Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு விரைந்து எட்டக் கூடிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (1)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (3)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (0)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (0)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (1)

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (0)

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா) (0)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி) (0)

கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்சியின் முதல் காதல் கானம்.

கட்சியின் அடுத்த கட்ட கொள்கைகளை வாதவூரன் அண்ணா வெளியிடுவார். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் பிரேரிக்கப்பட்ட ஏக்கமுள்ளோர் கட்சிக்கு தனது ஆதரவைத் தந்த தப்பிலி அவர்கட்கு நன்றி. ஏக்கமுள்ளோர் கட்சி என்பது மிகவும் பொருத்தமாகவே அமைந்திருப்பதில் மகிழ்ச்சி காரணம் பிரேரிக்கப்பட்ட கட்சி அங்கத்தவர்களால் ஆதரவு தராது கோரம் இன்றி தானாகவே கரைந்துவிடுமோ எனும் ஏக்கத்துடன் தனது வாழ்நாளை கடத்துகின்றது.

கட்சியின் கொள்கைகளாக, தற்போதைய உலக ஒழுங்குக்கு ஏற்றாற்போல் அனைத்து அங்கத்தவரும் தாங்கள் கட்சியின் தலைமைப் பதவியை அடையப் போட்டியிடலாம். காலக்கிரமத்தில் யாழ்கள அங்கத்தவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடு ஒன்றிலோ அன்றேல் கனடாவிலோ (வல்வைக்கு செலவு வைக்க ஆயத்தப்படுதிறன் எண்டு யோசிக்கதையுங்கோ) குறித்தவேளையில் சந்திப்பது எனும் நிறைவேறவே முடியாத(?) கொள்கை ஒன்றே ஒன்று மட்டுமே கட்சிக் கொள்கை. தப்பித்தவறி அக்கொள்கை நிறைவேறினால் அடுத்த கணமே கட்சி கலைக்கப்படும். அன்றேல் அதுவும் ஏக்கமாகத் தொடரவிடப்படும். மேலும் யாழ்கள உறவுகளது நெடுநாளைய நியாயமான ஏக்கங்கள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து கொட்டித்தீர்க்க களமமைத்துக் கொடுக்கப்படும்.

சிரிப்போம் சிறப்போமில் முதல் முறையாக ஒரு வெடிச்சிரிப்பு நகைச்சுவை! சீரியஸா பதில் சொல்ல வேண்டிய விடயத்துக்கு சிரிச்சுக்கொண்டே பதில் போட வேண்டி இருக்கு! :)

இன்றுவரை நடந்த எல்லாத்துக்கும்......... இதைவிட வேற உதாரணம் தேவையில்லை! :(

களங்கள் களங்கப்படாமல் இருக்க பார்த்துக் கொள்ளுங்கள்!

வெளிப்படையாகச் சொல்லப் போனால்................ தேவையில்லாத ஒன்று!

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆதரவு யாழ்கள காதலர் கட்சிக்குத் தான்.........

நம்ம குரு ஜீவா ஒரு காதல் கிறுக்கன்...ஆன படியா நான் யாழ் கள காதலர் கச்சில இனைவதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடையிறேன்.........அத்தோடு நின்று விடாமல் காதலர் கச்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வேன் என்று நம்ம கச்சி மேல சத்தியம் செய்து கொள்ளுறேன்

14744_1161364393735_1216585513_30361218_6106034_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சியில் இணைந்து கொண்ட பையனுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொண்டு எமது கட்சியின் கொள்கைகள் சிலவற்றை எடுத்துவிடலாமென்று நினைக்கிறேன்.காதலிக்கும் அனைவருமே எங்கள் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம்.இருபது வயது இளமைக்காதல் தொடக்கம் அறுபது வயது அனுபவ காதல் உள்ளவர்கள் வரைக்கும் சேரலாம்.காதல் பற்றி அனுபவம் இல்லாதவர்களும் சேரலாம் அவர்களுக்கு அண்ணன் ஜீவா தலைமையில் விசேட வகுப்புகள் நடாத்தப்படும்.கன்னியை காதலிப்பவராகிலும் கவிதையை காதலிப்பவராகிலும் அன்னையை காதலிப்பவராகிலும் தந்தையை காதலிப்பவராகிலும் மனைவியை காதலிப்பவராகிலும் மண்ணை காதலிப்பவராகிலும் மக்களை காதலிப்பவராகிலும் அனைவரும் வருக.யாரும் தலைவராகலாம்.காதலின் மகிமையை அனைவருக்கும் புரியவைப்பது,காதலை எதிர்ப்பவர்களை வழிக்கு கொண்டு வருவது,காதலின்மீதான விமர்சனங்களை துடைத்தெறிவது,நெடுக்காலை போவான் அண்ணாவை காதலிக்க வைப்பது போன்றன எமது கட்சியின் பிரதான கொள்கைகள் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியில் எவரும் இன்னமும் சேராமையால், சுயேட்சையாக நிற்கப்போகின்றேன்

நிழலி, கட்சியின் அடிமாட்டு தொண்டனக இணைகிறேன், அதற்கு லஞ்சமாக ஒரு பச்சை போட்டுவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சியில் இணைந்து கொண்ட பையனுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொண்டு எமது கட்சியின் கொள்கைகள் சிலவற்றை எடுத்துவிடலாமென்று நினைக்கிறேன்.காதலிக்கும் அனைவருமே எங்கள் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம்.இருபது வயது இளமைக்காதல் தொடக்கம் அறுபது வயது அனுபவ காதல் உள்ளவர்கள் வரைக்கும் சேரலாம்.காதல் பற்றி அனுபவம் இல்லாதவர்களும் சேரலாம் அவர்களுக்கு அண்ணன் ஜீவா தலைமையில் விசேட வகுப்புகள் நடாத்தப்படும்.கன்னியை காதலிப்பவராகிலும் கவிதையை காதலிப்பவராகிலும் அன்னையை காதலிப்பவராகிலும் தந்தையை காதலிப்பவராகிலும் மனைவியை காதலிப்பவராகிலும் மண்ணை காதலிப்பவராகிலும் மக்களை காதலிப்பவராகிலும் அனைவரும் வருக.யாரும் தலைவராகலாம்.காதலின் மகிமையை அனைவருக்கும் புரியவைப்பது,காதலை எதிர்ப்பவர்களை வழிக்கு கொண்டு வருவது,காதலின்மீதான விமர்சனங்களை துடைத்தெறிவது,நெடுக்காலை போவான் அண்ணாவை காதலிக்க வைப்பது போன்றன எமது கட்சியின் பிரதான கொள்கைகள் ஆகும்.

நன்றி தோழா ,

காதலர் கட்ச்சி சார்பாய் ஒரு பாடல்

http://www.youtube.com/watch?v=N7GHtA4Z-2c

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அக்காவின் படிக்காத மேதைகள் கட்சியில் சேரப் பயமா இருக்கு.. பிறகு படிக்காத பேதைகள் கட்சி ஆகிட்டுதெண்டால்?? :unsure::lol:

எழுஞாயிறின் கட்சியில் ஒரே ஏக்கப் பெருமூச்சா இருக்கு.. வேண்டாமப்பா.. :lol:

கிருபனின் யாழ்கள் உயர்குழாம் கட்சியின் நடவடிக்கைகளே ஒரே அடாவடியா இருக்கு.. அதுவும் வேண்டாம்.. :icon_mrgreen:

யாழ்கள காதலர்கள் கட்சி.. :o இது வில்லங்கமான கட்சி.. வேண்டவே வேண்டாம்.. :lol:

எனக்கு வாத்தியாரின் கட்சிதான் பிடிச்சிருக்கு..! :icon_mrgreen:

யாழ்கள மன்னர்கள் சபை..! ஆகா.. கொள்கையெல்லாம் அந்தமாதிரி இருக்கு..! எல்லோரும் இந்நாட்டு மன்னர் மாதிரி எல்லாருக்கும் பதவி நிச்சயம் இருக்கும்..! :wub:

வாத்தியாருக்குப் பொன்னாடை போர்த்தி கட்சியில் இணைந்துகொள்கிறேன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் இதயத்தின் இதயமே.. :icon_mrgreen:

இங்கு திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்.. மாற்றம் வேண்டி நிற்கும் இந்த முகங்களைப் பார்..! யாழ்கள மன்னர்கள் சபை உனது அவை.. :rolleyes:

தம்பி.. முன்னங்காலை முன்வைத்து வா..! கட்சித்தலைமையை ஏற்க வா..! :wub:

புதிய கட்சி அமைத்திருக்கும் ரதி அவர்களே.. யாழ்கள மன்னர்களுக்கு மட்டுமல்ல.. மன்னிகளுக்குமான கட்சி இது.. :lol: உடனே கட்சியைக் கலைத்துவிட்டு வருக தலைவியே..! கொள்கை பரப்புச் செயலாளர் பதவி காத்திருக்கிறது உங்களுக்காக..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணார். ரெண்டுமே எனது டைப்பா இருப்பதால ஜீவாவின் காதலர் கட்சியா நிழலி அண்ணரின் வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியா எண்டு குழம்ப வேண்டி இருக்கு. கடைசியா வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியில சேர முடிவெடுத்திருக்கிரன். அன்பு யாழ்கள நெஞ்சங்களே, ஒரே ஒரு வாழ்க்கை, அதுவும் ரசித்து ருசித்து வாழ்வதற்கே எனவே எங்களது வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியில் சேருமாறு அன்புடன் அழைக்கிறோம். சிறி அண்ணாவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாது எம்முடன் இணைந்து வாழ்கையை அனுபவிக்க உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அன்பர்களான கோமகன் அண்ணா, விசுகு அண்ணா, சாத்திரி அண்ணா இன்னும் ஜெர்மன் கு.சா அண்ணா, சுவிஸ் சஜீவன் அண்ணா மற்றும் அனைத்து யாழ்கள பெண்கள் ஆண்கள் அனைவரையும் கட்சி இருகரம் விரித்து வரவேற்கிறது. பிரான்சில் இருந்து சேரும் ஒவோருவரையும் கபேக்கு கூட்டிச் செல்வதாக கட்சி செயற்குழு மடத்தில் கதை அடிபடுவதால் உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள். சேரும் மற்றவர்களுக்கும் வாழ்கையை அனுபவித்து வாழும் வகையில் பரிசுகள் வழங்கப்படும்.

ஆ....... எனக்குரிய கட்சியாக ஒண்டையும் காணேல்லை... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை வாழ்வதற்கே ஆதி எனவே பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியில் வந்து இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

sleepymonkeycopy.jpg

பொறப்பா தும்பு

இப்பத்தான்தூக்கத்தால எந்திரிச்சு வாறோமில்லே...

இந்த நெடுக்ஸிற்குப் பொழுதுபோகேல்லையோ.. பொல்லைக்குடுத்திட்டார் சீமான் இனி அடிவாங்கப்போறார்.... பாவம் பயபள்ளைய ஆண்டவனால காப்பாத்த முடியாது ஆனா ஆதியால முடியும் எப்படின்னு யோசிக்கீங்களா? வேற வழி... தோஸ்து அடி வாங்கினா நாம பாத்துக்கின்னு இருக்கமாட்டோம்ல.... நண்பேன்டா.. ஆஆஆ...கனக்க திங்ப் பண்ண வேண்டாம் ஒண்ணுமில்ல தோஸ்துக்கு விழுகிற அடியை ஆதி எப்படி தடுக்கும்னுதானே போகுது உங்க திங்ஸ்... பொத்திந்து பாத்துக்கோங்க... ஆவ்...என்னதான் இருந்தாலும் சத்தமா விடுற கொட்டாவியும் ஒரு சோந்தான்... எதுக்கும்மூஞ்சியைக் கழுவிட்டுவாறேன்...

"வாழ்க்கை வாழ்வதற்கே" என்ற உயரிய கொள்கைகளைக் கொண்ட கட்சியில் முதன் முதலாக இணைந்து கொண்ட உடையாரையும், இரண்டாவதாக இணைந்து கொண்ட தும்பளையானையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்

தன்னைப் போலவே எல்லாரும் வாழவேண்டும் என்ற உயரிய நோக்குடைய உடையாரை கட்சியின் நிதிப் பொறுப்பாளராகவும், வந்தவுடனேயே கொள்கையை விளக்கி தமிழ் சிறிக்கு சவாலாக கூவும் தும்பளையானை கொள்கை பரப்பு செயலாளராகவும் நியமிக்கின்றேன்.

வாழ்வை ரசிக்கும் இரு இளம் புலிக்குட்டிகள் எம் கட்சியில் இணைந்ததை பார்த்து தமிழ் சிறி பதைபதைத்து பக்கத்தில் இருந்த ஆச்சியின் காலை மிதித்து விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன...

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காத மேதைகள் கட்சியில் (ப மே க ) இணையும் ஒவ்வருவருக்கும் கட்சி வேலையை முன்னெடுக்கும் முகமாக ஒரு லேப்டாப் கம்பியுட்டர் இலவசமாக கொடுக்கப்படும்.

எமது கட்சியின் புரட்சிகர முன்னெடுப்புகள் வேறு நாட்டு அமைச்சர்களையும் கவர்ந்திருப்பதால் எமது தொண்டர்களையும் கட்சி அங்கத்தவர்களையும் தமது சொந்த காசிலேயே தமது நாடுகளுக்கு அழைக்கிறார்கள். இப்படி பல நாடுகளுக்கு இலவசமாக செல்லும் பாக்கியம் ப மே க உறுப்பினருக்கு உண்டு என்பதையும் அறிய தருகிறோம்.

எதிர்வரும் எந்த தேர்தலுக்கும் முகம் கொடுக்க கூடிய கட்சியாகவும். இடைத்தேர்தல்களில் எந்த கூட்டும் இன்றி தனியாகவே ஆட்சி அமைக்கும் வல்லமையும் ப மே க விற்கு உண்டு என்பதையும் பெருமை இன்றி சொல்லிகொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சி

கொள்கைகள்:‍ யாழில் காதலிப்போரை ஊக்கப்படுத்துதல்

(சட்டரீதியான பிரச்சனைகளில் எஸ்கேப் ஆகுதல்)

பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தல்

(அப்படி நடித்தல்)

மன்மதர்களாய் கனவில் பறப்பதற்கான பயிற்சிகள்,ஜடியாக்கள் குடுத்தல்..

திண்ணையில் பெண்களுடன் அரட்டை அடிப்பதை தேசியநோக்கமாய் கருதி அதை சட்ட ரீதியாக பதிவு பண்ணுதல்.

காதல் சம்பந்தப்பட்ட கவிதை,கதைகளை எழுதித்தொலைத்தல்.. :rolleyes:

வாசகர்களை காதல் பித்து பிடிக்க வைத்தல்...

காதலில் ஜெயிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிட்டு காசு பார்த்தல் <_<

முக்கியமாக பெண்பெயரில் வந்தாவது ஆண்களை கடுப்பேத்துவது..

பி.கு கட்சி பதிவு செய்தால் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இன்னும் கொள்கைகள் வளரும்.. :icon_mrgreen:

யுத் யுத்தோடு சேர வேண்டும் என்ற நோக்குடனும், எப்படி காதலிப்பது என்பதை அண்ணன் ஜீவாவிடம் இருந்து கற்பதற்காகவும், மிகவும் மகிழ்சியாக என்னை "யாழ்க காதலர் கட்சி"யில் இணைத்து கொள்கிறேன். காதல் கற்றலுக்கு பிறக்டிக்கல் ஒண்டும் கிடையாதோ?

யுத் யுத்தோடு சேர வேண்டும் என்ற நோக்குடனும், எப்படி காதலிப்பது என்பதை அண்ணன் ஜீவாவிடம் இருந்து கற்பதற்காகவும், மிகவும் மகிழ்சியாக என்னை "யாழ்க காதலர் கட்சி"யில் இணைத்து கொள்கிறேன். காதல் கற்றலுக்கு பிறக்டிக்கல் ஒண்டும் கிடையாதோ?

என் கட்சியில் சேராமல் இன்னொரு உறவின் கட்சியில் சேர்ந்துட்டீங்கள் தானே....: இனி ரொரன்டோ பக்கம் வராமலா விடப்போகின்றீர்கள்....ம் ம் ம் ...யாரங்கே

  • கருத்துக்கள உறவுகள்

யுத் யுத்தோடு சேர வேண்டும் என்ற நோக்குடனும், எப்படி காதலிப்பது என்பதை அண்ணன் ஜீவாவிடம் இருந்து கற்பதற்காகவும், மிகவும் மகிழ்சியாக என்னை "யாழ்க காதலர் கட்சி"யில் இணைத்து கொள்கிறேன். காதல் கற்றலுக்கு பிறக்டிக்கல் ஒண்டும் கிடையாதோ?

ச்சா சபேஷ், கொஞ்சத்தில மிஸ் பன்னீடீங்களே. எமது கட்சியில் சேர்பவர்களுக்கு தேவையான விசயங்களில் தியறி, பிராக்டிகல் எண்டு அனுபவம் மிகுந்தவர்களால் கோச்சிங் வகுப்புக்கள் இலவசமாக வழங்கப்படும். அத்துடன் வாழ்கையை வாழ்வாங்கு வாழ முக்கிய டிப்சும் வழங்கப்படும்.

புள்ளி விபரங்களின் படி எமது கட்சிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளதுடன் கனடா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் ஏனைய கட்சி முக்கிய புள்ளிகள் எமது கட்சி வளர்ச்சியை பார்த்து முடியை பிய்த்துக் கொண்டிருப்பதாகவும் எமக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொப்புள் கொடி உறவுகளாகிய புரட்சி, ராஜவன்னியன் என அனைவரையும் எமது கட்சியில் சேர அன்பாக அழைக்கிறோம்.

தும்பளையான்

கொ.ப. செ

"வாழ்க்கை வாழ்வதற்கே"

  • கருத்துக்கள உறவுகள்

என் கட்சியில் சேராமல் இன்னொரு உறவின் கட்சியில் சேர்ந்துட்டீங்கள் தானே....: இனி ரொரன்டோ பக்கம் வராமலா விடப்போகின்றீர்கள்....ம் ம் ம் ...யாரங்கே

நான் யாரோட கட்சி எண்டு பாத்து சேர இல்லை......கட்சி உறுப்பினர்களுக்கு என்ன குடுக்குதெண்டு பார்த்து தான் சேர்ந்தேன்...;)

Edited by Sabesh

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தியறியை வெறியாய் கடைப்பிடிக்கும் ஒருவரின் Blog இது: http://abiprabhu.blogspot.com/

படித்து பாருங்கள்...:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணாவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாது எம்முடன் இணைந்து வாழ்கையை அனுபவிக்க உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

தும்பளையான், எமது கட்சியான ப.மே.க.வின் கொள்கையே...

"சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்" என்பதே, ஆகவே பொய் வாக்குறுதி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. :rolleyes::lol:

எம்மால் வழங்கபட உள்ள இலவச தொலைக்காட்சியும், CD Playerம் இரண்டு மொடலில் உள்ளது.

ப.மே.க. வில் இணைய விரும்புகின்றவர்கள் எந்த மொடல் வேணும் என்று குறிப்பிட்டால்.. மூன்று நாளில் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். :D

கையிருப்பு கொஞ்சம் இருப்பதால்.... உடனடியாக எமது கட்சியில் இணைந்து, இலவச தொலைக்காட்சியை பெற முந்துங்கள். :icon_idea:

4691680.jpg4351073.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வை ரசிக்கும் இரு இளம் புலிக்குட்டிகள் எம் கட்சியில் இணைந்ததை பார்த்து தமிழ் சிறி பதைபதைத்து பக்கத்தில் இருந்த ஆச்சியின் காலை மிதித்து விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன...

எமது கட்சித் தலைவியை.... ஆச்சி என்று சொல்லி கிண்டல் பண்ணிய வா.வா.கட்சியின் தலைவர், நிழலியை கண்டித்து காலை உணவை சாப்பிடாமல்.... உண்ணாவிரதம் இருந்து, கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடைபெற கட்சி தீர்மானித்துள்ளது. அனைவரையும் கட்சித் தலைப்பீடத்துக்கு முன் திரளும்படி அழைக்கின்றோம்.

smiley-bounce016.gifsmiley-bounce021.gifsmiley-bounce016.gif

Edited by தமிழ் சிறி

ஏக்கத்தைப் போக்க வாட்டத்தை நீக்க முதல் சேரும் மூன்று உறுப்பினர்களுக்கு இந்த கார் அன்பளிப்பாக வழங்கப்படும்.

ferrarif4301big.jpg

இதைவிட இணையும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரண்டு பச்சைப் புள்ளிகள் காலக்கிரமத்தில் வழங்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.