Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    88724
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    39255
    Posts
  3. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    10000
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33149
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/26/26 in all areas

  1. மனைவியின் மறைவுக்கு கருத்துக்களத்திலும் தனி மடல்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆறுதலளித்த அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றி.
  2. 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். adminJanuary 25, 2026 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 📌 “என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை எதிர்காலமும், நான் நேசிக்கின்ற மக்களும் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்.” மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்த போதிலும் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும், சவாலான சூழலில் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதே நியாயமானது. எந்தவொரு அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் வைத்து தரப்போவதில்லை. எமது நற்புறவு, சினேகபூர்வ உரையாடல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தின் மூலமே உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் எமக்கு போதிய அரசியல் பலம் இருந்திருந்தால் இன்னும் பலவற்றை சாதித்திருக்கலாம். தற்போதுள்ள ஆளும் கட்சி தமிழ் உறுப்பினர்கள் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கரைந்து போயுள்ளனர். அவர்களுக்கு அனுபவமோ ஆற்றலோ போதாது. அரசாங்கத்துடன் பேசித் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமாயின், மக்கள் எமக்கு மீண்டும் அந்த ஆணையை வழங்க வேண்டும். “கட்சியின் பலவீனங்களை அடையாளங்கண்டு, கட்டமைப்புகளைச் சீரமைப்பதன் மூலம் ஈ.பி.டி.பி-யை மீண்டும் எழுச்சி கொள்ள வைக்க முடியும். இதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும்.” என டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://globaltamilnews.net/2026/227462/
  3. தமிழ்த்தேசியம் என்றாலே புலிகளின் மீளுருவாக்கம், புலிகளுக்கான ஆதரவு என்று தட்டிக் கழித்துவிடுகின்ற மனநிலை ஒன்றினை மிகவும் திட்டமிட்டே உருவாக்கி வருகிறார்கள். தமிழர்களிடையே தேசியம் பேசுவோர் சமூக விரோதிகளாக, பழ‌மைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது புலிகளைத் தாண்டியதென்பதும், அது தமிழரின் அடையாளம், தாயகம், கலாசாரம் உட்பட்ட ஒட்டுமொத்த இருப்பிற்கான தேவையென்பதை தெரிந்தும் இச்சூட்சுமத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை முன்னின்று செய்வதுகூட தமிழர்களில் ஒரு பகுதியினர்தான். இத்தளத்திலேயே தமிழ்த் தேசியத்திற்குப் புலி முலாம் பூசுவதன் மூலம் அதனை நீர்த்துப்போகச் செய்ய எத்தனிப்போர் இருக்கின்றனர். சிலர் மிகவும் வெளிப்படையாகவும் இன்னும் சில மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். புலிகளை எதிர்ப்பதாக, விமர்சிப்பதாக இவர்களது கருத்துக்கள் வெளியில் தோற்றம்பெரினும், அவர்கள் உண்மையாகவே எதிர்ப்பது தமிழ்த் தேசியம் எனும் அடையாளத்தைத்தான் என்பது வெளிப்படை.
  4. புலர் அறக்கட்டளையின் ஐந்தாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் மூத்தோர் சங்கத்தில் 25/01/2026 நடைபெற்றது தொடர்புகளுக்கு +94 77 777 5448 இந்நிகழ்வில் நிர்வாகிகள் தலைவர் திரு தேவகுமாரன், செயலாளர் திரு மோகனறூபன், பொருளாளர் திரு பாலகிஸ்ணா, திருமதி அபிராமி சிவபவன், திரு இராமலிங்கம், திரு சிவறூபன், திரு இந்திரகுமார் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்கள் திரு ஜெகஜீவகன், திரு அமிர்தகணேசன், திரு சிறீதரன், திரு ரஞ்சித், திரு கோகிலராஜன், திரு சேந்தன், திரு கரிதாசன், திரு சிறீரங்கன், வீடமைப்பு அதிகாரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு சுரேஸ்குமார், திரு சுரேன் தொண்டர்கள் திரு அறிவுக்குமரன், திரு மகிந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஆதரவளித்து உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு எமது நன்றிகள்.
  5. மோகன், ஆழ்ந்த இரங்கல்கள். காலம் உங்கள் கவலையைப் போக்கட்டும்.
  6. புதன் கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு இறுதிச் சடங்கு மலர் கொத்து ஒன்று யாழ் கள உறவுகள் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  7. புலிகள் தமிழர்களின் நிலப்பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களை தனி நாடாக தமிழீழம் கேட்டார்கள் அதை அவர்கள் தமிழ் தேசியம் என்றால் அது மிகச் சரியானது. இப்போதும் இலங்கையில் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற ஆசை தமிழ் மக்களிடம் ஊறிப்போய் உள்ளது அது மறையாது என்று சொல்லி கொள்ளலாம் அப்படி தான் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகும் வரை சிலர் சொல்லி கொண்டிருந்தார்கள்.
  8. சீன வாகனங்கள் யாழ்பாண சந்தை கொழும்பு சந்தைகளிலும் வந்து இறங்கி உள்ளனவாம் 😂 அங்கே கார் வாங்கி வைத்திருப்பவரின் உறவினருடன் நான் பேசிய போது சொன்னார் அவர்கள் யப்பான் கார்கள் இந்தியாவில் தயாரிக்கபட்ட யப்பான் கார்களை தான் வாங்குவார்கள். எம்மவர்கள் நிலைமையே இப்படி இருக்கின்ற போது கனடாகாரர்களும் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் எப்படி வாங்குவார்கள் ஐரோப்பிய இறக்குமதி வரிகளில் இருந்து தப்புவதற்காக சீனா கார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை சென்ற வருடம் ஐரோப்பா ஹங்கேரியில் தொடங்கியதாம்
  9. விமான நிலையங்களை சுற்றி ஐந்து மைல்கள் சுற்று வட்டாரங்களுக்குள் அதன் வான்பரப்பில் கருவிகள்/பலூன்கள்/டிரோன்கள் போன்றவற்றை செலுத்துவதற்கு/பறக்கவிடுவதற்கு வெளிநாடுகளில் முன் அனுமதி பெறவேண்டும்.
  10. சீன வாகனங்களும் ஐரோப்பிய சந்தையைப் பிடித்து விட்டதாக சொல்கிறார்களே? கனடாவுக்கும் வந்து இறங்கப் போகுது. எல்லை தாண்ட ரம் விடுவாரா தெரியவில்லை.
  11. ஐயா மன்னிக்கவும், நான் எழுதவில்லை. கீதா எனும் சகோதரியின் https://geethajustin.blogspot.com/2014/08/blog-post_20.html வலைப்பக்கத்தில் வாசித்ததை இங்கே எமது உறவுகளுடன் பகிர்ந்து கொண்டேன்.
  12. கொஞ்சம் பொறுங்கோ! அடுத்தது பாகிஸ்தானுக்கு பதிலா யார் வரப்போகிறார்களோ தெரியவில்லையே!!
  13. நானா ஏன் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறார்? எப்பத்தான் திரிசம்பந்தமாக கருத்தெழுதியிருக்கிறார்? என்ன செய்வது வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்!!🤣
  14. நான் முல்லாக்களின் ஆதரவாளன் இல்லை. ஆனால் ஈரான் நாடு என்று பார்த்தால் சீனாவின் பின் பலம் அதிகமாக உள்ளது. இது நான் தீர்மானித்து எழுதிய கருத்து அல்ல. என்னுடன் வேலை செய்யும் தம் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனி வந்த ஈரானியர்கள் சொன்னது. அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள்..... ஈரானில் அரச மொழியாக சீன மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை என..... ஐ திங்......அமெரிக்காவிற்கு வெளிப்படை எதிரிகள் அதிகரித்து வீட்டார்களோ என திங் பண்ண வேண்டிக்கிடக்கு....😜
  15. காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது. இலங்கையில் சிங்கள இனம் தமிழினத்தைச் சுற்றியுள்ளது. சுற்றுமுன் அடித்து விரட்ட சுள்ளித்தடி தேடவேண்டும், அது இன்று உலகெங்கும் பரந்திருக்கும் தமிழரிடம் இருக்கிறது. இந்தத் தமிழர் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இதனைத்தான் தலைவனும் உணர்ந்து பொறுப்பை அங்கு கொடுத்து உணர்த்தினார்.
  16. மோகன் அண்ணையின் துணைவி சுமதி (பூமா) அக்காவின் இறுதி நிகழ்வு இன்று ஒஸ்லோவில் நடைபெற்றது. வாழ்வின் மீது பிடிமானம் கொண்டு அதனை நேசிக்கின்ற எல்லோருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடுவதில்லை. இத்துயர உண்மையை மனிதவாழ்வு அவ்வப்போது நினைவூட்டிவிடுகிறது. பூமா அக்கா வாழ்வின் தருணங்களை நேசித்து ரசித்து மகிழ்ந்து வாழ்ந்தவர். சுற்றியிருப்பவர்களையும் மகிழ்வித்து வாழ்ந்த ஒருவர். நம்பிக்கையும் Positive energy உம் கொண்ட ஒருவர். மோகன் அண்ணை, வைதேகி, ஆதிரை, மற்றும் குடும்பத்தாருக்கு பெரும் இழப்பு.ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. மோகன் அண்ணை நீண்ட காலமாக நோர்வேயில் சமூகப் பணிகளிலும் தாயகம் நோக்கிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த ஒருவர். கணினித் தொழில்நுட்பம், நூல் வடிவமைப்புகள், இணைய ஊடகம் என அவருடைய பணிகள் பன்முகப்பட்டவை. அவருடைய பொதுப்பணிகள் பூமா அக்காவினுடைய ஒத்துழைப்பும் புரிதலும் இன்றி சாத்தியமாகியிருக்காது. மோகன் அண்ணையின் பொதுப் பணிகளில் முதன்மையானது Yarl.com இணையத்தளத்தினை நிறுவி இயக்கியமை. புலம்பெயர் தமிழ்ச் சூழலின் இணையத் தளங்களில் முன்னோடியானது அது. இன்றைய சமூக ஊடகங்களின் வருகைக்கு முந்தைய நிலையென இணையத் தளங்களின் ஊடான chatting எனப்படுகின்ற நிகழ்நேர உரையாடல், தகவற்பகிர்வுகளையும் கருத்தாடல்களையும் குறிப்பிடலாம். இணையவெளியில் புலம்பெயர்/உலகத் தமிழர்களுக்கான கருத்துப்பகிர்வுத் தளமாகவும் யாழ் இணையம் 1998களின் ஆரம்பத்திலிருந்து இருந்துள்ளது. ஆர்வமுள்ள எவரும் எழுதலாம், கருத்துகளைப் பகிரலாம் என்ற நிலைக்கு வித்திட்ட தளங்களில் யாழ் இணையத்தின் இடம் தனித்துவமானது. செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் ஆய்வுகள், கதைகள், கவிதைகள், பகிர்வுகள், ஓவியங்கள் எனப் பல்வகையான ஆக்கங்களுக்கான தளமாக விளங்குகின்றது. புலம்பெயர் சூழலில் எழுத்தாளர்களாக உள்ள பலரின் ஆரம்பக் களமும் தளமுமாகவும் யாழ் இணையம் திகழ்ந்திருக்கின்றது. பூமா அக்கா மனிதர்களோடு இயல்பாகப் பழகக்கூடியவர். துணிந்து தன் உணர்வுகள், கருத்துகள், எண்ணக்களைச் சொல்லக்கூடியவர். ஒரு அம்மாவாகப் பிள்ளைகளின் நலன்களில் மட்டுமல்லாமல் அவர்கள் சுயதெரிவுகளுடனும் தமக்கான சுதந்திரங்களுடனும் வாழ்வில் உயர வேண்டுமென்ற எண்ணங்களைக் கொண்டவர். நோய்க் காலத்திலும் மனோபலத்தோடு அதனை எதிர்கொண்டிருக்கின்றார் என்று அறியும் போது அவரது அவர் மீது மதிப்புக் கூடுகிறது. மோகன் அண்ணையும் பிள்ளைகளும் அவரைத் தாங்கியிருந்திருக்கிறர்கள். பெரும் காதலோடும் கரிசனையோடும் நோய்க்காலத்தில் அவரைப் பராமரித்திருக்கிறார்கள். ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. https://www.facebook.com/share/p/1BgkDMANcf/?mibextid=wwXIfr
  17. விடை கொடுக்கிறோம், சோதரியே! நண்பர் மோகனின் மனைவி சுமதியின் (பூமா) இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று (21.01.26) ஒஸ்லோவில் நடைபெறுகிறது. நான் நோர்வேயில் இல்லாத காரணத்தினால் இந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத மிகுந்த கவலையுடன் இப்பதிவை எழுதுகிறேன். பிரியமானவர்கள் பலரின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை; எனது அம்மா அப்பாவின் இறுதி வணக்க நிகழ்வுகள் உட்பட. சுமதி, நண்பர் மோகனின் மனைவியாகத்தான் எனக்கு அறிமுகமானார். காலப்போக்கில் நாம் குடும்ப நண்பர்கள் ஆகி விட்டோம். அவருடன் பழகிய காலங்களில் அவர் துணிச்சலானதொரு பெண்ணாகவும், குழந்தை உள்ளம் கொண்டவராகவும், நகைச்சுவை உணர்வு மிகுந்தவராகவும், வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் விருப்பம் கொண்டவராகவும், எவரோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நற்பண்புமிகுந்தவராகவும் இவரை நாம் உணர்ந்து கொண்டோம். சுமதி இளகிய மனம் படைத்தவர். கலையுள்ளம் கொண்டவர். கலைகளை நன்கு ரசிப்பார். இயற்கையை நேசிப்பவர். பயணங்கள் செல்வதிலும், சுற்றுலா போவதிலும் விருப்பம் கொண்டவர். கணவனையும் பிள்ளகளையும் நன்கு நேசித்தவர். நண்பர்களையும் அன்பால் அரவணைத்தவர். வயதின் மூப்பில், வாழும் கால எல்லையெல்லாம் வாழந்து இயற்கையாய் கண் மூடும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இரசித்தபடியே வாழ்ந்திருக்க வேண்டியவர். 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நம் எல்லோரையும் அதிர வைத்த அந்தச் சேதி கிடைத்தது. சுமதியை கொடிய புற்றுநாய் தாக்கியுள்ளது என்பதே அந்தச் சேதி. இந்தச் செய்தியினை அவரேதான் சொன்னார். பலரும் புற்றுநோயை மறைப்பதுபோல அவர் அதனை மறைக்க முயலவில்லை. இவரை இக் கொடும் நோய் தாக்கும் என்று எவர் தான் கற்பனை பண்ணினோம் ! புற்றுநோய் என்றாலே உயர் ஆபத்து என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் உண்மைநிலை அவ்வாறு இல்லை. புற்றுநோய் எந்த இடத்தில் வருகிறது, எப்போது கண்டு பிடிக்கப்படுகிறது, எவ்வளவு தீவிரத்தன்மை கொண்டுள்ளது என்பதைப் பொறுத்து நோயின் பாதிப்பு வருகிறது. சிகிச்சை முறையிலும் பாரிய முன்னேற்றங்கள் வந்துள்ளன. நோயால் பாதிக்கப்பட்ட பலர் பூரண குணமாகியுள்ளனர். சுமதிக்கு வந்தது பித்தக் குழாய் புற்றுநோய்( ஆங்கிலத்தில் Bile duct cancer, நோர்வேஜிய மொழியில் Gallegangskreft). இது ஒப்பிட்டளவில் அரிதாக வருகின்ற, ஆனால் ஒரு ஆபத்தான புற்றுநோய் நோய் என்றும் கூறுவார்கள். பித்தக் குழாய் மிக மிக சிறிய உறுப்பாக இருப்பதன் காரணமாகவும், அது அமைந்திருக்கின்ற இடம் பல உறுப்புகளுடன் தொடர்புபட்டிருப்பதன் காரணமாகவும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு கடினமான ஒரு புற்று நோயாகவும் இதனைக் கூறுவார்கள். இந்த நோய் வரும்போது அதனை எதிர்த்துப் போராடுகின்ற போராட்டம் வாழ்வா சாவா என்கின்ற ஒரு போராட்டம் தான். இந்த நோயிலிருந்து போராடி மீண்டும் வருவது மிகவும் கடினமான ஒரு விடயமாக இருக்கப் போகின்றது என்பதனை ஏதோ ஒரு வகையில் சுமந்து உணர்ந்து கொள்கிறார். எனக்கு இந்த இடத்தில் ஏன் இந்த நோய் வந்தது என்கின்ற கவலை ஒரு புறமும், இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்ற தேடல் மறுபுறமாகவும்அந்த நோயை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறார். இந்நோய் தொடர்பாக ஒரு வெளிப்படையான அணுகுமுறையை அவர் மேற்கொள்கிறார் தனது நோயின் தன்மை பற்றி தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் ஏறத்தாழ பதினைந்து - பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிப் போராடி, ஒவ்வொரு காலடியை முன்னோக்கி வைப்பதற்கு முயன்று முயன்று தோற்றுப் போக போக இறுதிக் கணம் வரை மனந் தளராமல் அவர் போராடினார். எமது கண் முன்னால் நாம் நேசித்த ஒரு சோதரி ஒவ்வொரு மருத்துவ முயற்சிகளிலும் முன்னேற்றத்தை காணாமல் போராடிக் கொண்டிருப்பது நம்ம எல்லோருக்கும் மிகுந்த மிகுந்த மனவருத்தத்தை தந்து கொண்டிருந்தது. இறுதியில் இயற்கையின் விதிப்படி 14.01.26 அன்று அவர் இயற்கை எய்தி விடுகிறார். ஏது தான் செய்ய முடியும் எம்மால். சாவை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான நோயுடன் போராடி மருத்துவமனையில் இருக்கின்ற போது அதற்கு மிகுந்த ஒரு மன உறுதி தேவை. அந்நேரத்தில் குடும்ப உறவுகளதும், நண்பர்களதும் அரவணைப்பு ஒரு நோயாளிக்கு மிகுந்த மனபலத்தை தரும். அதனை அனுபவரீதியாக உணர்ந்தவன் நான். நண்பர் மோகனும் பிள்ளைகள் வைதேகி, ஆதிரையும் சுமதியைக் காப்பாற்ற தம்மால் முடிந்ந அனைத்தையும் செய்தார்கள். சிகிச்சை தொடர்பாக நோர்வேயில் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லா வாய்ப்பைக்களையும் தேடினர். எதனையும் விட்டு விடாமல் எல்லாக் கற்களையும்ப புரட்டினார்கள். எதுவும் நோர்வேயினை விட மேம்பட்டதாக இருக்கவில்லை. தனது மனைவி பதினைந்து -பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்ற போது கண்ணை இமை பாதுகாத்தது போல கிடைக்கக் கூடிய ஒவ்வொரு கணமும் தன் மனைவியின் அருகிலேயே நின்றார் நண்பர் மோகன். பிள்ளைகளும் தமது அம்மாவை நோயில் இருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்று துடி துடிப்புடன் தாயுடன் தமிக நெருங்கி நின்றார்கள். தான் அருகாமையில் இருக்கின்ற போது சுமதி பாதுகாப்பாக உணர்கிறார் என்பதை புரிந்து கொண்டு மோகன் தனது மனைவியை பராமரித்த விதம் எல்லோருக்கும் மிக மிக உன்னதமான முன்னுதாரணம். சுமதி எம்மை விட்டு பிரிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனது மனைவியும் (அவர் சுமதியின் ஒரு நல்ல நண்பர்) சுமதியின் ஏனைய இரு நண்பர்களும் வைத்தியசாலையில் சுமதியியைப் பார்க்கச் சென்றோம். அவர் இருந்த அறையின் உள்ளே சென்று அவரோடு சிறிது நேரம் கதைத்து விட்டு நான் நண்பர் மோகனுடன் அறையின் வெளியிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தேன். உள்ளே சுமதியும் எனது மனைவியும் நண்பர்களும் பேசி சிரித்து உற்சாகமாக கதைக்கின்ற சத்தம் எமக்குக் கேட்கிறது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் போயிருக்கும். நாங்கள் மீண்டும் அறைக்குள் போகும்போது ‘ நல்ல energy உடன் சுமதி இருந்தால் பல விடயங்களையும் கதைத்தோம்’ என என் மனைவியும் நண்பர்களும் சொன்னார்கள். நான் அப்போது சுமதியிடம் ‘நீங்கள் energy யான ஆள் தானே, energy யா இருங்கோ’ என்று சொன்னேன். உடன் அவர் விம்மி அழத் தொடங்கி விட்டார. ‘நானும் எல்லாத்தையும் positive ஆகத்தான் பாக்கிறன், அண்ணா. ஆனால் நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்குதில்லை’ என்று கவலையுடன் சொன்னார் . அவர் இதனைச் செல்லும் போது இவர் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற மருத்தவர்களின் தகவல் எமக்குத் தெரிந்திருந்தது. பாசத்துடன் அவரது இரண்டு கன்னங்களையும் எனது இரு கைகளாலும் தடவி விட்டதனைத் தவிர எந்தப் பதிலையும் கூற என்னால் முடியவில்லை. சுமதியின் பிரிவுத்துயரைக் காலம்தான் ஆற்ற வேண்டும். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பார்கள். அதனை நம்புவோம். நணபர் மோகனதும் பிள்ளகளதும் தோழணைத்து நாம் நிற்போம். விடை கொடுக்கிறோம், சோதரியே. https://www.facebook.com/share/p/1DbBE4ME6h/?mibextid=wwXIfr
  18. இவர்கள் விட்ட தவறே, அனுரா கட்சி வடக்கில் நுழைந்ததும் பொங்கல் விழா கொண்டாடியதும் என்பதையும் ஏற்க முடியவில்லை, அனுரா பொங்கல் கொண்டாடியதை பொறுக்கவும் முடியவில்லை. இவர்கள் இல்லாவிட்டால் என்ன? அவர் மக்களோடு பொங்கல் கொண்டாட வந்தார், கொண்டாடினார், போனார். இவர் ஏன் புலம்புகிறார்? உங்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது மரியாதை அவ்வளவுதான். உங்களை கூட்டி வைத்து கும்மாளம் அடித்தவர்கள் எதை சாதித்தார்கள் மக்களுக்கு? அல்லது நீங்கள்தான் எதை சாதித்தீர்கள்? நீங்கள் நிஞாயமாக நடந்திருந்தால் மக்கள் உங்களை தவிர்த்து அனுராவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பார்களா? மக்களே உங்களை மதிக்கவில்லை, அனுரா ஏன் அழைக்கப்போகிறார்? சிவஞானத்தின் அறிவு அவ்வளவுதான்! இவர்கள் எல்லாம் கட்சி கொள்கை திட்டத்தின் படி அங்கீகாரம் பெற்றா பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்? மக்கள் இவர்களை விட்டு வெகுதூரம் சென்றதே அனுரா வடக்கிற்கு வரக்காரணம் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை பாவம் இவரால். கட்சிப்பிரச்சனை கட்சிக்குள் இருந்திருந்தால் யாரும் விமர்சிக்கப்போவதில்லை. கட்சிப்பிரச்சனை வெளியில் வந்தால், நீதிமன்றம் வந்தால் யாரும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். நீங்களே உங்கள் உறுப்பினர்களை பகிரங்கமாக விமர்ச்சிக்கிறீர்கள், அவர்கள் மேல் சேறடிக்கிறீர்கள், தெற்கிற்கு செய்தியனுப்பி விசாரணை செய்யச்சொல்லி கேட்க்கிறீர்கள், உங்கள் தவறுகளை மறைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஒரு கட்சியை விமர்சித்து விட்டு உங்கள் தேவைக்காக அந்தக்கட்சியை தேடிச்சென்று கட்டி தழுவுகிறீர்கள், காரணம் என்ன? மக்கள் உங்களை நிராகரித்து விட்டதனாலேயே. இதற்குள் தமிழரசுக்கட்சிக்குள் மறைந்திருந்து போட்ட அட்டகாசம் எல்லாம் போதும். குந்தியிருந்த வீட்டை பூட்டிவிட்டு வேறு எங்கே போய் குந்தப்போகிறார்கள்? சிவஞானத்திற்கு தன் முதுகிலுள்ள அழுக்கும் தெரியவில்லை, கட்சியிலுள்ள சர்வாதிகாரமும் புரியவில்லை, இதற்குள் மற்றவர்களை சாட வெளிக்கிட்டு தலைகுனியப்போகிறார்.
  19. ஹொலிடே முக்கியம் குமாரு😂 குட் மோனிங் சேர்…. எண்டு நல்லா குழையல் புக்கை எல்லோ கொடுத்திருக்கினம் யாழ் மக்கள். தமிழ் புக்கையை சொன்னேன்.
  20. துணைவியாரின் மறைவினால் துயருற்றிருக்கும் மோகன், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏
  21. மிகவும் துன்பகரமான செய்தி எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அருகில் இருந்தவர் போய் விட்டால் அடி மனதின் வேதனையை யாரால் தேற்ற முடியும். எங்கள் ஆழ்த இரங்கல் மோகன். உங்கள் பெரும் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஓம் சாந்தி 🙏
  22. எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள், ஆன்மா சாந்தி அடையட்டும்🙏
  23. மோகன் அவர்களே! இதுவும் கடந்துபோகும் என்று சொல்வார்கள். ஆனால் வாழ்நாளில் கடக்கவே முடியாத துன்பங்களும் உண்டென்பதை மறுக்கவே முடியாது. அத்தகைய ஒரு துன்பம் உங்களையும் சூழ்ந்துவிட்டதை எண்ணிக் கலங்குகிறோம். ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் உங்களுக்கு ஆறுதல்கூற வார்த்தைகள் இல்லை. தமிழினம் அழிவுகளைச் சந்தித்துவந்த வேளையில் யாழ்களத்தை ஆரம்பித்து எங்கள் மனதுயருக்கு ஆறுதல்தந்து ஆற்றுவதற்கு வந்த ஒருவராகவே உங்களை எங்கள் மனங்களில் பதியவைத்தோம். அந்தப்பதிவு அழியாது. என்றும் உங்களுக்கு ஆதரவு தரவே மனம் விரும்புகிறது. ஆறுதல்கூற முடியாத உங்கள் துணைவியாரின் இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்... அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!!🙏
  24. ஆழ்ந்த இரங்கல்😥 மோகன் அண்ணாவுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இந்த கடினமான நேரத்தில் கடவுள் ஆற்றலும் துணையும் தந்து தாங்கட்டும்
  25. கண்ணீர் அஞ்சலிகள். மோகனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  26. மோகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
  27. துணையை இழந்து போவதென்பது மொத்த உலகில் பாதி இருண்டுபோன துயரம், துயரில் மூழ்கியிருக்கும் மோகன் அண்ணா குடும்பத்தினர் அனைவருக்கும் மனவுறுதி வேண்டியும் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனைகள்.
  28. கண்ணீர் அஞ்சலிகள். சடுதியான இழப்பை தாங்கும் மன வலிமையை இயற்கை வழங்கட்டும். உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன். 🪔🪔🪔🪔🪔
  29. மிகவும் கவலையான தகவல். சின்ன வயதில் இருந்து அப்பா, அம்மா, எனக்கு படிப்பித்த நல் ஆசான்கள், வாசித்த இலக்கியங்கள், கடந்து சென்ற நல்ல மனிதர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தது நல்லவர்களுக்கு பெரும் துயரமோ இழப்போ ஏற்படாது என்பதே. அறத்தின் வழி வாழ்கின்றவர்களுக்கு துன்பமும் இழப்பும் குறைவு என்பதே. ஆனால் வாழ்வில் நிகழ்வது அவ்வாறு இல்லை எனும் மிகவும் கசப்பான உண்மையைத் தான் நான் அடிக்கடி காண்கின்றேன். மோகனுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட இந்த இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைந்து செல்கின்றது. முரண்பட்ட அறம் தான் இன்று கண் முன்னே விரிந்து செல்கின்றது. மோகன், உங்களைப் பார்த்து Be Strong, இந்த நேரத்தில் உறுதியாக இருங்கள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உங்களை அவதானித்ததில் இருந்து நான் உணர்ந்த விடயம். ஏனெனில் உங்கள் துணை சுகவீனம் அடைந்ததில் இருந்து நீங்கள் காட்டிய உறுதி என்னால் நினைத்துப் பார்க்க முடியாதது. எல்லா வழிகளும் அடைபட்டு போன பின்பு கூட நீங்கள் மனதளவில் உறுதியாக இருந்ததை கண்டுள்ளேன். யாழை நிர்வகிப்பதில் கூட எந்த தளர்வையும் நீங்கள் காட்டவில்லை என்பது சாதாரண விடயம் அல்ல. எந்த நிலையிலும் தளராமல் இருக்கும் இந்த மனவுறுதி தான் உங்கள் பிள்ளைகள் இருவருக்கும் இருக்கும் என நம்புகின்றேன். அக்காவுக்கு எனதும் என் குடும்பத்தினரதும் கண்ணீர் அஞ்சலிகள்.
  30. மோகன் அண்ணா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.
  31. மனையாளின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணாவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். 🙏 💐
  32. அதிர்ச்சியான செய்தி. இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்
  33. அன்னாரை இழந்து தவிக்கும் மோகன் மற்றும் அவரது சக குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
  34. அதிர்ச்சியான செய்தி. மோகன் அண்ணாவிற்கும், பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
  35. நாம் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலும் ஆறாது உங்கள் உள்ளம், அந்த இழப்பை ஈடு செய்யவும் முடியாது. மீளாத்துயரில் இருக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அதிலிருந்து மீண்டு வரவும், அவரின் ஆன்மா அமைதியில் இறைவனோடு இளைப்பாறவும் பிரார்த்திக்கிறேன்.
  36. மோகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்!
  37. அதிர்ச்சியான செய்தி. கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். அவரின் பிரிவால் துயருற்று இருக்கும்.. மோகன், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. 🙏
  38. ஆழ்ந்த அனுதாபத்தை மோகன், குடும்பத்தாருக்கு தெரிவித்து கொள்கிறேன். 😥
  39. ஆ.......நம்பவே முடியாதிருக்கிறது.....மோகண்ணாவிற்கும், பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
  40. துணைவியாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் மோகன் அவர்களுக்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
  41. மோகன் அண்ணா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்
  42. அதிர்ச்சியான செய்தி. கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். அவரின் பிரிவால் துயருற்று இருக்கும்.. மோகன் அண்ணாவிற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. 🙏
  43. வாகன இறக்குமதி வரிகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம்! சந்தை நடத்தையின் அடிப்படையில், எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுமார் 5 வருடங்களாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை 2025 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், வாகன இறக்குமதி வரி 300 வீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளமையினால் புதிய வாகனங்களின் விலைகள் மிக அதிகமாக இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறான இறக்குமதி வரிகள் காரணமாக வேகனார் என்ற சிறிய ரக காரின் விலை 70 இலட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயரும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சுட்டுக்காட்டுகின்றனர். இந்த இறக்குமதி வரிகள் காரணமாக சந்தையில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றின் விலை டேவிட் பீரிஸ் நிறுவனத்தித்தின் தகவல்களுக்கு அமைவாக சுமார் 20 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேநேரம், சந்தையில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளின் விலைகளும் அசாதாரணமாக அதிகரித்துள்ளன. இந்த வாகன விலைகளின்படி இன்று ஒரு சாதாரண மனிதனால் வாகனம் வாங்கி செலுத்த முடியாத நிலை காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில், சந்தையின் விலை நிலவரங்களை கண்காணித்து வாகன இறக்குமதி வரிகளை குறைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, இலங்கை மத்திய வங்கியும் இதற்கான வழிகாட்டல்களை வழங்கி வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1422621

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.