Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் பாக்க ரொம்ப சந்தோசமாக இருக்கு கரும்பு அண்ணா.:)

Edited by யாயினி

  • Replies 136
  • Views 17.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்களுக்கு மனத்தைரியம் தரும் ஆண்டவனுக்கு நன்றி ......விரைவில் குணமடைய வாழ்த்துக்களும் என்பிரார்தனைகளும் .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்களுக்கு மனத்தைரியம் தரும் ஆண்டவனுக்கு நன்றி ......[/size]

[size=4]விரைவில் குணமடைய வாழ்த்துக்களும் என்பிரார்தனைகளும் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நலமுடன் யாழில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

o0ywcm.jpg

நம்ம மாப்பு!!!! பார்க்க சந்தோசமாக இருக்கின்றது :) :) :)

  • தொடங்கியவர்

வணக்கம் யாயினி, நிலாமதி அக்கா, விசுகு, குமாரசாமி அண்ணா, சாத்திரி

உங்கள் உற்சாகங்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும், அன்புக்கும் மிக்க நன்றிகள். நான் முன்பும் ஓரிரு இடங்களில் எனது மொகரக்கட்டையை போட்டேன். பார்த்தீர்களோ தெரியாது.

சத்திரசிகிச்சையின் பின் மூக்கில் பெரிதாக நோ இல்லை, ஆனால் கசியிழையம் வெட்டி எடுத்தபடியால் காதுப்பகுதியிலேயே அதிகம் நோ உள்ளது. முன்பு ஒருதடவை இடது காதில் கசியிழையம் வெட்டி எடுக்கப்பட்டது. நேற்றுடன் வலது காதில் மூன்றாவது தடவையாக வெட்டு விழுந்துள்ளது. நேற்று இரவிரவாக சிறிது சிறிதாக இரத்தம் கசிந்தமையாலும், வைத்தியசாலையிலேயே நன்கு தூங்கி வழிந்தமையால் இரவு தூக்கம் அவ்வளவாக வரவில்லை. கடந்த தடவைகளில் கட்டில், உடைகள் இரத்தப்போக்கு காரணமாக அசுத்தம் செய்யப்பட்டமையால் இந்தத்தடவை கரை ஒன்றும் பிறளாத வகையில் கவனமாக இருந்தேன். நோவை விட சிக்கலானது சிகிச்சையின் பாதிப்புக்குள்ளாகிய இடங்களினிலால் வருகின்ற அருவருப்புத்தான். ஒன்றும் செய்யமுடியாது.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் கரும்பு. உங்கள் துன்பத்தை மற்றவர் முன் வைக்கும் உங்கள் மனோதிடம் பாராட்டப்பட வேண்டியது.வாழ்கையில் எதிர்நீச்சல் போடும் வல்லமை உள்ளவராக இருக்கிறீர்கள்.பிறகென்ன.

நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களும் என்பிரார்தனைகளும்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி அண்ணா. சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது நல்ல செய்தி. நோக்கள் குறைந்து காயங்கள் விரைவில் ஆற இறைவனை வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்

உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும், அன்புக்கும் நன்றி சுமேரியர், நவீனன், தும்பளையான்.

இரத்தக்கசிவுகள் எல்லாம் நின்றுவிட்டது. நோவும் நன்றாகக்குறைந்துவிட்டது. இன்று தலையில் குளிக்கலாம் என்று கூறினார்கள். ஓர் முளுகளுடன் அருவருப்பும்போய் விட்டது. நான் மாத்திரைகளைக்கண்டபடி பாவிப்பதற்கு விரும்புவதில்லை. antibiotics மட்டுமே ஒழுங்காய் எடுப்பது. Pain Killer இன்னும் ஒன்றுமே எடுக்கவில்லை. அது டப்பா உடைக்காமல் அப்படியே உள்ளது. இனித்தேவையில்லை என்று நினைக்கின்றேன். சென்ற தடவையும் Pain Killer இரண்டு மூன்று மாத்திரைகளுடன் நிறுத்த்விட்டேன். யாழில் பிரயோசனமாக ஏதாவது இன்று எழுதிப்போடுவோம் என்று பார்த்தேன். உடற்சோர்வு சோர்வு இன்னும் போகவில்லை. நிறைய எழுதவேண்டும் என்றும் ஆவல்தான்.

Readers Digest Seriesஇல் நல்லதோர் மருத்துவ நூல் ஒன்றை வாசித்து வருகின்றேன். அதை ஆராய்வதிலும்.. நேரம் போய்விடும். இன்று மருமகள் ஒருத்திக்கு ஆங்கிலத்தில் உதவி செய்தேன். இது பிரபலமானதோர் கவிதை. உயர்பள்ளி ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுவது. பொருள் விளங்கிக்கொள்வதற்கு அவ்வளவு இலகுவானது இல்லை. உவமானங்கள் அதிக நீட்சி கொண்டவை. எனினும், இணைய வழி உதவி உள்ளதால் அதிக சிரமம் ஏற்படவில்லை.

THE TYGER By William Blake

Tyger! Tyger! burning bright

In the forests of the night,

What immortal hand or eye

Could frame thy fearful symmetry?

In what distant deeps or skies

Burnt the fire of thine eyes?

On what wings dare he aspire?

What the hand dare sieze the fire?

And what shoulder, & what art.

Could twist the sinews of thy heart?

And when thy heart began to beat,

What dread hand? & what dread feet?

What the hammer? what the chain?

In what furnace was thy brain?

What the anvil? what dread grasp

Dare its deadly terrors clasp?

When the stars threw down their spears,

And watered heaven with their tears,

Did he smile his work to see?

Did he who made the Lamb make thee?

Tyger! Tyger! burning bright

In the forests of the night,

What immortal hand or eye

Dare frame thy fearful symmetry?

இங்கு விடயத்தை ஓரளவுக்கு விளங்கினாலும் பிரச்சனை என்ன என்றால் கேட்கப்படும் கேள்விகளுக்கு விரிவாக விடையை எழுதுவதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்ஸ் அண்ணா மீண்டும் நீண்டதோர் பயணத்தின் ஒரு பகுதியை அடைந்ததற்கு வாழ்த்துக்கள்

இந்த சாவை பற்றி நாங்கள் எல்லாம் ஏற்கனவே யாழில் அலசி ஆராய்ந்தது யாபகம் இருக்கா? நாங்க எல்லாம் செத்தா எரிக்கிறதா புதைக்கிறதா விருப்பம் எண்டெல்லாம் பேசி இருந்தோமே? அந்த இணைப்பை தேடி எடுத்து போடுங்களன்.......:D

புலியைப் படைத்தவனே பூவையும் படைத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும், அன்புக்கும் நன்றி சுமேரியர், நவீனன், தும்பளையான்.

யாழை எனக்கு மிகவும் பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம்

இந்த அரவணைப்பு.

இந்த வாழ்த்து

இந்த நேரத்தில் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள கிடைக்கும் ஒரு உத்தடம் யாழ்.

வாழ்க யாழ் களம்.

மெதுவாக ஆனால் உறுதியுடன் முன்னேறுங்கள் கரும்பு.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் அண்ணா அறுவைச்சிகைச்சை எல்லாம் முடிந்து அழகாக திரும்பிவந்தைதைக் காண மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கு... உங்கள் பயணம் சோர்ந்துகிடக்கும் நேரத்தில் எல்லாம் எனக்கு உற்சாகத்தை தரும்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்கள் அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றிகர‌மாய் முடிந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி...நன்றாக ஓய்வு எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் அண்ணா அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள்.விரைவில் பூரண குணம் பெற பிரார்த்திக்கிறேன்

  • தொடங்கியவர்

அனைவருக்கும் வணக்கம்,

நல்லதொரு நீண்டதூக்கம் அடித்து எழும்பினேன். காது, மூக்கை முட்டாதவகையில் இன்று ஓரளவு உடம்பை சாதுவாக பிரட்டி படுக்கக்கூடியதாக இருந்தது. நான் முன்பு கூறியதுபோல் சத்திரசிகிச்சை நடைபெறும்போது மூக்கினூடாக அல்லது வாயினூடாக தொண்டை வரை நீட்டப்படுகின்ற காற்றுக்குழாய் மூலம் வருகின்ற அழற்சி இம்முறையும் சாதுவாக இருந்தது. மோசம் இல்லை. இதனால் கழுத்து கட்டியதுபோல் உணர்வு வரும்.

எல்லாம் வழமைக்குத்திரும்புகின்றது. வழமையான நாளாந்த பிரச்சனைகள், கருமங்கள் மீண்டும் ஓட்டத்துக்கு ஆயத்தப்படுத்துகின்றன.

மாப்ஸ் அண்ணா மீண்டும் நீண்டதோர் பயணத்தின் ஒரு பகுதியை அடைந்ததற்கு வாழ்த்துக்கள்

இந்த சாவை பற்றி நாங்கள் எல்லாம் ஏற்கனவே யாழில் அலசி ஆராய்ந்தது யாபகம் இருக்கா? நாங்க எல்லாம்

செத்தா எரிக்கிறதா புதைக்கிறதா விருப்பம் எண்டெல்லாம் பேசி இருந்தோமே? அந்த இணைப்பை தேடி எடுத்து போடுங்களன்....... :D

நன்றி சுண்டல். பழைய பகிடிகள், கண்டதையும் ஆராய்ந்து ஆக்களிடம் வாங்கிய பேச்சுக்கள் எல்லாம் நினைவில் உள்ளது. உங்கள் கூட்டாளி ஜம்மு இப்போது என்ன செய்கின்றார்? கண்டால் அன்புடன் சுகம் கேட்டதாக கூறுங்கள். அடுத்தவருட ஆரம்பத்தில் நான் அங்கு வரவேண்டிய ஒரு தேவை உள்ளது. வந்தால் தொடர்புகொள்கின்றேன்.

புலியைப் படைத்தவனே பூவையும் படைத்தான்

ஈசன் நீங்கள் ஞானப்பழம்தான்! மேலுள்ள அந்த ஆங்கிலக்கவிதையின் சாரம்சத்தை இதைவிட இவ்வளவு சுருக்கமாகவும், அழகாகவும் தமிழில் விளக்க முடியாது. அருமை, அருமை, பாராட்டுக்கள்!

யாழை எனக்கு மிகவும் பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம்

இந்த அரவணைப்பு.

இந்த வாழ்த்து

இந்த நேரத்தில் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள கிடைக்கும் ஒரு உத்தடம் யாழ்.

வாழ்க யாழ் களம்.

மெதுவாக ஆனால் உறுதியுடன் முன்னேறுங்கள் கரும்பு.

மிக்க நன்றி விசுகு.

கலைஞன் அண்ணா அறுவைச்சிகைச்சை எல்லாம் முடிந்து அழகாக திரும்பிவந்தைதைக் காண மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கு... உங்கள் பயணம் சோர்ந்துகிடக்கும் நேரத்தில் எல்லாம் எனக்கு உற்சாகத்தை தரும்...

மிக்க நன்றி சுபேஸ்.

கலைஞன் உங்கள் அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றிகர‌மாய் முடிந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி...நன்றாக ஓய்வு எடுங்கள்.

மிக்க நன்றி ரதி.

கலைஞன் அண்ணா அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள்.விரைவில் பூரண குணம் பெற பிரார்த்திக்கிறேன்

மிக்க நன்றி வாதவூரான்.

+++

மின்னஞ்சலில் இப்படி ஒரு பொன்மொழி இன்று எனக்கு வந்தது. நிகழ்காலத்தை சரியாகக்கொண்டு செல்வதற்கு பழைய அனுபவங்கள் தேவைப்படுகின்றன, இவ்வாறே எதிர்காலத்தை நாங்கள் திட்டமிடவும் வேண்டும். என்றாலும் கீழுள்ள விடயமும் சிந்தனையை நன்கு தூண்டுவதாகவே உள்ளது.

quote.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழில் சந்திப்பதில் மகிழ்ச்சி கரும்பு ....வாழ்க்கை வாழ்வதற்க்கே .....

  • தொடங்கியவர்

நன்றி புத்தன். இன்றுடன் மீண்டும் வெளியில் இறங்கி நாளாந்த வாழ்வோட்டம் தொடர்கின்றது. வழமையான உடற்பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மேலும் சில நாட்கள் பொறுக்கவேண்டும்.

நான் மூன்றரை வருடங்களின் முன் எழுதிய இந்தக்கதை யாழில் இப்படி தொடரும் என்று எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு, உங்கள் துன்பங்கள், உங்களைக் கடந்து போகும்!

அவற்றை, நீங்கள் திரும்பிப் பார்த்துப், புன்னகைக்கும் காலம் விரைவில், வரட்டும்!

உங்களை, நலமுடனும், நம்பிக்கைகளுடனும், மீண்டும் கண்டது, மகிழ்ச்சி! :D

  • கருத்துக்கள உறவுகள்

Australiaa வருக வருக என்று வரவேற்கிறது கரும்பு எப்ப வாரதேன்ன்டு சொன்னிங்க எண்டா ஒரு ஓன்று கூடல ஒழுங்கு செய்யலாம் :D

  • தொடங்கியவர்

மிக்க நன்றி புங்கையூரான், சுண்டல்.

இன்றிலிருந்து வழமையான வெளிக்காரியங்களில் ஈடுபட்டேன். இன்று மருமகள் ஒருத்தியின் பிறந்தநாள் ஒன்றுகூடல். வெட்டு, கொத்து அடையாளங்கள், இரத்தவரிகள் காரணமாக எனது முகத்தை ஒருமாதிரி உற்றுப்பார்த்த ஆட்களுக்கு சத்திரசிகிச்சை பற்றிய வரலாற்றைக்கூறி விளக்கம் கொடுப்பதிலேயே நேரம் இன்று சென்றது.

சுண்டல்,

ஒன்றுகூடல் எல்லாம் சரிப்பட்டு வராது என்று நினைக்கின்றேன். ஏற்கனவே, யாழில் இது சம்மந்தமான பலர் பிரச்சனைப்பட்டார்கள். அதாவது தாம் வெவ்வேறு நாடுகளுக்குச்செல்லும்போது யாழ் ஒன்றுகூடல்போல் செய்து விடயங்களை மலினப்படுத்துகின்றார்கள் என்று. எனக்கு யாழில் நன்கு பரீடசயமானவர்களை வரும்போது ஒன்றுகூடல் போல் இல்லாமல் தனிப்பட சந்திக்கலாம் என்று நினைக்கின்றேன். தனிமடலில் பின்னர் தொடர்புக்கொள்கின்றேன். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் கரும்பு. நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களும் பிரார்தனைகளும்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி முரளி நீங்கள் நலம் வாழ என் நாளும் என் வாழ்த்துக்கள்

விழும்போது அழுவது அவமானம்

அது மனதின் பெலவீனம்

எழுவதே தன்மானம் என்று என் வேதனைகள் சோதனைகளைத் தாண்ட கரம் கொடுத்தது

இறை நம்பிக்கையும் இந்த யாழ் இணையமும்தான்

அனைத்து உறவுகளினது அன்பையும் தோழமையையும் என்றும் மறக்க மாட்டோம்.

உங்கள் நலனுக்காக தினமும் பிராத்திக்கிறேன்.

  • தொடங்கியவர்

மிக்க நன்றி கறுப்பி, கண்மணி அக்கா.

ஒவ்வொருவரின் பிரார்த்தனைகளும், உற்சாகமூட்டும் கருத்துக்களும், வாழ்த்துகளும் புதிய தென்பைத்தந்துள்ளன. அனைவருக்கும் மிக்க நன்றிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.