Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புது வருடப் பிறப்பும்,யாழ் கள உறுப்பினர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கும் புத்தம் புது வருட வாழ்த்துகள்.

கறுப்பி மாமிச‌ம் சாப்பிட‌ பழக வேண்டும்.இல்லா விட்டால் குளிர் காலத்தில் வருத்தம் வரும்.

சமைத்து தந்தால் சாப்பிடுவேன் என்று மட்டும் சொல்லவே மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...எல்லோரும் வருடப் பிறப்பை கொண்டாடுவதில் பிசியாக உள்ளீர்கள் போல இருக்குது.ஒவ்வொரு வருடமும் பிறக்கையில் நாங்களும் ஒரு கொள்கை பிரமானம் எடுத்துக் கொள்வோம் அதாவது ஏதாவது கெட்ட பழக்கம் இருந்தால் பிறக்கப் போகும் புது வருடத்தில் இருந்து அந்த கெட்ட பழக்கத்தை விடுவது என்று[வருடத்தின் முதலாம் திகதி கொள்கைப் பிரமானம் செய்தால் அதை அன்றே மீறுவது எல்லோரது வழக்கம்.]இருந்தாலும் இந்த வருடத்தில் நீங்கள் என்ன கெட்ட பழக்கத்தை விடப் போறீங்கள்? என்ன புதுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க போறீங்கள்?

நான் இந்த வருடத்தில் இருந்து தண்ணீர் அடிக்க மாட்டேன் என்றும்,சிகரெட் குடிக்க மாட்டேன் என்றும் அத்தோடு நல்லாய் காசு சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுத்து உள்ளேன்...அதே மாதிரி சில யாழ் கள உறுப்பினர்கள் சிலதை செய்ய வேண்டும் என்றும்,சிலதை செய்யக் கூடாது என்றும் நான் கற்பனை செய்து உள்ளேன்.

முதலில் எப்ப பார்த்தாலும் பெண்களை கேவலமாய் எழுதியும் தற்போது அதை கை விட்டு விட்டு[தயவு செய்து தொட‌ர‌க் கூடாது] புலம் பெயர் அகதிகளை கேவலமாய் எழுதும் தம்பி நெடுக்ஸ் இந்த வருடமாவது கல்யாணத்தை கட்டி செட்டிலாக வேணும் :unsure: அப்படி செட்டிலானால் ஆவாது மற்றவரை மட்டும் தட்டும் பழக்கத்தை என்ட‌ தம்பி விட்டுடுவான்[ர்]என்ட‌ நம்பிக்கை தான்.

நம்மட‌ குமார‌சாமி அண்ணா இனி மேல் கள்ளுக் கொட்டகைக்குப் போறதை விட்டு விட்டு பப்புக்கு[pub] போக வேண்டும் :( அத்தோடு பரிமளத்தையும் மறக்க வேண்டும்...நிழலிக்கு இந்த வருட‌மும் ஒர் ஆம்பிள்ளை பிள்ளை பிறக்க வேண்டும் அத்தோடு மட்டுஸ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் :)

விசுகு அண்ணாவுக்கு இந்த வருட‌ம் வியாபாராம் பெருக வேண்டும்.வரும் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்...புர‌ட்சி இனி மேல் திண்ணையில் வந்து குந்தக் கூடாது :) ...கறுப்பி மாமிச‌ம் சாப்பிட‌ பழக வேண்டும்.இல்லா விட்டால் குளிர் காலத்தில் வருத்தம் வரும்.

சுஜி இந்த வருட‌த்தில் இருந்தாவது ஊர்ப் புதினம் பகுதியில் அர‌சியல் எழுத வேண்டும்...சகாரா அக்கா இலக்கிய துறையில் பெரியதோர் இட‌த்தினைப் பிடித்த பின் எனது வெற்றிக்கு கார‌ணம் யாழ் களமும் ர‌தியும் என சொல்ல வேண்டும் :D ...நிலா அக்கா இனி மேல் கதை மட்டும் எழுதாமல் கவிதையும் எழுத வேண்டும்.

இசைக் கலைஞன் இனிமேல் லண்ட‌ன் வந்தால் லண்டன் வாழ் யாழ் கள உறுப்பினர் கையாலே அடி வாங்காமல் திரும்பிப் போகக் கூடாது :unsure: ...கலைஞன் லண்ட‌ன் வந்தால் என்னை சந்திக்காமல் போகக் கூடாது[நான் ஒன்றும் பிடித்து திண்ண மாட்டேன்.] வீட்டில சமைக்கும் ஆண்கள் மட்டுமே இனி மேல் சமையல் செய்முறை கொடுக்க வேண்டும்.

இந்த வருட‌த்தில் யாழில் யாரையாவது நான் என் எழுத்துகள் மூலம் மனம் நோக வைத்திருந்தால் என்னை மன்னிக்கவும்.நான் கதை எழுத வெளிக்கிட‌ ஒழுங்காய் வச‌னமே எழுத தெரியாது நீயெல்லாம் கதை எழுத வெளிக்கிட்டாய் என என்னை மெம் மேலும் எழுத வைத்த யாழ் கள உறவிற்கும்[இதைக் கண்டு எல்லாம் ர‌தி அசர‌ மாட்டாள்.]...என்னோடு தானாகவே முதல் முதலில் தனி மட‌ல் மூலம் தொட‌ர்பு கொண்டு பிறகு ஓர் சிறு பிர‌ச்ச‌னை கார‌ணமாக தனி மட‌ல் மூலம் தொட‌ர்பு கொள்ளாமல் விட்ட உறவுக்கும்,..என்னுடைய கருத்தையும்,ஆக்கங்களை வேலை மினக் கெட்டு வாசித்து பதில் எழுதும் உறவுகளுக்கும்,என்னுடைய ஆக்கங்களையும்,கருத்தையும் வெறுக்கும் அனைவருக்கும்,யாழ் களத்தை பார்க்கும் வாச‌கர்களுக்கும்,நிர்வாகி மோகன் அண்ணாவுக்கும்,மட்டுறுத்தினர்கள் அனைவருக்கும்,யாழ் கள உறுப்பினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

பி கு:இந்த பதிவு முற்று முழுதாக நகைச்சுவை.யாருடைய மனதையாவது இது புண் படுத்தி இருந்தால் தயவு செய்து ர‌தியை மன்னிக்கவும்.

இந்த வருடமாவது கல்யாணம் கட்டி செட்டில் ஆக வாழ்த்துக்கள் ரதி... ! அதோடை புதுவருட வாழ்த்துக்களும்... :)

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவி

நானும் ஏதோ பெயருக்கேற்ற ஆளாய் இருக்கும் என்று நினைத்தேன்.

இது என்னடா சந்தியில் நிற்கிற ஆளாய் இருக்கு

எதற்கும் புது வருட வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் என்ரை இனிய ஆங்கிலபுதுவருட வாழ்த்துக்கள். எல்லாரும் நோய்நொடியில்லாமல் சுகமே வாழவேண்டும்.

அடபாவி

நானும் ஏதோ பெயருக்கேற்ற ஆளாய் இருக்கும் என்று நினைத்தேன்.

இது என்னடா சந்தியில் நிற்கிற ஆளாய் இருக்கு

எதற்கும் புது வருட வாழ்த்துக்கள்.

ஈழப்ரியன் அண்ணா பெண்கள் கூட தண்ணி அடிப்பார்களாம்...

ரதி இந்த வருடமாவது எவனையாவது கூட்டிக்கொண்டு ஓடுங்கள்.. :D ... என்னை மறக்காமல் கல்யாணத்துக்கு கூப்பிடுங்கள்... :(:)

2011 முதல் ஜோக் என்னை அரசியல் எழுதச்சொன்னதுதான்... என்னையும் தண்ணி அடிக்க வரச்சொல்லி கூப்பிட்டுருந்தால் நானும் உங்களோடு வந்து தண்ணி அடித்திருப்பேன்... :)

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவி

நானும் ஏதோ பெயருக்கேற்ற ஆளாய் இருக்கும் என்று நினைத்தேன்.

இது என்னடா சந்தியில் நிற்கிற ஆளாய் இருக்கு

இப்படியா?

0511-0810-0602-1319_Cartoon_of_a_Fat_Lady_Shopping_clipart_image.jpg

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

சகோதரி தங்களின் பேராசை ஈடேற வாழ்த்துக்கள்!! :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் கொள்கை இல்லாமல் வாழ்பவர்கள் தான் இப்படி புது வருசம்.. தீபாவளி... பொங்கல் என்று உறுதி பூணுறது. நமக்கெல்லாம் உதுகள் அவசியமில்லை என்று நினைக்கிறம்.

நிஜத்தைப் பேசனும்.. கதைக்கனும்.. பகிரனும்.. என்ற கொள்கை எப்போதும் எம்மோடு இருக்கும். அதை எல்லாம் எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. தெரிஞ்சுதா அக்கா. :)

பெண்களோ அகதிகள் என்ற போர்வையில் நுழைந்துவிட்டு வெளிநாட்டு விசாவைப் பெறவும் பெற்ற பின்னும் சொந்த தேசத்தைக் காட்டிக் கொடுத்து தப்புப் பண்ணினா தப்பென்று சொல்லுறதற்கு பின்னிற்க மாட்டம். தப்பை நியாயப்படுத்த அவர்கள் முனையலாம். அது அவர்களின் பிரச்சனை. அதற்காக தப்பு இல்லை என்று ஆகிடாது. நாம் அவற்றிற்காக எமது நியாயத்தின் பால் நிற்கக் கூடிய நிலைப்பாடுகளை இழக்கனும் என்ற அவசியமும் கிடையாது.

இன்றைய நவீன உயிரியல்.. அறிவியல் உலகில்.. திருமணம்... ஏன் செய்யனும். அது சுத்த வேஸ்டு. திருமணம் செய்யுறவங்க என்னைப் பொறுத்தவரை முட்டாள்கள். மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினம்.. திருமணம் செய்து கிட்டு.. வாழுது..????! திருமணம் மனித அடக்குமுறை சமூகக் கட்டமைப்பின் ஒரு வடிவம். :D:)

Edited by nedukkalapoovan

.

மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினம்.. திருமணம் செய்து கிட்டு.. வாழுது..????!

article-0-028523B500000578-29_233x423.jpg

article-0-0285255000000578-835_468x672.jpg

manmarrieddog.png

:)

  • கருத்துக்கள உறவுகள்

article-0-028523B500000578-29_233x423.jpg

article-0-0285255000000578-835_468x672.jpg

manmarrieddog.png

:)

இதெல்லாம் மனிசங்க தங்கட திருமண அடக்குமுறை தனத்தை மற்றைய உயிரினங்கள் மீது பரீட்சித்துப் பார்த்த நிகழ்வுகள். அவை இவற்றுக்கு அடங்கியதாக வரலாறில்லை..! :D:)

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கும் புத்தம் புது வருட வாழ்த்துகள்.

சமைத்து தந்தால் சாப்பிடுவேன் என்று மட்டும் சொல்லவே மாட்டேன்.

கறுப்பிக்கு சமைத்துக் கொடுக்க கசக்குமா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ரதி பேராசைதான்

என்னதான் இருந்தாலும் நெடுக்குத் தம்பிக்கு ஆகாததை காவமாட்டார். அவரின் தலைவிதி யந்திரத்தனமாக வாழ்ந்து வாழ்ந்து அதனோடு இசைவாக்கம் பெற்றுவிட்டார் அந்த ரோபோவைக்கட்டி எந்தப் பெண் மகிழ முடியும்? :(

கு.சா கள்ளுக்கொட்டிலையும் பரிமளத்தையும் மறந்தால் :lol: மனிதன் மரத்துப்போடுவார். மனுசன் உயிர் வாழுவதே இந்த இரண்டோடும்தான்

நிழலிக்கு ஆணும் பெண்ணும் பிறந்தாயிற்று இப்பவே மனைவியை அணுக முடியவில்லை என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார் அதற்குள் இன்னொன்றா? சான்ஸே இல்லை மட்டூஸ் பதவியை இராஜினாமா செய்வது சரியான கடினம் மட்டூஸாக இருக்கும்போது எத்தனை பேரை வெட்டியிருப்பார். தாக்குதல்களில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லை மட்டூஸ் பதவியைப்' பாதுகாக்க வேண்டியதுதான் :D

விசுகு வியாபாரத்தை பெருக்கிறதாவது எப்ப பார்த்தாலும் திண்ணைத் தூணுக்கு முட்டுக் கொடுக்க ஆள் வேணும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர் வேறு, அத்தோடு அவர் உதவி செய்வார் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுந்தான் ரதிக்கு நோ சான்ஸ் :D

புரட்சி திண்ணையில குந்தக்கூடாதோ :lol: ..... இதற்கு அதிக வோட்டு விழும் ஆனா அவர் திண்ணைக்கு வராவிட்டால் திண்ணை காலியாகாதே. :unsure:

கறுப்பி மாமிசம் உண்டால் சமையல் குறிப்பு எழுதும் இடத்தில் மரக்கறி உணவுபற்றி எழுதாமல் விட்டுவிடுவார்கள் இது தேவையா? :D

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்கள் இப்ப தாராளமாக தண்ணி அடியுங்கோ கலியானம் கட்டிய பின் உங்களுக்கும் சேர்த்து அவர் அடிப்பார் :D

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி அரசியல் எழுத வெளிக்கிட்டால் எப்படி எழுதுவார் தெரியுமா? அரிசியில் எத்தனை கல் என்பார் திகைத்துப்போய் மற்றவர்கள் நின்றால் இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று சொல்லிக்கொண்டே போவார். :unsure:

என்னை இலக்கியத்தில் பெரீ...யதோர் இடம் பிடிக்கவேண்டும் என்று..... நடக்கிற காரியமா? முதுகு சொறியவும், வால் பிடிக்கவும் தெரியாது கடினம் மவளே..... யாழில எழுதி எழுதி காவாலி, கிறுக்கு, தறதலை :lol: என்று நட்பு வட்டங்களுக்குள் செல்லமாக அழைக்கிறார்கள்... இந்த இட்சணத்தில் ரதிக்கு என்ன பெருமை கிடைக்கும்? ஒருவேளை தம் அடிக்கவும், தண்ணி அடிக்கவும் காரணம் ரதி என்று அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நிலாமதி அக்கா என்ற பேரை வைத்துக் கொண்டே அவரை ரீன்ஏஜ்ஜராக கதைக்க எத்தனிக்கிற கூட்டத்திற்கு அவர் கவிதை எழுதினால் சொல்லவேண்டுமோ? இயல்பாகவே எழுத்துக்களில் குழந்தைத்தனம்....!!! :D

இசைக்கு உதை ஆராவது செய்தால் நான் வரவேற்பேன் அந்தத் துணிவு யாருக்கு இருக்கிறது? ரதியிடமே இதை எதிர்பார்க்கிறேன். :lol:

ஏற்கனவே கலைஞன் உங்களையிட்டு உதறிக் கொண்டிருக்கிறாராம். தான் ரதியைச் சந்தித்தால் கெட்டுக் குட்டிச்சுவராகிவிடுவேன் என்று புலம்பிக்கொண்டு வேறு திரிகிறாராம் இதுவம் நடக்கிற காரியமாத் தெரியேல்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொண்ணின் எழுத்தைப் பார்த்தால்

கீரிமலை வியாளியின் ஞாபகந் தான் வருகுது.

ஒரு வேளை பேத்தியாயிருக்குமோ என்னவோ.

...நிழலிக்கு இந்த வருட‌மும் ஒர் ஆம்பிள்ளை பிள்ளை பிறக்க வேண்டும் அத்தோடு மட்டுஸ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் :D

அடிப் பாவி... ஏற்கனவே பிறந்த குட்டிப் பிசாசுகள் இரண்டால மனிசிக்கு கிட்ட நெருங்க முடியுது இல்லை. நானும் மனிசியும் நித்திரை ஆகிட்டமோ என்று பார்த்து check பண்ணி விட்டு தான் இரண்டும் நித்திரை கொள்ளுதுகள்...உதுக்குள மூன்றாவதா..

மட்டுபதவியில் இருந்து விலக முதல் ரதியை 10 நாளுக்காவது தடை பண்ணி விட்டுத் தான் விலகுவான் இந்த நிழலி ...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொண்ணின் எழுத்தைப் பார்த்தால்

கீரிமலை வியாளியின் ஞாபகந் தான் வருகுது.

ஒரு வேளை பேத்தியாயிருக்குமோ என்னவோ.

சாத்திரிதானே வியாளியைப் பற்றி முந்தி எழுதினவர். அவர் வந்து சந்தேகத்தைத் தீர்த்து வைத்தால் போச்சு!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்ரியன் அண்ணா பெண்கள் கூட தண்ணி அடிப்பார்களாம்...

ரதி இந்த வருடமாவது எவனையாவது கூட்டிக்கொண்டு ஓடுங்கள்.. :lol: ... என்னை மறக்காமல் கல்யாணத்துக்கு கூப்பிடுங்கள்... :(:unsure:

2011 முதல் ஜோக் என்னை அரசியல் எழுதச்சொன்னதுதான்... என்னையும் தண்ணி அடிக்க வரச்சொல்லி கூப்பிட்டுருந்தால் நானும் உங்களோடு வந்து தண்ணி அடித்திருப்பேன்... :lol:

சுஜி நீங்கள் எழுதியதை தான் நான் உங்களுக்கு எழுதலாம் என நினைத்தேன் ஆனால் நீங்கள் தப்பாய் நினைப்பீங்களோ என்று எழுதாமல் விட்டு விட்டேன்.ஒரு நாளைக்கு வாங்கோ சேர்ந்து தண்ணியடிப்போம்...இதைத் தவிர மேலும் கொஞ்சப் பேரைப் பற்றி நினைத்தனான் ஆனால் பயத்தில் எழுதாமல் விட்டு விட்டேன்.

தயா அண்ணா இனி மேல் புலிக்கு ஆதரவாய் எழுதவே கூடாது[நடக்கிற காரியமா இது]...அர்ஜீன் அண்ணா இனி எப்பவுமே புலிக்கு ஆதரவாய் மட்டுமே கதைக்க வேண்டும்[நடந்தாலும் நடக்கும்]...சாத்திரி அண்ணா யாழில் இருந்து ஆக்கங்களை திருடி ஒரு பேப்பரில் போடக் கூடாது :D [ஒரு பேப்பருக்கு எழுத ஆட்கள் இல்லையா என்ன?]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிப் பாவி... ஏற்கனவே பிறந்த குட்டிப் பிசாசுகள் இரண்டால மனிசிக்கு கிட்ட நெருங்க முடியுது இல்லை. நானும் மனிசியும் நித்திரை ஆகிட்டமோ என்று பார்த்து check பண்ணி விட்டு தான் இரண்டும் நித்திரை கொள்ளுதுகள்...உதுக்குள மூன்றாவதா..

மட்டுபதவியில் இருந்து விலக முதல் ரதியை 10 நாளுக்காவது தடை பண்ணி விட்டுத் தான் விலகுவான் இந்த நிழலி ...

தம்பியர்?இரண்டு செல்வத்தை வைச்சுக்கொண்டு என்ன பெரிசாய் பினாத்திறியள்? ஆ

ஒருக்கால் நினச்சு பாருங்கோ எங்கடையள் ஊரிலை எவ்வளவு கரைச்சல் பட்டிருப்பினம்?

சிலநேரம் வீட்டு விறாந்தையிலை பெரியக்கா சின்னக்கா மூத்தண்ணை சின்னண்ணை பெரிய அத்தான் சின்ன அத்தான் அங்காலை அவையின்ரை குஞ்சுகுருமன்கள் கும்மாளமடிக்க அதுக்குள்ளை நேரகாலமே இல்லாமல் தேவாரம் திருவாசகம் படிக்கிற இரண்டு ஆகப்பழசுகள் எண்டு எல்லாமே ஒண்டடிமண்டடியாய் குத்தியாட்டம் போட?

அந்த...அவ்வளவு...சிரமங்களுக்குள்ளையும்.....முதலிரவையும் நடத்தி....நாலைஞ்சையும் பெத்திருக்கினமெண்டால் லேசுப்பட்ட வேலையே?

கையோடை கையாய் இன்னுமொரு விசயத்தையும் சொல்லுறன்....நீங்கள் மட்டுறுத்தினர் பதவியிலை இருந்து விலகேக்கை என்ரை பேரை சிபாரிசு செய்யவும்.அங்கை ஊரிலையும் சிபாரிசு இல்லாமல் ஒண்டும் செய்யேலாது :D

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ரதி சொன்னது நடக்கலாம் ஏனெனில் மனிதன் ஒரு சூழ்நிலைவிலங்கு அதற்கேற்ப மாறிவிடுவான்.

இன்று அதிகாலை 6 மணிக்கு கரே ராமா கரே கிருஸ்ணா கோவிலுக்கு போனேன்.கோயிலுக்கே போகாத நான் இன்று எப்படியோ மனைவியின் நண்பி மனைவியை கட்டாயம் ஒருக்கா வந்துபாருங்கோ என் கேட்க நானும் போட்டுவந்தேன்.

எதுவும் நடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்..! :D

எனக்கு ரவுண்டு கட்டி அடிக்க எண்டே ஒரு குறூப் அலையுது..! ஆனால் இதில எல்லாம் சிக்கமாட்டான் இந்த வெள்ளிங்கிரி..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

புர‌ட்சி இனி மேல் திண்ணையில் வந்து குந்தக் கூடாது :)

புரட்சி திண்ணையில குந்தக்கூடாதோ :lol: ..... இதற்கு அதிக வோட்டு விழும் ஆனா அவர் திண்ணைக்கு வராவிட்டால் திண்ணை காலியாகாதே. :unsure:

0002014F.gif00020063.gif

  • கருத்துக்கள உறவுகள்

ரண்டு நாளாக் பெருநாள் கொண்டாட்டத்தில இங்கால் பக்கம் வரவிவில்லை . என்ன எல்லாம் நடக்குது எனக்கு கதை( மாதிரி )ரண்டு கிறுக்க தான் தெரியும் நல்ல கவிதை எல்லாம் டூ மச்............ரதி ( வர்மன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.