவிதை. உங்களுக்கு வெளிப்படுத்தும் வல்லமை இருக்கின்றது. எழுத்துக்களில் இயல்பும் நேர்மையும் இருக்கின்றது. தொடருங்கள்.

எமது இயலாமையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நாம் இங்கிருந்து எம்மை நாமே சோர்ந்து போக கூடாது என்று தேற்றிக்கொள்கின்றோம். வன்னி மக்களும் போராளிகளும் வெல்வார்கள் என்று நம்புகின்றோம். எமக்கு நாமே நம்பிக்கை ஊட்டுகின்றோம். வன்னியில் சொல்லெண்ணா துயருறும் மக்கள் எம்மை மலைபோல் நம்பியிருக்கின்றார்கள். நாம் சோர்ந்து போகாது சர்வதேசத்துக்கு தங்கள் அவலங்களை எடுத்துரைப்போம் என்று ஆழமாக நம்பியிருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில் எமது அவலம் வெளி உலகத்துக்கு தெரியாது. தெரியப்படுத்த பெரும் பாடுபட்டோம். இன்று உலகம் முழுவதும் பரவியிருந்தும் பரப்புரையில் படுதோல்வி நிலை. பெருமளவிலான எமது பரப்புரைகள் எங்கள் வட்டத்தை விட்டு வெளி உலகத்தினரருக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

நெருக்கடி குறைவான காலகட்டத்தில் பொங்கு தமிழ் வெல்க தமிழ் என்று பேரெழுச்சி கொண்டோம் ஆனால் மிக நெருக்கடியான காலட்டமான இன்றய நாட்களில் அவ்வாறு எதுவும் அற்று முடங்கிப்போனோம். முன்பு பேரெழுச்சி கொண்ட போது கலந்து கொள்ளாதவர்களை குறித்து சினிமாவுடனும் சீரியலுடனும் முடங்கி போவதாக திட்டினோம். இன்று சினிமாக் கலைஞர்களும் சின்னத் திரை கலைஞர்களும் நெருக்கடியை உணர்ந்து வீதியில் இறங்கி போராடுகின்றனர். தொடர்ந்து எமக்காக குரல் கொடுக்கின்றனர். நாம் எதற்குள் போய் முடங்கிக் கொண்டோம்? இயலாமைக்குள் மூழ்கிப்போனோம்.

  • தொடங்கியவர்

வாசித்த, பாராட்டிய, கருத்து சொன்ன அனைவருக்கும் மீண்டும் மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வன்னியில் சொல்லெண்ணா துயருறும் மக்கள் எம்மை மலைபோல் நம்பியிருக்கின்றார்கள். நாம் சோர்ந்து போகாது சர்வதேசத்துக்கு தங்கள் அவலங்களை எடுத்துரைப்போம் என்று ஆழமாக நம்பியிருக்கின்றார்கள்.

நெருக்கடி குறைவான காலகட்டத்தில் பொங்கு தமிழ் வெல்க தமிழ் என்று பேரெழுச்சி கொண்டோம் ஆனால் மிக நெருக்கடியான காலட்டமான இன்றய நாட்களில் அவ்வாறு எதுவும் அற்று முடங்கிப்போனோம். முன்பு பேரெழுச்சி கொண்ட போது கலந்து கொள்ளாதவர்களை குறித்து சினிமாவுடனும் சீரியலுடனும் முடங்கி போவதாக திட்டினோம். இன்று சினிமாக் கலைஞர்களும் சின்னத் திரை கலைஞர்களும் நெருக்கடியை உணர்ந்து வீதியில் இறங்கி போராடுகின்றனர். தொடர்ந்து எமக்காக குரல் கொடுக்கின்றனர். நாம் எதற்குள் போய் முடங்கிக் கொண்டோம்? இயலாமைக்குள் மூழ்கிப்போனோம்.

மிகவும் வலிதான உண்மைகள். இந்த இயலாமை ஏன் வந்தது? புலம் பெயர் நாடுகளில் உள்ள நாம் மீள் விமர்சனமும், மீள் கட்டமைப்பும் கொள்ள வேண்டிய தருணம் இது

  • கருத்துக்கள உறவுகள்

போலியற்ற, நிதர்சனமான வரிகள். கண்ணுக்குப் புலப்படாத சிறைக்கூண்டுக்குள் வசிக்கும் நம்மவர்கள், தாயகத்தில் நடக்கும் நிகழ்வுகளில் எவ்வகையான மாற்றங்களையும் கொண்டுவரமுடியாத இயலாமையில் வாழ்கிறோம் என்பதை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையில் உள்ளவை வரிகள் இல்லை.அத்தனையும் அம்புகள்.பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை சொல்ல வந்த சொல்லிவந்த வலி சொல்லில் அடக்க முடியாதது நிழலி. உங்கள் கவிதையின் வீச்சினையும் உங்கள் கருத்தக்களையும் தொடர்ந்து படிக்கும் பொழுது நாம் எங்கோ ஏற்கனவே அறிமுகமானவர்கள் என நினைக்கிறேன்.நான் நினைப்பவர்தானோ தெரியாது ??

  • கருத்துக்கள உறவுகள்

சொற்களால் நெஞ்சை துளைத்து விட்டீர்கள் நிழலி. காலத்தில் தேவை அறிந்து எழுதப்பட்ட கவிதை இல்லை உண்மைகள். எம்மை நாமே சிறுமைப்படுத்தாமல்( நாம் எமது மண்ணில் நின்று போராடாமல் கோழைகளாக வெளியேறிய போதும்) எம்மால் இயன்ற சிறிய பங்களிப்பு எல்லோராலும் ஒரு முகப்படுத்தும் போது பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பது தனிப்பட்ட கருத்து. தொடர்ந்து நிழலி இப்படியான கவிதைகளை வடியுங்கள். வேதனையை சாதனையாக மாற்ற வேண்டிய காலமிது. நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.