Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி மரணம்

Featured Replies

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி ஆவார்.

வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை இவர் ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர்.

மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்ட இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

sathiyamoorthyui5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்னனென்ன செய்திகளைக் கேட்கப்போகிறமோ? கடவுளே...

  • கருத்துக்கள உறவுகள்
:) அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்..!
  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் நல்ல செய்தி வரும் என்று சொன்னீர்களே , எங்களை விட்டு பிரிந்து விட்டீர்களே ....

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் . எவ்வளவு நாளைக்கு இப்படி சோகமான செய்திகளை எமது மக்கள் கேட்டுக்கொண்டு இருக்க போகிறார்கள்? :)

ஐயோ அண்ணா நீங்களும் எங்களை விட்டு போய்விட்டீங்களா :)

இறுதியாக வந்த ஒலிப்பதிவில்த்தான் சொன்னீங்கள், "நாளை அது நானாகக் கூட இருக்கலாம்" என்று... அதன் அர்த்தம் இதுதானா ? :)

ஒவ்வொரு முறையும் தாயக நிலவரமூடாக எங்களை சந்தித்தீர்கள், இனி என்ன செய்வோம் :(:( :( :(

கண்ணீர் விட்டாலும் தீராது சோகம். :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆ .... கடவுளே , மிகத்திறமையான ஒரு ஊடகவியலாளர் .

" நாள் , இதழ் , நேரம் " என்று ஒரு நிகழ்ச்சியில் அவரின் கருத்துக்கள் அருமையாக இருக்கும் .

தமிழனை சோதிப்பதற்கு அளவே இல்லையா .... ஆண்டவா ..... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நாளை அது நானாகக் கூட இருக்கலாம்" என்று... அதன் அர்த்தம் இதுதானா ?

ஒலிவடிவில் கேட்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50611

சாவிற்கும் அஞ்சாமல் ஊடகப்பணி செய்தவருக்கு என் கண்ணீர் வணக்கங்கள்!

சாவிற்கும் அஞ்சாமல் ஊடகப்பணி செய்தவருக்கு என் கண்ணீர் வணக்கங்கள்!

இளம் தலமுறை ஊடக்வியலாளர்களுக்கு மானசீக குருவான அய்யனுக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்!

சிறந்த ஒரு ஊடகவியலாளரை இழந்துவிட்டோம்...

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களத்தில் இருந்து வீரத்துடன் துணிச்சலுடன் செயற்பட்ட பத்திரிகையாளருக்கு கண்ணீரஞ்சலிகள்.

போர்க்களத்தில் இழப்புக்கள் சகஜம். இவரின் பணியை இன்னொருவர் எடுத்துச் செல்வதே இப்போதைய தேவை. ஒப்பாரி வைப்பது இவரின் வீரத்துக்கும் அழகல்ல. அது எதிரியின் செயற்பாடுகளை நிறுத்தப் போவதும் இல்லை..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பார்த்தேன் கடைசியாக சொன்னவர் நானாகக்கூட இருக்கலாம் என்று அதன் அர்த்தம் இதுதானா கடவுளே இன்னும் யார் யாரோ

மற்றுமொரு அறிவுஜீவியை இழந்துவிட்டோம்.

வீர வணக்கம்

குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

மிக விரைவில் மகிழ்சியான செய்தி வருமென்று சொன்னீர்களே! இனி யார் எமக்கு ஆறுதல் சொல்வார்கள்.தமிழினம் மீண்டும் மிகச் சிறந்த புத்திசீவியை இழந்து நிற்கிறது.கண்ணீர் அஞ்சலிகள்!!!!!!!;

கடைசியாக பார்த்த காணொளியில் கண்ணுக்குள் வந்து நிற்கின்றார்.

ஒரு தமிழனுக்கு உரித்தான மென்மையான சுபாவம்.

ஆருக்கென்று என்று தான் ஆறுதல் சொல்ல. மண்டை விறைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களத்தில் இருந்து வீரத்துடன் துணிச்சலுடன் செயற்பட்ட பத்திரிகையாளருக்கு கண்ணீரஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார்.

புதினம்

சத்தியம் பேசிய சத்தியமூர்த்தியே !

-------------------------------------------------

கொடுமையின் உச்சத்தை

பெரும் இடருக்குள் நின்றபடி

உலகுக்கு எடுத்து வந்தாய்

ஊடகத்தின் வழியாக

உண்மையின் குரலாக

காப்பரணில் நின்றபடி

தமிழினத்தின் துயருரைத்த

சத்தியமூர்த்தியே சாவை

அணைத்துச் சாய்ந்தனையோ !

கொலையரசாம் சிங்களத்தின்

எறிகணைக்குள் நின்றபடி

நின்றபடி நிலமை சொன்ன

நல்லதொரு ஊடகனாய்

நல்ல சேதி ஒன்று வரும்

அயராது உழையுங்கள்

என்றுவிட்டுச் சென்றதுமேன்

கண்ணீர் பூக்களைத்தான்

காணிக்கை செய்கின்றோம் !

சத்தியம் வெல்லுமையா

சரித்திரம் பதிவு செய்யும் !

உங்கள் பேச்சின் ஆற்றல் கண்டு என்னையே மெய்மறந்திருப்பேனே, உங்கள் கருத்துக்களை கண்களினூடு உயிர் நாடியாக கேட்பேனே, பேசும்போது தோள்களில் தட்டிக்கொடுப்பீர்களே நீங்களா எங்களை விட்டு சென்றீர்கள்??? உங்களுக்கென தனி நடை அமைத்துக்கொண்டீர்களே!!! வரலாறு சொல்லட்டும் உங்கள் பேச்சு, வாழ்ந்து காட்டட்டும் எங்கள் மூச்சு, வென்று காட்டும் எங்கள் போராட்ட வீச்சு... உங்களைத்தொடர்வோம் நாம்... நீங்கள் கொல்லப்படவில்லை மக்களிடத்தில் வாழப்போகின்றீர்கள்... நீங்கள் மரிக்கவில்லை, மரியாதை செய்யப்படப்போகின்றீர்கள்...

இறுதியான ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தி அவர்கள் மக்கள் மீதான குண்டு வீச்சு சம்பந்தமாக தன்னை ஒரு சாட்ச்சியாக வழங்கிய கருத்துக்கள்...

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

எனது கண்ணீர் வீர வணக்கங்கள்..

எங்கிருந்து இந்த அழிவு ஆயுதங்கள் ஏவப்படுகின்றனவே அந்த மூல இடங்கள் தேடியழிக்கப்படாவிட்டால் எமது மண் மக்களற்ற பாலைவனமாகிவிடும்..

இதுவே தங்கள் உயிரை இழந்த மக்களுக்கு செய்யும் காணிக்கை..

மேலும் உயிரிழப்பை தடுக்க முடியும்..

அஞ்சலிகள்...

தெரிஞ்ச அறிஞ்ச சனங்களெல்லாம் இல்லாமல் போகுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணை நேசத்த மக்களை நேசித்த ஒரு மாபெரும் பத்திரிகையாளன். எறிகணை வீச்சிர்ற்குள்ளும் மக்களின் அவலங்களை ஓளிவடிவில் தர உயிரை துர்சமென மதித்த் ஒரு போர்வீரன் ...உலக அரசியலை கற்று தெளிந்த் ஒரு துய்மையான தமிழன் ..நாம் இருக்கும் நாடுகளின் அரசியல் பொருளாதார நிலைமைகளை நமக்கு தெரியாத விடயங்களை வன்னியிளிர்ந்து அக்கு வேறு ஆணி வேறாக அலசிய ஒரு தேச புதல்வன்...மான வீரனிற்கு எனது இதய அஞ்சலிகள்...

இப்படிப்பட்ட ஒரு தேச பத்திரிகையாளனுக்கு ஒரு பேழை கூட இல்லாமல் 4 பேருடன் நடக்கும் இறுதி நிகழ்வை பார்த்தல் வன்னியின் நிலைமை நன்றாக புரியும்

f8df432203.jpg

நன்றி : புதினம்

புலிகளின் குரல் பொறுப்பாளர் தமிழன்பன்(ஜவான்) தவிர வேறு எந்த போராளிகளையும் காணவில்லை..(கதிரையில் அமர்திருக்கிறார் )

Edited by லோயர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.