Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று எங்கள் தேசியக்கவிஞரின் பிறந்தநாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் அரசே! வாழீ!

getattachmentjh7.jpg

துள்ளிடும் வாலிபத்தால்

துணையற்று வெண்நரையும்,

வில்லிடும் நாவளத்தால்

வேதனை செய்விதியும்,

கள்ளிடும் கவின்பாவால்

காணாமல் போகட்டுமென

தள்ளி நிலம் வாழுகின்ற

தமிழ்ச் சின்னவளின் வாழ்த்து இது.

இருவயது மழலையாக

இதயத்தில் உலவு கவியே!

அறுபது அகவையய்யா

அகத்திலே பதியவில்லை.

ஆண்ட நின் புலமைகென்றால்

ஆயிரம் அகவை தாண்டும்.

பூண்ட மண்கோலத்திற்குள்

புதிர் கூடி நிற்குதய்யா!

தீரப் பெருங்கவியே! தீராத

மாவரம் தந்த துரோணக்குருவே!

ஏறுபோல் நிமிர்ந்த

எழுத்தின் வீரியமே!

கண்ணூறு படுமய்யா!

கரிநாச் சொல்லிது.

காலடி மண்ணெடுத்துக்

கற்பூரச் சுடரிலே போட்டிடுக!

கூர்வடிவேலை ஆளும்

சுந்தரப் பேச்சும்,

வேரடி வீரம் ஊறும்

துல்லிய வீச்சும்,

பாரதைப் பணிய வைக்கும்

பைந்தமிழ் பாட்டும்,

ஊரடி உறவை அணைக்கும்

உயிர்ப்பின் ஊற்றும்,

வேரடித் தலைவி காக்க

வாழ்வாங்கு வாழ வாழீ!

மேதகு தலைவன் அருகே

தோள்தரும் ஞானகுருவாய்,

ஈழவள் விலங்கறுக்கும்

காலமது உரைக்கும் திருவாய்,

ஞாலமோடலையும் உறவின்

உணர்வுகள் இணைக்கும் கருவாய்,

வாழக்குடி ஈழம் வரவே

வந்தணைக்கும் அன்பின் செறிவாய்

காலநதி கடந்தும் வாழும்

கவிதையின் அரசே வாழீ!

கவிஞர் பற்றி நீங்கள் அறிந்தவற்றை இன்றைய அவரின் பிறந்ததினத்திலே இணைத்து எங்கள் தேசியக் கவிஞரை மேன்மை செய்வோம்... :rolleyes:

Edited by valvaizagara

  • Replies 56
  • Views 8.4k
  • Created
  • Last Reply

ஒரு ஒளிவீச்ச்சில் போராளிகளுடன் எமது ஆஸ்தான கவிஞர் கவிதை முழக்கம் செய்தது நினைவில் பதிந்த ஒன்று.

ஆண்களும் பெண்களுமாக பலவேறு படையணிகளையும் பிரதிநிதுத்துவப்படுத்தி அவர்கள் மிடுக்காக கவிதைகளை உரைக்க புதுவை அவர்கள் அவற்றுக்கு மெருகூட்டினார்.

போர்க்கால நிலையிலும் தமிழுக்கும் அதன் வளர்ச்சிக்கும் அன்று இடம் தாராளமாகவே இருந்தது.

ஒரு மாவீரர் நிகழ்வுக்கு ஜேர்மனி வந்த புதுவை அவர்கள் பேசியதும் சிறிய அளவில் நினைவில் உள்ளது.

உங்கள் திரிக்கும் கவிதைக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/89PI8fKIHcY

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா..! :(

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Edited by நவரத்தினம்

தாய்மண் மடியதில்... உன் வீரத்தாலாட்டில்தான் கண் வளர்ந்தோம்!

உன் முளைவரி பிடித்து... கவிப்பால் குடித்து வளர்ந்த,

ஈழத்தாயின் குழந்தைகள் நாம்!

வீரமும்.... விவேகமும்.... என்னவென்று,

உன் புது வரிகளில்தான் புரியவைத்தாய்!

சிந்திய இரத்தத்தின் வலிகளையும்,

கத்திக் கதறிய இனத்தின் விடியலையும்,

உன் இரத்தின வரிகளால்தான் விளக்கி நின்றாய்!

புதுவை வரிகளில்தான் தமிழினம் முழுதாய் தமிழுணர்ந்தது!

தவறிய எண்ணங்களும் உணர்தமிழ் நாடிவந்தது!

நீயில்லை என்றாகி... நிமொன்று நாம் காணினும்,

நியமென்று ஒன்றாகி.... உன் வரிதனையும் எம் வரிகளோடு,

வரியுடையாய் தரித்திடுவோம்... கலங்காதே!

நீர்விட்டுச்சென்ற வரிகளில் நாம்.... கண்ணீர் வடித்தழுதோமே..!

ஊண்தவிர்த்து இருந்தாலும் உணர்விழந்து போகோம் கவியே!

வெறி அரிகள் தெறித்தோட... வரிப்புலிக்காய் வரி அமைத்தாய்!

உன் அரிதாரம் தரித்தேனும்... மறு அவதாரம் நாம் எடுப்போம்!!

நீர் பிறந்த நல்நாளில்... நாம் கொடுக்கும் உறுதிமொழிதனை...

உமக்கான வாழ்த்துக்களாய் உமக்கெனவே...

உறுதியோடு சமர்ப்பிக்கும் ஈழக்குழந்தைகள் நாம்!!!

வாழ்த்துக்கூறும்... ஈழக்குழந்தைகள் உன் வழி தொடரும் வாரிசுகள்!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகளைச் சமர்ப்பித்து வணங்குகின்றோம் ஐய!

நன்றி சகோதரி கவிதைக்கு, கவிதைக்கும் நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

காலம் என்னைக் கையில் தூக்கி வைத்திருக்கிறது எப்பொழுது என்னுடைய கவிதையின் வேலை முடிகிறதோ அப்பொழுது காலம் என்னைக் கைவிட்டு விடும்'-புதுவை

மரணித்துப்போவது மனிதர்கள் மட்டுமே ஒப்பற்ற கவிஞ்ஞனே உன் கவிதைகளில் எல்லைகளற்று விரிந்து பரந்திருக்கும் பிரபஞ்சத்தில் தமிழின் முடிவு நாள்வரைக்கும் உன் வரிகளில் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்...காலம் எப்படி உன்னைக்கைவிடும்?..ஒரு காலத்தின் பிரதியாய் உன் எழுத்துக்கள் இருக்கையில்....

249377_10150196662249891_789364890_7168738_7578984_n.jpg

காலனே!

கயிறு என்மேலெறிய

கணக்கெடுக்கின்றாயா நாட்களை?

விரைவில் முடியாதென் கணக்கு.

சாக்குறிக்கும் ஜாதகமே பொய்யென

உணர்த்துவேன் உனக்கு.

மரண பயமில்லை எனக்கு.

இறுதி நாளைச் சொல்லவரும் உன் தூதுவனைக்கூட

முகம் மலர்த்தி வரவேற்பேன்.

மேதியுர்தி ஏறிவரும் உன்னையும்

பாயருகே அமர்த்தி

பத்து வருடங்கள் கழித்து வாவெனச் செப்பும்

பலமெனக்குண்டு.

என் ‘அப்பு’ எனக்களித்த வரமிது.

சாவு ஒரு நாள் என்னைத் தழுவும்

என் ஒப்புதலுடன்

போதும் என் ஜீவிதமெனும் நிறைவுடன்

நானாக உன்னைக் கூவியழைத்து

கூட்டிப்போ என்பேன்

அதுவரை உனக்கு

என் முகவரி எதற்கு?

காலா!

சென்று வேறெவனும்

இழிச்ச வாயன் இருப்பான்

எடுத்துச் செல்.

என்னைத் தான் வேண்டுமெனில்

நானாக உன்னை அழைப்பேன்

அப்போது வா தோழா.’

புதுவை இரத்தினதுரை

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

உன் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே பெருமை எனக்கு.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் எம் தேசியப்புலவரே

பிறந்தநாள் வாழ்த்து!!!

எம் தேசிய கவிஞரே!!!

கவித்துவத்தின் மகிமை தனை

கண்கொண்டு மக்கள் நனைந்து களிப்புற்றது - தங்கள்

கவிதா சாரத்தின் சாரல் தனில் - வீர

மறவர் முகவரியை

முத்தமிழால் முழங்கிய உங்கள்

மூச்சுக் காற்றுப் பரவிய

ஈழ மாந்தர் சார்பினில் நவிழ்கிறேன்

பிறந்தநாள் வாழ்த்துத்தனை !!!

கல்கி

  • கருத்துக்கள உறவுகள்

வல்லூறுகளின் வளைந்த நகங்கள்,

வாரிச் சென்ற கோழிக் குஞ்சுகளின்,

குரல்கள் காற்றில் கலந்துவிட,

அவைகளுக்காய்,

உரத்துக் குரல் கொடுத்த கவிஞனே!

மண்ணின் மணத்தையும் , அதனுள்,

மறைந்திருந்த மவுனத்தின் ஒலியையும்,

வார்த்தைகளால் வடித்தெடுத்த,

வரலாறு தந்த கவிஞனே!,

வரித்த கொள்கைகள் வாழ,

வரிப்புலிகளின் வரிகளினால்,

சரித்திரப் பாறையில்,

சிற்பம் செதுக்கிய கவிஞனே,

கால நதிக்கரையில்,

நீ மீளவும் நடக்கின்றாய்!

நீ படைத்த, கவிதைகளின்

ஒவ்வொரு வரியிலும்,

உயிர்த்துடிப்பை உணருகின்றோம்!

உரம் கொண்ட வீரன் நீ!

வாழ்க நீடூழி என்று,

வாழ்த்துகின்றோம் கவிஞரே!

,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் எம் தேசியப்புலவரே

http://www.youtube.com/watch?v=uhSmuAMryM0

நன்றிகள் சகாராவின் ஓயாத தேடலுக்கு!

... 85ல் ஏற்பட்ட யுத்த நிறுத்த காலத்தில், இந்த இறவா கவிஞனை முதன் முதலில் சந்தித்தேன், ... தீப்பிளம்பு! ... இனி நீ வரமாட்டாய் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது ... நீ வாழா விடினும், உன் கவிகள் நூறாண்டுகளை தாண்டியும் ....

முள்முடி சூடி

முதுகிற் பாரச் சிலுவை சுமந்த

பாவப்பட்ட மக்களின் பயணப்பாடு முடிந்தது.

இயேசுவே

எம்மையேன் இரட்சிக்க மறந்தீர் சுவாமி

ஆலமுண்ட நீல கண்டனே

எம்மைச் சாவு தின்றபோது தாங்காதிருந்ததற்கு

அன்று மட்டும் உமக்கென்ன அலுவல் இருந்தது பிரபு

அல்லாவே பிள்ளைகளைக் கைவிட்டதேனோ?

புத்தபெருமானே

வெள்ளம் வருகுதென்றாயினும்

சொல்ல வேண்டாமா..?

எல்லோரும் ஒதுங்கிக் கொண்டீர்

நாம் தான் தனித்துப்போனோம்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் - கடல்

வீசுகின்ற காற்றின் உப்பின் ஈரம்

தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும் - மீன்

அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்.........

வாழ்த்துகள் புலவரே.

பூனை மயிர்களின் காலம்

கிழவனுக்கு பெரிய மீசை

கொடுவா கத்தி போல

சிறுவனுக்கு பூனை மயிர்

பூஞ்சனம் மாதிரி

கோழி ஒன்று ஏறிற்று தலை வாசல்

காலெடுத்து எரிந்தது பூனை மயிர்

கொல்லடா என்றது கொடுவாக்கத்தி

நாயொன்று வந்தது முற்றம்

பார்த்திருந்தான் சிறுவன்

அடியடா என்றான் கிழவன்

ஊரை வளைத்து

ஆங்காங்கு முள்பரவி

நானுன் ஆண்டைஎனும் மிதப்பில்

வேலிபுகுந்து வளவுள்ளே வந்தன

கொம்பேந்திய எருமைகள்

கல் எடுத்தான் சிறுவன் எறிய

அடே! பேயா போடடா கீழே என்று

பதறினான் கிழவன்

ஏனப்பு என்றது பூனை மயிர் பலமாக

குழு மாடுகளடா குத்தி கிழிக்கும்

பதுங்கினால் தப்பி விடலாமென

கொடுவாக்கத்தி குசுகுசுத்தது

வலியதை வணங்கி

எளியதை இடிக்கிறான் பாரென

பெரிய மீசையை பார்த்து

புருபுறுத்தது பூனை மயிர்

புதுவை இரத்தினதுரை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையிற் புதுமை

புதுவையின் கவிதை

காலத்தால் அழியாத

காவியங்கள் ஊழியின்

வேகத்தால் உறங்கிய

வேதனை யார் அறிவார்

வாழ்க கவிஞர் புகழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது தேசியக்கவிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

வரிப்புலியைப் பார்த்து பூனை கீறிட்டது போல உனைப் பார்த்துத்தான் எழுதும் ஆசையே வந்தது. தாய் மண்ணுக்காக நீ எழுதிய வரிகளைப் படிக்கும் போது வரிகள் எங்கு செல்கின்றனவோ எதைச் சொல்கின்றனவோ அங்கு செல்வதுபோலவும், அதைப் பார்ப்பது போலவும் இருக்கும், உன் வரிகளில் உணர்வுகள் தான் கொட்டிக்கிடக்கும்... எங்கள் காலத்தில் கிடைத்த ஓர் அற்புதக் கவிஞன்..... தொலைத்துவிட்டோம்......

புதுவை இரத்தினதுரை

ஐயா பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் பால்ராஜ் பற்றி தாயகக் கவிஞர்

பக்தி பாடல் இசைத்தட்டு ஒன்று வைத்திருக்கிறேன் கவிஞர் எழுதியது. முருகனையே கோபமாக பேசும் பக்தி பாடல்.

பாரதியாரின் பின் கடவுளை கேள்வி கேட்டு எழுதியபாடல் இந்த கவிஞனாகத்தான் இருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமது தேசியக்கவிஞர் எழுதிய நல்லூர் கந்தன் பாடல்கள் வர்ணராமேஸ்வரனின் குரலில் 90 களின் ஆரம்ப காலங்களில் வெளியாகியது அவற்றில் இங்கு இணைக்கப்படும் பாடலும் ஒன்று...

நேசன்,

நீங்கள் குறிப்பிடும் பாடல்

" தேரில் ஏறினாய் தினமும் தீர்த்தம் ஆடினாய் தெய்வயானை தோளைப்பற்றி மாலை சூடினாய்"

என்ற பாடல் தமிழ் கடவுளாகிய முருகனை நிறுத்தி வைத்து கேள்விகேட்கும் கவித்தமிழின் வன்மையை வெளிக்கொணரும் பாடல். இப்பாடலின் ஆரம்ப வரிகள் இதுவல்ல என்று நினைக்கிறேன் யாரிடமாவது இப்பாடல் இருந்தால் இணைத்து விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நமது தேசியக்கவிஞர் எழுதிய நல்லூர் கந்தன் பாடல்கள் வர்ணராமேஸ்வரனின் குரலில் 90 களின் ஆரம்ப காலங்களில் வெளியாகியது அவற்றில் இங்கு இணைக்கப்படும் பாடலும் ஒன்று...

" தேரில் ஏறினாய் தினமும் தீர்த்தம் ஆடினாய் தெய்வயானை தோளைப்பற்றி மாலை சூடினாய்"

என்ற பாடல் தமிழ் கடவுளாகிய முருகனை நிறுத்தி வைத்து கேள்விகேட்கும் கவித்தமிழின் வன்மையை வெளிக்கொணரும் பாடல். இப்பாடலின் ஆரம்ப வரிகள் இதுவல்ல என்று நினைக்கிறேன் யாரிடமாவது இப்பாடல் இருந்தால் இணைத்து விடுங்கள்

இணைப்புக்கு நன்றி வல்வைசகரா, சிறந்த பாடல் வரிகள், இசை மேலும் பாடிய வர்ண ராமேஸ்வரன் குரல் வளம். இந்த தொகுப்பில் வந்த அத்தனை பாடல்களும் மிகவும் சிறந்தவை. இந்த பாடலில் வரும் புதுவை அண்ணாவின் வரிகள்:

..........வள்ளி என்று தெய்வானை கையில் நுல்லினாய், நான் கால் அடியில் வந்த போதும் என்னை தள்ளினாய்........

முருகனையே கேள்வி கேற்கும் கவிஞர், ஆஹா அற்புதம். மற்றைய பாடல்களும் இருந்தால் தயவு செய்து தரவும், நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

புதுவை பற்றிய பல நினைவுகள் இருந்தாலும் ஒரு மறக்க முடியாத நினைவு.. இலங்கையிலிருந்து இந்திய இராணும் வெளியேறிவிட்ட காலம் புலிகள் மீண்டும் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்த நேரம் என்னுடைய பாடசாலை நண்பன் ஒருவன் இந்திய இராணுவத்தாலும் ஒட்டுக் குழுக்களாலும் கொல்லப்பட்ட போராளிகளை பற்றி விடியலிற்கு முந்திய அஸ்த்தமனங்கள் என்றொரு கதையை எழுதி அதனை நாடக வடிவில் மாற்றி திருத்தம் செய்து அனுப்பும்படி வெளிநாடு ஒன்றிலிருந்த எனக்கு அனுப்பியிருந்தான். அதனை நான் நாடக வடிவில் மாற்றி அனுப்பியபின்னர் அவன் அதனை பல பாடசலைகளிலும் மேடையேற்றம் செய்து கொண்டிருந்தவேளை அப்பொழுது தான் கலை பண்பாட்டு பிரிவு உருவாக்கம் பெற்று புதுவை பொறுப்பெடுந்திருந்தார். பண்டத்தெரிப்பு மகளிர் கல்லுரியில் அன்று அந்த நாடகம் அரங்கேற இருந்தபொழுது நண்பனை அழைத்த இரத்தினை துரை

நாடகத்தை கலை பண்பாட்டு கழத்திடம் பதிவு செய்தாச்சா என கேட்டிருந்தார். அதற்கு அவன் இல்லையென்றதும் பதிவு செய்தபின்னர் நாடகத்தை போடச்சொல்லி சொல்லியிருக்கிறார் அதற்கு அவனோ இன்றிரவு நாடகம் பதிவு எல்லாம் செய்ய நேரமில்லை வேண்டுமானால் நீங்களே வந்து பாருங்கள் பிடித்திருந்தால் தொடர்ந்து மேடையேற்றலாம் எண்டிருக்கிறான். அதற்கு ரத்தினதுரை சொன்னது நான் வந்து பாக்கிறன் பிடிக்காட்டி கல்லாலை எறிவன் எண்டிருக்கிறார். அதுமாதிரி நாடகத்தை பார்த்தவர் இறுதியில் எல்லாரையும் போலவே கண்கலங்கியடி நல்ல நாடகம் என பாராட்டியதோடு யார் எழுதினது எண்டு கேட்டிருக்கிறார். அதற்கு நண்பன் தன்னுடைய கதையை நான் நாடகமாக்கியதாக சொல்லியதும் நல்லவேளை நான் கல்லாலை எறியேல்லை எறிஞ்சிருந்தா அவன் குண்டாலை எறிஞ்சிருப்பான் எண்டு சொல்லவிட்டு நாடகத்தை நானே பதியிறன் என்றுவிட்டு போயிரந்ததாய் பின்னர் எனது நண்பன் கடிதமூலம் தெரிவித்திருந்தான்

  • கருத்துக்கள உறவுகள்

காலநதி கடந்தும் வாழும்

கவிதையின் அரசே வாழீ!

நன்றி தோழி வல்வை சகீரா,

என் தோழனை நினைக்கிறபோது எப்பவும் மகிழ்வேன். ஆனால் இன்று என் உடலும் மனமும் சோருகிறது. போராளிகளுள் புதுவைக் கவிஞந்தான் என் நீண்ட கால தோழன் என்பேன்.

அது 1960களின் இறுதி ஆண்டுகள் என நினைக்கிறேன். என் கவிதைகளைவிட யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகளின் சாதி ஒடுக்குதலுகெதிரான என்னுடைய வன்முறை நடவடிக்கைகள்தான் அவரை என்பால் அதிகம் ஈர்த்திருக்கவேண்டும். இடது சாரிகளின் விவாதங்களிலும் கவியரங்குகளிலும் நாம் ஓரணியாக இருந்தோம்.

1970பதுகளில் காசிஆனந்தனும் புதுவையும் எதிரும் புதிருமாகப் பங்குகொள்ளும் கவிஅரங்கு என்றால் திரைப்படம்துக்கு போகிறதுபோலக் கூட்டம் அலைமோதும், நாங்கள் யாழ்ப்பாணத்துச் சாதிவெறிக்கு எத்ரான வன்முறையை முன்னெடுத்துச் செல்கிற கவிஞர்கள். தமிழருக்கு இடையில் மோதலை வளர்க்காமல் அகிம்சை முறையில் சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற கட்ச்சி காசி ஆனந்தன் கட்ச்சி. இன்றைக்கு நினைத்துப்பார்க்கையில் முதலில் புதுவையும் அடுத்துக் காசி ஆனந்தனும்தான் எனது நீண்ட கால போராளித் தோழர்கள் என்பதை உணர்கிறேன்.

. போர்க்குற்ற வாளிகளான ராஜபக்சக்களிடம் அகப்பட்ட என் தோழர்கள் புதுவை மற்றும் பாலா தொடர்பாக முரண்பட்ட தகவல்க்ளே கிடைக்கின்றன. இருவரையும் மகிந்த அரசை ஆதரிக்கும்படி கேட்ட மகிந்தவின் சகோதரர்கள் மூக்குடைபட்டதாக தாவல் இருக்கு. தோழர் பாலா என்னைச் சுடுங்கடா என்று கத்தியதாக முஸ்லிம் நண்பர்கள் ஊடாக அறிந்தேன். வேறொரு தகவல் பாலாவுக்கும் அவரது பாலகனுக்கும் எதிராக மகிந்த அரசின் துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப் பட்டதாக தெரிவிக்கிறது.

கவிஞருக்கு அதியாவசியமான உயிர் காக்கும் மருந்துகள் நிறுத்தப் பட்டதாக சொல்கிறது.

தகவல்களை உறுதிப்படுத்த முடியாமையால் அஞ்சலிகூட எழுத முடியாத நிலையில் என் கவிமனசு இருதலைக் கொள்ளி எறும்பாக துடிக்கிறது. பல போராளிகள்பற்றி கதைகள் இப்படித்தான் உள்ளது. என்ன செய்வது. எந்தோழனுக்கு எனது பிறந்த தின வாழ்த்துக்களையும் சமர்பிக்கிறேன்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.