Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கு நகர்கிறது

Featured Replies

பி.ப 5 : 20

இலக்கு நகர்கிறது....

இண்டைக்கு விட்டால் இனி இந்த இலக்கை பிடிக்க முடியாது..

இந்த இரண்டு வசனமும் தான் மதனின் மனசில் விடாமல் ஒலித்து கொண்டிருந்தது. கொஞ்சம் வியர்த்து தான் போய் இருந்தான்.

அவன் ஒரு இயக்கி மட்டும் தான். அதை செய்ய வேண்டியவனுக்காக தான் இவ்வளவு காத்திருப்பும். வசந்தன் எங்கே.?

ஒரு வேளை சுத்தி வளைப்புக்குள் மாட்டுப்பட்டிருப்பனோ.?

இல்லை.. மனசை மாத்தி இருப்பானோ.? ச்சே ச்சே அப்படி இருக்காது அவன் என்னை விட உறுதியானவன் நிச்சயமா வருவான். தன்னை தானே கேள்வியும் கேட்டு சமாதானமும்படுத்தி கொண்டிருந்தான். நேரமாகிறது இலக்கு நகர தொடங்கிவிட்டது இன்னும் பத்து இருபது நிமிசத்திலே இந்த இடத்தை விட்டு போயிடும். அதுக்கு பிறகு இலக்கை நெருங்கவே முடியாது.

இவ்வளவு நாளும் பட்ட கஷ்டம் வீணாக போய்விடும்.

பி.ப 5 : 21

மதன்....

சமிந்தவுக்கு எல்லாமே அவன் தான். அவன் காலணியை மினுக்குவதில் இருந்து சாராயம் ஊத்தி கொடுப்பதேல்லாமே அவன் தான். சமிந்த கூட தான் போகும்போது தன்னுடனையே வர சொல்லி இருந்தான். இவனும் நிச்சயமா வருவதாக வாக்கு கொடுத்திருந்தான்.

பொறியியல் கல்லூரிக்கு தெரிவாகி இருந்தும் நாட்டின் மீது கொண்ட பற்றினால் இயக்கத்தில் இணைத்து கொண்ட மதன், அடிப்படை புலனாய்வு பயிற்சியை முடித்து கொண்டு நடவடிக்கைக்காக யாழ்பாணம் அனுப்பபட்டிருந்தன். ஒவ்வொரு சிங்கள சொல்லையும் காலையில் எழுந்து பாடமாக்குவான். அவன் பொறியியல் கல்லூரிக்கு தெரிவாவதற்கு கூட அப்படி படித்ததில்லை. மூன்றே மாதத்தில் சளரமாக சிங்களம் கதைச்ச அவனை பார்த்து சமிந்தவே வியந்து போனதாக அவன் பொறுப்பாளரிடம் பெருமைபட்டு கொள்ளுவான். வீட்டிலிருந்து இராணுவ முகாம் போய் வந்த அவன், நாளாக முகாமிலையே தங்க தொடங்கிவிட்டான். சமிந்த அவன் மேல ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தான். மாதாமாதாம் ராணுவ சம்பளம் கூட கொடுக்க தொடங்கி இருந்தான்.

பி.ப 5 : 22

மதன் படிப்படியாக இராணுவ கட்டமைப்பில் வளர தொடங்கினான். ஊரில் அவனது குடும்பத்தை பார்த்து ஊரவர்கள் துரோகி குடும்பம் என்று ஒதுக்க தொடங்கினார்கள். அவன் தங்கையை தெருவிலே இராணுவத்துடன் படுப்பவள் என்று எல்லாம் கேவலமாக நக்கல் செய்தார்கள். அவன் உறவினர்களுடன் கூட பேச தயக்கபட்டார்கள். மதனின் அம்மாவுக்கு கூட தெரியாது இவன் ஏன் பொறியியல் படிப்பை விட்டு ராணுவத்துடன் அலைகிறான் என்று.

இதை எல்லாம் கூட தாங்கி கொண்ட மதனுக்கு, அவன் நண்பனை தானே கொல்ல வேண்டி வந்ததை தான் இன்னும் தாங்க முடியவில்லை.

பி.ப 5 : 23

அன்றும் அப்படி தான் இராணுவத்துடன் ஒரு சுற்றிவளைப்புகாக போனவன், அங்கே கைது செய்யபட்டவன் இவனுடன் பயிற்சி எடுத்த முகிலன்.மதனின் நம்பிக்கையை பார்க்க அவன் கையிலையே துப்பாக்கியை கொடுத்து முகிலனை சுட சொன்னான் சமிந்த, .கொஞ்சம் கூட நடுக்கம் இல்லாமல் ,மதனோ முகிலனோ முகத்திலே எந்த வியப்பும் காட்டாமல் , மதன் சுட்டான் முகிலனின் தலையில். அந்த இடத்திலையே முகிலன் துடித்து இறந்தான். இறுகின மனசுக்குள்ளே சொல்லி கொண்டான் மதன்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

பி.ப 5 : 24

அந்த சம்பவத்துக்கு பிறகு புலிகளின் ஏனைய பிரிவுக்கும் துரோகியானான் மதன். அவர்களின் சூட்டு பட்டியலில் முதலிடத்துக்கு வந்தான். இதை பற்றி எல்லாம் அவன் ஒரு நாள் கூட கவலை பட்டது இல்லை. தும்ம தும்ம புகை பிடிச்சு பழகி, இராணுவத்துக்கு முன்னால் தும்மாமல் புகை பிடிப்பான். குடித்து விட்டு சத்தியை அடக்கி, யாருக்கும் தெரியாமல் வந்து வாந்தி எடுத்திருக்கிறான். எல்லாம் இந்த இலக்கிற்காக.

அந்த இலக்கு.

பி.ப 5 : 25

சமிந்த..

மட்டக்களப்பிலே கொக்கட்டிசோலை படுகொலைக்காக பிரிகேடியராக பதவி உயர்த்தப்பட்டு, கேணல் ரத்வத்தையால் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டவன். எதுவுமே செய்யாதவன் மாதிரி மக்களுடன் ஐக்கியமாக பழகி கழுதறுத்து கொண்டிருந்தான். மக்களே அவன் ஒரு நல்லவன் என்று சொல்லும் அளவுக்கு மக்களின் அவ்வளவு நிகழ்விலும் கலந்து கொள்பவன். இன்று அவன் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று கொழும்பு திரும்புகிறான். அதற்கான வர்த்தகசங்க பாராட்டு விழாவில் தான் இப்போ கலந்து கொண்டிருக்கிறான். இன்னும் சில வினாடிகளில் அவன் புறபட்டுவிடுவான். அவனை வரவேற்க அவனது மனைவியும் மகளும் இரத்மலான விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருகிறார்கள்.

மதனும் காத்திருக்கிறான் வசந்துக்காக..

பி.ப 5 : 26

வசந்தன்..

கடைசி நேரத்தில் தலைமையால் தேர்ந்தெடுக்கபட்ட கரும்புலி. எத்தனையோ போட்டிகளை தாண்டி தான் இந்த நடவடிக்கைக்காக அவன் தேர்வு செய்யபட்டிருந்தான். ஒத்திகை கூட இல்லை. வசந்தின் உறுதியை நம்பி தான் தான் நடவடிக்கை ஒப்படைக்க பட்டிருந்தது. இலக்கை அண்மித்ததும் மதனிடம் இருந்து சக்கையை பெற்று கொண்டு வெடிப்பது தான் வேலை. சக்கை கூட இரண்டு நாளைக்கு முதல் தான் அந்த நகரின் மத்தியில் இருந்த சாப்பாட்டு கடைக்கு மாற்ற பட்டிருந்தது.

வசந்த் . அன்றைக்கு சந்தோசமாக தான் இருந்தான். தாய் மண்ணின் விடுதலையை விரைவு படுத்தவும் எங்கள் மக்களை அழிப்பவர்களுக்கு பாடம் படிப்பிக்கவும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் யார் தான் சந்தோசமில்லாமல் இருப்பார்கள்.

அவன் சந்தோசம் எல்லாம் அவன் நகர பூங்காவை அடையும் மட்டும் தான்..

பி.ப 5 : 27

பிரிகேடியர் சமிந்தவுக்காக அமைக்கபட்ட இரண்டாம் சுற்று பாதுகாப்பு வலயத்தை தாண்ட முடியாது அனைத்து மக்களுடன் சேர்ந்து வசந்தனும் தடுக்கப்படிருந்தான்.மதனுக்கு கூட தெரியபடுத்த முடியாமல் தவித்து கொண்டிருந்தான். நடவடிக்கை பிசகபோகுது. எத்தனை நாள் கனவு.. இரண்டு மூன்று தரம் அந்த சிப்பாயிடம் கேடிருப்பான் இன்னும் அரை மணித்தியாலம் பொறுக்க சொல்லி..சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தான்.

என்னத்தை பொறுக்க..மதனை நினைக்க தான் வசந்துக்கு இன்னும் கவலையாக இருந்தது. அவனை விட மதன் தான் இதுக்காக நிறையவே கஷ்டபட்டிருந்தான்..

பி.ப 5 : 28

பொறுமையின் எல்லைக்கே போய் இருந்த மதன். அந்த சாப்பாட்டு கடைக்காரனிடம் ஒரு துண்டு பேப்பரை வாங்கி எதையோ கிறுக்கி,

"அண்ணே ! இதை வசந்த் வந்தால் தலைமையிடம் கொடுக்க சொல்லி கொடுத்துவிடுங்கள்". என்று சொல்லிவிட்டு அவிரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சக்கையை எடுத்து தன் உடம்புடன் கட்டினான்.

"அண்ணே எல்லாத்துக்கும் மிக்க நன்றி அண்ணே. நான் போயிட்டு வாறன் நேரம் போய்விட்டது" என்று கிட்ட தட்ட ஓடியே போனான்.

சமிந்தவை நெருங்கியபோது..

பி.ப 5 : 29

"மல்லி உள்ளே போகமுடியாது" சிங்கள சிப்பாய் அவனை மறிச்சான். அதை கண்ட சமிந்த " மேயா அப்பே கட்டி தாமாய் அதுல்ல்ட என்ட இட தெண்ட" (இவன் எங்கட ஆள் தான் உள்ளே வர இடம் கொடு) என்று சிப்பாய்க்கு கட்டளை இட்டான்.

அருகில் வந்த மதன், சமிந்தவை கட்டி அணைத்தான். இடுப்பை தடவி அதை இழுத்தான். ஒரு கணம் தான் இந்த இடமே வெடித்து சிதறியது. பிரிகேடியர் சமிந்த இருந்த இடம் தெரியாமல் போனான்..கூடவே மதனும்...

"மதன் நீ என்னுடனையே வருவியா..நிச்சயமா சேர் நான் உங்க கூடவே வருவேன் "

பி.ப 6: 18

தம்பி இந்த கடிதத்தை கொடுக்க சொன்னார் என்று, கடைகாரர் தவிப்புடன் ஓடிவந்த வசந்திடம் அந்த கடிதத்தை கொடுத்தார்.

அன்பின் அம்மானுக்கு,

அம்மான் எனக்கு நிறைய எழுத நேரம் இல்லை. அம்மான் விக்டர் அல்பாவுக்கா காத்திருந்தேன் அவன் குறிபிட்ட நேரத்துக்குள் வரவில்லை. எனக்கு இந்த இலக்கை விடவும் மனசில்லை. என் வாழ்க்கை முழுக்க இந்த இலக்குக்காக கஷ்டபடிருகிறேன். அம்மான் என்னை மாவீராக கிளெய்ம் பண்ணலை என்றாலும் பரவாயில்லை. இவனை நான் விடுறதா இல்லை. நான் கட்டளையை மதிக்கவில்லை என்றால் என்னை மன்னித்துவிடுங்கள்.

அம்மான் கவனமா இருங்க. அண்ணையை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

அன்புடன்,

மக் அல்பா

(யாவும் கற்பனை அல்ல)

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு..

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் நான் தின்பது சோறா அல்லது மலமா, என எண்ணத்தோன்றும் இடுகைளளில் இதுவும் ஒன்று. இது எனது சுயவிமர்சனம் மட்டுமே.

மனதை பிசையும் உண்மைகள்... இப்படி இன்னும் பல நூறுகள் எமக்குள் வாழ்ந்துவிட்டு போய் இருக்கிறார்கள்... அபிராமுக்கு நண்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள்ளே இவர்களும் வாழ்ந்தார்கள் என்பது ...........???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் இப்படி ஒரு வகையினரும் இருந்திருக்கிறார்கள்..! நாங்களும் இருக்கிறோம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் எந்த வகையிலும் இலக்கை எட்டுவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நன்றி அபிராம்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே போட்டுதே

படு பாவி இந்தியங்கள் காலாகாலத்துக்கும் தமிழனை இல்லாமல் பண்ணிப் போட்டாங்களே.

முன்னரெல்லாம் இப்படியானவற்றை வாசிக்க உடம்பில் புது இரத்தம் ஓடுகிற மாதிரி இருக்கும்.

இப்போ இலக்கைத் தேடி நாமே போகலாம் போல் இருக்கிறது.

  • தொடங்கியவர்

ஊக்கமளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சக் கூடுகளில் நெருப்பேற்றி தம் சொந்தக் கனவுகளை தூர எறிந்துவிட்டு தேசக்கனவு சுமந்தோர் இன்றும் துன்பத்தோடும் துயரங்களோம். மனங்கள் ரணங்களாகி வலிக்கிறது.

இது போன்ற பதிவுகள் தொடரப்பட வேண்டியவை. பாராட்டுகள்:

Edited by nochchi

அபிராம் உமது ஆக்கங்களை மிகவும் விரும்பி வாசிப்பேன். வீரமும் தியாகமும் போற்றப் படவேண்டியவை.எனது கருத்து பலரையும் முகம் சுழிக்க வைக்கலாம்.

9/11 முன் அதில் சம்பந்தப் பட்டவர்கள் என்ன செய்தார்கள் என்றொரு டொக்குமென்டரி பார்த்தேன்.பல நாளைய அவர்களது திட்டத்தை எப்படி நிறைவேற்றினார்கள் என்று.அதில் பலர் வெள்ளயர்களுடன் சேர்ந்து பியர் கூட அருந்தினார்கள்.கடைசியில் தமது நோக்கங்களை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியும் விட்டார்கள்.

தமது கோபத்தை பழி தீர்க்கும் வன்மத்தை அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள்.ஆனால் உலகின் பார்வைக்கு அவர்கள் செய்தது சரியா? இங்குதான் அனைத்துமே அடங்கியிருக்கின்றது.

முடிவு அவரவர் மனநிலையை பொறுத்தது.

ஆனால் அவர்கள் செய்தது சரியா? இதுவே எமது பிரச்சனையும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் துரோகி என்று சொல்லக்கூடாது ...என்பதை இந்த கதை சொல்லி செல்லுகிறது....நல்லதொரு பதிவு..

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம்! பலதடவை படித்துவிட்டு கனத்த மனதுடன் நகர்ந்திருக்கிறேன், மௌனம்தான் சிறப்பாகப் பட்டது எனக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்

மதனைப் போன்ற தன்னலமற்ற பல தியாகிகளை எமது சமுகம் யாரோ சொன்னதைக் கேட்டு துரோகி என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம் நீங்கள் எழுதும் கதைகள் எல்லாம் கண்ணீரை வர வழைக்க கூடியதாகவே உள்ளது...நீங்கள் தொடர்ந்து கதை எழுத வேண்டும் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவும் அதைக்கொண்டு சென்ற விதமும் அழகு.இந்த சம்பவம் வடமராட்டசியில் நடந்ததை ஒட்டடியது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவும் அதைக்கொண்டு சென்ற விதமும் அழகு.இந்த சம்பவம் வடமராட்டசியில் நடந்ததை ஒட்டடியது என்று நினைக்கிறேன்.

ஓம் அண்ணை. இது பிரிகேடியர் விஜயரட்ணாவின் சம்பவம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபிராம்.எவ்வளவு தியாகங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புகள் எல்லாமே வீணா??

பிறேமதாசாவும் இப்படி தானே கொல்லப்பட்டார்.

நல்லதொரு நியப்பதிவு.

அம்மான் கவனமா இருங்க. அண்ணையை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

இது தான் என்னுடைய கண்ணுக்குள் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் இப்படி ஒரு வகையினரும் இருந்திருக்கிறார்கள்..! நாங்களும் இருக்கிறோம்..! :D

தமிழர்கள் இப்படிதான் வாழ்ந்தார்கள்......... வளர்ந்தார்கள்......... இறந்தார்கள்!

அவர்கள் எத்தனையோ ஆக்கிரபிப்புகளுக்கு எதிரா போராடினார்கள்.............. இன்று கடவுள் என்று போற்றி கோவிலுக்குள்ளேயே கொண்டுபோய் வைத்துவிட்ட முருகன் தொடங்கி எமது காலத்து பிரபாகரன் வரை. அவர்கள் பல தோல்விகளை சந்தித்தார்கள்..

அதன்போது ஊடுருவிய ஆக்கிரமிப்பு கூட்டத்தின் ஒரு தொகுதி பின்பு தமிழ்பேச தொடங்கியிருக்லாம்... நாம் நிற்சயமாக அப்படி ஒன்றுதான்.

மற்றையபடி தமிழர்கள்.

தன்னிலை தாழமையும் அந்நிலை தாழும் இடத்து உயிர்வாழமையுமாகவே இருந்திருக்கின்றார்கள்!

எல்லோரையும் துரோகி என்று சொல்லக்கூடாது ...என்பதை இந்த கதை சொல்லி செல்லுகிறது....நல்லதொரு பதிவு..

அதற்காக............ எலி தோலை புலிக்கு போர்த்தவும் முடியாதல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவுகளால் பல அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன

அவை அவையாகவே இருக்கட்டும்

அவை கதைகள் அல்ல

நிஐங்கள்

எனக்கு இது போன்ற கருத்துக்களை அல்லது கதைகளை வாசிக்கும்போது....

அது கரும்புலிகளை மேலும் மேலும் ....

இப்படி செய்திருக்கலாம்

அப்படி செய்திருக்கலாம்

இப்படி செய்திருந்தால் அது இன்னும் சிறப்பான கொடையாக இருந்திருக்கும்...................

என்பது போன்று அவர்களது அதி உச்ச தியாகத்தை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.

தயவு செய்து உண்மையென்றால் உண்மைச்சம்பவம் என்று எழுதுங்கள்.

அதை அப்படியே எழுதுங்கள்.

கதை என்றால் கதை என்று எழுதுங்கள்

கற்பனையும் உண்மையையும் கலந்தது என்று அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தவேண்டாம்.

தங்கள் உணர்வுகளை மதிக்கின்றேன்

எனது உணர்வையும் மதிக்குமாறு அவர்களின்பால் நானும் தாங்களும் வைத்திருக்கும் அன்பின்பால் கேட்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.