Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது.

logo.png 06.01.2010

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக நேசக்கரம் அமைப்பின் ஊடாக உதவிய அனைத்து உள்ளங்களிற்கும் வணக்கம்.

நேசக்கரம் அமைப்பானது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக யாழ் இணையத்தில் இணைந்திருந்த சில உறுப்பினர்களால் நட்பு அடிப்படையில் சில வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அந்த அமைப்பனூடாக புலம்பெயர் மக்களின் உதவிகள் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி பாதிக்கப்பட்ட மக்களிற்கு நேரடியாகக் கிடைக்க வழி செய்ததுடன் உதவிகள் அனைத்தும் மக்களைச் சென்றடைகின்றன என்பதும் உறுதிப்படுத்தபட்டும் வருகின்றது.

கடந்த 2009 மே 19ம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் நேசக்கரம் அமைப்பினை தொடங்கிய பலரும் மனச்சோர்வு வேலைப்பழு என விலகிச்சென்ற போதும், மனம் தளராது சாந்தி ரமேஸ் வவுனியன் மற்றும் சிறி ஆகியோரே நேசக்கரம் அமைப்பின் இயக்கம் நின்று போகாமல் அதனூடன சேவையை தொடர்ந்தனர். நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் பின்னர் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள், கணவர்களை இழந்த பெண்கள், கல்வியை இழந்த மாணவர்கள் காயமடைந்தவர்கள் என எங்கள் உறவுகளின் தேவைகள் பெரும் பூதாகாரமாய் வடிவெடுத்து நின்றது. அதன்காரணமாக நேசக்கரத்தின் வேலைத்திட்டங்களையும் விரிவாக்க வேண்டிய தேவை எமக்கிருந்தது.தங்கள் பெயர் சொல்ல விரும்பாத சில நல்ல உள்ளம் படைத்த உறவுகளின் உதவிகளுடன் நாமும் காலத்தின் தேவைகளையறிந்து இன்றைய உலகின் அனைத்து நவீன வசதிகளையும் பயன்படுத்தி வானொலி .பத்திரிகைகள் இணையத்தளங்கள் மின்னஞ்சல் என சகல வழிகளிலும் எமது மக்களின் தேவைகளை வெளிக்கொணர்ந்து கடந்த இரண்டு வருடத்தில் பெருமளவான உதவிகளை புலம்பெயர் மக்களின் உதவிகளுடன் செய்து முடித்தோம்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் இனி புலம்பெயர் மக்களிடம் உதவியென்றே போகமுடியாது போனாலும் எதுவும் தரமாட்டார்கள் என்கிற ஒரு பொதுவான கருத்து நிலவிய காலத்திலும் அதனையே ஆலோசனைகளாகப் பலர் எம்மிடம் சொல்லிய போதும் இல்லை மக்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் சரியான கணக்கு ஆதாரங்களுடன் சென்றால் நிச்சயமாக உதவுவார்கள் என்று அதனையே ஒரு சவாலாக நினைத்து எங்கள் வேலைத்திட்டங்களை வடிவமைத்தோம். நாங்கள் நினைத்தது போலவே உடனுக்குடன் உதவிகளும் வந்து சேர்ந்தது. உதவியவர்களும் நேசக்கரத்தினை பாராட்டி திருப்திபட்டுக் கொண்டார்கள். ஆனால் நேசக்கரத்தின் வேகமான செயற்பாடுகளும் அதன் சேவையின் பிரபலமும் இலங்கையில் பல அரசியல் வாதிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியது. சிலர் தங்களுடன் இணைந்து இயங்குமாறு அழைப்பு விடுத்தனர். சிலர் எங்கள் உதவிகளை பெற்று மக்களிடம் வினியோகித்து தங்கள் அரசியல் இலாபம் பெற நினைத்தனர். சிலர் மிரட்டினார்கள்.

ஆனால் நேசக்கரம் அமைப்பானது எவ்வித அரசியல் சாயமும் பூசிக்கொள்வதில்லையென்பதில் உறுதியாக நின்றது. இவை அனைத்தையும் சமாளித்தும் எதிர்த்தும் எங்கள் வேலைத்திட்டங்களை முடிந்தவரை முன்னெடுப்பது முடியாத நிலை வரும்பொழுது நிறுத்தி விடுவது என முடிவெடுத்திருந்தோம். எனவே அந்த முடிவினை எடுக்கும் நேரம் வந்து விட்டது. காரணம் எமது அமைப்பினை முடக்குவதற்கான அல்லது அதனை பறித்தெடுப்பதற்கான தொடர்ச்சியான அழுத்தங்கள்.தொடர்ச்சியான தொலைபேசி மிரட்டல்கள் என்று கூறிக்கொண்டே செல்லலாம்.

நேசக்கரம் அமைப்பினை இயக்குகின்ற சாந்தி ரமேஸ் வவுனியன் மற்றும் சிறி ஆகியோரிற்கு எவ்வித அரசியல் பலமோ பணபலமோ ஆள்பலமோ இல்லாதவர்கள். வெறும் மனோபலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வளவு நாட்களும் முட்டி மோதி பல உதவித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் தொடர்ந்தும் நாங்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்வையும் கவனித்தபடி மிகப்பெரிய அரசியல் பலங்கள் பிரபலங்களுடனும் மோதிக்கொண்டு எமது சேவைகளை தொடர முடியாத நிலையில் நேசக்கரத்தின் செயற்பாடுகளை நிறுத்துவது என்கிற மனவருத்தத்திற்குரிய முடிவினை எடுத்துள்ளோம்.

நேசக்கரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களிற்கு தொடர்ந்தும் உறவுகள் உதவுவீர்கள் என்கிற நம்பிக்கையுடனும். வேறு ஏதோ ஒரு வடிவத்தில் அந்த உதவிகள் போய்சேரவேண்டும் என்கிற ஆதங்கங்களோடும் இதுவரை காலமும் நேசக்கரத்துடன் கைகோர்த்து நின்ற அனைத்து உறவுகளிற்கும் எங்கள் நன்றிகளையும் வணக்கங்களை கூறிக்கொண்டு நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது.

நன்றி வணக்கம்.

இங்ஙனம் நேசக்கரம் நிருவாகம்.

Edited by sathiri

மிக மிக துயரமான முடிவு. வெறுமனே காசை மட்டும் அனுப்பி கொண்டு எந்தவித சரீர உதவிகளையும் செய்யாத நான், முடிவை பரிசீலிக்கவும் என்று கேட்க முடியாது. இவ்வளவு நாளும் நேசக்கரம் மூலம் உதவிகள் சென்றடைய உழைத்த அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலைதரும் விடயம். :(

சாந்தியின் சில எழுத்துக்களில் மனக்கசப்பு ஏற்பட்டதுதான்! ஆனால் நேசக்கரத்தின் சேவையில் எவ்வித பிழையும் யாரும் கண்டு பிடிக்க முடியாது! தயவு செய்து தொடருங்கள் ... நாருரிக்கும் பணிதான் ... செய்தே ஆக வேண்டும்!

... என் உதவி உரியவர்களுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் ...

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஆயிரம் மக்களும் துன்பத்தில் கிடந்து கத்திய போது உதவாத அரசியல்வாதிகளுக்கு பயந்து நேசக்கரத்தின் செயற்பாட்டை நிறுத்துவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் அல்ல. நேசக்கரம் தனித்தியங்க முடியாத சூழலில் இதய சுத்தியோடு மக்கள் பணியாற்றும் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு அமைப்புக்களோடு கூட்டிணைந்து தனது தனித் தன்மையை இழக்காது செயற்படலாம் தானே.

ஒரு மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்பாக நேசக்கரம் வளர்வதில் ஆரம்பம் தொட்டு பங்காற்றி வருபவர்கள் தான் சாந்தி அக்காவும் சாத்திரி அண்ணனும். சில கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது ஒரு சமூகத் தொண்டார்வ நிறுவனத்தில் சகஜம். அதை எல்லாம் பெரிது படுத்தாது.. ஒரளவு நல்ல நிர்வாகத் தலைமையை கொண்டிருக்கும் நேசக்கரம் ஏன் மக்களுக்காக தொடர்ந்தும் பயணிக்கக்கூடாது.

ஒருவேளை நேசக்கர நிர்வாக தலைமைகளுக்கு அவர்கள் செய்யும் சேவைக்கு பரிசாக உயிர் அச்சுறுத்தல் என்றால் அவர்கள் அது தொடர்பில் பதிவு செய்துள்ள நாட்டில் உள்ள பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்து பாதுகாப்பை தேடிக் கொள்வது அவசியம். மக்களுக்காக தொண்டு செய்வது அவசியம். அதை விட அவசியம் முன் வந்து தொண்டு செய்யும் தொண்டர்கள் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது.

எதுஎப்படியோ நேசக்கரத்தின் எதிர்காலம் தற்போதைய நிர்வகிப்பாளர்களின் கையில் என்பதால் அவர்கள் சூழல் காரணிகள் அடிப்படையில் எடுக்கும் முடிவையே இறுதி முடிவாகக் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கவலை தரும் விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது சக்திக்கு முடிந்த அளவில் ஆவது, நிர்கதிக்குள்ளான எமது மக்களிற்கு தோள் கொடுக்க வேண்டியது காலத்தின் கடமை.

அதை இதுவரை நேசக்கரம் செய்து வந்தமை போற்றுதர்கு உரியது. உங்களுக்கு முன்னால் இருக்கும் பிரச்சினையின் அளவுதெரியாமல் சொல்லப்படும் எமது ஆலோசனை பொருத்தமானது அல்ல, இருப்பினும் உதவி சென்றடைவதற்கான மாற்று வழிகளையாவது கண்டறியலாம் என்பதே எனது கருத்தாகும். வருமானத்தை சொந்தமாக மேற்கொள்ளும் வசதி இல்லா குடும்பங்களை இனங்கண்டு, தத்தெடுக்கும் வகையில் உதவும் கரங்களிடம் அவற்றை ஒப்படைக்கலாம். இப்படி வேறு வகையாக வழிகளையாவது தேடவேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகின்றது.

மிகமிக கவலையான முடிவு....ஏமாற்றுப்பேர்வளிகளிற்கும் ஏய்த்துப்பிழைப்பவர்க்கும் தான் இந்த உலகில் இடம்போல...எனக்குதெரிந்த பலர் நேசக்கரத்தினூடாக பலனடைந்துள்ளனர்.. குடுத்தகாசுக்கு என்னாச்சுன்னு யு.என்.எச்.ஆரிலயே கேட்டுத்தெரிஞ்சுக்க முடியாமல் இருக்க 2 பவுண்டு குடுத்தாலும் என்ற காசுக்கு என்னாச்சுன்னு நெஞ்ச நிமித்துக்கொண்டு கேட்டு வெளிப்படையாக அறிந்து கொள்ளக்கூடிய ஒளிவு மறைவற்ற வெளிப்படையான அமைப்பு...உங்களிடம் இருந்து பலதொண்டு நிறுவனங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்..அற்புதமாக கொண்டுநடத்தினீர்கள்... ஆற்ற கொள்ளிக்கண் பட்டுதோ..அந்த நாதாரி நாசமாய்ப்போக......

Edited by நெருப்பு நீலமேகம்

trt tamil olli நேரடி ஒளிபரப்பின் பின் தான் இந்த முடிவா ???

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் ஆரம்ப காலத்தில் இணைந்து செயல்பட்டவர்களில் நானும் ஒருவன், தவிர்க்கமுடியாத வெளிப்படையாக குறிப்பிட முடியாத காரனத்தினால் ஒதுங்கியிருப்பினும் நேசக்கரத்தின் செயல்பாட்டை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.

திடீரென இப்படியான அதாவது செயல்பாட்டை நிறுத்தும் செய்தி மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கின்றது.

நேசக்கர நிர்வாகிகள், தொண்டர்கள், அதன் மீது நம்பிக்கை வைத்து உதவிய/வாழ்த்திய/ஆதரவளித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்.

உங்கள் அனைவரினதும் பணி வேறு வழிகளில் தொடரும் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா,சாத்திரி அண்ணா உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யுங்கள். நேர்மையாக செயற்பட்ட ,செயற்படும் நேசக்கரம் யாருக்கும் அடிபணியக்கூடாது என்பது தான் என்னை போன்றவர்களின் அவா.நன்றி.

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்தெழுதியவர்களின் ஆதரவிற்கும் யாழ்கள பொறுப்பளர் மோகனிற்கும் எமது சிறப்பான நன்றிகள் . மோகன் அவர்கள் பலதடைவை யாழ் இணையத்தினை நிறுத்த முடிவு செய்தகாலங்களிலெல்லாம் நான் அவரை தொடர்பு கொண்டு தயவு செய்து யாழை நிறுத்தி விடாதீர்கள் அதனால் நேசக்கரம் உதவிகளும் பாதிப்படையும் என கேட்டுக்கொண்டிருந்தோன்.அவரிற்கும் எம்மைப்போலவே பண விரயம் நேர விரயங்கள் பலபிரச்சனைகள் இருக்கின்றது. ஆனாலும் யாழ் இணையத்தினூடாக நேசக்கரம் உதவிகளை பெற்று பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்குவதற்கு வழிசமைத்தவர் மோகனும் .அவரிற்கும் நன்றிகள் கூறிக்கொள்வாதோடு நாங்கள் வழைமைபோல சாத்திரி சாந்திரமேசாக யாழில் இருப்போம். ஆனால் நேசக்கரம் நிறுத்தும் முடிவில் மாற்றம் இல்லை நன்றிகள்.

இது மோகனிற்கு சிறப்பான நன்றிகளுடன்

thcomposiz.gif

சாத்திரி உங்கள் முன் உள்ள சவால்களை அறியாமல் கதைப்பது பொருத்தமல்ல.

மிக நேர்த்தியாக செயற்பட்ட உங்கள் முடிவு பயன்பெற்ற மக்களுக்கு பாரிய இழப்பு. இது கவலையானது.

எனினும் உரிய வேளையில் மீண்டும் இயங்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

சாந்தி ரமேஸ், வவுனியன், சிறி மற்றும் ஏனைய உள்ளூர் உறுப்பினர்களுக்கு "அரசியல் பலமோ பணபலமோ ஆள்பலமோ இல்லாதவர்கள்" என்ற எண்ணத்தை விடுங்கள். அவர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல்கள் இருந்தால், தேவையெனின் அவற்றை எதிர்கொள்ள எமது துணை நிச்சயம் உண்டு.

மிகவும் கவலையான செய்தி.

இதுவரைகாலமும் சிறப்பாக நேசக்கரத்தை நடத்திய சாந்தி, சாத்திரியார், மற்றும் நிர்வாகிகள் எல்லோருக்கும் நன்றிகள்.

ஒரு தொண்டர் அமைப்பின் செயற்பாடுகளையே முடங்கப்பண்ணும் கேவலமான செயலை என்னவென்று சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையாய் இருக்கின்றது! என்ன சொல்வதென்று தெரியவில்லை, உங்களின் பாதுகாப்பு மிக முக்கியம்!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தகவலைப்பார்த்ததும்...........

இதற்கு பதில் எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன்.

ஆனால் முடியவில்லை.

காரணம் மிகவும் பொறுப்பற்ற முடிவு.

ஆரம்பத்திலிருந்தே கண்டித்து வந்தேன் அரசியல் பேசவேண்டாம் என்று. அதற்குள் போகவேண்டாம் அது தங்களின் சேவை நோக்கத்தை பாதிக்கும்என்று . அங்குள்ளவர்களுடன் உரசிப்பார்க்கவேண்டாம் என்று.

முடிவு யாருக்கு லாபம். எவருக்கு நன்மையளிக்கும் இத்தீர்மானம்.

நேற்று இரவு 9 மணியளவில் சாத்திரியுடன் தொலைபேசியில் நான் பொறுப்பெடுத்த திட்டம் ஒன்று பற்றி பேசினேன். சாந்தியுடன் கதைத்து செய்வதாக சொல்லிவிட்டு என்னுடன் கதைத்து அரை மணித்தியாலத்தில் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது.

எம்மையும் எமது மக்களுக்கான பொறுப்பையும் மிகவும் கேவலப்படுத்தும் முடிவு இது.

நன்றி வணக்கம் :(

  • கருத்துக்கள உறவுகள்

கவலைக்குரிய விடயம்............. ஏன் இப்படியான சுழல் உருவாக்கப்பட்டது இதற்க்கான காரணங்களை அறிந்து கொள்ளவேண்டும் நான் நீண்ட நாளாகவே நேசக்கரத்திற்க்கு மடல் வரையவேண்டும் நினைத்து இருந்தேன் நேசக்கரத்தின் செயற்பாட்டினை கிழக்கு தமிழீழத்திற்க்கும் விஸ்தரிக்க வேண்டும் என்று பல நாள் அவா............... பாதிக்கப்பட்ட மக்கள் பலபேர் உதவிகள் இல்லை ஒருவேளை சாப்பாட்டிக்கு கூட கஸ்ரம்...................! என் மனம் பொறுப்பதில்லை...ம்...ம்... யாரைத்தான் நோகுவது!

தயவு தங்களின் பணியை மேற்கொள்ளுங்கள்......... அதற்க்கு எவ்வகையான உதவி என்றாலும் செய்ய நான் தயார் வலுவான அரசியல் பலத்தையும் பிரயோகிக்க தயார்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி உங்கள் முன் உள்ள சவால்களை அறியாமல் கதைப்பது பொருத்தமல்ல.

மிக நேர்த்தியாக செயற்பட்ட உங்கள் முடிவு பயன்பெற்ற மக்களுக்கு பாரிய இழப்பு. இது கவலையானது.

எனினும் உரிய வேளையில் மீண்டும் இயங்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

சாந்தி ரமேஸ், வவுனியன், சிறி மற்றும் ஏனைய உள்ளூர் உறுப்பினர்களுக்கு "அரசியல் பலமோ பணபலமோ ஆள்பலமோ இல்லாதவர்கள்" என்ற எண்ணத்தை விடுங்கள். அவர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல்கள் இருந்தால், தேவையெனின் அவற்றை எதிர்கொள்ள எமது துணை நிச்சயம் உண்டு.

ஆசான் நேசக்கரத்திற்கு நீங்களும் சில தொடர்புகளை ஏற்படுத்தித் தந்து பல உதவிகளை செய்திருந்தீர்கள். நன்றிகள் அதே நேரம் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை விரிவாக எழுதுவதனால் இதுவரை காலமும் நேசக்கரத்திற்கு தன்னலமில்லாது உழைத்த தாயகத்தில் வாழும் தொண்டர்களிற்கு சிக்கல்களை தோற்றுவிக்கும்.சில நேரம் தொடர்ந்து உதவிகள் பெறுபவர்களைக்கூட பாதிக்கலாம்.எனவே இன்றைய அரசியல் சூழல் மாற்றமடையும்வரை பொறுத்திருப்பதே நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவலை தரும் விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் ஊடாக நம்பிக்கை தந்து உதவிய அனைவருக்கும் நன்றிகள். உதவிகளை நேரடியாகச் செய்து கொண்டிருப்போர் உங்கள் உதவிகளை இடைநிறுத்தாது வழங்குமாறு அனைவரையும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.

மிக மிக துயரமான முடிவு. வெறுமனே காசை மட்டும் அனுப்பி கொண்டு எந்தவித சரீர உதவிகளையும் செய்யாத நான், முடிவை பரிசீலிக்கவும் என்று கேட்க முடியாது. இவ்வளவு நாளும் நேசக்கரம் மூலம் உதவிகள் சென்றடைய உழைத்த அனைவருக்கும் நன்றிகள்

நிழலி,

நீங்கள் பொறுப்பெடுத்த குழந்தைகளுக்கான உதவியைத் தொடர்ந்து செய்யுங்கோ.

... என் உதவி உரியவர்களுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் ...

நன்றிகள்.

.உண்மையான காரணம் சொல்லாது இதுவும் பூச்சாண்டி வேலையோ?

செய்த சேவையில் திருப்தி ஆனால் விட்டு போகும் காரனNம் சரி இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியும், சாத்திரியாரும் நேசக்கரத்தின் சேவையை நிறுத்தியது கவலையான விடயம். :unsure:

இன்னும் ஒரு சில மாதத்தில் எனது பங்களிப்பையும் செய்வோம் என்று நினைத்திருந்த போது..... இப்படியான செய்தி. :(

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பிரச்சனை உங்களுக்குத்தான் தெரியும்.எது எப்படியோ கவவை தரும் முடிவு.

நான் நேசக்கரத்திற்கு பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. சாத்திரி கேட்ட ஒரு உதவியையும் செய்ய முடியவில்லை என்ற வருத்தமுண்டு. சாத்திரிக்கும் சாந்திக்கும் அவர்களது அயராத முயற்சிகளுக்கும் உழைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.