Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதுவரைக்கும் எழுதுவது...: நிழலி

Featured Replies

எதுவரைக்கும் எழுதுவது...:.

குருணாகல் என்ற சிங்கள ஊரின் அழகு அற்புதமானது. பாறைகள் மலையாகவும், குளங்கள் ஓடைகள் போன்று நீண்டும், வயல்கள் பேராறு போன்று விரிந்தும் இருக்கும் அழகிய சிங்கள விவசாய பெரும் கிராமம். நகரம் என்று சொல்லப்பட்டாலும் கிராமியமே எங்கும் பரவி இருக்கும் ஒரு பிரதேசம்

பெரும் பாறைகள் மலையாக எழுந்தும் 'வெவ' என்று சிங்களத்தில் அழைக்கப்படும் பெரும் குளங்கள் பல கொண்டும் இருக்கும் அந்த அழகிய சிங்கள அப்பாவி கிராமவாசிகளால் நிரம்பிய நகரத்தில் நான் குருணாகல் ஸகிரா பாடசாலை எனும் தமிழ் மொழியிலான முஸ்லிம் பாடசாலைக்கு போய்க்கொண்டு இருந்த 1983 இன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் என் அப்பா அவசரமாக தன் 'ரலி' சைக்கிளை உழக்கிக் கொண்டு மத்தியானத்துக்கு சற்று பிந்திய ஒரு நேரத்தில் பாடசாலைக்கு வந்து இருந்தார்.

முன்னமும் அப்பா இப்படி அவசரமாக பாடசாலைக்கு ஓடி வந்தது நினைவில் வந்தது. என் மாமா (அம்மாவின் சகோதரர்) ஒருவர் பொலிடோல் குடித்து செத்துப் போன பின் அவரின் இறுதிக் கிரியைகளுக்கு உடனடியாக யாழ்ப்பாணம் போக வேண்டும் என்பதற்காக எம்மை கூட்டிச் செல்ல வந்து இருந்தார். மாமாவின் சாவை விட குருணாகலில் இருந்து யாழ்ப்பாணம் போகும் சந்தோசமே அப்ப இருந்தது. இப்பவும் அம்மாட ஒரு தம்பியோ அண்ணனோ செத்துப் போயிட்டார்.. அப்பா எங்களை யாழ்ப்பாணம் கூட்டிக்கொண்டு போகப் போறார் என்று சந்தோசத்தில் நானும் அக்காவும் அவரது சைக்கிளின் bar களில் ஏறி அமர்ந்து கொண்டோம்

அப்பா சைக்கிளை காட்டுத்தனமாக உழக்கிக் கொண்டு சென்று கொண்டு இருந்தார். அவர் காற்றை எதிர்த்து சைக்கிள் மிதித்ததால் எம் மீது பட்ட காற்று சுகமாக இருந்தது. காற்று என் ஸ்கூல் சேட்டுக்குள் புகுந்து அம்மா சுடும் அப்பளம் பொங்கி வருவது போல ஊதி இருந்தது. மீண்டும் யாழ்ப்பாணம் போகபோறம்...மச்சான் மச்சாளுடன் விளையாடப் போறம் என்ற ஆசையில் நாங்கள் இருக்கும் போது அப்பாவின் சைக்கிள் அவரோட வேலை செய்த ஒரு சிங்கள மாமாவின் வீட்டின் முன் எம்மை நிறுத்தியது.

அந்த மாமா எங்களை ஒரு அறைக்குள் போயிருக்கச் சொன்னார். வீட்டுக்கும் போகாமல் குருணாகலில் இருந்து யாழ்ப்பாணமும் போகாமல் அப்பாவும் அம்மாவும் ஏன் இவரின் வீட்டின் அறைக்குள் போய் பதுங்கச் சொல்கின்றார் என்று கவலைப்பட்டுக் கொண்டு உள்ளே போனோம்.

அங்கே இருந்த தர்சிகா என்ற சிங்கள, என் வயதை ஒத்த சிறுமியுடன் சிநேகிதத்தை கொஞ்ச நேரத்திலேயே வளர்த்துக் கொண்டு விளையாட தொடங்கி இருந்தேன் (அவளுக்கு ஒரு அண்ணன் இருந்ததும் அவனுடன் ஏன் என்னால் உடனடியாக சிநேகிதம் வளர்க்க முடியவில்லை என்பதும் அப்ப தெரியவில்லை).. நான் அவளுடன் விளையாடிக்கொண்டு இருந்த அதே கணங்களில்

வெளியில் தமிழர்களின் உடமைகள், கடைகள், உயிர்கள் எல்லாம் குருணாகல் நகரப் பகுதியில் எரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தன.

1983 யூலைக் கலவரத்துக்கு ஒரு சில மாதங்கள் முன்னமே குருணாகலில் ஒரு இனக்கலவரம் (ஒரு இனம் மட்டும் இன்னொரு இனத்தை கொல்வது 'இனக்கலவரம்' என்று அடையாளப்படுத்த முடியுமா என்ற கேள்வி வருகின்றது) யூலைக் கலவரத்தின் முன்னுரையாக எழுதப்பட்டுக் கொண்டு இருந்தது

என் மனதுள் அழிக்க முடியாத ஒரு சித்திரம் தன் வரைதலை ஆரம்பித்து இருந்தது

அத்தியாயம் 3: http://www.yarl.com/forum3/index.php?showtopic=100274&st=20#entry747734

அத்தியாயம் 4: http://www.yarl.com/forum3/index.php?showtopic=100274&st=40#entry748987

அத்தியாயம் 5: http://www.yarl.com/forum3/index.php?showtopic=100274&st=40#entry748992

  • Replies 58
  • Views 6.7k
  • Created
  • Last Reply

நன்றாக எழுதுகிறீர்கள் நிழலி தொடருங்கள். உங்கள் உவமைகளும், உணர்வுகளை வெளிபடுத்தும் விதமும் அற்புதமாக உள்ளது.

உள்ளதை உள்ள படி முடிவு வரை எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

2.

இரவு எப்பவும் இருளை மட்டும் மூடிக் கொண்டு இருப்பவை அல்ல...

எண்ணற்ற ரகசியங்களும், காதல்களும், புணர்தல்களும், எல்லை மீறல்களும், களவுகளும் என்று பரவிப் படந்து இருக்கும் ஒரு அற்புத பொழுது இரவு. அப்படிப்பட்ட இரவு முடியும் தருவாயில் ஒரு வரலாறு ஆரம்பித்தது

------------------------------

1983 யூலை 24 அன்று காலை 5 மணியின் பின் யாழ்ப்பாண நகரப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து மீண்டும் குருணாகல் போக நான் அப்பா அம்மாவுடன் நிற்கின்றேன். அப்போது

வர வேண்டிய bus வரவில்லை; வரக் கூடாத bullets வருகின்றது

யாழ்ப்பாண நகரப் பகுதி எங்கும் துப்பாகிகள் சல்லடை போட, ஆமி சுட்டுக் கொன்று (கொண்டு) வருகின்றது.

யூலை 23 அன்று இரவு புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டு (தலைவர் பங்கு கொண்ட தாக்குதல்) போக மிச்சம் இருந்த ஆமியை யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு ஆமிக்காரர்கள் சுட்டுக் கொன்று வரும் போது நாம் அவர்களின் இலகு இலக்கான யாழ் நகர மத்திய போக்குவரத்து நிலையத்தில் சிங்கள நகரம் நோக்கி மீண்டும் போக bus இற்காக காத்திருக்கும் போது துப்பாக்கி குண்டுகள் முழங்குகின்றன

அப்பா எங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு அருகில் இருந்த இ.போ.ச பேரூந்து முன் இருக்கை பதிவு நிலையத்துக்கு கூட்டிப் போகின்றார்

எல்லாரும் அலறினம்..

பல சன்னங்கள் இ.போ.ச அலுவலகத்தின் சன்னல்களையும், கதவுகளையும் ஈற்றில் எம்மைப் போல் அடைக்கலம் புகுந்த ஒரு உறவையும் சாகடித்து (அல்லது காயப்படுத்தி) போகின

என் கண் முன் நடந்த முதல் சாவு அல்லது மிகப் பயங்கர காயப்படுத்தல் இது (இந்த நிகழ்வின் பின் குண்டடிபட்டவர் செத்தாரா இல்லை பிழைத்தாரா என்று இன்றுவரைக்கும் நான் அறியவில்லை...அவர் மஞ்சளில் கறுப்பு அல்லது பிரவுன் கோடு போட்ட சாரம் அணிந்து இருந்தார் என்று மனசுக்குள் ஒரு புகை வடிவ காட்சி ஓடுது)

--இது வரைக்கும் எழுதியாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

நினைவகலா நாட்கள் அவை தொடருங்கள் நிழலி :( இதையும் பாதியிலை விட்டிட்டு போறேல்லை ^_^

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ நிழலி

மிகவும் நேர்த்தியான, இயல்பான நடையில் நெடு நாட்களுக்கு பின்னர் சுவைத்த திருப்தி.தொடர் தொடர வாழ்த்துக்கள்!

நன்றாக எழுதுகிறீர்கள் நிழலி தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடைசி வரை பார்த்ததை,கேட்டதை அப்படியே எழுதுங்கள்...இதையுமிடையில் எழுதாமல் விட மாட்டீர்கள் என நம்புகிறேன்

தொடருங்கள் ,நன்றாக எழுதுகிறீர்கள் நிழலி .

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் நல்ல ஆரம்பம்..! தொடர்ந்து எழுதுங்கள் நிழலி..! :D

  • தொடங்கியவர்

பாராட்டி ஊக்குவித்தவர்களுக்கு நன்றிகள். இந்தத் தொடரையாவது இடை நடுவில் விடாமல் தொடரத்தான் விருப்பம். ஆனால் நான் சொல்லப்போகும் விடயங்கள் யாழின் பிரதான கருத்தாக பார்க்கப்படும் அபாயமும் சூழலும் அப்படிப் பார்க்கப்படுவதற்குரிய நியாயங்களும் இருக்கின்றன என்பதும் முக்கிய விடயம். சரி, நிழலி என்ற பெயரில் வராமல் இன்னொரு பெயரில் எழுதலாம் தானே என்று பலர் கேட்க முனைவதும் புரிகின்றது.

நிழலி என்ற பெயரின் பின்னால் நான் உலகுக்கு கட்டமைத்துக் காட்டிய உருவம் போலியற்ற என்னை அப்படியே வெளிக்காட்டிய உருவம். முன்னர் பிழம்பு என்ற பெயரில் வந்து எழுதி இருந்தாலும் அதனை பல கள உறவுகள் இலகுவாக கண்டு பிடித்து தனி மடலில் கேட்டு இருந்தனர். எழுத வெளிக்கிட்ட பிறகு என்னை முற்றிலும் மறைத்து போலியாக எழுத முடியாது. உண்மையாக எழுதினால் எல்லாராலும் இலகுவாக "நிழலி தான் மாறுவேடத்தில் அலையுறான்" என்று கண்டுபிடிப்பதும் இலகு.

இங்கு வேடம் போட முடியாது. எழுதுபவர்களை விட வாசகர்கள் என்றுமே புத்திசாலிகள்.

(அமலா பாலுக்காக வேண்டும் என்றால் இன்னொரு பெயரில் வந்து வருணித்து எழுதிவிட்டு போகலாம்...ஆனால் என் சொந்த அனுபவங்களை இன்னொரு புனைப் பெயரில் எழுத முடியாது :icon_idea: )

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி :icon_idea:

எழுதுங்கள்

நாம் கனக்க விடயங்களைப்பதியணும். அவை பற்றி பேசணும். விவாதிக்கணும். அவை நாளைய சந்ததிக்கு அவர்களது பாதையை வகுக்க பயன்படணும்.

நன்றாக எழுதுகிறீர்கள். எழுதுங்கள் நிழலி அண்ணா. நான் பிறப்பதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன். சில பத்திரிகையில் 1983 இனக்கலவரம் பற்றி வாசித்துள்ளேன். தொடராக வாசிக்கும் பொழுது ஆவல் அதிகரிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகிறீர்கள். எழுதுங்கள் நிழலி அண்ணா. நான் பிறப்பதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன். சில பத்திரிகையில் 1983 இனக்கலவரம் பற்றி வாசித்துள்ளேன். தொடராக வாசிக்கும் பொழுது ஆவல் அதிகரிக்கிறது.

வயசை சொல்ல வேண்டும் என எழுதின மாதிரி இருக்குது :D

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டி ஊக்குவித்தவர்களுக்கு நன்றிகள். இந்தத் தொடரையாவது இடை நடுவில் விடாமல் தொடரத்தான் விருப்பம். ஆனால் நான் சொல்லப்போகும் விடயங்கள் யாழின் பிரதான கருத்தாக பார்க்கப்படும் அபாயமும் சூழலும் அப்படிப் பார்க்கப்படுவதற்குரிய நியாயங்களும் இருக்கின்றன என்பதும் முக்கிய விடயம். சரி, நிழலி என்ற பெயரில் வராமல் இன்னொரு பெயரில் எழுதலாம் தானே என்று பலர் கேட்க முனைவதும் புரிகின்றது.

நிழலி என்ற பெயரின் பின்னால் நான் உலகுக்கு கட்டமைத்துக் காட்டிய உருவம் போலியற்ற என்னை அப்படியே வெளிக்காட்டிய உருவம். முன்னர் பிழம்பு என்ற பெயரில் வந்து எழுதி இருந்தாலும் அதனை பல கள உறவுகள் இலகுவாக கண்டு பிடித்து தனி மடலில் கேட்டு இருந்தனர். எழுத வெளிக்கிட்ட பிறகு என்னை முற்றிலும் மறைத்து போலியாக எழுத முடியாது. உண்மையாக எழுதினால் எல்லாராலும் இலகுவாக "நிழலி தான் மாறுவேடத்தில் அலையுறான்" என்று கண்டுபிடிப்பதும் இலகு.

இங்கு வேடம் போட முடியாது. எழுதுபவர்களை விட வாசகர்கள் என்றுமே புத்திசாலிகள்.

(அமலா பாலுக்காக வேண்டும் என்றால் இன்னொரு பெயரில் வந்து வருணித்து எழுதிவிட்டு போகலாம்...ஆனால் என் சொந்த அனுபவங்களை இன்னொரு புனைப் பெயரில் எழுத முடியாது :icon_idea: )

யான் பெற்ற இன்பம் பெறுக

உங்கள் தொடர் தொடராக வந்து சம்பவங்களில் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்றால் , நிட்சயம் ஓர் சிறந்த வரலாற்றுப் பதிவாக அமையும் . வாழ்த்துக்கள் .

வயசை சொல்ல வேண்டும் என எழுதின மாதிரி இருக்குது :D

வயசை சொல்லி, மற்றவர்கள் தெரிந்து எதுவும் ஆகப்போறதில்லை :) . (யாழ் களத்தில் வைத்து சைட் அடிக்கவா முடியும் :D ).

எப்பவுமே சைட் அடிக்கிற நினைப்பிலிருக்கிறவர்களுக்கு தான் இப்படியெல்லாம் தோணும் :lol::D . (இவ்வளவு காலம் இங்கிருக்கும் வல்வை சகாரா அக்காவே நீங்கள் ஆணென்று சந்தேகிக்கும் போது :wub: , இப்பொழுது வந்த நான் உங்களை பற்றி முடிவெடுக்க கொஞ்ச நாளாகும். எனவே தப்பாயிருந்தால் மன்னியுங்கள்).

உண்மையை தான் கூறியுள்ளேன். தற்போது நடக்கும் அரசியல் விளங்குகிறது. பிறக்க முன் நடந்தவை பத்திரிகையில் வாசித்தாலும் ஒருவரின் சொந்த அனுபவத்தை தொடராக வாசிக்கும் போது உள்ள ஆர்வம் சொல்ல வேண்டியதில்லை.

உண்மையின் எல்லைவரைக்கும் எழுதுங்கள் நிழலி! அதுதான் என்றைக்கும் உண்மையானது! உண்மைகள் என்றைக்கும் உண்மைதான்!

சில வேளைகளில்.... உண்மைகளை எங்களால் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றது...!!!

தொடருங்கள்.............. வாழ்த்துக்கள்! :)

எழுதுங்கள் நிழலி,

நானும் 83இல் பிறக்கவில்லை மன்னிக்கவும் நாட்டில் இருக்கவில்லை .

இலங்கை இராணுவத்தால்,இந்திய இராணுவத்தால் மிகவும் பாதிக்க பட்ட பலர் எம்மில் இருப்பதாக அவர்கள் பதிவுகளில் இருந்தே அறிய கூடியதாக இருக்கின்றது .உங்கள் பதிவையும் எதிர்பார்க்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,ஆவணம் ஆக்கக்கூடிய அளவுக்கு எழுதுங்கள்.உங்களால் நிச்சயமாக முடியும்.

வாழ்த்துக்கள் நிழலி எழுதத் துணிந்தமைக்கு! :rolleyes:

.

இப்ப தான் விளங்கிது நிழல்ஸ்ஸுக்கு காக்காமார்ல‌ ஏன் ஒரு அன்பெண்டு.. :D

மிகவும் நன்றாக எழுதுகிறிங்கள் நிழலி. தொடர்ந்து உண்மையை எழுதுங்கள். எங்கள் வரலாறு ஒழுங்காக எழுதப்படவில்லை. எழுதப்பட்ட வரலாறுகளும் பக்க சார்பானவை. எனவே பாதிக்கப்பட்ட தரப்பு எழுத்து பொது அதன் பெறுமதி அதிகம். தயவு செய்து சம்பவங்களை உண்மையாக எழுதவும். விமர்சனம் உங்கள் தனிப்பட்டதாக இருந்தாலும் சம்பவம் உண்மையாக இருப்பது அவசியம். உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. எங்கள் வாழ்த்தும் ஆதரவும் உங்கள் எழுத்துக்கு என்றும் உண்டு.

ஹை ஜாலி......... சேர்ந்து கும்முவதற்கு மற்றுமொரு முதுகு தயாராகிறது. :D

நன்றாக இருக்கிறது. சம்பவங்கள் ஞாபகம் இருந்தால், விரிவாக எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

Edited by தப்பிலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.